மேற்குவங்க மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை: வலுக்கும் போராட்டங்கள் | புகைப்படங்கள்

நேற்று (ஆகஸ்ட் 17) காலை முதல் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் தொடங்கியது. புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவும், அத்தியாவசியப் பிரிவு மட்டும் இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் இயங்கி வரும் ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்த பெண் மருத்துவர் ஆகஸ்ட் 9 அன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது; ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க “மத்திய சுகாதாரத்துறை பாதுகாப்பு சட்டத்தில்” விதிமுறைகள் வகுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய உறைவிட மருத்துவர்கள் சங்க சம்மேளனம் (எஃப்.ஓ.ஆா்.டி.ஏ) கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால், சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென மத்திய அரசு தெரிவித்ததன் காரணமாக பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

மேலும், மத்திய அரசு வெறும் வாக்குறுதிகளை அளித்தால் மட்டும் போதாது என்று கூறிய மருத்துவர்கள், வேலை நிறுத்தப் போராட்டம் செய்யவிருப்பதாக, ஆகஸ்ட் 12 அன்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 17) காலை முதல் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் தொடங்கியது. புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவும், அத்தியாவசியப் பிரிவு மட்டும் இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வரும் மருத்துவர்களை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரிக்க வேண்டும். மருத்துவர்கள் போராட்டம் குறித்த புகைப்படங்களை வாசகர்களுக்குத் தொகுத்து வழங்குகிறோம்.

தெற்கு டெல்லியைச் சேர்ந்த மருத்துவர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர்

பாட்னா மகளிர் கல்லூரி மாணவிகள் நடத்திய அமைதிப் போராட்டம்


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க