தூத்துக்குடி: கபடி வெற்றியை கொண்டாடிய தலித் மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல்
கைது, மருத்துவ சிகிச்சை ஆகியவற்றைத் தாண்டி அரசு நிர்வாகம், சாதிவெறியைத் தடுக்க இப்பகுதியில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இதுபோன்ற சாதிவெறித் தாக்குதல்கள் தற்போதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
புல்லட் ஓட்டியதற்காக தலித் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்
அய்யாச்சாமியின் குடும்பத்திற்குப் பல ஆண்டுகளாகவே சாதியக் கொடுமையும் தீண்டாமையும் இழைக்கப்பட்டுவரும் நிலையில், அது போலீசு நிலையத்திலும் பலமுறை புகாராக அளிக்கப்பட்டு வந்தாலும் இது சாதியத் தாக்குதல் அல்ல எனச் சாதிக்கிறது போலீசு.
சனாதனம் தகர்க்கவே வள்ளலாரின் ஜோதி வழிபாடு!
கடவுளையும் கோயிலையும் தங்களுக்கு மட்டுமே உரியதாக ஆக்கிக்கொண்டு, ஆரிய பார்ப்பனர்கள் செய்த ஆதிக்கத்தையும், ஏற்றத்தாழ்வுகளையும், தீண்டாமையையும், மூடச் செயல்களையும், சுரண்டல்களையும் ஒழிக்க, கடவுள் ஜோதி வடிவானது என்ற கொள்கையை அவர் கட்டமைத்தமை புலப்படுகிறது.
வேங்கைவயல்: முதுகில் குத்திய தி.மு.க. அரசு
தி.மு.க. அரசின் இந்த அயோக்கியத்தனமான நடவடிக்கையானது பாதிக்கப்பட்ட வேங்கைவயல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அப்பட்டமான துரோகமாகும்.
கழிவுநீர்த் தொட்டியில் மூன்று தொழிலாளர்களைப் பலிகொடுத்த மம்தா அரசு!
துப்புரவுப் பணியை இயந்திரங்களைக் கொண்டு நவீனப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் அக்கறை காட்டுவதில்லை.
வேங்கை வயல்: பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசு
வேங்கை வயல் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் போலீசு ஆதிக்க சாதி வெறியர்களின் பக்கமே செயல்படுகிறது.
வேங்கைவயல்: பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கும் தி.மு.க. அரசின் அயோக்கியத்தனம்
சமூக நீதி, திராவிட மாடல் என வாய்கிழியப் பேசிக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் முதுகில் குத்திய தி.மு.க. அரசின் இந்த பச்சை துரோகத்தை வேங்கைவயல் தலித் மக்களும் தமிழ்நாடு மக்களும் ஒருநாளும் மன்னிக்க மாட்டார்கள்.
அதிகரித்துவரும் சாதிவெறியாட்டங்கள்: துணைபோகும் தமிழ்நாடு போலீசு
மூன்று ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகை காலங்களில் ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களை இழிவு படுத்துவது, வாகனத்தில் சென்றால் வழிமறித்து வம்பிழுத்து தாக்குவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
மதுரை ஜல்லிக்கட்டில் சாதி தீண்டாமை | ம.க.இ.க. கண்டனம்
முன்னர் கிராம கமிட்டிகள் மட்டும் நடத்திவந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் 2018 ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, அரசு இணைந்து நடத்துவதாக மாறியது. சாதி, மதம் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததால் அதில் நில உடமை, சாதி ஆதிக்கம் தளர்ந்தது.
ஜல்லிக்கட்டில் சாதி வேறுபாட்டை கலைவது குறித்து – மீள்பதிவு
தலித் பின்னணி கொண்ட திறமையான வீரர்களை, ஆதிக்கச் சாதியினர் பெரும்பான்மையாக உள்ள அணிகளில் இணைத்து, அவர்களை முன்னணியில் வரவிடாமல் தடுப்பது; வெளியூரில் இருந்து வருகின்ற தலித் மக்களின் மாடுகளுக்கு அனுமதி கொடுக்காமல் தவிர்ப்பது; அனுமதி கொடுக்கப்பட்ட உள்ளூர் தலித் மக்களின் மாடுகளை இயன்றவரை போட்டியில் ஈடுபடுத்தாமல் விட்டுவிடுவது போன்ற வகைகளில் சாதி தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக மக்கள் வேதனைப்படுகின்றனர்.
பார்ப்பனிய எதிர்ப்பு புரட்சி நடக்காமல் போனதற்கான காரணம் || அம்பேத்கர்
படிப்படியான சமத்துவமின்மை முறை, அநியாயத்தை எதிர்த்த பொதுவான அதிருப்தி ஏற்படாமல் தடுக்கிறது.
இரண்டாண்டுகளாக நாறிக்கொண்டிருக்கிறது.. தி.மு.க-வின் ‘சமூகநீதி’!
31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டும் 300 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டும் இதுவரை குற்றவாளி கண்டறியப்படவில்லை என்பதுதான் ‘இந்தியாவின் ஸ்காட்லாந்து யார்ட்’ என பீற்றிக்கொள்ளப்படும் தமிழ்நாடு போலீசின் யோக்கியதை.
பகுத்தறிவு பகலவனின் பார்ப்பனிய எதிர்ப்பை உயர்த்திப் பிடிப்போம் | பெரியார் 51-வது நினைவு தினம்
பெரியார் 51-வது நினைவு தினம்
பகுத்தறிவு பகலவன், பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி தந்தை பெரியார் அவர்களின் 51ஆவது நினைவு தினத்தன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பாசிச...
கழிவு நீர்த் தொட்டிகளில் பலிகொடுக்கப்படும் பட்டியல் சாதி மக்கள்
2021 முதல் 2023 இடைப்பட்ட காலத்தில் பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்ததில் 377 பேர் இறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது வரை நிகழ்ந்துள்ள மலக்குழி மரணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.
இளையராஜாவை இழிவுபடுத்திய பார்ப்பன திமிரை முறியடிக்க வேண்டும் | ம.க.இ.க
தங்களுடைய பார்ப்பனிய மேலாண்மையை நிறுவுவதற்காகத்தான் இந்த ஆகமம், விதி என்பதையெல்லாம் வைத்துள்ளார்கள். ஆகமம், விதி என்ற பெயரில் நம்மை இழிவுபடுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.