
மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (மார்ச் 28) காலை 11.50 மணியளவில் மியான்மரின் சகாய்ங் நகரின் வடமேற்கில் 16 கி.மீ. தொலைவில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டா் அளவுகோலில் முறையே 7.7, 6.4 புள்ளிகளாகப் பதிவானது.
நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மியான்மர் இராணுவ அரசின் தகவலின்படி 1,644 பேர் பலியாகியுள்ளனர்; 3,408 பேர் காயமடைந்துள்ளனர்; 139 பேர் காணாமல் போயுள்ளனர்.
பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. கட்டட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல், தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், பல அடுக்குமாடி கட்டடங்கள் நிலநடுக்கத்தால் சரிந்துள்ளன. தற்போது வரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 26 பேர் காயமடைந்துள்ளதாகவும் 47 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மியான்மர் நிலநடுக்கத்தின் கோரங்களை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள்:






தாய்லாந்து:


ராஜேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram