கால்டுவெல்-ஐ நினைவு கூர்வோம்!

கால்டுவெல்-ஐ நினைவுகூர்ந்து தமிழ் மொழி – தமிழ்நாட்டு மக்களின் பார்ப்பன எதிர்ப்பு மரபை வளர்த்தெடுப்போம். ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கும்பலை விரட்டியடிக்கும் பாதையில் வீறு நடை போடுவோம்.

0

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் மறைந்த நாள் 28 ஆகஸ்டு 1891.

இந்தியாவில் காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசு, 2014-ஆம் ஆண்டு ஆட்சியமைத்திலிருந்து இன்று வரை இந்தி – சமஸ்கிருத மொழியையும் அதன் பார்ப்பனிய பண்பாட்டையும் நாடுமுழுவதும் திணித்து வருகிறது. பள்ளி-கல்லூரி பாடத்திட்டங்கள் முதல் உயர்கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் வரை இந்துத்துவ சித்தாந்தத்தைத் திணித்து வருகிறது. இந்த பாசிச சூழலில் நாம், தமிழ் மொழியையும் பார்ப்பன எதிர்ப்பு மரபையும் உயர்த்தி பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கு முதன்மையானது என்ற பார்ப்பன கும்பலின் பிரச்சாரத்தை அடித்து நொறுக்கும் வகையில் தமிழ்மொழியே உயர்தனிச் செம்மொழி என்பதை ஆய்வின் மூலம் நிரூபித்தார். தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்கள் உருவாவதற்கு அது அடித்தளமாக இருந்தது.

படிக்க : நேற்று முருகன் மாநாடு, அடுத்து அம்மன் மாநாடு? – பு.மா.இ.மு கண்டன அறிக்கை!

எனவே, கால்டுவெல்-ஐ நினைவுகூர்ந்து தமிழ் மொழி – தமிழ்நாட்டு மக்களின் பார்ப்பன எதிர்ப்பு மரபை வளர்த்தெடுப்போம். ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கும்பலை விரட்டியடிக்கும் பாதையில் வீறு நடைபோடுவோம்.

***

தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலானவற்றை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார். மூன்று ஆண்டுகள் மதராசப்பட்டினத்தில் தங்கியிருந்த கால்டுவெல், அதன்பிறகு நானூறு மையில்கல் தொலைவில் இருந்த திருநெல்வேலிக்கு நடந்தே சென்றார். திருநெல்வேலி (இன்று தூத்துக்குடி மாவட்டம்) மாவட்டத்தில் தேரிப்பகுதியில் உள்ள இடையன்குடியை அடைந்தார்.

தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பண்டைத் தமிழ் இலக்கியங்களை படித்தார். ஆங்கிலத்தில் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூலை எழுதி 1856-இல் வெளியிட்டார். அதுவரை உருவாக்கப்பட்டிருந்த சமஸ்கிருத மேன்மை எனும் பொய்மூட்டைகளை அந்நூல் உடைத்து நொறுக்கியது.

அதாவது, இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள மொழிகள் அனைத்துமே சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியவை என்கிற பார்ப்பனியப் பிரச்சாரத்திற்கு அனைவருமே பலியாகியிருந்த நேரத்தில் திராவிட மொழிக் குடும்பம் சமஸ்கிருதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும் அதில் தமிழ் மொழி தொன்மையும் தனித்துவமும் வாய்ந்தது என்பதையும் கால்டுவெல் முதன் முதலில் ஆதாரப்பூர்வமாக நிறுவினார்.

படிக்க : மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: ஐந்து விழுக்காடு என்பதுதான் நஞ்சு கலந்த மாற்றம்! | பவானி பா.மோகன்

கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் பின்வரும் உண்மைகளை தெள்ளத் தெளிவாக நிரூபித்தது.

  1. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர் தன்மை கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை
  2. தமிழில் உள்ள சமஸ்கிருத சொற்களை எடுத்து விட்டாலும் தமிழ் தானாகவே இயங்கும் ஆற்றல் கொண்ட செம்மொழி
  3. இதுவரை கருதி வந்ததுபோல், தமிழ் மரபு என்பது வேத-பார்ப்பன-இந்து மரபின் தொடர்ச்சி அல்ல
  4. அதற்கு சமண, பவுத்த, பார்ப்பன எதிர்ப்பு மரபு உள்ளது.

கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூல், தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கிய தாக்கம் ஆழமானது. இருபதாம் நூற்றாண்டில் பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் உருவெடுக்க கால்டுவெல்லின் கோட்பாடுகள் அடித்தளமாயின.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க