கடந்த மார்ச் 31 அன்று பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஜெருசலேமின் வீதிகளில் திரண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காசாவில் சிறைக்கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை மீட்க வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்த பின்பு நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்தால் நெதன்யாகுவுக்கு உள் நாட்டிலேயே நெருக்கடி அதிகரித்துள்ளது.
“எங்களுடைய குடும்பத்தினரை மீட்டு கொண்டுவரும் வரை இந்த வாரம் முழுவதும் ஒவ்வொரு இரவிலும் தெருக்களில் இறங்குவோம்” என்று போராடும் மக்கள் கூறியுள்ளனர்.
நெத்தன்யாகுவின் முகத்தில் இரத்தம் இருக்கக்கூடிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். மேலும் “நீதான் பொறுப்பு, நீதான் குற்றவாளி” என்ற பதாகைகளையும் வைத்திருந்தனர். எங்களுக்கு “இப்போதே தேர்தல் வேண்டும்!” எனவும் போராட்டக்காரர்கள் முழங்கினர்.
காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை தொடங்குவதற்கு முன்பே, நீதித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக நெதன்யாகுவுக்கு எதிராக பல மாதங்களாக இஸ்ரேல் தெருக்களில் போராட்டங்கள் நடைபெற்றது நினைவு கொள்ளத்தக்கது.
இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 32,782-க்கும் அதிகமான பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளது.
போராட்டத்தின் புகைப்படங்களை வாசகர்களுக்குத் தொகுத்து வழங்குகிறோம்.
ராஜேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube