பத்திரிகையாளர் சந்திப்பு
மத்திய அரசு குற்றவியல்ல் நடைறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் பாரதிய சாக்ஷய அதினியம் ஆகிய புதிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் 146 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்துவிட்டு எவ்வித நியாயமும் இன்றி நிறைவேற்றிக்கொண்டது.
குற்றவாளிகளை ரிமாண்ட் செய்யும் அதிகாரம் பழைய சட்டத்தில் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய புதிய சட்டம் (BNSS) பிரிவு 187ன் படி நிர்வாக நடுவருக்கு (தாசில்தாருக்கு) வழங்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் உரிமை பறிப்பு;-
நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டக் கைதியை அவரது நன்னடத்தைக் கருதி தண்டனையை குறைத்து பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருந்ததை புதிய சட்டம் அனுமதிக்கவில்லை. புதிய சட்ட விதி 478ன் படி மாநில அரசு ஒன்றிய அரசின் அனுமதி பெற்றப்பிறகே கைதிகளுக்கு தண்டனக் குறைப்பு தரவேண்டுமென்றுக் கூறுகிறது. இது மாநில அரசின் உரிமையைப் பறித்து கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும்.
மேற்படி சட்டங்கள் குறித்து தென்மாநிலங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் கருத்தரங்கம் 17.11.2024 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பான அழைப்பு விடுப்பதற்காகவும் மேற்படி சட்டங்கள் குறித்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. தங்கள் பத்திரிக்கை நிருபரை பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அனுப்பி செய்தி வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இடம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், சேப்பாக்கம்
நேரம்: 15.11.2024 காலை 11.30 மணி
நன்றியுடன்
தங்கள் அன்புள்ள,
JAAC தலைவர்
இந்த பத்திரிகையாளர் சந்திப்பு வினவு யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது..
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram