பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்தை தமிழுக்கு தந்த கவிஞர் நாகை. வே. சாமிநாதன்
நாகை மாவட்டம் அந்தனப் பேட்டையில் 1905-ம் ஆண்டு பிறந்து 1981-ம் ஆண்டில் மறைந்தவர் கவிஞர் நாகை. வே. சாமிநாதன். இடதுசாரித் தோழர்கள் பலரும் அறிந்திராத பொது உடைமை கவிஞரை நினைவுகூர, நினைவாற்றல் இழந்துவரும் சிலரே தற்போது உள்ளனர். மா. வளவன்-சி. அறிவுருவோன் ஆகியோரின் முன்முயற்சியில் கவிஞரின் கவிதைகள் சில தொகுக்கப்பட்டு எண்பதுகளில் வெளிவந்தன. மறுபதிப்பு வந்த்தாக தெரியவில்லை.
அறியாப் பருவத்திலேயே தந்தையை இழந்து தாய் மற்றும் பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். பன்னிரெண்டு வயதில் மளிகைக் கடையில் சேர்ந்து உழைப்பாளியாய் வாழ்க்கையை தொடங்கி நாகையில் செயல்பட்ட ரயில்வே பணிமனையில் பணியாற்றி வந்தார். தொழிற்சங்க இயக்கத்தில் ஊக்கமான செயல்பாடு காரணமாக 1947-ல் பணிநீக்கம் செய்யப்பட்டார். இறுதிக் காலத்தில் முதியோர் ஓய்வூதிய தொகையில் சுயமரியாதையுடன் வாழ்ந்து மறைந்தார்.
சுயமரியாதை திருமணம் செய்து கொண்டு கலகக்காரராகவே வாழ்க்கையை தொடங்கினார். தமது குழந்தைகளுக்கு லெனின் என்றும், சோகன் (பஞ்சாப் கம்யூனிஸ கட்சி தலைவர்களில் ஒருவர்) பெயரிட்டுள்ளது கவிஞரது பொதுவுடைமைக் கொள்கை ஈடுபாட்டுக்கு ஒரு சான்றாக உள்ளது.
தொடக்க காலங்களில் காங்கிரசு கட்சியிலும், பின்னர் சுயமரியாதை இயக்கத்திலும் செயல்பட்டார். 1935-ல் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற ஐந்தாவது சுயமரியாதை மாநாட்டில் பொதுவுடைமை திட்டம் என்று கருதப்பட்ட ஈரோட்டு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார், பெரியார். அம்மாநாட்டில் பூவனூர் செல்வகணபதி, முத்துச்சாமி வல்லத்தார், ஜீவா, சிங்காரவேலர் ஆகியோருடன் சுயமரியாதை இயக்கத்தை விட்டு வெளியேறினார்.
பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராக சேரவில்லை என்றாலும் இறுதிவரை பொதுவுடைமைக் கொள்கைக்கு விசுவாசமாகவே வாழ்ந்து வந்தார். மேடை நாடகங்கள் எழுதி கட்சி கூட்டங்களில் அரங்கேற்றி நடித்தும் வந்தார். பொதுவுடைமைக் கட்சி பிளவுபட்டபோது மார்க்சிஸ்டுகளை ஆதரித்து வந்தாலும் இடதுசாரி சக்திகள் என்று கருதுபவர்கள் அனைவருக்கும் உதவிகள் செய்து வந்தார்.
ஐந்தரை கட்டை சுருதியில் பாடும் அவரது குரலுக்கு ரசிகர்கள் ஏராளம். இப்போதும் அவரது குரலை நினைவு கூர்பவர்கள் சிலர் உள்ளனர். பகத்சிங் குறித்து “பகத்சிங்கை கொன்றது படுமோசம் ! படுமோசம்” என்ற பாடலை இயற்றி பாடியுள்ளார்.
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது காங்கிரசோ, சுயமரியாதை இயக்கமோ நாகையில் எதுவும் செய்யாதபோது சொந்த முயற்சியில் இரங்கல் கூட்டம் நடத்தினார். அச்சம் காரணமாக அக்கூட்டத்தில் பங்கேற்க அப்பகுதி தலைவர்கள் யாரும் முன்வரவில்லை. காங்கிரசு கட்சியில் செயல்பட்டு வந்த மணலூர் மணியம்மா முன்வந்து தலைமை தாங்க சுயமரியாதை வீரர் குஞ்சிதபாதம் மற்றும் கவிஞர் உரையாற்ற அஞ்சலி செலுத்தப்பட்டது. காங்கிரசு கட்சி மணியம்மாவை கட்சியை விட்டு நீக்கியது. மூவரும் இணைந்து அடக்குமுறைகளை எதிர்கொண்டு முறியடித்துள்ளனர். காங்கிரசு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட மணலூர் மணியம்மா பொதுவுடைமை கட்சியில் இணைந்து செயல்பட்டார்.
கவிஞர் சிறந்த லாவணி கலைஞர். சைவ – வைணவ போராட்டத்தின் குறியீடாக உள்ள மன்மதன் எரிந்த கட்சி – எரியாத கட்சி லாவணி கச்சேரியில் எரியாத கட்சியில் பாடி வந்தார். மன்மதன் எரியாத கட்சிக்கு பாடினால் பெருநோய் (குஷ்டம்) வரும் என்ற சைவர்களின் பிரச்சாரம் மக்களிடம் வலுப்பெற்றிருந்த காலம் அது. எரியாத கட்சிக்கு பாட யாரும் முன்வராத நிலை. லாவணி கலைஞர்கள் பாபுதாசர், கோபால்சாமி பிள்ளை, ஷக் தாவூது, அப்துல்காதர், நாகை சாமிநாதன் ஆகியோர் துணிந்து எரியாத கட்சிக்கு பாடினர். சித்தர் பாடல்களில் இருந்து மேற்கோள்கள் எடுத்து மக்களைக் கவரும் வகையில் வாதங்களை முன்வைத்து பாடியது இவர்களின் சிறப்பு. இதற்கு அவர்களின் சுயமரியாதை, பொதுவுடைமை இயக்க சிந்தனையே ஊக்கமளித்து உள்ளது.
கவிஞர் சுயமரியாதை இயக்கத்தில் இருந்தபோதே 1930-ல் சலவை தொழிலாளர் சங்கத்தையும், 1933-ல் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தையும் தொடங்கி வழி நடத்தியுள்ளார். தொழிலாளர் விவசாயிகள் சங்க போராட்டங்கள் பலவற்றில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார்.
யூஜன் பார்ட்டியாரின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்தை தமிழில் மொழிபெயர்த்தார் கவிஞர்.
இந்திய செங்கொடி இயக்க வரலாற்றில் உழைப்பால், தியாகத்தால் தடம் பதித்து கொண்டவர்கள் சாமிநாதன் போன்ற சிலர். மணலூரில் தொடங்கி வெண்மணியில் முடிவுற்ற கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்க வரலாற்றில் மணலூர் மணியம்மா, நாகை சாமிநாதன், ஆடாமங்கலம் ஒண்டாடித் தேவர், நாரணமங்கலம் தட்சிணாமூர்த்தி, பூத்தாழங்குடி பக்கிரிசாமி என்று பலர் புதைந்து இருக்கிறார்கள்.
இவர்களை புறம் தள்ளி ஓட்டுச்சீட்டு அரசியல் மூலம் தங்களை பிரபலப்படுத்திக் கொண்டவர்கள் பலர். கவிஞர் சாமிநாதன் மொழிபெயர்த்த பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதப் பாடலில்
”வேதம் ஓதி உடல் வளர்க்கும்
காதகர்க்கிங் கிடமில்லை.”
என்ற வரிகள் சிபிஐ, சிபிஐ(எம்) கட்சி வெளியீடுகளில் நீக்கப்பட்டு திருத்தி பாடப்படுகிறது என்பதை அவர்களின் அணிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களின் பார்ப்பன அடிவருடித்தனம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் குறித்த திருத்தல்வாதம், ஓட்டுச்சீட்டு அரசியலுக்கேற்ப ஒரு ஆவணத்தை திருத்தும் கேடுகெட்ட இந்த முயற்சி தெரிந்திருந்தாலும் கண்டித்து கேள்வி எழுப்பும் துணிவு அணிகளிடமும் இல்லை.
கீழத்தஞ்சை மண்ணைக் காக்க நடக்கும் மீத்தேன் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களின் ஊடாக அம்மண்ணில் தோன்றி தியாகம் புரிந்த பொதுவுடமை தியாகிகளின் வாழ்வை பதிவுகளாக்க முயற்சிப்போம். தியாகிகளின் வாழ்விலிருந்து கற்றுக் கொண்டு மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்திற்கு வலுச் சேர்ப்போம்.
-இராவணன்
செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சை.
தமிழ்நாட்டு மாணவர்களின் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொன்விழா ஆண்டினை நினைவு கூர்ந்து அப்படி ஒரு மொழிப்போரினை மீண்டும் துவக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில், குடியிருப்புப் பகுதிகள் என எல்லா இடங்களிலும் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது. சைக்கிள் பேரணி, கல்லூரிகளில் வாயில் நாடகம் என பல வடிவங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
ஜனவரி 25, 2015 அன்று மொழிப்போர் தியாகிகள் நாள் புரட்சிகர அமைப்புகளால் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. அது தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள் தொகுப்பின் முதல் பகுதி.
1. சென்னையை சுழன்றடித்த இந்தி எதிர்ப்புப் புயல்
ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நாள் கூட்டம் கோடம்பாக்கத்தில் உள்ள காமராஜர் காலனி 6-வது தெருவில் உழைக்கும் மக்களின் பங்களிப்போடு நடைபெற்றது.
கோடம்பாக்கம் காமராஜர் நகரில் தெருமுனைக் கூட்டம்
முன்னதாக, சனவரி 10-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை என ஒட்டு மொத்த சென்னையையே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்கள் இந்தி எதிர்ப்பு பிரச்சாரத்தில் சுழல வைத்தார்கள்.
1938, 1965 ஆகிய ஆண்டுகளில் இந்தித்திணிப்புக்கு எதிரான மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் மக்களின் சிந்தனை என்பது இயல்பானதாக இருந்தது, இயற்கையாக உருவான புயலைப்போல.
ஆனால் இன்றோ, ஒரு புறம் ஏகாதிபத்திய சீரழிவுக் கலாச்சாரம் மாணவர்கள் இளைஞர்களை சின்னாபின்னமாக்கி அனைத்து உணர்வுகளையும் பிடுங்கி தன்மானமற்ற சூடு சொரணையற்றவர்களாக மாற்றி எந்நேரமும் பாலியல், நுகர்வு வக்கிர சிந்தனையிலேயேவைத்து இருக்கிறது.
இன்னொரு புறம், மோடிமஸ்தான் சமஸ்கிருத ஆரியப் பண்பாட்டுத்திணிப்பை கலர்கலராக சீன் காட்டி நடைமுறைப்படுத்தும் முறையில் பலர் குழம்பிப்போயிருக்கின்றனர்.
இந்த நிலையில், 50 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த மொழிப்போரினை நினைவு கூர்ந்து ஆரியப் பார்ப்பன, பண்பாட்டுத்திணிப்புக்கு எதிராக நாம் போராட வேண்டும் என்ற அறைகூவல் விடுத்து 15 நாட்கள் காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை ஒவ்வொரு நாளும் பம்பரமாக சுழன்று இந்த இயக்கத்துக்கு மக்களின் ஆதரவைப் பெற்றது என்பது உண்மையில் செயற்கையாக ஒரு புயலை உருவாக்குவது போன்றதுதான்.
இந்தப் பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்லும் போது பல பிரிவினர்களைக் கண்டோம்.
இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்றாலே என்னவென்று அறியாத ஒரு தலைமுறை,
இந்தித்திணிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு அது சரி என்று கூறும் ஒரு பிரிவு,
இந்தித்திணிப்பு போராட்டமே தவறு அதனால்தான் நமக்கு வேலை கிடைக்கவில்லை, தமிழ்நாடு முன்னேறவில்லை என்று கூறும் ஒரு பிரிவு ,
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் நைட் 11 மணிக்கு நீங்க என்னதான் கத்தினாலும் எவனுக்கும் சொரணை இல்லை என்று ஆதங்கப்படும் ஒரு பிரிவு,
இந்த இயக்கத்துக்கே மொத்தமாக எதிராக இருக்கும் பார்ப்பனிய மேட்டுக்குடிப் பிரிவு.
அத்தனை பிரிவினரையும் சமாளித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இந்த இயக்கத்தை எடுத்துச் செல்லவேண்டும், மீண்டும் ஒரு மொழிப்போருக்கான தேவையை அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் முன் நின்ற ஒரே இலக்கு.
பிரச்சாரத்திற்கு சென்ற யாரும் சொல்வன்மையில் மிக்கவர் இல்லை, படிப்பிற் சிறந்த அறிவாளிகள் இல்லை, பார்ப்பன படையெடுப்பை எதிர்த்த பிரச்சாரத்துக்காக கல்லூரிக்கும், பள்ளிக்கும் மட்டம் போட்டிருந்த கல்லூரி, பள்ளி மாணவர்கள்தான் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றனர்.
மக்களின் சில சந்தேகங்களுக்கும் நாங்கள் பதில் அளித்தோம். அத்தனைப் பிரிவினரின் கேள்விகளுக்கும் பதிலளித்தோம். சமாதானமாக சில இடங்களில், சண்டையாக சில இடங்களில். எங்களின் பல சந்தேகங்களுக்கு உழைக்கும் மக்கள் பதில் அளித்தார்கள். முதல் நாள் நமது பிரச்சாரத்தை கவனிக்காதவர்கள் கூட தொடர்ச்சியான பிரச்சாரத்தில் தமது கருத்துக்களை மாற்றிக் கொண்டார்கள்.
ரயிலில் வயதான ஒருவர் கூறினார் “நான் மொழிப்போராட்டத்தில் கலந்து கொண்டு கல்லூரி வாழ்க்கையை இழந்தவன், அதற்காக கவலைப்படவில்லை, பெருமைப்படுகின்றேன்”. “தாய்த்தமிழ் மொழிக்காக இவரைப்போன்ற எத்தனை ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்திருப்பார்கள்” என்ற சிந்தனை எங்களை உந்தித்தள்ளியது.
மக்களிடம் கிடைத்த அனுபவங்களை மாணவர்களிடம் கொண்டு சென்றோம். மக்களின் பதில்களைக் கொண்டு மாணவர்கள் மத்தியில் நிலவும் தடைகளை உடைக்க உளியானோம். மாணவர்கள் என்றாலே ரவுடிகள், பொறுக்கிகள், சீரழிந்தவர்கள் என்ற கருத்து இருக்கும் போது அதை உடைப்பதுதானே நமது வேலை. உலகை வியாக்கியானம் செய்வது மட்டுமல்ல; மாற்றியமைப்பதுதானே நமது வேலை.
வாரி அணைத்துக் கொண்டார்கள் மாணவர்கள். அவர்களில் பலருக்கும் இந்தித்திணிப்பு எதிர்ப்பு போராட்ட வரலாறு தெரியவில்லை என்பது உண்மைதான். ஆனால், அந்த வரலாற்றை சொன்னால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர்கள் இன்னமும் மாறவில்லை.
கல்லூரிகளில் பற்றிய போராட்ட உணர்வு
ஒரு கல்லூரியில் பிரசுரங்களை வாங்காமல் சென்ற மாணவிகளைப் பார்த்து பெண் தோழர் ஒருவர் கூறினார்
“உங்க வாழ்க்கையே அழியப்போகுது, எல்லாம் எங்கப் போறீங்க?”.
“என்னது எங்க வாழ்க்கை அழியுதா?” என்று கேட்டவர்களிடம் இந்தித்திணிப்பையும் சமஸ்கிருத பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராக போராட வேண்டிய அவசியத்தை விளக்கியவுடன் “பத்து பிரசுரம் கொடுங்க நான் காலேஜில கொடுக்கிறேன் ” என்று வாங்கிச் சென்றார்கள்.
ஓடிவந்த போலீசு “ஏம்மா நீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரா போன மாசம் பிரச்சாரம் செஞ்ச, இப்ப என்னம்மா?” என்று கேட்டு பிரசுரத்தை வாங்கினார். “இங்கே பிரசுரம் கொடுக்கக்கூடாது” என்று உதார் விட்டு அது வேலைக்கு ஆகாமல் சென்று விட்டார்.
பின்னர் கல்லூரி முதல்வர், பேராசிரியர் படை வந்து மிரட்டியதும் வேலைக்கு ஆகவில்லை.
பின்னர் கல்லூரி மாணவிகள் பத்து பேர் “அக்கா, இங்க நோட்டீஸ் தராதீங்க, இன்னைக்கு கல்ச்சுரல் புரோகிராம், எல்லா பொண்ணுங்களும் ஸ்டேஜை கவனிக்காம உங்க நோட்டீசைத்தான் படிக்குறாங்க, பிரின்ஸிபல் எங்களை திட்டறாங்க” என்றார்கள்.
அதற்கு பதில் அளித்தார் தோழர் “அதுக்கு என்னம்மா பண்ணறது, மாணவிகளுக்கு எது தேவையோ அதைப் பண்ணறாங்க. அவங்களுக்கு இப்போ கல்ச்சுரல் பிடிக்கல, தமிழ் கலாச்சாரத்தை காக்கிற இந்தப்போராட்டம்தான் பிடிக்குது”.
பல கல்லூரிகளிலும் மாணவர்கள், “இதனை இப்படியே விடக்கூடாது. எல்லா கல்லூரி மாணவர்களையும் திரட்டி போராட்டம் செய்ய வேண்டும், நாங்கள் கண்டிப்பாக வருவோம், உங்கள் அமைப்பில் எங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்” என்றார்கள்
பச்சையப்பன் கல்லூரி, ராணி மேரிக்கல்லூரி, நந்தனம், சென்னைப்பல்கலைக்கழகம், பாரதி கலைக்கல்லூரி, தியாகராயா கல்லூரி என சென்னையில் உள்ள அனைத்துக்கல்லூரிகளிலும் இந்தித் திணிப்புக்கு எதிரான பிரச்சார மேகம் பரவியது.
அம்பேத்கர் கல்லூரி மாணவர்களோ இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தினை விளக்கும் “வீரம் செறிந்த மொழிப்போர்” நாடகத்தை பல முறை நடத்தச் சொன்னார்கள்.
மாநிலக்கல்லூரியில் நாடகத்தைக் கண்டு மிரண்ட போலீசு தடுத்து நிறுத்தியது. சுற்றியிருந்த மாணவர்கள் பிரசுரங்களைக் கேட்டுவாங்கினார்கள். போலீசை பொருட்டாக மதிக்காமல் நம்மிடம் விவாதித்தார்கள். தாய்த்தமிழ் உணர்வுக்கு முன் போலீசின் கூலி உணர்வு எம்மாத்திரம்?.
பச்சையப்பன் கல்லூரி விடுதி அறை எண் 80ல்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
50 ஆண்டுகளுக்கு முன் 1965-ம் ஆண்டு சனவரி 22-ம் தேதி இந்தித்திணிப்புக்கு எதிரான மாபெரும் எழுச்சியை மீண்டும் தோற்றுவிப்பதற்காக பச்சையப்பன் கல்லூரியில் விடுதி அறை எண் 80-ல் அனைத்துக்கல்லூரி மாணவர்களும் கூடினார்கள்.
அந்த நாளை நினைவு கூரும் விதமாக, சனவரி 22 அன்று கல்லூரி மாணவர்களை அணிதிரட்டி அக்கல்லூரியின் புமாஇமு செயலர் தோழர். செல்வா தலைமையில், அந்த அறைக்குச் சென்று மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டதுடன் மொழிப்போர் தியாகிகளின் வரலாறும் இன்று மொழிப்போரின் அவசியமும் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள், “இப்படிப்பட்ட பெருமைவாய்ந்த கல்லூரியில் படிப்பதை நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு தற்போது பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஒருவர் “எங்களுக்கு தெரியாத பல அரிய தகவல்களைக்கொண்டதாக உங்கள் பிரசுரம் இருக்கிறது. உங்களால் இக்கல்லூரிக்கே பெருமை” என்றார்.
காமராஜர் காலனியில் சிவலிங்கம் வைத்த நெருப்பு இன்னும் அணையவில்லை
தெருமுனைக்கூட்டம் நடக்க உள்ள கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சுற்றியுள்ள மக்களிடம் இப்பிரச்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டோம். இப்பகுதியில் கூட்டத்துக்கு அனுமதி கொடுக்க போலீசு 23-ம் தேதிவரை இழுத்தடித்து கூட்டமே நடத்த முடியாத அளவுக்கு கண்டிசன்களைப் போட்டு இருந்தது.
ஒலி, ஒளி அமைக்க பலர் முன்வரவில்லை. அவர்கள் கூறிய காரணம் இதுதான் “அந்தப் பகுதியில் எல்லாம் பொறுக்கிப் பசங்க , எந்தக்கட்சி மீட்டிங் போட்டாலும் லைட், சேர்களை உடைப்பானுங்க. நாங்க வர முடியாது, 5000 ரூபாய் டெபாசிட் கட்டுங்க” என்றார்கள்.
அந்தப் பகுதியைப் பற்றி அப்படி ஒரு கருத்து இருக்கிறது என்றால் அதை மாற்றியே ஆக வேண்டும் என்று 20 தோழர்களோடு 24-ம் தேதி காலை 9 மணிக்கு களம் புகுந்தோம் .
“இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தோட பொன் விழா ஆண்டினை ஒட்டி…………..” என்று நாம் பேசும் போதே பலர் “இங்க கூட சிவலிங்கம்னு ஒருத்தரு நெருப்பு வச்சுகிட்டாரே ” என்றார்கள்.
“ங்கோத்தா, மோடி வந்து நம்ம தமிழ அழிச்சுடுவானா, நாங்க உடமாட்டோம்பா”,
“ஏற்கனவே ஆதார் கார்டு, சிலிண்டருக்கு அக்கவுண்ட்ன்னு அலைய வுடறான், அந்த பாரம் எல்லாம் தமிழ்ல இருந்தா நாங்க பண்ணிடுவோம். இங்கிலீசுல இருக்கும் போதே நாயா அலையுறோம். எல்லாத்தையும் இந்தி ஆக்குனா நாங்க எங்க போவோம். இவனுங்களுக்கு டின்னு கட்டணும்”
ஒரு இடத்தில் வயதான அம்மாவிடம் “ என்னம்மா இப்படி எங்களை கைவிட்டுட்டியே, அன்னைக்கு நீ போராடித்தான தமிழ காப்பாத்துன, இன்னைக்கு மறுபடியும் இந்தியை திணிக்கிறானே நீ கேக்க மாட்டியா” என்று தோழரொருவர் கேட்டவுடன் “ யார் சொன்னது, தமிழுக்கு ஒரு பிரச்சினைன்னா அன்னைக்கும் வந்தேன், இன்னைக்கும் வருவேன் ” என்றார் அவர்.
மதியம் உணவு அருந்திக்கொண்டு இருந்த போது சாலை ஓரத்தில், வயதான ஒருவர் சாலையில் நின்று கொண்டு அழைத்தார். அவரிடம் சென்று பிரசுரத்தை கொடுத்து விளக்கினோம்.
“நான் திருநெல்வேலிக்காரன், செயிண்ட் சேவியர் காலேஜில் படிக்கும் போது போராட்டத்தில் கலந்து கொண்டு இன்ஸ்பெக்டர் மண்டையை உடைச்சேன், ஜெயிலுக்குப்போனேன். வெளியே வந்து இன்னொரு போராட்டத்துல இன்ஸ்பெக்டருக்கு நெருப்பே வச்சேன். அப்பவும் ஜெயிலுக்குப் போனேன். அப்புறம் இங்க வந்துட்டேன் . இந்தித் திணிப்பு போராட்டம்ங்குற வார்த்தைய பார்த்துட்டுதான் கூப்பிட்டேன், இன்னைக்கு உங்களைப்பார்க்கும் போதே பெருமையா இருக்கு”.
எங்கள் கண்களில் நீர் தளும்பியது. எவ்வளவு பெரிய வீரத்தை, இழப்பை, அர்ப்பணிப்பை ரொம்ப சாதாரணமாக சொல்லிவிட்டார். இப்படிப்பட்ட போராட்டத்தை நடத்தாமல் நம்மால் எப்படி இந்த ஆரிய பார்ப்பன – இந்திப் பண்பாட்டுத்திணிப்பை விரட்டியடிக்க முடியும்?
அப்பகுதி மக்கள் அனைவரும் தமிழை, தமிழ்ப் பண்பாட்டை உயர்த்திப்பிடித்தார்கள். மாலை 6 மணிக்கு, உடலில் சோர்வு இருந்தாலும் உள்ளத்தில் உற்சாகம் பீறிட்டு எழுந்தது.
கோடம்பாக்கத்தில் மையங் கொண்ட புயல்
25-ம் தேதி கோடம்பாக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளான எம்.எம்.டி.ஏ, எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான் பேட்டை, புலியூர், புதூர் உள்ளிட்டப் பகுதிகளில் தோழர்கள் இப்பிரச்சாரத்தைக் கொண்டு சென்றார்கள். சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் ஆதரவளித்தார்கள். தாங்களும் கூட்டத்திற்கு வருவதாகவும் பலர் இப்படிப்பட்ட அமைப்பில் எங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்கள்.
25-ம் தேதி காலை முதலே காமராஜர் காலனி களைகட்டியது. தோழர்கள் கொடிகளை கட்டிக்கொண்டும் தட்டிகளை கட்டிக்கொண்டும் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டும் இருந்தனர். சொந்த ஊரைப்போல எல்லோரின் வீடுகளிலும் சென்று உதவிகளைப் பெற்றுக்கொண்டு இருந்தனர். ஏற்கனவே 24-ம் தேதி இப்பகுதியில் நாம் பிரச்சாரம் செய்த போது சந்தித்திருந்த மக்கள் “ நீங்க தானா, சந்தோசம்பா” என்றார்கள்.
அந்தத் தெரு மிகவும் அடைசல் மிகுந்தது, அங்கே கார் மெக்கானிக் கடை ஒன்று இருந்தது. அதன் உரிமையாளர் காலையிலே தானே முன் வந்து தனது பழைய வாகனங்களை அப்புறப்படுத்தினார். அவரிடம் பிரசுரம் கொடுக்கச் சென்ற போது “நீங்க திருநெல்வேலிக்காரர் ஒருத்தரை பார்த்தீங்களா? அவர் நோட்டிசை நேத்து வந்து கொடுத்துட்டாருப்பா ”
நிகழ்ச்சி சரியாக மாலை 6.30 மணிக்கு தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கியது. மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி தமிழ்த்தேசிய இனத்தின் கடவுள் மறுப்பு, ஆன்மீகமறுப்பு, வேத, வைதீக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு பாரம்பரியத்தை போர்வாளாக ஏந்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் 10 நிமிடங்கள் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தலைமை உரையாற்றிய மக்கள் கலை இலக்கியக்கழகத்தின் சென்னைக்கிளையின் செயற்குழு உறுப்பினரான தோழர்.வாசுதேவன், தமிழ் நாட்டு மாணவர்களின் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா ஆண்டில் நடைபெறும் இந்த மொழிப்போர் தியாகிகள் நாள் கூட்டத்தின் அவசியத்தை விளக்கியும் இந்தித்திணிப்புக்கு எதிராக தன்னையே எரித்து குடியரசு தினக் கொண்டாட்டத்தை நிறுத்திய சிவலிங்கத்தினை வீரமிக்க தியாகத்தை உயர்த்திப்பிடிக்க வேண்டிய அவசியத்தை விளக்கியும் பேசினார்.
“தில்லை உனக்கு சொந்தமா” என்ற பார்ப்பனிய பண்பாட்டின் இழிவை வீழ்த்த வேண்டியதை வலியுறுத்தும் வகையில் பாடலை மக்கள் கலை இலக்கியக் கழக தோழர்கள் பாடினார்கள்.
அடுத்து மக்கள் முதல்வரின் கடந்த கால யோக்கியதையை புமாஇமு இளந்தோழர்கள் “பேயொன்று நாடாள்வதா” என்ற பாடலில் காற்றில் பறக்கவிட ஓடிவந்தது போலீசு.
“கலைநிகழ்ச்சியெல்லாம் நடத்தக்கூடாது” என்று மிரட்டிக்கொண்டு இருந்தது.
கலை நிகழ்ச்சியெல்லா்ம நடத்தக் கூடாது என்று மிரட்டும் போலீசு.
அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த மொழிப்போரினை கண் முன்னே கொண்டு வந்து இன்றைய மோடி அரசின் ஆரிய- பார்ப்பன பண்பாட்டுக்கு எதிராக போராட வேண்டியதன் அவசியத்தை விளக்கும் வகையில் சென்னைப்பகுதி புமாஇமு தோழர்கள் “ வீரஞ்செறிந்த மொழிப்போர்” என்ற நாடகத்தை நடத்தி மக்களின் உணர்வுகளை தட்டியெழுப்பினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
சிறப்புரையாற்றிய பு.மா.இ.முவின் மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர். கணேசன் 1938 மற்றும் 1965-ல் நடைபெற்ற மொழிப்போரில் பங்கு கொண்ட மாணவர்கள், இளைஞர்களின் வீரமிக்க உணர்வுகளை பதிவு செய்து, அன்றைய நாட்களில் பார்ப்பன சமஸ்கிருத பண்பாட்டை ராஜாஜி மற்றும் பக்தவச்சலம் மூலமாக நிறைவேற்ற முயன்றதையும் விளக்கி, “ஒரு மொழிக்காக 500-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள் என்றால் அது அது தாய்த்தமிழுக்காக மட்டும்தான். இதை வெறும் மொழிக்கான போராட்டமாக தியாகிகள் பார்க்கவில்லை. தமிழ்ப் பண்பாட்டிற்கானப் போராட்டமாக கண்டார்கள்” என்று பதியவைத்தார்.
தோழர் கணேசன் உரை
“இன்றைய நாளில் அமெரிக்காவின் அடிமையும் தெற்காசிய பிராந்திய பேரரசனுமான மோடி வெளி நாடுகளுக்கு சென்று கீதையை பரிசளிப்பதும், இந்திதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும் கூறுவதும், ஆசிரியர் நாளை குரு உத்சவ் என்று மாற்றியதும் மத்தியப்பள்ளிகளில் சமஸ்கிருதத்தை கட்டாயமாக்கியதும் இந்தியை அலுவலக மொழியாக அறிவித்ததும் மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழகம் தயாராக இருப்பதையே காட்டுகிறது. இந்த மொழிப்போர் தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை, தமிழே நிர்வாக மொழி, தமிழே ஆட்சி மொழி, தமிழே வழக்காடு மொழி என்பதை நோக்கி இருக்க வேண்டும் என்றால் நம்முடைய போராட்டங்களும் 1965-ல் நடைபெற்ற மாணவர்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தினை போன்றதாக இருக்க வேண்டும்” என்று எழுச்சியுரையாற்றினார்.
நிறைவாக புமாஇமுவின் சென்னை மாநகர செயற்குழு உறுப்பினர் தோழர் ராஜா, இறுதி நேரத்தில் ஒலிஒளிக்கு ஏற்பாடு செய்த ஒருவர் வராமல் போக இந்தித்திணிப்புக்கு எதிரான கூட்டம் என்று சொன்னவுடனேயே பணத்தைப்பற்றி பிறகு பேசலாம் ஒலி ஒளி அமைத்துக்கொடுத்த உரிமையாளர் மோசஸ். அவர்களுக்கும் கூட்ட செலவை ஈடுகட்ட துண்டேதி வசூல் செய்த தோழர்களுக்கு நிதியளித்த மக்களுக்கும் இந்தித்திணிப்புக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்று உத்வேகத்தை அளித்த கோடம்பாக்கம் பகுதி காமராஜர் காலனி பகுதி மக்களுக்கும் நன்றியுரை கூறினார்.
எழுச்சிமிக்க இந்தக்கூட்டத்தில் காமராஜர் காலனி மக்கள் நூற்றுக்கணக்கில் கொண்டனர். கூட்டம் முடிவதற்கு சற்று முன்பு வரை பகுதி மக்கள் வந்து கொண்டு இருந்தனர். இந்த கூட்டமும் சரி, 15 நாட்கள் இப்பிரச்சார இயக்கமாகட்டும் எங்களுக்கு கற்றுக்கொடுத்தது ஏராளம். ”இந்தி எதிர்ப்பு என்பது அன்றல்ல, என்றும் நீறு பூத்த நெருப்பே” என்பதை நேரில் உணர்ந்தோம்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
அன்று முதல் இன்று வரை உழைக்கும் மக்களே தமிழுக்காக போராடியிருக்கிறார்கள், தன்னுயிரை மாய்த்து இருக்கிறார்கள், அவர்கள் கண்டிப்பாக தமிழை தமிழ்ப் பண்பாட்டை காத்து நிற்பார்கள் களத்தில் என்ற நம்பிக்கை புரட்சிகர அமைப்பு என்ற வகையில் எங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
சென்னையை சுழன்றடித்த இந்தி எதிர்ப்புப் புயல் விரைவில் சூறாவளியாக மாறும்; உழைக்கும் மக்களுடன் இணைந்து நாங்கள் மாற்றுவோம்.
தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை தொடர்புக்கு : 9445112675
குஜராத் கலவர சாதனைக்காக உலகப் ‘புகழ்’ பெற்றிருந்த மோடிக்கு விசா கொடுக்காமல் இருந்து வந்த அமெரிக்கா பின்பு ஒரு நாட்டின் பிரதமர் என்ற முறையில் யாரையும் வரக்கூடாதென்று சொல்ல மாட்டோம் என சுபம் பாடியது. ஆனந்தக் கண்ணீர் தளும்பமோடியும் அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் டீ சாப்பிட்டு, என்ஆர்ஐ-க்கள் மத்தியில் சமோசாவும் முழுங்கிவிட்டு வந்து விட்டார். மற்றவரிடமெல்லாம் சவுண்டும், சண்டமாருதமும் செய்யும் பாஜக கூட்டம் அமெரிக்கா என்றால் மட்டும் ஒரு அடிமைக்குரிய லாவகத்துடன் பேசும்.
ஏற்கனவே இந்தியாவை அமெரிக்காவிற்கு கூறு போட்டு விற்று வந்த மன்மோகன் சிங்கை மவுன சிங் என்று கேலி செய்த பாஜக இன்று மன்மோகனே வெட்கப்படும் அளவுக்கு அமெரிக்க அடிமைத்தனத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ஒபாமாவுடன் எப்போது வேண்டுமானாலும் பேச ஹாட் லைன், அமெரிக்க ஆயுதங்களை இறக்குமதி செய்வது, அமெரிக்க படைகளுடன் கூட்டு பயிற்சி, முத்தாய்ப்பாக அணுசக்தி ஒப்பந்தம் என்று கைப்பிள்ளையின் சாதனயை அடுக்குகிறார்கள். அமெரிக்க அதிபருடன் ஹாட்லைனில் பேசுவதில் என்ன சாதனை? “என்னய்யா வால்மார்ட் வந்து நாளாச்சு இன்னும் சில்லறை வணிகத்தில் அனுமதிக்காம என்ன பண்றீங்கன்னு” ஒபாமா சத்தம் போடுவதற்கும் மோடி “சரி ஜி உடன் செய்கிறோம்” என்று சரணம் பாடுவது போக இந்த ஹாட் லைனில் குஜராத் லட்டு செய்வது எப்படி என்றா பேசுவார்கள்?
தொழில் நுட்பம், கூட்டுத் தயாரிப்பு என்ற முறையில் அமெரிக்க பாதுகாப்பு தளவாட முதலாளிகள் இந்திய மக்கள் பணத்தை எத்தனை ஆயிரம் கோடிகளை சுருட்டுவார்கள்? மேக் இன் இந்தியா, இலாபம் பை அமெரிக்கா என்று கண்டிசன் அப்ளைதான் போடவேண்டும். பிறகு கூட்டுப் பயிற்சி. இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க இராணுவத்தை பலப்படுத்தவே இந்த பயிற்சி. சீனாவை அச்சுறுத்தும் வண்ணம் ஏற்கனவே கொரியா, ஜப்பானுடன் கூட்டு பயிற்சி செய்யும் அமெரிக்கா இப்போது கிரமமாக இந்தியாவுடனும் செய்யும்.
கடைசியில் அணுசக்தி ஒப்பந்தம். இனி அமெரிக்க முதலாளிகள் காலாவதியான மற்றும் கடும் நாசத்தை விளைவிக்க கூடிய அணு சக்தி உலைகளை இந்திய மக்களின் தலையில் கட்டுவாரகள். பல ஆயிரம் கோடி ரூபாயை இதற்கென நாம் கட்ட வேண்டியிருக்கும். விபத்து நடந்தால் அதுவும் இந்திய அரசின் பொறுப்பிலேயே இருக்கும் என்று முடித்திருப்பார்கள். இது தொடர்பாக எதிர்ப்பு வந்த போது வந்த பேச்சு எதுவும் இப்போது காணோம். இந்த டீலை இந்த விசயத்தில் எப்படி முடித்தார்கள் என்பதை எவரும் அறிவிக்கவில்லை.
இப்படி பாரத மாதாவை முழுதாக தூக்கி அமெரிக்காவிடம் கொடுத்துவிட்டு, ஓபாமா விஜயத்தை மோடியின் மாபெரும் சாதனை என்று கூப்பாடு போடுவதை பார்த்தால் எஜமானால் கொல்லப்பட்ட அடிமையின் எழவு வீட்டில் வந்து போகும் எஜமானின் விஜயத்தை அடிமைகளின் குடும்பம் கொண்டாடுவதை போல இருக்கிறது.
இப்படி புதுதில்லியில் அடிமைத்தனத்தை சிலேகிக்கும் கூட்டம் பெங்களூருவில் ஊழலை ஆராதித்திருக்கிறது.
மஹாராஷ்டிரா, அரியானா வரிசையில் தமிழகத்தை கபளீகரம் செய்ய யோக்கியனின் செண்ட் அடித்துக் கொண்டு வருகிறது பா.ஜ.க. ஊழல் வழக்கில் வீழ்ந்து கிடக்கும் அதிமுகவையோ இல்லை ஜெயாவையோ பெயரிட்டு சொல்லக் கூட பயப்படும் இந்த வீராதி வீரர்கள் தங்களை ஊழல் எதிர்ப்பு போராளிகளாக காட்டிக் கொள்கிறார்கள். இதில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை சந்திப்பதற்கு மட்டும் ஜெயா அருள் பாலித்திருக்கிறார். அந்த வகையில் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வந்த வீராங்கனையை சந்தித்து ஊழலுக்கு ஜே போட்ட யோக்கியர்கள் இவர்கள் மட்டுமே.
மேனியில் புனுகையும், தகரப்பொடியையும் பூசிக் கொண்டு வந்தாலும் வாயிலிருந்து வீசும் கஞ்சா நெடியை மறைக்க முடியுமா? பா.ஜ.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த கர்நாடகத்தில் பா.ஜ.க.வின் யோக்கியதையை புகழ் மணக்கச் செய்து வருகிறார்கள் ரெட்டி சகோதரர்கள்.
தென்னிந்தியாவில் முதன்முறையாக 2008-ம் வருடம் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மைக்கு குறைவான இடங்களை பெற்றிருந்த பா.ஜ.க, இந்தியா கண்டிராத வெட்கக்கேடான ஒரு கர்நாடகா ஃபார்முலாவை அறிமுகப்படுத்தியது. அதற்கு ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்று பெயர். ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்பது மாற்றுக் கட்சிகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிகளை ராஜினாமா செய்ய வைப்பது. பிறகு மீண்டும் அவர்களை பா.ஜ.க சார்பில் போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்யும் கீழ்மையான அரசியல் விளையாட்டு. பா.ஜ.க.வின் வலையில் விழுந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 25 கோடி ரூபாய் தரப்பட்டது. இதன்மூலம் சட்டசபையில் தனது அறுதி பெரும்பான்மையை நிரூபித்தது பா.ஜ.க. இந்த ‘ஆபரேஷன் லோட்டஸுக்கு’ புரவலாக செயல்பட்டவர்கள் ரெட்டி சகோதரர்கள் என்ற சுரங்க மாஃபியா கும்பல்.
சிறையிலிருந்து ஜனார்தன் ரெட்டி வெளியேறும் கோலாகலம்
ரெட்டி சகோதரர்கள் மொத்தம் மூவர். கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி மற்றும் ஜனார்த்தன ரெட்டி ஆகியோர். நான்காவதாக ஸ்ரீராமலு என்பவர் இணைந்தார். ஸ்ரீராமலு இவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான கூட்டுக் கொள்ளையர். ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளுக்கு மகன்களாக பிறந்த ரெட்டி சகோதரர்கள் முதலில் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கினர். 1999-ம் வருடம் பெல்லாரியில் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிட்ட சுஸ்மா ஸ்வராஜை ஆதரித்தனர். கைமாறாக பெல்லாரி மாவட்ட பா.ஜ.க தலைவரானார், கருணாகர ரெட்டி.
திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ரெட்டி சகோதரர்கள். அரசியலுடன் தொழிலையும் கைகோர்த்து வளர்த்தார்கள். ஆந்திராவின் ஒபுலப்புரம் சுரங்கங்கள் 2000-ம் வருடம் இவர்கள் கைக்கு வந்தன. ஓபுலப்புரம் சுரங்கங்கள் ஓபுலப்புரத்தை சேர்ந்த ராகவ ரெட்டி என்பவருக்கு சொந்தமானது. அவருடைய சுரங்கங்களை முதலில் குத்தகைக்கு எடுத்தனர், ரெட்டி சகோதரர்கள். இரும்புத் தாது சுரங்கங்களிலிருந்து பெரிய லாபம் கிடைக்காத போது அவற்றை வேறோரு நபருக்கு சிலகாலம் உள்குத்தகை விட்டனர்.ஒரு மெட்ரிக் டன் இரும்புத் தாதின் விலை 200 ரூபாயிலிருந்து 2700 ரூபாயாக உயர்ந்த போது மறுபடியும் மீட்டனர். அதன் பிறகு பெருத்த லாபத்தை சம்பாதிக்கத் தொடங்கினர், ரெட்டி சகோதரர்கள். அனுமதிக்கப்பட்ட இடங்களை கடந்து பெல்லாரி வரையிலும் சுரங்க நிறுவனங்களை விரிவாக்கினர். சுரங்க நிறுவனங்களிலிருந்து ஒரு நாளின் வருமானம் 6 கோடியாக வரத் தொடங்கியது. ஆந்திராவின் முதலமைச்சராக அப்போதிருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியுடன் கள்ளக் கூட்டு வைத்து தமது தொழில் சாம்ராஜ்யத்தை விரிவாக்கினர்.
‘கிளாஷ் ஆஃப் க்ளேன்ஸ்’ இணைய விளையாட்டில் மற்றவரின் செல்வங்களை கவர்ந்து வருவது போல, அடுத்தவர்களின் சுரங்கங்களுக்கு தமது அடியாள் படையை அனுப்பி அவர்களின் இரும்புத் தாதுகளை கொள்ளையிட்டு வருவதையும் வாடிக்கையாக கொண்டனர். மேலும், சில சுரங்க நிறுவனங்களின் உரிமையாளர்களை மிரட்டி தம்முடன் இணைத்தும் அடாவடி செய்தனர். கர்நாடகா மற்றும் ஆந்திரா என இரண்டு மாநில அரசுகளை கைக்குள் போட்டுக் கொண்டு பந்தய ஆட்டம் போட்டனர்.
சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி பட்டாபிராம ராவ்
ஆந்திரா மற்றும் கர்நாடகா எல்லை வழியில் எங்கெங்கு இரும்புத் தாதுகள் கிடைக்கின்றனவோ அங்கிருந்து அவற்றை வெட்டி எடுத்து ஓபுலப்புரம் சுரங்கத்தில் பதுக்கி வைத்ததை செயற்கைக்கோள் படங்கள் வெளிக்கொணர்ந்தன. ‘இந்தியாவில் வேறெந்த துறையிலும் நடைபெற்ற ஊழலை விடவும் இது அதிகமானது’ என்கிறார், லோக் ஆயுக்தா நீதிபதியாக செயல்பட்ட சந்தோஷ் ஹெக்டே.
எதிர்ப்புக் குரல்களை அடக்கியும், நசுக்கியும் வந்த ரெட்டிகளின் கழுத்தில் மணியை கட்டியவர் அவர்களிடம் பணிபுரிந்த ஆஞ்சனேயா என்பவர். பெல்லாரியை சேர்ந்த ஆஞ்சனேயா, ஓபுலப்புரம் சுரங்க நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். ரெட்டி சகோதரர்களின் கிரிமினல் நடவடிக்கைகள் மீது தான் திரட்டிய தகவல்கள் அனைத்தையும் மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் வழங்கினார். அதன் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக ரெட்டி சகோதரர்களின் பல்வேறு முறைகேடுகள் வெளியுலகிற்கு தெரிய ஆரம்பித்தன.
2011- வருடம் வெளிவந்த லோக் ஆயுக்தா அறிக்கையின் படி 2.98 கோடி மெட்ரிக் டன் இரும்புத் தாது முறைகேடான முறையில் வெட்டப்பட்து. இதன் மூலம் அரசுக்கு ரூ 16,500 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரும்புத் தாதுவை வெட்டிக் கடத்தியதில் ரெட்டி சகோதரர்கள் 30,000 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்.
தமது கொள்ளையை சுமூகமாக கொண்டு செல்ல ‘இடரில்லா ஒழுங்கு முறையை’ ( zero risk system ) ஏற்படுத்தி இருந்தனர். இதனை எந்த அளவுக்கு கச்சிதமாக செயல்படுத்தியுள்ளனர் என்பதற்கு உதாரணமாக 2011-ம் வருடம் மத்தியப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட ஜனார்த்தன ரெட்டி 2012-ம் வருடம் பிணையில் விடுதலையாக சி.பி.ஐ நீதிபதிக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சம்பவம் எடுத்துரைக்கிறது, ஆந்திர உயர்நீதிமன்றம். லஞ்சம் பெற்ற சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி பட்டாபி ராமராவை கைது செய்ய உத்தரவிட்டது. ஜனார்த்தன ரெட்டி பிணையையும் ரத்து செய்தது. அன்று தாமதப்பட்ட விடுதலை இந்த 23-ந் தேதி ஜனார்த்தன ரெட்டிக்கு கைகூடியுள்ளது. ரெட்டிகளின் பணத்தில் தற்போது குளிப்பாட்டப்பட்டவர்கள் யார்யார் என்று தெரியவில்லை.
ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு போயஸ் தோட்டத்தில் முடங்கிக் கிடக்கும் ஜெயலலிதாவால் அதிகபட்சமாக அரசு வழக்கறிஞரை தான் கைக்குள் போட்டு அவருக்கு அபராதம் பெற்றுத் தரத் தான் முடிந்தது. பா.ஜ.க.வில் சுஷ்மா ஸ்வராஜின் ஆசீர்வாதம் பெற்று வளர்ந்த ரெட்டிகள் நீதிபதியையே வளைத்த திறமையாளர்கள். அந்த வகையில் மாறன் சகோதரர்களும், ஜெயலலிதாவும் பா.ஜ.க.விடமிருந்து கற்க வேண்டிய நிலையிலே தான் இருக்கிறார்கள்.
ஊழல் ராணி ஜெயாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் பாஜக நிறுத்தியிருக்கும் வேட்பாளரே ஐந்தாறு சுயநிதிக் கல்லூரிகள் முதலாளி என்பதிலிருந்து இவர்களின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது. கர்நாடகாவிலிருந்து ஊழல் முடைநாற்றம் வீசும் காவி கும்பலை தமிழகத்தில் நாம் அனுமதிக்க போகிறோமா?
துரோகத்திற்கெதிராக கலகம் : சி.ஐ.டி.யு -விலிருந்து வெளியேறி பு.ஜ.தொ.மு வில் இணைந்த தொழிலாளர்கள்!
திருச்சி இரயில்வே குட்செட்டில் 23.1.2015 அன்று காலை அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையை கண்டித்தும் சி.ஐ.டி.யு விலிருந்து வெளியேறி பு.ஜ.தொ.மு வில் இணைந்த தொழிலாளர்களை வரவேற்றும் வாயிற் கூட்டம் நடைபெற்றது.
பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலர் சுந்தர்ராசு தலைமை உரையாற்றி சி.ஐ.டி.யுவிலிருந்து விலகி பு.ஜ.தொ.மு வில் இணைந்த சுகுமார் செட் தொழிலாளர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்டத்தலைவர் தோழர் காவிரிநாடன் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் சதித்தனத்தையும் அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை இந்திய பொதுத்துறை நிறுவனங்களை சூறையாடவே ! என்பதை விளக்கியும் பேசினார்.
தோழர் காவிரிநாடன்
பு.ஜ.தொ.மு வில் இணைந்த சுகுமார் செட் நிர்வாகி தோழர் தனக்கொடி பேசும்போது…
“நாங்கள் பு.ஜ.தொ.மு- வில் இணைந்ததாக சொல்றீங்க. அப்படியல்ல நாங்கள் CITU-வின் வஞ்சகத்தால… எங்க வேலை உரிமையைப் பறிக்க முயற்சித்த அந்த சங்கத்துக்கிட்டேயிருந்து பாதுகாப்பு தேடி பு.ஜ.தொ.மு-வுல தஞ்சமடைஞ்சிருக்கோம்-ங்கறதுதான் சரி.
தோழர் தனக்கொடி
எல்லாத் தொழிலாளிகளுக்காகவும் உண்மையிலேயே அக்கறையோட போராடுவது சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்தான். இந்த சங்கத்தோட ‘உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்ற வாசகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
ரெண்டு வருசத்துக்கு முந்தியே இந்த சங்கத்துல இணைய நாங்க விருப்பப்பட்டோம். அப்ப எங்க செட் பொறுப்பாளரா இருந்த திரு. மூசா, சி.ஐ.டி.யு-வ உருவாக்கி அதுக்கு தலைவரா நான் இருக்கும் போதே வேற சங்கத்துக்கு நீங்க போறது சங்கடமா இருக்குன்னாரு. அதனால நாங்க வரல.
ஆனா அவர் இறந்தவுடன் ‘அண்ணன் எப்ப சாவான்; திண்ண எப்ப காலியாகும்னு’ காத்திருந்த சில மேஸ்திரிங்க “ஒருத்தர் செய்யும் வேலையை மற்றவர் பறிக்க கூடாது”-ங்கற ஒப்பந்தத்தை மீறி சுயநலனுக்காக எங்கவேலையை பறிக்க நினைச்சாங்க! CITU சங்கமும் இந்த அடாவடித்தனத்துக்கு ஒத்துப் போகுது.
என் வேல…என் வேல-ன்றியே சங்கம் பேசிவிடலனா வேலைவந்திருக்குமா? சங்கத்த மீறி எப்படி வேலை செய்வன்னு பார்க்கறேன்னு சங்கத்தின் மாவட்ட தலைவரான நீங்களே (சி.ஜ.டி.யு தலைவர் ராஜாவே) மிரட்டிறீங்க! … கேக்க நாதியில்லன்னு இழிவுசெய்து எங்க வேலையப் பறிக்க நினைச்சீங்க…. அதனாலதான் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில தஞ்சமடைந்திருக்கோம்.
நா கேட்குறேன்….நியாயமான கூலி கேட்டுப் போராடிய வெண்மணி தியாகிகள் நினைவாக கட்டப்பட்ட ‘வெண்மணி இல்லத்திலேயே’ (சி.ஜ.டி.யு திருச்சி மாவட்ட அலுவலகம்) ரவுடிகள வச்சி மிரட்றீங்க. சங்கத்துக்கு எங்க தொழிலாளர்கள் சந்தா கொடுக்கலையா? கட்டிடநிதி, கட்சி நிதியின்னு நீங்க கேட்டபோதெல்லாம் காசு கொடுக்கலையா? கூப்பிட்ட போதெல்லாம் போராட நாங்க வரலையா? சங்கம் பேசி விட்டதாலேயே இன்னைக்கு சங்கத்துக்கிட்ட வேலய ஒப்படைன்னு கேட்டா இது அடாவடி இல்லையா? குட்செட்டுல வேல செய்யிற எல்லா மேஸ்திரிகளையும் கூட்டி கூட்டத்தப் போடுங்க! நியாயத்தை அவர்கள் சொல்லட்டும்” என்று கூறி முடித்தார்.
