காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று சென்னைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையிலான பகுதியை கடக்கவிருக்கிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்,  திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளோடு சென்னையும் இன்று 21.11.2018 முதல் கனமழையை சந்திக்கவிருக்கிறது. இன்றிலிருந்து நாளை காலை வரையில் மழை பொழியும், சென்னையில் காற்றும் வீசும்.

படிக்க:
♦ மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?
♦ எடப்பாடி அரசுக்கு குவியும் ‘பாராட்டுக்கள்’ – டெல்டாவெங்கும் சாலை மறியல்கள் !

காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் இன்று வட தமிழக கடற்கரையை கடக்கவிருக்கும் நிலையில் சென்னைக்கு வெளியே இருந்த பெரிய மேகக்கூட்டம், நிலத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. சீரான மழையோடு, சில சமயங்களில் கன மழையாகவும், மிக கன மழையாகவும் இருக்கக் கூடும்.

சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், பாண்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய அனைத்துப் பகுதிகளும் இன்றும் நாளையும் மழை பெறும். தென் சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகள் மிக மிக கனமழையை சந்திக்கக் கூடும். மிகக் கடுமையான மழையாகவும் இவை இருக்கலாம்.

தாழ்வுமண்டலம் சென்னைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே கடந்து செல்வதால், ஒட்டுமொத்த வடக்குப் பகுதியும் மழை பெறும். கடலூர் மாவட்டத்தில் மழை பொழியாமல் போகலாம். கடலூர் நகரம் சிறிய அளவிலான மழையைப் பெறலாம்.

சென்னை – பாண்டி பகுதிகளில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசக் கூடும். சென்னையின் தெற்குப் பகுதிகளான, தாம்பரம், காஞ்சிபுரம், ஒரகடம் பகுதி, கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, மகாபலிபுரம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் கவனம் தேவை.

நன்றி: தமிழ்நாடு வெதர்மேன்

தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் வானிலை குறித்த முன்னறிவிப்பை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இன்று (21-11-2018) காலை சுமார் 10:30 மணியளவில் அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவின் தமிழாக்கம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க