வினவு
விவசாயிகளுக்கு என்ன செய்யப் போகிறோம் ! திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டம்
மத்திய மாநில அரசுகளை பணிய வைத்த தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு மெரினா போராட்டம், எப்படி போராட வேண்டும் என அனைவருக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் செய்ய முடியாததை ஐந்து நாட்களில் செய்யவைத்தது தமிழக மக்கள் போராட்டம்.
நாட்டை விற்கும் மோடி – கழனியை அழிக்கும் ஜக்கி – பேச மறுக்கும் ஊடகம்
இந்தக் கேடுகெட்ட மீடியாக்கள் தாங்கள் மக்களின் பக்கம் இருப்பதாகவும், நடுநிலையோடு நட்ட நடு சென்டரில் நிற்பதாகவும் அடித்துக்கொள்ளும் ஜம்பம் மட்டும் தாங்க முடியவில்லை.
ஓசூரில் குற்றவாளி ஜெயா படத்தை நீக்கிய பள்ளி மாணவர்கள் !
மாணவர்களும் திரளாக நின்று தங்கள் பாடப் புத்தகங்களில் உள்ள ஜெயா படத்தின் மீது திருவள்ளுவர் ஸ்டிக்கரைக் கேட்டு பெற்று ஒட்டினர். வியாபரிகளும் பொதுமக்களும் இதுதான் சரியான போராட்டம் என்று உணர்வூட்டும் வகையில் இருந்ததாக தெரிவித்தனர்.
மெரினாவை அழகுபடுத்துவோம் ! கருத்துப் படங்கள்
அதிமுக அடிமைகளுக்கு வேண்டுமானால் ‘குற்றங்களின் அம்மா’-வின் ஆசி தேவை ஆனால் அது தமிழ்நாட்டுக்கு தேவையில்லை ! மெரினாவிலும் தமிழகத்திலும் தண்டனைக் குற்றவாளியின் படங்களை நாமே அகற்றுவோம் !
சென்னை பல்கலை : ஆர்.எஸ்.எஸ் தருண் விஜய்யே வெளியேறு !
நமது பல்கலைக்கழகத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்குவதற்காக தான் தருண் விஜயை அழைத்து வருகிறது ABVP இவர்களை பல்கலைகழகத்தில் அனுமதிப்பது வரலாற்றுப் பிழையாகும்.
ஒவ்வொரு நாளும் தனியே அழுது கொண்டிருக்கிறேன்
ஒரு பணக்காரன் தன்னுடைய அம்மாவை மருத்துவமனையில் சேர்க்க வங்கிக் கடனட்டையைத் தேய்க்க முடியும். என்னைப் போன்றவர்கள் என்ன செய்வார்கள்?
பயிர்க் காப்பீடு : விவசாயிக்கு சுண்ணாம்பு காப்பீட்டு நிறுவனங்களுக்கு வெண்ணெய் !
விவசாயிகளை விட, ஐ.சி.ஐ.சி.ஐ.,லாம்போர்டு, ஹெச்.டி.எஃப்.சி., இஃப்கோ-டோக்கியோ போன்ற 16 தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனங்களின் இலாபத்தை மட்டுமே கொள்கையாகக் கொண்டதுதான் மோடியின் தேசிய வேளாண் காப்பீட்டுக் கொள்கை.
பணமதிப்பிழப்பு : மோடி அரசின் அழிவுக் கதைகள்
பலருக்கும் நான் சேர்த்திருந்த தொகை பெரியதாகத் தெரியாது. ஆனால் அது மட்டும் தான் எனது சேமிப்பு. பணமதிப்பழிப்பினால் கமிஷனுக்காக நான் இழந்த இரண்டாயிரம் ரூபாய் எனக்குப் பெரிய தொகை
களவாணி ஜெயா படங்களை அகற்று ! தடையை மீறி தமிழகமெங்கும் போராட்டம் !!
மொத்தத்தில் ஜெயா ஒரு களவாணி அவர் பெயரையும் படத்தையும் அகற்றுவதே சுயமரியாதை என்ற கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த ஆர்ப்பாட்டங்கள் அமைந்ததுள்ளது.
அரசு மிக்ஸியில் குற்றவாளி ஜெயா படம் அகற்றப்பட்டது !
போராட்டத்தை கவனித்த பொது மக்களிடமும் அவர்களின் வீடுகளில் உள்ள பொருட்கள் மற்றும் பள்ளிப்பாட புத்தகங்கள், நோட்டுக்களில் ஜெயாவின் படங்களை நீக்கச் சொல்லி பிரச்சாரம் செய்யப்பட்டது.
சீர்காழி விவசாயத்தை சிதைத்த அரசு – நேரடி ரிப்போர்ட்
25 வருசமா இந்த கொள்ளிடத்துல ஆத்து மணலை ராவும் பகலுமா கொள்ளையடிச்சி தண்ணியப் பூரா உறிஞ்சிட்டானுங்க. அப்புறம் எங்கத் தண்ணி இருக்கும்?
திருச்சி : புத்தகங்களில் குற்றவாளி ஜெயா படம் நீக்கம் 5 தோழர்கள் கைது !
குற்றங்களின் அம்மாவை மறைத்து திருவள்ளுவர் படத்தை ஒட்டுவதை சட்டத்தின் காவலர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மக்கள் அதிகாரம் தோழர்களின் நடவடிக்கையை உடனடியாக தடுத்து கைது செய்தனர்.
கிரிமினல் ஜெயா படத்தை உடைத்த தோழர்கள் கடலூர் சிறையில் அடைப்பு !
தடையை மீறி எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளே சென்று குற்றவாளி ஜெயாவின் உருவப்படத்தை உடைத்ததால் காவல்துறை மக்கள் அதிகாரம் தோழர்கள் 70 பேரை கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்று திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தது. பின்னர் அனைவரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றவாளி ஜெயா படங்களை அகற்று : தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் !
மக்கள்வரிப்பணத்தில் செயல்படுத்தக்கூடிய மக்கள் நலத்திட்டங்களை , இலவசத்திட்டங்கள் என அறிவித்து தமிழக மக்களை பிச்சைகாரர்களாக கருதிய பார்ப்பன பாசிஸ்ட், ஊரறிந்த கிரிமினல் குற்றவாளி ஜெயாவின் புகைப்படங்களை தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாது நிரந்தரமாக நீக்க வேண்டும்
விருத்தாசலம் : MLA அலுவலக ஜெயா படம் உடைப்பு ! மக்கள் அதிகாரம்
பொதுமக்களும் தோழர்களும் தடையை மீறி உள்ளே நுழைந்து குற்றவாளி ஜெயாவின் படத்தை அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த படம் வீதியில் போட்டு நொறுக்கப்பட்டது. தற்போது மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ உட்பட பல தோழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.















