கான் யூனிஸில் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்த பாலஸ்தீன குழந்தைகளை மக்கள் சுமந்து செல்கிறார்கள். இஸ்ரேலால் கொல்லப்பட்ட 39,000 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று (ஜூலை 22) காசாவில் கான் யூனிஸ்-இன் கிழக்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 39 கொல்லப்பட்டுள்ளனர். அப்பகுதியிலிருந்த மக்களை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தியது இஸ்ரேல் இராணுவம். ஆனால், மக்கள் வெளியேறுவதற்கு போதுமான கால அவகாசம் கொடுக்காமல் தாக்குதலைத் தொடுத்து காசா மக்களைப் படுகொலை செய்துள்ளது.
காசாவில் பாதுகாப்பான இடமே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என்று பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து கூறிவருகிறார். அமெரிக்க ஏகாதிபத்தியமும் தொடர்ந்து நிதி மற்றும் ஆயுதங்களை வழங்கி பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது.
கான் யூனிஸின் கிழக்கு பகுதியிலிருந்து வெளியேற இஸ்ரேலிய இராணுவம் கட்டளையிட்டதைத் தொடர்ந்து உயிர் பிழைப்பதற்காக வெளியேறிய சிறுவன்
அக்டோபர் மாதம் இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியதில் இருந்து காஸாவில் உள்ள மக்கள் பலமுறை பலவந்தமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
கான் யூனிஸின் கிழக்குப் பகுதியில் இஸ்ரேலிய தாக்குதலால் ஏற்பட்ட புகை மூட்டம்.கான் யூனிஸின் கிழக்கு பகுதியிலிருந்து வெளியேறும் பாலஸ்தீனியர்கள்.கான் யூனிஸில் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்த பாலஸ்தீன குழந்தைகளை மக்கள் சுமந்து செல்கிறார்கள். இஸ்ரேலால் கொல்லப்பட்ட 39,000 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.டெய்ர் எல்-பலாவில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு காயமடைந்த பாலஸ்தீனியர்கள் அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர். 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மருத்துவ வசதிகள் இஸ்ரேலிய தாக்குதலால் முடக்கப்பட்டுள்ளன.டெய்ர் எல்-பலாவில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு காயமடைந்த பாலஸ்தீனியர்களுக்கி அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் போதிய இடமில்லாததால் தரையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.