கடந்த செவ்வாய்க்கிழமை (21-05-2024) அன்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளராக இருக்கும் பிளிங்கன் செனட் குழுவின் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தபோது, அங்கு கூடியிருந்தவர்கள் ”பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு நீ தான் பொறுப்பு” என்று கூறி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். அதில் இருந்த பெண் ஒருவர், நீ ஒரு ”குற்றவாளி” என்று கூறி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
அந்த பெண்ணை போலீசு அங்கிருந்து வெளியேற்றியபோது, நீங்கள் என்னை கைது செய்யக்கூடாது “போர்க்குற்றவாளியான பிளிங்கனை” தான் கைது செய்ய வேண்டும் என்றார்.
இன்னும் பலர் தங்களுடைய கைகளில் சிவப்பு வண்ணத்தை வரைந்து, கைகளை உயர்த்தி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தற்போது அமெரிக்கா முழுவதும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த போரை நடத்துவதற்கு உற்ற துணையாக இருக்கும் அமெரிக்க அரசுக்கு எதிராக அமெரிக்க மக்களே நடத்தக்கூடிய இத்தகைய போராட்டங்கள் தான் பாலஸ்தீன மக்களின் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகளில் ஒன்றாகும்.
நன்றி: அல் ஜஸீரா
ஆதன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube