Thursday, August 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 570

அரசுப் பள்ளியில் கணினிக் கல்வி புறக்கணிக்கப்படுவது ஏன் ?

1

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வெ.குமரேசன் அனுப்பிய மடல் இங்கே வெளியிடப்படுகிறது

மிழக அரசு கணினியை ஒரு பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்க வைப்பதன் ஒரு முயற்சியாக 2011-ம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் 6, 8 மற்றும் 10 ஆகிய வகுப்புகளுக்கு கணிப்பொறி பாடத்திற்கென புத்தகங்களை அச்சிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவர்களுக்கு விநியோகம் செய்தது.

தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கணினிக் கல்வியை ஊக்குவிப்பதன் பொருட்டு அரசால் கொண்டு வந்த இந்த கணினி கல்வி மாணவர்கள் மற்றும் மக்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றது. இதற்காக எல்லா அரசுப் பள்ளிகளுக்கும் தேவையான கணிப்பொறி உபகரணங்கள் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கி கணிப்பொறிகள் வழங்கவும் பட்டன.

ஆட்சி மாற்றத்திற்குப் பின் 2011-ம் கல்வியாண்டில் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருந்ததே தவிர, மாணவர்களுக்கு எவ்வித பயனும் அளிக்கவில்லை. அரசு மற்றும் தனியாரின் எல்லா துறைகளும் நவீனமயமாக்கப்பட்ட (கணினி மய மாக்கப்பட்ட) இக்காலத்தில் கணினியின் அடிப் படை அறிவு மாணவர்களுக்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது.

மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.சி. போன்ற அனைத்து வகை பள்ளி களிலும் கணிப்பொறி பாடமானது கடந்த 15 ஆண்டுகளாக கற்பிக்கப்பட்டு வருகின்றது. மேலும் எல்லா மேல்நிலைப்பள்ளிகளிலும் கணிப்பொறி அறிவியல் ஒரு பாடமாக கடந்த 15 ஆண்டுகளாகக் கற்பிக்கப்பட்டு வருகின்றது.

ஆனால், சமச்சீர் கல்வி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்புவரை கற் பிக்கப்படும் கணினி கல்வி அரசுப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அனை வராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் புத்தகங்களை மட்டும் இரண்டு கல்வியாண்டுகள் விநியோகித்து, கணினி கல்வியை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்காதது ஏன்?

மக்களின் அடிப்படைத் தேவைகளான எல்லா செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்ற நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே விநியோகம் செய்து வந்த புத்தகங்களைக் கூட கடந்த சில ஆண்டுகளாக நிறுத்திவிட்டது. இதுகுறித்து பெற்றோர்கள் மத்தியிலும், கல்வி யாளர்கள் மத்தியிலும்கூட போதுமான ஈர்ப்பைப் பெறவில்லை என்பது ஆச்சரியமானதே!

இவ்வளவுக்கும் கணினி அறிவியல் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் 21,000 பேர்களுக்குமேல் இருக்கிறார்கள். இவர்களைப் பயன்படுத்திக்கொண்டு, இந்த நவீன யுகத்தில் மிகவும் இன்றியமையாததான கணினிப் பயிற்சி யைக் கற்றுக் கொடுக்கவேண்டியது அரசின் கடமையாகும்.

இதில் ஏன் தமிழ்நாடு அரசு கருத்துச் செலுத்தவில்லை?

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண் ணிக்கை குறைந்து வருகிறது; அதன் காரணமாக அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலைக்கு மிக முக்கியமான காரணமே கணினிப் பயிற்சி போன்ற மிகவும் தேவையான பயிற்சியை அரசுப் பள்ளிகள் புறக்கணிப்பதுதானே?

தனியார்ப் பள்ளிகளில் மாணவர்கள் குவிகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் கணினிப் பயிற்சி போன்ற கல்விக்கு அப்பள்ளிகளில் முக்கியத்துவம் கொடுப்பதுதானே! கல்வி மானியக் கோரிக்கையின்போது, மூன்று சட்ட மன்ற உறுப்பினர்கள் இதுபற்றிப் பேசியும் பயன் இல்லை.

அரசுப் பள்ளிகளில்தான் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்கிறது.

அப்படி இருக்கும்பொழுது கிராமப்புற ஒடுக்கப்பட்ட, ஏழை – எளிய குடும்பங்களைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்குக் கணினிக் கல்வி அவசியம் அல்லவா? அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய கணினிப் பயிற்சி அவசியம் அல்லவா!

ஏன் கிராமப்புற ஏழை எளிய அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கணினி கல்வி கிடைக்க கூடாதா ?

அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்து ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாய பாடமாக கொண்டுவர வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய, மாணவர்களின் நலனுக்காகவும் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டும் ஆரம்ப கல்வி முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயக் பாடமாக கொண்டு வர வேண்டும். மெட்ரிக், CBSE பாடத்திட்டத்தில் ஆரம்ப கல்வியிலேயே கணினி அறிவியல் பாடம் உள்ளது.சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை நடப்பு கல்வி ஆண்டிலே நடைமுறைப்படுத்த வேண்டும்.

கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லாத தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகள்.

மேல்நிலைப்பள்ளிகள் (ம) தற்போது தரம் உயர்த்தப்படும் 800-க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் பல பள்ளியில் கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவு இல்லை . கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவை கொண்டு வரவேண்டும். பல பள்ளிகளில் கணினி ஆசிரியர்களே இல்லை. உலகமே கணினி மயமாக மாறிக்கொண்டு வரும் காலகட்டத்தில் கணினியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு பள்ளியில் மாணவர்கள் அதிகம் கணினி அறிவியல் பாடத்தைத் தேர்வு செய்கின்றனர்.மாணவர்களின் விகிதம் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.

மத்திய அரசின் திட்டத்தின் கீழ்

புதிய கல்விக் கொள்கை மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆரம்ப பள்ளி முதலே கட்டாயப்பாடமாக அறிவிக்கவேண்டும். இந்தியாவின் வாழும் கோடிக்கணக்காண கிராமப்புற ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.

பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமனம் செய்யவேண்டும் தமிழக அரசு.

கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க, நடுநிலை,உயர்நிலை பள்ளிக்கு குறைந்தது ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும்.

21,000-க்கும் மேற்பட்ட பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களின் குடும்பங்கள் இன்று வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றன.

1992-ம் ஆண்டிலிருந்து இன்று வரை 21000 பேருக்கும் மேற்பட்ட பி.எட் கணினி ஆசிரியர்கள் உள்ளனர். அனைவரும் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள்.

1) TET, TRB போன்ற ஆசிரியர் தகுதித் தேர்வு இல்லை.

2) AEEO, DEO தேர்வுக்கு அடிப்படை கல்வி பி.எட் ஆனால் கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்ற இந்த ஆசிரியர்களுக்கு அதிலும் வாய்ப்பு இல்லை.

3) உடற்கல்வி, ஓவியம், தையல், கணினி ஆகிய “தொழிற்கல்வி” பாடங்களுக்கான “சிறப்பாசிரியர்” நியமனத்தில்கூட கணினி அறிவியல் பி.எட் படித்த பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டனர்­­.

– திரு வெ.குமரேசன்,
மாநிலச் செயலாளர்
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.
பதிவுஎண் 655/2014.

நீச்சல் வீராங்கனை சாய்ராவைக் கொன்ற தனியார் பள்ளி !

4
saira-swimmer-suicide-2
சாய்ரா சிரோகி

காசியாபாத் (உ.பி மாநிலம்) மாவட்டத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு பள்ளி மாணவி சாய்ரா சிரோகி (வயது-16) பள்ளி நிர்வாகத்தின் நெருக்கடி தாளாமல் 24-01-2016 அன்று தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

மாணவி சாய்ரா சிரோகி இந்தியாவின் நட்சத்திர நீச்சல் வீராங்கனை ஆவார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கிக் குவித்திருக்கிறார். இந்தியா சார்பாக அகில உலக நீச்சல் விளையாட்டுப்போட்டிக்கும் தேர்வாகியிருக்கிறார். 50 மீட்டர் BreastStroke நீச்சல் போட்டியை 35.83 வினாடிகளில் கடந்து தேசிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். மேலும் இந்த வயதிலேயே தொடர்ச்சியாக பதினாறு மணி நேரம் 40 கிலோமீட்டர் நீந்தி அபார சாதனையும் புரிந்திருக்கிறார்.

ஆனால் நீரில் சாதனை புரிந்த இந்த வீராங்கனையை இவர் படித்த தனியார் பள்ளி ஈவிரக்கமின்றி மூழ்கடித்திருக்கிறது.

ஆங்கில நாளேடுகளில் மிகப்பரவலாக கவனம் பெற்ற மாணவி சாய்ராவின் தற்கொலை செய்தி இருவிதமான காரணங்களை முன்வைத்திருக்கிறது.

இந்து ஆங்கில நாளேட்டில் வந்த செய்தி மாணவி சாய்ரா போக்குவரத்துக்கட்டணம் ரூ. 45,000 கட்டாததால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது.

மாணவியின் தந்தை அளித்த தகவலின் படி, போக்குவரத்துக்கட்டணம் செலுத்தாததால் பள்ளி நிர்வாகம் மாணவி சாய்ராவை வகுப்பிலிருந்து வெளியேற்றியிருக்கிறது. பணம் புரட்ட முடியாததால் சாய்ராவின் தந்தை, சாய்ராவை பணம் கிடைக்கும் வரை வீட்டிலேயே இருக்கச் சொல்லியிருக்கிறார். பலநாட்கள் வீட்டிலிருந்த சாய்ராவை பள்ளி நிர்வாகம் சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் சேர்த்துக்கொண்டதாக கூறும் மாணவியின் தந்தை இதுதான் தன் மகளின் சாவுக்கு காரணமாக இருக்குமோ எனக் கருதுகிறார்.

saira-swimmer-suicide-3சாய்ரா பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதை மறுக்காத பள்ளி நிர்வாகம், இது ஏற்கனவே நடிந்த முடிந்த கதை என்கிறது. சாய்ரா படிக்கும் தனியார் பள்ளியான Delhi Public School Gaziabad, மாணவிக்கு முழுக் கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கம் அளித்ததாகவும், ஆனால் இரண்டு வருடங்களாக போக்குவரத்துக் கட்டணம் ரூ, 45,000 மட்டும் கட்டவில்லையென்றும் இதனால் இவர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஜனவரி 11 அன்றே மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார் என்றும் சொல்கிறது. மாணவி வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டதை மாணவியின் நீச்சல் பயிற்சியாளரும் உறுதி செய்திருக்கிறார்.

இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியான செய்தி, பள்ளி நிர்வாகத்தின் மற்றொரு நெருக்கடியைப் படம்பிடித்துக் காட்டுகிறது. மாணவி சிரோகி தொடர்ச்சியாக நீச்சல் போட்டிகளில் பங்கேற்பதால், பள்ளி வைக்கும் மாதத் தேர்வு, யுனிட் தேர்வு போன்ற தேர்வுகளில் பங்கேற்க முடிவதில்லை. அதே சமயம் பள்ளி நிர்வாகம் அனைத்து தேர்வுகளையும் எழுதச் சொல்லியிருக்கிறது. ஏற்கனவே தன் பயிற்சியாளரிடம் மாணவி சாய்ரா, எதிர்வரும் தேர்வுகளை முன்னிட்டு தன்னால் நீச்சல் பயிற்சியில் கலந்துகொள்ள முடியாதென்றும் தேர்வில் தேர்ச்சி பெறவில்லையென்றால் பள்ளியிலிருந்து தன்னை நீக்கிவிடுவார்கள் என்றும் கூறியிருக்கிறார். தற்பொழுது மாணவி இறந்த பிறகு, மாணவிக்கு தேர்வு எழுத தாங்கள் எந்தவிதமான அழுத்தத்தையும் தரவில்லையென பள்ளி நிர்வாகம் தெரிவித்திருப்பதையும் செய்திகள் வெளிக்காட்டுகின்றன.

இரண்டு செய்திகளும் ஒரே உண்மையைத்தான் சொல்கின்றன. மாணவி சாய்ரா, தனியார் பள்ளி நிர்வாகத்தால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார் என்பதே அது. இந்தவகையில் மாணவி சாய்ரா தனியார்மயத்தின் கோரமுகத்திற்கு பலியாகிருக்கிறார்.

மாணவி சாய்ராவின் தனியார்பள்ளி மட்டுமல்ல, இந்தியாவெங்கிலும் தனியார் பள்ளிகள் இப்படித்தான் செயல்படுகின்றன.

திறமையுள்ளவருக்கு முழுக்கல்விக்கட்டணம் விலக்கு என்று சொல்லிக்கொண்டே, போக்குவரத்துக் கட்டணம், ஆண்டு விழாக் saira-swimmer-suicide-1கட்டணம், தோட்டம் பராமரிப்புக் கட்டணம், தியானக் கட்டணம் என்று வாரிச் சுருட்டுவதில் தனியார் பள்ளிகள் என்றைக்கும் சுணங்கியதேயில்லை.

கடைசியில் 900 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு சட்டை வாங்கினால் இரண்டு சட்டை இலவசம் என்ற வியாபார உத்திதான் மாணவி சாய்ராவின் விசயத்திலும் போக்குவரத்துக் கட்டணம் ரூ, 45,000 கட்டவில்லை ஆனால் கல்விக் கட்டணம் இலவசம் என தனியார்மயத்தின் வக்கிரமாக வந்து நிற்கிறது.

தமிழ்நாட்டிலும் சிங்காரவேலர் கமிட்டி பரிந்துரைத்த கட்டண விகிதத்தை எந்த தனியார் பள்ளியும் மயிரளவிற்கும் மதித்ததில்லை. அது அமல்படுத்தப்படுகிறதா என்று எந்த அரசு அதிகாரியும் பார்த்ததுமில்லை. சென்ற வருடம் கடலூரில் கூட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும், கல்வி உரிமைக்கான பெற்றோர் மாணவர் சங்கமும்  நீண்ட போராட்டங்களை நடத்தி கமிட்டி பரிந்துரைத்த கட்டணத்தை கட்ட வைத்தனர்.

அப்படியிருந்தும் கூட பள்ளிகள் நூதன முறையில் கொள்ளையிடுவது, அரசாங்க கட்டணம் செலுத்துகிற குழந்தைகளை ஒதுக்கி வைத்து தீண்டத்தகாதவர்களாக நடத்துவது, விளையாட்டு, ஓவியம், கலை போன்ற பயிற்சிகளில் இருந்து ஒதுக்கிவைப்பது என அட்டூழியங்கள் தொடரத்தான் செய்கின்றன.

09-education-no-commodityஇதற்கு மூலகாரணம் எது? அரசின் தனியார்மயக் கொள்கைதான். கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை அதை வழங்கவேண்டியது அரசின் கடமை என்பதில் இருந்து நழுவி, காசு உள்ளவனுக்குத்தான் கல்வி என்பதை நடைமுறைப்படுத்தும் கொள்ளைக் கும்பலின் தலைவனாக இருக்கிறது அரசு.

அனைவருக்கும் கல்வி என்று சொல்கிற அரசின் சட்டம் கூட நடைமுறையில் தனியார்மய பங்களிப்பைத்தான் முன்வைத்தது. இச்சட்டம் அமல்படுத்தப்பட்ட பிற்பாடு தான் கடந்த நான்கு வருடங்களில் நாடெங்கிலும் இரண்டு இலட்சம் பொதுப்பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன.

நலிந்த பிரிவினருக்கு 25% இடங்களை தனியார் பள்ளிகள் ஒதுக்க வேண்டும்; அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு அளிக்கும் என தனியார்மயக் கொள்ளைக்கு சட்டப்பூர்வ வடிவம் கொடுத்தது இந்த அரசுதான். விளைவு? அன்றைக்கு பெங்களூரில் அரசு உதவி பெறும் குழந்தைகள் பிற குழந்தைகளிடம் இருந்து அடையாளம் காணப்படுவதற்காக குழந்தைகளின் முடியை வெட்டி உட்காரவைத்தது தனியார் பள்ளி. இன்றைக்கு காசியாபாத் பள்ளி, போக்குவரத்துக் கட்டணம் என்று சொல்லி மாணவி சாய்ராவை வகுப்பில் இருந்து வெளியேற்றியதோடு அல்லாமல் அம்மாணவியின் இறுதி மூச்சையும் நிறுத்தியிருக்கிறது.

மாணவி சாய்ராவைக் கொன்ற தனியார் பள்ளியின் வக்கிரம் இத்தோடு நிற்கவில்லை. மாணவி சாய்ரா நீச்சல் போட்டிகளில் பங்கேற்றதால் வகுப்புத் தேர்வு, யுனிட் தேர்வுகளில் பங்கேற்கமுடியவில்லை என்ற அம்சத்தையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.

நமது நாட்டின் கல்வி அமைப்பு மாணவி சாய்ராவை மட்டுமல்ல விளையாட்டு, கலை, ஓவியம், பேச்சு என்று ஒவ்வொரு துறைகளிலும் என்னதான் மாணவர்கள் பரிணமித்தாலும் அவர்களை மனனக் கல்வியின் அடிப்படையில் தான் மதிப்பிடுகின்றது. மாணவி சாய்ரா என்னதான் நீச்சல் வீராங்கனையாக இருந்தாலும் படிப்பைப் பொறுத்தவரை அவள் மக்குதான் என்று சொல்லாமல் சொல்கிறது பள்ளி நிர்வாகம்.

யுனிட் தேர்வு, பருவத் தேர்வுகளைப் பொறுத்தவரை தாங்கள் மாணவிக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று பள்ளி நிர்வாகம் சொல்கிற பொழுது மாணவியோ தேர்வுகளில் தேர்ச்சி பெறாவிட்டால் தான் பள்ளியிலிருந்து நீக்கப்படுவேன்; ஆகையால் தன்னால் நீச்சல் பயிற்சிக்கு வரமுடியாது என்று தன் பயிற்சியாளரிடம் கூறியிருப்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

மாணவியோ நீச்சல் வீராங்கனை; தனியார் பள்ளியோ பிராய்லர் கோழிகளை உருவாக்கும் இன்குபேட்டர்கள். எல்லாவிதத்திலும் மாணவி சாய்ராவுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாணவர்களைப் பொறுத்தவரை, காசு பார்க்கும் தனியார் பள்ளிகள் ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் இடமாக அமையவில்லை. மாறாக மனனக் கல்வியை முன்வைக்கும் வேண்டாத தொங்கு சதைகளாக இருக்கின்றன என்பது தான் நிதர்சனம்! இதற்கு மக்களிடையே புகுத்தப்பட்டிருக்கும் தனிநபர் பிழைப்புவாதமும் நுகர்வுக் கலாச்சாரமும் ஒரு காரணம்.

தமிழ்நாட்டிலும் எத்தனையோ சாய்ராவைப் போன்ற கண்மணிகள் தனியார்மயத்தின் கொள்ளைக்கும் கல்வி அமைப்பிற்கும் privitization-education-conferenceபலியாக்கப்பட்டிருக்கின்றனர். ஒன்றுக்கும் உதவாத சக்கைகளையும் தக்கைகளையும் உருவாக்குகிற இத்தகையக் கொலைக்கூடங்கள் நீச்சல் வீராங்கனை மாணவி சாய்ராவை போன்ற திறமையாளர்களை மதிப்பிடும் நிலையில் இருக்கின்றன என்பது சகிக்கமுடியாத அவலம்.

இந்த அவலம் வெட்டி எறியப்பட வேண்டும். வேண்டாத தொங்கு சதையாக இருக்கிற தனியார்மயம் சுட்டெரிக்கப்பட வேண்டும். பெற்றோர்களே உழைக்கும் மக்களே நமது குழந்தைகளை தனியார்மயத்திற்கு காவு கொடுக்காதீர்கள்.

காசுள்ளவனுக்குத்தான் கல்வி என்பது கல்வியின் நோக்கம் அல்ல. அது கல்வியை பண்பாட்டிலிருந்து நீக்கி பண்டமாக பார்க்கும் முதலாளிகளின் வியாபார உத்தி. இதன் மூலம் மனிதன் தன் அடிப்படை விழுமியங்களை காவு கொடுத்துவிட்டு விலங்கு நிலைக்குத் தாழ்கிறான்.

இன்றைக்கு தனியார்மயம் கல்விச்சூழலில் சூறையாடுகிற மாணவர்களின் எண்ணிக்கை வகைதொகையற்றவை. இந்த அட்டூழியங்களுக்கு நாம் முடிவு கட்டாவிட்டால் நாளை நாமும் சாய்ராவின் பெற்றோரைப்போன்று நம் செல்வங்களை இழந்துவிட்டு நிற்கக் கூடும். இந்தியா மாணவர்களின் பிணக்காடாக நிற்கும்!

– இளங்கோ

மேலும் படிக்க

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2016 மின்னிதழ் டவுன்லோட்

0

puthiya-jananayagam-january-2016

புதிய ஜனநாயகம் ஜனவரி 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. மோடியின் திறன்மிகு இந்தியா : இன்னுமொரு மோசடி!

2. மாற்றா… ஏமாற்றா?

3. “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது” : உச்ச நீதிமன்றத்தின் மனுநீதித் தீர்ப்பு
இந்தத் தீர்ப்பு அர்ச்சக மாணவர்களை ஆகமக் கோயில்களில் நியமிக்கக் கூடாதெனக் கூறவில்லை. “யானையைப் பானைக்குள் அடைக்கலாம். ஆனால், பானை உடையக்கூடாது” என்கிறது. இதனை வெற்றி என்று கூறுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

4. தோழர் சாய்பாபா பிணை ரத்து, அருந்ததி ராய் மீது அவமதிப்பு வழக்கு : நீதிமன்றத்தின் என்கவுண்டர்!

5. சென்னை மாநகரம் : சட்டவிரோத சிங்காரம்
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் சென்னை நகரம் அடைந்துள்ள ‘வளர்ச்சி’யில் சரிபாதி சட்டவிரோதமான முறையில் உருவானதாகும்.

6. மியாட் மருத்துவமனை : ஐந்து நட்சத்திரக் கொலைக்கூடம்
மியாட் மருத்துவமனையில் நடந்த சாவுகள், தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளின் உயிரோடு விளையாடும் விதத்தில் தான்தோன்றித்தனமாக நடந்து வருவதை அம்பலப்படுத்திவிட்டது.

7. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் : 59-வது கருக்கரிவாள்!

8. வெள்ளத்தில் மூழ்கிய விவசாயம், சிறுதொழில் : வேடிக்கை பார்க்கிறது அரசு!
ஏறத்தாழ ஒரு கோடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் மறுவாழ்வுக்கு எந்தப் பதிலும் கூறாமல் மைய-மாநில அரசுகள் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகின்றன.

9. சென்னையின் அழிவில் நீதிபதிகளின் பங்கு!
ஆறுகளும் ஏரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டதற்குக் காரணமானவர்கள் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் என்றும், நீதிமன்றங்கள்தான் இவற்றைப் போற்றிப் பாதுகாப்பதாகவும் உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக்கருத்து பொய்யானது.

10. துப்புரவுப் பணியாளர்கள் : சென்னையின் மீட்பர்கள்!
“சாதி இந்துக்களுக்கு தூய்மையான, மரியாதைக்குரிய வேலைகளையும், தீண்டத்தகாதோருக்கு அசுத்தமான, இழிந்த வேலைகளையும் ஒதுக்கிப் பிரித்துக் கொடுத்து, அதன் மூலம் சாதி இந்துக்களை மரியாதைக்குரியவர்களாகக் காட்டும், தீண்டத்தகாதோர் மீது மானக்கேட்டைத் திணிக்கும் உழைப்புப் பிரிவினையின் மீதுதான் இந்து சமூக ஒழுங்கு நிலைகொண்டுள்ளது” – அம்பேத்கர்.

11. வரலாற்றுக் குற்றத்திலிருந்து அமெரிக்காவை விடுவித்த மோடி!

12. ஏழைகளுக்குத் தீவிரவாதி வேடம்! பொய் மோதல் கொலைக்கு வீரசக்கர விருது!! இராணுவத்தின் முகத்திரை கிழிகிறது!
அகதிகளையும் ஏழைகளையும் ஏலமெடுத்து சுட்டுக் கொன்று, தீவிரவாதி என்று கணக்கு காட்டி விருது வாங்குகின்றனர் இராணுவ அதிகாரிகள் என்று ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுகிறது “என் கைகளில் இரத்தம்” என்ற நூல்.

13. ஊருக்கு ஊரு சாராயம்! கதறுது தமிழகம்!
திருச்சியில் பிப்ரவரி 14, 2016 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு மூடு டாஸ்மாக்கை சிறப்பு மாநாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள். போதையிலிருந்து தமிழகத்தை மீட்க சாராய சாம்ராஜ்யத்துக்கு முடிவுகட்ட வாரீர்! – மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

புதிய ஜனநாயகம் ஜனவரி 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

ரோகித் வெமுலா கொலை – விரிவான தகவல்கள் – ஆதாரங்கள் – படங்கள்

4

rohit-vemula-driven-to-death-cartoon-2படம் : ஓவியர் முகிலன்

ரோகித் வெமுலா கொலை –
பார்ப்பனக் கொடுங்கோன்மையின் நேரடி சாட்சி

ஸ்மிருதி இரானி
ரோகித் வெமுலாவின் தற்கொலைக்குக் காரணமான மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானியின் நேரடி தலையீட்டை நிரூபிக்கும் கடிதங்கள்

ரோகித் வெமுலா – ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு முனைவர் பட்டப் படிப்பு மாணவர். இப்பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் அம்பேத்கர் மாணவர் அமைப்பின் முன்னணியாளர்களில் ஒருவர். இந்தப் பல்கலையில் சேர்ந்ததில் இருந்தே அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து மாணவர்களை ஒன்று திரட்டி பல்வேறு போராட்டங்கள் நடத்தியிருக்கிறார். யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட போது அதனை எதிர்த்து பல்கலைக் கழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்.

இப்படிப்பட்ட போர்க்குணமிக்க போராளியான ரோகித் வெமுலா, கடந்த ஞாயிற்றுக் கிழமை (17-01-2016) அன்று தனது நண்பரின் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக போராடுபவர்களை எந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ் கும்பல் அடக்கி, ஒடுக்கி, அவர்களை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது என்பதற்கு நம் கண் முன் நிற்கும் உதாரணம் தான் ரோகித் வெமுலா.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முசாபர் நகர் குறித்த ஆவணப் படத்தை டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் திரையிட்ட போது அவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி காலிகளைக் கண்டித்தும், யாகூப் மேமன் தூக்கைக் கண்டித்தும், ரோகித் வெமுலா, தோந்தா பிரசாந்த், விஜய்குமார், சேசு செமுடுகுண்டா மற்றும் சுன்கன்னா ஆகிய 5 மாணவர்களும் முன்னணியாக இருந்து அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு எதிராக இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் காலிகள் என்று தமது முகநூலில் சாடியிருக்கிறான் அதே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்து ஏ.பி.வி.பி நிர்வாகி சுசீல் குமார்.

ஏ.பி.வி.பி
தலித் மாணவர்களை அச்சுறுத்தி, ஒடுக்கும் ஏ.பி.வி.பி (படம் இணையத்திலிருந்து)

இதனைக் கண்டித்து இந்த 5 மாணவர்களும் பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பு அதிகாரி முன்னிலையில் சுசீல் குமாரை அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியில் மன்னிப்புக் கோர வைத்திருக்கின்றனர். பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய சுசீல் குமார், மறுநாள் பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா என்ற அமைப்பில் உள்ள தனது சகோதரனுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் அம்பேத்கர் மாணவர் சங்கத்தினர் சுமார் 40 பேர் திரண்டு வந்து தங்கள் இருவரையும் தாக்கியதாகப் பொய்ப்புகார் அளித்திருக்கிறான். இதை நிரூபிப்பதற்கு இவர்கள் வேண்டுமென்றே மருத்துவமனையிலும் சேர்ந்துள்ளனர்.

அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பை ஒடுக்குவது தொடர்பாக பா.ஜ.க, ஏ.பி.வி.பி, மனித வளத்துறை அமைச்சகம், பல்கலைக் கழகம் இடையேயான கடிதப் பரிமாற்றம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்த நாடகங்களின் அரங்கேற்றத்திற்குப் பிறகு உள்ளூர் பா.ஜ.க பிரமுகரான ராமச்சந்திர ராவின் அழுத்தத்தின் பேரில் அப்போதைய பல்கலைக் கழக துணை வேந்தர் ஆர்.பி.சர்மா இந்த சம்பவம் குறித்து விசாரிக்க பேராசிரியர் அலோக் பாண்டேயின் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார்.

ரோகித் வெமுலா தற்கொலையை கண்டித்து போராட்டம்
ரோகித் வெமுலா தற்கொலையை கண்டித்து போராட்டம்

இந்தக் குழு விசாரித்து அளித்த அறிக்கையில், இப்பிரச்சினை சுசீல் குமார் மன்னிப்புக் கடிதம் கொடுத்த போதே எவ்வித அசம்பாவிதமும் இன்றி முடித்துக் கொள்ளப்பட்டது என்றும் சுசீல் குமாரின் உடலில் தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மருத்துவர்கள் கூறியிருப்பதையும் பதிவு செய்துள்ளனர். இதனைப் பெற்றுக் கொண்ட நிர்வாகம் விசாரணைக்குழு அறிக்கையை நிராகரித்து விட்டு 5 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக் கழக மாணவர்கள் போராடத் தொடங்கியவுடன், அப்போதைய துணை வேந்தர் ஆர்.பி.சர்மா வேறு வழியின்றி அம்மாணவர்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்து விட்டு, அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பலை சமாதானப்படுத்தும் வகையில் மற்றொரு விசாரணைக் கமிட்டியையும் நியமித்தார். அதோடு ஜூன் மாதம் முதல் இம்மாணவர்களுக்கு வர வேண்டிய கல்வி உதவித் தொகை பல்கலைக்கழக நிர்வாகத்தால் திட்டமிட்டு நிறுத்தப்பட்டது.

ரோகித் வெமுலா தற்கொலையை கண்டித்து போராட்டம்
ரோகித் வெமுலா தற்கொலையை கண்டித்து போராட்டம்

சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை முடக்க, அங்கிருந்த பார்ப்பனக் கும்பல் மத்திய மனித வளத்துறை அமைச்சகத்துக்கு ஒரு மொட்டைக் கடிதாசியைப் போட்டு அதன் வாயிலாக ஐ.ஐ.டி நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்து இம்மாணவர் வட்டத்தை முடக்க முயற்சி செய்ததும், அதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதுமான ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால் பார்ப்பனக் கும்பல் பணிய நேரிட்டதும் நினைவிலிருக்கலாம். அதே போல இங்கும் தெலுங்கானா மாநில பா.ஜ.க எம்.பி.யும், மத்திய தொழிலாளர் துறை இணையமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயா, அரசு முத்திரை கொண்ட தனது அலுவலக கடிதத் தலைப்பில் ஹைதராபாத் மத்திய பல்கலையில் ஏ.பி.வி.பி.-ன் சதி செல்லுபடியாகாத கதையை, தேசத்தின் பாதுகாப்பிற்கு எழுந்த பிரச்சினையாக சித்தரித்து ஒரு கடிதத்தை மத்திய ’மனித’ வளத்துறை அமைச்சர், ’போலி சான்றிதழ் புகழ்’ ஸ்மிருதி இரானிக்கு எழுதியுள்ளார்.

ரோகித் வெமுலாவின் தாய்
ரோகித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா

உடனடியாக களத்தில் இறங்கிய மனித வளத்துறையின் பார்ப்பனக் கும்பல், இதற்கு விளக்கமளிக்குமாறு செப். 3 அன்று ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறது. இப்பிரச்சினை குறித்து அப்போதைய நிலையை விளக்கி பல்கலைக்கழகம் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் திருப்தி அடையாத மத்திய மனித வளத்துறை அமைச்சகம் பண்டாரு தத்தாத்ரேயாவின் புகாரின் அடிப்படையில் அந்த மாணவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ச்சியாக செப்டெம்பர் 24, அக்டோபர் 6, 20 மற்றும் நவம்பர் 19 ஆகிய தேதிகளில் கடிதங்கள் அனுப்பி அழுத்தம் கொடுத்தது.

இந்நிலையில் துணை வேந்தராக இருந்த ஆர்.பி.சர்மாவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, காவிக் கூட்டத்தின் ஆசி பெற்ற அப்பாராவ் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ் அடிமை அப்பாராவ் பதவியேற்றதும், எவ்வித விசரணையும் இன்றி இந்த 5 மாணவர்களையும் விடுதியில் இருந்து வெளியேற்ற கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி உத்தரவிட்டார். வெளியேற்றப்பட்ட இம்மாணவர்கள் கடுங்குளிரில் விடுதிக்கு வெளியே பல்கலை வளாகத்திற்குள்ளேயே தொடர்ச்சியாகத் தங்கி இவ்வுத்தரவிற்கு எதிராகத் தமது போராட்டத்தை நடத்திய இம்மாணவர்கள் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி துணைவேந்தருக்கு பலமுறை கடிதம் அனுப்பியிருக்கின்றனர். அவர்களது அனைத்து கடிதங்களையும் நிராகரித்தார் அப்பாராவ்.

கடந்த டிசம்பர் 30 அன்று தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து யூ.ஜி.சி.யின் முன்னாள் தலைவர் ’தொரட்’டிடம், தாங்கள் எழுதிய கடிதங்கள் உள்ளிட்ட 10 பக்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர் இந்த மாணவர்கள். இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும் தங்களை விடுதியில் தங்க அனுமதிக்காத அப்பாராவிற்கு ரோகித் எழுதிய கடைசிக் கடிதத்தில் ”தலித் மாணவர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்டது பொய்ப்புகார் என்று தெரிந்தும் எங்கள் மீது நடவடிக்கை எடுத்ததை வைத்தே உங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. இப்படி எங்களை படிப்படியாகக் கொல்வதற்குப் பதில், தலித் மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போதே அவர்களுக்கு தாம்ப்புக் கயிறோ, 10 கிராம் சோடியம் அசைடு விஷத்தையோ கொடுத்துவிடுங்கள் அல்லது ஒரேடியாக கருணைக் கொலை செய்து விடுங்கள்” என்று எழுதியிருக்கிறார். மத்தியில் ஆளும் பார்ப்பன பாஜக அரசின் நேரடி அழுத்தம், அப்பாராவ் என்ற அடிமையின் வாயிலாக போராளிகளை எந்த அளவிற்கு உளவியல் ரீதியில் பாதித்திருக்கிறது என்பதை இக்கடிதத்தின் வாயிலாகப் புரிந்து கொள்ள முடியும்.

கருணைக் கொலை செய்து விடும்படி ரோகித் துணைவேந்தருக்கு எழுதிய கடிதம்

ஒருபுறம், தட்டிய கதவுகள் அனைத்தும் இறுக மூடியபடியே இருக்க, மறுபுறம் 7 மாதங்களாக கல்வி உதவித்தொகை வராமல் கல்வி நிலையத்திலிருந்தும், விடுதியிலிருந்தும் ஒதுக்கப்பட்ட சூழலில் கடுமையான மன அழுத்ததிற்கு ஆளாகியுள்ளனர் இம்மாணவர்கள். ஞாயிற்றுக்கிழமை, தனது தாயிடம் மனம் ஒடிந்து பேசிய ரோகித் வெமுலா, பின்னர் தனது நண்பனின் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அது தற்கொலை அல்ல, சங்கபரிவாரத்தின் நேரடியான பாசிச படுகொலை என்பதை மேற்சொன்ன சம்பவங்களும், தற்கொலைக்கு முன் ரோகித் எழுதிய கடிதமும் நமக்கு உரைக்கின்றன. ரோகித் எழுதிய கடிதத்திலிருந்து சில வரிகள்:

“ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். காரல் சாகன் போல ஓர் அறிவியல் எழுத்தாளனாக வேண்டும் என்பது எனது லட்சியம். ஆனால், என்னால் எழுத முடிந்தது என்னவோ இந்த தற்கொலை கடிதத்தை மட்டுமே… “

rohit-vemula-suicide-protests-1”ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன … ——————————————- ஒரு மனிதன் எப்போதாவது அவனது கருத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறானா என்றால்? நிச்சயமாக இல்லை. “

“சிலருக்கு வாழ்க்கை வெறும் சாப வடிவிலானதாக கிட்டுகிறது. எனது பிறப்பு ஒரு பயங்கர விபத்தின் விளைவு. எனது பால்ய பருவ தனிமையில் இருந்து என்னை எப்போதுமே விடுவித்துக் கொள்ள முடிந்ததில்லை. கடந்த காலங்களை திரும்பிப்பார்க்கும்போது யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது. “

”எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே. அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம்”

ரோகித் வெமுலா தற்கொலை
பார்ப்பன சாதி வெறி ஓநாய்களின் தொடர்ச்சியான உளவியல் தாக்குதல் ஒரு சமூகப் போராளியை, ஒரு விஞ்ஞானியை, தாழ்த்தப்பட்ட உழைக்கும் வர்க்கத்தில் இருந்து உயர்கல்வி பயில ஒரு பெருங்கனவோடு வந்திருந்த ஒரு மாணவனைக் கொன்றுவிட்டது.

மக்கள் நலனுக்காக, சமூக நீதிக்காக போராடிய ஒரு போராளியின் உள்ளத்தை இந்த இழிவான சாதிய சமூகமும், பார்ப்பன பாசிச கும்பலும் எவ்வளவு தூரம் பாதித்திருக்கின்றன என்பதை இந்தக் கடிதம் பறைசாற்றுகிறது. இந்த மாணவர்களின் மீது பார்ப்பன சாதி வெறி ஓநாய்களின் தொடர்ச்சியான உளவியல் தாக்குதல் ஒரு சமூகப் போராளியை, ஒரு விஞ்ஞானியை, தாழ்த்தப்பட்ட உழைக்கும் வர்க்கத்தில் இருந்து உயர்கல்வி பயில ஒரு பெருங்கனவோடு வந்திருந்த ஒரு மாணவனைக் கொன்றுவிட்டது.

இது இன்று நேற்று நடக்கும் விசயமா ?.. 2000 ஆண்டுகளாக இந்திய சமூகம் பார்த்துப் பார்த்து பழகிப் போன விசயம் தான். அது ஏகலைவன் ஆகட்டும், சம்பூகன் ஆகட்டும், அல்லது நந்தன் ஆகட்டும், பார்ப்பனிய விசத்தால் கொல்லப்பட்ட சூத்திரர்களும், சண்டாளர்களும் – பின்னாளில் பார்ப்பனர் கருணையால் இறைவனடி சேர்ந்தவர்களாக சித்தரிக்கப்பட்டதை வாசித்து புளகாங்கிதமடையும் அடிமைச் சமூகத்தில் தினமும் இது போன்ற ஆயிரக்கணக்கான ஏகலைவன்கள் கொல்லப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்

அம்பேத்கர்
“எந்த திசையில் திரும்பினாலும், சாதி என்ற கொடூரம் உங்கள் பாதையில் குறுக்கிடுகிறது. இந்த` கொடூரத்தை கொல்லாமல், அரசியல் சீர்திருத்தங்களோ, பொருளாதார சீர்திருத்தங்களோ சாத்தியமில்லை” – அம்பேத்கர் (படம் இணையத்திலிருந்து)

இதற்கு நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டு ராகுல்காந்தி தொடங்கி அனைத்து ஓட்டரசியல் பெருச்சாளிகளும் தங்களை சமூக நீதிப் போராளிகளாகக் காட்டிக் கொள்கின்றனர். அனைத்து ஓட்டுக் கட்சி கிரிமினல்களும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் தலித் விரோத, இஸ்லாமியர் விரோத, மக்கள் விரோத சதித் திட்டங்களில் ஒரு வகையில் பங்கு வகித்தவர்களே. இன்று தலித் அரசியல் பேசும் அனைத்து ஓட்டுக் கட்சிகளும், சமூக நீதி பேசும் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் கூட்டணி மூலமோ அல்லது தேர்தல் கூட்டணியைக் கணக்கில் கொண்டு அமைதி காப்பதன் மூலமோ இந்நாட்டை ஆர்.எஸ்.எஸ் கும்பலின் வேட்டைக் காடாக மாற்றி வருகின்றன.

****

ரோகித் வெமுலா தற்கொலை
மாணவர் எழுச்சியைக் கண்டு மிரண்டிருக்கும் அதிகாரவர்க்கம், போலீசு எடுபிடிகளைக் கொண்டு அவசர அவசரமாக ரோகித் வெமுலாவின் உடலை எரித்துள்ளது

ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சாதிய ஒடுக்குமுறையால் படுகொலை செய்யப்பட்ட ரோகித்தின் மரணத்திற்குப் பிறகு நாடு முழுவதும் பல்வேறு முற்போக்கு மாணவர் அமைப்புகள் ஒன்று திரண்டு போராடி வருகின்றன. வழக்கம் போல, போராடும் மாணவர்களின் மீது ஏவல் நாய்களாய் தாக்குதலை நடத்தத் தொடங்கியிருக்கின்றன போலீசு வெறிநாய்கள். மாணவர் எழுச்சியைக் கண்டு மிரண்டிருக்கும் அதிகாரவர்க்கம், போலீசு எடுபிடிகளைக் கொண்டு அவசர அவசரமாக ரோகித் வெமுலாவின் உடலை எரித்துள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் உயர்நீதி மன்ற கண் துடைப்பு உத்தரவையும் மீறி நாகை மாவட்டத்தில் செல்லமுத்து என்ற தலித் முதியவரின் பிணத்தை பொதுவழிக்குள் நுழையவிடாமல் போலீசு எடுபிடிகளை வைத்துத் தடுத்து சாதிய சனாதனத்தை நிலைநாட்டிய அதிகாரவர்க்கத்தின் சிந்தனையில் வேறு என்ன உதிக்க முடியும்?

பார்ப்பனிய சனாதன தர்மத்தையும், ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டைக் கூறு போட்டு விற்கும் தங்களது ’சேவை’யையும் எதிர்த்தால், ஒன்று கொன்றொழிக்கப்படுவீர்கள் அல்லது உளவியல் ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு தற்கொலைக்குத் தூண்டப் படுவீர்கள் என்பது தான் கோவிந்த் பன்சாரே தொடங்கி ரோஹித் வெமுலா வரை நடத்தப்பட்ட கொலைகளின் மூலம் ஆர்.எஸ்.எஸ் கும்பல் உலகிற்கு உணர்த்த விரும்புப் பாடம்.

ரோகித் வெமுலா தற்கொலை
“நாங்கள் அவனை தொடவே இல்லை” – ஏ.பி.வி.பி (படம் : thehindu.com)

மோடி அரசு பதவியேற்ற பின் தொடர்ச்சியாகக் கொண்டு வரும் பல்வேறு மக்கள் விரோத சட்டதிருத்தங்களும், பொருளாதார சீர்திருத்தங்களும் எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், எதிர்ப்பே காட்டாத ஒரு மழுங்கிப் போன தலைமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் இந்தக் கும்பலுக்கு இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக புரட்சிகரமான அணியினரான மாணவர்களிடையே குறிப்பாக உயர்கல்விக் கூடங்களில் படிக்கும் மாணவர்களிடையே தனக்கு எதிரான கருத்துக்கள் தோன்றக் கூடாது என்பதிலும், அப்படித் தோன்றினால் அதன் சுவடு தெரியாமல் அழித்து விட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறது ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பல். அதன் வெளிப்பாடு தான் “யூ.ஜி.சியை ஆக்கிரமிப்போம்” இயக்க மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், எஃப்.டி.ஐ.ஐ மாணவர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் மீது விதிக்கப்பட்ட தடை, மற்றும் தற்போது அம்பேத்கர் மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது உளவியல் ரீதியாக தொடுக்கப்பட்ட வன்கொடுமைத் தாக்குதல்கள் போன்றவை.

ரோகித் வெமுலா தற்கொலை
ஏகலைவன் 2.0-ன் கதை “இந்தத் தடவை ஒன்னோட உயிரே வேண்டும். இந்தா கயிற்றைப் பிடி” – ஹைதராபாத் பல்கலைக் கழக நிர்வாகம். (படம் இணையத்திலிருந்து)

நாட்டின் செல்வமான கல்வியை கடைச் சரக்காக்கும் ’புதிய கல்விக் கொள்கை – 2015’ மசோதாவை ஒட்டு மொத்த மாணவர் சமூகத்தின் மீதான தாக்குதலுக்காக தயாரித்து வைத்திருக்கும் மோடி கும்பல். கல்வியை கார்ப்பரேட் கும்பலின் கையில் ஒப்படைத்து பெரும்பான்மை இந்தியர்களை அறிவு ஊனமுற்றவர்களாக மாற்றத் துடிக்கும் இக்கும்பல், இதற்கு எழும்பும் எதிர்ப்பை அடக்கி ஒடுக்க வழி செய்து கொடுக்கும் வகையில் லிங்டோ கமிட்டி அறிக்கையின் படி மாணவர் அமைப்புகளுக்கான கட்டுப்பாடுகள் என்ற பெயரில் மாணவர் அமைப்புகளைக் காயடிக்க அனைத்து முயற்சிகளையும் செய்கிறது.

ரோகித் வெமுலா தற்கொலை
“வி.ஐ.பி புகார்” மீது மனுநீதியை நிலைநாட்டிய ஹைதராபாத் பல்கலைக் கழகம் – “ஏ.பி.வி.பி பசங்களோட வாழ்க்கையை அச்சுறுத்தும்படி பி.எச்.டி ஆய்வு செய்யும் தலித் நீதானா?” (படம் இணையத்திலிருந்து)

அடுத்த தலைமுறையை, பார்ப்பனிய ஏகாதிபத்திய தாசர்களாக, சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ஆட்டு மந்தைகளாக, சுயமாக சிந்திக்க, தனது உரிமைக்காகக் கூட குரல் கொடுக்க முடியாதவர்களாக உருவாக்கும் தனது நிகழ்ச்சி நிரலை அமல்படுத்தி வருகிறது பார்ப்பனக் கும்பல். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், ஈழப் போராட்டம், டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை ஒருங்கிணைந்து நடத்திய மாணவ சமூகத்தை அடக்கி ஒடுக்கி, அரசியலோ, ஜனநாயக உணர்வோ இல்லாத தக்கை மனிதர்களாக மாற்ற நேரடிப் படுகொலைகள், உளவியல் ரீதியான தாக்குதல்கள் தொடங்கி சட்ட சீர்திருத்தங்கள் வரை பல்வேறு ஆயுதங்களைக் கையாண்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க கும்பல். நாட்டை சீர்கெடுக்கும் காவிக் கும்பலை விரட்டியடிக்க வேண்டிய தருணம் இது. நாம் பகத்சிங்கின் வாரிசுகள் என்பதை மீண்டும் அவர்களுக்கு உணர்த்த வேண்டிய தருணம் இது.

– கதிர்

பேராசிரியர் சாய் பாபாவை சாகடிக்க காவி பயங்கரவாதிகள் சதி !

0

டெல்லி பேராசிரியர் சாய் பாபாவுக்கு மீண்டும் சிறை! சித்திரவதை செய்து சாகடிக்க காவி பயங்கரவாதிகள் சதி!

மதுரை ம.உ.பா.மையம் சார்பில் அரங்கக் கூட்டம்

க்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,மதுரை மாவட்டக் கிளை சார்பாக,டெல்லி பேராசிரியர் சாய் பாபா பிணையை ரத்து செய்து, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து 17-01-2016 அன்று அரங்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை செயலாளர் லயனல் அந்தோணி ராஜ் தலைமை ஏற்றார்.

கிளைச்செயலாளர் லயனல் அந்தோணிராஜ்
கிளைச்செயலாளர் லயனல் அந்தோணிராஜ் தலைமை

பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய டெல்லி பேராசிரியர் சாய் பாபாவுக்கு மீண்டும் சிறை ! முற்போக்கு சிந்தனைகளை முடமாக்கும் காவிகள்!” என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர் ஆர்.முரளி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

“பேராசிரியர் சாய் பாபா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆந்திராவில் இருந்தபோது பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடினார். அவர் 90% மாற்றுத் திறனாளி. இரண்டு கால்களும் செயல் இழந்துவிட்டதால் அவர் கைகளால் தவழ்ந்து செல்லும் நிலையில் இருந்தார். டெல்லிக்கு வந்த பிறகு தான் அவர் சக்கர நாற்காலி பயன்படுத்தினார். பழங்குடி மக்களின் மீது தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டதற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.இதை உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை செயல்பாட்டாளர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர் ஆர்.முரளி
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர் ஆர்.முரளி சிறப்புரை.

புரட்சிகர ஜன நாயக முன்ணணி என்ற அமைப்பின் இணைச் செயலராக இருந்தார். டெல்லி பல்கலைக் கழக மாணவர்களுடன் அவர் நெருக்கமான தோழமை உறவு ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.இதனால் 2014-ம் ஆண்டு மே மாதம் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) என்ற ஆள்தூக்கி கருப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவரது உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் கடந்த ஜூன் மாதம் அவருக்கு சிகிச்சைக்காகப் பிணை வழங்கப்பட்டது. இப்போது பிணை ரத்து செயப்பட்டு மீண்டும் அவர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளர். சிறையில் அவருக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி அவரது மனைவிக்கு அவர் பல கடிதங்கள் எழுதியுள்ளார். அதை வைத்துப் பார்க்கும் போது அவர் சிறையிலிருந்து உயிரோடு வருவாரா என்பது சந்தேகமாக இருக்கிறது.

ரவுடிகளையும், கொள்ளையர்களையும், தேசவிரோதிகளையும் கண்காணிக்க வேண்டிய போலீசு உளவுத்துறை, அரசின் தவறான செயல்பாடுகளை விமர்சிப்பவர்களையெல்லாம் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தி சிறையில் தள்ளுகின்றது. இவர்களைக் கண்காணிப்பதற்கு உளவுத்துறையில் பல பிரிவுகள் செயல்படுகின்றன.

dr-saibaba-hall-meeting-4ஆந்திரா, ஒரிசா, சதிஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் நமது இயற்கை வளங்களையெல்லாம் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு நமது ஆட்சியாளர்கள் அகலக் கதவைத் திறந்துவிட்டுள்ளனர். இதனால் காடுகளில் வாழும் பழங்குடிமக்கள் எதிர்த்துப் போராடுகிறார்கள். போராடுகிற அனைவரையும் மாவோயிஸ்டுகளாகப் பார்க்கின்றது அரசு. இவர்களைக் காடுகளிலிருந்து விரட்டியடிப்பதற்காக பசுமை வேட்டை போன்ற பெயரில் போலீசு, ராணுவத்தைக் குவித்து மக்களைக் கொல்கிறது.இதனை எதிர்த்துக் குரல் கொடுத்ததினால் தான் சாய் பாபாவுக்கு இந்த கதி.

சாய் பாபாவைக் கைது செய்த போது போலீசு எந்த சட்ட நெறிமுறைகளையும் கடைபிடிக்கவில்லை. தீவிரவாதியைப் போல கடத்திக்கொண்டு போய்விட்டது. போலீசு நினைத்தால் யார்மீது எத்தனை கேசு வேண்டுமானாலும் போடலாம்.யாரும் கேள்வி கேட்க முடியாது.அதை நீதிமன்றங்களும் ஏற்றுக்கொள்கிற அவல நிலை உருவாகியிருக்கிறது. ஊடகங்களும் “பயங்கரவாதி கைது” என்று பரபரப்பாக செய்தி வெளியிட்டு ஒரு கருத்தை உருவாக்கி விடுகிறார்கள். இந்த நிலைமை தொடர்வதற்குக் காரணம் இந்த மாதிரி விஷயங்களில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அரசு பயங்கரவாதம் எப்படி செயல்படுகிறது என்பதை மக்கள் உணரும்போதுதான் இதில் மாற்றம் வரும்.

dr-saibaba-hall-meeting-3குஜராத்தில் 97 இசுலாமியர்களைக் கொன்ற பாபு பஜ்ரங்கி என்பவனுக்கும், இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற மாயா கோத்னானிக்கும் உடல் நிலையைக் காரணம் காட்டி நீதிமன்றம் பிணை வழங்கியிருக்கிறது. மூன்று பேர் என்கவுண்டர் படுகொலைக்கு காரணமாயிருந்த அமித் ஷா சுதந்திரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார். குண்டுவெடிப்புகளுக்கு காரணமாயிருந்த இந்து பயங்கரவாதிகள் உட்பட பலரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் போதுமான குற்றசாட்டுகள் இல்லாத நிலையிலும் சாய் பாபா சிறைக் கொடுமைகளை அனுபவித்து வருகிறார். தற்போது அவரது சக்கர வண்டியும் உடைந்துவிட்ட நிலையில் அவர் தனிமைச் சிறையில் கழிவறையையே வாழுமிடமாகக் கொண்டு மரணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார். இது அவரை சிறையில் தள்ளியவர்களுக்கு நன்றாகவே தெரியும். இது காவி பாசிஸ்டுகளின் திட்டமிட்ட சதியாகும். இதற்கெல்லாம் அஞ்சி அவர் பின்வாங்கிவிடவில்லை.

கோவில்களைச் சுற்றித் திரியும் பண்டாரங்களையும் காவிகள் என்று சொல்வதுண்டு.ஆனால் இவர்கள் கார்ப்பரேட் காவிகள்.

  • புராணப் புரட்டுகளையெல்லாம் அறிவியல் கண்டுபிடிப்புகளாகப் பிதற்றித் திரிபவர்கள். வரலாற்றைத் திருத்தி எழுதத் துணிந்தவர்கள். இதற்காக 90 வயதை நெருங்குகிற பலர் உட்பட 700-க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.அரசு.
  • அரசு கட்டுப்பாட்டில் உள்ள 500-க்கும்மேற்பட்ட அகாடமிகளில் ஆர்.எஸ்.எஸ். காவிகளைக் கொண்டு நிரப்பி வருகின்றனர்.
  • காந்தியைக் கலவரக்காரராகவும், கோட்சேயைத் தியாகியாகவும் சித்தரித்துபாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டன. மஹாபாரதத்தையும், ராமாயணத்தையும் வரலாறாகப் பள்ளிகளில் கற்றுக்கொடுக்க முனைந்துள்ளனர் .
மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பா. நடராஜன்
மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பா. நடராஜன் நன்றியுரை
  • உ.பி.மாநிலம் அலகாபாத்திலுள்ள திரிவேணி சங்கமத்தில் கங்கையையும், யமுனையையும் உருவாக்கியது சரஸ்வதி நதி தான். அது பூமிக்கு அடியில் ஓடுகிறது என்றும் அதைக் கண்டுபிடிக்க பல கோடி மக்கள் வரிப் பணத்தில் செலவழிக்கின்றனர். இதற்காக அறிவுஜீவிகள் அலைகின்றனர்.
  • இது இந்து நாடு. இங்கே முஸ்லீம்கள் வாழலாம்.ஆனால் அவர்கள் இந்துக்களுக்குக் கட்டுப் பட்டவர்களாக வாழ வேண்டும் என்ற கோல்வால்கரின் தத்துவத்தைத் தூக்கிக்கொண்டு கலவரத்தை உருவாக்கி வருகின்றனர்.
  • தலித்துகளை உருவாக்கியது இந்து மதம் அல்ல. இசுலாமிய மதம்தான் என்று சரடு விடுகின்றனர்.
  • அம்பேத்கார் தலித்துகளை இந்து மதத்தை விட்டு வெளியேறச் சொன்னார். காவிகளோ தலித்துகளையும் முஸ்லீம்களையும் கிறித்தவர்களையும் இந்து மதத்திற்குத் திரும்பி வாருங்கள் என்கின்றனர். திரும்பி வந்தால் எந்த சாதியில் வைக்கப் படுவார்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை.
  • மோடியைக் கடவுளின் அவதாரம் என்றும் நம்மை மீட்பதற்கு வந்திருக்கிறாரென்றும் பரப்புகின்றனர்.
  • அவர்களது கற்பனைகளையெல்லாம் வரலாறாக மாற்றத் துடிக்கின்றனர்.அதற்கு ஏற்றாற் போல பல நீதிமான்கள் அமர்ந்துகொண்டு தீர்ப்பளிக்கின்றனர். பண்பாட்டு ரீதியாகவும் தாக்குகின்றனர்.

இந்தக் காவி பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டுப் போராட வேண்டும். பேரா.சாய் பாபாவை விடுதலை செய்யக் கோரி ஆசிரியர்-மாணவர்-எழுத்தாளர்கள்-அறிவுஜீவிகள் மக்கள்திரள் அனைவரையும் ஒன்று திரட்டிக் குரல் கொடுக்க வேண்டும்” என்று பேராசிரியர் முனைவர் ஆர்.முரளி அவர்கள் பேசினார்.

மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பா. நடராஜன் நன்றி கூறினார்.

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை மாவட்டக் கிளை, 9443471003

டென்மார்க் ஐ.டி கம்பெனியின் சட்டவிரோத வேலைநீக்கம்

2

டென்மார்க் கம்பெனியின் சட்டவிரோத வேலைநீக்கம்

ரியாக ஓராண்டுக்கு முன்பு 25 ஆயிரம் ஊழியர்களை, தொழிலாளர் சட்டங்கள் எதையும் மதிக்காமல், சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்தது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எனப்படும் டி.சி.எஸ் மென்பொருள் நிறுவனம். பல்லாயிரம் கோடியை ஊழியர்களின் கடுமையான உழைப்பின் மூலம் சுரண்டிக் கொழுத்த டி.சி.எஸ், அரசிடம் இருந்து அடிமாட்டு விலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் நிலத்தையும் கோடிக்கணக்கில் வரி விலக்குகளையும் மலிவு விலையில் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து கட்டுமான வசதிகளையும் பெற்றுக் கொண்டு அரசின் சட்டங்களை மயிருக்கு சமமாகக் கருதிக் கொண்டு கொத்தாக 25 ஆயிரம் ஊழியர்களை வீதியில் தள்ளியது.

இந்த கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த புரட்சிகர தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு டி.சி.எஸ்-ன் அடாவடியைக் கண்டித்து தீவிரப் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. அனைத்து ஐ.டி. ஊழியர்களையும் அமைப்பாகத் திரட்ட தீவிர முயற்சி செய்து இந்தியாவின் முதல் ஐ.டி. ஊழியர்கள் சங்கத்தை உருவாக்கியது. இந்த சங்கத்தின் மூலம் டி.சி.எஸ் உள்ளிட்ட தமிழகத்தில் செயல்படும் ஐ.டி. நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் குறிப்பாக தொழில் தாவா சட்டம் 1947 பொருந்தும் என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இவ்வழக்கில் அரசு உரிய முடிவு எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவினை ஓராண்டாக நடைமுறைக்கு கொண்டுவரவில்லை தமிழக அரசு. பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் சங்கத்தின் விடாப்பிடியான போராட்டம், நாடெங்கும் எழுந்த எதிர்ப்பு இவற்றின் விளைவாக டி சி எஸ் தனது வேலை நீக்க உத்தரவுகளை நிறுத்திக் கொண்டது.

டி.சி.எஸ் செய்த வேலை நீக்கமாவது ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தது. ஆனால் சென்ற மே மாதம் சிண்டெல் நிறுவனமோ வேலை நீக்கத்தை செய்தியாக வெளிவராமல் பார்த்துக் கொண்டது. அது மட்டுமல்லாமல் ஊழியர்களையே மிரட்டி பணிவிலகல் கடிதம் பெற்றுக் கொண்டு சட்டப்படி பிரச்சினை வராமல் பார்த்துக் கொண்டது. ஆனால் இந்த நயவஞ்சகமான வேலைப் பறிப்பினை அம்பலப்படுத்திய பு.ஜ.தொ.மு ஐ.டி. ஊழியர் சங்கம், பாதிக்கப்பட்ட ஊழியர்களை சட்ட பூர்வமான நடவடிக்கைகளில் இறங்க உதவி செய்தது. இதை அடுத்து சிண்டெல் தனது ஆட்குறைப்பை நிறுத்திவைத்தது.

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள வெஸ்டாஸ் நிறுவனம்
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள வெஸ்டாஸ் நிறுவனம்

இப்போது சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் டென்மார்க் நாட்டை சேர்ந்த வெஸ்டாஸ் என்ற நிறுவனம் தனது ஊழியர்களில் பத்துப் பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது.

டி.சி.எஸ் மற்றும் சிண்டெல் நிறுவனங்கள் தங்களது நடவடிக்கைகளுக்கு ஊழியர்களின் பணித்தரம் சரியில்லை எனப் பொய்யாகவாவது காரணம் கூறின.

ஆனால் வெஸ்டாஸ் கூறியுள்ள காரணமோ எவ்வித நியாயத்துக்குள்ளும் அடங்காது. ஆம், உங்கள் பணித் திறனுக்கு எங்களால் வேலை தர இயலாது எனக் காரணம் காட்டியுள்ளது. இதே ஊழியர்களின் திறன்களைத்தான் வெஸ்டாஸ் 7 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்திப் பல கோடிகளை லாபமாக ஈட்டியிருந்தது. வெஸ்டாஸ் மட்டுமல்ல பன்னாட்டு, தரகு கார்ப்பரேட்கள் அனைத்தும் தங்களது லாபத்தில் துளியளவு குறையும் அறிகுறி தெரிந்தாலே உடனே ஊழியர்களைக் குறைப்பதைத்தான் செய்கின்றன. ஆட்குறைப்பு சம்பந்தப்பட்ட எந்த சட்டங்களையும் பின்பற்றுவதில்லை. இவர்களின் சட்டவிரோத ஆட்குறைப்புக்கு பக்கபலமாக இருப்பது அரசின் தொழிலாளர் துறைதான்.

மோடி அரசு பதவிக்கு வந்தபின் பெயரளவுக்காவது இருந்த தொழிலாளர் சட்டங்களை ஒழித்து விட தீவிரமாக வேலை செய்து வருகிறது.

வெஸ்டாஸ் மட்டுமல்ல தகவலே வெளிவராமல் பல கார்ப்பரேட் கம்பெனிகளில் கொத்து கொத்தாக ஐ.டி. ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். உலகெங்கும் 30 சதவீத ஐ.டி. ஊழியர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் உள்ளன பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள்.

நாம் என்ன செய்யப் போகிறோம்? வேலை உரிமையை எவ்வாறு காப்பது? பற்றி எரியும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஐ.டி. ஊழியர்கள் பிரிவு அறை கூட்டம் நடத்த உள்ளது. அனைவரும் வாருங்கள்.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஐ.டி ஊழியர் பிரிவு
combatlayoff@gmail.com
தொடர்பு கொள்ள 9003198576

vestasDear IT friends,

None of us have forgotten the audacious move by TCS last year to layoff 25,000 employees. Many in the IT industry were angered by that unjust and inhuman action. We organized ourselves as a trade union and protested strongly against those mass dismissals by TCS. NDLF IT Employees wing approached Madras High Court and obtained an order calling for enforcement of Labour laws in all IT companies. Due to our combined efforts and nationwide opposition TCS was forced to put the layoffs on hold.

Even when the wounds of TCS layoff were fresh in our minds, another corporate behemoth SYNTEL resorted to still more diabolical measures to dismiss 3,000 of its employees. The sacked employees were humiliated and asked to leave the premises within 15 minutes of handing over all company property in their possession. Moreover, Syntel tried hard to keep this news under wraps. But, NDLF IT Wing took the issue nationally and provided legal help to affected employees in Chennai, Pune and Mumbai. Alarmed by this development, Syntel aborted its layoff move.

The latest to join this bandwagon is Vestas, an ITES multinational from Denmark. On January 5 this year, Vestas dismissed 10 employees. While TCS and Syntel cited alleged lack of performance as reason for illegal layoff of their employees, Vestas is more arrogant, saying that the sacked employees have “extra-ordinary” skills and hence can not be employed.

Not many in IT/ITES industry know about this dismissal of Vestas employees. Not only in Vestas, many other companies are sending out hundreds or thousands of employees with short notice. Multinational and Indian corporates operating in India refuse to comply with labour laws and terminate services of employees for maximizing profits.

Still worse is to come. Globally, IT employers plan to make 30% of employees redundant in 2016. How are we going to face all these? How to put an end to Layoff and Forced Resignations?

Do take part in the special hall meeting to discuss all these in detail and share your views.

New Democratic Labour Front,
IT Employees Wing
combatlayoff@gmail.com
Call – 9003198576

ரோகித் வெமுலா தற்கொலை : ஆர்.எஸ்.எஸ் கும்பலை துரத்தியடிப்போம் !

1

1. ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., ஏ.பி.வி.பி கும்பலை நாட்டை விட்டு துரத்தியடிப்போம்! – சென்னையில் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்.

ஹைதராபாத் மத்திய பல்கலைகழக மாணவர் ரோகித்தை போன்று இன்னொரு மாணவரை இழக்கக்கூடாது என்றால் ஆ.எஸ்.எஸ் பார்ப்பன பயங்கரவாத கும்பலை நாட்டு விட்டு விரட்டியடிக்கவேண்டும் என பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தெரிவித்துள்ளார்.

rohit-vemula-suicide-rsyf-protest-08

ஹைதராபாத் மாணவர் தற்கொலையை கண்டித்து இன்று பகல் 12 மணி அளவில் சென்னை அண்ணாசாலை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டனர் பு.மா.இ.மு.வினர். ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும், திரளான ஊடக நண்பர்களும் திரண்டு பரபரப்பான அண்ணா சாலைக்கு மேலும் பரபப்பூட்டியிருந்தனர். இந்நிலையில் பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தலைமையில் முழக்கமிட்டவாறே வந்த பு.மா.இ.மு.வினரை கண்ணும் கருத்துமாக காத்து போராட்ட இடத்திற்கு அழைத்துவந்தது போலீசு. வழக்கம்போல் போராட்டம் பெரிய அளவில் வெடித்து சிதறிவிடக்கூடாது என்பதில் கூடுதல் அக்கறை செலுத்தியிருந்தது.

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கும்பலுக்கெதிரான ஆவேசமான முழக்கங்களால் அண்ணா சாலை அதிர்ந்தது. தொடர்ச்சியாக சுற்றியிருந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் பு.மா.இ.மு.வினர் பிரச்சார நோட்டிசை வினியோகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய தோழர் கணேசன், “தலித் மாணவர் ரோகித் வெமுலா ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., ஏ.பி.வி.பி காலிகளால் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, டார்ச்சர் செய்யப்பட்டுதான் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது தற்கொலை அல்ல, இது திட்டமிட்ட படுகொலை என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் அந்த பல்கலைகழகத்தினுடைய துணைவேந்தரான அப்பாராவ், மத்திய இணை அமைச்சரான பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான ஸ்மிரிதி ராணி. இவர்கள் மூன்று பேரும் கூட்டு சேர்ந்துதான் அம்பேத்கர் பெயரில் இயங்கும் அம்பேத்கர் மாணவர் அமைப்பை அங்கிருந்து அப்புறப்படுத்தி, தொடர்ந்து சித்திரவதைகள் செய்து அவர்களுடைய உரிமைகளை மறுத்து தற்கொலைக்கு தள்ளியிருக்கிறார்கள். இதனால்தான் நாங்கள் இதை திட்டமிட்ட படுகொலை என்கிறோம்.

rohit-vemula-suicide-rsyf-protest-10இதற்கு நாடு முழுக்க கண்டனம் தெரிவித்து ரோகித்தின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடக்கிறது. இதற்கு சரியான தீர்வை இந்த் போலிசும், நீதிமன்றமும் வழங்கமுடியாது என்று நாங்கள் கருதுகின்றோம். ஏனெனில் ஹைதரபாத் பல்கலைகழகத்தில் மட்டும் இதுவரை 18 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். சென்னை ஐ.ஐ.டி.யில் APSC அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டது. அதற்கு முன்னால் ஏறக்குறைய 25 மாணவர்கள் துன்புறுத்தப்பட்டு தற்கொலை செய்யப்பட்டுள்ளனர். அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் தடை நீங்கியதற்கு காரணம் பத்திரிக்கை நண்பர்களும், எங்களை போன்ற புரட்சிகர அமைப்புகளும் பல்வேறு ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் போராடியதன் விளைவே அங்கு தடை நீங்கியது. ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி தற்காலிகமாக பின்வாங்கியது. ஹைதராபாத்தில் அப்படியொரு நிலை இல்லாததால் ஆர்.எஸ்.எஸ் கும்பல் மாணவர் ரோகித்தை படுகொலை செய்துள்ளது. இன்றைக்கு கல்லூரி மாணவர்களை திரட்டவிடாமல் போலீசார் இன்னொரு ரோகித்தை உருவாக்கும் வகையில் மாணவர்களை வெளியில் விட அனுமதிக்கவில்லை. பிறகெப்படி மாணவர்களுக்கு நீதி கிடைக்கும்? இதை முறியடிக்க தமிழகம் முழுதும் RSYF தொடர்ந்து போராடும். இன்னொரு ரோகித்தை இழக்கக்கூடாது என்றால் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி கும்பல் இந்தியாவில் இருக்கக்கூடாது. அதனை வேரறுப்போம்” என பேசினார்.

rohit-vemula-suicide-rsyf-protest-12மேலும் பகிரங்கமாக, “ஆர்.எஸ்.எஸ் பர்ப்பன பயங்கரவாத கும்பலின் முதன்மை எதிரி எங்களை போன்ற புரட்சிகர அமைப்புகளும், கம்யூனிஸ்டு, கடவுள் எதிர்ப்பு அமைப்புகளும்தான்” என தெரிவித்தார். தோழர்கள் எழுப்பிய தொடர்ச்சியான முழக்கங்களுக்கிடையே சுமார் 40க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்தது போலீசு.

முழக்கங்கள்:

தற்கொலையல்ல! தற்கொலையல்ல!
ரோகித் மரணம் தற்கொலையல்ல!
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி
ஏ.பி.வி.பி கும்பலின்
திட்டமிட்ட படுகொலையே!

rohit-vemula-suicide-rsyf-protest-05விடமாட்டோம்! விடமாட்டோம்!
RSS காலிகளை
ABVP ரவுடிகளை
BJP காலிகளை
விடமாட்டோம்! விடமாட்டோம்!

வேரறுப்போம்! வேரறுப்போம்!
ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி
பார்ப்பன பாசிச கும்பலை
வேரறுப்போம்! வேரறுப்போம்!

தலித் மாணவரை கொன்று குவித்து
அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பை
தாக்குதல் நடத்தி அடக்கிஒடுக்கி
ஆர்.எஸ்.எஸ் ஆக்கிரமிக்குது!
ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி

பார்ப்பன பயங்கரவாத கும்பல்
நாடெங்கும் வெறியாட்டம் போடுது!
குஜராத் முசுலீம்களை கொன்றுகுவித்து
முசாஃபார்நகரில் கலவரம் நடத்தி
கல்புர்கியை கொலைசெய்த
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பலை
நாட்டிலிருந்து விரட்டியடிப்போம்!
வேரோடு அறுத்தெறிவோம்!

வினவு செய்தியாளர்கள், சென்னை.

2. விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் பு.மா.இ.மு கண்டன பிரச்சாரம்

rohit-vemula-virudhai-rsyf-poster

  • ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை
  • மாணவர் தற்கொலைக்கு காரணமான துணைவேந்தர் அப்பாராவ், மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி இராணி உள்ளிட்டவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையிலடை!
  • மாணவரை தற்கொலைக்குத் தள்ளிய BJP – ABVP ஜாதிவெறி, பாசிச குண்டர் படையை புறக்கணிப்போம்!
  • தலித்துகள் மீதான வன்கொடுமைகளை தகர்த்தெறிய புரட்சிப் பாதையில் இறங்குவோம்!

என்ற முழக்கங்களுடன் ரோகித் வெமுலா தற்கொலையை கண்டித்து மாணவர்கள் மத்தியில் துண்டு பிரசுரம் வினியோகித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF),
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 96006 32017

தலித்துக்கள் முசுலீம்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு – காரணம் என்ன?

4

sinam intro 4ட இந்திய மாநிலங்களில் கடந்த பத்தாண்டுகளில் தலித்துகளின் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் பல மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஹரியானாவைச் சுற்றியுள்ள ஜாட், ரஜபுத், தாக்கூர் சாதிகளின் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் சமீப வருடங்களாக தலித்துகளின் மீதான தாக்குதல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருக்கின்றது. ஆகஸ்டு 2014-ம் ஆண்டு தேசிய குற்றப் பதிவுத் துறையின் தரவுகளை, தலித் அமைப்புகளின் கூட்டமைப்பு (National Confederation of Dalit Organizations) ஆய்வு செய்திருக்கிறது.

ஆய்வின்படி 1994-2003 காலட்டத்தில் தலித்துகளுக்கு எதிராக நடந்த குற்றச் சம்பவங்களை 2004-2013 காலகட்டத்தில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு சுமார் 250 சதவீதம் அதிகரித்திருப்பதை பதிவு செய்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு, அக்டோபர் மாத நிலவரத்தின் படி, தேசிய குற்றப் பதிவுத் துறையின் (National Crime Records Bureau) தரவுகளின் அடிப்படையில் 2000-மாவது ஆண்டிலிருந்து சுமார் பதினைந்து ஆண்டுகளில் தலித்துகளின் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் ஏழு மடங்காக அதிகரித்துள்ளன. 2000-மாவது ஆண்டில் சுமார் 117 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன – இது படிப்படியாக அதிகரித்து, 2014-ம் ஆண்டில் 830 தாக்குதல் சம்பவங்களாக அதிகரித்துள்ளது.

bihar election (1)தலித்துகளின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ள அதே வேளையில் இசுலாமியர்களுக்கு எதிரான கலவரங்களும் சமீப காலங்களில் அதிகரித்துள்ளன. சில பத்தாயிரக்கணக்கான இசுலாமியர்களை அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடித்த முசாபர்நகர் கலவரத்தைத் தொடர்ந்து இந்தி பேசும் மாநிலங்களில் இசுலாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து அங்கும் இங்குமாக சிறிய அளவிலான கலவரங்கள் மற்றும் தனிநபர் கொலைகள் நடந்து வருகின்றன. இச்சம்பவங்கள் தொடர்வது இசுலாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே ஆழமான ஒரு கசப்புணர்வைத் தொடர்ந்து உயிர்ப்போடு வைத்துள்ளது. அதன் உச்சமாக நடந்தது தான் தாத்ரி சம்பவம்.

தலித்துகள் மற்றும் இசுலாமியர்களின் மீதான வன்முறைத் தாக்குதல்கள் சமீப காலங்களில் அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்?

பார்ப்பனிய சாதிக் கொழுப்பேறிய வட இந்திய மாநிலங்களில் தலித்துகளின் வாழ்நிலை இன்னமும் மத்திய காலக் கொடுங்கோன்மையை நினைவுபடுத்துகிறது. தலித் ஒடுக்குமுறை என்பது வட இந்திய சமூக உளவியலில் மிக இயல்பான அன்றாட சமூக வாழ்வியல் கூறு. இந்நிலையில் பாரதிய ஜனதா ஆட்சி என்பது ஏற்கனவே கிறுக்குப் பிடித்த சாதி மத வெறி பிடித்த இந்துத்துவ குரங்கு, சாராயம் குடித்த நிலையை அடைந்துள்ளது. தலித்துகளின் கோவில் நுழைவு உரிமை, திருமண உரிமை மற்றும் பிற ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் தற்போது ஒரு புதிய வேகத்தில் கட்டவிழ்த்து விடப்படுகின்றது.

beef politics (6)இசுலாமியர்களையும் தலித்துகளையும் குறிவைக்க ஒவ்வொரு காலத்திலும் விதவிதமான பிரச்சினைகளைக் கையிலெடுக்கும் இந்துத்துவ அரசியல் தற்போது மாட்டுக்கறி விவகாரத்தை வாளாக ஏந்திச் சுழற்றுகிறது. கல்லறைக்குள் ஆழ்ந்து போன அயோத்தி கோயிலும், பொது சிவில் சட்டமும் உயிர்த்தெழ மறுப்பதால் தற்போதைய இந்துத்துவ அரசியலின் நிகழ்ச்சி நிரலில் கோமாதாவே முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது.

சமீப காலமாக மாட்டுக்கறி விவகாரம் அகில இந்திய பார்ப்பன ஊடகங்களின் முக்கியமான பேசு பொருளாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருந்த பீகாரை மையமாக வைத்து இந்த விவாதம் நடத்தப்பட்டது. முதலாளிய மற்றும் பார்ப்பன ஊடகங்கள் இந்த விவாதங்களை தேர்தலை மட்டும் கருப்பொருளாக கொண்டு விவாதித்து வந்த நிலையில், இந்துத்துவ ’கோமாதா’ அரசியலின் நோக்கமோ தேர்தலையும் தாண்டிய நலன்களை தன்னுள் கொண்டிந்தது.

தாத்ரி கொலை குறித்து அகில உலகமும் காறி உமிழ்ந்த போதும் அதைக் குறித்து வாயைத் திறக்க மறுத்து விட்ட நரேந்திர மோடி, மிகச் சரியாக பீகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதற்கொரு விளக்கத்தை அளித்தார். மேற்படி விளக்கத்தில் கொலைக்கான அடிப்படைக் காரணத்தை ஆதரித்திருந்த மோடி, அதையே தனது பீகார் பிரச்சாரங்களின் முக்கிய கருப்பொருளாக மாற்றினார். தேர்தல் முடிவுகள் காவி பயங்கரவாதிகளின் பகற் கனவில் மண்ணள்ளிப் போட்டு விட்டாலும், இந்துமதவெறியின் ஒடுக்குமுறை முடிவுக்கு வந்ததாக பொருளில்லை.

beef politics (5)“தேசத்தை எதிர் கொண்டிருக்கும் இசுலாமிய தீவிரவாதம்” என்கிற பூச்சாண்டியை பதவியேற்று ஒரு வருடத்திற்குப் பின்னும் ஓட்ட முடியாத நிலையில் இந்துத்துவ அரசியல் தேவைகளுக்கு கடந்த நூற்றாண்டில் பெரும் சேவையாற்றிய ராமர் கோயில் பிரச்சினை அந்த நூற்றாண்டின் இறுதியிலேயே சற்று பலவீனமடைந்து விழுந்து விட்டது. இந்நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற மோடி, அவரது முதல் இரண்டு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பீகாரிகள் குறித்து உளறிக் கொட்டியதை லாலுவும், நிதிஷ் குமாரும் பீகாரிகளின் தன்மானத்திற்கே விடப்பட்ட சவாலாக முன்வைத்து அசிங்கப்படுத்தினர்.

பிரச்சார கூட்டங்களை மோடியின் அடுக்குமொழி சவடால் வசனங்களாலேயே ஊதித் தள்ளி விடலாம் என்ற மிதப்பிலிருந்த இந்துத்துவ கும்பலுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி வைத்தியமளித்தார் லாலு. தாம் ராகுல் காந்தியைப் போன்ற அமுல் பேபிகள் இல்லை என்பதையும் வாய்வீச்சில் தாங்களும் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் தான் என்பதையும் லாலுவும் நிதிஷும் முகத்திலறைந்தாற் போல் உணர்த்தினர். இந்தப் பின்னணியில் தான் சொல்லி வைத்தாற் போல் தாத்ரி சம்பவமும் அதைத் தொடர்ந்து பார்ப்பன மற்றும் முதலாளிய பத்திரிகைளில் நடக்கும் “விவாதங்களும்” அரங்கேறின.

தனது முந்தைய பிரச்சாரக் கூட்டமொன்றில் மாட்டுக்கறி தின்றார் என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து முகமது அக்லாக்கை இந்துத்துவ கும்பல் அடித்தே கொன்றதைக் கண்டித்துப் பேசிய லாலுபிரசாத் யாதவ், மாட்டுக்கறி இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல சில இந்துக்களுக்கும் கூட உணவு தான் என்று பேசியிருந்தார். இதை அப்படியே மடைமாற்றிய மோடி, நாட்டின் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட யதுகுலத்தவர்கள் மாடு தின்பவர்கள் என்று லாலு பேசியதாக திரித்தார்.

Carcasses de veau dans le pavillon des viandes de boucherie du marché international de Rungis (Val-de-Marne, France)லாலுவின் தலை மயிரிலிருந்து மோடி பிடித்துக் கொடுத்த ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கும் வேலையை பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சியினர் செவ்வனே செய்து முடித்தனர். மத்திய அமைச்சர் கிரிராஜ், ”நித்திஷிடம் மாட்டுக்கறி உள்ளதாம்” என்றும் “யது குலத்தவர்களே… லாலு உங்களைப் பார்த்து துர்க்கா மாதா கோவிலில் மாட்டுக்கறியை வீசச் சொல்கிறார்” என்றும் பேசியிருக்கிறார்.

இசுலாமியர்களை இந்துக்களின் விரோதிகளாக காட்டுவது, அதனடிப்படையில் இந்து ஓட்டுக்களை அறுவடை செய்வது என்கிற இந்துத்துவ அரசியல் தந்திரத்திற்கு பீகார் தேர்தல் முடிவுகள் ஆப்பறைந்துள்ளன. எனினும், மாட்டுக்கறி அரசியலைத் தாம் விரும்பும் நேரத்தில் விரும்பும் இடத்தில் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்கிற நம்பிக்கையை இந்துத்துவ கும்பல் அடைந்துள்ளது. பீகார் தேர்தல் தோல்விக்கு அப்பால், தமது நச்சுப்பிரச்சாரங்களின் மூலம் வட இந்திய பார்ப்பன இந்துப் பொது புத்தியில் மாட்டின் புனிதத்தை பதிய வைத்துள்ளதோடு, இசுலாமியர்கள் இந்துக்களின் புனித நம்பிக்கைகளுக்கு விரோதமானவர்கள் என்பதையும் பதிவு செய்துள்ளனர்.

கோமாதா அரசியலின் அரசியல் உள்நோக்கம் ஆர்.எஸ்.எஸ் விரும்பும் இராம இராஜ்ஜியத்தின் பார்ப்பன கலாச்சார விழுமியங்களை ஒட்டு மொத்த சமூகத்தின் பொதுக்கலாச்சாரமாக நிறுவும் நரித்தனம். இதற்காகவே இந்து மதத்தின் பல்வேறு சாதிப் பிரிவினர் மாட்டுக்கறி தின்பவர்கள் என்பதை மறைக்கிறார்கள். இன்றும் சில பகுதிகளில் இந்துக்கள் மாட்டை கோயிலில் பலியிட்டு விருந்துண்கிறார்கள் . மட்டுமின்றி மாட்டுக்கறி கசாப்புத் தொழிலில் பல்வேறு ’உயர்சாதி’ பனியா முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பது பற்றியும் இந்துத்துவ கும்பல் வாய்திறக்க மறுக்கிறது.

bihar-elections-hundutva-defusedஅமெரிக்க விவசாயத் துறை நடத்திய ஆய்வு ஒன்றிபடி, 2012-ம் ஆண்டு இந்தியாவின் மொத்த மாட்டுக்கறி உற்பத்தி 36.43 லட்சம் டன்கள். இதில் 19.63 லட்சம் டன்களை இந்தியர்களே உட்கொள்கின்றனர். இந்தியா உலகிலேயே ஐந்தாவது பெரிய மாட்டுக்கறி உற்பத்தி செய்யும் நாடு என்பதோடு, உலகின் மாட்டுக்கறி உட்கொள்ளும் அளவைப் பொறுத்தவரை உலகில் 7-வது இடத்திலும் இருக்கிறோம். மேலும் மாட்டுக்கறி ஏற்றுமதியைப் பொறுத்த வரை இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்று.

ஃபிக்கி (Federation of Indian Chambers of Commerce and Industry) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, இந்தியாவின் குறிப்பிட்ட மாநிலம் ஒன்றிலிருந்து 2001-2002 காலகட்டத்தில் 20,600 டன்களாக இருந்த மாட்டுக்கறி ஏற்றுமதி பத்தே ஆண்டுகளில் இரண்டு மடங்காகி 2010-2011 காலகட்டத்தில் 22,000 டன்களாக உயர்ந்துள்ளது. இந்த இமாலய சாதனையைப் புரிந்த மாநிலம் குஜராத் – அதுவும் கோமாதாவின் புதல்வன் மோடியின் ஆட்சிக் காலத்தில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.

மாட்டுக்கறி வெட்டும் கூடங்கள் அதிகமிருக்கும் மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. குஜராத்தில் மட்டும் சுமார் 39 மாடு வெட்டும் கூடங்களில் நாளொன்றுக்கு சுமார் 1000 கோமாதாக்கள் கொல்லப்படுகின்றன. இதே காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த மாட்டுக்கறி உற்பத்தி 18,59,430 டன்களில் இருந்து 48,69,000 டன்களாக – அதாவது சுமார் 163 சதவீத உயர்வை அடைந்துள்ளது.

beef politics (4)புனித கோமாதாவை கூறு கூறாக பிளந்து அவளின் புனிதமான இறைச்சியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் முதலாளிகளில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் என்கின்றன புள்ளி விவரங்கள். முசாபர்நகரில் மாட்டுக்கறியை வைத்து பெரும் கலவரத்தை ஏற்படுத்தியதற்குப் பின் இருந்த மூளையான பாரதிய ஜனதா எம்.எல்.ஏ சங்கீத் சோம், மாட்டுக்கறி ஏற்றுமதியில் சக்கை போடு போட்டு வரும் அல்-துவா மற்றும் அல்-அனாம் என்ற இரண்டு நிறுவனங்களில் பங்குதாரராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து கோமாதா கறியை ஏற்றுமதி செய்யும் ஆறு முன்னணி நிறுவனங்களில் நான்கு நிறுவன்ங்கள் (அல்-கபீர், அல்-அரேபியா, எம்.கே.ஆர், பி.எம்.எல்) இந்து முதலாளிகளுடையது. இவை தவிர சிறிதும் பெரிதுமாக மாட்டுக்கறி ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள இந்து முதலாளிகளுடைய நிறுவனங்களின் பெயர்கள் மட்டும் இசுலாமிய சாயலில் இருக்கின்றன.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் இந்துக் கோயில்களில் மாட்டை பலியிட்டு விருந்து வைப்பது இன்றும் சாதாரணமாக நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் பீற்றிக் கொண்ட உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தில் கதிமாயி பண்டிகையின் போது மட்டும் சுமார் இரண்டரை லட்சம் மாடுகள் பலியிடப்படுகின்றன. ஆக, மாட்டுக்கறி உணவாக இசுலாமியர்களும் சூத்திர இந்துக்களும் பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில், அதன் ஏற்றுமதியில் கொள்ளை லாபம் அடிப்பவர்களோ உயர்சாதி இந்துக்கள்.

beef politics (1)தேசத்தை பூசிக்கும் கடவுளாகவும், அதன் குறுக்கே ஓடும் நதிகளைப் புண்ணிய தீர்த்தங்களாகவும் பீற்றிக் கொள்ளும் பாரதிய ஜனதா தான் தேசத்தின் பொதுச் சொத்துக்களையும் அதன் ஆறு குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்களைத் உள்நாட்டுத் தரகு முதலாளிகள் மற்றும் ’மிலேச்ச’ பன்னாட்டுக் கம்பேனிகளுக்கும் பட்டா போட்டுக் கொடுக்கிறது. எவற்றையெல்லாம் புனிதம் என்று சொல்லி சிவில் சமூகத்தைப் பிளப்பதற்குப் பயன்படுத்துகிறார்களோ, அவற்றின் புனிதத்தை அவர்களே கெண்டைக்கால் மயிரளவுக்கும் மதிப்பதில்லை.

நேற்று அயோத்தியையும் பொது சிவில் சட்டத்தையும் பற்றிக் கொண்டிருந்தார்கள், இன்று கோமாதாவையும் லவ் ஜிஹாத்தையும் கையிலெடுத்துள்ளார்கள், நாளை புதிதாக வேறொன்றை இறக்குவார்கள் – ஆனால், என்றென்றைக்கும் அவர்கள் எடுக்கும் ஆயுதங்களுக்குப் பலியாகப் போவது உழைக்கும் மக்கள் தான். வளர்ச்சி, முன்னேற்றம், முதலீடு என்கிற ஒப்பனைகளை அவர்கள் எப்போதோ கலைத்து விட்டார்கள், உண்மை நமக்கு எதிரே தான் நிற்கிறது. நாம் உணர்ந்து கொள்வதும் எதிர்வினையாற்றுவம் மட்டும் தான் பாக்கியிருக்கிறது.

–    தமிழரசன்

செய்தி ஆதாரங்கள்:

திருநாள் கொண்டச்சேரி வன்கொடுமை – நேரடி ரிப்போர்ட்

2

திருநாள் கொண்டச்சேரி வன்கொடுமை

நாகை மாவட்டம் குத்தாலம் வட்டம் வழுவூர் ஊராட்சியைச் சேர்ந்த திருநாள் கொண்டச்சேரியிலும், மேலத்தெரு, வடக்குத் தெருக்களிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இருநூறு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தாய் திட்டம் போன்ற அரசின் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ள வழுவூர் ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகள் திட்டமிட்டே புறக்கணிக்கப் பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனிச்சுடுகாடு கூட கிடையாது. மக்கள் வாழும் பகுதியிலிருந்து மூன்றரை கி.மீ தொலைவில் உள்ள மகிமலை ஆற்றில்கரையில்தான் பிணங்களை அடக்கம் செய்ய வேண்டும். காலனி வீட்டின் அகலம் கூட இல்லாத ஆற்றின் கரையில் ஒற்றையடிப் பாதையில் சிறு வாய்க்கால்களைக் கடந்து சென்று பிணங்களை நல்லடக்கம் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் சேற்றில்தான் நடந்து செல்ல வேண்டும்.

சுடுகாட்டுக்குச் செல்ல ஒற்றையடிப்பாதை

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இப்பகுதியைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் “அருகாமையில் இடுகாடு வேண்டும். இடுகாட்டுக்குச் செல்ல முறையான பாதை வேண்டும்” என்று கோரிக்கை வைத்து நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர். 2002-ல் வழுவூர் வீரட்டேஸ்வரர், கோயில் நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறை விலைக்கு வாங்கி ஊராட்சியிடம் கொடுத்த பின்னும் இதுவரை முறையான சாலை அமைக்கப்படவில்லை. ஊருக்கு அருகில் வீரட்டேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான களத்துமேட்டுப் பகுதியில் இடுகாடு வேண்டும் என்ற தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைக்கு செவி கொடுக்க நாதி இல்லை. பாதைக்காக விலைக்கு வாங்கப்பட்ட இடத்தை ஆதிக்க சாதி நில உடமையாளர்கள் ஆக்ரமித்துப் பயிர்செய்து சிறு வரப்பாக்கியுள்ளனர்.

முதலமைச்சர் ‘அம்மா’வின் அறிவிப்புகளைப் போலவே 2 இலட்சம் ரூபாயில் சாலை என்ற கிரமப்புற மேம்பாட்டு அறிவிப்பும் காகிதத்திலும், கணிப்பொறியிலும்தான் உள்ளது.

பு.மா.இ.மு கண்டன சுவரொட்டி
பு.மா.இ.மு கண்டன சுவரொட்டி

பன்னெடுங்காலமாய் அடிமைப்பட்டு வாழ்ந்த மக்கள் மத்தியில் காலம் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இளைஞர்களால் தொடங்கப்பட்ட கபாடி விளையாட்டுக் குழு, ஆதிக்க சாதியினரின் கண்களை உறுத்தி அச்சுறுத்தலுக்கு உள்ளானது. தவிர்க்க இயலாத சிறு சிறு மோதல்களுடன் தொடங்கிய போராட்டம் தன் இயல்பில் வளர்ந்து வழிபாட்டுரிமை போராட்டமாக முதிர்ச்சி பெற்றது.

தாழ்த்தப்பட்ட மக்களின் குல தெய்வமான பொன்னம்மா காளியை மக்கள் சூலம் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். 2012-ல் கோயில் கட்டுவது என முடிவெடுத்து, ஐம்பதாயிரம் ரூபாய் வசூல் செய்து நல்லப்பன் நீலகண்ட சிவா என்பவரிடம் கொடுத்துக் கோயில் கட்டியுள்ளனர். கோயில் கட்டித் தந்தவருக்கு நன்றி கல்வெட்டும் பதித்துள்ளனர். ஊர்ப் பொது வழக்கப்படி வீரட்டேஸ்வரர் கோயில் குளத்திலிருந்து கரகம் எடுத்துவரச் சென்றபோது ஆதிக்க சாதியினர் எதிர்த்து தடுத்தனர். சட்டவாத நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு பலன் இன்றி சுற்றுவட்டார பகுதி மக்கள் 1000 பேருக்கு மேல் அணிதிரட்டப்பட்டு கரகம் எடுக்கப்பட்டது. தொடர் போராட்டங்களின் மூலம் வீரட்டேஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூசை செய்யும் உரிமையையும் நிலைநாட்டினர்.

மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மதமாற்றம் தீர்வல்ல என்பதை நன்கு உணர்ந்திருந்தாலும் உரிமைகளை நிலைநாட்ட மதம் மாறுவதை ஒரு போராட்டமாகத் தற்போது கருதுகின்றனர். அம்பேத்கர் கூறியது போல பவுத்தமதத்தைத் தேர்வு செய்தால் இந்து மதத்தின் உட்பிரிவாக்கிக் கொண்டு ஒடுக்குவார்கள். எனவே கிறித்தவத்திற்கோ, இஸ்லாத்திற்கோ மாறலாம் என்ற கருத்தை இளைஞர்கள் வெளிப்படுத்துகின்றனர். இஸ்லாமிய, கிருத்தவ தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் படையெடுப்புக்குத் திருநாள் கொண்டச்சேரியும் சுற்றுவட்டாரப் பகுதிகளும் இலக்காகி உள்ளது. என்ன இருந்தாலும் ‘தாய்மத’த்தை விட்டுச்செல்லக்கூடாது என்றாவது ஒருநாள் மனமிறங்கி இராமகோபாலர்களும், இல.கணேசன்களும் வருவார்கள் என்று ஏக்கத்தில் சிலர் உள்ளனர்.

பொன்னம்மா காளியிடம் வேண்டிக்கொண்ட பிறகு பிறந்தவர் வன்னியர் சாதியைச் சார்ந்த குமார். குமார் குடும்பம் இப்போதும் பொன்னம்மா காளிக்கு நேர்த்திக்கடன் செலுத்திவருகிறது. வன்னியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் தவிர வெள்ளாளர்கள், செட்டியார்கள், கோனார்கள், இசைவேளார்கள் சமூகத்தைச் சார்ந்த 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர். அனைவரும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் நெருக்கமாகவே உள்ளனர் என்றாலும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு அஞ்சியே வாழ்கின்றனர். பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் இவ்வூரைச் சேர்ந்தவர். இசைக் கலைஞரான தனது தந்தை இராமையா பிள்ளைக்கு நினைவு இல்லம் கட்ட முயற்சித்து ஆதிக்க சாதி வெறியர்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி ஒதுங்கிக் கொண்டதாக மக்கள் கூறுகின்றனர்.

வன்னியர்கள் உட்பட அனைவரும் வன்னிய சமூகத்தைச் சாராய ரவுடி வி.ஜி.கலியபெருமாள் குடும்பத்தைக் கண்டு அஞ்சுகின்றனர். சாராய ரவுடி வி.ஜி.கலியபெருமாள் சொந்த சாதிக்காரர்களாலேயே கொல்லப் படுகிறான். அடுத்தடுத்து நடைபெற்ற தாக்குதல்கள் கொலைகள் மக்களுக்கு அச்சத்தையூட்டியுள்ளது. கலியபெருமாள் மகன்கள் வி.ஜி.கே மணி வன்னியர் சங்கத்திலும் செந்தில் அ.தி.மு.க.விலும் இருந்து கொண்டு ஆட்டம் போடுகின்றனர். சாதி அபிமானத்தை சுயநலத்திற்குப் பயன்படுத்தி மக்களை பிளவுபடுத்துகின்றனர். குத்தாலம் ஒன்றியப் பெருந்தலைவர் தமிழரசன், பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் என்ற வலைப்பின்னலில் சாதி ஆதிக்கம் பகுதியில் கொடிகட்டிப் பறக்கிறது.

தொடக்கத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒ.எஸ்.மணியனும் தொடர்ந்து அமைச்சர் ஜெயபாலும் வன்னியசாதி வெறிக்கு உரமிட்டு வளர்த்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி வன்னியர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர். அமைச்சர் ஜெயபாலுக்கு நேர்முக உதவியாளராகப் பணியாற்றுபவர் என்று நாகை மாவட்ட மக்கள் கருதுகின்றனர். 17-01-2015 அன்று நடைபெற்ற திருவாடுதுறை மோதல் சம்பவத்தைப் போல மயிலாடுதுறை சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான சம்பவங்களைத் தாழ்த்தப்பட்ட மக்கள் பட்டியலிட்டுச் சொல்லுகின்றனர். பா.ம.க.வும் வன்னிய சாதி வெறியர்களும், தேர்தலுக்காகத் திட்டமிட்டு சாதிக்கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் மயிலாடுதுறை பகுதி சமூக ஆர்வலர்களிடம் வலுவாக உள்ளது.

செல்லமுத்து, குஞ்சம்மாள்
அடக்கம் செய்யப்பட்ட இடம் (இளநீர் வைக்கப்பட்டுள்ள இடம் செல்லமுத்து அடக்கம் செய்யப்பட்ட இடம்)

இனி நாம் திருநாள் கொண்டச்சேரி சம்பவத்திற்கு வருவோம். 26-11-2015 அன்று குஞ்சம்மாள் என்ற என்பது வயதைக் கடந்த மூதாட்டி இயற்கை எய்தியுள்ளார். ஊரே வெள்ளக்காடாக இருந்த நேரம் அது. குஞ்சம்மாள் சடலத்தைப் பொதுப்பாதையில் எடுத்துச்செல்ல முயற்சிக்கின்றனர், ஆதிக்க சாதியினர் தடுக்கின்றனர். குஞ்சம்மாளின் பேரன் கார்த்திக் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் அணுகி புகார் கொடுக்கிறார். பேச்சுவார்த்தை என்ற பெயரில் மூன்று நாள் கடக்கிறது. பிணம் அழுகிக்கொண்டிருந்த நிலையில் “சடலத்தை வயல்வெளி வழியாக எடுத்துச் செல்லுங்கள்; இல்லையேல் நாங்களே அடக்கம் செய்வோம்” என்று தாழ்த்தப்பட்ட மக்களை நிர்பந்திக்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் நிலையில் உறுதியாக நின்ற சூழலில் 29-11-2015 அன்று உள்ளாட்சி ஊழியர்கள் மூலம் பிணம் எடுத்துச் செல்லப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் வயல்வெளி வழியாகச் சென்று அடக்கம் செய்யப்படுகிறது.

செல்லமுத்து சடலம் இருந்த வீடு
செல்லமுத்து சடலம் இருந்த வீடு

அடுத்த ஒரு மாதத்தில் 90 வயதைக் கடந்த குஞ்சம்மாளின் கணவர் செல்லமுத்து 03-01-2016 அன்று இயற்கை எய்துகிறார். பேரன் கார்த்தி இரவோடு இரவாக சென்னை சென்று உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். 04-01-2016 அன்று நீதிமன்றம் “பொதுப்பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்லமுத்துவின் சடலம் கவுரவமாக அடக்கம் செய்யப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தி உத்தரவிட்டுள்ளது.

அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு மாறாக, தாழ்த்தப்பட்ட மக்களை வயல்வெளி வழியாக எடுத்துச் செல்ல வற்புறுத்தியுள்ளனர். அவசர கோலத்தில் வயல்வெளியில் பாதை ஏற்படுத்தி உள்ளனர். வாய்க்கால்களில் மண்மூட்டைகளை அடுக்கி, சாலைகளை இணைத்துள்ளனர். தங்கள் நிலையில் உறுதியாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லமுத்து சடலம் வைத்துள்ள வீட்டில் ஒன்று குவிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மண்மூட்டை ரோடு
மண்மூட்டை ரோடு

இந்நிலையில் மின்சாரத்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தி பகுதிக்கு மின் தொடர்பை துண்டித்துள்ளனர். “ஊரில் சாவு மின்தொடர்பை துண்டிக்கக் கூடாது” என்று கடைநிலை ஊழியர்கள் அதிகாரிகளிடம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். “மேலிட உத்தரவு அமல்படுத்துங்கள்” என்று கடைநிலை ஊழியர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். தங்களது இயலாமையையும், கையறு நிலையையும் கண்கலங்கியபடியும், தயக்கத்துடனும் மின்துறை ஊழியர்கள் வெளிப்படுத்தினர். திருநாள் கொண்டச்சேரி வன்கொடுமை சம்பவத்தில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் பட்டியலில் மின்வாரிய அதிகாரிகளையும் இணைக்கப்படவேண்டும்.

குளிர்சாதனப் பெட்டி செயல்படாமல் பிணம் அழுகத் தொடங்குகிறது. ஆகையால் அங்கிருந்த இளைஞர்கள் ஐஸ்கட்டிகளை வாங்கி வந்து சடலத்தைப் பாதுகாத்துள்ளனர். “இங்கேயே மண்ணெண்ணெய் ஊற்றி எறிக்கிறோம். நாங்களும் அதிலேயே விழுந்து சாகிறோம்” என்று பெண்கள் மண்ணெண்ணெயுடன் களத்தில் இறங்கியுள்ளனர். செல்லமுத்து சடலம் இருந்த இடத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு மக்கள் விரட்டப்பட்டுள்ளனர். மேலத்தெரு, வடக்குத்தெரு மற்றும் பிற பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. சமூக ஆர்வலர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

வயல் வழியே சடலத்தை எடுத்துச் செல்லும் காவல்துறை
வயல் வழியே செல்லமுத்துவின் சடலத்தை எடுத்துச் செல்லும் காவல்துறை

நிலைமை கட்டுமீறவே மக்களிடம் பொதுப்பாதை வழியாக அழைத்துச் செல்வதாக வாக்குறுதி கொடுத்து சாலை பிரியும் இடத்தில் தடிஅடி நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களைக் கைது செய்து சடலத்தைக் கைப்பற்றி வயல்வழியே எடுத்துச் சென்றது காவல்துறை. திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், தேவர் – இமானுவேல் குருபூசை பாதுகாப்பு புகழ் ஜெயசந்திரன் காவல் துறையினரைப் பிணம் தூக்க வைத்து சாதனை படைத்துள்ளார். குஞ்சம்மாள் சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே செல்லமுத்துவின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது.

500-க்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டு மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் செய்து சம்பவத்தை வெளியுலகிற்கு அறிவித்தனர். மயிலாடுதுறையிலும், திருவாரூலும் சமூக ஆர்வலர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் தமிழகத்தில் நிலவிய கள்ள மௌனத்தைக் கலைத்துப் பொது விவாதத்தைத் தூண்டியுள்ளது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைத் தலைவர் பி.எல்.புனியா திருநாள் கொண்டச்சேரிக்கு வந்து விசாரித்து “பெரியார் பிறந்த, சமூகநீதி கருத்துகள் பிரச்சாரமாகியுள்ள மண்ணில் இத்தகைய சம்பவம் துரதிரஷ்டவசமானது” என்று கருத்து வெளியிட்டு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளார்.

செல்லமுத்து சடலத்தைப் புதைத்தவுடன் ஆதிக்கசாதி வெறியர்கள் வெடிவைத்து மகிழ்ந்தனர். குஞ்சம்மாள், செல்லமுத்துவின் உடல்களைப் புதைத்திருக்கலாம் அது முடிவல்ல.

தேர்தல் புறக்கணிப்பு வரை பலவகையான போராட்டங்களைத் திருநாள் கொண்டச்சேரி மக்கள் நடத்தியுள்ளனர். இந்த அரசு கட்டமைப்பு தங்களுக்கானதல்ல என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளனர். அதனைத் தகர்ப்பதற்கான போராட்டத்தில்தான் சாதிக்கு சவக்குழி வெட்டிப் புதைக்கவும், பார்ப்பனியத்தை ஒழித்துக் கட்டவும் முடியும் என்பது அவர்களுக்குப் புரியத் தொடங்கியுள்ளது.

– வினவு செய்தியாளர்

ரோகித் வெமுலா தற்கொலை: பி.ஜே.பி – ஏ.பி.வி.பியின் பச்சைப்படுகொலை !

0

ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை: ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., ஏ.பி.வி.பியின் பச்சைப்படுகொலையே!

rohit-vemula-suicide-hindutva-murder-poster-3

“ஹைதராபாத் பல்கலைக் கழகம், அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., ஏ.பி.வி.பியின் பச்சைப்படுகொலையே!” என்பதை வலியுறுத்தியும், அதற்கு காரணமான மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிரிதி இரானி மற்றும் துணைவேந்தர் அப்பாராவை கைது செய்யக் கோரியும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பாக 21-01-2016 அன்று காலை 11.30 மணி அளவில் சென்னை அண்ணாசாலை அஞ்சல் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

rohit-vemula-suicide-hindutva-murder-banner

பார்ப்பனிய பாசிசத்திற்கெதிராய் ஜனநாயக, முற்போக்கு சக்திகள் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அறைகூவி அழைக்கிறோம்!

rohit-vemula-suicide-hindutva-murder-poster-1

ரோகித் வெமுலா தற்கொலை: RSS, BJP, ABVP யின் பச்சைப்படுகொலையே!

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 21-01-2016
இடம்: அண்ணா சாலை அஞ்சல்நிலையம் எதிரில்

rohit-vemula-suicide-hindutva-murder-poster-2

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை.

கிரிமினல்களுக்கு அபயமளிக்கும் காஞ்சி வழக்கறுத்தீஸ்வரன் – நேரடி ரிப்போர்ட்

11

தமிழகத்தில் ‘திடீர் சாம்பார், திடீர் புளியோதரை’ கணக்கில் பிரபலமாகும் சினிமா நடிகர்களுக்கு போட்டியாக திடீர் கோவில்களும் உண்டு.  அப்படித்தான் காஞ்சிபுரத்தில் வழக்கு தீர்த்த ஈசன் என்றழைக்கப்படும் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தமிழக பக்தர்களின் திடீர் புன்ணியஸ்தலமாகிவிட்டது. பொறுக்கி பாடல் பாடிய நடிகர் சிம்பு தனது பொறுக்கித்தனத்தை மெயின்டைன் செய்ய உதவி கேட்டது மேற்படி புண்ணியஸ்தலத்தல்தான். ஆம் இங்கேதான் எல்லா பக்தர்களின் பிரச்சினைகளும் அவர்கள் கிரிமினல்களாகவே இருந்தாலும் தீர்க்கப்படுகிறது என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

திருமுறைப் பாடல் பெற்ற சைவ திருக்கோவில்கள் 1028, மங்கள சாசனம் பெற்ற வைணவ 168 கோவில்கள் நிறைந்துள்ள காஞ்சியில் பீப் பாடலால் புகழ் பெற்று தன்னிகரற்ற ஸ்தலமாக திகழ்கிறது இந்த புண்ணியஸ்தலம்.IMG_3139

தமிழகத்தின் வரலாறு காணாத வெள்ளத்தை அடித்து சென்ற இந்த பொறுக்கி பாடலின் நாயகனை பெற்றெடுத்த டி.ராஜேந்தரின் காலடி பட்டு தமிழகத்தின் திடீர் கதாநாயகானாக வலம் வருகிறார் வழக்கறுத்தீஸ்வரர்.

அந்த புன்ணிய ஸ்தலத்திற்குள் நாமும் காலடி எடுத்து வைத்தோம். அந்த முகூர்த்த நேரத்தில் கண்டு கேட்ட காட்சிகளை வினவு வாசகர்களுக்கு தருகிறோம்.

காஞ்சிபுரம் நகரின் மையத்தில் மூங்கில் மண்டபத்திற்கு அருகில் பிரதான காந்தி சாலையின் தென்புறத்தில் அமைந்துள்ளது இக்கோவில். இப்போது புதிதாக கோபுரம் கட்டும் பணிகள் நடந்துவருகின்றன. அக்கோவிலின் அமைப்பை பொறுத்தவரை காஞ்சிபுரத்தின் தொன்மை மிக்க கோவில்களின் தோற்றத்திற்கு எவ்விதத்திலும் ஈடுகொடுக்காமல் வழிப்போக்கர்களின் பழங்கால சத்திரம் போல் பராமரிப்பின்றி உள்ளது.

அதில் கருவறை என்ற  10 அடி அறையில் லிங்கமும், வேலைப்பாடற்ற சில சிலைகளும் உள்ளன. கோவிலின் ஒரு பிரதான இடத்தில் பக்தர்களுக்கு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூதாட்டியிடம் பேச்சு கொடுத்தோம்.

ellammaal
எல்லம்மாள் – விளக்கு தயாரிப்பவர்

70 வயதுக்கு மேற்பட்ட எல்லம்மாள்,                         “ காஞ்சிபுரத்திற்கு பக்கத்தில் இருக்கும் தாமல் தான் சொந்த ஊர். புருசன் இல்லை . பசங்க கூலி வேலை செய்கிறார்கள். என்னை கவனிக்கவில்லை. வீட்டைவிட்டு துரத்தி விட்டார்கள். ஐந்து வருடமாக இந்த வேலையை செய்கிறேன். சரியாக கண் தெரியவில்லை. படுக்க இடம் இல்லை. போக வர பஸ்சுக்கு 30 ரூபாய் ஆகிறது. என்ன செய்வது. கோவில் வேலை செய்கிறோம் தினமும் குளித்து சுத்தபத்தமாக இருக்கனுமில்லையா. அதனால் தினமும் ஊருக்கு சென்று வருவேன். காலையில் 7 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால் இரவு வீட்டிற்கு செல்வதற்கு 9 மணி ஆகிரும். உடம்பு முடியல. வயிறு இருக்குதுல். தினமும் கூலியாக 130 ரூபாய் தருகிறார்கள். டீ க்காசு 20 ரூபாய் தருவார்கள். அதில் தான் காலையில் இட்லி வாங்கி சாப்பிடுவேன். மதியம் கோவில் அன்னதானம் தான் சாப்பாடு. இப்படி தான் என் பொழப்பு தினமும் போகுது” என்றார் சலிப்புடன்.

இங்கு பக்தர்கள் காசு கொடுத்து வாங்கி தீபம் போட்ட அகல் விளக்குகளை திரும்பவும் எடுத்து கழுவி எண்ணெய் ஊற்றி விற்கிறார்கள். ஒரு அகல் 5 ரூபாய். நெய்விளக்கு, பூ, பழம், முறுக்கு, அடை, பிரசாதம் அனைத்தையும் பார்ப்பனர்களே காண்டிராக்ட் எடுத்து நிர்வகிக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு 100 அகல் விளக்குகளை கொண்டு பத்து டிரேக்களை தினமும் தயாரிக்கிறார் இமூதாட்டி. பணக்கார முதலாளிகள் – நடிகர்கள் – கிரிமினல்களின் கஷ்டங்களை அதாவது தில்லு முல்லுக்களை தீர்க்கும் வழக்கு ஈஸ்வரன் இத்தகைய ஏழை மூதாட்டிகளின் துன்பங்களை போக்குவதில்லை போலும். போக்காவிட்டாலும் பரவாயில்லை, போக்க வரும் பக்தர்களின் சடங்கிற்காக விளக்கு குவளையை கழுவி கழுவியே அவரது கைகள் புண்ணாகிவிட்டன.

அக்கோவிலின் சாமந்திபூ வில்வ இலைகள், மற்றும் பக்தர்களின் கோரிக்கை விண்ணப்பங்களை விற்கும் 50 வயது முனிரத்தினம் ” பட்டு நெசவு நொடிந்து போனதால் இங்கு ஐந்து வருசத்திற்கு மேல வேலை செய்கிறேன். எனக்கு தினமும் 150 ரூபாய் கூலி கொடுக்கிறார்கள். எங்கேயோ இருந்து வருபர்களுக்கு பிரச்சனை தீருகிறது என்கிறாரக்ள் என் பிரச்சனையை தான் ஆண்டவன் கண்டு கொள்ளவில்லை. இரண்டு பசங்களை எப்படி கரையேத்த போறேனு தெரியலை” என்று வியாபாரத்தில் மூழ்கினார். விண்ணப்பங்களை விற்கும் குமாஸ்தாவிற்கே நீதிபதியின் மேல் கடுகளவும் மரியாதை இல்லை என்பது வழக்கறுத்தீஸ்வரரை நாடி வரும் பக்தர்களுக்கு தெரியுமா?

loganathan-bank
லோகநாதன்

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தினமும் தவறாமல் கோவிலுக்கு வரும் லோகநாதன் ” ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். அவரிடம் பேசினோம்.

“இக்கோவிலின் தரிசித்து படியிறங்கிய மறுகணமே பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும். இப்போது டி.ஆர் சிம்பு பாடல் வழக்கிலும் இப்படிதான் விமோசனம கிடைத்ததாக சொல்கிறார்கள்.”

நீங்கள் மட்டும் 20 ஆண்டுகளாக தினமும் வருகிறீர்களே. உங்கள் கோரிக்கை அதைவிட பெரிதா?”

“சார். தினமும் நான் சாமியை கையெடுத்து கும்பிடுவது போல தான் தெரியும். ஆனா தெனமும் நான் சாமியை திட்டிவிட்டுதான் போவேன். திருட்டு தொழில் பன்றவன், குறுக்கு வழியில் போகிறவன் எல்லோரும் நம்பிக்கையா கும்பிட்டுவிட்டு போகிறானே அவர்களை தண்டிக்க மாட்டியா என்று திட்டுவேன் சார். ஒ.பி. பன்னீர் செல்வம், நளினி சிதம்பரம், நடிகை மஞ்சுளா, திமுக ராஜாத்திஅம்மாள், செல்வி, முதல்வர் ஜெயலலிதா, மியூசிக் டைரக்டர் அனிருதோட அப்பா அம்மா, இது இல்லாத தெலுங்கு, கன்னடம் என பல வி.ஐ.பிகள் அவ்ளோ பேரும் இங்க வந்த பிறகுதான் தண்டனையிலிருந்து மீண்டதாக சொல்கிறார்கள். நாட்டில் தான் என்னமோ நடக்குதுனு பாத்தா கோவில்லயும் அதுதான் நடக்குது. பக்தர்களை யார் சார் மதிக்குறாங்க. அர்ச்சகர்கிட்ட நீங்க வெறும் கைய நீட்டுங்க. வேண்டா வெறுப்ப திருநீரை கையில் தூக்கி போடுவார். தட்டில் தட்சணை வைப்பவர்களுக்கு மட்டும் ஒரு பூவை சேர்த்து போடுவார். தட்சணை பெருசா கொடுத்தா பூவும் பெருசா வரும். ஆயிரக்கணக்கில் தட்சணை போட்ட சாமி கழுத்திலிருக்கு மாலை உங்க கழுத்திற்கு வந்துரும். இது பொய்யில்ல சார். எல்லார் கண் முன்னேயும் தான் நடக்கிறது” என்று பெருமூச்சு விட்டார்.

அடுத்து நாம் அர்ச்சகர் முன் பவ்வியமாக நின்றோம். என்ன என்று கண்ணாலேயே கேட்டார்.

“சென்னையிலிருந்து வருகிறோம். இக்கோவிலை பற்றி அங்கு பெரும் பேச்சாக இருக்கிறது. எங்களுக்கு சில பிரச்சினைகள் 1இருக்கிறது. அதற்கு நீங்கள் தான் பரிகாரம் செய்ய வேண்டும்”என்று கையிலிருந்த 100 ரூபாயை கொடுத்து கப்பித்தனமாக (வேறு வழியில்லை) 50 ரூபாய் திருப்பி தரும்படி கூறினோம். அவரும் மூலவருக்கு அருகே இருந்த கல்லாப் பெட்டியிலிருந்து 50 ரூபாயைத் திருப்பி கொடுத்தார்.

“குறைந்த பட்சம் யாகத்திற்கு ரூபாய் 8000 செலவாகும். பிரச்சனைக்கேற்ப யாக சாமான்கள் மாறும். எங்களுக்கு தரும் தட்சணை அதில் சேராது. அது உங்கள் விருப்பம்” என்றார். கடந்த காலத்தில் அங்கு வந்த வி.ஐ.பிகள் பற்றியும் அவர்கள் யாகத்தை முடித்துவிட்டு கோவில் படி இறங்கும் முன்னரே பிரச்சனைகள் பனி போல் விலகியது பற்றி பரவசமாக கூறினார்.

“இதை பார்த்து என்னுடைய ஆட்களே(சக பார்ப்பனர்கள்) எங்களுக்கு தெரியாத எந்த மந்திரம்டா ஆண்டவனிடம் சொல்கிறாய் என்று நச்சரிக்கிறார்கள். அதெப்படி நான் சொல்லுவேன். அது அவருக்கும் நமக்கு இருக்கும் பந்தம். அவருடைய கருவி மட்டும்தான் நான். என்னக்கென்று எந்த பெருமையும் இல்லை. வாங்கோ கண்டிப்பா கஷ்டங்கள் தீரும் ” என்று நம்மை வழியனுப்ப பார்த்தார். நாம் மீண்டும் எங்கள் நண்பர்கள் கோவிலுக்கு வராமலேயே பிரச்சனையை தீர்க்க வழியிருக்கிறதா என்று அடக்கமாக வினவினோம்.

” பேஷா. பணம் அனுப்பி பிரச்சனயை அப்பிளிகேசனா எழுதி ஸ்டாம்ப் ஒட்டி கவர் கொடுத்துட்டா முறையா கூரியர்ல பிரசாதம் அனுப்பிவிடுவோம்” என்றார்.

சரி ஒரே வழக்கில் தொடர்புடைய வாதி, பிரதிவாதி இருவரும் வந்தால் ஈஸ்வரன் யாருக்கு உதவுவார்? ஒருவேளை தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்துக்களை கமிஷன் அடிப்படையில் ‘நியாயமாக’ தீர்க்கும் தாதாக்களை போன்று கூட ஈஸ்வரன் மாறியிருக்கலாம்.

munirathanam
முனிரத்தினம்

கோவிலுக்கு வெளியே கோவில் கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபரம் செய்யும் கடைக்காரகளிடம் பேச்சு கொடுத்தோம்.  “உங்களுக்கு என்ன. வியாபரம் பிச்சிகினு போகும்” என்ற போது, பதிலுக்கு நீங்கள் யார் என்று விசித்திரமாக பார்த்துவிட்டு ” ஊருக்கு புதுசா நீங்க. வாங்க தண்டலை(தின கடன்) தவறாம கட்டமுடியல. ஒரு வியாபாரமும் இல்ல. நெய் விளக்கு மட்டுமில்ல பூ பழமும் அவனே உள்ள வித்துறான். இங்க கடவுள பாக்க வர்றவனெல்லாம காரில சர் புர்னு வந்துட்டு போயிறான். அவங்கள பாத்து ஈ ஒட்டினு இருக்கிறோம் என்றார்கள்” சோகமாக.

“டி.ஆர் வந்தார் அவருடைய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்திருப்பார்கள். பெரிய ஆளுங்கனா படையோடு தானே வருவார்கள்” என்றோம். அவர் நம்மை முறைத்து விட்டு “அவனுங்க திருடன் மாதிரி வந்துட்டு திருடன் மாதிரி போயிறாங்க. அவனுங்க வரப்போறேனு போஸ்டர் ஒட்டிட்டா வர்ரானுங்க. ஏதோ திருட்டுதனம் பண்ணிட்டுதான் இங்க தீர்த்துக்கிறதுக்கு வரரான்னுங்க. இங்க இருக்குற ஐயரும் மானங்கெட்டவனுங்க. நீ பதினாறு வாட்டி வா . நீ முப்பத்திரண்டு வாட்டி வானு பீதியூட்டி பணத்தை புடுங்குறாங்க. அந்த வி.ஐ.பி வந்தான் இவன் வந்தான் என இவர்கள் வாயாலேயே போஸ்டர் ஒட்டி திருடர்களை ஒரே இடத்தில் சேர்த்துவைத்து அவர்களிடமிருந்து பிடுங்கிக் கொள்கிறார்கள். ஆனா… இந்த வருடத்திற்கு முன்னாடி இந்த கோயில் சீந்துவாரில்லாமல் இருந்தது. அப்போ வருசத்திற்கு ஒரு திருவிழா நடக்கும். டிசம்பர் மாத ஆருத்திர திருவிழா.

திருட்டு போன உண்டியல்
திருட்டு போன உண்டியல்

அதற்கு இங்கிருக்கும் சாமியை தூக்கி வலம் வரக்கூட ஒருத்தன் இருக்கமாட்டான். நீ தூக்கு நான் தூக்கு என்று ஏலம் போடுவார்கள். இப்போ வி.ஐ.பி- கள் மொய்ப்பதை பார்த்துவிட்டு கோவில் குளத்தை கட்டுகிறேன், கோபுரத்தை கட்டுகிறேன் என்று கோடி கோடியாக வசூலை ஆரம்பித்துவிட்டார்கள். எங்கே போய் நிற்குமினு தெரியல். ஏற்கனவே 2012-ல் இந்த கோயில் உண்டியலை உடைத்துவிட்டார்கள். யாரு உடைச்சாங்கனு அந்த கேசே இன்னும் தீரலை. இந்த லட்சணத்தில் ஊருல இருக்கிற கேசை எல்லாம் இவரு தீர்த்துவைக்கிறாருனு சொல்றானுங்க என்று கூறினார்” விரக்தியாக.

தமிழகத்தில் இத்தகைய மூட நம்பிக்கைகளை முன்வைத்து கிளம்பும் கோவில்களை பெரும் பணக்காரர்களே புதிது புதிதாக உருவாக்குகிறார்கள். அப்படி உருவாக்கும் போக்கில் அதற்கென்ற புராண கட்டுக்கதைகள் இட்டு நிரப்பப்படுகின்றன. ஜெயா – சசி கும்பல் ஆட்சிக் காலத்தில் அவர்கள் செய்த பெரும் யாகங்கள் மூலம் பல கோவில்களின் சக்தி கிசுகிசுவாக உருவாக்கப்பட்டது.  மேட்டுக்குடி குற்றவாளிகள் தமது திருட்டுத்தனத்தை சட்டப்படியே சரிக்கட்டினாலும் ஒன்றிரண்டு தப்பிவிட்டால் என்ன செய்வதென்று இத்தகைய சடங்கு சம்பிரதயாங்களுக்கு இலட்சக் கணக்கில் செலவழிக்கிறார்கள். தி.மு.க-வின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த டி.ஆர்.ராஜேந்தர் போன்ற முட்டாள்களே இங்கு வந்து சென்றால் பிரச்சினைகள் தீரும் என்று நினைக்கிறார்கள். அதற்கு மக்களை முட்டாள்களாக கருதி தமது இமேஜை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற புத்திசாலித்தனம்தான் காரணம்.

மக்கள் புத்திசாலிகளாக மாறும் போது வழக்கறுத்தீஸ்வரன்களின்  பார்ப்பன பவர் பறிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

– வினவு செய்தியாளர்.

தலித் மாணவன் ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் !

35

இந்துத்துவப் பாசிசம் கொன்று தீர்த்த தலித் மாணவன் ரோகித் வெமுலா!- நாம் செய்ய வேண்டியது என்ன?

ரோகித் வெமுலா
ரோகித் வெமுலா

ஹைதராபாத் பல்கலைக் கழகம், அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா, பல்கலைக்கழகத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக 15 நாட்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருந்த நிலையில் ஞாயிறு (17-01-2016) அன்று இரவு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்துத்துவக் காலிகளுக்கு எதிராக போராடியதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நேரடி தலையீட்டின் கீழ், கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்புதான் இப்பல்கலையைச் சேர்ந்த அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஐந்து தலித் மாணவர்கள் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக விடுதி, நூலகம், வகுப்பறை மற்றும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

ஆர்.எஸ்.எஸ்-ஏ.பி.வி.பி-ஆல் வெளியேற்றப்பட்ட அம்பேத்கர் கூட்டமைப்பு மாணவர்கள்.
ஆர்.எஸ்.எஸ்-ஏ.பி.வி.பி-ஆல் வெளியேற்றப்பட்ட அம்பேத்கர் கூட்டமைப்பு மாணவர்கள்.

பல்கலைக்கழகத்தின் பாரபட்சமான இந்த பார்ப்பன பாசிச நடவடிக்கையை எதிர்த்தும் மாணவர்களை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட மாணவர்களும், ஜனநாயக சக்திகளும் பல்கலைக்கழகத்திற்கு வெளியே கொட்டகை அமைத்து பதினைந்து நாட்களுக்கு மேலாக போராடி வந்தனர். இந்நிலையில் தான் மாணவர் ரோகித் வெமுலாவின் மரணம் நாடெங்கிலும் ஜனநாயக சக்திகளை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருக்கிறது.

தலித் மாணவனின் மரணத்திற்கு எதிராக பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் தெலுங்கானாவைச் சேர்ந்த மத்திய மோடி அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை கைது செய்யுமாறும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடைசெய்யுமாறும் போராடி வருகின்றனர்.

பல்கலைக்கழக மாணவனின் தற்கொலையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசின் பகிரங்க தலையீட்டுக்கான காரணம் என்ன?

முசாபர் நகர் தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ் காலிகளின் திட்டமிட்ட சதிச்செயலை அம்பலப்படுத்தும் “முசாபர்நகர் பாக்கி ஹே” எனும் ஆவணப்படத்தை இம்மாணவர்கள் கூட்டமைப்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் திரையிட்டிருக்கின்றனர்.

முசாபர்நகர் பாக்கி ஹை ஆவணப்படத்தின் டீசர்

முன்னதாக, இந்த ஆவணப்படம் டெல்லிப் பல்கலைக்கழகத்தில் திரையிடப்படுவது இந்துத்துவக் கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அச்சுறுத்தலுக்கு அஞ்சாத, நாடெங்கிலும் உள்ள ஜனநாயக முற்போக்கு மாணவர் அமைப்புகள் இந்துத்துவ பாசிசத்தை தனிமைப்படுத்தி வேரறுக்கும் விதமாக முசாபர்நகர் தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ்ஸின் சதிச்செயலை அம்பலப்படுத்துவதில் முனைப்பு காட்டினர். இதன் ஒரு பகுதியாகவே ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு “முசாபர்நகர் பாக்கி ஹை” ஆவணப்படத்தை திரையிட்டனர். மேலும், யாகூப் மேமன் துக்கிலிடப்பட்டதில் அரசின் இந்துத்துவ முகத்தை தோலுரிக்கும் விதத்திலும் இம்மாணவர் கூட்டமைப்பின் பிரச்சாரம் அமைந்திருந்தது.

rohit-vemula-3இதனால் காவிக்கூட்டம் மாணவர்கள் மத்தியில் முழுக்கவும் அம்பலப்பட்டு போனது. பார்ப்பனிய இந்து மதத்தின் சேவகனாக தாழ்த்தப்பட்டவர்கள் இருக்க வேண்டும் என்று சொன்ன சாவர்க்கரின் ஆணையை தலித்துகள் மீறுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத காவிக்கும்பல் இம்மாணவர் கூட்டமைப்பு மீது தாக்குதலில் இறங்கியிருக்கிறது. அது தொடர்பான விசாரணையில் ஆர்.எஸ்.எஸ்-ஏ.பி.வி.பி குண்டாந்தடிகள் இம்மாணவர் கூட்டமைப்பிடம் மன்னிப்புக் கோர வைக்கப்பட்டனர்.

ஆனால், அரசு அடக்கு இயந்திரத்தை தன் கைகளில் வைத்திருக்கிற காவிக்கூட்டம் தனக்கே உரித்தான நைச்சிய பாணியில் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பை பல்கலையில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்துடன் தாங்கள் தாக்கப்பட்டதாக பொய்வழக்கை புனைந்தது. இந்த பொய் குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கும் பண்டாரு தத்தாத்ரேயா, “ஹைதராபாத் பல்கலைக்கழகம் தேசத்துரோக-சாதிய-பயங்கரவாதிகளின் கூடாரமாக இருக்கிறது” என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

ரோகித் வெமுலாவின் தற்கொலையை கண்டித்து முற்றுகை போராட்டம்
ரோகித் வெமுலாவின் தற்கொலையை கண்டித்து முற்றுகை போராட்டம்

இப்படித்தான் காவி வானரங்கள் சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் ‘மோடிக்கு எதிராக பேசுகிறது’; ‘இந்துமதத்தை கொடூரங்களின் கூடாரம் என்று சொல்கிறது’ (அம்பேத்கர் சொன்னது!!); ‘தேசத்துரோகச் செயல்களில் ஈடுபடுகிறது’ என்று ஸ்மிருதி இரானிக்கு மொட்டைக் கடுதாசி போட்டனர். அ.பெ.ப.வ முன்னணி மாணவர்களும் ரோகித் வெமுலா உள்ளாக்கப்பட்ட இதே உளவியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆனால் அதே சமயம் ஜனநாயக சக்திகளின் வீச்சான போராட்டமும் தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபுமும் புரட்சிகர இயக்கங்களின் இடையறாத தாக்குதலும் இந்தியாவெங்கும் மோடி கும்பலின் இந்துத்துவ பாசிசத்தை அம்பலப்படுத்தி காவிக்கும்பலை பின்வாங்க வைத்தது.

ஆனால், தெலுங்கானாவிலோ தலித் மாணவனை காவுவாங்கி இந்துத்துவம் தன் கோரப்பற்களைக் காட்டியிருக்கிறது. ஸ்மிருதி இரானியின் தலையீடு; அதற்குப் பிந்தைய துணைவேந்தரின் ஒருதலைபட்சமான நடவடிக்கை; தலித் பேராசிரியர்கள் என்று கூறிக்கொண்டவர்களே ஆர்.எஸ்.எஸ் ஊதுகுழலாக மாறிப்போய் மவுனம் சாதித்தது என டிசம்பர் 21 அன்று அம்பேத்கர் மாணவர் அமைப்பின் ஐந்து முன்னணியாளர்களும் பல்கலையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

ரோகித் வெமுலாவின் ஆராய்ச்சி உதவித்தொகை கடந்த ஜூலை மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இறுதியில், அவர் பல்கலைக் கழகத்தில் நுழைவதற்கே அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறாக, மத்திய, மாநில, பல்கலைக்கழக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத ஒடுக்குமுறை கருவிகள் ஒரு சேர இம்மாணவர்களின் மீது ஏவப்பட்டிருக்கிறது. இறுதியில் பார்ப்பனியம் நிலைநாட்டப்பட்டு மாணவர் ரோகித் வெமுலா தூக்கில் ஏற்றப்பட்டிருக்கிறார்.

சென்னைப் பல்கலைக்கழகத்திலும் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்தால் நீக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்துத்துவத்தின் ஊதுகுழலாக இருக்கும் அ.தி.மு.க கட்சியின் அம்மா அடிவருடி துணைவேந்தர் தாண்டவனும் சென்னை மாணவர்களுக்கு ரோகித் வெமுலா அனுபவித்த அத்துணை கொடுமைகளையும் ஏவத்தான் செய்தார். இதனாலயே சென்னை மாணவர்கள் ஒருகட்டத்தில் பல்கலைக்கழக கட்டிடத்தில் ஏறி ‘பல்கலைக்கழகம் தங்களை மீண்டும் அனுமதிக்காவிட்டால் உயிர் துறப்பதாக’ பகிரங்கமாக அறிவித்தனர்.

சென்னைப் பல்கலையில் நடக்கவிருந்த படுகொலை ஹைதாராபாத் பல்கலையில் நடந்தேறியிருக்கிறது என்பதில் இருந்து என்ன தெரிகிறது?

மாணவர்கள் அரச பயங்கரவாதத்தை எதிர்க்கும் பணியில் தங்களை சமரசத்திற்கு இடமின்றி ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். இது எதைவிடவும் ஆபத்து என்பதை பாசிஸ்டுகள் உணர்ந்திருக்கின்றனர். மாணவர்களை மூர்க்கமாக ஒடுக்காவிட்டால், போராட்டத்தின் திசைவழி ஆளும்வர்க்க கும்பலை அச்சுறுத்தும் என்பதில் மரண பீதியுற்றிருக்கின்றனர்.

ஆகையால் தான், பொதுவெளியில் தலித் மாணவர்கள் அடையாள அரசியல் என்ற எல்லைக்குள் நின்று பேசுவதை அனுமதிக்கிற ஆளும் வர்க்கம், அதே மாணவர்கள் முசபார்நகர் தாக்குதலை அம்பலப்படுத்துவதில் நிற்கிற பொழுது என்ன செய்கிறது என்பதற்கு ரோகித் வெமுலாவின் தற்கொலை ஒரு வகைமாதிரியாக வந்து நிற்கிறது.

அது மட்டுமல்ல. இசுலாமியர்களுக்கு எதிராக தலித்துகளைத் திரட்டிவிட முடியும் என்று கனவு கண்ட ஆர்.எஸ்.எஸ் கும்பலின் திட்டத்தை சுக்கு நூறாக ஹைதராபாத் பல்கலைக் கழக தலித் மாணவர்கள் நடைமுறையில் உடைத்துக் காட்டியிருக்கின்றனர். இதை ஆளும் இந்துத்துவக் கும்பலால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதும் ரோகித் வெமுலாவின் கொலையிலிருந்து தெரியவருகிறது.

ரோகித் வெமுலாவின் குரல் இந்துத்துவப் பாசிசத்தை எதிர்க்கும் கலகக் குரலாக வெளிப்பட்டு இந்துத்துவக் கயிற்றால் அவரது குரல்வளை கடைசியில் இறுக்கப்பட்டிருக்கிறது. ரோகித் வெமுலாவின் பலி நாடெங்கும் கோப அலைகளை கிளப்பி விட்டிருக்கிறது.

ஊர், சேரி என்று பிரித்து வைத்து தலித்துக்களை அடக்கி வைத்து அடிமையாக நடத்திய பார்ப்பனிய மதம் நவீன காலத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மூலம் அதை தொடர்கிறது. அம்பேத்கர் துதி, தலித்துக்களின் மீதான ஓநாய் இரக்கம்  போன்ற ஊசிப்போன ‘கருணை’யால் மோடி அரசின் உண்மை முகம் தெரியாமல் போய்விடவில்லை. நாடெங்கும் கிளம்பும் மாணவர் போராட்டங்கள் மோடி அரசுக்கு வெறும் தலைவலியாக மட்டும் இருக்காமல் மரண அடியாக மாறவேண்டும்.

– இளங்கோ

பில்கேட்ஸ் – டாடா இந்திய விவசாயத்திற்கு வைக்கும் கடைசிக் கொள்ளி !

1

tata with gatesடந்த டிசம்பர் 14 அன்று நைரோபியில் நடைபெற்ற உலக வர்த்தகக் கழக மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டு என்ன பேசியது என்பது இன்று வரை வெளியிடப்படவில்லை.

ஆனால் மாநாட்டு உறுப்பினர்களின் ஒப்பந்தம் டிசம்பர் 19-ம் தேதி கையெழுத்திடப் பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம், உறுப்பு நாடுகளின் விவசாயத்தை முற்றாக உலகச் சந்தைக்கு திறந்துவிடும் அம்சங்களை முன்வைத்திருக்கிறது.

இதன் படி, இனி WTO-ல் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள்

  • விவசாயிகளுக்கு வழங்கும் மானியத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.
  • எந்தவொரு நாடும் பொதுவில் தானியங்களைக் சேகரித்து வைக்கக் கூடாது. மாறாக அவை சந்தைக்கு திறந்து விடப்படவேண்டும்.
  • ஏற்றுமதி தொடர்பான அனைத்து மானியங்களும் நிறுத்தப்பட வேண்டும். இதை வளர்ந்த நாடுகள் உடனே அமலுக்கு கொண்டு வரவும் வளரும் நாடுகள் 2018-க்குள் செய்து முடிக்க வேண்டும்.

எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது ஒரு புறமிருக்க, நாட்டின் சேவைத்துறைகளான தண்ணீர், மின்சாரம், பொது சுகாதாரம், காப்பீடு, கல்வித்துறையை முற்றிலும் வணிகமயமாக்கும் காட்ஸ் ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள் இது வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது.

காட்ஸ், உலக வர்த்தகக் கழக ஒப்பந்தங்கள் குறித்து பொதுவெளியில் குறைந்தபட்ச விபரங்களை மட்டுமே பேசுகிற பத்திரிகைகள் இதற்கு இணையாக முன்வைக்கப்படும் மற்றொரு பேரழிவுத் திட்டமான TISA (Trade In Services Agreement) குறித்து வாய்திறக்க மறுக்கின்றன. வாய் திறக்கவும் முடியாது!

TISA ஒப்பந்தத்தின்படி WTO-GATS திட்டங்களை உறுப்பு நாடுகள் எதிர்த்தால், அதற்கு மாற்றாக அமெரிக்கா மூன்றாம் உலக நாடுகளைத் திரட்டி அவற்றி்ன் மீதான பொருளாதாரச் சங்கிலியை இறுக்கிப் பிணைக்கும். இந்த வகையில் TISA முன்வைக்கும் செயல்திட்டம், உலகப் பொருளாதாரத்தை மேலும் அமெரிக்கக் கரடியின் பிடியில் தள்ளும் வகையில்  WTO-GATS ஆபத்தை விட படுபயங்கரமானதாக இருக்கப்போகிறது. TISA-ல் பங்கேற்கும் நாடுகள் அது குறித்து பாராளுமன்றங்களிலோ, பத்திரிகைகளிலோ, நீதி சட்ட அமைப்புகளிலோ TISA குறித்து விவாதிக்கக் கூடாதென விதிகள் போட்டிருப்பதை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஏகாதிபத்திய அமெரிக்காவைப் பொறுத்தவரை WTO-GATS மற்றும் TISA மட்டுமே திட்டமல்ல. இந்தியாவைப் போன்ற மூன்றாம் உலகநாடுகளை அடிமைப்படுத்தி சுரண்டுவதற்கு மேலும் பல முனைகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.

மோடி கும்பல் நைரோபி மாநாட்டிற்கு செல்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகத்தான் பில்கேட்சும் ரத்தன் டாடாவும், “இந்தியாவில் 4.4 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்” என டைம்ஸ் ஆப் இந்தியாவில் கட்டுரை எழுதினார்கள்.

கருணையாளர்கள் பில்கேட்சும் ரத்தன் டாடாவும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் மண்டகப்படிக்கே கட்டுரையாளர்களாக காட்சி தந்திருக்கிறார்கள் என்றால் பிரச்சனையின் கனமும் பரிமாணமும் எத்தகையதாக இருக்கும்?

“இந்தியாவின் மனிதவளம் மிகப்பெரிய சொத்து” என்று வரையறுக்கிற டாடவும் பில்கேட்சும் “பத்தில் நான்கு இந்தியக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்” என்று கவலையுற்றிருக்கின்றனர்.

கவலையுற்ற கையோடு சும்மா இருந்துவிடாமல், “புதிய ஊட்டச்சத்து அறிக்கை இந்தியாவில் குறை வளர்ச்சியை எதிர்நோக்குவதில் தலைமையின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டியிருக்கிறது (New nutrition report underscores the importance of leadership in addressing stunting in India)” எனும் தலைப்பில் மூன்று விசயங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

1. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான தரவுகள் முழுமையின்றி குறைபாட்டுடன் இருப்பதுடன், அவை காலவதியாகிப் போய்விட்டன. புதிய தரவுகளை எடுக்க வேண்டியது அவசியம்.

2. ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழிப்பதற்கு விலைமலிவான திட்டங்கள் (cost-effective solution) எங்களிடம் இருக்கின்றன. அவை தாய்மார்கள் பிரசவித்த காலத்திலிருந்து குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் வரை அதாவது 1000 நாட்களுக்கு மேம்பட்ட ஊட்டச்சத்தும் உடல்நலமும் கிடைக்க வழிவகை செய்யும்.

3. எங்களது திட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்பதற்கும் (prioritizing programmes) மத்தியிலும் மாநிலத்திலும் அரசுகள் தங்களது கடமையுணர்வை புரிந்துகொள்ளும் வகையிலும் (shared sense of responsibility) செயலாற்ற அரசியல் தலைமை (political leadership) தேவைப்படுகிறது.

மேற்கண்ட இம்மூன்றும் இந்திய விவசாயத்தை ஏகாதிபத்தியத்தின் கீழ் இறுதியாக மறுகட்டமைப்பு செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது பற்றிய விளக்கக் கட்டுரை உலக வர்த்தகக் கழக மாநாடு நடைபெறுவதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே பிசினஸ் டைம்ஸில் வந்திருக்கிறது. இதன்படி, பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இந்தியாவில் ஊட்டச் சத்து குறைப்பாட்டை ஆய்வு செய்வதற்கு நான்குவருட நிதி நல்கையாக 1.34 கோடி டாலர்களை (சுமார் ரூ 87 கோடி) டாடாவின் அறக்கட்டளைக்கு வழங்கியிருக்கிறது.

இந்த அமைப்பு, இந்திய விவசாயக் கொள்கையை ஊட்டச்சத்திற்கு ஏற்ப முற்றிலும் மாற்றிமைக்கும் TARINA (Technical Assistance and Research for Indian Nutrition and Agriculture) எனும் திட்டத்தை முன்வைத்திருக்கிறது.

TARINAவிற்குத் தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகமும், டாட்டா அறக்கட்டளையும் சேர்ந்து Tata-Cornell Agricultural and Nutrition Initiative (TCI) அமைப்பை ஆரம்பித்திருக்கிறார்கள்.

TARINAவின் நோக்கங்கள் உலக வர்த்தக் கழகத்தின் குரலாக அப்படியே ஒலித்திருக்கிறது. நைரோபியில் நடைபெற்ற WTO மாநாடு “இந்தியா இனி எந்தவொரு தானியத்தையும் சேகரித்து வைத்துக் கொள்ளக் கூடாது; அவற்றை சந்தைக்கு திறந்துவிட வேண்டும்” என்று சொல்கிற பொழுது TARINAவோ “ஊட்டச்சத்துக் மிகுந்த உணவு தானியங்கள் அனைவருக்கும் கிடைக்கும் படி திட்டம் வகுக்க வேண்டும்” என்று சொல்கிறது.

இரண்டாவதாக, “WTO விற்கு ஏற்ப விவசாயத்தை மாற்றியமை” என்று நைரோபி மாநாடு சொல்கிற பொழுது “ஊட்டச்சத்திற்கு ஏற்ப விவசாயத்தை மாற்றியமை” (to redesign agricultural projects with a focus on nutrition) என்று TARINA சொல்கிறது.

இந்த மாற்றியமைத்தல் திட்டம் இந்தியாவின் சகல விவசாயத்துறைகளையும் உள்ளடக்கும் விதமாக, தற்பொழுதும், வருங்காலத்திலும் விவசாயக் கொள்கைகள் பழங்கள், காய்கறிகள், கால்நடைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், பருப்பு வகைகள், உயர் புரதச் சத்து கொண்ட பயிர்களான பட்டாணி வகைத் தாவரங்கள் கிராமப்புற ஏழைகளுக்கு வருடம் முழுவதும் போய்ச்சேரும்படி அமைய வேண்டுமென வலியுறுத்துகிறது.

பில்கேட்ஸ்-டாடா முன்வைத்த இந்த டாரினா திட்டத்தைச் செயல்படுத்துபவர்களாக

புரவலர் என்ற பெயரில் மெலிண்டா-கேட்ஸ் அறக்கட்டளை,

தரகு வேலை பார்த்து தருபவன் என்ற பெயரில் டாடா சமூக அறிவியல் ஆய்வுக்கழகம்,

ஆராய்ச்சி செய்துகொடுக்க எமிராய் மற்றும் கார்னெல் பல்கலைக்கழகம் (வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தியா வந்தால் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்),

பழங்குடியினரிடையேயும் ஒடுக்கப்பட்டவர்களிடையேயும் உள்ளே புகுந்து கனஜோராக வேலை செய்து தரவுகள் எடுக்க என்.ஜி.ஓ.க்களான BAIF மற்றும் CARE,

ஏகாதிபத்தியங்கள் மேற்பார்வையிட அகில உலக உணவுக்கொள்கைக்கான ஆராய்ச்சி நிறுவனம் (International Food Policy Research Institute)

என ஏகாதிபத்தியம் மற்றும் தரகுமுதலாளிகளின் வலுவான வலைப்பின்னல் இந்தியாவின் விவசாயத்தைச் சுற்றி இறுக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி இன்னும் மேம்பட்ட சிக்கலான வடிவில் திரும்ப இந்திய அரசியல் அரங்கிற்கு வந்திருப்பதை நாம் தவறவிடாது கண்டுகொள்ள வேண்டும்.

இப்பொழுது ஊட்டச்சத்து குறைபாடு என்பதன் பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பில்கேட்ஸ் அறக்கட்டளை வடிவில் விவசாயத்தை மறுகட்டமைக்க முனைகிற பொழுது 1950-களில் இதே அமெரிக்க ஏகாதிபத்தியம் ஃபோர்டு பவுண்டேசன் மூலமாக இந்திய விவசாயத்தை மறுகட்டமைக்கிறோம் என்று “இந்தியாவின் உணவு நெருக்கடியும் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கை” என்பதன் பெயரில் அறிக்கை தாக்கல் செய்தனர். இவ்வறிக்கையில் “இந்தியாவில் உணவு இலக்குகள் எட்டப்பட வேண்டுமானால் உரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்” என்று இந்திய விவசாயத்தை பன்னாட்டுக் உரக் கம்பெனிகளின் இலக்காக மாற்றியமைத்தது.

இப்பொழுது எப்படி நாடு கடந்த கூட்டிணையக் குழுமங்களான பில்கேட்ஸ் அறக்கட்டளையிலிருந்து டாடா டிரஸ் வரை ஊட்டச்சத்து, உலகவர்த்தகக் கழகம் என்ற பெயரில் ஜல்லியடிக்கிறார்களோ அன்றைக்கு ஃபோர்டு பவுண்டசனோடு சேர்ந்து உரங்களிலும் (ESSO) எண்ணெய் நிறுவனங்களிலும் பெரும் பங்கை வைத்திருந்த ராக்பெல்லர் பவுண்டேசன் உரம் தான் இந்திய விவசாயத்திற்கு முதன்மையானது என்று கூறி இந்திய விவசாய நிலங்களை மலடாக்கினர்.

இரண்டாவதாக, இப்பொழுது எப்படி உலகவர்த்தகக் கழகத்தின் நைரோபி மாநாடும் பில்கேட்ஸ்-டாடாவின் TARINA பரிந்துரைகளும் ஒரே நேரத்தில் வந்திருக்கிறதோ அதே போன்று 1960-களில் போர்டு பவுண்டேசன் முன்வைத்த அறிக்கைக்கு இணையாக 1964இல் பெர்னார்டு. ஆர். பெல் தலைமையிலான உலக வங்கிக்குழு, ஒட்டுமொத்த முதலீட்டு முன்னுரிமைகள் விவசாயத்தை நோக்கி ஒருங்கிணைக்கும்படி பரிந்துரைத்திருந்தது.

60-களில் ஏற்பட்ட பஞ்சம், பசி, பட்டினி ஆகியவற்றைக் காரணம் காட்டிய அமெரிக்க பன்னாட்டு உரக் கம்பெனிகளின் இலக்காக இந்தியா இருக்க சம்மதிக்கவும் இந்திய விவசாயத்தின் மூல உத்தி போர்டு பவுண்டேசன் முன் வைக்கும் பசுமைப் புரட்சியாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் நிபந்தனைகளாக வைக்கவில்லை. மேலும் சரிந்து நிற்கும் உலகப் பொருளாதாரத்தில் தங்கு தடையற்ற மூலதன பாய்ச்சலுக்காக இந்தியா தனது பணமதிப்பில் 36.5% குறைத்துக் கொள்ளவும் ஆணையிட்டது (இன்றைக்கு மேக்-இன்-இந்தியா, எப்.டி.ஐ என்று சொல்கிற பொழுது இந்திய ரூபாயின் மதிப்பு என்னவாக இருக்கிறது என்று யோசியுங்கள்).

1968 ஏப்ரல் 28 நியூயார்க் டைம்ஸ் இதுபற்றி எழுதும் பொழுது, “இவற்றைக் கண்ணிகள் என்று அழையுங்கள், அவற்றை ‘நிபந்தனைகள்’ என்று அழையுங்கள் அல்லது விருப்பத்திற்கேற்ப அழைத்துக் கொள்ளுங்கள், அமெரிக்கா தான் வழங்கும் உதவிக்காக உலகவங்கி மூலம் விதிக்கும் நிபந்தனைகளில் பலவற்றை ஏற்றுக் கொள்வதைத் தவிர இந்தியாவிற்கு வேறு வாய்ப்பு எதுவும் இல்லை. ஏனென்றால் இந்தியாவிற்கு செல்வதற்கு வேறு இடம் எதுவுமில்லை” என்று கொக்கரித்தது.

இன்றைக்கு இதே நிகழ்ச்சி நிரல் தோற்றுப்போன அரசுக்கட்டமைப்பு நெருக்கடிக்குள் ஊட்டச்சத்து எனும் பெயரில் மறுகாலனியாதிக்கத்தை துரிதப்படுத்த வந்திருக்கிறது.

நியூயார்க் டைம்ஸிற்கு பதிலாக, எகானமிக் டைம்ஸில், TARINA திட்டத்தை நடத்திக் கொடுக்கும் கார்னல் பல்கலைக் கழகம் பின்வறுமாறு கூறுகிறது.

“The Tata Trusts, India’s leading philanthropy, will support the consortium through their convening power and influence with policymakers at the national and state levels.”

இதன் அர்த்தம் “இந்தியாவின் முன்னணிப் புரவலராக இருக்கும் டாடா-சேவை அமைப்பு தேசிய அளவிலும், மாநில அளவிலும் கொள்கை உருவாக்குபவர்களை பணிய வைப்பதிலும் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவைப்பதன் மூலமாக இக்கூட்டமைப்பிற்கு பங்களிக்கவிருக்கிறது” என்று கூறுகிறது.

இந்த வாக்கியத்தின் மூலம் 1960-களைப்போன்று இந்திய இறையாண்மை, அல்லது இந்தியா அல்லது பாராளுமன்றம் என்றெல்லாம் பேசவேண்டிய தேவை கார்னல் பல்கலைக்கழகத்திற்கு வந்துவிடவில்லை.

டாடாவிடம் சொல்லிவிட்டால் மற்றதை அவர் பார்த்துக்கொள்வார் என்று நேரடியாக இந்தியா எப்படி அமெரிக்காவின் காலனியாக இருக்கிறது என்பதை வெளிக் காட்டியிருக்கிறது.

அதாவது இனிமேலும் பாராளுமன்றம் என்றோ, மேக்-இன்-இந்தியா என்றோ , இறையாண்மை என்றோ பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என்பது இதில் தெளிவாகியிருக்கிறது.

இவ்விதம் இந்திய விவசாயம் ஏகாதிபத்தியங்களின் நிரந்தரப்பிடியில் மறுகட்டமைப்பு செய்வதற்கு ஏதுவாக முழுநிகழ்ச்சி நிரலும் WTO, GATS, TISA மற்றும் TARINAவாக வந்துவிட்ட பிறகு, இது யாருக்கான அரசு என்பது தெரிந்துவிட்ட பிறகு, மக்கள் செய்ய வேண்டிய வேலை என்னவாக இருக்க முடியும்?

இதை தூக்கியெறிந்துவிட்டு தங்களுக்கான அதிகாரத்தை நிறுவிக்கொள்வது என்பதைத் தவிர வேறு நிகழ்ச்சி நிரலுக்கு இந்தியாவில் இடமில்லை.

– இளங்கோ

செய்தித் தரவுகள்

1. $13.4 million Bill Gates grant to help combat India malnutrition, http://articles.economictimes.indiatimes.com/2015-12-04/news/68771293_1_nutrition-initiative-nutrient-rich-food-malnutrition

2. New nutrition report underscores the importance of leadership in addressing stunting in India, http://blogs.timesofindia.indiatimes.com/toi-editorials/new-nutrition-report-underscores-the-importance-of-leadership-in-addressing-stunting-in-india/

3. Will the GATS close on higher education? http://www.thehindu.com/opinion/columns/will-the-gats-close-on-higher-education/article8042337.ece

4. ஏகாதிபத்தியத்தின் கிடுக்கிப்பிடியில் இந்திய விவசாயம்- ch-5: இந்தியாவின் விவசாய முறையை ஏகாதிபத்தியம் மறுகட்டமைப்பு செய்தல்- பக்:41-53, ஆசிரியர்-சுனிதி குமார் கோஷ் (விடியல் பதிப்பகம்).

கெடிலம் ஆற்றை ஆக்கிரமித்த கடலூர் வேல்முருகன் திரையரங்கத்தை அகற்றும் போராட்டம் !

2

கெடிலம் ஆற்றை ஆக்கிரமித்துள்ள வேல்முருகன் திரையரங்க வணிக வளாகத்தை அகற்றுவோம்! கடலூர் ஆர்ப்பாட்டம்.

டந்த ஆண்டு இறுதி மாதம் நவம்பர், டிசம்பரில் பெய்த கனமழையால் கடலூர் மாடட்டம் முழுவதும் பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்த பாதிப்புகளுக்கு கெடிலம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் உட்பட தென்பெண்ணை ஆற்றில் மணல் அள்ளியதும், வீராணம் ஏரியை அறிவிப்பின்றி திறந்ததும் தான் இவ்வளவு பெரிய பாதிப்புக்கு முக்கிய காரணங்கள் என்பதை ஆதார பூர்வமாக வினவில் எழுதியிருந்தோம்.

cuddalore-encroachment-protest-7கனமழை வெள்ள பாதிப்பை தொடர்ந்து முதலாளித்துவ ஊடகங்களில் பேசிய அறிவுஜீவிகளும் ஆக்கிரமிப்புகள் தான் காரணம் என்றும் அதனை அகற்றுவது தான் தீர்வு என்றும் பேசினர். உயர்நீதி மன்றமும் ஆறு, ஏரி குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் , சென்னையில் மட்டும் ஏழை மக்கள் வசிக்க கூடிய குடிசைகளை மட்டும் தீவிரமாக அகற்றியது, அரசு. ஆனால் ஏரி, குளம் ஆறுகள் என அனைத்தையும் வரைமுறை இல்லாமல் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கார்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனம், மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள் இவற்றை அகற்றாததோடு மட்டுமல்லாமல் அவற்றை பாதுகாத்தும் வருகிறது.

இந்த அரசு ஆக்கிரமிப்பை அகற்றாது மக்களாகிய நாமே ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம் என தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் போராடங்களை நடத்தி வருகின்றனர்.

cuddalore-encroachment-protest-1கடலூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பாக, “கெடிலம் ஆற்றை ஆக்கிரமித்துள்ள வேல்முருகன் திரையரங்க வணிக வளாகத்தை அகற்றுவோம்” என்ற முழக்கத்தின் கீழ் 11-01-2016 அன்று போராட்டம் அறிவித்து 7 நாட்களுக்கும் மேலாக கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பேருந்து, ரயில், குடியிருப்பு பகுதி என அனைத்து இடங்களிலும் பரவலாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

பிரச்சாரத்தின் போது மக்களின் மனங்களில் குமுறிக் கொண்டிருந்த எரிமலைக் கனல் வெடிப்பதை பார்க்க முடிந்தது. தங்கள் கோபங்களை கொட்டி தீர்த்து நமது பிரச்சாரத்திற்கு ஆதரவு அளித்தனர்.

cuddalore-encroachment-protest-511-01-2016 அன்று காலை 8 எட்டு மணி முதல் வேல்முருகன் திரையரங்கத்தின் முன் நூற்றுக்கணக்கான போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது. மற்றொரு பக்கம் பத்திரிகையாளர்கள் குவிந்து காத்திருந்தனர். திரையரங்கை கடந்து செல்லும் எவரும் என்ன நடக்கிறது என்று நின்று கேட்காமல் போகவில்லை. திரையரங்கை சுற்றியுள்ள சந்து பொந்து என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு போட்டிருந்தனர். டி.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி என அனைத்து உயர்நிலை அதிகாரிகளும் திரையரங்கை பாதுகாக்க வந்திருந்தனர். அந்த அளவிற்கு ஆக்கிரமிப்பாளர்கள் மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியது தமிழக காவல்துறை.

சரியாக 11.30 மணியளவில் “கெடிலம் ஆற்றை ஆக்கிரமித்துள்ள வணிகவளாகத்தை அகற்றிடுவோம்” என்று விண்ணதிரும் முழக்கங்கள் போட்டவாறு பேரணியாக வந்த தோழர்களை பாதியிலேயே கைது செய்து வேனில் அடைத்தது, போலீஸ்.

cuddalore-encroachment-protest-3மக்கள் மத்தியில் தோழர்களை தாக்க திராணியற்ற போலிசு வேனில் வைத்து தோழர்களை தாக்கியது . இந்த தாக்குதலை நடத்தியது காக்கி உடை அணியாத பொறுக்கிகளான “கியூ பிரிவு” போலிசு தான்.

தொடர்ந்து, உழவர் சந்தை அருகே உள்ள தெரு வழியாக முழக்கமிட்டவாறு தோழர்கள் வந்ததை சற்றும் எதிர்பார்காத போலிசு திகைத்து போனதோடு மட்டுமல்லாமல் கோபத்தில் சக கீழ்நிலை காவலர்களை கீழ்த்தரமாக திட்டினார் இன்ஸ்பெக்டர். பிறகு தோழர்களை கைது செய்து மற்றொரு வேனில் ஏற்றியது, போலீஸ்.

cuddalore-encroachment-protest-6அடுத்தடுத்து பரபரப்பாக காட்சியளித்தது கடலூர் நகரம்; அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் படபடப்பாகவே இருந்தது காவல் துறை. அவ்வழியாக வருகிற போகிற அனைத்து மக்களையும் மிரட்டி விரட்டியது.

பிறகு உழவர் சந்தைக்கு எதிரே உள்ள தெருவில் இருந்து முழக்கமிட்டவாறே வந்த தோழர்களை பாதியிலேயே கைது செய்து வேறொரு வேனில் ஏற்றி பெரிய நாயகி திருமண மண்டபத்தில் வைத்து மாலை 5 மணிக்கு விடுவித்தது. தொடர்ந்து மூன்று கட்டங்களாக நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டம் மக்கள் மத்தியில் போராட வேண்டும் என்ற சிந்தனையை விதித்துள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய போலிசு, அரசு அதனை செய்யாமல் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று போராடியவர்களை கைது செய்து ஆக்கிரமிப்பை பாதுகாத்து வருகிறது. தாங்கள் ஆள்வதற்கு தகுதி இல்லாதவர்கள் தான் என்பதை நடைமுறையில் நிருபித்து காட்டியுள்ளது. இனியும் இந்த அரசு ஆக்கிரமிப்பை அகற்றும் என நம்பிகொண்டிருப்பவர்கள் தயவு செய்து சிந்திக்க வேண்டும்.

வினவு செய்தியாளர்கள்,
கடலூர்.

பொங்க வேண்டியதற்காய் பொங்குவோம் !

0

யல் வெடிப்பெங்கும்
ரியல் எஸ்டேட்
முளைக்குது.

கால்நடைகளின்
பட்டுப்போன வாயில்
பாலித்தீன் நுரைக்குது!

பொட்டுத் தண்ணியும்
தட்டுப்படாமல்
சிட்டுக்குருவிகள்
கண்கள் எரியுது!

அரிசி களைந்தெறியும்
ஈரம்
தேடித்தேடி ஏமாந்து
கோழி குஞ்சுகளுடன்
நெஞ்சு வேகுது

ஊற்றுக் கண்ணை
இழந்த துயரில்
ஆற்று மணல்
காற்றில் அழுவுது

துத்திப்பூவின் முகத்தில்
மணல் லாரிச்சக்கரம்
ஏறிக் கிடக்குது

அத்தனைக் கட்சிகள்
கொள்ளைக்கு சாட்சியாய்
காட்டாமணக்கு
மண்டிக் கிடக்குது

மீனவர் இரத்தம்
கலந்து
கலந்து
கடல்
தன் நிறத்தை இழக்குது!

புத்தம் புதிதாய்
ஊருக்கே விளைவித்துக் கொடுத்த கைகளில்
ரேசன் அரிசியின்
வீச்சம் அடிக்குது

பையப் பைய
விவசாயத்தையே
ஒழித்துக் கட்டும்
கார்ப்பரேட் கொள்கை
பொங்கல் பரிசாய்
ரேசன் பையில் தெரியுது

ஆதாரவிலை போதாமல்
கணுக் கணுவாய்
கரும்பு விவசாயி
வாழ்க்கை கருகுது!

பூந்தாது
ஒன்று கிடைக்காமல்
வண்ணத்துப் பூச்சி
பாழுங்கிணற்றில்
வீழுது

களிமண் ஈரம்
காணாமல்
கைத்தொழில்
சக்கரத் திருகைச் சுற்றாமல்
கடனில் சுழன்று சுழன்று
குயவர் கைகள்
காய்ந்து இருகுது

மாடு பிடிப்பது
தமிழர் கலாச்சாரமென்று
ஊரே புழுதி பறக்குது!
மணி பிடிக்க
கோயில் கருவறைக்குள்
போனால்
சாதி கொம்பு முட்டுது
மனுதர்மம் அடக்க
முடியாதவன் ‘வீரத்தை’
மாடு
ஏற இறங்கப் பார்க்குது

அய்வகை நிலமும்
அருந்தமிழ் வாழ்வும்
தரிசாய் கிடக்குது
அநியாயமாய்
எரிசாராயத்தில்
ஒரு இனமே எரிந்து கிடக்குது

உற்றுப் பார்த்தால்
வட்டி பொங்குது
ஆன்லைன் கரும்பில்
சீழ் வடியுது

எட்டிப் பார்த்தால்
எல்லா வீட்டிலும்
கலர் கலராய்
டி.வி. பொங்குது

தமிழரை இழந்த
தமிழர் திருநாள்,
உழவரை இழந்த
உழவர் திருநாள்
எனும்
உண்மைகள் விரியுது!

ஒருபோகமும் வழியில்லா
தமிழர் தெருக்களில்
முப்போகமும்
டாஸ்மாக் பொங்குது!

உள்ளூர் சோடா, கலரை
ஒழித்த வேகத்தில்
பெப்சி, கோக்
பீறிட்டு பொங்குது.

சில்லறை வணிகம்
புதைத்த இடத்தில்
டாடா, ரிலையன்சு
ஊற்று பொங்குது!

கடைசியில்,
உள்ளதை எல்லாம்
இழந்து
உதிரம் சுண்டும்
கடின உழைப்பில்
காண்ட்ராக்ட் தொழிலாளிகள்
கண்களில்
தனியார்மயத்தால்
எரிந்த இரவுகள்
தகித்து, கொதித்து பொங்குது!

நல்ல சோறில்லை…
நாட்டில் மதிப்பில்லை…
விவசாயி வாழ்க்கை
அலங்கோலமாகிக் கிடக்குது!

ஒரு நாளைக்கு மட்டும்
வேட்டியைக் கட்டி
புடவையைச் சுற்றி
காசுள்ள வர்க்கம்
கலர் கோலங்கள் காட்டுது.

விவசாய வர்க்கமோ
மங்கலோ… மங்கல்
அவர்கள்
வேண்டும் மாற்றத்திற்கு
சேர்ந்து குரல் கொடுக்காமல்
பானையை பார்த்து மட்டும்
போதுமா?
பொங்கலோ… பொங்கல்!

காணும்
அநீதிகளுக்கு எதிராக
களத்தில் பொங்குவோம்
மகிழும் மாநிலம்!

– துரை சண்முகம்