ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!
2026 சட்டமன்றத் தேர்தல்:
வேண்டும் ஜனநாயகம்!
பிரச்சார இயக்கம்
தமிழ்நாடெங்கும்
அரங்கக் கூட்டங்கள் – தெருமுனைக் கூட்டங்கள்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பா.ஜ.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்பது நாட்டின் பெரும்பான்மை மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. பாசிச பா.ஜ.க.வின் கார்ப்பரேட் சார்ந்த திட்டங்கள், காவி பயங்கரவாத செயல்பாடுகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகளே இல்லாமல் இருந்தது.
ஆனால், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை. பா.ஜ.க.விற்கு எதிராக சரியான திட்டங்களை முன்வைக்காதது ஆகிய காரணங்களாலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அவை பின்பற்றி வந்த மக்கள் விரோதத் திட்டங்கள், கார்ப்பரேட் நலன்சார்ந்த செயல்பாடுகளாலும் எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்திருந்தன. அதேவேளையில், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தலில் பா.ஜ.க. பல தில்லுமுல்லுகளை அரங்கேற்றி பல தொகுதிகளில் வெற்றிப் பெறவும் செய்துள்ளது.
இதன் விளைவாக, பாசிச பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
பாசிச சக்தியான பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். என்ற பார்ப்பனிய சித்தாந்த அமைப்பை தனது பின்புலமாகக் கொண்டு செயல்படுகிறது. அம்பானி, அதானி, அகர்வால் போன்ற ஏகபோக கார்ப்பரேட் ஆதிக்கக் கும்பல் இதற்கு உதவுகின்றது. இந்த பாசிசக் கும்பலோ சட்டவிரோத பயங்கரவாதச் செயல்பாடுகளை தனது முதன்மையான வழிமுறையாகக் கொண்டுள்ளது. இந்த பாசிச பா.ஜ.க.வை சட்ட பூர்வமான வழிகளில் வீழ்த்துவது கடினம் என்பதை நாடாளுமன்றத் தேர்தல் மீண்டும் ஒரு முறை நமக்கு உணர்த்தியுள்ளது. அண்மையில், நடந்து முடிந்த ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவும் இந்த உண்மையில் இருந்து தப்பவில்லை.
எனினும், 2019-இல் எழுந்த சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம், 2020- இல் மூன்று வேளாண் சட்டங்களுக்கெதிரான விவசாயிகளின் டெல்லி முற்றுகைப் போராட்டம் பாசிசக் கும்பலை தோல்வி முகத்தை நோக்கித் தள்ளின. அதனைத் தொடர்ந்து இன்றளவும் மக்கள் போராட்டங்கள்தான். மோடி-அமித்ஷா கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளன. ஆகையால், உழைக்கும் மக்கள் போராட்டங்களால் மட்டுமே பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்.
தற்போது மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பா.ஜ.க., மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது; நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டுவர இருக்கிறது. இத்துடன், பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற இந்துராஷ்டிர சதித் திட்டங்களையும் அடுத்தடுத்து நடைமுறைப்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சூழலில், வருகின்ற 2026-இல் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. பெரும்பாலும் எதிர்க்கட்சிகள் ஆளும் இந்த மாநிலங்களில் ஆளுங்கட்சிகளாக உள்ள, தி.மு.க., சி.பி.எம்., திரினாமுல் காங்கிரசு ஆகிய எதிர்க்கட்சிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பயன்படுத்தியும், தனது சதிகார அணுகுமுறைகள் மூலமாகவும் இம்மாநிலங்களில் இந்த பாசிசக் கும்பல் ஆட்சியைக் கைப்பற்றவோ, குழப்பமான சூழலை உருவாக்கவோ முயற்சித்து வருகிறது.
இந்த பாசிசக் கும்பல் ஆட்சியைக் கைப்பற்ற விடாமல் தடுப்பது இம்மாநிலங்களில் உள்ள உழைக்கும் மக்களின் உடனடிக் கடமையாக உள்ளது. அதேவேளையில், இந்த பாசிச கும்பலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எந்த மாற்று அரசியலையும் முன்வைப்பதில்லை. மறுபுறம், பாசிச கும்பலானது தற்போது இருக்கும் பெயரளவிலான ஜனநாயகக் கட்டமைப்பை பயன்படுத்திக் கொண்டு அதை கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்து இந்துராஷ்டிரக் கட்டமைப்பாக மாற்றி வருகிறது. இச்சூழலில், இக்கட்டமைப்பை மீட்டெடுப்பது என்பதும் இதைப் பயன்படுத்தி பாசிசத்தை வீழ்த்துவது என்பதும் சாத்தியமற்றது.
ஆகையால், மக்களுக்கான மாற்று அரசியல் கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும். அதற்கான போராட்டத்தின் ஓர் அங்கமாக இந்த சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் கோரிக்கைகளை முன்னிலைக்குக் கொண்டுவர வேண்டும். இவ்வாறான போராட்டங்களின் ஊடாக பாசிச பா.ஜ.க.வை விரட்டியடிக்க ஜனநாயக சக்திகள் அனைவரும் ஓரணியில் திரள்வோம்!
மக்களின் கோரிக்கைகள், முழக்கங்கள்:
- ஆர்.எஸ்.எஸ்-யையும் அதன் பரிவார கும்பல்களான பா.ஜ.க. பசு பாதுகாப்புப் படை, பஜரங்தள், அனுமன் சேனா, வி.எச்.பி போன்ற பயங்கரவாத இயக்கங்களைத் தடை செய்!
- பாசிசப் படையின் கொல்லைப்புற வழிகளான அ.தி.மு.க., விஜய், தே.மு.தி.க. போன்றவர்களை விரட்டியடிப்போம்!
- ஆர்.எஸ்.எஸ். கும்பலின் ஐந்தாம் படையான சீமான், பா.ம.க., புதிய தமிழகம் போன்ற சாதிவெறி, இனவெறிக் கட்சிகளை விரட்டியடிப்போம்!
- பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே பரந்தூர் விமான நிலையம், சிப்காட் போன்ற கார்ப்பரேட் திட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்து!
- அதானி-அம்பானி-அகர்வாலின் கார்ப்பரேட் திட்டங்களுக்கு துணைபோகாதே!
- சங்கப் பரிவாரக் கும்பலுக்கு கருத்தியல் அடியாள் வேலை பார்க்காதே!
- போக்குவரத்துத் துறையையும் கல்வித் துறையையும் கார்ப்பரேட் மயமாக்குவதை நிறுத்து!
- பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் பத்திரிகைகள், விளம்பரங்கள், திரைப்படங்கள், இணையப் பக்கங்களைத் தடை செய்!
- மனிதர்களை மிருகமாக்கும் ஆபாச வீடியோக்கள், போதைப்பொருட்களைத் தடை செய்!
- மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை உடனே மூடு!
- கல்லூரிகளில், மாணவர்களுக்கு அரசியல், சமூக உணர்வூட்டும் மாணவர் சங்கத் தேர்தலை நடத்த அனுமதி கொடு!
- தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான சாதிவெறியாட்டங்களைத் தடுத்து நிறுத்து!
- ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கு சிறப்புச் சட்டத்தை இயற்று!
***
- நீட், கியூட், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்!
- ஜி.எஸ்.டி-யை ரத்து செய்!
- சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்-ஐ ரத்து செய்!
- ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தாதே!
- ஊபா கருப்புச் சட்டங்களை ரத்து செய்! என்.ஐ.ஏ.வை கலைத்திடு!
- ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்!
- சமூக செயல்பாட்டாளர்கள், இசுலாமியர்கள், ஈழத் தமிழ் போராளிகள் மீதான பொய் வழக்குகளை ரத்து செய்!
- அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்!
- இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், பழங்குடி மக்கள் மீதான அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்து!
- சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் மீதான கார்ப்பரேட் கும்பலின் ஆதிக்கத்தைத் தடை செய்!
- ஈழத் தமிழ் அகதிகளை அகதி முகாம்களில் இருந்து விடுதலை செய்! குடியுரிமை வழங்கு!
- விவசாயத்திலும் கடல் வளத்திலும் கார்ப்பரேட் ஆதிக்கத்தைத் திணிக்காதே! மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் தடைசெய்!
- அற்ப சொற்ப உரிமைகளையும் பறித்து கார்ப்பரேட் முதலாளிகள்-காண்டராக்ட் முதலாளிகள்-போலீசு கும்பலாட்சியின் கீழ் தொழிலாளர்களைக் கொத்தடிமை ஆக்குகிற புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்தாதே! திரும்பப் பெறு!
- கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் காவி+போலீசின் கும்பலாட்சியை நிறுவுவதற்கான மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறு!
- வங்கிகள், இரயில்வே, எல்.ஐ.சி. போன்ற பொதுத்துறைகளை கார்ப்பரேட்மயமாக்காதே!
- சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டையும் கார்ப்பரேட் ஆதிக்கத்தையும் முறியடிப்போம்!
- இந்தியைத் திணிக்காதே! அனைத்து மொழிகளையும் சமத்துவமாக நடத்து!
- காஷ்மீருக்கான சிறப்புரிமையை அங்கீகரி!
- ஆளுநர் முறையை ரத்து செய்!
- அமலாக்கத்துறையைக் கலைத்திடு!
- குவாட் கூட்டணியிலிருந்து வெளியேறு! போர் வெறி பிடித்த ஆயுதக் குவிப்பை நிறுத்து!
- பாலஸ்தீன மக்களை கொன்றொழிக்கும் இனவெறி இஸ்ரேலுக்கு துணைபோகாதே! ஆயுத ஏற்றுமதியை உடனே நிறுத்து!
- விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் விவசாயிகளுக்கே!
- தொழிலாளர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமை, எட்டுமணி நேர வேலைமுறையை நிலைநாட்டுவோம்!
- அனைத்து தேசிய இனங்களும் பிரிந்துசெல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவோம்!
- தன் விருப்பத்தின் அடிப்படையில் தேசிய இனங்கள் இணைந்த நாட்டைக் கட்டியமைப்போம்!
- தற்போதுள்ள இரட்டையாட்சி முறை ஒழிக்கப்பட்டு சட்டம் இயற்றவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் அதிகாரம் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அமைப்பை உருவாக்க வேண்டும்!
- தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளைத் திரும்பிப் பெறும் உரிமை வேண்டும்!
- பாசிஸ்டுகளுக்கு சுதந்திரத்தை வழங்குகின்ற இந்த அரசியலமைப்பு மூலமாக பாசிசத்தை வீழ்த்த முடியாது!
மக்களுக்கு அதிகாரத்தை வழங்குகின்ற,
பாசிச சக்திகள் மீண்டெழுவதைத் தடுக்கின்ற
பாசிச எதிர்ப்பு ஜனநாயகத்தை நிலைநாட்டுகின்ற
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
பாசிச எதிர்ப்பு கூட்டமைப்புகள் மூலமாக
மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம்!
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை
97916 53200 – 94448 36642
73974 04242 – 9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram