ஆடு கோழி நேர்த்திக்கடன் செலுத்தும் இந்துக்கள் முட்டாள்கள் என பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகி இராம. சீனிவாசனை கைது செய்ய வலியுறுத்துதல் மற்றும் இந்து மத வெறியைத் தூண்டும் இந்து முன்னணியின் இரண்டாவது பாடலை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு போலீஸ் டிஜிபி-இடம் மனு.
நாள்: 18.02.2025 | நேரம்: காலை 11:00 மணி | இடம்: மயிலாப்பூர், சென்னை
பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
***
18.02.2025
அனுப்புதல்:
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
தோழர் திருமுருகன் காந்தி,
ஒருங்கிணைப்பாளர்,
மே17 இயக்கம்.
ச. குமரன்,
சென்னை மாவட்ட செயலாளர்,
தந்தை பெரியார் திராவிட கழகம்.
தபசி குமரன்,
தலைமை நிலையச் செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
முகமது கவுஸ்,
மாநில செயற்குழு உறுப்பினர்,
வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு.
ரூதர் கார்த்திக்,
மைய சென்னை மண்டலச் செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
பெறுதல்:
தமிழ்நாடு காவல்துறை இயக்குனர்,
மயிலாப்பூர்,
சென்னை.
பொருள்
கோழி நேர்த்திக்கடன் செலுத்தும் இந்துக்கள் முட்டாள்கள் என பேசிய ராம சீனிவாசனை கைது செய்ய வேண்டி, இந்து மத வெறியை தூண்டும் இந்து முன்னணியின் இரண்டாவது பாடலை தடை செய்ய வலியுறுத்தி புகார் மனு
வணக்கம்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் த டிபேட் என்ற YouTube சேனலுக்கு கொடுத்த பேட்டியில் சிக்கந்தர் தர்காவிற்கு ஆடு கோழி நேர்த்திக்கடன் செலுத்தும் இந்துக்கள் முட்டாள்கள் என்று சமய வேறுபாடு பார்க்காமல் மத நல்லிணக்கத்துடன் இருக்கும் மக்களை இழிவுபடுத்தி பேசி உள்ளார். எனவே ராம சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.
ஏற்கெனவே இந்து முன்னணியால் கொண்டுவரப்பட்ட முதல் மதவெறி பாடல் யூடியுப் யில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது பாடல் ஒன்று வந்துள்ளது இதில் “கருணையே இல்லாமல் களத்திற்கு வாடா ” என கத்தியுடன் ரத்தம் சொட்ட சொட்ட இஸ்லாமியர்கள் மீது கொலை வெறியை தூண்டுவதாகவும் கலவரத்திற்கு வா என்று அழைப்பதாகவும் உள்ளது. இந்த மதவெறி பாடல் வெளிவந்து ஐந்து நாட்கள் ஆகியும் இதுவரை தடை செய்யப்படவில்லை; எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பாடல் உடனே தடை செய்யப்பட வேண்டும். இப்பாடலை எழுதியவர் பாடியவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். தொடர்ந்து சமூகத்தில் மத மோதலுக்கான பதட்டத்தை ஏற்படுத்தி வரும் இந்து முன்னணியின் தலைமை நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram