பாசிச இஸ்ரேலுக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம்! | படக்கட்டுரை
கோட்பஸ்ஸர் டோர் சதுக்கத்தில் "இஸ்ரேலுக்கு ஆயுதம் அளிப்பதை நிறுத்து", "இனப்படுகொலைக்கு முடிவு கட்டு" மற்றும் “சுதந்திர காசா” போன்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி இருந்தனர்.
அக்டோபர் 7, 2024 அன்று காஸாவில் உடனடி போர்நிறுத்தம் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தின் போது இந்தியாவின் புது தில்லியில் ஒரு எதிர்ப்பாளர் பாலஸ்தீனியக் கொடியை அசைத்தார்.
காசா மீதான பாசிச இஸ்ரேலில் இன அழிப்புப்போர் ஓராண்டு கடந்ததை நினைவு கூறும் விதமாக, இஸ்ரேலுக்கு எதிராக உலகம் முழுவதும் அக்டோபர் 6,7 தேதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.
புது தில்லியில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சுமார் 150 போர் அமைதிப் பேரணி நடத்தினர்.
“ஒவ்வொரு நாளும், மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு இல்லை. அவர்கள் பட்டினியால் வாடுகிறார்கள்” என்று ஆர்வலர் பாவனா சர்மா கூறினார்.
“படுகொலையை நிறுத்து” என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியபடி, 52 வயதான சர்மா, ஆயுத விற்பனை உட்பட இஸ்ரேலுக்கு இந்தியாவின் ஆதரவைக் கண்டிப்பதாகக் கூறினார்.
ஹமாஸ் கொடிகளை அசைத்து, கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் உருவப்படங்களை ஏந்தியவாறு, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை நகரமான ரமல்லாவில் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர்.
அனைத்து வயதினரும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த சுமார் 400 போர் “புரட்சியில் நம்பிக்கை இழக்க மாட்டோம்” என்ற முழக்கத்தின் கீழ் அணிவகுத்தனர்.
இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில், இஸ்ரேலின் உயர்மட்ட இராணுவ கூட்டாளியுமான வாஷிங்டனை(அமெரிக்கா) இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துமாறு கோரி அமெரிக்காவின் தூதரகத்திற்கு வெளியே அக்டோபர் 6 அன்று 1,000-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில், நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்திற்கு நடந்து சென்றனர்: “இஸ்ரேல் ஒரு இனவெறி நாடு!” என்று முழக்கமிட்டனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 7-ஆம் தேதி பேர்லினின் க்ரூஸ்பெர்க் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களைக் கலைக்க ஜேர்மன் போலீசு கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர்.
கோட்பஸ்ஸர் டோர் சதுக்கத்தில் “இஸ்ரேலுக்கு ஆயுதம் அளிப்பதை நிறுத்து”, “இனப்படுகொலைக்கு முடிவு கட்டு” மற்றும் “சுதந்திர காசா” போன்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி இருந்தனர்.
பாலஸ்தீன சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, காஸா மீதான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் 41,900-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
000
அக்டோபர் 7, 2024 அன்று பாகிஸ்தானின் லாகூரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களை எதிர்த்து பேரணி நடத்தினர்.அக்டோபர் 7, 2024 அன்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ரமல்லாவில் நடந்த போராட்டத்தின் போது மறைந்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் படங்களுடன் பாலஸ்தீனியர்கள் சுவரொட்டிகளை வைத்துள்ளனர்.2024-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி காசா பகுதியில் நடந்த போரின் ஒரு வருடத்தை நினைவுகூரும் பேரணியின் போது, கடந்த மாதம் பெய்ரூட்டில் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட நஸ்ரல்லாவின் ஹிஸ்புல்லா கொடிகளையும் சுவரொட்டிகளையும் ஏமனில் உள்ள சனாவில் ஆயிரக்கணக்கான ஹூதி ஆதரவாளர்கள் உயர்த்தியுள்ளனர்.அக்டோபர் 7, 2024 அன்று ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஷிபுயா பாதசாரி கடவைக்கு அருகில் நடந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அக்டோபர் 6, 2024 அன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வெளியே பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியின் போது காசாவில் கொல்லப்பட்ட குழந்தைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வெள்ளைத் துணியால் மூடப்பட்ட பொம்மைகளை எடுத்துச் சென்ற போராடும் மக்கள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பெரிய உருவத்தின் மீது நடந்து சென்றனர்.ஸ்பெயினின் பார்சிலோனாவில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மொராக்கோவின் ரபாத் நகரத்தில் பாலஸ்தீனியர்கள் மற்றும் லெபனான் மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஜேர்மனியின் பெர்லினில், தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களின் நினைவு தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, போராடும் மக்கள் மீது போலீசு அடக்குமுறையை ஏவுகிறது.பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் அக்டோபர் 5, 2024 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் வழியாக அணிவகுத்துச் செல்கின்றனர்.காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் துருக்கி, அங்காராவில் துருக்கி மற்றும் பாலஸ்தீனக் கொடிகளை அசைத்தனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.அக்டோபர் 7 அன்று லெபனானின் தெற்கு துறைமுக நகரமான சிடோனில் காசா மீதான இஸ்ரேலின் போரின் ஓராண்டு நினைவேந்தலின் போது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கக் கொடிகள் எரிக்கப்பட்டன. ”பாலஸ்தீனத்தை கைவிட மாட்டோம்” என அந்த பேனரில் எழுதப்பட்டுள்ளது.