மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டம் – வஞ்சிக்கும் தி.மு.க அரசு!

ஆந்திராவைப் போன்று தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று (பிப்ரவரி 10) சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0

மிழ்நாட்டில் தற்போது வருவாய்த் துறை மூலமாக சாதாரண ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 1,500 ரூபாய், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 2,000 ரூபாய் மாத உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது உள்ள விலைவாசி உயர்வால் கிடைக்கக் கூடிய உதவித் தொகையைக் கொண்டு வாழ்க்கையை நகர்த்த முடியாமல் கடும் சிரமங்களை அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அண்டை மாநிலமான ஆந்திராவில் சாதாரண ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 6,000 ரூபாயும் கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 10,000 ரூபாயும், படுத்த படுக்கையாக உள்ளவர்களுக்கு 15,000 ரூபாய் மாத உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மாதம் 2,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.

எனவே, ஆந்திராவைப் போன்று தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று (பிப்ரவரி 10) சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் படுத்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் அராஜகமாகக் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளனர்.

இதுதவிர, டெட் (ஆசிரியர் தகுதித்தேர்வு) மதிப்பெண் குறைப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி “பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பட்டதாரிகள் சங்கம்” சார்பில் பத்து நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் தி.மு.க அரசு அவர்களின் கோரிக்கைகளை தற்போது வரை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க