தமிழ்நாடு அரசு பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும்; திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும்; பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை உருவாக்கவும்; கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை உருவாக்கவும்; 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவு எடுத்துள்ளது.
இம்முடிவின்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள எலங்குடி, தென்கால், ஆலங்குடி, ஆனைவடபாதி, ஓச்சேரி ஆகிய கிராமங்கள் திருவாரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன. இம்முடிவைக் கைவிடக்கோரிக் கோரி அப்பகுதி மக்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர்.
ஏற்கெனவே, டிசம்பர் 31 அன்று கிராம மக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி 7 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
***
தமிழக அரசே! மாவட்ட நிர்வாகமே!
அம்மையப்பன் ஊராட்சிக்கு உட்பட்ட எலங்குடி, தென்கால், ஆலங்குடி, ஆனைவடபாதி, ஓச்சேரி கிராமங்களை திருவாரூர் நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
நாள்: 07.01.2025 செவ்வாய்க்கிழமை | நேரம்: காலை 10.00 மணி | இடம்: ஊராட்சி அலுவலகம் எதிரே, அம்மையப்பன்
கோரிக்கைகள்:
- 100 நாள் வேலை திட்டம் பறிபோகும் அபாயம்
- விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு கிடைக்க கூடிய சலுகைகள் பறிபோகும்
- வரி சுமை அதிகமாகும்
- ஊராட்சி பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் ஊராட்சி கிராமங்களை நகராட்சியோடு இணைப்பது சரியா?
அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!!
இவண்: அம்மையப்பன், எலங்குடி கிராமவாசிகள்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram