மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டியில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட உள்ள டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2000 பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நவம்பர் 28 அன்று நடைபெற்றது.
இதில் ஒன்றிய அரசு உடனடியாக திட்டத்தை கைவிட வேண்டும், தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி திட்டத்தை ரத்து செய்ய கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும், தமிழ்நாடு எம்பிக்கள் குளிர்கால கூட்டத் தொடரிலேயே இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும், இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மற்றும் தொல்லியல் பகுதியாக ஒன்றிய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தூத்துக்குடியில் மண்ணையும், மக்களையும் நாசமாக்கி,13 உயிர்களை துள்ளத் துடிக்க சுட்டுக் கொல்ல காரணமான வேதாந்தா நிறுவனத்திற்கு இந்த டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை பாசிச மோடி அரசு கொடுத்துள்ளது. இதை எதிர்த்து மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதே தீர்வு.
வேண்டாம் டங்ஸ்டன் சுரங்கம்!
வேண்டும் ஜனநாயகம்!
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram