ரு சராசரி மனிதன் இந்த உலகத்தில் வாழ்வதற்கான சமநிலை மாறும் பொழுது இங்கு போராட்டம் என்னும் ஆயுதம் இயல்பாகவே தோன்றும். நாம் கொஞ்சம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு செல்வோம்.

1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 யில் லாகூர் பாராளுமன்றத்தில் பகத்சிங் மற்றும் பி. கே. தத்தும் அபாயம் குறைந்த குண்டுகளை போட்டனர். இது மக்கள் மீதோ அல்லது ஆங்கிலேய அதிகாரிகள் மீதோ போடப்படவில்லை யாரும் இல்லாத இடத்தில் குண்டுகளை போட்டனர். பின்பு மேல்நோக்கி துப்பாக்கினால் சுட்டனர் தப்பிக்க வழி இருந்தும் தப்பிக்காமல் ( கேளாத செவிகளை கேட்க வைக்க ) என்ற அறிக்கைகளை வீசிவிட்டு கைதாகினர்.

நாட்டின் சுதந்திரத்திற்கும், இந்நாட்டு மக்கள் விடுதலைக்கும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் தனது சோசலிச கனவு நனவாக குண்டு போட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து சிறைக்குச் சென்றனர். பகத்சிங்கும் மற்ற தோழர்களும் என்பது குறிப்பிடத்தக்கது. சிறைச்சாலையிலும் கூட உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து போராடினர்.

இதன் மூலம் நாட்டின் புரட்சி பாதைக்கு வழிவகுத்த பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை 1931 மார்ச் 21 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பகத்சிங் ஒன்றும் வன்முறையாளன் அல்ல வன்மத்திற்கு எதிர்ப்பாளன் ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பாளன் இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இப்போது நாம் அந்த 100 ஆண்டுகளை கடந்து வருவோம்.

அன்று எதற்காக பகத்சிங் மற்ற தோழர்களும் போராடினார்களோ அதற்காகத்தான் நாம் சுதந்திர நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்நாட்டில் அன்று எதை நினைத்து பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டு போட்டாரோ அதை நினைவில் வைத்து டிசம்பர் 13 (2023) புதிய நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடக்கும் பொழுது கலர் புகை குண்டுகளை போட்டுவிட்டு சர்வாதிகார ஆட்சி ஒழிக, ஜெய் பீம், போன்ற கோஷங்களை எழுப்பினர். இந்த நடவடிக்கையில் ஒரு பெண் மற்றும் இரண்டு இளைஞர்கள் ஈடுபட்டனர். இந்நாட்டில் பசி, வேலையின்மை, வறுமை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது, அதற்காகத்தான் புதிய நாடாளுமன்றத்தில் கலர் புகைக்குண்டு போட்டோம் என்று கூறினர். இந்த நிகழ்வில் ஈடுபட்ட அனைவரும் படித்த பட்டதாரிகள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் கலர் புகை குண்டு போட்டு நாட்டின் அவல நிலையை புரிய வைத்தவர்களை கைது செய்தனர்.

பல நாட்கள் அவர்களை விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்தது இந்த பாஜக அரசு. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் அவர்கள் எதற்காக போராடினார்களோ அதைப்பற்றி பேசாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் கைதுக்கு எந்த எதிர்ப்பும் இதுநாள் வரை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை எல்லாம் தாண்டி ஒரு படி மேலே சென்று இந்த பாசிச அரசு கைது செய்தவர்களுக்கு என்ன செய்துள்ளது தெரியுமா.

1. நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்துள்ளனர்.

2. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் 5 பேருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து கொடுமைப்படுத்தியதாக பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

3. அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஒப்புக்கொள்ளவும் எழுபது வெற்று பக்கங்களில் கையெழுத்து போட வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு

இந்த வழக்கை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு விசாரித்து வருகிறது.

இவ்வாறு இந்த பாசிச பாஜக அரசு அவர்களை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

வெடிகுண்டுகளை போட்டு மற்றவர்களின் உயிர்களைப் பறிக்காமல் இந்நாட்டு மக்கள் உரிமைகளை பறித்தற்கு எதிராக குரல் கொடுத்தனர். அவர்களுக்கு இப்படிப்பட்ட அநீதிகளையும் கொடுமைகளையும் நடத்தி கொண்டிருக்கிறது இந்த பாசிச அரசு.

ஒன்றை நாம் நினைவில் கொள்வோம் போராட்டம் வன்முறை அல்ல அது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமை குரல் ஆகும்.

(பாலுக்கு அழும் குழந்தை,
கல்விக்கு ஏங்கும் மாணவன்,
வேலை தேடும் இளைஞன்,
இவைகள் இல்லாத இந்தியாவே சுதந்திர இந்தியா )

என்று பகத்சிங் கூறியதை நாம் நிறைவேற்ற நினைத்தால் நீங்களும் வன்முறையாளன்தான்.


‌மணிவண்ணன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க