தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழையும் சில பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூா், மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று (அக். 22) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம், திருச்சி, வேலூா், திருப்பத்தூா், தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கள நிலமைகளையும் செய்திகளையும் வெளியிட்டு வருகின்றனர். அவற்றையும் கனமழையால் ஏற்பட்டு வரும் பல்வேறு பாதிப்புகள் குறித்த செய்திகளையும் இங்கு தொடர்ந்து பதிவிட உள்ளோம்.
– வினவு
***
தொடர் மழை: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்
உணவுப் பொருட்கள் உட்பட அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்ய, வெளியில் போக முடியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மாவட்ட நிர்வாகமே!
மண்டபம் பகுதி மக்களை உடனே மீட்டெடு! உணவுப்பொருள்கள் நிவாரணம் வழங்கு!
மக்கள் அதிகாரக் கழகம்,
சிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்கள்
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை அறிவிப்பு!
தமிழக அரசு உடனடியாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டு கொள்கிறது…
![]()
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











