12.02.2024

ரஃபா எல்லையில் பாசிச இஸ்ரேலின் இன அழிப்பு போர்!
இது இன்னொரு முள்ளிவாய்க்கால்!

போரை முடிவுக்கு கொண்டு வர
மக்கள் போராட்டங்களை கட்டி எழுப்புவோம்!

பத்திரிகை செய்தி

ல மாதங்களாக தொடர்ந்து காசா முனை மீது பாசிச இஸ்ரேல் அரசால் நடத்தப்படும் இன அழிப்பு தாக்குதலின் விளைவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் எகிப்தின் ரஃபா எல்லையில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருக்கின்றனர்.

அகதிகளாக குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி, நிற்க இடம் இன்றி தவிக்கும் அந்த மக்கள் மீது தினமும் குண்டுகளை வீசி இன அழிப்புப் போரின் இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கிறது பாசிச இசுரேல் அரசு.

தன் குடும்பத்தை இழந்த பிறகு தன்னை காப்பாற்றுங்கள் என்று கதறிய ஹிந்த் ரஜாப் என்ற சிறுமியையும் அச்சிறுமியை காப்பாற்ற சென்ற ஆம்புலன்சு வாகனங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு குண்டு வீசியது என்பது போன்ற தெரிந்த ஒரு சில சம்பவங்களும் தெரியாத பலநூறு நிகழ்வுகளும் சம்பவங்களும் தினம்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஈழப் போரின் இறுதி கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன அழிப்பு செய்யப்பட்டது போன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில், ரஃபா எல்லையில் இன ஒழிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இன அழிப்பை நிறுத்துங்கள் என்று முள்ளிவாய்க்காலில் ஏகாதிபத்திய மற்றும் வல்லரசு நாடுகள் பொய்யாக கூச்சலிட்டது போல இப்போதும் கூறிக் கொண்டிருக்கின்றன. இஸ்ரேலிய பிணைக் கைதிகள் செத்தாலும் சரி ஹமாஸை ஒழிப்பது என்ற பெயரில் ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களையும் ஒழிக்கின்ற வேலையின் இறுதிக்கட்டம் தான் இது.

பாசிஸ்டான இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் இஸ்ரேலில் நடந்து கொண்டிருக்கும் போதும் கூட, இன அழிப்புப் போரை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

அக்டோபர் 7ஆம் தேதி முதல் இந்த அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கும் இந்த நொடி வரை இஸ்ரேல் அரசு மேற்கொண்ட போரினால் இறந்து போனவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 176 பேர்.

முள்ளிவாய்க்காலை போன்றதொரு மாபெரும் இன அழிப்பை சில நாட்களுக்குள் நடத்தி முடிக்க இஸ்ரேல் அரசு தயாராகிவிட்டது.

முள்ளிவாய்க்கால் போரை நம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதன் விளைவு ஓரிரு நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ரஃபா எல்லையில் அகதிகளாக குழுமி இருக்கும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்களைப் பாதுகாப்போம்! மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டி அமைப்போம்! பாசிச இஸ்ரேல் அரசையும் அதற்கு துணை போகும் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள மோடி – அமித்ஷா கும்பலைப் போன்ற பாசிஸ்டுகளையும் வீழ்த்துவோம்!


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க