ஜன 27: காசாவை கட்டியெழுப்பும் மாபெரும் பயணம்

ஜன 27: காசாவை கட்டியெழுப்பும் மாபெரும் பயணம்

ஸ்ரேலின் இனிவெறிப் போர்
இப்போதைக்கு முடிவடைந்துவிட்டது…

இடிபாடுகளாய் சிதிலமடைந்துள்ள
வடக்கு காசாவை நோக்கி
இலட்சக்கணக்கான மக்கள்
நடையாய் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்

உலகம் முழுவதும்
விடுதலைக்காகப் போராடும்,
தேசிய இன மக்களுக்கும்
உரிமைகளுக்காகப்
போராடும்
ஒடுக்கப்படும் மக்களுக்கும்
மாபெரும் நம்பிக்கையளிக்கும்
காசா மக்களின் பயணம் இது.

உறவுகளை இழந்தும்
உடைமைகளை முற்றிலும் இழந்தும்
காசா மக்கள்
நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.

அவர்கள் காசாவை கட்டி எழுப்புவார்கள்!
அவர்களுக்கு நாம் துணை நிற்போம்!

சுதந்திர பாலஸ்தீனம் நிச்சயம் மலரும்!!

பாலஸ்தீன மக்களுக்கு வாழ்த்துகள்…!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க