மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: கார்ப்பரேட் சர்வாதிகாரத்திற்கான
காவி + போலீசின் கும்பலாட்சி | வெளியீடு

இந்துராஷ்டிரத்திற்கான புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அவற்றால் அரங்கேற்றப்பட இருக்கும் கும்பலாட்சியின் கொடூரங்களை அம்பலப்படுத்தும் விதமாக புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் மாத இதழில் கட்டுரை வெளியானது. அதனைச் செம்மைப்படுத்தி சிறு வெளியீடாக தற்போது கொண்டுவந்துள்ளோம்.

இந்த வெளியீட்டை வாங்கிப் படித்து ஆதரவளிக்கும் படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

***

ந்திய தண்டனைச் சட்டம் (IPC), இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), இந்திய சாட்சியச் சட்டம் (IEA) ஆகிய மூன்று சட்டங்கள் அடங்கிய குற்றவியல் சட்டத்தொகுப்பை நீக்கிவிட்டு, அவற்றிற்கு மாற்றீடாக, புதிய மூன்று குற்றவியல் சட்டத் தொகுப்பு (பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதிநியாம்) நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

சென்ற ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதலாக, புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டதைக் கண்டித்து நாடுமுழுவதிலும் உள்ள வழக்குரைஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், எதிர்க்கட்சியினர், ஜனநாயக சக்திகள் ஆகியோர் பல்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இச்சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படுவதன் மூலமாக நமது நாடு ஒரு சர்வாதிகார நாடாக மாறிவிடும், போலீசு அரசாக மாறிவிடும், தங்களது உரிமைகள் பறிக்கப்படுவதற்கெதிராகக் குரல் கொடுப்பவர்கள், அப்பாவி மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் கட்டற்ற வகையில் அதிகரித்துவிடும் என்று இச்சட்டங்கள் நடைமுறைக்கு வருவதால் ஏற்பட இருக்கும் ஆபத்துகளைப் பொதுமக்கள் மத்தியில் பரப்புரை செய்து வருகின்றனர்.

வெளியீடு:
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: கார்ப்பரேட் சர்வாதிகாரத்திற்கான காவி + போலீசின் கும்பலாட்சி

முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2024

நன்கொடை: ₹10
G-Pay No: 97916 53200

வெளியிடுவோர்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை

தொடர்புக்கு: 97916 53200, 94448 36642, 73974 04242, 99623 66321

வாங்கிப் படியுங்கள்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க