பள்ளிக் கல்வித்துறையே தமிழ்நாட்டரசே
தமிழாசிரியர் சங்கரநாராயணன் மீதான
பணியிட மாறுதல் ஆணையைத் திரும்பப்பெறு!
கண்டன அறிக்கை
பொட்டலூரணி ஊரைச் சுற்றி உள்ள மூன்று கழிவுமீன் நிறுவனங்களை அகற்றக் கோரி பொட்டலூரணி பொதுமக்களின் போராட்டம் நியாயமான முறையிலும் அறவழியிலும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது. இப்போராட்டத்தில் பொது மக்களால் மூன்று ஒருங்கிணைப்பு பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொட்டலூரணி ஊரைச் சார்ந்த பொது மக்களில் ஒருவரான சங்கரநாராயணன் என்பவர் பாளையங்கோட்டையில் தங்கியிருந்து நடுக்கல்லூர் அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.
சங்கரநாராயணன் அவர்கள் தமிழியம் சார்ந்தும் தமிழ் ஆய்வுகள் சார்ந்தும் தமிழ்நாட்டளவில் இயங்கக்கூடிய தமிழ்ப் பற்றாளர் ஆவார்.
விடுமுறைக்கு பொட்டலூரணி ஊருக்கு வரும்போதெல்லாம் கழிவு மீன் நிறுவனத்தின் நச்சுத் துர்நாற்றத்தால் பாதிக்கக் கூடியவர்களில் தமிழாசிரியர் சங்கரநாராயணனும் ஒருவராக இருக்கிறார்.
கழிவு மீன் நிறுவனங்களுக்கு எதிராகப் போராடும் பொதுமக்களின் உறவினராகவும் நண்பராகவும் இருக்கிறார்.
சுகாதாரச் சூழலுக்காக போராடும் பொதுமக்களின் நண்பர் என்ற காரணத்திற்காக நாடறிந்த தொல்லியல் ஆய்வாளராகவும் தமிழியச் செயல்பாட்டாளராகவும் இருப்பதால், சங்கரநாராயணன் அவர்களை திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பணியிடமாற்ற ஆணை பிறப்பித்துள்ளது பள்ளிக் கல்வித் துறை.
ஏற்கனவே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விசுவாசமாக பொதுமக்களின் போராட்டத்தினை நசுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது தூத்துக்குடி மாவட்ட ‘திராவிட மாடல்’ அரசின் போலீசுத்துறை.
பள்ளிக்கல்வித்துறையே சங்கரநாராயணன் மீதான பணியிட மாறுதல் ஆணையை திரும்பப்பெறு!
ஊர்ப் பொதுமக்கள் மற்றும் கழிவுமீன் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டக் குழு,
பொட்டலூரணி,
9986643572.
தகவல்
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube