Tuesday, November 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 25

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 அக்டோபர், 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 23 | 1989 அக்டோபர் 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கிழக்கு ஐரோப்பிய நாடுகள்: பின்னோக்கி பெரும்பாய்ச்சல்!… ஏன்?
  • முதல்வர் பதவியைக் குறிவைத்து ஜெயலலிதாவும் மு.க. ஸ்டாலினும்
    வசந்தசேனையும் சோழர்குலக் கொழுந்தும்!
  • போஃபார்ஸ் பீரங்கி பேர லஞ்சஊழல்: புகையும் பீரங்கிகள் வெடிக்கும்
  • அசாமில் ரத்தக் களறி
    போடா தலைமையின் துரோகம்
    மீண்டும் ‘ரா’வின் கைவரிசை
  • ‘நீதி’பதிக்கு நேர்ந்த கதி!
  • தேர்தல் ஆதாயம் கருதி ஓட்டுக் கட்சிகள் தூண்டிவிடுகின்றன
    வடமாநிலங்களில் பரவும் மதவெறிக் கலவரங்கள்
  • நிர்வாகத்தின் சதி! சங்கங்களின் துரோகம்!
  • அரசு நிதி நிறுவனங்களில் அம்பாணியின் கொள்ளை!
  • ஐரோப்பிய தமிழ் அகதிகள் மீது புதிய நாஜிக்கள் தாக்குதல்
    துயரம் துரத்துகிறது!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஜாக்டோ-ஜியோ போராட்டம்: டிஜிட்டல்மயமாக்கச் சதியை முறியடிக்க வேண்டும்!

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் நடந்த ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

ரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பானது, சரண் விடுப்புத் தொகை போன்ற அவ்வப்போதைய காலச்சூழலுக்கேற்ப சில கோரிக்கைகளை இணைத்துக் கொண்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, ஒப்பந்த ஊழியர்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டுவருவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட சில அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று நேரடியாக அரசு ஊழியர்களின் போராட்டப் பந்தலுக்கே சென்று அறிவித்து அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். 2021-ஆம் ஆண்டு தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர்.

ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், தி.மு.க. அரசைக் கண்டித்து பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். இப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக தி.மு.க. அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று மிரட்டல் விடுத்துள்ளது.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் வாழ்வாதாரக் கோரிக்கைகள்

ஆசிரியர், அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ – ஜியோ பல்வேறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாகப் போராடி வருகிறது.

“புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்துச் செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். அரசாணை எண் 243-ஐ இரத்துச் செய்ய வேண்டும்.

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி 01.01.2016 முதல் ஊதியத்தை வழங்க வேண்டும். ஆனால், அரசோ அக்டோபர் 2017 முதல் கணக்கிட்டு வழங்குகிறது. பாக்கியுள்ள 21 மாத கால நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

ஐந்தாயிரம் அரசுப் பள்ளிகளை மூடும், பல பள்ளிக்கூடங்களை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

அங்கன்வாடி ஊழியர்கள், நகர்ப்புற நூலகர்கள் போன்றவர்களை சிறப்பு கால முறை ஊதியம் என்ற பெயரில் மிகக் குறைவான சம்பளம் வழங்கி அரசு நியமனம் செய்துவருகிறது. இதை மாற்ற வேண்டும்.

3,500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் அரசு கைவிட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி – யூ.கே.ஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை இரத்துச் செய்ய வேண்டும்.

அரசு ஊழியர்களின் பணியிடங்களைக் குறைக்கும் அரசாணைகள் 56, 100, 101 ஆகியற்றை இரத்துச் செய்ய வேண்டும். இந்த அரசாணைகள் அரசுப் பணிகளை ஒப்பந்த முறையில் தனியாருக்கு வழங்க வித்திடுகிறது. இது, எதிர்கால வேலை வாய்ப்புகளைக் கடுமையாக பாதிக்கும்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.”

மேற்காணும் இந்த கோரிக்கைகள் அடிப்படையானவையாகும்.

000

அரசு ஊழியர்களின் இப்போராட்டத்தை, அரசு ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிரான போராட்டம் என்பதாக மட்டுமில்லாமல், இதன் மற்றொரு பரிமாணத்தை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது. அரசு ஊழியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது, ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பது போன்றவை அரசுத்துறைகளை டிஜிட்டல்மயமாக்கும் சதித்திட்டத்தின் முன் தயாரிப்புகளாகும்.  இது உழைக்கும் மக்களுக்கு அரசு வழங்கும் சேவைகளை கை கழுவ செய்யும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கையின் முக்கிய அங்கமாகும்.

மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதும்
அரசு ஊழியர்களின் போராட்டமும்

“அரசு ஊழியர்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் அரசுக்கும் அரசு ஊழியர்களுக்குமான பிரச்சினை. ஆனால், போராட்டம் என்ற பெயரில் சாதாரண மக்கள் பாதிப்படைகின்றனர்”; “ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குவது மட்டுமன்றி, தனியாக இலஞ்சம் வாங்கிவரும் இந்த அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்காக போராடுகின்றனர்”; “ஏற்கெனவே ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கான நிதியை ஒதுக்காத சூழலில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், பட்ஜெட்டில் மிகப்பெரும் பற்றாக்குறை ஏற்படும். எனவே, அரசு ஊழியர்கள் மக்கள் நலத்திட்டங்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும்” போன்ற பல்வேறு வாதங்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன. இவை ஆளும் வர்க்க ஊடகங்களால் திட்டமிட்டே பரப்பப்பட்டு வருகின்றன.

ஆனால், அரசு ஊழியர்கள் முன்வைக்கும் இக்கோரிக்கைகள் தமிழ்நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் தொடர்புடைய கோரிக்கைகளாகும். அரசு ஊழியர்களின் நியாயமான வாழ்வாதாரக் கோரிக்கைகளுமாகும்.

பணிப்பாதுகாப்பு என்பது ஒவ்வொரு உழைக்கும் மக்களுக்கும் அடிப்படை உரிமையாகும். இது, சமூகப் பாதுகாப்பு அம்சத்துடன் ஒன்றிணைந்தது. மேலும், இவ்வுரிமைகள் உலகம் முழுவதுமுள்ள உழைக்கும் மக்களின் போராட்டங்கள் மற்றும் உயிர்த்தியாகங்களின் மூலமாக பெறப்பட்டவையாகும். இதனை மறுப்பது என்பது பெயரளவிலான ஜனநாயக முகமூடிகளைத் தூக்கிவீசிவிட்டு, அரசாங்கமே முற்றும் முழுதாக ஒரு சுரண்டல் நிறுவனமாக மாறி நிற்பதை குறிக்கிறது.

நாட்டின் மிகப்பெரும் அளவில் ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனம் அரசுக் கட்டமைப்பாகும். தனியார் நிறுவனங்களை முறைப்படுத்துவது என்பதையும் தாண்டி முதலில் அரசானது தனது ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும். ஆகையால், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஆதரிப்பது உழைக்கும் மக்களின் கடமையாகும்.

மேலும், மருத்துவத் துறை, கல்வித் துறை, மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, வேளாண் துறை, பொதுப்பணித் துறை, ஆட்சி நிர்வாகத் துறை போன்ற அரசின் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது, ஒப்பந்தப் பணியாளர்களைப் புகுத்துவது போன்றவை அரசு மக்களுக்கு வழங்கும் சேவைகளைக் கைகழுவும் சதித்திட்டத்தின் அங்கமாகும்.

வேலையின்மை, விலைவாசி ஏற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடுகள், நகரமயமாக்கம் போன்றவற்றால் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் நெருக்கடிக்குத் தள்ளப்படும் சூழலில், மக்களுக்குச் சேவை வழங்குவதிலிருந்து அரசு விலகுவது, மக்கள் மீதான மறைமுகத் தாக்குதல்களாகும். கார்ப்பரேட் கொள்ளையர்கள் இத்துறைகளில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் மக்களை வேட்டையாடுவதற்கு அரசு வழிவகை செய்துக் கொடுப்பதாகும். ஆகையால், உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு அரசு ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது அவசியமானதாகும்.

டிஜிட்டல்மயமாக்கம் எனும் பேரழிவு!

இவை மட்டுமல்ல, அரசின் சேவைத் துறைகள் அனைத்தும் தனியார்மயமாக்கப்படுவது மட்டுமின்றி, அதன் பின்னே டிஜிட்டல்மயமாக்கம் என்ற சதியும் அடங்கியுள்ளது.

அதாவது, அரசுத் துறைகளில் நடக்கும் இந்த தனியார்மயமாக்கம், ஊழியர்களுக்கு உரிமைகளற்ற நிலைமை, ஒப்பந்தப் பணி முறை திணிப்பு, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் செய்யப்படும் அறிவிக்கப்படாத ஆட்குறைப்பு போன்றவை டிஜிட்டல்மயமாக்கம் என்ற பேரபாயத்தின் தயாரிப்புகள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சமாகும்.

கடந்த 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிட்டல்மயமாக்கல் வியூகம் (Tamil Nadu Digital Transformating Strategy – DiTN) ஆவணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதைப்பற்றிய தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில், “2021-22 ஆம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக் கோரிக்கையில், விரைவான, கண்காணிக்கக்கூடிய, அணுகக்கூடிய மற்றும் பதிலளிக்கும் வகையிலமைந்த, வெளிப்படையான நிர்வாகத்தை குடிமக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, மின்னாளுகையைப் படிப்படியாக அரசின் அனைத்து மட்டங்களிலும் புகுத்தி, அதன் மூலம் முழுமையானதொரு அரசாங்கத்தை எய்திடும் வகையில் “டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம்” செயல்படுத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான், அரசின் டிஜிட்டல்மயமாக்கும் சதித்திட்டமாகும்.

குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு, ஒன்றிய அரசும், மாநில அரசும் அரசுத் துறைகளில் டிஜிட்டல் மயமாக்கத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. மருத்துவம், கல்வி, விவசாயம் போன்ற அரசின் முக்கிய சேவைத் துறைகள் ஆன்லைன்மயமாக்கப்பட்டு வருகின்றன. நீதித்துறை, போலீசு, ஆட்சி நிர்வாகம் போன்றவையும் வேகமாக டிஜிட்டல்மயமாக்கப்படுகின்றன.

ஒட்டுமொத்த அரசாங்கமும் ஒரு கால் செண்டர் போல இயங்குவதை நோக்கி அரசின் டிஜிட்டல்மயமாக்கத் திட்டம் அமைந்துள்ளது. இத்துடன், எல்.ஐ.சி., வங்கித்துறை போன்ற நிதிச் சேவைகள் மற்றும் வணிகங்கள் பெருமளவு டிஜிட்டல்மயமாக்கப்பட்டுவிட்டன.

சாதாரணமாக, கடைகளில் சில்லறை கொடுத்துப் பெறுவது சிக்கலாக இருப்பதால் “ஜி பே” செய்வது இன்று எளிதாகத் தெரிகிறது. இந்த அனுபவத்தில் இருந்து டிஜிட்டல்மயமாக்கம் நல்லது என்ற பாமரத்தனம் மக்களிடம் அதிகரித்துள்ளது. மேலும், டிஜிட்டல்மயமாக்கம் அறிவியல் வளர்ச்சி, அதனை எதிர்க்கக் கூடாது என்ற கருத்தும் பொதுக்கருத்தாக நிலவுகிறது.

உண்மையில், டிஜிட்டல்மயமாக்கம் என்ற பெயரில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதையும், கார்ப்பரேட் சுரண்டலைத் தீவிரப்படுத்துவதையும், அரசு ஊழியர்களின் உரிமைகள் பறிப்பதையும் எதிர்க்க வேண்டும்.

ஏனெனில், தற்போது ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் டிஜிட்டல்மயமாக்கத்தின் அடிப்படையே “பள்ளியில்லா கல்வி”, “அலுவலகம் இல்லா அரசு நிர்வாகம் – ஊழியர்கள் இல்லாத பணி முறை” போன்றவையாகும்.

மேலும், மக்கள் அனைவரும் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுவதும் அரங்கேறும். மக்களின் வங்கிக் கணக்குகள், ஆதார், பான்கார்டு போன்ற அனைத்துத் தரவுகளை இணைப்பதன் மூலமும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிப்பதன் மூலமும் அனைவரையும் கண்காணிப்பது, வருமான வரி விதிப்புக்குள் அனைவரையும் கொண்டுவருவதும் நடக்கிறது. ஏற்கெனவே ஆதார் மூலமாக மக்களின் அடிப்படை தரவுகள் கார்ப்பரேட் கம்பெனிகளால் கொள்ளையடிக்கப்பட்டதை நாம் அறிவோம்.

அதேபோல், பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின்னர், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. இந்த டிஜிட்டமயமாக்கத்தின் விளைவாக, சைபர் குற்றங்கள் எனப்படும் இணையக் குற்றங்கள் புதிய இயல்புநிலையாகியுள்ளன. மக்களின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்கும் குற்றங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களின் வங்கிக் கணக்குக்கேற்ப விளம்பரங்களை அனுப்பியும் பல்வேறு ஆசைகளைக் காட்டியும் கொள்ளையடிக்கின்றன.

மாற்றுக் கொள்கையும் மக்கள் போராட்டங்களுமே தீர்வு!

இவ்வாறு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் உரிமைகள் பறிக்கப்படும் இன்றைய நிலைமையை தனிப்பட்ட ஒரு பிரிவினரின் உரிமைப் பறிப்பாக மட்டுமின்றி, அரசுத் துறைகள் டிஜிட்டல்மயமாக்கும் பேராபத்தின் அங்கமாகப் பார்க்கப்பட வேண்டும். இதிலிருந்து உரிமைகளை மீட்டெடுப்பதற்கான கண்ணோட்டம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

மேலும், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு முன்வைக்கும் கோரிக்கைகளை கடந்த அ.தி.மு.க. அரசாங்கம் நிறைவேற்றவில்லை. தேர்தல் ஆதாயத்திற்காக பெயரளவிற்குக் கூட, எடப்பாடி பழனிச்சாமி இதுவரை இக்கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

ஆகையால், தற்போது தி.மு.க. அரசை நிர்பந்தித்து இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வைக்கவில்லை என்றால், அடுத்து வர இருக்கும் அரசாங்கம் எதுவாக இருந்தாலும், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றப் போவதில்லை என்றே நிலவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

அதேவேளையில், தேர்தல் ஆதாயத்திற்காக சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அந்த உரிமைகள் நீடிப்பதற்கான அடிப்படைகள் தகர்க்கப்படுவது தவிர்க்க இயலாதது. ஏனெனில், 1950-களில் உருவாக்கப்பட்ட “மக்கள் நல அரசு” என்ற கோட்பாட்டின் அடிப்படையில்தான், உழைக்கும் மக்களின் உரிமைகள் போராடிப் பெறுவதற்கான வாய்ப்புகள் அளிக்கப்பட்டன.

ஆனால், 1990-களில் புகுத்தப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கையானது, “நிர்வாக சீரமைப்பு”, “எளிமையான அரசாங்கம்” போன்ற பெயர்களில் பல்வேறு கட்டங்களாக அரசுக் கட்டமைப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அரசுக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும், டிஜிட்டல்மயமாக்கும் மறுகட்டமைப்பு நடவடிக்கை என்பது, “அலுவலகங்கள் இல்லாத, அரசு நிர்வாகம்”, “ஊழியர்கள் இல்லாத பணி முறை” என்ற அறிவிக்கப்படாத கொள்கையைப் பின்பற்றுவதால்,  இவை, அரசு ஊழியர்களின் தற்போதைய கோரிக்கைகளை, அதன் இயல்பிலேயே காலாவதியாக்கி விடுகிறது.

இதுதான், தங்களது கொள்கை என்று வெளிப்படையாக அறிவிக்காமல், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தக்கவைத்துக் கொண்டே, நயவஞ்சகமாக தங்களது டிஜிட்டல்மயமாக்க மக்கள் விரோத நடவடிக்கையை மேற்கொள்வதுதான், ஆளும் வர்க்கத்தின் மூல உத்தி.

இந்த மூல உத்தியை அம்பலப்படுத்தித் தகர்த்தெறிய வேண்டுமெனில், அதற்கான மாற்றுக் கொள்கை முன்வைக்கப்பட வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கான மக்கள் போராட்டங்களைக் கட்டமைப்பதன் மூலமாகவே, அரசு ஊழியர்களுக்கான நியாயமான உரிமைகளை உறுதிப்படுத்த முடியும்.


நீலன்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 அக்டோபர், 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 22 | 1989 அக்டோபர் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றமும் தட்டுப்பாடும்: இன்னுமொரு பொருளாதாரத் தாக்குதல்
  • நகரங்களை வளைத்து போடும் நில முதலைகள்
  • சொரப்பூர், போடி சாதிக்கலவரங்கள்; அபாய அறிகுறி!
  • சாதிய வெறித் தீயின் நடுவே சாதி எதிர்ப்பு பிரச்சாரம்
  • பெண் குற்றவாளிகள்: அவமானத்தின் விளிம்பில்…
  • இரகசிய உலகப் பேர்வழிகளுடன் ஓட்டுக்கட்சிகள் உறவு
  • வருமானவரி அதிகாரிகல் மீது வியாபாரிகள் – மாஃபியா தாக்குதல்
  • கம்மங்கஞ்சிக்கு உயிர்! வேலைக்குக் கற்பு
  • குதர்க்கவாதி “சோ”வின் கொலைவெறி!
  • கோட்டுசூட்டு போட்ட பகற்கொள்ளையர்கள்
  • கி.ஜெர்மனி மக்கள் தப்பியோட்டம்: சேற்றிலிருந்து புதைகுழியை நோக்கி…
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



வக்ஃப் திருத்தச் சட்டம்: பாசிச கும்பலின் ‘நில ஜிகாத்’

0

க்ஃப் சட்டத் திருத்த மசோதா 2025, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, மக்களவையில் ஏப்ரல் 3 அதிகாலையிலும் மாநிலங்கள் அவையில் ஏப்ரல் 4 அதிகாலையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதா 1995-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்கிறது. இம்மசோதா ஏப்ரல் 5 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்று விட்டது.

முன்னதாக, ஆகஸ்ட் 8, 2024 அன்று வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024 மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமிய மக்களிடையே எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெரும்பான்மை வகிக்கும் வகையில் அமைக்கப்பட்ட கூட்டுக்குழு ஜனவரி 31, 2025 அன்று தனது அறிக்கையை மக்களவை சபாநாயகரிடம் சமர்ப்பித்தது. கூட்டுக் குழுவில் இடம் பெற்றிருந்த எதிர்க்கட்சி எம்.பி-க்களின் கருத்துகள் பெரும்பான்மை பெறவில்லை என்று கூறி நிராகரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கூட்டுக் குழு அறிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புதிய மசோதா ஏப்ரல் 2 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இம்மசோதா குறித்துப் பேசிய அமித்ஷா, 1995-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் 2013 ஆம் ஆண்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்காவிட்டால் தற்போது இச்சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியமே இருந்திருக்காது என்றும் 2013 ஆம் ஆண்டு திருத்தத்திற்கு பின்பு வக்ஃப் சொத்துகள் இரட்டிப்பாகி உள்ளன என்றும் கூறினார்.

மேலும், “வக்ஃப் வாரிய சொத்துகளின் தவறான நிர்வாகத்தைத் தடுப்பதையும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதையும் இம்மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று கூறினார்.

ஆனால், 2013 ஆம் ஆண்டு சட்டத்திருத்தத்தை பா.ஜ.க-வும் ஆதரித்திருந்தது. அப்போது பா.ஜ.க எம்.பி-ஆக இருந்த ஷாநவாஸ் ஹுசைன், வக்ஃப் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை இச்சட்டத் திருத்தம் குறைக்கும் என்று பாராட்டிப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


படிக்க: காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிட அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகள்!


அவ்வாறெனில், இந்த பாசிச கும்பலின் நோக்கம் என்ன?

இத்திருத்தச் சட்டத்தில் உள்ள சில திருத்தங்களை நோக்கினாலே அதனைப் புரிந்து கொள்ளலாம்.

வக்ஃப்-க்கு சொத்துகளை இஸ்லாமியர்கள் மட்டுமே தானம் செய்ய வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதிலும் சொத்துகளை வழங்குபவர் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது நயவஞ்சகமானதாகும். ஒரு தனிநபர் (எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்) தனது சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம் என்பது இந்திய அரசியலமைப்பு சாசனம் அங்கீகரித்துள்ள உரிமையாகும்.

முகமது கோரி காலத்திலிருந்தே இந்தியாவில் வக்ஃப் சொத்துகள் இருந்து வந்துள்ளன. (இதை அமித்ஷாவே ஒப்புக் கொள்கிறார்). இவற்றில் பலவற்றிற்கு உரிய ஆவணங்கள் கிடையாது. பயன்பாட்டின் அடிப்படையில் “வக்ஃப் பயனர்” (waqf by user) என்ற விதி மூலம் இவை வக்ஃப் சொத்துகளாக அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது “வக்ஃப் பயனர்” விதி நீக்கப்பட்டு இருப்பதானது, பல மசூதிகள் மற்றும் இடுகாடுகளின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இஸ்லாமியர்களின் இடுகாடுகள் கூட ‘பிரச்சினைக்குரியவை’ என்று கூறப்பட்டு பறிக்கப்படுவதற்கான வாய்ப்பு தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்த சிறுபான்மையினர் விவகாரத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு, புதிய திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் உள்ள வக்ஃப் பயனர் சொத்துக்கள் இதனால் பாதிக்கப்படாது என்று கூறியுள்ளார். ஆனால் அச்சொத்துகள் ஏற்கெனவே பிரச்சனைக்குரியவையாகவோ அரசு நிலமாகவோ இருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

இதன் பொருள் என்ன? வக்ஃப் நிலங்கள் பல அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை “வக்ஃப் பயனர்” விதி மூலம் இனி மீட்க முடியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அரசின் ஆக்கிரமிப்புக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


படிக்க: பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கும் யோகி அரசு!


மோடி – அமித்ஷா உள்ளிட்ட சங்கி கும்பல், அரசு நிலங்களை வக்ஃப் வாரியங்கள் ஆக்கிரமித்துள்ளதாக பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், உண்மையில் அரசின் சொத்துகளையா வக்ஃப் வாரியங்கள் ஆக்கிரமித்துள்ளன? 2005-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி (Sachar Committee), பல வக்ஃப் சொத்துகள் அரசாங்கத்தாலும் தனிநபர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல், ஒரு சொத்து அரசினுடையதா அல்லது வக்ஃப் சொத்தா என்று கேள்வி எழுந்தால், மாவட்ட ஆட்சியர் அல்லது அவரைவிட உயர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர் இது குறித்து விசாரித்து முடிவு எடுப்பார் என்று இந்த புதிய திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வக்ஃப் தீர்ப்பாயத்திடம் இருந்த அதிகாரம் தற்போது அரசு தரப்பைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்படுகிறது.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் சொத்துகளை மீட்பதற்காக வக்ஃப் தீர்ப்பாயத்திற்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் தற்போது திட்டமிட்டே குறைக்கப்பட்டுள்ளன. அரசு சொத்தா வக்ஃப் சொத்தா என்பதை அரசு தரப்பை சேர்ந்த மாவட்ட ஆட்சியர் ‘பாரபட்சமின்றி’ விசாரித்து முடிவுசெய்வாராம்.

பொதுவாக, நிலம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருந்தால் நில உரிமையாளர் 12 ஆண்டுகளுக்குள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வரம்பு சட்டம் (Limitation Act) கூறுகிறது. இருப்பினும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் சொத்துகள் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக அவை வரம்பு சட்டத்தின் வரம்புக்குள் கொண்டுவரப்படாமல் இருந்தது. ஆனால், தற்போது அந்த நிபந்தனை நீக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்தத் திருத்தத்தின் மூலம் 12 ஆண்டுகளுக்கும் மேலாக வக்ஃப் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் அச்சொத்தின் உரிமையாளர்களாக முடியும்.

மத்திய வக்ஃப் கவுன்சிலிலும், மாநில அளவிலான வக்ஃப் வாரியங்களிலும் இரண்டு இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாநில அளவில் இருக்கின்ற இந்து கோவில்களின் வாரியங்களில் இஸ்லாமியரையோ இந்து அல்லாத பிற மதத்தினரையோ அனுமதிப்பார்களா? அந்த வாரியங்களில் எல்லாம் பன்முகத்தன்மை தேவை இல்லையா? இந்து கோவில்களின் வாரியத்திலும் சீக்கிய குருத்வாரா வாரியத்திலும் அந்தந்த மதத்தினர் மட்டுமே இருக்கும்போது வக்ஃபு வாரியத்தில் மட்டும் ஏன் இஸ்லாமியர் அல்லாதோர் அனுமதிக்கப்பட வேண்டும்.


படிக்க: நாக்பூர்: நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளி இஸ்லாமியர் வீடுகளை இடிக்கும் பாசிச பி.ஜே.பி!


மேற்குறிப்பிட்ட திருத்தங்கள் எல்லாம் வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமித்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதே தவிர, அமித்ஷா கூறுவது போல் வக்ஃப் சொத்துகள் நிர்வகிக்கப்படுவதை முறைப்படுத்துவதற்காக அல்ல.

ஒரு இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினரைக் கூட கொண்டிருக்காத பாசிச பா.ஜ.க, இஸ்லாமியர்களின் நலன்களுக்காக ஒரு சட்டத் திருத்தத்தை மேற்கொள்கிறது என்றால் அதை பச்சைக் குழந்தை கூட நம்பாது.

குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் தடைச் சட்டம் ஆகியவற்றின் வரிசையிலேயே வக்ஃப் திருத்தச் சட்டத்தையும் வைத்துப் பார்க்க வேண்டும். இஸ்லாமியர்களின் நில உரிமைகளைப் பறித்து அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்துவதே இச்சட்டத் திருத்தத்தின் நோக்கம். அரசு அதிகாரிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரித்து அவற்றை காவி – கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காகப் பயன்படுத்துவதே இவர்களின் திட்டம்.

இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாக தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. அசாதுதீன் ஓவைசி மற்றும் காங்கிரஸ் எம்.பி முகமது ஜாவேத் ஆகியோர் தனித்தனியே வழக்குத் தொடுத்தும் உள்ளனர். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட 237 வழக்குகள் இன்றுவரை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, சட்டப் போராட்டம் என்பதை மட்டும் நம்பியிராமல், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை விட வீரியமிக்க போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அதுதான் பாசிச கும்பலைப் பின்வாங்க வைக்கும்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-30, செப்டம்பர், 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 20-21 | 1989 செப்டம்பர் 1-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காஷ்மீர்: எரிமலையாகும் பனிமலை
  • வாசகர் கடிதம்
  • அதிகார வெறிபிடித்த கல்வி வியாபாரிகள்! அவதிப்படும் ஆசிரியர்கள்!
  • சுந்தர்ஜியின் வாக்குமூலம் வேறொரு கோணத்திலிருந்து…!
  • சுயநிதிக் கல்லூரிகள்: ஓட்டுப்பொறுக்கிகள் – சமூக விரோதிகளின் தங்கச் சுரங்கம்
  • அமெரிக்க கிறுக்கு உதயமூர்த்தியின் திமிர்!
  • பத்திரிக்கை சுதந்திரம் ஒரு பிரமை – மீண்டும் நிரூபணம்!
  • நோய்க்குறிகள்: கிரிமினல் அரசியல்
  • இந்திய படை விலக்கம் அனைத்துக் கட்சி மாநாடு
    இலங்கைப் பிரச்சினைகள் தீருமா?
  • கொலம்பியா: போதை மருந்து மாஃபியாக்கள் நடத்தும் உள்நாட்டுப் போர்!
  • விவசாயிகளைப் பாழடிக்கும் பால் பெருக்குத் திட்டம்!
  • வடலூர் – நெய்வேலி செராமிக்ஸ் ஆலை: நிர்வாகத்தின் சதி! சங்கங்களின் துரோகம்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 ஆகஸ்டு, 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 19 | 1989 ஆகஸ்டு 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: மக்களுக்கு அதிகாரம் என்கிற மாய்மாலம்!
  • போலிக்கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு வெளிநாட்டில் வைத்தியம்! மே, வங்க மக்களுக்கு மருத்துவமனைகளும் நரகம்!
  • நுஸ்லி வாடியா கொலை சதிவழக்கு: தரகு முதலாளிகளிடையே தகராறு
    தொழில் – அரசியல் பின்னணி
  • ஈழத்தில் அதிர்ப்பு இயக்கம் வலுக்கிறது “அமைதிப்படை”யின் வெறியாட்டம்! திராவிடத் தலைவர்களின் துரோகம்!
  • கம்பூச்சியா புகட்டும் பாடம்: தேசியவாதிகளின் துரோகம் ஆதிக்க வெறியர்களின் சூழ்ச்சி
  • போலீசு யாருக்காக?
  • அராஜகத் திட்டங்கள் – விபாத விளைவுகள்: விவசாய வளர்ச்சி – உண்மை நிலை
  • நச்சு இரசாயன வாயு இரகசிய ஏற்றுமதி!
  • பீடி இலை பறித்துக் கொண்டு திரும்பும் பழங்குடி பெண்கள்: மாநில அரசியலைப் பந்தாடும் பீடி சுல்தான்கள்
  • ஒட்டுண்ணி ‘சமூகசேவகர்’களின் அரக்கத்தனம்!
  • அதிகாரிகள் காண்டிராக்டர்களின் கூட்டுக்கொள்ளை! தொழிற்சங்கங்களின் கையாலாகத்தனம்!
  • பத்திரிக்கையாளர் மீது வெறித்தாக்குதல்! காங்கிரசு – மாஃபியா போலீசு கூட்டு!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2025 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:


தோழமையுடன்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



அமெரிக்க அஞ்சல் சேவை தனியார்மயமாக்கத்தை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம்

மெரிக்க ஐக்கிய அஞ்சல் சேவை என்பது 250 ஆண்டு காலமாக அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்ற மிகப்பெரிய அதேசமயம் மக்களுக்கான மிகவும் முக்கியமானதொரு சேவைத் துறையாகும். இது 1970 முதல் தன்னதிகாரத்துடன் தனித்தியங்கும் (Autonomous) அரசுத்துறையாகச் செயல்பட்டு வருகிறது.

இவ்வளவு பாரம்பரியம் கொண்ட அரசின் சேவைத் துறையை தனியார் கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்திட டிரம்ப் அரசு முடிவு செய்திருக்கிறது. அஞ்சல் சேவைத்துறை தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வருவதாக அதற்குக் காரணம் கூறுகிறது. தற்போது அமெரிக்க அஞ்சல் துறையில் 6.4 லட்சம் தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். அவர்களில் உடனடியாக 31,000 கீழ் நிலைப் பணிகளை இரத்து செய்ய முடிவு செய்திருக்கிறது மக்கள் விரோத டிரம்ப் அரசு.

அமெரிக்காவின் புறநகர்ப் பகுதிகளில் 5.1 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரும் அஞ்சல் சேவைக்கு அமெரிக்க அரசின் அஞ்சல் சேவையை மட்டுமே சார்ந்திருக்கின்றனர். தனியார் கூரியர் சேவைகள், அமேசான், ஃபெட் எக்ஸ் (Fed X), யு.எஸ்.பி ஆகியவை இப்பொழுது புற புறநகர்ப் பகுதிகளுக்கு தங்களது சேவைகளுக்காக அரசின் அஞ்சல் துறையையே பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் நிறுவனங்கள் அஞ்சல் துறையில் அரசின் சேவைகளைக் குறைக்கக் கோரிவருகின்றன. சில புறநகர் பகுதிகளுக்கு பார்சல்கள் மற்றும் கடிதங்கள் அனுப்புவது போன்ற சில சேவைகளை உடனேயே தனியாரிடம் ஒப்படைத்து (Out Source) விடலாம் என்று ஆறு கார்ப்பரேட் முதலாளிகள் கோரிவருகிறார்கள் என்று வாஷிங்டன் போஸ்ட் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

தனியார்மயம் என்று ஆகிவிட்டால் நாடு தழுவிய அஞ்சல் சேவை என்பது முடக்கப்படும். புறநகர் பகுதி மக்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுவர். புறநகர்ப் பகுதியில் அமெரிக்காவில் ஒரு வீட்டிற்கும் அடுத்த வீட்டிற்குமிடையில் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும் என்பது மிகவும் சாதாரணமாகும். எல்லாம் தனியார் சேவை என்றானால் இது போன்ற இடங்களுக்குச் சேவை கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தி விடுவர் அல்லது சேவையே கிடைக்காமல் செய்துவிடுவர்.

அஞ்சல் சேவை மட்டுமல்ல மருத்துவ உதவி, மருத்துவ காப்பீடு, சமூகப் பாதுகாப்பு, மற்றும் பல சமூக நலத் திட்டங்கள் எல்லாமும் இப்போது தனியார் மயமாக்கப்படும் ஆபத்தில் இருக்கின்றன. அமெரிக்காவில் கோடிக்கணக்கான மக்கள் அரசின் சமூக நலத் திட்டங்களைச் சார்ந்து இருக்கின்றனர் என்பது உலகறிந்த உண்மையாகும். ஆனால் டிரம்ப் அரசு இவை அனைத்தையும் வெட்டிச் செலவு என்று பார்க்கிறது; அனைத்தையும் ஒழித்துக்கட்டிவிட எத்தனிக்கிறது.

மேலும் டிரம்ப் அரசாங்கம் இப்பொழுது ஐக்கிய அமெரிக்க அஞ்சல் துறையை வணிகத்துறையின் (Commerce) கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறது. இந்த தேவைக்காகவே ஹோவர்ட் லுத்னிக் என்பவரை வணிகத்துறை செயலாளராக புதிதாக நியமித்துள்ளார் டிரம்ப். அதற்கும் தனியார்மயமாக்கத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் எனப்படும் தலைமை அதிகாரியான லூயிஸ் டிஜாய் கடந்த பிப்ரவரி 17 அன்று ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க: மேற்குவங்கம்: பெண் தொழிலாளர்களின் முன்னுதாரணமிக்க போராட்டம்


இப்போது இருந்து வருகின்ற தொழிற்சங்கம் (NALC – National Association of Letter Carriers) அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உருவாக்கிய தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தைத் தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தொழிற்சங்கம் ஏற்றுக் கொண்ட பண வீக்கத்திற்கும் கீழான அதாவது 1.3 சதவீதம் ஊதிய உயர்வு என்பதைத் தொழிலாளர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். ஆனால் தொழிற்சங்கமோ அரசுடன் சேர்ந்து கொண்டு அதையே ஆதரித்து நிற்கிறது. தொழிலாளர்களை பெரும் எண்ணிக்கையில் வேலையிலிருந்து வெளியேற்றுவது பற்றியோ பணிப் பாதுகாப்பு பற்றியோ எதுவுமே பேசுவதில்லை.

எனவே “ஐக்கிய அமெரிக்க அஞ்சல் சேவையை (USPS – United States Postal Service) தனியார்மயப்படுத்தும் டிரம்பின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவோம்!”, “சட்டவிரோதமான NALC ஒப்பந்தத்தை ரத்து செய்!” என்கிற முழக்கங்களை முன்வைத்து இப்போது ஐக்கிய அமெரிக்க அஞ்சல் துறை தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகிய அனைவருக்குமாக “அஞ்சல் துறை ஊழியர்கள் கமிட்டி” என்கிற சங்கம் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இருக்கின்ற சங்கங்கள் அதிகார வர்க்க கண்ணோட்டம் கொண்டதாக மாறிப்போன நிலையில் ஊழியர்கள் மத்தியில் அவை அம்பலப்பட்டு வருகின்றன.

எலான் மஸ்க் தலைமையில் டிரம்ப் புதிதாக உருவாக்கி இருக்கும் அரசாங்க திறன் மேம்பாட்டுத் துறை (Department of Government Efficiency) தொடர்ந்து அரசின் செலவுகளைக் குறைப்பது, சிக்கனப்படுத்துவது, திறனை மேம்படுத்துவதைக் குறித்து மட்டுமே பேசுகிறது. அது தொழிலாளர்களை வஞ்சிக்கிறது.

புதிய அஞ்சல் துறை ஊழியர்கள் கமிட்டி கடந்த மாதத்தில் அஞ்சல் சேவை ஊழியர்களின் மாபெரும் பேரணியை அமெரிக்காவெங்கும் நாடு தழுவிய முறையில் நடத்தியது. அரிசோனா, நியூ மெக்சிகோ மற்றும் டெக்ஸாஸிலிருந்து இண்டியானா; மிசௌரி மற்றும் ஃபுளோரிடாவில் இருந்து நியூயார்க்; ஃபிலடெல்பியா மற்றும் வாஷிங்டன் என்று எல்லா நகரங்களிலும் அஞ்சல் துறை ஊழியர்களின் பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன.


படிக்க: சாம்சங் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்


ஐக்கிய அமெரிக்க அஞ்சல் சேவை ஊழியர்களின் இந்த போராட்டம் ஊழியர்களின் வேலையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமல்ல. அமெரிக்காவில் உருவாகி வரும் ஒரு சர்வாதிகார ஆட்சிக்கும் எதிரான போராட்டமாகும்.

டிரம்பின் அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குகிறது. நிதி ஆதிக்க கும்பல்கள் டிரம்பின் தலைமையில் மன்னர் ஆட்சியைப் போன்றதொரு போலீசு ராஜ்ஜியத்தைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளனர். மக்கள் உரிமைகள் முற்றாக மறுக்கப்படும் ஒரு அமெரிக்காவாக மாற்றிவிடத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறார்கள்.

பிரிட்டனில் இதே போன்ற அஞ்சல் துறை தனியார்மயம் 2013 இல் நடைபெற்றது. விளைவாக அஞ்சல் சேவையே முற்றிலும் முடங்கி விட்டது. 20,000 வேலைகள் காலி செய்யப்பட்டன. ஊழியர்களுக்கு ஊதியம் தேங்கியது. அஞ்சல் துறையில் தொடக்க நிலை ஊதியம் என்பது அரசின் குறைந்தபட்ச கூலியை விட சற்றே மேலாக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சல் சேவையை அத்தியாவசிய சேவையிலிருந்தே நீக்கிவிட்டது. அங்கு தொழிற்சங்கம் நடத்திய வாக்கெடுப்பில் 96 சதவிகித ஊழியர்கள் தனியார்மயத்தை எதிர்த்து வாக்களித்தனர். ஆனாலும் அரசாங்கம் இது வெறும் கருத்தறிதல் மட்டுமே என்று கூறிவிட்டது.

அங்கு தொழிற்சங்கமே முதலாளிகளுடன் ரகசிய கூட்டில் இருப்பதாகத் தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். தொழிற்சங்கம் ஊழியர்களை விற்று விட்டது. எதைப் பற்றியும் ஊழியர்களுக்கு எந்த எச்சரிக்கையும் செய்யவில்லை. சரியாகச் சொல்வதென்றால் தொழிற்சங்கம் காட்டிக் கொடுத்து விட்டது என்று குற்றம் சுமத்துகின்றனர் ஊழியர்கள். அன்று எதிர்த்துப் போராடாமல் விட்டு விட்டோம் தவறு செய்து விட்டோம், சங்கத்தை நம்பி ஏமாந்து விட்டோம் என்று குமுறிக் கொண்டிருக்கிறார்கள் பிரிட்டனின் அஞ்சல் சேவை ஊழியர்கள்.

அதேபோலவே அமெரிக்காவிலும் தொழிலாளர் ஒற்றுமை தான் தொழிலாளர் வாழ்வைக் காப்பாற்றும் என்பதை அமெரிக்கத் தொழிலாளர்கள் வெகுவாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதை சமீபத்திய ஆண்டுகளில் நடந்த பல்வேறு தொழிற்சங்க போராட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

அமெரிக்காவில் கிழக்குக் கடற்கரை துறைமுகத் தொழிலாளர்கள் கடந்த ஆண்டில் நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தின் போது ஜோ பைடனின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார்கள் என்றால் மிகையில்லை. தங்களின் வர்க்க ஒற்றுமை உணர்வினால் ஊதிய ஒப்பந்தப் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்த அன்று இரவு 12 மணிக்கு வேலை நிறுத்தத்தைத் தொடங்கினார்கள். மூன்றே நாட்களில் தாங்கள் கேட்ட ஊதிய உயர்வை ஒப்புக்கொள்ள வைத்தனர்.

அதேபோன்றுதான் போயிங் விமான தயாரிப்புத் தொழிலாளர்கள் தங்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை முன் வைத்து நடத்திய மாபெரும் போராட்டத்தில் 40 நாட்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து நிர்வாகத்தை நிர்ப்பந்தித்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வைத்தார்கள். எனினும் இன்னும் அவை பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டும் என்ற அளவிலேயே இருக்கிறது. ஆயினும் அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வு வளர்ந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது என்பது கவனத்திற்குரியதாகும். அந்த வரிசையில் தற்போது தொடங்கியுள்ளது அரசின் தனியார்மயக் கொள்கைக்கு எதிரான ஐக்கிய அமெரிக்க அஞ்சல் துறை ஊழியர்களின் போராட்டம்.


சுந்தரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 ஆகஸ்டு, 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 18 | 1989 ஆகஸ்டு 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: எதிர்க்கட்சிகளின் ராஜினாமா: அரசியல் திருப்புமுனை!
  • சீருடை தரித்த ரௌடிகளின் அட்டூழியம்
  • பீரங்கிக் கொள்ளை நிரூபணம்: ஆட்டங் காணுகிறது நாற்காலி! அலறுகிறது ராஜீவ் கும்பல்!
  • கவர்ச்சித் திட்டங்கள் காகிதப் பூக்கள்!
  • உருக்கு வார்ப்படத் தொழிலாளர்களின் எஃகுறுத்திமிக்க போராட்டம்
  • சுதந்திரத்’துக்கு முன்னும் – பின்னும்
  • பாட்டாளி மக்கள் கட்சி பகுஜன் சமாஜ கட்சி பகிரங்கமாக சாதிய அரசியல்!
  • இந்தியப் படைவிலக்கம் கந்துடைப்பு, மாஜி ரானுவத்தின் படை திரட்டுகிறது, இந்தியா :தீர்மானிக்கும் சக்தியாக ஜே.வி.பி
  • ‘அக்னி’க்குப் பாராட்டு! விஞ்ஞானிகளுக்கு அவமரியாதை!
  • இளஞ்சிறுமி கற்பழித்துக் கொலை! தொடரும் நிலப்பிரபுத்துவ வெறியாட்டங்கள்!
  • இந்திய அரசின் இலங்கை ஆக்கிரமிக்குப்புக்கெதிராக தமிழகம் தழுவிய இரு வார பிரச்சார இயக்கம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிட அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகள்! | மீள்பதிவு

இஸ்லாமிய மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் பாசிச கும்பலின் திட்டத்தின் ஒரு அங்கமே இந்த வக்ஃப் மசோதா. இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் இம்மசோதாவின் அபாயங்கள் குறித்து புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2024 இதழில், “காவி-கார்ப்பரேட் கும்பலுக்குப் படையலிட அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகள்!” என்ற கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இக்கட்டுரை செப்டம்பர் 14, 2024 அன்று வினவு தளத்தில்  பதிவிடப்பட்டிருந்தது.

தற்போது, (ஏப்ரல் 3 அதிகாலையில்) மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா  எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாசிசக் கும்பல் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவைக் கொண்டு வருவதன் நோக்கத்தைப் புரிந்து கொள்வதாக இக்கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்.

மேலும், இக்கட்டுரை வெளியிடப்பட்ட போது அறிமுகப்படுத்தப்பட்டிருந்த வக்ஃப் வாரிய மசோதாவிலிருந்த அபாயகரமான அம்சங்களை விட தற்போது கூடுதலான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி-க்கள் முன்வைத்திருந்த 14 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

***

காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிட அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகள்!

னது இந்துராஷ்டிர கொடுங்கனவிற்காக இஸ்லாமிய மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் நோக்கத்துடன் பல்வேறு பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பாசிச மோடி கும்பல், அதன் ஒரு அங்கமாக ‘‘வக்ஃப் வாரிய திருத்த மசோதா 2024-ஐ’‘ கொண்டுவந்துள்ளது.

ஆகஸ்ட் 8 அன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ‘‘ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாட்டு சட்டம்’‘ (UMEED – Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act) என்ற பெயரில் இம்மசோதாவை தாக்கல் செய்துள்ள பா.ஜ.க. கும்பல், வக்ஃப் வாரியங்கள், இஸ்லாமிய அமைப்புகள், கல்வியாளர்கள் என யாருடனும் கலந்தாலோசிக்காமல் தனக்கே உரிய பாசிச வழிமுறையில் இம்மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுவாக, சட்டத்திருத்தங்களை செய்யும்போது ஏற்கெனவே உள்ள சட்டத்தில் ஒன்று முதல் பத்து திருத்தங்கள் வரை மேற்கொள்ளப்படும் நிலையில், பாசிச மோடி அரசோ இம்மசோதாவில் 44 திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. இத்திருத்தங்கள் அனைத்துமே இஸ்லாமிய மக்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மத உரிமைகளை பறித்து வக்ஃப் சொத்துகளை அபகரிக்கும் வகையிலேயே முன்மொழியப்பட்டுள்ளன.

இதனையடுத்து இம்மசோதாவிற்கு நாடு முழுவதுமுள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பாசிச எதிர்ப்பு சக்திகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இம்மசோதா இஸ்லாமிய மக்களின் வக்ஃப் சொத்துகளை அபகரிக்கும் வகையில் உள்ளதையும் அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14, 15, 25, 26, 30-களுக்கு எதிராக உள்ளதையும் அம்பலப்படுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் லோக் ஜனசக்தியின் எம்.பி-க்களும் வக்ஃப் மசோதாவை அவசரமாக நிறைவேற்றக் கூடாது, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றனர். இதனையடுத்து, பா.ஜ.க. எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையிலான 31 பேர் அடங்கிய நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிந்துரைக்கு மசோதா அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சட்டத்திருத்தத்திற்கு பின்னாலிருக்கும் பாசிஸ்ட்டுகளின் சதித் திட்டம்

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மக்கள் இறையருளை நாடி நன்கொடையாக வழங்கப்படும் அசையும், அசையா சொத்துகளே வக்ஃப் சொத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சொத்துகளை நிர்வகிப்பதற்காக 1913-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வக்ஃப் வாரியம் உருவாக்கப்பட்டது. 1954-ஆம் ஆண்டு நேரு ஆட்சியில் வக்ஃப் வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் 1995-ஆம் ஆண்டில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு 2013-ஆம் ஆண்டில் அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, வக்ஃப் சொத்துகளை நிர்வகிப்பதற்கு நாடு முழுவதும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வக்ஃப் நிறுவனங்கள் உள்ளன. இவை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஒன்றிய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

2022-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, நாடு முழுவதும் உள்ள வக்ஃப் நிறுவனங்களிடம் 7.8 லட்சத்திற்கும் மேற்பட்ட அசையா சொத்துகளும் ஒன்பது லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களும் உள்ளன. இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் இரயில்வே துறைகளுக்கு அடுத்ததாக வக்ஃப் வாரியங்களிடமே அதிக சொத்துகள் இருக்கின்றன. இச்சொத்துகள் மூலம் கல்வி, மருத்துவம் போன்ற தேவைகளை இஸ்லாமிய மக்கள் பூர்த்தி செய்துகொள்வதோடு தங்களை தாங்களே சுயேட்சையாக நிர்வகிக்கும் அதிகாரம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

இதனை சகித்துக்கொள்ள முடியாமல்தான் வக்ஃப் சட்டத்தை திருத்துவதன் மூலம், வக்ஃப் வாரியத்தின் அதிகாரங்களை பறித்து, பாசிசக் கும்பல் கட்டுப்படுத்தும் வகையில் அதன் நிர்வாகமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இம்மசோதாவில் பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.


படிக்க: இஸ்லாமியரின் மத உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு சட்டம் (திருத்தம்)!


சான்றாக, வக்ஃப் சொத்துகளின் மீது அரசு அல்லது தனிநபர் உரிமை கோரினாலோ; அரசு அல்லது தனிநபர் சொத்துகளின் மீது வக்ஃப் உரிமை கோரினாலோ, அந்த கோரிக்கைகளின் மீது இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கே உள்ளது என திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. இதுநாள்வரை வக்ஃப் வாரியத்திடம் உள்ள இந்த உச்சபட்ச அதிகாரத்தை வக்ஃப் வாரிய நிர்வாகத்தில் எந்த தொடர்பும் இல்லாத மாவட்ட ஆட்சியருக்கு வழங்குவதன் மூலம் வக்ஃப் வாரியத்தின் அதிகாரங்களை முற்றிலுமாக பறித்து அதனை வெறுமனே அலங்கார அமைப்பாக்கத் துடிக்கிறது, பாசிசக் கும்பல். மேலும், வக்ஃப் வாரியம் உரிமை கோரும் சொத்துகளை கணக்கெடுக்கும் ஆணையருக்கு உள்ள அதிகாரத்தையும் பறித்து மாவட்ட ஆட்சியருக்கு வழங்குகிறது.

ஏற்கெனவே உள்ள சட்டப்பிரிவு 40-இன் படி, ஒரு சொத்து வக்ஃபுக்கு சொந்தமானதா? இல்லையா? என்பதை நிர்ணயிப்பதில் “மாநில வக்ஃப் வாரியம்” தவறான தீர்ப்பு கொடுத்தால் வக்ஃப் வாரிய தீர்ப்பாணையத்திலும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்திலும் எந்தவொரு நபரும் மேல்முறையீடு செய்வதற்கான வழிகள் உள்ளன. அப்படியிருக்கையில், மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்குவது என்பது மாவட்ட ஆட்சியர் என்ற பெயரில் சுற்றித்திரியும் ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் மூலம் வஃக்ப் சொத்துகளை அபகரிப்பதற்கான திட்டமிட்ட சதியாகும்.

அதேபோல், வக்ஃப் பத்திரம் இல்லாத சொத்துகளை வக்ஃப் சொத்துகளாக கருத இயலாது என்ற திருத்தம் மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது. 1900-களின் முற்பகுதியிலிருந்தே வக்ஃப் சொத்துகளை நிர்வகித்துவரும் வக்ஃப் வாரியத்திடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுக்கு முறையான சான்றிதழ்கள் இருப்பதற்கான அடிப்படையில்லை. இதனை மோப்பம் பிடித்தே அச்சொத்துகளை அபகரிப்பதற்காக இத்திருத்தத்தை முன்மொழிந்துள்ளது பாசிசக் கும்பல்.

மேலும், ஒன்றிய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களுக்குள் இஸ்லாமியர் அல்லாத இருவரை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்ற திருத்தத்தையும் மசோதாவில் மோடி அரசு மேற்கொண்டுள்ளது. இதன்மூலம், இஸ்லாமியர் அல்லாதோர் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கருங்காலிகளை வக்ஃப் வாரியத்திற்குள் நியமிப்பதன் மூலம் ஒன்றிய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து வக்ஃப் வாரிய சொத்துகளை ஒட்டுமொத்தமாக கொள்ளையடிக்கப் பார்க்கிறது, காவிக் கும்பல்.

ஒருபுறம், வக்ஃப் வாரியங்களிடம் ஏற்கெனவே உள்ள சொத்துகளை அபகரிக்க திட்டம் தீட்டும் பாசிசக் கும்பல் இன்னொருபுறம் வருங்காலங்களில் வக்ஃப் வாரியத்திற்கு சொத்து சேரவிடாமலும் ஒடுக்குகிறது. சான்றாக, எந்தவொரு நிலத்தையும் வக்ஃபுக்கு சொந்தமானது என்று அறிவிக்கும் முன், வருவாய், கிராம நிர்வாகம் போன்ற அரசுத்துறைகளுக்கு ஆட்சேபணைகள் இருந்தால் அவற்றுக்கு தீர்வு காணப்பட்ட பிறகே அந்த நிலங்களை வஃக்புக்கு வழங்கவேண்டும் என்ற திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம், பாசிசமயமாகியுள்ள அரசுக்கட்டமைப்பை பயன்படுத்தி வருங்காலங்களில் வக்ஃபுகளுக்கு வழங்கப்படும் நிலங்களையும் அபகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே பாசிச நோக்கத்திலிருந்துதான் ஐந்து ஆண்டுகளுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே வக்ஃபுக்கு சொத்துகளை வழங்க முடியும் என்றும் திருத்தத்தை முன்மொழிந்துள்ளது.

இத்தகைய இஸ்லாமிய விரோத மசோதாவை தாக்கல் செய்துவிட்டு, மறுபுறம் ஒன்றிய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமிய பெண்கள் இருவர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர் என்ற திருத்தத்தையும் மேற்கொண்டு, இஸ்லாமிய பெண்களின் உரிமைக்காக போராடுவதாக நாடகமாடுகிறது காவிக் கும்பல். ஆனால், வக்ஃப் வாரியத்தின் உறுப்பினர்களாகவும் உயர் பொறுப்புகளிலும் இஸ்லாமிய பெண்கள் ஏற்கெனவே இருப்பதை சுட்டிக்காட்டி, காவிக் கும்பலின் வெறுப்பு பிரச்சாரத்தை பலரும் முறியடித்துள்ளனர்.

மேலும், இந்தியாவில் சிறுபான்மை மக்களாக உள்ள இஸ்லாமிய மக்களிடமுள்ள வக்ஃப் சொத்துகளை அவர்களிடமிருந்து பறிப்பதன் மூலம் இஸ்லாமிய மக்களை அதிகாரமற்றவர்களாக மாற்றி இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிப்பதுடன் அச்சொத்துக்களை கார்ப்பரேட் கும்பலுக்கு படையலாக்கவும் பாசிசக் கும்பல் திட்டமிட்டுள்ளது.

வக்ஃப் சொத்துகளை சூறையாடத் துடிக்கும் காவிகார்ப்பரேட் கும்பல்

நடைமுறையிலுள்ள வக்ஃப் வாரிய சட்டத்தின்படி, வக்ஃப் சொத்துகளை யாரும் வாங்கவோ விற்கவோ முடியாது. மாறாக, வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோதான் கொடுக்க முடியும். ஆனால் மோடி-அமித்ஷா கும்பலானது, ‘‘வக்ஃப் திருத்த மசோதாவில் 12 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் வக்ஃப் சொத்துகளை வைத்திருந்தால் அவர் அந்த சொத்துக்கு உரிமையாளராக முடியும்’‘ என்ற திருத்தத்தை கொண்டுவந்துள்ளதன் மூலம் தனது நோக்கத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பல், கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் என பல கிரிமினல் கும்பல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது. சான்றாக, அம்பானியின் அண்டிலியா வீட்டின் நிலமும் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்று குற்றச்சாட்டு உள்ளது.

ஆகவே, அரசு சொத்துகள் என்ற பெயரில் மாவட்ட ஆட்சியர் துணையுடன் அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகளும் கடந்த காலங்களில் பொதுத்துறை சொத்துகள் கார்ப்பரேட் கும்பலுக்கு தாரைவார்க்கப்பட்டது போலவே அம்பானி-அதானி கும்பல்களுக்கே விற்கப்படும்.


படிக்க: பயங்கரவாதி பைரன்சிங்கின் ஒப்புதல் வாக்குமூலம்!


இன்னொருபுறம், பல ஆண்டுகளாகவே வக்ஃப் வாரியத்தின் மீது பொய்-வெறுப்பு பிரச்சாரங்களை பரப்பிவரும் ஆர்.எஸ்.எஸ்-விஷ்வ ஹிந்து பரிஷத் கும்பலின் பாசிச நோக்கமும் இச்சட்டத்திருத்தத்தில் உள்ளடங்கியுள்ளது. வக்ஃப் வாரியத்தால் வெறுமனே நிலங்கள் மட்டுமின்றி மசூதிகள், தர்காக்கள், மதரசாக்கள் என பல்வேறு அமைப்புகளும் நிர்வகிக்கப்படுகின்றன. ஒருவேளை வக்ஃப் வாரிய திருத்த மசோதா சட்டமானால் பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டும், மாவட்ட ஆட்சியரின் துணையுடனும் இஸ்லாமிய மக்களின் வீடுகளும் வழிபாட்டுத்தலங்களும் இடிக்கப்படுவது நடந்தேறும்.

ஏற்கெனவே, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அசாம் போன்ற பா.ஜ.க. கும்பல் ஆளும் மாநிலங்களிலும் பசுவளைய மாநிலங்களிலும் இஸ்லாமிய மக்களின் வீடுகளும் வழிபாட்டுத்தலங்களும் சட்டவிரோதமாக அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி புல்டோசரால் இடிக்கப்படும் பயங்கரவாதம் தினந்தோறும் அரங்கேறிவரும் நிலையில் இச்சட்டத்தால் அது புதிய உச்சநிலைக்கு செல்லும். எனவே, பாபர் மசூதியை இடித்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களை இனப்படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலானது இச்சட்டத்திருத்தத்தின் மூலம் நாடு முழுவதும் இனக்கலவரங்களை கட்டவிழ்த்துவிடும் சதித்திட்டத்தையும் கொண்டுள்ளது. இந்த இந்துமுனைவாக்க நோக்கத்திலிருந்தே மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சட்டத்திருத்தமானது, மாவட்ட ஆட்சியர் என்ற பெயரில் சுற்றித்திரியும் ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் மூலம் வஃக்ப் சொத்துகளை அபகரிப்பதற்கான திட்டமிட்ட சதியாகும்.

இத்தகைய பாசிச நோக்கத்துடன் கொண்டுவரப்படும் மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுப்பது இந்தியாவில் உள்ள பாசிச எதிர்ப்பு சக்திகளின் கடமையாகும். ஆனால், கடும் எதிர்ப்பின் காரணமாக பா.ஜ.க. இம்மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு அனுப்பியதனாலேயே பாசிசக் கும்பல் பயந்துவிட்டது, பணிந்துவிட்டது, சட்டத்தை நிறைவேற்ற முடியாது என்றெல்லாம் இந்தியா கூட்டணி ஆதரவாளர்களும் பாசிச எதிர்ப்பாளர்கள் சிலரும் கருதுகின்றனர்.

ஆனால், கூட்டு குழுவால் மசோதாவின் மீது பரிந்துரைகள் வழங்க முடியுமே ஒழிய திருத்த முடியாது. எனவே, வருகின்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இம்மசோதா நிறைவேற்றப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. எனவே, எதிர்க்கட்சிகளுக்கு துளியும் ஜனநாயகம் வழங்காத நாடாளுமன்ற மரபுகளை மதிக்காத பாசிசக் கும்பலுக்கு எதிராக இஸ்லாமிய மக்களுடன் இணைந்து களத்தில் போரட்டத்தை கட்டியமைப்பதன் மூலமே நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுக்க முடியும்.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஏப்ரல் 2025 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:


தோழமையுடன்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 ஜூலை, 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 17 | 1989 ஜூலை 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஆதிவாசி – மலைவாழ் மக்களின் போராட்டங்கள் பரவுகின்றன
  • ’இலங்கையிலிருந்து இந்திய ராணுவத்தை திரும்பப்பெறு!’ – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
  • ’பாவமன்னிப்பு’ அளிக்கும் பாசிச சன்னியாசி
  • விவசாயிகளின் விடுதலை போராட்டம் துவங்கிய மேற்கு சாம்பரானில் இன்னமும் கொத்தடிமைகள்
  • வாழும் உரிமை மறுக்கப்படும்போது…
  • ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் தேசியவெறிப் பத்திரிக்கைகள்
  • ஈழ விடுதலை திராவிடக் கட்சிகளின் பேடித்தனம்
  • மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அபாயம்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 ஜூலை, 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 16 | 1989 ஜூலை 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இந்திய இராணுவம் வெளியேற வேண்டும், இல்லையானால் இந்துமா கடலில் வீசி எறியப்படும்!
  • விவசாயிகளைப் பரிதவிக்கவிட்ட அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
  • பொதுத்தேர்தல் தயாரிப்புகள் – உத்திகள்: ஓட்டுக்கட்சிகளின் ஓட்டாண்டித்தனம்
  • 20 கோடி ரூபாய் மின்பாக்கி மோசடி!
  • ’அரிஜன்’ என்ற அவமானச் சின்னத்தை மதமாற்றம் அழித்துவிடுமா?
  • சுரங்கத் தொழிலாளர் வெளியேற்றம்! இயந்திரமயம் அரங்கேற்றம்!
  • டெல்லி மருத்துவர்கள் போராட்டம்! ஓட்டுக் கட்சி சார்பு தலைமையின் ஊசலாட்டம்!
  • சீன கொந்தளிப்பு; மனித உரிமைகள்: ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்
  • நாகரிக சமூகத்துக்கு சவால்: பெருகிவரும் ரௌடி கும்பல்கள்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 ஜூன், 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 15 | 1989 ஜூன் 16-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பத்திரிக்கைக் காகித விலையேற்றம் பேருந்துக் கட்டண உயர்வு
  • விவசாயிகள் விடுதலை முன்னணியின் புதிய கிளைகள் துவக்கவிழா!
  • ஈழம்: ஆக்கிரமிப்பாளருக்கு மூக்கறுப்பு!
  • வேலைவாய்ப்பும் வறுமை ஒழிப்பும் தேர்தல்காலத் தில்லுமுல்லுகள்
  • சீனாவில் கொந்தளிப்பு ஏன்? கம்யூனிசம் தோற்றுப்போனதா?
  • இராணுவம், போலீசு, ‘நீதி’மன்றம் யாருக்காக?
  • ’இடது’ – வலது லடாய்! போலிகளின் குடுமிபிடி சண்டை!
  • அக்னி: ஆதிக்க வெறிக்கு இன்னுமொரு ஆயுதம்!
  • அமெரிக்காவின் அடாவடித்தனமான புதிய நிர்பந்தங்கள்
  • போராடிய தொழிலாளருக்கு பட்டை நாமம்!
  • சியாசென் எல்லைத் தகராறு: முடிவுக்கு வராத ஒரு யுத்தத்தின் வரலாறு
  • நசிந்துவரும் நெசவுத் தொழில் அமெரிக்காவின் நரித்தனம்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 மே, 01-15 ஜூன் 1989 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 13-14 | 1989 மே 16-31, ஜூன் 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சீன மாணவர் கோருவது பூரண முதலாளித்துவம்தான்!
  • மே நாள் அணிவகுப்பு – பொதுக்கூட்டங்கள்
  • ராஜீவின் புதிய ஆட்சிக்கொள்கை: மத்தியிலே பாசிசம்! உள்ளூரிலே பஞ்சாயத்துகள்!
  • ஆயுட்கைதி சுட்டுக் கொலை! போலீசின் வெறியாட்டம்!
  • மறைக்கப்படும் விவசாய ‘விபத்து’கள்
  • சர்வமும் சந்தர்ப்பவாதம்! அரசியல் விபச்சாரிகள் இணைந்தனர்
  • சிந்தனையைத் தூண்டும் பாசிச கும்பலின் சாதனை!?
  • ’ரெக்ரூட்’ ஊழல்: தகர்ந்தது ஜப்பானியப் பிரமை!
  • இந்திய-சீன எல்லைத் தகராறு: மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்
    போரை நிறுத்தியது சீனா! பகையை வளர்த்தது இந்தியா!
  • வெளிநாடு சென்றும் தீரவில்லை அவலம்
  • விருந்து விபச்சாரம் லஞ்சம்: அரசியல்வாதிகளின் அந்தரங்க வாழ்க்கை
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram