திருவாரூர்: முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் 25.02.2025 மாலை 4 மணிக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக “ஜல்லிக்கட்டையும் அரிட்டாபட்டியையும் மீட்டோம்! முருகனை மீட்போம் கருப்பனைக் காப்போம்! இந்து முன்னணி – ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை விரட்டியடிப்போம்!” என்ற முழக்கத்தை முன் வைத்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாவட்ட பொருளாளர் தோழர் முரளி அவர்கள் தலைமை வகித்தார். கண்டன உரையாக SDPI கட்சியின் மாவட்டச் செயலாளர் முகமது ஜாஸ்மின், விடுதலை சிறுத்தை கட்சியின் முற்போக்கு மாணவர் கழகத்தின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமா மகேந்திரன், திராவிடர் கழகத்தின் நகரத் தலைவர் தோழர் சிவராமன், திமுக நகர விவசாய அணி பிரிவு துணை அமைப்பாளர் தோழர் சம்பத், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் சீனிசெல்வம், BSP மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் பத்மநாதன் தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாநில தலைவர் தோழர் அம்பிகாபதி, அம்பேத்கர் மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவர் தோழர் விக்னேஷ், விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தோழர் எண்கண் பாரதி, சமூக ஆர்வலர் குளிக்கரை கருணாநிதி, மக்கள் அதிகாரம் தோழர் தென்பாதி மோகன், மக்கள் அதிகாரம் இணை ஒருங்கிணைப்பாளர் தோழர் லெனின் மக்கள் அதிகாரம் தோழர்கள் குரு, அஜித் மற்றும் இறுதியாகக் கண்டன உரையாற்றிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆசாத் அவர்கள் மதுரை திருப்பரங்குன்றம் கலவர கும்பலுக்குத் துணை போகும் போலீஸ் ஆய்வாளர் மதுரை வீரன், மதுரை மாவட்ட கோட்டாட்சியர் கண்ணன் மீது தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்துப் பேசினர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தின் இடையே முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தடை செய்! தடை செய்! இந்து முன்னணி – ஆர் எஸ் எஸ் – இந்து மதவெறி அமைப்புகளைத் தடை செய்! தடை செய்!

காப்போம்! காப்போம்! கற்பனைக் காப்போம்! மீட்போம்! மீட்போம்! முருகனை மீட்போம்!

விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்! இந்து முன்னணி – ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை விரட்டியடிப்போம்!

தமிழ்நாட்டின் தமிழ் மக்களின் மத நல்லிணக்க மரபுகளை மீட்டெடுப்போம்! மீட்டெடுப்போம்!

தமிழ்நாட்டு மக்களின் ஆடு கோழி பலியிடும் வழிபாட்டு முறைகளை நிலைநாட்டுவோம்! நிலைநாட்டுவோம்!

என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

எங்களது அழைப்பை ஏற்று ஆர்ப்பாட்டத்திற்கு வருகை புரிந்து கண்டனத்தைப் பதிவு செய்த ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவண்
மக்கள் அதிகாரம் மாவட்ட குழு,
திருவாரூர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க