அடுத்து பேசிய சு.ப.தொ.சங்கத்தின் சிறப்புத்தலைவர் ராஜா, “சி.ஐ.டி.யு-வின் பாரபட்சமான நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு இமாம் மேஸ்திரி மற்றும் தொழிலாளர்கள் மக்கள் கலை இலக்கியக் கழகத்தை அணுகிய போதுதான் 2006 – ல் சுமைப்பணித் தொழிலாளர்கள் பாதுகாப்புச் சங்கத்தை துவங்கினோம். சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமில்லாமல் குட்செட்டின் அனைத்து தொழிலாளர்களின் நலனில் காட்டிய அக்கறையைப் பார்த்து சின்னையன் செட் தொழிலாளர்கள் இணைந்தனர். இன்று தொழிலாளர்களின் குடும்பத்தை பாதுகாக்க ஈ.எஸ்.ஐ – பி.எஃப் துவங்கி பாரபட்சமின்றி பலருக்கும் உதவியது. இறந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் அரசு சலுகைகளை பெறுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது. வேலையிடத்தில் குடிநீர், மின்விளக்கு போன்ற அடிப்படைவசதிகளுக்காகவும் அடையாள அட்டை, பணி நிரந்தரம் போன்ற உரிமைகளுக்காகவும் போராடிவருகிறது.
தோழர் ராஜா
எல்லா தொழிலாளர்களின் நலன் என்ற போர்வையில் சுகுமார் செட் வேலையைப் பறிக்க முயற்சிக்கிறீர்களே, வேலையில்லாத தொழிலாளர்களுக்காக உண்மையிலேயே அக்கறையிருந்தா, சி.ஐ.டி.யு கிளை செயலாளர் சிவா தினசரி வேலைக்கு போறாரே, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக ஒருநாள் தன்வேலையை பிரித்து தரவேண்டியதுதானே? எங்க சங்கத்தின் செயலர் இரத்தினம் எத்தனை முறை உங்கள் சங்க தொழிலாளர்களுக்கு வேலைகளை விட்டுக் கொடுத்துள்ளார். நன்றி உணர்ச்சி இருந்தால் சிந்தித்துபார்!” என முகத்தில் அறைந்தார்போல் இடித்துரைத்தார்.
மேலும், “2014 – 2016 க்கான கூலி பேச்சுவார்த்தையை முதலாளிகளும், சி.ஐ.டி.யு-வுமே விரும்பாத சூழ்நிலையில் சுமைப்பணித் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் தானே முறையாக கடிதத்தை கொடுத்து கூலி உயர்வு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தோம். அப்போதும் கூட சி.ஐ.டி.யு தலைவர் ராஜா “ எங்க ஆளுக வேல வந்தா போதும் கூலி உயர்வுன்னு பேசி வேல வராம செய்திடாதீங்கன்னு சொல்றாங்க” என்று சொல்லி தொழிலாளர்கள் மற்றும் மேஸ்திரிகளின் கோரிக்கைப்படிதான் நடந்து கொள்கிறேன் என்பதாக நியாயம் பேசி தனது முதலாளி வர்க்க சேவையை மூடி மறைக்க முயன்றார் இதே CITU தலைவர் ராஜா.
சி.பி.எம் வேட்பாளர் ஸ்ரீதருக்கான நாடாளுமன்றத் தேர்தல் செலவுக்காக முதலாளிகளிடம் தேர்தல் நிதி பெற்றதற்கு நன்றிக் கடனாக தொழிலாளர்களின் கூலி உயர்வைக் கோராமல் துரோகமிழைக்க துடித்த போது உறுதியாக நின்று தொழிலாளர்களை பாதுகாக்க 30% கூலி உயர்வை பெற்றுத் தந்தது எமது சங்கம்.
நேற்றுவரை உங்கள் சங்கத்தில் இணைந்து உங்களோடு உழைத்த சுகுமார் செட் தொழிலாளர்களின் வேலையை அடாவடியாக பறிக்கச்சொல்லி பாரபட்சமாக ஆணையிடுகிறீரே இதுதான் சங்கத் தலைவருக்கு அழகா? இரயில்வே போலீசும், C&F (Clearing and Forwarding) கான்ட்ராக்டர்களும் “நீங்கள் செய்வது முறையல்ல. இது சுகுமார்செட் வேலை” என்று கூறியபோதும், உங்கள் சங்கத்தில் இப்போதும் இருக்கும் தொழிலாளர்கள் பலரும் கூட இது நியாயமில்லை. அடாவடியானது என்று பேசுகின்றனர். அதைக்கூட உணர முடியாமல் சங்க தலைவரே ரவுடித்தனத்தில் இறங்கி தொழில் சூழலைக் கெடுக்கிறீரே இது சரியா?
1967 நக்சல்பாரி கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, தான் சொன்ன கொள்கைக்கு மாறாக சென்ற போது உழுபவனுக்கே நிலம் சொந்தம், உழைப்பவருக்கே அதிகாரம் என்ற கொள்கையை சரியாக நடைமுறைபடுத்துவதற்காக துவங்கப்பட்டதுதான் எமது நக்சல்பாரி அமைப்பு. அன்றைக்கு போலீசு மந்திரியா இருந்த ஜோதிபாசு கட்சியின் ஊழியர்களையே போலீசை வைத்து கொன்றொழித்தார். அந்த துரோகம் இன்று வரை தொடர்கிறது.
எங்கெல்லாம் போலி கம்யூனிஸ்டுகளும் சி.ஐ.டி.யு-வும் துரோகம் செய்கிறதோ அங்கெல்லாம் தொழிலாளரைக் காப்பதற்காக எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பிறக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன் இந்த குட்செட்டில் எமது சங்கத்தை துவங்கும் போது, கொடி மரம் ஊன்றுவதற்காக வெட்டப்பட்ட குழி எவனப் புதைக்கிறதுக்குன்னு கேள்வியெழுப்பி மிரட்டிப்பார்த்தீர்கள். ஆனால், உங்கள் கொடி மரம், பெயர்ப்பலகையை உங்கள் தொழிலாளர்களே தூக்கியெறியும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது” என்று கூறி முடித்தார்.
இடையிடையே ம.க.இ.க-வின் மையக் கலைக்குழு தோழர்கள் தொழிலாளி வர்க்க உணர்வூட்டும் எழுச்சியான பாடல்களைப் பாடி சிறப்பித்தனர். கிளை செயலர் இரத்தினம் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.
தோழர் ரத்தினம்
முன்னதாக, 7.1.2015 அன்று சி.ஐ.டி.யு–விலிருந்து தாங்கள் விலகுவதை கடிதமாகவும் சுவரொட்டி போட்டு ஒட்டியும் தொழிலாளர்களுக்கு தெரிவித்தனர்.
பொது அறிவிப்பு
சுகுமார் செட் (SWC) தொழிலாளிகளாகிய நாங்கள் அனைவரும் மேஸ்திரி திரு. மூசா இருந்தவரை சி.ஐ.டி.யு சங்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தோம்.
தற்போது, நாங்கள் செய்து வந்த எஸ்.டபிள்யூ.சி அரிசி வேலையை அபகரிக்கும் நோக்கத்துடம் சி.ஐ.டி.யு சங்கமும் அதன் மாவட்டச் செயலாளர் ஆர். ராஜாவும் பாரபட்சமாக நடந்து கொண்டதால் அதிலிருந்து 07.01.2015 முதல் விலகி விட்டோம்.
நாங்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான சுமைப்பணித் தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தில் இணைந்துள்ளோம் என இதன்மூலம் அறிவிக்கிறோம்.
எனவே, எமது செட் தொடர்பான எந்த விவரங்கள், பேச்சு வார்த்தை பற்றியும் இனி சி.ஐ.டி.யு சங்கத்தை தொடர்புகொள்ள வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண் சுகுமார் செட் (CWC) தொழிலாளர்கள், ரெயில்வே குட்செட், திருச்சி
சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் (TPGY) இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடர்புக்கு : 9698930113
இதைப் பார்த்து அரண்டு போன சி.ஐ.டி.யு ராஜாவின் கையாட்கள் சுவரொட்டிகளை கிழிக்கவேண்டும், ஒட்டியவர்களை ஒப்படைக்க வேண்டும். பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என லாரிகளை இயக்க விடாமல் அகராதி செய்ததுடன் வேலை செய்வதையும் தடுத்தனர்.
கலைக்குழு பாடல்
சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்புத்தலைவர் ராஜா, “இது தொழிற் சங்க நடைமுறையில் புதியதல்ல. சி.ஐ.டி.யு சங்கத்தில் செயல்பட்ட தாங்கள் சங்கத் தலைமையின் சர்வாதிகார போக்கை கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்து விட்டோம் என செட்டின் பெயர், முகவரியோடு அறிவித்துள்ளனர். சி.ஐ.டி.யு தலைவர் ராஜா பெயரைப் போட்டுத்தானே அடிக்க முடியும்? தவறு செய்யும் பிரதமரையும் முதலமைச்சரையும் நீதிபதிகள் பெயரை சுவரொட்டியில் போட்டு ஒட்டுவதுதான் எங்கள் நடைமுறை . அதைத்தான் இப்போதும் செய்கிறோம். எப்போதும் செய்வோம். மறுப்பிருந்தால் நீங்களும் சுவரொட்டி போட்டு ஒட்டுங்கள்” என எச்சரித்தார்.
ரெயில்வே போலீசார் மற்றும் சி&எஃப் காண்ட்ராக்டர்கள் மத்தியில் இதை அம்பலப்படுத்தியதுடன், “வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். மீறித் தடுத்தால் இவர்களைக் கைது செய்யுங்கள்” என எச்சரிக்கவே சி.ஐ.டி.யு-வினர் வாலாட்ட முடியாமல் திரும்பிச் சென்றனர். சி.ஐ.டி.யு-வின் அடாவடித்தனம் முறியடிக்கப்பட்டு வேலை அமைதியாக நடந்தது.
கலைக்குழு
பு.ஜ.தொ.மு-வில் இணைந்த தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமையை நிலைநாட்டியதுடன் இந்த சங்கத்தில் ஒவ்வொரு விசயத்திலும் கருத்து கேட்டு விவாதிக்கும் உரிமையும் கிடைத்த (இந்த சாதாரண உரிமை கூட இல்லாமல் இருந்த போலிகளின் சங்க நடைமுறையை என்னவென்பது?) இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் உற்சாகமாக வேலை செய்கின்றனர்.
தகவல் சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருச்சி
சீனிவாசன் வாரியத் தலைவர் அதிகாரத்தை பயன்படுத்தி இந்தியா சிமென்ட்சுக்கும் தனது குடும்பத்துக்கும் ஆதாயம் ஈட்டியதற்கான சான்றுகளும் உள்ளன. ஆனால் தண்டனை இல்லை.
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரும், இன்றைய உலகக் கிரிக்கெட்டின் ‘ஜாம்பவானுமான’ இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் மருமகன் குருநாதன் மெய்யப்பன ஐ.பி.எல் போட்டிகள் தொடர்பாக சூதாடியது குறித்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
1. குருநாதன் மெய்யப்பனும் ராஜ் குந்த்ராவும் சூதாடினார்கள். தங்களுக்கு உள் விவகாரங்கள் தெரிந்த சென்னை அணி, ராஜஸ்தான் அணி ஆடும் ஐ.பி.எல் போட்டிகள் தொடர்பாகவும் பந்தயம் வைத்து சூதாடினார்கள்.
2. குருநாத் மெய்யப்பனின் மாமனார் சீனிவாசனுக்கு இந்தியா சிமென்ட்சில் 0.14% தான் பங்குகள் உள்ளன என்பதால் அவருக்கும் இந்தியா சிமென்ட்சுக்கு சொந்தமான சென்னை அணிக்கும் தொடர்பில்லை என்று சொல்ல முடியாது. அந்நிறுவனத்தில் அவரது குடும்பத்தினரின் மொத்த பங்கு சதவீதம் 29.23%. சீனிவாசனின் மனைவியும், மகளும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களாக உள்ளனர்.
3. சீனிவாசன் ஐ.பி.எல் போட்டிகளை கட்டுப்படுத்தும், ஐ.பி.எல் அணிகளை ஒழுங்குபடுத்தும் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தனக்கு இருந்த முடிவெடுக்கும் அதிகாரத்தை, சென்னை ஐ.பி.எல் அணிக்கு சாதகமாக பயன்படுத்தும் வாய்ப்புகள் இருந்தன.
4. அவர் அந்த அதிகாரத்தை அப்படி பயன்படுத்தி இந்தியா சிமென்ட்சுக்கும் தனது குடும்பத்துக்கும் ஆதாயம் ஈட்டியதற்கான சான்றுகளும் உள்ளன.
முதலாவதாக, 2008-ம் ஆண்டு சேம்பியன்ஸ் கோப்பை போட்டி ரத்தானதை அடுத்து சென்னை ஐ.பி.எல் அணியின் உரிமையாளர் இந்தியா சிமென்ட்சுக்கு ரூ 10.4 கோடி ஈட்டுத் தொகை வழங்க முடிவெடுத்தது சீனிவாசன் தலைமையிலான கிரிக்கெட் வாரியம். தனது சொந்த ஆதாயம் தொடர்பாக முடிவெடுக்கும் அந்தக் கூட்டத்திலிருந்து பெயரளவுக்குக் கூட விலகி இருக்கவில்லை, சீனிவாசன்.
இரண்டாவதாக, 2009-ம் ஆண்டு அவ்வணிக்கு ரூ 13.1 கோடி ரூபாய் ஈட்டுத் தொகை வழங்குகிறது கிரிக்கெட் வாரியம். “சீனிவாசன் தனக்குத் தானே பணத்தை வழங்கிக் கொள்கிறார், அதனால் அவரை வாரியத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” என்று கூக்குரல் எழுந்ததும், இந்தியா சிமெண்ட்ஸ் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறது.
கிரிக்கெட் வாரியப் பொறுப்பில் இருப்பவர்கள் ஐ.பி.எல் அணியை சொந்தமாக்கிக் கொண்டு வணிக லாபம் ஈட்டுவதை அனுமதிக்கும் வகையில் 2008-ம் ஆண்டில் வாரியத்தின் விதி 6.2.4 திருத்தப்பட்டது செல்லாது. வாரியமே வணிக இலாபம் ஈட்டலாமா?
மூன்றாவதாக, குருநாத் மெய்யப்பன் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் வெளியானதும், பொது வெளியில் எழுந்த கோபத்தையும், ஏமாற்றத்தையும் சமாளிக்க சீனிவாசன் தலைமையிலான கிரிக்கெட் வாரியம் அவசர அவசரமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் 2 முன்னாள் நீதிபதிகள் உட்பட 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அறிவிக்கிறது. இடையிலேயே குழுவின் ஒரு உறுப்பினர் அதிலிருந்து விலகி விடுகிறார்.
மீதியிருந்த இரண்டு பேரைக் கொண்ட அந்தக் குழு “பத்திரிகைகளில் வெளியாகும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தான் விசாரணை எதுவும் செய்ய முடியாது” என்று அறிக்கை அளித்து விடுகிறது. அதைப் பயன்படுத்தி விஷயத்தை இழுத்து மூட முயற்சித்தது கிரிக்கெட் வாரியம்.
(இந்த விசாரணைக் குழு தொடர்பாக பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில்தான் இப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.)
5. கிரிக்கெட் வாரியப் பொறுப்பில் இருப்பவர்கள் ஐ.பி.எல் அணியை சொந்தமாக்கிக் கொண்டு வணிக லாபம் ஈட்டுவதை அனுமதிக்கும் வகையில் 2008-ம் ஆண்டில் வாரியத்தின் விதி 6.2.4 திருத்தப்பட்டது செல்லாது. ஒரு விஷயத்தை முடிவு செய்யும் இடத்தில் இருப்பவரே அந்த முடிவால் ஆதாயம் அடைபவராகவும் இருப்பது இயற்கை நீதிக்கு முரணானது.
6. ஐ.பி.எல் போட்டிகளின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் சுந்தரராமன் (சீனிவாசனின் ஆள்) முறைகேடுகளில் ஈடுபட்டாரா என்பதை மேலும் விசாரித்து அது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் இருக்கும் சந்தேகங்களை களைய வேண்டும்.
கிரிக்கெட் வாரியத்தை தமது குடும்ப வியாபார நிறுவனமாக நடத்தி வரும் இந்தியத் தரகு முதலாளிகளின் செயல்பாடுகளில் அவர்கள் விரும்பாத தலையீடுகள் எதுவும் முளைக்காமல் உறுதி செய்திருகிறது. (படம் : கிரிக்கெட் சூதாடிகளில் ஒருவரான தாவூத் இப்ராகிம்)
இந்தத் தீர்ப்பின் தொடக்கமே உச்ச நீதிமன்றத்தின் சுய சந்தேகத்திலிருந்து ஆரம்பிக்கிறது. கிரிக்கெட் வாரியம் தொடர்பான விவகாரங்களில் விசாரணை செய்ய உயர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பி அதற்கு பதில் சொல்கிறது நீதிமன்றம். கிரிக்கெட் வாரியத்தை அரசு நிறுவனம் என்று சொல்ல முடியுமா, மற்றும் அரசியல் சட்டப் பிரிவு 226-ன் கீழ் அதன் விவகாரங்களில் தான் தலையிட முடியுமா என்று முதலில் விளக்குகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நாடு முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதை கட்டுப்படுத்துவதாலும், கிரிக்கெட் போட்டிகள் பல கோடி ரசிகர்களின் ஆர்வத்திற்குரியவையாக இருப்பதாலும், அதன் செயல்பாடுகள் பொது நலனை பாதிப்பதால் அதில் நீதிமன்றங்கள் தலையிடலாம் என்று எச்சரிக்கையாக சொல்கிறது.
அதற்கு முன்னதாக, கிரிக்கெட் வாரியத்தை ஒரு அரசு நிறுவனம் என்று கூற முடியாது என்று தெளிவுபடுத்தி விடுகிறது. அதன் மூலம் கிரிக்கெட் வாரியத்தை வியாபார நிறுவனமாக நடத்தி வரும் இந்தியத் தரகு முதலாளிகளின் செயல்பாடுகளில் அவர்கள் விரும்பாத தலையீடுகள் எதுவும் முளைக்காமல் உறுதி செய்திருகிறது.
இவ்வாறு, கிரிக்கெட் வாரிய நடைமுறைகளை விசாரிப்பதாக கூறிக் கொண்டு, அவற்றை கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளின் கீழாகவே விசாரிக்கப் போவதாக விலகி நிற்கிறது. கிரிக்கெட் உலகில் சீனிவாசன் முதலானவர்கள் நடத்தி வரும் குற்றச் செயல்களை, தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரித்து தண்டனை வழங்கும் அதிகாரத்தை தனக்குத் தானே மறுத்துக் கொள்கிறது.
“ஒரு சிலர் தமது வணிக நோக்கத்துக்காக கிரிக்கெட்டை முறைகேடாக பயன்படுத்துகின்றனர் என்று மக்கள் உணர ஆரம்பித்தால் கிரிக்கெட் வாரியம் தனது லாபத்துக்காகவும், கிரிக்கெட் வீரர்களின் லாபத்துக்காகவும் உருவாக்கியிருக்கும் வருமான வாய்ப்புகள் அனைத்தும் பாழாகி விடும்” – உச்ச நீதிமன்றம்
கிரிக்கெட் ஊழல் குறித்த விசாரணையை வெறும் சென்டிமெண்டாக மட்டுமே உச்சநீதிமன்றம் பார்க்கிறது.
“கிரிக்கெட் விளையாட்டை கண்டு களிக்கும் மக்கள் அது நேர்மையாக விளையாடப்படுகிறது என்றும், அதன் கோட்பாடுகளுக்கும் புனிதமான மீறப்படக்கூடாத நோக்கங்களுக்கும் மாறாக எந்த விதமான ஊழல்களும் நடக்கவில்லை என்று நம்புகின்றனர். அதனால்தான், கிரிக்கெட் இன்னும் பரவலாக பார்க்கப்படுகிறது.”
“மாறாக, ஒரு சிலர் தமது வணிக நோக்கத்துக்காக கிரிக்கெட்டை முறைகேடாக பயன்படுத்துகின்றனர் என்று அவர்கள் உணர ஆரம்பித்தால், போட்டிகளிலும், அதன் நிர்வாகத்திலும் நடக்கும் மோசடிகள் கிரிக்கெட்டின் உண்மை வடிவத்தை சிதைத்து விட்டன என்று அதன் மீது ஆர்வம் இழக்க ஆரம்பித்தால், கிரிக்கெட் வாரியம் தனது லாபத்துக்காகவும், கிரிக்கெட் வீரர்களின் லாபத்துக்காகவும் உருவாக்கியிருக்கும் வருமான வாய்ப்புகள் அனைத்தும் பாழாகி விடும்“ என்று தீர்ப்பில் விளக்கமளித்திருக்கிறார்கள் நீதிபதிகள்.
இதைத் தவிர்க்க வேண்டும். அதாவது கிரிக்கெட் வாரியத்திலோ, ஐ.பி.எல் போட்டிகளிலோ ஊழலோ, மோசடியோ இருப்பதாக பொதுமக்கள் உணராத வகையில் உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் உச்சநீதி மன்றத்தின் நோக்கம். ஊழலையும், மோசடிகளையும் தடுப்பதையோ அவற்றுக்குக் காரணமானவர்களை தண்டிப்பதையோ அது செய்யப் போவதில்லை என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்துகிறது.
பல தரப்பினருக்கும் வாயடைப்பு நிதியாக பல கோடி ரூபாய் வாரி வழங்கி குற்றக் கும்பல் தரகர்களிலேயே தலை சிறந்தவராக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் சீனிவாசன்.
ஊழல்கள், பந்தயம் வைத்து சூதாடுவது, அணி நிர்வாகிகளே சூதாட்டத்துக்காக போட்டியின் போக்கை மாற்றியதாக கூறப்படும் குற்றசாட்டுகள், பெருமளவு பணம் கைமாறுவது என்று சகிக்க முடியாத முடைநாற்றம் இந்திய கிரிக்கெட் உலகை சூழ்ந்திருக்கும் போது அதை மறைப்பதற்கு ஊதுவத்தி ஏற்றி வைக்கும் வேலையை மட்டும் செய்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
அதற்காக, கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்வதற்காக, ‘கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகளிலிருந்து (ஐ.பி.எல்) அதன் நிர்வாகிகளே ஆதாயம் பெறலாம் என்ற வகையில் விதி திருத்தப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்.’ என்று உத்தரவிட்டிருக்கிறது. அதன் மூலம், சீனிவாசன் கிரிக்கெட் வாரிய பதவி அல்லது சென்னை ஐ.பி.எல் அணி இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கண்டிப்பு காட்டியிருப்பதாக ஊடகங்கள் பில்ட்-அப் கொடுக்கின்றன.
ஆனால், பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரளும் இந்திய கிரிக்கெட் எனும் மாபெரும் மோசடி தொடர்பாக ஒரு துரும்பைக் கூட சரிசெய்ய முன்வரவில்லை உச்ச நீதிமன்றம்.
முதலாவதாக, இந்தியாவின் பிரம்மஸ்ரீ கிரிமினல்கள் வரிசையில் வரும் சீனிவாசன், கிரிக்கெட் வாரியத் தலைவர் என்ற முறையில், இயற்கை நீதிக்கு விரோதமாக சென்னை அணிக்கு ஆதாயம் தேடும் வகையில் நடந்து கொண்டார் என்பதற்கான சான்றுகளை குறிப்பிட்டாலும், அவர் குருநாதன் விவகாரத்தை மூடி மறைக்க முயற்சித்ததற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அவரை விடுவித்திருக்கின்றது.
இரண்டாவதாக, 2008-ம் ஆண்டு அவ்வாறு “இயற்கை நீதி”க்கு விரோதமாக வாரிய விதியைத் திருத்திய இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், மகாராஷ்டிரா தரகர் சரத்பவார், சசாங்க் மனோகர், ஐ.எஸ் பிந்த்ரா, லலித் மோடி ஆகியோருக்கு தண்டனை என்று முணுமுணுக்கக் கூடத் துணியவில்லை நீதிபதிகள்.
மூன்றாவதாக, “இந்தியா சிமென்ட்ஸ் தனது அணியில் பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதால்” அப்படி ‘இயற்கை நீதி’க்கு மாறாக சீனிவாசன் பெற்றுக் கொண்ட ஐ.பி.எல் அணி உரிமையில் தான் இப்போது தலையிட முடியாது என்கிறது தீர்ப்பு. அதாவது, பண மூட்டைகளின் நலன்களை பாதுகாப்பது ஒன்றுதான் உச்சநீதி மன்றத்தின் ஒரே நோக்கம்.
நான்காவதாக, குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும், அவர் சென்னை அணியின் நிர்வாகியாகவே செயல்பட்டாலும், அவரது நடவடிக்கைகளுக்கும் சீனிவாசனுக்கும் தொடர்பில்லை என்று முடிவு செய்கின்றனர் நீதிபதிகள். குருநாத் மெய்யப்பன் சென்னை அணி நிர்வாகத்தில் தலையிட்டதும், பிரதிநிதியாக அமர்த்தப்பட்டதும் சீனிவாசனின் மருமகன் என்ற ஹோதாவில்தான் என்ற ஊரறிந்த உண்மை கிரிக்கெட்டின் புனிதத்தை காப்பாற்றுவதில் ஈடுபட்டிருக்கும் நீதிபதிகளுக்கு தெரிந்திருக்கவில்லை.
“அணி நிர்வாகத்தில் குருநாத் மெய்யப்பனுக்கு எந்த பங்கும் இல்லை, அவர் ஒரு சாதாரண கிரிக்கெட் ரசிகர்தான்” என்று சென்னை அணியின் தலைவராக இருந்த மகேந்திர சிங் தோனியும், அவ்வணியின் முதலாளி சீனிவாசனும் முட்கல் கமிட்டியிடம் கொடுத்த வாக்குமூலம் பொய் .
ஐந்தாவதாக, இந்நிலையில் “அணி நிர்வாகத்தில் குருநாத் மெய்யப்பனுக்கு எந்த பங்கும் இல்லை, அவர் ஒரு சாதாரண கிரிக்கெட் ரசிகர்தான்” என்று சென்னை அணியின் தலைவராக இருந்த மகேந்திர சிங் தோனியும், அவ்வணியின் முதலாளி சீனிவாசனும் முட்கல் கமிட்டியிடம் கொடுத்த வாக்குமூலம் பொய் என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. பொய் வாக்குமூலம் கொடுத்தவர்களுக்கு ஒரு பெயரளவு அபராதம் விதிக்கக் கூட துணியவில்லை இந்த ‘உச்ச்ச்சா’ நீதிமன்றம்.
ஆறாவதாக, தனது தீர்ப்பு கிரிக்கெட் வாரியத்துக்கு பிடிக்காமல் போய் விடுமோ என்ற அவநம்பிக்கையோ என்னவோ, அந்த வாரிய முதலைகளின் நல் இயல்புகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறது தீர்ப்பு.
“ஊழலுக்கு எதிரான உங்கள் விதிகள் கூட, விளையாட்டின் தூய்மையின் மீது பொதுமக்களின் நம்பிக்கை குறைந்து விட்டால், கிரிக்கெட்டின் சாராம்சமே ஆட்டம் கண்டு விடும் என்று அழுத்தம் திருத்தமாக கூறுகின்றன. கிரிக்கெட் ஆட்டத்தின் புனிதத்தை பாதுகாக்கவும், அதன் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் முயற்சிகளை தடுக்கவும் நீங்களே உறுதி பூண்டிருக்கிறீர்கள்.
வேறு எந்த விளையாட்டிலும் இல்லாத அளவுக்கு ஆர்வத்துடனும் உணர்ச்சியுடனும் கிரிக்கெட் மைதானத்திலும், தொலைக்காட்சியிலும் கிரிக்கெட் போட்டிகளை பார்த்து மகிழும் அப்பாவி பார்வையாளர்களை ஏமாற்றுவதற்கான மோசடிதான் இந்த அமைப்பு என்ற கருத்து அவர்களிடையே பரவினால் அதை கிரிக்கெட் வாரியம் சகித்துக் கொள்ள முடியுமா” என்று அவர்களிடம் மன்றாடுகிறது உச்ச நீதிமன்றம்.
வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே சீனிவாசன் எந்த எதிர்ப்பும் இன்றி, ஒரு மனதாக வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஏழாவதாக, சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பனுக்கும், ராஜ் குந்த்ராவுக்கும் என்ன தண்டனை, சுந்தர ராமன் தவறு செய்தாரா, கிரிக்கெட் வாரிய விதிகளை எப்படி திருத்த வேண்டும் இவற்றை முடிவு செய்வதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையில் நீதிபதி அசோக் பான், நீதிபதி ஆர்.வி ரவீந்திரன் என்ற இரண்டு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகளை உறுப்பினராக கொண்டு ஒரு கமிட்டியை அமைத்திருக்கிறது உச்சநீதி மன்றம்.
இந்த கமிட்டி 6 மாதங்களுக்குள் மேற்சொன்ன விவகாரங்களில் தனது தீர்ப்பைச் சொல்ல வேண்டும். கமிட்டி உறுப்பினர்களுக்கான ஊதியம், அதன் அலுவலகம், போக்குவரத்து, தங்குமிடம், பிற செலவுகள் என்னவென்று கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு குறிப்பிடுகிறது. அதாவது, ஓய்வுபெற்ற நீதிபதிகளும் தமது பங்குக்கு அதிகாரத்தையும் அது கொண்டு வரும் வசதிகளையும் அனுபவித்துக் கொள்ள வழி வகுக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, இந்த முறைகேடுகள் தொடர்பாக கிரிக்கெட் வாரியமே விசாரித்து தீர்ப்பளிக்கும் என்று சொன்னால், அதற்கு எந்த நம்பகத்தன்மையும் இருக்காது என்பதை உணர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூலம் அந்த விசாரணைக்கு ஒரு புனிதத்தை கொடுக்கிறது இந்தத் தீர்ப்பு.
இது தொடர்பாக எழுதியிருக்கும் கிரிக் இன்ஃபோ தளத்தின் கிரிக்கெட் ஆசிரியர் சம்பித் பால், “கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் ஊழல்களில் ஐ.பி.எல் சூதாட்டம் என்பது ஒரே ஊழலோ அல்லது முதலாவதோ இல்லை. பல ஆண்டுகளாக பணக்காரர்களின் ஒரு மேட்டுக்குடி கிளப்பாக செயல்படும் கிரிக்கெட் வாரியத்தின் மேலும் வசதியான மேட்டுக் குடி கிளப்தான் ஐ.பி.எல்” என்று எழுதுகிறார்.
இந்திய கிரிக்கெட்டை முழுக்க முழுக்க ஊழல் மயமாக்கி, முன்னாள் இன்னாள் வீரர்கள், மாநில சங்கங்களின் நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் என்று பல தரப்பினருக்கும் வாயடைப்பு நிதியாக பல கோடி ரூபாய் வாரி வழங்கி குற்றக் கும்பல் தரகர்களிலேயே தலை சிறந்தவராக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் சீனிவாசன். அவரிடம் பொறுக்கித் தின்ற தோனி, கவாஸ்கர், ரவி சாஸ்திரி முதலான இந்த ஒட்டு மொத்த அமைப்புமே புழுத்து நாறிக் கொண்டிருக்கிறது.
இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே சீனிவாசன் எந்த எதிர்ப்பும் இன்றி, ஒரு மனதாக வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதிலிருந்து இந்திய கிரிக்கெட் குடும்பத்தின் ஊழலை புரிந்து கொள்ளலாம்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த புரோக்கர் சரத் பவாரின் முயற்சிக்கு ஆதரவு கிடைக்குமா என்று ஊடகங்கள் பரபரப்பூட்டிக் கொண்டிருக்கின்றன.
கிரிக்கெட் என்ற விளையாட்டில் கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈடுபடுத்தி, அவர்களை மையமாக வைத்து முதலாளிகள் பல ஆயிரம் கோடி ரூபாய் சட்ட ரீதியாகவும், சட்ட விரோதமாகவும் கல்லா கட்டுவதை அங்கீகரித்து அதைப் பாதுகாக்க கடுமையாக உழைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
சின்னவீடு வைத்திருக்கும் பண்ணையார்கள் அந்த பெண்களின் வளர்ப்பு மகள்களையும் சொந்தமாக்கிக் கொள்ள முயற்சிப்பது போல கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டே ஐ.பி.எல் அணியையும் சொந்தமாக வைத்திருந்தார் சீனிவாசன்.
“ஒன்று இதை வைத்துக் கொள், இல்லை அதை வைத்துக் கொள், இரண்டையும் நீயே வைத்துக் கொண்டால் ஊரில் பேர் கெட்டு விடும். அப்புறம் ஒரு பய கிரிக்கெட் பார்க்க வர மாட்டான்” என்று மட்டும் செல்லமாக கண்டித்து சீனிவாசனும் மற்ற முதலாளிகளும் தமது திருவிளையாடல்களை தொடர ஏற்பாடு செய்திருக்கிறது நாட்டாமை உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அடுத்த 6 வாரங்களுக்குள் நடக்கவிருக்கும் கிரிக்கெட் வாரிய தேர்தல்களில் என்ன நடக்கும் என்ற பரபரப்பு செய்திகளை எழுத ஆரம்பித்திருக்கின்றன ஊடகங்கள். சென்னை அணியை சட்ட ரீதியாக (கண்துடைப்புக்கு) கைமாற்றிக் கொடுத்து விட்டு தலைவர் போட்டிக்கு சீனிவாசன் போட்டியிடுவாரா, மேற்கு வங்கத்தின் டால்மியா அவரை எதிர்ப்பாரா, மகாராஷ்டிராவின் புரோக்கர் சரத் பவாரின் முயற்சிக்கு ஆதரவு கிடைக்குமா என்று பரபரப்பூட்டிக் கொண்டிருக்கின்றன.
வெற்றி பெறப் போவது சீனிவாசன் + பா.ஜ.க கூட்டணியா, சரத்பவார் + பா.ஜ.க கூட்டணியா, அல்லது சீனிவாசன் + சரத்பவார் கூட்டணியா?
இதில் தீர்மானிக்கும் காரணியாக இருக்கப் போவது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் ஆதரவுதான் என்கிறது தி ஹிந்து நாளிதழ். அதாவது சீனிவாசனுக்கும், சரத்பவாருக்கும் தலா 8 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதாம். மோடி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் 8 உறுப்பினர்கள் யார் தலைவராவார்கள் என்பதை தீர்மானிக்கும் காரணியாக இருப்பார்களாம்.
வெற்றி பெறப் போவது சீனிவாசன் + பா.ஜ.க கூட்டணியா, சரத்பவார் + பா.ஜ.க கூட்டணியா, அல்லது சீனிவாசன் + சரத்பவார் கூட்டணியா? இவற்றில் எந்த கும்பல் கிரிக்கெட் விளையாட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மக்களுக்கு மொட்டையடிக்கப் போகிறது என்பதுதான் இப்போதைய விவாதப் பொருள்.
ஊழல், மோசடி, கருப்புப் பணம், ஏமாற்றுதல் நிறைந்த இந்த விளையாட்டை மாலை நேர பொழுதுபோக்காக பார்க்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அதன் மீதான தமது தீர்ப்பை எழுதும் நேரம் வந்து விட்டது. இல்லையென்றால் ஆட்டத்தில் அடிக்கப்படும் சிக்சர் மட்டுமல்ல, ஆட்டத்தை நடத்தும் வாரியமும் தொடர்ந்து “மேட்ச் பிக்சிங்கில்” ஈடுபடும். அதை கொஞ்சம் நேர்த்தியாக செய்யுமாறு கோருகிறது உச்சநீதிமன்றம். இந்தச் சதிக்கு பலியாகப் போகிறீர்களா?
கொங்கு வேளாளக் கவுண்டர்கள்தான் மேற்கு தமிழகத்தின் முதன்மையான ஆதிக்க சாதி. பிற்படுத்தப்பட்ட பட்டியிலில் வரும் வன்னியர், முக்குலத்தோர் போன்ற ஏனைய ஆதிக்க சாதிகளை விடவும் இவர்கள் சமூக ரீதியில் மேல் தட்டில் இருக்கிறார்கள். தற்போது திருப்பூர் தொழிலதிபர்கள், நாமக்கல் வட்டார பிராயலர் பள்ளிகள், வட்டார கோழிப்பண்ணைகள், லாரி நிறுவனங்கள் அனைத்திலும் இவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். கணிசமானோர் விவசாயிகளாகவும் நீடிக்கிறார்கள்.
காருண்யா கல்லூரி வழியில் இருக்கும் நாதே கவுண்டன் புதூரில், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு “ஆதித்தமிழர் பேரவை” எனும் அருந்ததியருக்கான இயக்கத்தின் கொடி, பெயர்ப்பலகை நட்ட போது கவுண்டர்கள் பொருளாதாரத் தடை விதித்தனர்.
பொருளாதார வாழ்க்கையில் கவுண்டர்களையே சார்ந்து இருக்கும் அம்மக்கள் தடையை மீறி தாக்குப்பிடிக்க முடியுமா? இறுதியில் பெயர்ப்பலகையும், கொடி மரமும் காணாமல் போனது. பிறகு இத்தகைய போராட்டங்களுக்கு பிறகு அருந்ததியருக்கான அமைப்புகள் கோவைப் பகுதியில் செயல்பட்டாலும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு சாதிக்க முடியவில்லை.
கோவை சூலூர்அருகே உள்ள தேநீர் கடையின் புறவாசல் – தலித்துக்கள் மட்டும் டீ சாப்பிடும் இடம். (நன்றி: டெக்கான் குரோனிக்கிள் 09.04.2014)
தமிழகத்திலேயே இரட்டைக் குவளை தேநீர்க் கடைகள் அதிகமிருப்பது இங்குதான்.தலித் மக்களை பெயர் சொல்லி அழைத்தால் அது கொஞ்சம் கௌரவம். மாதாரி என்று அழைத்தால் மீடியம். சக்கிலி என்று அழைத்தால் கவுண்டர் கோபமாக இருக்கிறார் என்று பொருள். இது போக வயதானவர்களைக் கூட நீ போ, தே, நா என்று அழைப்பதெல்லாம் சகஜம். கொங்கு தமிழின் அழகை கோவை சரளாவிடம் ரசித்தவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கும்.
தேவர்-பள்ளர், வன்னியர்-பறையர் திருமணங்களெல்லாம் நடக்க முடிந்த தமிழகத்தில் கவுண்டர்-அருந்ததி திருமணம் மட்டும் இன்னும் பாலைவனக் கனவு. கவுண்டர்கள் என்னமோ “சின்னக் கவுண்டர்”களாகவே உலா வருகின்றனர்.
கடந்த இருபது ஆண்டுகளில் கொங்கு தமிழ், பொள்ளாச்சி கிராமங்கள், துண்டு, பித்தளை சொம்பு, சொம்பிலிருக்கும் வெற்றிலை எச்சில் உள்ளிட்டு விதவிதமாக பில்டப் கொடுத்து கவண்டர்களை தமிழ் சினிமா டபுள் கவுண்டர்களாக்கியதன் விளைவை பெருமாள் முருகன் அனுபவிக்கிறார் என்றும் சொல்லலாம்.
உடுமலை, காங்கேயம், பொள்ளாச்சி போன்ற நகரங்களில் கூட இன்றைக்கும் ஒரு பொது திருமண மண்டபத்தை ஏதேனும் ஒரு தலித் அமைப்பு வாடகைக்கு கூட எடுத்து விட முடியாது. இது போக நகரங்களின் கடைகள், சிறு தொழில்களிலும் தலித் மக்களுக்கு இடமில்லை. தென் மாவட்டங்களில் இருக்கும் கல்லூரிகளில் தேவர், பள்ளர் மாணவர் மோதலோ பிரிவோ இருக்கும். இங்கே அப்படி எதுவும் கிடையாது. காரணம் இங்கே கவுண்டர்களை எதிர்த்து தலித் மாணவர்கள் எதுவும் செய்ய முடியாது. அனைத்து கல்வி நிறுவனங்களும் கவுண்டர்களின் கையில்.
இது ஒரு உண்மைக் கதை. இவ்வட்டார அரசு அலுவலகம் ஒன்றில் அருந்ததி சாதியைச் சேர்ந்த ஒருவர் அதிகாரியாக வருகிறார். அலுவலக உதவியாளர் (பியூன்) தொடங்கி மற்ற ஊழியர்களில் கவுண்டர்களே பிரதானம். கவுண்டன் கோட்டையில் சக்கிலி ஆபிசரா என்று ஆரம்பித்தது பிரச்சினை. எண்ணிறந்த முறைகளில் அந்த அதிகாரிக்கு சித்ரவதைகள். வருகைப் பதிவேட்டில் அவர் இட்ட கையெழுத்து மாயமாகும். அவர் ஒப்புதல் தெரிவித்த அலுவலக கோப்புகள் எரிந்து போகும். துறை விசாரணையில் அரசு நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்தது.
இந்த கவுண்டர் நீதியின்படிதான் பெருமாள் முருகனும் எழுத்துப் பணியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார்.
இளவரசன் திவ்யா பிரச்சினையை ஒட்டி ஆதிக்க சாதி கூட்டணியை ராமதாஸ் கட்டிய போது கொங்கு வேளாளர் சங்கங்களே முன்னணி வகித்தன. கவுண்டர் சாதி வெறியை இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும்.
எல்லா ஆதிக்க சாதிகளிலும் அதன் வர்க்கரீதியான கீழ் நிலையில் இருக்கும் மக்கள்தான் தமது சொந்த சாதிகளின் போலித்தனத்தை கிழித்து தொங்க விடுவார்கள். அப்படி மாதோரு பாகன் நாவலில் நாயகன் காளியின் சித்தப்பா ஒருவர் வருகிறார். குடுமியை வெட்டி கிராப் வைத்தவரை ஆலமரத்தடி பஞ்சாயத்தில் விசாரிக்கிறார்கள். இதனால் மழை பெய்யாது அது இது என்று நீதிமான்கள் துளைக்க, தலை முடியை மட்டுமல்ல, குஞ்சு மயிரையும் சேர்த்தே எடுத்திருக்கிறேன் அதற்கு என்ன நடக்கும் என்று பஞ்சாயத்தாரின் வாயை அடக்குகிறார் அந்த சித்தப்பா.
அவர் மீது வந்த கேலிக்கு இப்படி பதிலளிக்கிறார்:
“சக்கிலிப்பையன் ஆக்குன சோத்தத் தின்னுக்கிட்டு நானும் கவண்டன்னு நடக்கறானே நல்லான்’ என்று யாராவது பேசியது தெரிந்தால் ‘சக்கிலிச்சி மணப்பா. சக்கிலிப் பையன் மட்டும் நாறுவானா?’என்று கேட்டுவிடுவார்.”
ஆதிக்க சாதிகளிடம் சிக்குண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு இந்தக் கொடுமைகள் இன்றும் தொடரும் யதார்த்தம். இதை பல எழுத்தாளர்கள் தமது நாவலிலோ இல்லை கட்டுரைகளிலோ எழுதியிருக்கிறார்கள். எங்களது பத்திரிகைகள், துண்டுப்பிரசுரங்கள், மேடைப் பேச்சுக்களிலும் இந்த அநீதியை எதிர்த்து எழுதுவதோடு பேசியுமிருக்கிறோம். சூத்திரன் தீட்டு, அவன் தரும் காசு புனிதமா என்று பார்ப்பனியத்தை எதிர்த்து எழும்பும் கேள்வியின் உட்கிடையும் இதுதான்.பொருளியல் காரணத்தால் அடிமைப்பட்ட மக்கள், தமது வாழ்வியல் ‘கடன்’களை தீர்ப்பதற்கு இந்த வன்புணர்வு கொடூரங்களை சகித்துக் கொண்டு வாழ வேண்டியிருக்கிறது. இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆண்களின் மனதிலும், பொருமிக் கொண்டிருக்கும் ஒரு உளவியல் வதை. கீழத்தஞ்சையில் மணமான கூலித் தொழிலாளிகளின் மனைவிமார்களை, ஆண்டை நினைத்தால் பெண்டாள முடியும் என்ற கொடுமை, பொதுவுடமை இயக்கம் வந்த பிறகே ஒழிக்கப்பட்டது.
தூமை (மாதவிலக்கு) நாட்களில் பெண்கள் வேலைக்கு போவதுதான் பாரத தேசத்தின் மாபெரும் சுற்றுச் சூழல் கேடு, அனைத்து சீரழிவுகளுக்கும் காரணம் என்று சங்கராச்சாரி சொன்னார். மற்றொரு பக்கம் மடத்தில் நடந்த கொடுமைகளை அனுராதா ரமணன் தைரியமாக எடுத்து வைத்தார்.
ஆதிக்க சாதி ஆண்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளின் பெண்களை நுகர்வது சாதி கௌரவம். அங்கே தொடுவது தீட்டல்ல – ஆண்மை. மறுபுறம் ஆதிக்க சாதி பெண்களை ஒடுக்கப்பட்ட சாதி ஆண்கள் தொட்டால் அது இழிவு, பொறுக்க முடியாத அவமானம். ஆகவே அவர்கள் பெண்கள் கற்புடனும் மற்ற பெண்கள் தேவதாசியாகவும் இருக்க வேண்டும். இரண்டையும் மறுக்கவோ மாற்றவோ முடியாது.
நாவலில் குழந்தையின்றி தவிக்கும் தனது மகன் திருவிழா ஒன்று கூடலுக்கு மனைவியை அனுப்ப சம்மதிக்க வேண்டுமென்று காளியிடமே நேரடியாக பேசுகிறாள் அவனது தாய்.
“ஒலகத்துல ஆருக்குக் கொற இல்ல? எல்லாருத்துக்கும் எதாச்சும் ஒரு கொறைய இந்தச் சாமி வெச்சிருக்குது. அதப் போக்கிக்கிறதுக்கு வழியையும் அதே சாமி வெச்சுத்தான் இருக்குது. உங்கிட்டக் கொறையோ அவகிட்டக் கொறையோ தெரியாது. கொறைன்னு வந்தாச்சு. அதுக்கு ஒருவழி இருக்குது. அதையுந் தான் பாப்பமே. உம் மனசு ஏத்துக்கிட்டா எல்லாஞ் செரியாப் போவும். எத்தனையோ பொம்பளைங்க அப்பிடி இப்பிடி இருக்கறாங்க. ஆருக்குத் தெரியுது? தெரிஞ்சாலும் பாத்தும் பாக்காம போறாங்க. எதையும் மறப்பா செஞ்சாத் தப்பில்லையிங்கறாங்க. இதுவும் அப்பிடி மறப்புத்தான். ஆனா உனக்குத்தெரிஞ்சு, நீ ஒத்துக்கிட்டுத்தான் செய்யோணும். வெச்சுப் பொழைக்கறவன் நீ.”
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரன் கோவில் நுழைவாயில் – அந்தக் கால மக்கள் சந்திக்கும் பொது இடம்!
இந்த உரையாடலில் தமது குடும்பத்து பெண்களை அவமானப்படுத்திவிட்டார் என்று கவுண்டர்கள் பொங்கி எழுந்தாலும் கிராமங்களில் இந்த உறவு மீறல்களுக்காக பொங்கி எழ முடியாது. எழுந்தால் சாதிய கட்டுமானமும் அது தரும் சலுகைகளும் கேள்விக்குள்ளாக்கப்படும்.
“ நீ ஊர்ல கல்யாணம் பண்ணத பாத்தி நாலு பேரு நாலு விதமாத்தான் சொல்லுவாங்க! என்னப் பொறுத்தவரை நீ செஞ்சதுதான் சரி! புருசன் இல்லேன்னா நம்ம விட்ருவாய்ங்களா ஆம்பளைங்க. உத்தமியா இருந்தாலும் பத்து தடவை கல்லத் தூக்கி அடிச்சா நமக்கே தெரிஞ்சிரும் இத விட்ட வேற வழியில்லேன்னு. பத்து நாய் கடிய சகிச்சிக்கிறதுக்கு ஒருத்தனோட மரியாதையா வாழ்ந்துட்டு போயிறலாம்”
– இது மாதொருபாகன் நாவலில் வரும் வார்த்தையல்ல. விதவை திருமணத்தை கொடுங்குற்றமாக வைத்திருக்கும் ஒரு கிராமத்தில், துணிந்து மறுமணம் செய்து கொண்ட ஒரு கிராமத்து பெண்ணுக்கு பைத்தியம் என்று பட்டம் கட்டப்பட்ட இன்னொரு பெண் வழங்கிய ஆறுதல்.
வழக்காக சொன்னால் மறுமணம் செய்வதை அறுத்துக் கட்டிய சாதி என்று மட்டமாக பேசுவார்கள். எதாவது கருத்து வேறுபாடு, விவாதம் வந்தால் ஒருத்தனுக்கு முந்தானை விரிச்சிருந்தான்னா அவளுக்கு தெரியும் என்று தொட்டதுக்கெல்லாம் முந்தானையை இழுப்பார்கள்.
ஆக காதலும், விவாகரத்தும், மறுமணமும் ஒரு பெண்ணுக்கு உரிமையாக வந்தால் ஆதிக்க சாதி தர்மம் அதை தேவடியாத்தனம் என்றே தூற்றும். மறுபுறம் ஆதிக்க சாதி பெண்கள் விதவைக் கோலத்தை ஏற்றுக் கொண்டு முடங்கி கிடந்தால் அவர்களை தங்களுக்கு சொந்தமான “தேவடியாக்களாக” மாற்றும். இத்தகைய ஆதிக்க சாதி நீதிதான் தங்கள் குலப் பெண்களை பெருமாள் முருகன் இழிவுபடுத்திவிட்டதாக பொங்குகிறது.
இக்காட்சி கோவில் திருவிழாவின் பிள்ளைப் பேறு ஒன்று கூடல் இரவை வருணிக்கிறது.
“வீதிகளில் சாயங்காலம் முதலே அலையத் தொடங்கி விட்டான். இறக்கத்துக் கோயிலுக்கு எதிரே இருந்த தேவடியாள் தெருவில் அன்றைக்குக் கூட்டமேயில்லை. அந்தப் பெண்கள் நன்றாகச் சிங்காரித்துக்கொண்டு மண்டபங்களில் ஆடப் போனார்கள். ‘இன்னக்கி நம்மள எவன் பாக்கறான். எல்லாப் பொம்பளைங்களும் இன்னக்கித் தேவடியாதான்’ என்று அவர்கள் பேசிச் சிரித்துப் போனார்கள்.”
நேர் பொருளில் இழிவுபடுத்துவதாக தோன்றும் இந்த பேச்சு உண்மையில் எதிர்மறையால் உருவாக்கப்பட்டவர்கள் தம்மை எதிர்மறையாக உருவாக்கிய சமூகம் குறித்து எதிர்மறை வடிவில் ஆனால் உட்பொருளில நேர்மறை விமரசினமாக வெளிப்படுத்துவதை உணர்த்துகிறது.
“கற்பின்” போலித்தனத்தை ஒரு தேவதாசிதான் மற்ற எவரையும் விட விளக்க முடியும். காரணம் கற்பை பாதுகாக்கும் கடமையை ஏற்றிருக்கும் கனவான்களை அவள்தான் அன்றாடம் தரிசிக்கிறாள்.
வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வினவு தோழர்கள் எடுத்த கருத்துக் கணிப்பின் படி தாழ்த்தப்பட்டவர்களை மணம் செய்த வன்னியப் பெண்களின் வாயிலிருந்து சாதி ஆதிக்கத்தை சுட்டுப் பொசுக்கும் வார்த்தைகளை கவித்துமாக கேட்டிருக்கிறோம். அதையே பெருமாள் முருகன் தனது நாவலில் கோடிட்டுக் காட்டுகிறார்.
எங்கே கற்பின் மேன்மையும் அதைப் பாதுகாக்கும் கடமையும் ஓங்கி உரைக்கப்படுகிறதோ அங்கேதான் பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள். “மாதொரு பாகம்” நாவலை எதிர்த்து இணையத்தில் எழுதும் கொங்கு ‘சிங்கங்கள்’ இதை உறுதி செய்கின்றன. மற்ற சாதிகளை விட விதவைகளுக்கு வெள்ளுடை தரித்து மறுமணம் செய்யாமல் சாகும் வரை கற்புக்கரசியாக காத்த மண் என்கிறார்கள். கணவன் இறந்த பின்பு உடன்கட்டை ஏறி கற்பாத்தாக்களாக பல ஆத்தக்கள் வழிபடப்படும் பகுதி என்கிறார்கள். இதை பெருமையாக பீற்றுபவர்கள் பெருமாள் முருகனின் எழுத்தை எரிக்கத்தான் செய்வார்கள்.
கொங்கு மண்ணின் கற்பு சென்டிமென்டை அறுவடை செய்ய பாரதக் கற்பை குத்தகைக்கு எடுத்திருக்கும் இந்துமதவெறியர்கள் ஓடோடி வருகிறார்கள். இந்த நாவல் ஆங்கிலத்தில் வெளியானதும் புது தில்லியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் குழுமம் அதை படித்து தடை செய்ய வேண்டிய பட்டியலில் இணைத்து அதற்கான முயற்சிகளை செய்தாகவும் பலர் கூறியிருக்கின்றனர்.
ஆதிக்க சாதி உணர்ச்சியும் இந்து உணர்ச்சியும் வேறு வேறல்ல. முன்னதில் தலித்துக்களும் பின்னதில் சிறுபான்மையினரும் வில்லன்கள் என்பதால் இவர்கள் இயல்பிலேயே பங்காளிகள். திருச்செங்கோட்டின் மக்கள் நாவலை எரித்ததில் நாங்கள் பங்கேற்கவில்லை என்றது ஆர்.எஸ்.எஸ் தரப்பு. பிறகு உணர்ச்சிவசப்பட்ட லோக்கல் ஆட்கள் இருந்தார்கள் என்றார்கள். பிடித்துக் கேட்டால் ஃபிரின்ஞ்ச் குரூப் செய்திருக்கும் என மாற்றினார்கள்.
வட இந்திய விதவைகள் – இந்து மதம் பெண்களை போற்றும் இலட்சணம்!
இறுதியில் இந்து முன்னணி இராம கோபாலனே களத்திற்கு வருகிறார். இவர்தான் அந்த ஃபிரின்ஞ்ச் குரூப்பின் தலைவர் போலும்.
“மாதொரு பாகன்’ என்பது உயர்ந்த தத்துவம். திருச்செங்கோட்டிற்கு புகழ் சேர்க்கும் சிவபெருமானின் இந்தத் திருவிளையாடலை கொச்சைப்படுத்தி எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய நாவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோட்டில் வாழும் பெண்களை கீழ்த்தரமாக சித்தரிப்பதை ஏற்க முடியாது.”
“மாதொரு பாகன்’ நாவலில் பெருமாள் முருகன் என்ன எழுதியுள்ளார் என்பதை நீதிபதிகள் படிக்க வேண்டும். அப்போது தான் திருச்செங்கோட்டு மக்களின் உணர்வுகளையும், அவர்களின் எதிர்ப்புக்கான காரணங்களையும் புரிந்துகொள்ள முடியும். இந்த வழக்கில் மக்களின் கருத்தை அறியவும், இந்து முன்னணி சார்பாக வழக்காடவும் நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்.”- என்று அறிக்கை விட்டிருக்கிறார் இராம கோபாலன்.
மாதொரு பாகம் என்று அறிவித்தது சிவன்தானே? அறிவிக்கும் அதிகாரம் மாதாவுக்கு இல்லாத போது பாகத்தின் மதிப்பென்ன? இந்த திருவிளையாடல் தத்துவம் வேருன்றியிருக்கும் வட இந்தியா, பெண் சிசுக் கொலையில் சாதனை படைத்து வருவது ஏன்? பா.ஜ.க ஆளும் ஹரியானா மாநிலம் அதில் முதலிடத்தில் இருப்பது தற்செயலானதா?
பெருமாள் முருகன் பெண்களின் சுதந்திரத்தை சித்தரித்தார். இந்துமதவெறியர்களோ பெண் குழந்தைகளை கழுத்தறுக்கின்றனர். இந்த உரிமை பறிபோய்விடக்கூடாது என்றே இந்துமதவெறியர்கள் ஆதிக்க சாதியினருக்கு கொடியும் தடியும் பிடிக்கின்றனர்.
நாவலின் காலத்தில் மக்கள் ஒன்று கூடும் இடம் கோவிலும், திருவிழாவாகவும்தான் இருக்கும். இன்று போல மல்டிபிளக்ஸோ, சூப்பர் மார்கெட்டோ இல்லை ஃபேஸ்புக்கோ கிடையாது. “விருந்தாளிக்கு பிறந்தவன், சந்தையில் தரிச்சவன்” என்று வசை மொழிகள் கூறும் பொருள் என்ன? மூச்சு விட முடியாத சாதிய சமூகத்தின் பிடியிலிருந்து சுய விருப்பமும், காதலும் தரிக்கும் இடமாக அந்தக்கால கோவில் திருவிழாக்கள், சந்தைகள் இருந்திருக்கின்றன.
தமிழ் சினிமாக்களில் இன்றும் கூட கோவில் காட்சிகளில்தான் நாயகனும், நாயகியும் காதலைத் தொடங்குகின்றனர். இதை இந்து முன்னணி எதிர்த்து பார்க்கட்டுமே? பிறகு ஒரு பயலும் கோவிலை ஏறெடுத்து பார்க்க மாட்டான். தற்போதே அந்த சங்கமத்தின் வாய்ப்பை செல்பேசியும் இணையமும் ஏற்படுத்தி வருகின்றன.
கோவில் எனும் மத ஆன்மீக விசயத்தோடு கொளுத்திப் போட்டால் மக்களை உடன் வெறுக்கச் செய்ய முடியும் என்று இந்துமதவெறியர்கள் கச்சிதமாக போட்ட திட்டமே திருச்செங்கோட்டு பக்தர்கள் பெயரில் காட்டிய எதிர்ப்பு. இன்று ஊடகங்களில் இந்துமதவெறியர்கள் பேசும் போது கோவிலை விபச்சார மடமாகவும், பெண்களை விபச்சாரியாகவும் இழிவுபடுத்தியதாக தொடர்ந்து பொய்யுரைக்கின்றனர்.
சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது எமது தோழர்கள் மோடியை எதிர்த்து உடுமலைப் பேட்டையில் பிரச்சாரம் செய்தனர். கொலைகார மோடி எனும் அந்த துண்டுப்பிரசுரத்தை பார்த்த ஈஸ்வரன் கட்சிக்காரர்கள் உடன் ஆள் திரட்டி தோழர்களை தாக்க வந்தனர். பின்னர் எஸ்.பி வரை பேசி பிரச்சாரம் செய்யும் உரிமையை தோழர்கள் நிலைநாட்டினர். இப்படி மோடிக்கு ஒன்று என்றால் கவுண்டர் சங்கம் ஓடி வருவதும், கவுண்டர் மானத்திற்கு பங்கம் என்று ஆர்.எஸ்.எஸ் ஓடி வருவதும் அங்கே சகஜம்.
கோவை நாயுடு தொழிலதிபர்கள், மார்வாடி வணிகர்கள், கொங்கு வேளாளர்கள் என்ற மூவர் கூட்டணியை வைத்தே பா.ஜ.க அங்கே செல்வாக்கை வளர்த்து வருகிறது. அதே நேரம் முசுலீம்களை எதிர்த்த கலவரத்திற்கு தலித்துக்களை அடியாட்களாக பயன்படுத்தியும் வந்திருக்கிறது. கீழே முசுலீம் எதிர்ப்பு, மேலே தலித் எதிர்ப்பு என்ற கொள்கைக் கூட்டணியில் சாதி மற்றும் மத சேர்க்கை அங்கே உருவாகி விட்டது.
17.01,2015 தினமணியில் வந்த செய்தி….
“எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலுக்கான எதிர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பெருமாள் முருகனின் பின்னணி ஆய்வுக்குரியது. இதுபோன்ற பண்பாட்டுச் சீரழிவுக்குக் காரணமாக உள்ளவர்கள் பொதுவுடமைக் கட்சியினர்தான். இதைக் கண்டிப்பது பாஜக மட்டுமே. இதுகுறித்து தினமணி ஆசிரியர் எழுதிய தலையங்கத்தை வரவேற்கிறேன். பெருமாள் முருகன் எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” – பா.ஜ.க தலைவர் இல. கணேசன்.
விசாரணையெல்லாம் கிடையாது. நிறுத்து, இல்லையேல் நடப்பது வேறு என்கிறார் இல. கணேசன். பண்பாட்டு சீரழிவு, கம்யூனிஸ்ட் கட்சி, தடை…… முடிந்தது விசயம்.
பெரியாரின் ஆதரவோடு முத்துலெட்சுமி “தேவதாசி ஒழிப்புச் சட்டம்” நிறைவேறப் போராடிய போது இல.கணேசனின் தாத்தா சத்யமூர்த்தி அய்யர்தான் கடுமையாக எதிர்த்தார். இன்று ஆதிக்க சாதி பெண்களை இழிவு படுத்தும் சாதிய அமைப்பை பெருமாள் முருகன் கேள்விக் கேட்பதை இவர்கள் நிறுத்துகிறார்கள்.
உமைக்கு பாதி பாகம் கொடுத்த சிவன், பெண் சிசுக்களை தொடர்ந்து கொல்வது ஏன்?
இன்று கொங்கு வேளாள சாதியிலேயே வெள்ளை சேலை கட்டுவது மாறி வருவதும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் விதவை மறுமணம் நடந்து வருவதும் யாரால்? பெரியார் இயக்கமும், கம்யூனிச இயக்கங்களும் இல்லை என்றால் தமிழ்நாடு தொடர்ந்து இருண்ட காலத்திலேயே இருந்திருக்கும்.
சாதியும், மதமும் மட்டுமல்ல இவற்றை பாதுக்காக்கும் அரசும் அதே குரலில் பேசுகிறது.
“அரசு தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, “எழுத்தாளர் பெருமாள் முருகனே சமரச பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்துகொண்டு கடிதம் கொடுத்துள்ளார். அது முடிந்துபோன பிரச்சினை. ‘மாதொருபாகன்’ நாவலில் குறிப்பிட்டுள்ள கருத்துகள், திருச்செங் கோட்டை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களுக்கும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதிவிட முடியாது’’ என வாதிட்டார்.” – 20.01.2015 தி இந்து செய்தி.
இதையே கருத்துச் சுதந்தரம் பாதி, எதை எழுதுவது என்ற கட்டுப்பாடு மீதி என்று மாதொரு பாகனுக்கு புதிய விளக்கம் கொடுக்கிறார் துக்ளக் சோ. கருத்து சுதந்திரம் கேட்கும் பெருமாள் முருகன் கேரளாவிற்கு சென்று அங்கிருந்து எழுதலாமே என்று ஆலோசனை கூறுகிறது தினமலர்.
ஆக எது கருத்து, எது சுதந்திரம் என்பதை இவர்கள் தீர்மானிப்பார்கள். நாம் தீர்மானித்தால் அது தடைசெய்யப்படும். அதை ஒத்துக் கொண்டால் சுதந்திரம். மீறினால் தண்டனை. மனு தர்மம் எங்கே இருக்கிறது என்று சமாளிப்பவர்களுக்கு இதை விட சுரணையூட்டும் சான்று வேறு வேண்டுமா?
உண்மையில் பெருமாள் முருகனுக்கு ஏற்பட்டது கருத்துச் சுதந்திரம் குறித்த பிரச்சினையா? இல்லை ஒடுக்கப்பட்ட பெண்கள், மக்களின் வாழும் உரிமை குறித்த பிரச்சினையா?
ராமனின் பாதரக்ஷையை அரியணையில் அமர்த்தி பரதன் அயோத்தியை ஆண்ட புராணக் கதையை இன்றைய தமிழகம் புதிய வடிவில் கண்டு வருகிறது. பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போகுமாறு விதிக்கப்பட்ட ராமனின் இடத்தில் ஊழல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட ஜெயா. ராமனின் செருப்பு இருந்த இடத்தில் ஓ.பன்னீர்செல்வம். தலைமைச் செயலகத்துக்கும் போயசு தோட்டத்துக்கும் தூரம் அதிகமில்லை என்பதாலும், அ.தி.மு.க.வில் செகண்ட் ஹீரோக்களுக்கு இடமில்லை என்பதாலும் இந்த நவீன இராமாயணத்தில் பரதன் கதாபாத்திரம் ரத்து செயப்பட்டுவிட்டது.
அரியணையில் அமர வைக்கப்பட்ட ராமனின் செருப்பிற்குக்கூடக் கொஞ்சம் தலைக்கனம் ஏறியிருக்கலாம். ஆனால், பன்னீர்? தன் பெயருக்கு முன்னால் முதலமைச்சர் எனப் போட்டுக் கொள்வதில்லை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருக்குரிய அறையைப் பயன்படுத்துவதில்லை, சட்டசபையில் முதலமைச்சருக்குரிய நாற்காலியில் அமருவதில்லை, சட்டசபை வளாகத்தில் ஜெயாவின் காரை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில்கூடத் தனது காரை நிறுத்துவதில்லை என அவரது பணிவு கொடிகட்டிப் பறக்கிறது.
தீபாவளிக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட சில்லறை விசயம் தொடங்கி பிரதமர் மோடி நடத்திய முதலமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியது வரை எல்லா இடங்களிலும் இது அம்மாவின் வழிகாட்டுதலில் நடந்துவரும் ஆட்சி என்பதைத் திரும்பத் திரும்ப அடக்கத்தோடு பதிவு செய பன்னீர் மறந்ததேயில்லை. சமீபத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஆட்சியாளர்களின் பணி, முன்னேற்றம், நிர்வாகத்திறன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் அம்மா இன்றைக்கு நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்” எனப் பதில் அளித்து, அம்மாவின் பாதரக்ஷைத் தமிழகத்தை ஆளவில்லை, அம்மாதான் போயஸ் தோட்டத்து மர்மக் குகைக்குள் இருந்துகொண்டு ஆண்டு வருகிறார் எனத் தெளிவுபடுத்தினார், அவர்.
உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபரில் ஜெயாவிற்கு நிபந்தனை ஏதுமற்ற பிணை வழங்கிய பிறகு, ஜெயாவின் வழக்குரைஞர் பாலி நாரிமன், “தங்களின் வழிகாட்டுதலில்தான் தமிழக அரசு இயங்குகிறது என்கிற தோற்றத்தைக்கூட உருவாக்கக்கூடாது” எனக் குறிப்பிட்டு அவருக்குக் கடிதமொன்றை எழுதியிருக்கிறார். நீதிமன்ற உத்தரவுகளையே பகிரங்கமாகக் காலில் போட்டு மிதிக்கும் தன்னகங்காரம் கொண்ட ஜெயா, கேவலம் தன்னிடம் பீஸ் வாங்கும் வழக்குரைஞரின் கடிதத்தை எதைத் துடைக்கப் பயன்படுத்தியிருப்பார் எனச் சொல்லத் தேவையில்லை.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் அளித்த தீர்ப்பில், “எந்தெந்த வங்கிகளில் இவர்களுக்கு நிரந்தரக் கணக்கு மற்றும் பணம் கையிருப்பு இருக்கிறதோ அந்த வங்கிகளில் இருந்து எடுத்து அபராதத் தொகைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தத் தொகையும் அபராதத்துக்குப் போதவில்லையென்றால், இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள தங்கம் மற்றும் வைர ஆபரணங்களை (இவர்களால் கணக்குக் காட்ட முடிந்த 7,080 கிராம் தங்கம் மற்றும் வைர ஆபரணங்களைத் தவிர்த்து) ரிசர்வ் வங்கி அல்லது ஸ்டேட் வங்கி அல்லது பொதுமக்களிடம் ஏலம்விட்டு அதில் கிடைக்கும் தொகையையும் அபராதத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ள அசையாச் சொத்துக்களான நிறுவனங்கள் மற்றும் நிலங்களை மாநில அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.
சட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையில் இருந்து கொண்டு தமிழக அரசை ஆட்டுவிக்கும் ஜெயா மற்றும் அவரது கையாட்கள் ஷீலா பாலகிருஷ்ணன், இராமானுஜம்
குற்றவாளியிடமே தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் சிக்கிக் கொண்டிருப்பதுதான் இவ்வழக்கில் முரண்நகை. ஊழல் வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்ட விவரத்தையும், அதனால் அவர் பதவியிழந்து, அவர் போட்டியிட்டு வென்ற சிறீரங்கம் தொகுதி காலியாகிவிட்டதையும் அமுக்கிவிட முயன்ற அ.தி.மு.க. அரசு, இப்பிரச்சினை தொடர்பாக தி.மு.க. நீதிமன்றத்தை அணுகப் போகிறது எனத் தெரிந்த பிறகுதான், இந்த விவரங்களை, தீர்ப்பு வந்து ஒன்றரை மாதங்கள் கழித்து அரசிதழில் வெளியிட்டது. ஊருக்கே தெரிந்த தண்டனை விவரத்தை அரசிதழில் வெளிட்டதற்காகச் சட்டப்பேரவைச் செயலர் ஜமாலுதீனுக்கு நேர்ந்த கதியைப் பார்த்த பிறகு, எந்தவொரு அதிகாரியாவது ஜெயாவிடமுள்ள திருட்டுச் சொத்துக்களைக் கையகப்படுத்தத் துணிவாரா?
இதுவொருபுறமிருக்க, தமிழக அரசின் இலஞ்ச ஒழிப்பு பிரிவுதான் பெங்களூரு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டுமாம். அந்தப் பிரிவின் ஐ.ஜி.யாக இருக்கும் குணசீலனோ ஜெயாவின் தீவிர விசுவாசி. இதனாலேயே அவர் மே 2013-லேயே பதவி ஓவுபெற்ற பிறகும், அவரது பதவிக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்புச் செய்து, தனக்கு அரண் அமைத்துக் கொண்டுள்ளது ஜெயா கும்பல்.
ஜெயாவின் தண்டனை விவரத்தை அரசிதழில் வெளியிட்ட ‘குற்றத்திற்காக’ சட்டப் பேரவைச் செயலர் பதவியில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட ஜமாலுதீன் (இடது) : தலைமைச் செயலர் பதவியிலிருந்து அதிரடியாகத் தூக்கியடிக்கப்பட்ட மோகன் வர்கீஸ் சுங்கத்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுப் பிணையில் வெளியே வந்த பிறகு, ஜெயா போயசு தோட்டம் என்ற அலிபாபா குகையைவிட்டு வெளியே வருவதில்லை என்றாலும், தலைமைச் செயலகம் தொடங்கி கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்கள் வரை அரசின் அதிகாரத் தாழ்வாரங்களை எல்லாம் அவரது படம் அலங்கரித்து வருகிறது. அறிவிக்கப்பட்ட அரசின் திட்டங்களிலிருந்து இன்னும் அவர் பெயரும் படமும் மறைந்துவிடவில்லை. அவர் கூடிய விரைவில் மீண்டும் முதலமைச்சர் ஆகிவிடுவார் என்ற நம்பிக்கையில் புதிய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இப்படி சட்டம், நீதிமன்றத் தீர்ப்பு, அறநெறிகளைக் கடுகளவிற்குக்கூட மதிப்பு கொடுக்காமல், ஜெயா தனது தர்பாரை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது மட்டுமல்ல, பல மர்மங்கள் நிறைந்ததாகவும் இந்த பினாமி ஆட்சி விளங்குகிறது.
சட்டப்பேரவைச் செயலராக இருந்த ஜமாலுதீன் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா அல்லது நிர்பந்தம் காரணமாக அவரே பதவி விலகிவிட்டாரா என்பது இன்னும் புதிராகவே இருந்துவருகிறது. தலைமைச் செயலராக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத் உப்புச்சப்பில்லாத பதவிக்குத் தூக்கியடிக்கப்பட்டு, அந்த இடத்தில் பதவி மூப்பில் மிகவும் பின்தங்கியிருக்கும் ஞானதேசிகன் நியமிக்கப்பட்டதற்கு தமிழக அரசின் ஆலோசகராக இருந்துவரும் ஷீலா பாலகிருஷ்ணன்தான் காரணமென கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசகர் பதவியென்பதே ஓர் அலங்காரப் பதவிதான். அதற்குச் சட்டபூர்வத் தகுதியெல்லாம் கிடையாது. ஆனாலும், ஷீலா பாலகிருஷ்ணன்தான் சூப்பர் தலைமைச் செயலராகச் செயல்பட்டுவருவதாகவும், இதன் காரணமாக ஏற்பட்ட முட்டல் மோதலின் விளைவாகவே மோகன் வர்கீஸ் சுங்கத் தூக்கியடிக்கப்பட்டதாகவும் புலனாவு இதழ்கள் குறிப்பிடுகின்றன.
இராமானுஜம் தமிழக டி.ஜி.பி. பதவியிலிருந்து கடந்த நவம்பர் மாதம் ஓவுபெற்ற நாளன்றே, அவரைத் தமிழக அரசின் இன்னொரு ஆலோசகராக நியமித்தது, ஜெயாவின் பினாமி அரசு. இராமானுஜம் பதவி நீட்டிப்புப் பெற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக டி.ஜி.பி.யாக இருந்ததே சட்டவிரோதமானது என முந்தைய காங்கிரசு அரசு குற்றஞ்சுமத்தியதோடு, அவரது பதவி நீட்டிப்பை அங்கீகரிக்கவும் மறுத்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்பொழுதே அவருக்கு டி.ஜி.பி. சலுகைகளோடு ஆலோசகர் பதவி அளிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இராமானுஜம் அ.தி.மு.க.வின் கள்ள ஓட்டு, பணப்பட்டுவாடாவிற்குச் சாதகமாக நடந்துகொண்டதற்கு அளிக்கப்பட்டுள்ள பரிசு இது.
கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டத்தில் ஊழல் குற்றவாளி ஜெயாவுக்கு ஆதரவாக ரகளை-அதிரடியில் இறங்கிய அ.தி.மு.க கவுன்சிலர்கள்.
சூப்பர் முதல்வர் ஜெயா, சூப்பர் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், சூப்பர் டி.ஜி.பி. இராமானுஜம் என இந்த ஆட்சியைச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட இந்த அதிகார கும்பல்தான் நடத்திவருகிறது. பிறகு, சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் என்ன வேலை என்று கேட்கிறீர்களா? ஒவ்வொரு துறையிலும் கோடிக்கணக்கில் ஊழல் புரிந்து, அதைப் பெட்டிபெட்டியாக போயஸ் தோட்டத்துக்கு அனுப்பும் வேலையை வார நாட்களில் செய்கிறார்கள். மற்ற நாட்களில் அம்மாவை மீண்டும் முதல்வராக்க ஆண்டவனை வேண்டி கோவில் கோவிலாய்ப் போய் பூஜைகளையும் யாகங்களையும் நடத்துகிறார்கள்; காசு கொடுத்துக் கும்பலைச் சேர்த்து பால்குடம் எடுக்க வைக்கிறார்கள்.
சத்துணவு முட்டையின் விலையை ரூ.4.50 எனச் சந்தை விலையைவிடக் கூடுதலாக நிர்ணயம் செய்திருப்பதும்; கோழிப்பண்ணை எதுவுமே நடத்தாத, முட்டை குடோன்கூட வைத்து நடத்தாத கிறிஸ்டி மற்றும் சொர்ணபூமி நிறுவனங்களுக்குத் தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 60 இலட்சம் முட்டைகளை விநியோகிக்கும் ஒப்பந்தத்தை வழங்கியிருப்பதும் அம்மா ஆட்சியின் கொள்ளையடிக்கும் நோக்கத்தைப் புட்டுவைக்கின்றன. சந்தைவிலையைவிடக் கூடுதலாக விலையை ஏற்றிக் கொடுத்திருப்பதன் மூலம் மட்டும் அரசுக்கு ஏற்படும் இழப்பு 80 கோடி ரூபாயாகும் என நாமக்கல் மாவட்ட முட்டை உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள்.
முட்டை ஊழலுக்கு அடுத்து, ரேஷன் கடைகளின் மூலம் சிறப்பு விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் துவரம்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு கொள்முதலில் 3,000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக பா.ம.க. நிறுவனத் தலைவர் இராமதாசு குற்றஞ்சுமத்தியிருக்கிறார். சந்தை விலையைவிடக் கூடுதலாகக் கொடுத்து பருப்பு வாங்க ஒப்பந்தம் இறுதி செயப்பட்டிருப்பதாகவும், இந்த ஒப்பந்தமும் நாமக்கல்லைச் சேர்ந்த ராசி நியூட்ரி ஃபுட்ஸ் என்ற ஒரே நிறுவனத்திற்கு ஓராண்டிற்குக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் இதில் ஆட்சியாளர்கள் 40 கோடி ரூபாய் வரை இலஞ்சம் பெற்றிருப்பதாகவும் அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகமெங்குமுள்ள தனியார் பள்ளிகளில் நடப்பாண்டில் 74,217 மாணவர்கள் சேர்ந்திருப்பதாகவும் இவர்களுக்கான கட்டணம் 25.13 கோடி ரூபாய் என்று சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் கல்வி அமைச்சர் வீரமணி அறிவித்தார். பள்ளிக் கல்வித் துறை செயலர் சபீதா இச்சட்டத்தின் கீழ் 89,941 மாணவர்கள் சேர்ந்திருப்பதாகக் கூறிவருகிறார். இந்நிலையில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் இது தொடர்பான விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு, நடப்பு கல்வியாண்டில் 2,959 மாணவர்கள் மட்டுமே கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்திருப்பதாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டும் 23 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக அவ்வியக்கம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகமெங்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கவுன்சிலிங் மூலம் இடமாற்றம் செயப்பட்டுள்ளனர். ஒரு இடமாற்றத்திற்கு 6 முதல் 7 இலட்ச ரூபாய் வரை பெறப்பட்டு, இதில் 500 கோடி ரூபாய் வரை இலஞ்சப் பணம் கைமாறியிருப்பதாக பா.ம.க. நிறுவனர் இராமதாசு அம்பலப்படுத்தியிருக்கிறார்.
சட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையிலும், மேலாகவும் இருந்து கொண்டு ஆட்சியதிகாரத்தை அனுபவித்து வரும் ஜெயா-சசி கும்பலைத் தட்டிக் கேட்பதற்கான துணிவும் நேர்மையும் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமல்ல. உச்ச, உயர்நீதி மன்றங்களிடமும் இல்லை.
இவற்றுக்கு அப்பால் ஆவின் பால் திருட்டு ஊழல், சென்னை மாநகராட்சி ரோடு காண்டிராக்டு ஊழல், சத்து மாவு விநியோகத்தில் நடந்துள்ள முறைகேடுகள், சென்னை பெருநகருக்குள் பேருந்து நிழற்குடைகளை அமைக்கத் தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கியதில் நடந்துள்ள முறைகேடுகள் எனப் புற்றீசல் போல ஊழல்களும் முறைகேடுகளும் அம்பலமாகி வருகின்றன. சகாயம் கமிசனை அமைக்கச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவை ரத்து செய்வதற்கும், அது முடியாமல் போன பிறகு அக்கமிசனின் விசாரணையை முடக்குவதற்கும் இப்பினாமி அரசு எடுத்துவரும் முயற்சிகள் ஒவ்வொன்றும் எப்பேர்பட்ட கிரிமினல் கும்பலிடம் தமிழகத்தின் ஆட்சியதிகாரம் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் பளிச்சென எடுத்துக்காட்டுகின்றன.
சட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையிலும், மேலாகவும் இருந்துகொண்டு ஆட்சியதிகாரத்தை அனுபவித்து வரும் ஜெயா-சசி கும்பலைத் தட்டிக் கேட்பதற்கான துணிவும் நேர்மையும் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமல்ல, உச்ச, உயர்நீதி மன்றங்களிடமும் இல்லை. ஜெயா தண்டிக்கப்பட்டதைச் சாக்காக வைத்துக்கொண்டு தமிழகமெங்கும் வன்முறையில் ஈடுபட்ட அ.தி.மு.க.வைத் தடைசெய்யக் கோரும் வழக்கு, அரசு அலுவலங்களிலும் அதனின் இணைய தளங்களிலும் ஜெயாவின் படத்தை எடுக்கக் கோரும் வழக்கு, நீதிபதி குன்ஹாவைக் கீழ்த்தரமாக விமர்சித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதற்கும், கண்டனத் தீர்மானங்கள் இயற்றப்பட்டதற்கும் எதிரான வழக்கு என இந்த மூன்று மாதங்களில் அ.தி.மு.க.வின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. நியாயமாகப் பார்த்தால், இந்த ஒவ்வொரு வழக்கிலும் ஜெயா முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உயர் நீதிமன்றம் அவ்வழக்குகளை இந்தக் கோணத்தில் பார்க்கவோ, நடத்திச் செல்லவோ மறுக்கிறது. மாறாக, வாய்தாவுக்கு மேல் வாய்தா அளித்து தொடுக்கப்பட்ட வழக்குகளையும் இழுத்தடித்து அ.தி.மு.க. கும்பலுக்குச் சாதகமாக நடந்து வருகிறது.
“ஜெயாவின் கட்சிக்காரர்கள் கட்டுப்பாடின்றி நடந்துகொள்வதற்கு, அவர் என்ன செய்ய முடியும்? அவர்தான் இந்த வன்முறையைத் தூண்டிவிட்டு நடத்தினார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?” என ஜெயாவின் வக்கீலாக மாறி வாதிட்டார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து. அந்நீதிமன்றம் இப்பொழுது ஜெயா-சசி கும்பலுக்குப் பிணையை நீட்டித்துக் கொடுத்திருப்பதோடு, அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் அக்கும்பலின் மேல்முறையீட்டு மனுவையும் விசாரித்து முடிக்கும்படி உத்தரவும் போட்டுவிட்டது. இந்நிலையில் பகற்கொள்ளைக் கூட்டமான ஜெயா-சசி கும்பலை ஆட்சியதிகாரத்திலிருந்து துரத்தவும், கிரிமினல் குற்றங்களுக்காகத் தப்பிவிடாதபடி தண்டிக்கவும் சட்ட வழிமுறைகளின்படி வாய்ப்புள்ளதாக யாரேனும் நம்பமுடியுமா?
– செல்வம்
________________________________________ புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
________________________________________
Dear students, scholars, and democratic organizations,
Students across Tamilnadu came out in a massive protest against the imposition of Hindi on 25th January-1965. And we are in the 50th anniversary of this valiant struggle! Yet, the situation has only worsened far gravely across the country, and the Hindutva forces, with their fascist imposition of brahminical ideologies, have become a threat to our very existence as self-respecting and equal humans. If not now, we will never be able to liberate ourselves from the Hindutva forces. Let us all unite to wage a ceaseless war against the imposition of brahminical culture, hindutva ideologies, Hindi and Sanskrit!
Dear friends, it is a historical truth that the Brahminical forces across different parties and groups have always stood together for their dream of ‘Hindu nation’. Hardly within 10 days after he became the Chief Minister of Madras Presidency, Rajagopalachari declared on 15th July-1937 that the entire Indian population must learn Sanskrit, and they must learn Hindi first as a preparation. Sathyamoorthy, the then Congress president stated in public that the entire Indian population must learn Sanskrit for preserving the Varna system that justified untouchability and for creating a Hindu nation/’Rama Rajiya’.
As he announced, the Brahminical Rajaji made Hindi a compulsory subject in the schools allover the Madras Presidency. Periyar E.V. Ramasamy urged all the Tamil scholars to unite for a massive joint action against the imposition of brahminical values through the imposition of Hindi and Sanskrit. Tamil scholars and leaders like Somasundara Bharathi, Periyar and K.A.P.Visvanatam launched wide scale protests in front of the schools that taught Hindi and blockaded the ministers.
The protests spread fierily throughout the Tamil region centering the cities like Madras and Trichy. The Rajaji Government on the other hand unleashed violent crack downs upon the protesters. It arrested hundreds of protesters including women and children for blocking the roads in Madras in 1938 and lodged them all in prisons. Among them, Natarajan died in the prison on 15th January 1939, becoming the first valiant martyr to sacrifice his life against the imposition of Hindi. Following Natarajan, Thalamuthu sacrificed his life in prison on 12th March 1939. With the protests becoming vibrant, the Government conceded soon and withdrew the imposition of Hindi as a compulsory subject in the Madras Presidency. Yes, the protesters, with the martyrdom of Natarajan and Thalamuthu, won their battle against the imposition of Hindi coupled with brahminical hindutwa ideologies.
Though the brahminical forces withdrew the imposition of Hindi for the time being, they never abandoned their malicious plan. The governments continuously indulged in imposing Hindi and Sanskrit in manifold ways. So also grew stronger and stronger the protests against such impositions!
On 24th January 1964, a youth named Chinnasamy of Trichy Keezhapazhavur immolated himself proclaiming “Down with Hindi! Long live Tamil!”. “The lion burned to bones for the long life of Tamil!” was the sacrifice note he left! Chinnasamy was the first martyr to sacrifice his life by self-immolation. The protest he began spread on a massive stature among the students of Tamilnadu an year later in 1965.
The movements against Hindi so far led by Periyar and Tamil scholars became a mass movement across Tamilnadu led by the students since January-1965. The Central Government decided to make Hindi as the only official language of India since 26th January 1965. The students of Tamilnadu began their unrelenting struggle against the imposition of Hindi and declared 26th January 1965 as a ‘Black Day’. The entire country was rattled by the students’ struggle in Tamilnadu for the next 55 days. Taking their cue from Tamilnadu, students of nearby South Indian states also began their protests against the imposition of Hindi as the only official language and as a compulsory subject in educational institutions. The Government was shaken from its very base with the proliferation of this vibrant anti-Hindi movement across several Indian states led by the students.
Room Number 80 of Pachaiyappas College-Chennai was assured a permanent place in the history, for it was in this room that the students across various colleges in Chennai gathered and worked out plans for launching their audacious war against the imposition of Hindi. Students of different colleges and backgrounds in Madurai also gathered and prepared themselves for a large scale demonstration.
The students held a grand rally against the Hindi imposition on 25th January-1965. The goondas of Congress attacked the marching students with the help of police. Thus this rally became the beginning of the stormy anti-Hindi agitations that shook the nation. After the disruptions in the students’ rally at Madurai, the protest got further vibrant in the cities like Chennai, Tirunelveli, Coimbatore and Trichy. Not just the students of Art and science, engineering and law colleges adventured in the protests, students of Medical Colleges, Madras University and Annamalai University also joined and stood united till the end.
As students went in processions, blocked the trains, sieged the post office and other Central Government offices, blocked the roads, and clashed with the police, army and police opened fire on the students, and the entire state wore a war-field look. Rajendran, a student of Annamalai University, happened to be the first person to be killed of police firing. He was followed by Chennai Virugambakkam Sivalingam, Kodambakam Aranganathan and more than 500 students, adding to the long list of martyrs for asserting the linguistic right of Tamils and against the imposition of Hindi as the only official language across India.
As the Government attempted to curb the protests by declaring indefinite closure of colleges and universities, the school students across Tamilnadu took the protest in their hand and spread it more intensely in the streets, villages and schools. Whatever the Central and state Governments did to stop the agitations, nothing worked out until they withdrew the imposition of Hindi! Thus the 55 days long battle launched by the students became victorious thereby ensuring the rights of diverse languages and nationalities. The courage, bravery even at the verge of death and willingness to sacrifice their very life for the rights and Self-Respect of the people have been trumpeting the students’ dedication to their mother tongue and nationality. But, the brahminical gang has presently begun an unchecked rampage of more fascist kind against the indigenous languages, cultures, religions and oppressed castes. Can we afford to remain silent anymore?
Friends, we must be clear that imposition of Hindi or Sanskrit is not an issue about ‘just languages’. Through Hindi and Sanskrit, what is imposed is Hindutwa ideologies and brahminical values! Imposition of Hindi has always been carried out as a necessary preparation for the imposition of Sanskrit allover India. Beginning in 1937, from Rajaji to paktavaccalam to Modi at present, all have vividly expressed their brahminical plan of Sanskritisising the Indian State. Though this gang had to retreat time and again, it is desperately trying to fulfill its brahminical/safronist dream of Hindu India through legal sanctions, with the comfort of its rule in the country led by BJP. The compulsory usage of Hindi by Government officials and Ministers in social networks, the ‘Sanskrit week’ celebrations in CBSC schools, imposition of Hindi as a compulsory subject in the universities, announcement of Guru Utsav on teachers’ day, attempts towards saffronizing the entire education system and the indoctrination of Puranic and Vedic filths through education and syllabi are only a few havocs the saffronist gang has done after Modi assumed power. These stealthy acts towards the imposition of Hindi and Sanskrit cannot be reduced to mere language related issues. These are significant attempts towards eradicating the linguistic, cultural and ideological distinctness/identities of different nationalities living in the Indian subcontinent. By destroying the language and culture of different nationalities, the RSS/BJP/Hindutwa forces desire to construct a ‘broad Hindu nation’ with the fascist moto of ‘single nation, single language and single culture’!
Rather calling Sanskrit a ‘language’, it would sound more fitting to call it as ‘the murderous weapon of Hinduism’. This language has always been the tool of the ruling class to segregate and oppress the people. Sanskrit language and the brahminical culture it represents are filled with conservative values, superstitious beliefs, Puranic and Vedic stories of filthy nature, and The Bhagavad Gita that justifies and preserves the Varna/caste system, untouchability, mass killings and discrimination.
The non-Vedic, anti-brahminical, anti—Hindi, anti-Sanskrit and rationalist tradition of Tamil nationality has always been a major threat to the brahminical Hindutwa forces. Tamil language and its culture have retained their uniqueness withstanding so much of oppression and impositions from these forces. Including Tamil, there are several languages ancient in time, rich in literatures and grammars and alive even today among the people.
While 22 languages have been included in the Indian constitution as major languages of India, the imposition of Hindi and Sanskrit is an apparent act of fascist discrimination! While Sanskrit stood for oppression and discrimination, Tamil and several other languages and cultures have stood for equality, rationalism and Self-Respect. On the occasion of the 50th anniversary of Tamil students’ massive struggle against the imposition of Hindi, let us pledge to wage a ceaseless war against the brahminical/saffronist forces trying hard to impose brahminical values, Vedic culture, Varna/caste system, untouchability and discrimination through Sanskrit, Hindi and Hinduism. Let us all unite to get rid of fascist brahminical/saffronist forces and get back our rights and Self-Respect!
Join us for the remembrance and oath-taking event in memory of the Tamil students who sacrificed their lives in the anti-Hindi struggle and to dedicate ourselves for the cause of equality and Self-Respect!
Let’s bravely pledge a ceaseless war against the (re)Brahminization of the country through the fascist imposition of Hindutva ideologies, vedic supremacy, caste oppression, Sanskrit and Hindi!
Let us inherit the rationalist tradition of valiant resistance against Brahminical values, caste oppression, vedic supremacy and imposition of Hindi and Sanskrit on the 50th anniversary of the students’ struggle against the imposition of Hindi!
Let us build a massive battle field against the Hindutva forces!
Revolutionary Students and Youth Front – Pondicherry University
welcomes you all
The golden jubilee anniversary of Tamilnadu students’ massive protests against the imposition of Hindi!
remembrance and oath-taking event
23rd January-2015 in front of Gate II, Pondicherry University at 3.30PM Contact: Mobile: 9486391209, email:rsyfront.pu@gmail.com
கவுண்டர் பெண்களை களங்கப்படுத்தியது பெருமாள் முருகனா ? பாகம் 2
சுய சாதிப் பெண்களை அடக்கி ஒடுக்குவதையே ஒழுக்கமென்று ஊளையிடும் ஆதிக்க சாதிவெறியர்களின் அயோக்கியத்தனத்தை முதல் பாகத்தில் பார்த்தோம்.
அடுத்து பிள்ளைப்பேறு வேண்டி கோவில் திருவிழாவில் உறவு கொள்ளும் சடங்கை மாபெரும் செக்ஸ் ‘மேளா’வாக கருதும் வாதங்களை பரிசீலிப்போம். ஆதிக்க சாதிகளைப் பொறுத்த வரை அந்த ‘மேளா’ தத்தமது ஆட்சிப் பிரதேசங்களுக்கே மட்டும் உரியவை. எல்லை தாண்டினால் விபச்சாரம். அதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தால் அபச்சாரம், தீட்டு.
பெண்களை கவர்ச்சியாக நேரிலும், கதைகளிலும், திரைப்படங்களிலும் பார்ப்பதும், கிசுகிசுக்களை ரசிப்பதும் இங்கே ஊடகங்களால் நிலை நிறுத்தப்பட்ட ஒரு ‘ரசனை’. அந்த ரசனைக்குரியவர்கள் வெளியே அப்படி இப்படி இருந்தாலும், வீட்டிற்குள்ளே அடக்கமாக இருப்பார்கள். அல்லது சாதிய சமூக விதிகளைத் தாண்டி ஜாலிக்காக மட்டும் காதலிப்பார்கள். கல்யாணத்தை மட்டும் வீட்டார் விருப்பப்படி செய்வார்கள். இந்த போலித்தனத்தின் படி கோவில் திருவிழா ஒன்று கூடலை இவர்கள் உள்ளுக்குள்ளே ரசிப்பார்கள். ஆனால் அது தங்களது ஊராக இருக்கக் கூடாது. ஆகவே இது ஒழுக்கக் கேடு.
பின்நவீனத்துவத்தின்படி இந்த ஒன்று கூடல் பல்வேறு மக்கள் குழுக்களில் இருந்த, இருக்கும் ‘கார்னிவல்’ கொண்டாட்டம். அடக்கப்பட்ட பாலியல் உறவுகளில் வெந்து நோகும் மக்கள் தணித்துக் கொள்ளும் ஒரு கலாச்சார நடவடிக்கை.
இந்த பார்வைகள் சரியா? சாதிய சமூகத்தின் கட்டுமானத்திற்கும் பாலியல் குறித்த சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கும் உள்ள உறவு என்ன? இந்த கேள்விகளை இந்த நாவலின் படி நாம் எப்படி புரிந்து கொள்வது?
“மாதொரு பாகன்” நாவலில் திருவிழா ஒன்று கூடலை படிமப்படுத்தும் நாவலாசிரியர் “ஆதி மனிதன் தன்னைக் கண்டடைகிறான்” என்று குறிப்பிடுகிறார். திருவிழாவிற்கு கூட வந்த அம்மாவை பிரிந்த பிறகு தனக்கென இணை தேடுகிறாள் நாயகி பொன்னா.
ஊர்க்காரர்கள் இருக்கிறார்களா, தெரிந்த முகங்கள் தென்படுகிறதா என்று தயங்கிச் செல்கிறாள். இறுதியில் முகங்களற்ற மனித சமுத்திரத்தில் ஒரு புராதானத் தாய் போல குழந்தைகளை பெறும் மாதாவிற்கு முகங்கள் எதற்கு என்பதாக பெண்ணை பிரிக்கும் குழு ரீதியான சமூக நிலை மறந்து வேறுபாடுகளற்ற மனித பொது நிலையை அடைகிறாள். அப்போது அவளது கணவன் காளியை மணமுடிக்கும் முன் வந்த முதல் காதல் இளைஞனெல்லாம் நினைவில் வந்து போகிறான்.
பெருமாள் முருகன் குறிப்பிட்டிருப்பது போல இது ஆதிகால மனிதன் தன்னை கண்டடைதல் அல்ல. இதன் பிரச்சினை வேறு. இதே நாவலில் சொத்துடமை, சுய சாதி ஏமாற்றல்கள், சொத்தைக் காக்க குழந்தைகள், வாரிசுகள் இல்லாதவர்களுக்கு சொத்து இல்லை என்று பல்வேறு கிளைகள் மூலம் ஆசிரியர் பேசியிருந்தாலும் பேசத்தவறிய, பேச வேண்டிய ஒரு விசயம் இருக்கிறது.
நாவலின் இறுதியில் காளி தனது மனைவி அப்படி ஒன்று கூடலுக்கு சென்றதை சீரணிக்க முடியாமல் திணறுகிறான். ஒரு வெறுப்புணர்வு வளர்கிறது. இதற்கு குழந்தை பெற்றுக் கொள்ளாமலேயே இருந்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. அந்த தம்பதியினர் மனதளவில் பிரிந்து விடுவார்கள் என்பதாக நாவலின் உள்ளோட்டம் ஒரு அறிகுறியைக் காட்டுகிறது.
சரி அப்படி பிரிந்து போனால்தான் என்ன என்று சட்டென்று கேட்க முடியாது. அதை நிறைவேற்றும் நிலை இருந்தால் இந்த நாவலுக்கோ இல்லை திருச்செங்கோடு கவுண்டர்கள் போராட்டத்திற்கோ தேவையே இருந்திருக்காது.
இந்த நாவலின் முக்கால் பாகம் வரை காளியும், பொன்னாவும் மனமொத்த காதலர்களாகவே இருக்கிறார்கள். அப்படி இருக்கவிடாத படி உடமைச் சமூகமும், அதன் சாதிய நியாயங்களும் அச்சுறுத்துகின்றன.
வேறு வகையில் சொன்னால் ஒன்று கூடலுக்கு செல்லும் பொன்னாவிற்கு அது நிச்சயம் ஒரு விடுதலை உணர்வையோ இல்லை சுதந்திர பாலுறவு திளைப்பையோ அளிக்கவே முடியாது. முன்பின் தெரியாத ஆணுடன், விருப்பம் விருப்பமின்மையைத் தாண்டி ஜடம் போல தன்னுடலை ஒப்படைக்கும் ஒரு சம்பிரதாயமான முதலிரவை விட அர்த்த நாரீஸ்வர் கோவில் திருவிழாவின் இரவு கொடூரமாகவே இருந்திருக்கும்.
இந்த கதையின் நாயகன் சொல்வது போல அந்த இரவை முடித்துக் கொண்டு பிள்ளை பெற்றுக் கொண்டு வாழ்ந்தாலும் இதே சமூகம் தனது கேலிப் பேச்சையும், குத்திக் காட்டலையும் விட்டு விடாது. சொல்லப்போனால் அது முன்னிலும் அதிக முள்ளாகவே குத்தும். அதற்கு ஆர்ப்பாட்டமான பேச்சு தேவையில்லை. ஒரு பார்வை போதும். இந்த எதிர்கால துன்பங்கள் தம்பதியினர் இருவருக்கும் தெரியும். ஒரு உரையாடலில் காளியும் அதை கோடிட்டுக் காட்டுகிறான்.
முதல் பாகத்தில் தரப்பட்ட கிராமத்து உண்மைச் சம்பவங்களை ஆய்ந்து பார்க்கையில் அந்தக் கதைகளில் வரும் ஆண், பெண் எவருக்கும் எந்த கள்ள உறவும் எந்த பேரானந்தத்தையும் அளித்துவிடவில்லை. மேலும் குழந்தை பேறுக்காக உறவு கொண்ட ஆண்கள் பலரும் அதை ஒரு கடமையாக அல்லது விதிவிலக்கான ஒரு தருணமாக கடந்து போனார்களே அன்றி அதன் பிறகு அதை ஒரு அந்தப்புர இலவச வாய்ப்பாக தொடரவில்லை – முடியாது.
காரணம் கிராமங்களில் அவர்களது மொத்த சாதி சமூக வாழ்க்கையில் பாலியல் தருணங்களின் முக்கியத்துவம் அந்த அளவில்தான் இருக்கிறது. சொத்துடமை, கௌரவம், சமூக அந்தஸ்தை தாண்டி ஒரு ஷகிலா படம் போலவெல்லாம் இல்லவே இல்லை. சரியாகச் சொன்னால் அங்கே பாலியலில் இருப்பது காதலல்ல, கௌரவம் எனும் போலித்தனமே.
இதை இப்படி ஒரு படிமமாக சொல்லிப் பார்க்கலாமா? காதல், பாலியல் பிரச்சினைகளுக்காக அதன் உரிமைகளுக்காக நாம் வெளிப்படையாக போடும் சண்டைதான் தேவையே அன்றி ஒளிந்து போடும் கொரில்லா தாக்குதல்கள் அல்ல. கொரில்லா தாக்குதல்களில் உடனடி தப்பித்தல் அல்லது தற்காலிக தாக்குதல்தான் இருக்கும், இறுதியான நிலையான வெற்றியல்ல.
பாலியல் உறவு கொள்ளும் போது மனிதர்கள் அந்த கணத்தில் அதற்கு மட்டும் உண்மையாக உணர்ச்சி தளத்தில் ஈடுபட்டாலும் அடுத்த கணமே அந்த உறவை கட்டுப்படுத்தும் சமூக சட்டங்கள் அச்சுறுத்தும். ஆக சட்டங்களை மாற்றாத வரை வெறுமனே பாலுணர்ச்சிக்கான தளத்தில் நின்று மட்டும் பார்ப்பது பாரிய பிழை.
வெளிப்படையான ஜனநாயக வெளிதான் இந்தப் பிரச்சனைகளுக்கான மாற்றத்தை தோற்றுவிக்கும். மாறாக அதை மறுத்து மறைத்து செய்யப்படும் இந்த ஏற்பாடுகள் சாதியை மீறாமலும், கௌரவத்தை குன்றாமலும் சமூகம் கண்டடைந்த குறுக்கு வழிகள். காதலும் விவாகரத்தும் வெளிப்படையாக இருக்கும் வரை திருட்டுத்தனங்களுக்கு தேவை இல்லை. ஆசிரியர் இந்தப் பார்வையில் நாவலை படைக்கவில்லை என்றாலும் அவர் படைத்த நாவலை அசைபோட்டு பார்க்கையில் அதை கண்டடைய முடியும்.
நாவலில் பழங்குடி பெண் பாவத்தம்மாவை நான்கு கவுண்டர் இளைஞர்கள் வன்புணர்வு செய்து கொல்கிறார்கள். பிறகு பயந்து ஊரை விட்டு ஓடுகிறார்கள். அந்த பெண் பாவத்தம்மாதான் சாமியாக அந்த ஊரில் நின்று பிள்ளைப்பேறு இல்லாத மக்களை பழிவாங்குகிறாள். அவளுக்கு படையலிட்டு நிவாரணம் தேடுகிறார்கள் மக்கள். அர்த்தநாரிஸ்வரையே பாவத்தம்மாவாக உருவகப்படுத்திக் கொண்டு வணங்கும் மக்களை கோவிலின் பார்ப்பன பூசாரி எதுவும் தெரியாத ஜனங்கள் என்று விளக்குகிறார். பொன்னா போன்ற பெண்களோ பாவத்தம்மாவையே நினைத்து வேண்டுகிறார்கள்.
கோவில், ஐதீகம், தொன்மம், ஆன்மீகம், சடங்கு, வழக்கு முதலியவற்றை அடக்கப்படும் சமூக உறவுகளிலிருக்கும் மக்களின் ஏக்கப் பெருமூச்சாக உணர்வதற்கும், விடுதலைப் பரவசமாக பார்ப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. மக்களின் வாழ்க்கை போராட்டத்தை ஒரு மையமான அச்சுதான் நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை கம்யூனிஸ்டுகள் தவிர மற்றவர்கள் அறிந்ததுமில்லை, ஏற்பதுமில்லை. இந்த நாவலில் அது முற்றிலும் நாட்டுப்புற மக்களின் அறியாமை கலந்த அனுபவத்திலிருந்து மட்டும் பார்க்கிறது. அதுதானே யதார்த்தம் என்று கேட்கலாம்.
மாதொருபாகன் நாவல் 70 ஆண்டுகளுக்கு முந்தைய களத்தில் நடந்தாலும், நாயகன் காளியே குடுமி, கோவணம் என்ற அலங்காரங்களைக் கொண்டிருந்தாலும் பேச்சு, உடல் மொழி, மௌன மொழி அனைத்தும் இன்றைய காலகட்டத்தை நினைவுபடுத்துகிறது. கிராமங்களில் இருக்கும் நேரிடையான இயல்பான போலித்தனமற்ற இயக்கமாக இது இல்லை. எனினும் ஒரு வரலாற்று நாவலில் இன்றைய வாழ்க்கையிலிருந்து கூட பார்க்கலாம், உரையாடலை எழுதலாம். பிரச்சினை இல்லை. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை தொடரும் குழந்தையின்மை எனும் புள்ளியை இணைத்து காலங்கடந்த கோலாமாக்குவதற்கு இன்னும் கூர்மையாக பயணித்திருக்க வேண்டும்.
சாமிகளை எளிமையாக தொழும் மக்களின் இயல்பை சித்தரிக்கும் போது அந்த ஏக்கப் பெருமூச்சின் பரிமாணங்களை, கேள்விகளை, ஐயங்களை விரிப்பதன் மூலம் இது வெறுமனே புராதனம், தொன்மம் மட்டுமல்ல எனும் அடையாள மயக்கத்திலிருந்து வெளியே வர முடியும். ஏனெனில் இதே தொன்மம்தான் இன்று திருச்செங்கோடு கவுண்டர்களின் எங்கள் கோவில் திருவிழா என்று பேசவும் செய்கிறது.
குழந்தைப் பேறின்மை, சாதி, சமூகப் பிரச்சினைகைள விளக்கிவிட்டு, திருவிழா ஒன்று கூடல் அந்தக்கால சமூகம் கண்டுபிடித்திருக்கும் முற்போக்கான நடவடிக்கை என்கிறார் ஒரு அறிஞர். அந்த ஒன்று கூடுதல் எப்படி கூச்சமில்லாமல் நடந்திருக்க முடியும் என்று இன்றைய காலகட்டத்திலிருந்து பார்க்க கூடாது, அன்று மின் விளக்குகளே இல்லை, கும்மிருட்டுதான் என்றும் அவர் டெக்னிக்கலாக ஏற்க வைக்கிறார்.
விளக்கும், தொழிற்நுட்பமுமா பிரச்சினை? எம்.ஆர்.ஐ ஸ்கேன் வந்த பிறகு பெண் சிசுக் கொலை, பெண் சிசு தவிர்ப்பு – கலைப்பாக மாறிவிடவில்லையா? நல்ல நேரம் பார்த்து சிசேரியன் அறுவை சிகிச்சை செய்வதில்லைய்யா? இல்லை நாளையே குழந்தைப் பேறின்மைக்கு செயற்கை கருவூட்டலுக்கான விந்து வங்கியில் சாதிக்கொரு வங்கி வராதா?
மேலே சொன்னது போல சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் பயணத்திற்கு இந்த தொன்மங்களை அளவு கடந்து பயன்படுத்துவது சரியல்ல. ஆனால் சமூக மாற்றத்தின் விதியை வர்க்கம் எனும் மையப் புள்ளியிலிருந்து விலக்கி அடையாளப் போராட்டம் எனும் சிதறுண்ட துளிகளாக மாற்றுவதை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் திட்டமிட்டு செய்கின்றன.
பெருமாள் முருகனும் கூட இந்த நாவலை எழுதுவதற்கும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் ரத்தன் டாடா மற்றும் பல முதலாளிகளைப் புரவலராகக் கொண்ட கலைகளுக்கான இந்திய மையம் எனும் தொண்டு நிறுவனத்தின் உதவித் தொகையை பெற்றிருக்கிறார். முன்னுரையிலும் அதைக் குறிப்பிடுகிறார். எல்லா விதங்களிலும் இது தவறு என்பதோடு ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனங்கள் உருவாக்கும் ஆய்வுக் கட்டமைப்பை சுயமாக ஏற்றுக் கொண்டு செயல்படும் சுதந்திரம் இருப்பதாக கருதுவது ஒரு ஏமாற்று.
‘இத்தகைய ஆய்வுகளுக்கான நல்கையை ஏற்றுக் கொண்டு முன்னுரையில் ஒரு நன்றி சொன்னால் போதும், அதை பயன்படுத்திக் கொண்டு நாம் வேறு ஏதாவது கூட எழுதலாம்’ என்கிறார் மற்றுமொரு அறிஞர். ‘நல்கை பணம் வாங்கிவிட்டு நாம் என்ன செய்தோம் என 2 பக்கம் எழுதிக் கொடுத்தால் போதும், அதற்கு மேல் அவர்கள் கேட்கமாட்டார்கள்’ என்கிறார். கோடிசுரவனாகவே இருந்தாலும் இப்படி “கிராண்ட்” வாங்குவது தனியுரிமையாம். அதை விசாரிப்பது தனிநபரின் வருமானத்தை எட்டிப் பார்க்கும் அநாகரிகமாம்.
இதன்படி வருமானம் பறிக்கப்பட்ட ஏழைகளுக்காக போராடுவது கூட அநாகரிகம்தான். இனவரைவியல் தொடங்கி பல்வேறு துறைகளில் உலகமெங்கும் நடந்து வரும் ஆய்வுகளை மேற்கத்திய நாடுகள் ஆவணப்படுத்திக் கொள்ள இப்படி படைப்பாளிகளையும், அறிஞர்களையும் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த ஆய்வுகள், ஆவணங்கள் அவர்களுக்கு எப்போது எப்படி பயன்படுகிறது என்பதை நம்மால் இப்போது கண்டு சொல்ல முடியாது. ஆனால் நம்முடைய எழுத்தாளர்கள் இதனால் பல்வேறு முறைகளில் வடிவமைக்கப்படுகிறார்கள் என்பதை மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறோம்.
சொல்லவரும் கருத்து சரியாக இருந்தாலும், அதை ஃபோர்டு பவுண்டேஷன், டாடா, ஜெர்மன் நிதி உதவியோடு சொல்லும் போது கருத்தின் தார்மீக அறம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அன்னியன் புகலென்ன நீதி என்று பார்ப்பனியத்தை முட்டுக் கொடுக்கும் சக்திகளுக்கு உதவியும் செய்கிறது.
சுற்று வட்டார ஊர்களில் சாமிக்கு பிறந்த பிள்ளை, சாமிக் குழந்தை என்று புழங்கும் பெயர்களை ஏதோ சாமிக்கு நேர்ந்து பெற்ற குழந்தைகள் என்று கருதியதாகவும், பின்னரே இதற்கும் கோவில் திருவிழாவிற்கும் உள்ள தொடர்பை கண்டறிந்து அதன் பின்னே இந்த நாவலை அசை போட்டு எழுதியதாகவும் பெருமாள் முருகன் கூறியிருக்கிறார்.
என்ஜிவோக்கள் மற்றும் பின்நவீனத்துவத்தின் செல்வாக்கில் யோசிக்கும் படைப்பாளிகள் இந்த துவக்கத்தை வெறும் அடையாளங்கள், தொன்மங்கள், புதிய கண்டுபிடிப்புகள் என்று ஒரு மையச்சரடு அல்லது ஆழமான சமூக இயக்கத்தின் ஆணி வேரை விடுத்து யோசிக்கிறார்கள்.
இந்த நாவலில் கூட பிள்ளைப் பேறின் அனைத்து பரிமாணங்களும் அலசப்பட்டிருந்தாலும், உணர்ச்சி என்ற அளவில் அவை ஒன்றையே வேறு வேறு காட்சிகளில் கூறியன கூறியலாக வந்து போகின்றன. பிள்ளைப் பேறின்மை என்பதன் சாதி, பால், சொத்துடமை, ஆன்மீகம், தொன்மம் ஆகிய அனைத்தும் என்ன விதமான சமூக கூட்டியக்கத்தின் விதிகளில் எப்படியெல்லாம் ஊடுருவியிருக்கின்றன என்பதை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு இந்த நாவல் உதவுகிறது.
அதில்தான் இந்த நாவலின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. அதை அங்கீகரிக்க “மாதொருபாகன்” மேல் ஆத்திரம் கொண்டிருக்கும் கொங்கு வேளாளர்கள் எனும் சாதியின் பலமான இருப்பை நாம் அறிய வேண்டும்.
முதல் மொழிப்போர் தியாகி நடராசனுக்கு நினைவேந்தல் (1939 சனவரி 15 )
சென்னையில் பு.மா.இ.மு தோழர்கள் சைக்கிள் பேரணி
1938, ஏப்ரல் – 21-ம் தேதி முதல் சென்னை மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இந்தியை கட்டாயப்பாடமாக்கினார் சென்னை மாகாண முதல்வர் பதவிக்கு கொல்லைப்புற வழியாக வந்த பார்ப்பன நரி ராஜாஜி. இந்தி – சமஸ்கிருத திணிப்பை முறியடிக்கும் வகையில் சோமசுந்தர பாரதியார், தந்தை பெரியார், கி.ஆ.பெ விசுவநாதம் போன்றவர்கள் ’’இந்தி எதிர்ப்பு தலைமை வாரியத்தை’’ அமைத்து இந்தியை கற்றுத்தரும் பள்ளிகள் முன்பு மறியல் போராட்டங்களை தீவிரமாக நடத்தினர். இந்தப் போராட்டங்களில் மக்கள், தமிழறிஞர்கள், பெண்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறை சென்றார்கள்.
சென்னையில் நடந்த ஒரு மறியல் போரட்டத்தில் ஈடுபட்டதற்காக நடராசன், தாளமுத்து உள்ளிட்டு இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கில் சிறையிலடைக்கப்பட்டார்கள். அதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நடராசன் 1939 சனவரி 15-ம்தேதி உயிரிழந்தார். இவர்தான் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் மொழிப்போர் தியாகி. அவரைத் தொடர்ந்து மார்ச் -12-ம் தேதி தாளமுத்துவும் தியாகியானார். அரசின் அடக்குமுறையை எதிர்த்து நின்ற இந்த வீரர்கள் தங்கள் உயிர்த் தியாகத்தால் ராஜாஜி அரசை பணிய வைத்தனர். இந்தித் திணிப்பு கைவிடப்பட்டது.
மீண்டும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி தலைமையில் ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத – இந்தி ஆதிக்க பண்பாடடு படையெடுத்து வருகிற இத்தகைய சூழலில் இதை வெட்டி வீழ்த்த மொழிப்போர் தியாகிகள் நினைவை நெஞ்சில் ஏந்தி வீறுகொண்டு எழவேண்டியுள்ளது. அதோடு,
தமிழ் தேசிய இனத்தின் கடவுள் – ஆன்மீக மறுப்பு, வேத, வைதீக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு பாரம்பரியத்தை போர்வாளாக ஏந்துவோம்!
மீண்டும் படையெடுத்து வருகிற ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத – இந்தி ஆதிக்க பண்பாட்டை போரிட்டு வீழ்த்துவோம்!
ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக தமிழ் நாட்டை கட்டியமைப்போம்!
ஆகிய முழக்கங்களையும் தமிழக மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்த்து தட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இதை செய்யும் பொருட்டு மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் கடந்த ஜனவரி 10-ம் தேதி முதல் தமிழக அளவில் பேருந்து, ரயில்களில் பிரச்சாரம், மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் பிரச்சாரம் என பல்வேறு வடிவங்களில் முழுவீச்சில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
அதன் ஒரு வடிவமாக, சென்னையில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் ஜனவரி – 15 அன்று மாலை 5 மணியளவில் மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள முதல் மொழிப்போர் தியாகி நடராசன் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அன்று ‘தமிழர் திருநாள் ’ என்று அழைக்கப்படும் பொங்கல். அரசு விடுமுறை நாள். சென்னையிலிருந்து சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்றுவிட்டனர். எஞ்சிய சென்னை வாசிகள் பொங்கலை கொண்டாட தயாரானார்கள். தொலைக்காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் மக்களை வீட்டிற்குள்ளேயே சிறைபிடிக்க காத்திருந்த நாள். ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி தமிழ் மொழியையும், தமிழரின் வாழ்வையும், தமிழரின் பண்பாட்டையும் தாக்கி அழிக்க ஆரிய – பார்ப்பனக் கூட்டம் மீண்டும் படையெடுத்து வரும் போது தமிழக மக்கள் அமைதியாக இருக்கும் சூழலை உடைத்தெரிந்து வீறுகொண்டு எழவேண்டும் என்ற போர்க்குணத்தோடு, பு.மா.இ.மு வைச் சார்ந்த தோழர்கள் சென்னையில் சைக்கிள் பேரணியை நடத்தினர்.
ஜனவரி 15 -ம் தேதி விடியற் காலையில் பொழிந்த கடும் பனியையும் பொருட்படுத்தாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து சைக்கிள்களை மதுரவாயல் – நொளம்பூர் பகுதியில் குவித்தனர். தீவிரமாகிவரும் மறுகாலனியாக்க சூறையாடல்களால் அன்றாடம் வாழ்வை இழந்து, பொங்கல் களையிழந்து கிடந்த உழைக்கும் மக்கள் வாழும் நொளம்பூர் பகுதியில் பு.மா.இ.மு தோழர்களின் சைக்கிள் பேரணி களைகட்டத் தொடங்கியது.
காலை முதல் சைக்கிள்களில் செங்கொடி கட்டுவது, மொழிப்போர் தியாகிகளின் படங்களை கட்டுவது, சைக்கிள்களை வரிசைப்படி தயார் நிலையில் வைப்பது என உடம்பில் செஞ்சட்டை, தலையில் தொப்பி, கழுத்தில் முழக்க அட்டை, கையில் அமைப்பு பெயர் எழுதிய கைப்பட்டை சகிதமாக மாணவ – மாணவிகள் இப்பணியில் ஈடுபட்டனர். புத்தாடை இன்றி – பொலிவிழந்து அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருந்த அப்பகுதி மக்களும், இளைஞர்களும், இளம்பெண்களும் பு.மா.இ.மு தோழர்களின் உற்சாகமான தயாரிப்பை பார்த்து ’’இங்க என்னப்பா செய்றீங்க, காலையிலிருந்து எதோ கும்பல் கும்பலா வேலை செய்றீங்க’’ என்று ஒருவர் வியந்து கேட்க, அவருக்கு ஒரு தோழர் விளக்கி சொன்னார்.
அடுத்து கம்பீரமாக எழுப்பப்பட்ட பறை முழக்கம், இந்த நாள் நிகழ்ச்சி எதற்காக என்பதை ஊர்முழுக்க அறிவிப்பதாக இருந்தது. சுமார் காலை 9.30 மணியளவில் நொளம்பூர் பகுதியின் வீதிகளில் பறை அடித்து முதல் மொழிப்போர் தியாகி நடராசனுக்கு நினைவேந்தல் சைக்கிள் பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு மக்களை அணிதிரட்டினர். பொங்கலை பொருட்படுத்தாமல் அப்பகுதி மக்கள் திரண்டனர். காலை 10 மணியளவில் ம.க.இ.க. சென்னைக் கிளை செயற்குழு உறுப்பினர் தோழர் வாசு தலைமை தாங்க, பு.மா.இ.மு வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தொடக்க உரையாற்ற, பு.மா.இ.மு சென்னை மாநகரக் கிளை இணைச் செயலாளர் தோழர். மருது முழக்கம் எழுப்ப, பறை ஓசை கம்பீரமாக எழும்ப புமாஇமு வின் செஞ்சட்டை அணிந்த சுமார் 35 தோழர்கள் சைக்கிளில் அணிவகுத்துச் சென்றனர்.
செங்கொடி ஏந்திய ஒரு தோழர் வழி காட்டியாக சைக்கிளில் முன்செல்ல, புமாஇமுவின் மாணவிகள் பின் தொடர… செங்கொடி, பதாகை ஏந்திய சைக்கிள்களிலும் ஒன்றன்பின் ஒன்றாக நொளம்பூர் பகுதியிலிருந்து ஆற்று பாலம் வழியாக சாரை சாரையாக மதுரவாயல் பைபாஸ் வந்தது பேரணி.
ஜனவரி – 15 முதல் மொழிப்போர் தியாகி நடராஜன் நினைவுநாள் மட்டும்தான் என்றாலும், பிரதான சாலைகளில் நேரடியாக அவர் நினைவிடம் உள்ள மூலக்கொத்தளம் செல்வதை தவிர்த்து, அவருக்குப் பின்னால் மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகளான விருகம்பாக்கம் அரங்கநாதன், கோடம்பாக்கம் சிவலிங்கம் ஆகியோர் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தி – அவர்கள் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திவிட்டு, இறுதியாக மொழிப்போர் தியாகி நடராஜன் நினைவிடத்திற்கு செல்லும் வகையிலும், இதனூடாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இந்தி – சமஸ்கிருத திணிப்புக்கு எதிரான கருத்துக்களை பிரச்சாரமாக கொண்டு செல்லும் வகையில் சைக்கிள் பேரணியை நடத்தும் வகையில் திட்டமிடப்பட்டது.
அதன் அடிப்படையில் நெற்குன்றம் சக்திநகர், சிடிஎன் நகர், மேட்டுக்குப்பம், வழியாக சென்ற பேரணி செல்லும் வழியில் எல்லாம் மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதிகளில் பறை முழக்கம் எழுப்பி, கம்பீரமாக முழக்கமிட்டு, நோட்டீஸ் வினியோகித்து பின்னர் சைக்கிள் பேரணியின் அவசியத்தை வலியுறுத்தி ஒரு தோழர் பேசுவது என பிரச்சாரப் பயணம் ஒரு விருகம்பாக்கம் அரங்கநாதன் நினைவிடம் வரையில் ஒரு கட்டத்தை அடைந்தது.
அரங்கநாதன் நினைவிடத்தை நோக்கி பறை முழக்கத்துடன் சைக்கிள் பேரணி சென்றது, அப்பகுதி மக்கள் சாலைகளின் இரு புறம் நின்றும், மாடி வீடுகளில் இருந்தும் பேரணியை ஆதரித்தனர். அரங்கநாதன் உறவினர்களுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்துவிட்டு சென்ற பு.மா.இ.மு தோழர்கள், 1965 ஜனவரி 26 அன்று “தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!” என்று முழக்கம் எழுப்பியபடியே தீயிட்டுக் கொண்டு தியாகியான அரங்காநாதன் நினைவிடத்தை அடைந்தனர்.
புமாஇமு சென்னை மாநகரக் கிளை செயலர் தோழர் கார்த்திகேயன் மாலை அணிவித்து அரங்கநாதனின் தியாகத்தை விளக்கிப் பேசினார். இந்நிகழ்ச்சியை கேள்விப்பட்டு அங்கு வந்த அரங்கநாதனின் மூத்த மகன் திரு. அமுதவாணன் அவர்கள் புமாஇமு தோழர்களிடம் ’’ நான் தான் தியாகி அரங்கநாதனின் மூத்த மகன்’’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். உடனே தோழர்கள் அவரை அழைத்து பேச வைத்தனர்.
செஞ்சட்டை அணிந்த தோழர்களைப் பார்த்து அவர் ‘’ எனக்கு ரொம்ப பெருமிதமா இருக்கு. இதற்கு முன்னர் ஜனவரி 26-ம் தேதி எத்தனையோ கட்சிக்காரங்க வருவாங்க அப்பாவுக்கு மரியாதை செலுத்துவாங்க. அவர்கள் எல்லாம் அதை ஒரு சடங்காக செய்வார்கள். ஆனால், உங்களை எனக்கு இதற்கு முன்னால் தெரியாது, உங்கள் நோட்டீசை படித்தேன், பேரணியாக முழக்கமிட்டபடி வருவதை பார்த்தேன், அனைவரும் மாணவர்கள், பொங்கல் விடுமுறை என்று பாராமல் ஒவ்வொருவரும் மொழிப்பற்றோடு உணர்வுப்பூர்வமாக அணிவகுத்து வந்தது என்னை மிகவும் நெகிழச்செய்துவிட்டது. நான் உங்களிடம் தியாகி அரங்கநாதன் மகன் என்று சொல்லிகொள்வதில் பெருமைப்படுகிறேன். என் அப்பா தமிழுக்காக தீயிட்டுக்கொண்டபோது நான் 7 வயது சிறுவன். எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் அதன்பின் என் அப்பா செய்த தியாகத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். மத்திய அரசு ஊழியரான என் அப்பா மறைவுக்குப் பின்னால் நாங்கள் பொருளாதார ரீதியாக எவ்வளவோ சிரமங்களை அனுபவித்தோம். ஆனால் என் அப்பாவின் தமிழ் மொழிப்பற்றையும், தியாகத்தையும் நினைக்கும் போது அதெல்லாம் எங்களுக்கு பெருமிதத்தைத்தான் கொடுத்தது. இன்று அவரைப்போலவே உங்களைப் பார்க்கிறேன். நான் என் அப்பாவைப்போல எப்போதும் உங்களுடன் இருப்பேன். உங்கள் பணிக்கு தலை வணங்குகிறேன்’’ என்று உணர்வுபூர்வமாக பேசினார்.
நாம் எதிர்பார்க்காமலேயே நமது நிகழ்ச்சிக்கு வந்து தியாகி அரங்கநாதனின் மகன் அமுதவாணன் உணர்வுப்பூர்வமாக பேசியது புமாஇமு தோழர்களின் பிரச்சாரத்திற்கு மேலும் வலு சேர்த்தது.
காலை 12 மணி
உச்சி வெயில் மண்டையை பிளந்தது. ஆனால் செஞ்சட்டை தோழர்கள் சோர்வடையவில்லை. அக்கம் பக்கம் வீடுகளில் கேட்டு தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு விருகம்பாக்கத்தில் இருந்து வடபழனி வழியாக சைக்கிள் பேரணி பிரச்சாரப் பயணம் முழக்கமிட்டவாறே தொடந்தது. புதிய புதிய தோழர்கள் முழக்கமிட்டார்கள், ஆங்காங்கே மக்களிடம் பேசினார்கள். அவ்வழியாகச் சென்ற மக்கள் யாரும், இதைப் பார்க்கத் தவற முடியாத அளவுக்கு இபிரச்சாரம் நடந்தது.
மக்கள் ஆங்காங்கே ’’என்ன இது, நீங்கெல்லாம் யாரு, எங்க போறீங்க” என்று கேட்டு கேட்டு தெரிந்துகொண்டனர். பிரசுரங்களை கேட்டு வாங்கி படித்தனர். சிலர் 4, 5 பிரசுரங்களை கேட்டு வாங்கிச் சென்றனர். ஒருவர் வடபழனியில் 10 பிரசுரங்களை வாங்கிச் சென்றிருக்கிறார். அடுத்து அவர் கீழ்ப்பாக்கம் கே.எம்.சி மருத்துவமனை அருகில் பேரணியை பார்த்துவிட்டு அருகில் வந்து “நான் உங்களை வடபழனியில் பார்த்தேன், அதோ அந்த பெண் தோழரிடம்தான் நோட்டீசு 10 வாங்கினேன். என் நண்பர்களுக்கு கொடுத்து விட்டுத்தான் வந்தேன். இங்கேயும் நீங்கள் இருப்பதை பார்த்ததும் உங்களிடம் பேச வேண்டும் என்று தோன்றியது” என்று கூறினார். இரு சக்கர வாகனங்களில் சென்ற பலர் தங்களுடைய வேகத்தை குறைத்துக்கொண்டு அருகில் வந்து நோட்டீசை பெற்றுக்கொண்டு எதற்காக பிரச்சாரம் என்று கேட்டுத் தெரிந்துகொண்டு சென்றனர்.
மதியம் 1.15 பேரணி
கோடம்பாக்கம் ரங்கராசபுரத்தை சென்றடைந்தது. மொழிப்போர் தியாகிகளில் மற்றொருவரான கோடம்பாக்கம் சிவலிங்கம் சனவரி – 25 -ம் தேதி தீயிட்டுக்கொண்டு தியாகியான இடம்தான் அது. 1965 ல், “என் தாய்மொழி தமிழை சாகடித்துவிட்டு, இந்தி ஆட்சிமொழியாகவிருந்த சனவரி 26 விடியற்காலை பொழுதில் நான் எப்படி விழிப்பேன்” என்று மனம் நொந்து 25 -ம் தேதி இரவு முழுவதும் தூங்காமல் வெதும்பிக்கொண்டிருந்த சிவலிங்கம் என்ற திருமணமாகாத இளைஞன் 26 -ம் தேதி விடியற்காலை 4 மணிக்கு, “தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!” என்று முழக்கமிட்டவாறே தன்னுடம்பில் தீயிட்டுக்கொண்டு தியாகியானார்.
“அரங்கநாதனின் உயிர்த்தியாகத்திற்கு முன்னோடியாக இருந்தவர் இந்த சிவலிங்கம். அவர் தியாகத்தின் அடையாளமாக அன்றைக்கு தி.நகரில் ஒரு சுரங்கப்பாதைக்கு சிவலிங்கம் பாலம் என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு அவர் தியாகத்தின் தடம் அழிக்கப்பட்டதோடு சேர்த்து அந்த பாலத்திற்கும் துரைசாமி பாலம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டது ‘’ என்று அன்றைக்கு மேயராக இருந்தவர் புமாஇமு தோழர்களிடையே புலம்பி இருக்கிறார்.
மொழிப்போர் தியாகி சிவலிங்கம் தீயிட்டுக் கொண்ட கோடம்பாக்கம் பகுதியில் வாழும் மக்களுக்கு, இன்று அந்த தியாகத்தைப் பற்றி தெரியவில்லை. இதை நினைபடுத்தும் வகையில் கையில் எடுத்துச் சென்ற அவர் படம் அச்சிட்ட பேனரை வைத்து மலர் தூவி புமாஇமு சென்னை மாநகரக் கிளை இணைச் செயலர் தோழர் மருது உரையாற்றிய்னார். அங்கு 50-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் எனக் கூடியவர்கள் இந்நிகழ்ச்சியை வியந்து பார்த்தனர். அவர்கள் “இந்தப் பகுதி இப்படி ஒருவர் வாழ்ந்த பகுதியா? இதுநாள் வரை நமக்கு தெரியவில்லையே… ” என்று தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர். ஆட்டோ ஓட்டும் தொழிலாளி ஒருவர் நமது தோழர்கள் முழக்கமிடும்போது அவரும் சேர்ந்து கையை உயர்த்தி உணர்வுப்பூர்வமாக முழக்கமிட்டார். அங்கு கூடியிருந்த சிறுவர்களும் மாணவர்களும் ஆர்வமாக மொழிபோர் தியாகி சிவலிங்கம் வரலாற்றைக் கேட்டு தெரிந்துகொண்டனர்.
மதியம் 1.50 மணி…
மதிய உணவு அருந்த வேண்டிய நேரம். 35 தோழர்கள். தொடர்ச்சியான பிரச்சாரத்திற்கிடையில் அதிகாலையில் எழுந்து தோழர்கள் சமைத்து கொண்டு வந்ததோ 15 பேருக்கான உணவு. விடுமுறை என்பதால் உணவு விடுதிகளும் இல்லை. அவ்விடத்தை விட்டுச் செல்லும் முன்பாக அங்கு கூடியிருந்த உழைக்கும் மக்களிடம் தோழர்கள் கடும் வெயில் ஏற்படுத்திய தாகத்தை தீர்க்க தண்ணீர் கேட்டனர். அம்மக்களோ தண்ணீரோடு சேர்த்து தங்கள் வீடுகளில் சமைத்திருந்த பொங்கலையும் கொடுத்து நெகிழச் செய்தனர். அவ்விடத்திற்கு அருகில் ஒரு குறுக்குச் சாலையில் தோழர்கள் அனைவரும் அமர்ந்து இருக்கும் உணவை பகிந்துண்ண ஏற்பாடு செய்ய… அருகில் பழ வியாபாரம் செய்துகொண்டிருந்த குடும்பம் ஒன்று தோழர்களிடம் விசாரித்துவிட்டு தாங்கள் வைத்திருந்த உணவையும் கொடுத்து சேர்த்து உண்ணுமாறு கோரியது. தோழர்களுக்கு உணவுப் பற்றாக்குறை தீர்ந்தது, உழைக்கும் மக்கள் காட்டிய வர்க்கப் பாசம் தோழர்களிடையே உற்சாமூட்டியது. சைக்கிள் பேரணியின்போது ஏற்பட்ட களைப்பைபோக்க புதிய தோழர்களின் புரட்சிகர கலை நிகழ்ச்சி சாலையிலேயே களைகட்டியது.
மதியம் 2.20 மணி…
உணவு இடைவேளைக்குப் பின் சைக்கிள் பேரணி தொடங்கியது. அதுவரை இல்லாமல் இருந்த போலீசின் விசாரணையும் தொடங்கியது. பேரணி தொடங்கும் தருவாயில் போலீசார்…. “யார் நீங்கள்? என்ன செய்கிறீர்கள்? எங்கே செல்கிறீர்கள்?” என கேள்விகளை அடுக்கினார்கள்.
சென்னை மாநகரக் கிளை இணைச் செயலர் அவருக்கு பதில் சொல்லி பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அந்த போலீசாரின் அனுமதிக்காக தோழர்களின் சைக்கிள் பேரணி காத்திருக்கவில்லை, பிரச்சாரப் பணி தொடர்ந்தது. பின்னர் போலீசாரிடம் பேசிய தோழர் சொன்னபோதுதான் தெரிந்தது, “அவர்கள் லிமிட்டில் எதாவது நிகழ்ச்சி செய்யப்போகிறோமா” என்பதை தெரிந்து கொள்வதற்காக தங்கள் கடமையாற்றினார்களாம்.
தமிழ்தேசியஇனத்தின்
கடவுள் மறுப்பு – ஆன்மீக மறுப்பு,
வேத, வைதீக – பார்ப்பன,
சமஸ்கிருத- இந்திஎதிர்ப்பு
பாரம்………பரியத்தை
போர்வாளாக ஏந்துவோம்!
போரிட்டு வீழ்த்துவோம்!
மீண்டும் படையெடுத்து வருகிற
ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக,
சமஸ்கிருத – இந்தி
ஆதிக்கபண்பாட்டை
போரிட்டு வீழ்த்துவோம்!
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!
ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போரின்
தளப்பிரதேசமாக தமிழ்நாட்டை
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!
என்று கம்பீரமான முழக்கங்களுடனும், ஆங்காங்கே உரையாற்றிக் கொண்டும் சூளைமேடு, பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், வால்டாக்சு சாலை வழியாக சென்ற சைக்கிள் பேரணி மாலை சுமார் 4.30 மணிக்கு மூலக்கொத்தளம் பகுதியை சென்றடைந்தது. அப்பகுதி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து மாலை நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அணிதிரட்டல் செய்யும் விதமாக சுமார் 1 மணி நேரம் அப்பகுதியை பேரணியாக சுற்றி வந்தும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பறை அடித்து தெருமுனைப்பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் 100 க்கும் மேற்பட்ட மக்கள் கூடி நின்று கவனித்தனர்.
காலை 10 மணிக்கு சென்னையின் நுழைவு வாயில்களில் ஒன்றான மதுரவாயல் நொளம்பூர் பகுதியில் தொடங்கிய சைக்கிள் பேரணி விருகம்பாக்கம், கோடம்பாக்கம், புரசைவாக்கம் என சுமார் 20 கிலோமீட்டரை சோர்வறியாமல் கடந்து ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து இறுதியாக முதல் மொழிப்போர் தியாகிகள் நடராசன் – தாளமுத்து நினைவிடத்தை மாலை சுமார் 5.30 மணியளவில் சென்றடைந்தது. பு.மா.இ.மு வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் நிறைவுறையாற்றி பேரணியை முடித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் முதல் மொழிப்போர் தியாகி நடராசனுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பு.மா.இ.மு சென்னை மாநகர பொதுக்குழு உறுப்பினர் தோழர் சாரதி தலைமை தாங்க, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் வெங்கடேசன் மாலை அணிவித்து உரையாற்றினார். இந்நிகச்சியில் ம.க.இ.க, பு.மா.இ.மு வைச் சார்ந்த தோழர்கள் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
முதல் மொழிப்போர் தியாகிகள் நடராசன் – தாளமுத்து நினைவிடத்தை சுற்றியுள்ள மக்கள் “பொதுவாக சனவரி – 25 அன்றைக்குத் தான் இங்கு கட்சிக்காரங்க வருவாங்க. அன்றைக்கு அரசே சுத்தம் செய்து மேடை போட்டுக்கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடத்துவாங்க. நீங்க இன்னா இன்னைக்கு வந்துகீறீங்க, இந்த எடத்த இவ்ளோ கஷ்டப்பட்டு கிளீன்பண்றீங்க” என்று ஆச்சரியமாக கேட்டனர்.
ஆம், காரணம் முதல் மொழிபோர் தியாகி நடராசன் நினைவுநாள் என்றைக்கு என்று அப்பகுதி மக்களுக்குக் கூட தெரியாத அளவில் தான் ஒரு சடங்காக இந்த அரசு அவர்களை நினைவுகூர்ந்து வருகிறது. அவர்கள் நினைவிடம் உள்ள சுடுகாட்டுப் பகுதி உண்மையில் மலக்காடாகத்தான் உள்ளது. சுமார் 10 தோழர்களும், அப்பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் சிலரும் சேர்ந்து காலையில் இருந்து மிகவும் கடினப்பட்டுத்தான் அந்த நினைவிடம் உள்ள பகுதியை மனிதர்கள் செல்லும் பகுதியாக மாற்றினார்கள்.
தமிழ் மொழி, இனம், தமிழர்தன் வாழ்வைக் காக்கப் போராடிவர்களுக்கு அரசு செய்யும் மரியாதை இவ்வளவுதான். இந்த கேடுகெட்ட அரசு அவர்கள் நினைவிடத்தை பராமரிப்பதற்கும் இவ்வளவுதான் முக்கியத்துவம் தந்துள்ளது. மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தை மட்டுமின்றி அவர்கள் உயித்தியாகம் செய்து காத்து நின்ற தமிழ் மொழி, இனம், பண்பாடு ஆகியவற்றை அழிக்க தமிழகத்தின் மீது மீண்டும் படையெடுத்து வருகிற ஆரிய – பார்ப்பன கூட்டத்தை விரட்டியடிக்கும் போரில் உழைக்கும் மக்கள் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். அது ஒன்றாதான் சரியான வழி. மொழிப்போரில் உயிர்த்தியாகம் செய்த எண்ணற்ற தியாகிகளுக்கு நாம் செய்யும் உண்மையான நினைவேந்தலுமாகும்.
உழைக்கும் மக்களே, தமிழ் ஆர்வலர்களே, ஜனநாயக சக்திகளே,
வரும் 25-ம் தேதி மாலை 6 மணியளவில் கோடம்பாக்கம், காமராசர் காலனி 6 வது தெருவில் (பவர் அவுஸ் அம்பேத்கர் சிலை அருகில்) நடைபெற இருக்கும் மொழிப்போர் தியாகிகள் நினைவுநாள் கூட்டத்திற்கு அணிதிரண்டு வாருங்கள்.
தகவல் மக்கள் கலை இலக்கியக் கழகம் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சென்னை
புஸ்வாணமாகிப் போனது மோடி அலை! நிரந்தரமானது சாதி – மத பிளவு நிலை!!
அண்மையில் ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள், ஆளும் இந்துவெறி கும்பலுக்கு பீற்றிக் கொள்ளுமளவுக்குப் பெரிய வெற்றியைத் தரவில்லை. நாடெங்கும் மோடி அலை தொடர்ந்து வீசுவதாக ஊதிப்பெருக்கிய இந்துவெறி கும்பல், இப்போது அப்படி எந்த அலையும் வீசாததையும் காஷ்மீர் பள்ளத்தாக்கு தனது கைக்கு வராத ஆத்திரத்தாலும் புளுங்குகிறது.
அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிழைப்புவாதத்தைச் சாதகமாக்கிக் கொண்டு, அக்கட்சியுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க பதவிவெறியோடு பா.ஜ.க. அலைகிறது.
ஜம்மு-காஷ்மீரில் ‘வளர்ச்சி’ வந்தால் தீவிரவாதமும் பிரிவினைவாதமும் விழுந்துவிடும் என்று அரசியலுக்குப் பதிலாக மறுகாலனியாக்க வியாபாரத்தை மோடி கடைவிரித்த போதிலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது சட்டப் பிரிவை நீக்க வேண்டுமென்ற தனது கொள்கையை வெளிப்படையாக அறிவிக்காமல் அடக்கி வாசித்த போதிலும், 44-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் “லட்சியம்” புஸ்வாணமாகிப்போனது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒப்பிடும்போது இப்போது அம்மாநிலத்தில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் குறைந்து போயுள்ளதோடு, வெற்றி பெற்ற ஜம்மு தொகுதிகளைத் தவிர, மற்ற தொகுதிகளில் பா.ஜ.க.வால் டெபாசிட் கூடப் பெறமுடியவில்லை. காங்கிரசு மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகளின் கூட்டணி முறிந்து போனதைச் சாதகமாக்கிக் கொண்டு, மத ரீதியான முனைவாக்கத்தைக் கட்டியமைத்து பா.ஜ.க.வால் கூடுதல் இடங்களைக் கைப்பற்ற முடிந்துள்ளதேயன்றி, அங்கு பா.ஜ.க.வுக்கு ஆதரவான அலை எதுவுமில்லை.
ஏறத்தாழ 66 சதவீத வாக்குப்பதிவைக் காட்டி, இது ஜனநாயகத்தின் வெற்றியாகவும் காஷ்மீர் மக்கள் தீவிரவாதத்தைப் புறக்கணித்துவிட்டதாகவும் ‘தேசிய’ப் பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் போலீசும் துணை இராணுவப் படைகளும் பயங்கரவாத அட்டூழியங்களில் ஈடுபடுவதற்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டு, துப்பாக்கி முனையில் தேர்தலை நடத்தி, இதுதான் ஜனநாயகம் என்றால் அதைவிடக் கேலிக்கூத்து வேறெதுவும் இருக்க முடியாது.
சாதி மத பிளவு நிலை
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் நான்குமுனை போட்டி காரணமாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், ஓட்டுக்கட்சிகள் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சேர்ந்தால்தான் ஆட்சியமைக்க முடியும் என்ற இழுபறி நிலை ஏற்பட்டிருக்கிறது. ஜம்முவிலுள்ள இந்துக்கள் பா.ஜ.க.வுக்கும், காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள முஸ்லிம்கள் இந்துவெறி பா.ஜ.க. காலூன்றுவதைத் தடுக்க மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும், லடாக்கிலுள்ள பௌத்தர்கள் காங்கிரசுக்கும் வாக்களித்துள்ளனர். இத்தகைய மத ரீதியான முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்துவது, ஜம்முவிலுள்ள இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிடுவது, இதன் மூலம் அரசியல் ரீதியில் தீர்க்க வேண்டிய காஷ்மீர் பிரச்சினையை மதரீதியாகப் பிளவுபடுத்தி ஆதாயமடைவது என்பதே இந்துவெறிக் கும்பலின் நோக்கமாக உள்ளது.
அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிழைப்புவாதத்தைச் சாதகமாக்கிக் கொண்டு, அக்கட்சியுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க பதவிவெறியோடு பா.ஜ.க. அலைகிறது. ஒருபுறம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது என்ற பெயரில் பா.ஜ.க.வைத் தோளில் தூக்கி அதற்கு அங்கீகாரம் அளித்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சியானது பேரங்கள் படியாத நிலையில், மறுபுறம் மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவது என்ற பெயரில் காங்கிரசு மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் மெகா கூட்டணி ஆட்சியமைக்கவும் முயற்சிக்கிறது. ஆனால், எந்தக் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் அது நித்திய கண்டம், பூரண ஆயுசாகவே இருக்கும் என்பதையே ஓட்டுக் கட்சிகளுக்கிடையிலான பேரங்களும் இழுபறியும் காட்டுகின்றன.
சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள், ஆளும் இந்துவெறி கும்பலுக்கு பீற்றிக் கொள்ளுமளவுக்குப் பெரிய வெற்றியைத் தரவில்லை
பழங்குடியினர் பெரும்பான்மையாக உள்ள பின்தங்கிய மாநிலமான ஜார்கண்டில், பிற்பட்ட சாதியினரது சாதிய முனைவாக்கத்தைக் கட்டியமைத்துக் கொண்டு பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் மறுகாலனியச் சூறையாடல் மேலும் தீவிரமாகி, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்கள் துப்பாக்கி முனையில் பிடுங்கப்பட்டு விரட்டப்படும் கொடூரம் அரங்கேறுவதற்கான சூழலும், ஜம்மு-காஷ்மீரில் மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி, பள்ளத்தாக்கிலுள்ள முஸ்லிம் மக்களைத் தனிமைப்படுத்தி ஒடுக்குவதற்கான சூழலும் நிலவுவதையே அபாய எச்சரிக்கையாக இத்தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
– தலையங்கம் ________________________________________ புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
________________________________________
எழுத்தாளர் பெருமாள் முருகனின் எழுத்தைக் கொன்றவர்கள் இன்று ஒரு தலித் இளைஞனின் தலையை துண்டித்திருக்கிறார்கள்.
எழுத்தாளர் பெருமாள் முருகன்
“மாதொரு பாகன்” நாவலை தடை செய்யுமாறும், நூலை எரித்தும் திருச்செங்கோட்டில் போராட்டம் நடைபெற்றதை அறிந்திருப்பீர்கள். நாமக்கல் வருவாய்த்துறை அலுவலகத்தில் அரசு அதிகாரத்தினால் நாவலாசிரியர் பெருமாள் முருகன் சித்ரவதை செய்யப்பட்டதும், இறுதியில் தனது அனைத்து எழுத்துக்களையும் திரும்பப் பெறுவதோடு இலக்கிய வாழ்வையே முடித்துக் கொள்வதாக அவர் அறிவித்திருக்கிறார். அந்த வகையில் ‘மறுபிறப்பில்’ நம்பிக்கையற்றவனாகிய தான் ‘இறந்து விட்டதாக’வும் கூறியிருக்கிறார்.
கொல்லப்படுபவனே குழிவெட்டிக் கொண்டு மண் மூடி சமாதியாகும் காட்சிகளை சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். மரணித்தவனே அறிவிக்கும் இந்த மரண அறிவிப்பை கொங்கு தமிழுக்காக ரசிக்கப்படும் ‘கொங்கு’ நாடு சாதித்திருக்கிறது.
இதைக் கண்டித்து அனேகமாய் அனைத்து ஊடகங்களும், எழுத்தாளர்களும், முற்போக்கு – இடதுசாரி அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அந்த எதிர்ப்பில் ஒரு எழுத்தாளனின் கருத்துரிமை, அந்த வட்டார சாதிய, இந்துத்துவ இயக்கங்களின் அராஜகம் போன்ற நியாயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.
திருச்செங்கோட்டு ஊர் ‘மக்கள்’ நாவலில் – எதை – ஏன் எதிர்த்தார்கள், பெருமாள் முருகனின் நாவலை நாம் எதற்காக ஆதரிக்க வேண்டும் என்ற இருதரப்பின் வாதங்கள் – செய்திகளை பரிசீலித்தால் அவை ஒரு குறிப்பான உண்மையை அந்த உண்மை குறித்த விவாதங்களை மறைத்திருப்பது தெரிகிறது.
அந்த உண்மை என்ன?
இந்த நாவல் ஒரு இறுக்கமான சாதிய சமூகத்தில் குழந்தைப் பேறின்மையால் அலைக்கழிக்கப்படும் ஒரு தம்பதியினரின் வாழ்வை முன்வைக்கிறது. சாதிய சமூகத்தின் விதிகளை மீறாமல் அதே சமூகம் முன் வைத்திருக்கும் சில நியமங்களை விவரிக்கும் போக்கில் ஏற்றத்தாழ்வான இந்த சாதிய சமூக அமைப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.
நாவலின் இறுதியில் கோவில் திருவிழாவின் இரவில் பிள்ளைப் பேறு வேண்டி வரும் பெண்கள் ஆண்களுடன் உறவு கொள்கிறார்கள். இது ஒரு சடங்காக அப்பகுதியில் நிலவுவதாக ஆசிரியர் முன்வைக்கிறார். ‘ஒழுக்கத்துடன்’ வாழும் பெண்கள் யாருடனோ உறவு வைத்துக் கொண்டு பிள்ளை பெறுகிறார்கள் என்று இதை திருச்செங்கோடுக்காரர்கள் மொழிபெயர்ப்பதன் மூலம் பெருமாள் முருகன் வில்லனாக்கப்படுகிறார்.
அதிலும் ஒரு குறிப்பான உண்மை மறைந்திருக்கிறது. இந்நாவல் ஏற்படுத்தியிருக்கும் எதிர்ப்புக்கும் அந்த மறைபொருள்தான் அடிப்படை.
பிள்ளை வரம் வேண்டி கோவிலுக்கு செல்லும் ஆதிக்க சாதி பெண்களோடு உறவு கொண்டு அபயமளித்து கோரிக்கையை நிறைவேற்றும் ஆண்களை சாமிகளாக கருதுகிறார்கள் மக்கள். சாமிகளில் தீண்டாச் சாதியினரும் பாதிக்கு பாதி இருப்பதாக நாவல் கூறுகிறது. ஆதிக்க சாதியின் மொழியில் சொல்வதாக இருந்தால், “கவுண்டச்சி வயிற்றில் சக்கிலியின் பிள்ளையா?”.
இப்படி தமிழகத்திலேயே சாதி ஒடுக்குமுறைக்கு பிரபலமான மேற்கு தமிழகத்தில், இன்று வரையிலும் தலித் மக்களை அடக்கி ஆளும் ஒரு ஆதிக்க சாதி உணர்வின் வயிற்றில் அமிலத்தை ஊற்றி எரிய வைத்திருக்கும் பெருமாள் முருகனை முதலில் வாழ்த்தி விடுவோம். இந்த நாவலின் தரம், அறம், கலை, சாதனை அனைத்தும் இந்த எதிர் விளைவில்தான் வெளிப்படுகிறது.
ஒன்று கூடும் திருவிழாவிற்கு பிள்ளை வேண்டி தனது மனைவி பொன்னாவை அனுப்பக் கோரும் மச்சான் முத்துவிடம், நாவலின் நாயகன் காளி கூறுகிறான்…..
“நீ அந்தக்காலத்து ஆளாட்டமே பேசறடா. ஒரு பொம்பள (அவ) சாதிக்குள்ள எத்தன பேருகிட்டப் போனாலும் தப்பில்ல. பொழங்கற சாதிக்காரனோட போனாக்கூடப் பொறுத்துக்குவாங்க. தீண்டாச் சாதியோட போனா அவ்வளவுதான். ஊர உட்டே ஏன் சாதிய உட்டே தள்ளி வெச்சிருவாங்க. இன்னைக்கு அப்பிடியா? சாதிக்குள்ளயே ஒருத்தனோடதான் இருக்கோனுங்கறம். அப்பறம் எப்படி? வீதியில சுத்தறதுல பாதிக்குமேல திரியறது தீண்டாச்சாதித் தண்டுவப் பசங்கதான். அதுக்கப்பறம் என்னால பொன்னாளத் (நாவலின் நாயகி) தொடவே முடியாது. கொழந்த பொறந்தாலும் தொட்டுத் தூக்க முடியாது போ. எதுக்கு இதெல்லாம். நான் இந்தத் தொண்டுப்பட்டியிலயே கெடந்துட்டுப் போறன். எனக்கு வேண்டாம். அப்பிடி ஒரு கொழந்த எனக்கு வேண்டாம். அதுமில்லாத அப்பறம் எல்லாரும் ‘வறடன்’னு என்னயப் பாத்துச் சிரிப்பீங்க. வேண்டாம் உடு . . .”
பல்வேறு முயற்சிகளுக்கு பிறகும் குழந்தை இல்லை எனும் போது கணவன் உட்பட வீட்டார் முடிவு செய்து பெண்களை திருவிழாவிற்கு அனுப்புகிறார்கள். சபரி மலைக்கு விரதமிருந்து சென்று வருவது போல இது ஒரு சடங்கு. குழந்தையின்மையையே அல்லும் பகலும் கொல்லும் பேச்சாக வதைக்கும் அதே சமூகம் இப்படி ஒரு தீர்வையும், சரியாகச் சொன்னால், வேறு வழியின்றி உருவாக்கியிருக்கிறது.
காளியின் மனைவி பொன்னா இந்த சடங்கிற்கு மாட்டு வண்டியில் தாய், தந்தையுடன் செல்லும் போது ஒரு அருந்ததியர் குடும்பம் கேட்டு வந்து உடன் பயணிக்கிறது. (கவுண்டர்களை தொடாமல்தான்)
“பிள்ளைகள் இரண்டும் அழகழகாக இருந்தன. அப்பன் மடியில் உட்கார்ந்திருந்த பிள்ளைக்கு எட்டு வயதிருக்கும். இடுப்பில் சின்னக் கண்டாங்கித் துணியைச் சுற்றியிருந்தது. அவள் மடியில் உட்கார்ந்திருந்த சின்னப் பிள்ளைக்கு மூன்று வயதிருக்கும். துணி ஒன்றுமில்லை. எடுத்து மடியில் வைத்துக் கொள்ளலாம் போலிருந்தது. தொடக்கூடாது. தொட்டுத் தூக்கும் சாதிப் பிள்ளைகளையே கூட பொன்னா மடியில் வைத்துக் கொள்வதில்லை. ஆசையாக எடுத்தால்கூட ஏதாவது எதிர்பாராத வில்லங்கம் வந்துவிடும் என்று பயந்தாள். வண்டியில் உட்கார்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தையின் கண்கள் பொன்னாவுக்குப் பிடித்திருந்தன. கண்களிலேயே அதன் சிரிப்பு வெளிப்பட்டது. மானசீகமாக அதை எடுத்து முத்தமிட்டாள். அப்பனைவிட மாரன் வண்டியை வேகமாக ஓட்டினான். சில வண்டிகளை அனாயாசமாக முந்திச் சென்றான். இத்தனைக்கும் மாட்டின்மீது சாட்டையை ஒருமுறைகூட வீசவில்லை. சாட்டைக் கம்பால் மாட்டின் பின்பக்கம் லேசாகத் தட்டியதோடு சரி. கைகால்களால் லேசான தொடுதல்கள் மட்டும். மாடுகளின் மொழி வசமாகப் பிடிபட்டிருந்தது அவனுக்கு. வண்டி ஓட்டுவதில் அவன் கவனமாக இருந்ததால் அப்பனோடு பேச்சு தொடரவில்லை. அது பொன்னாவுக்கு நிம்மதியாக இருந்தது.”
இந்த உரையாடலில் குழந்தையற்ற ஆதிக்க சாதிப் பெண், வறடி (மலடி) என்பதால் சொந்த சாதிக் குழந்தையையும், சாதித் தூய்மை காரணமாக தீண்டாச் சாதி குழந்தையையும் தூக்க முடியாத நிலையை விவரிக்கிறார் ஆசிரியர். நாவலில் குழந்தையின்மையின் சமூக புறக்கணிப்பால் அலைக்கழிக்கப்படும் நாயகனும் நாயகியும் ஆதிக்க சாதியை விடாமலும், சில நேரம் விடுபட நினைத்தும் இழுபட்டுச் செல்கிறார்கள்.
ஓரிடத்தில் சாணார் குழந்தையை தத்தெடுக்கலாம் என்று கூட காளி பேசுகிறான். சொந்த சாதிக்காரன் எவன் எதிர்ப்பான் பார்ப்போம் என சவாலும் விடுகிறான். அப்போது அவன் அந்த சாணாரின் சாராயக் கடையில் குடித்துக் கொண்டிருந்தான் என்றாலும் இந்த முரண்பட்ட நிலை சாதி மேலாதிக்கத்தை சற்றே அசைத்து பார்க்கிறது.
இந்த நூலின் மேல் ஒரு சராசரியான கொங்கு வேளாளருக்கு ஏற்படக் கூடிய அருவெருப்பும் ஆத்திரமும் முக்கியமானது. சாதி ஒழிப்பை எழுத்துக்கள் வாயிலாக மட்டும் அறிந்து கொண்டு விளக்கும் அறிஞர் பெருமக்கள் களத்தில் அது என்னவாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள இந்த எழுத்து தோற்றுவித்திருக்கும் வெஞ்சினம் நிச்சயம் உதவி செய்யும்.
எழுபது, எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சமூகத்தில் அல்லது திருச்செங்கோட்டில் பிள்ளைப் பேற்றுக்காக யாரும் யாருடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று எழுதுவது பொறுக்கித்தனமில்லயா, பெண்களை விபச்சாரியாக இழிவுபடுத்தவில்லையா, ஆதாரம் என்ன என்று பெருமாள் முருகனை எதிர்ப்பவர்கள் ஒரே மாதிரி கேட்கிறார்கள்.
பதற்றத்துடன் பலர் கேட்கும் இந்த கேள்விகளுக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர்களுக்கு ஏற்படும் பதறலும் வேறுபடுகிறது. இவர்களுக்கிருக்கும் கோபம், மேற்கொண்ட ‘களவொழுக்கம், கற்பு’ சார்ந்தவை மட்டுமல்ல. அதன் அடிநாதமாக இருந்து பெருங்கோபத்தை கிளிப்பியிருப்பது ‘தலித் மக்களோடு கவுண்டர்கள் தாம்பத்ய உறவு வைத்திருந்தார்களா’ என்பதே.
2010-ல் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த நாவலின் ஆங்கில வடிவம் “One part woman” 2013-ல் வெளியாகியிருக்கிறது. நான்காண்டுகளாக இந்த நாவலுக்கு எதிர்ப்பில்லாமல் போனதற்கு முக்கிய காரணம் அது தமிழகத்தை தாண்டி வெளியே போகவில்லை. ஆங்கிலத்தில் வந்த பிறகு, இனி திருச்செங்கோட்டு ஆதிக்க சாதியினர், பிள்ளைப் பேற்றுக்காக இப்படி ஒரு சடங்கில் சாதி, தீண்டாமை மறுத்து திருவிழா ஏற்பாடு செய்து ஒன்று கூடல் உறவை முன்னொரு காலத்தில் ஒரு மரபாக வைத்திருந்தனர் – என்ற செய்தி பரவி விடும்.
அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ இல்லை கோவையிலோ இருக்கும் கொங்கு வேளாளர்களில் இலக்கியம் படித்த முன்னேறிய பிரிவினருக்கு இது பெரும் உறுத்தலாக உருவெடுத்திருக்கும்.
இந்த நாவலின் சில பக்கங்களை திட்டமிட்டு கவனமாக தெரிவு செய்து நகலெடுத்து அதில் அடிக்கோடிட்டு பார்த்தவர், படித்தவர், கண்டவர், கேட்டவர் என எவரையும் பொறியில் விழச்செய்யும் சாமர்த்தியமெல்லாம் சாதா படிப்பு படித்தவருக்குக் கூட தெரிந்திருக்காது. இலக்கிய வாசிப்பும், அந்த வாசிப்பின் விளைவை சாதித் திமிர் கொண்டு கற்பனை செய்யத் தெரிந்த ஒரு சிலராலேயே இது முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்தவாதிகளும் நிச்சயம் இருப்பர்.
வதந்திகளை உருவாக்கி, உணர்ச்சியை பெருக்கி, ஆத்திரத்தை கிளறி, மக்கள் கூட்டத்தை மதம் பிடிக்க வைக்கும் கலையில் அவர்களே சாலச் சிறந்தவர்கள். காலனிய காலத்தில் இந்துமத வெறியர்கள் இந்தக் கலையை ஆங்கிலேயர்களிடம் தொலை நோக்கோடு கற்றுக் கொண்டனர். கப் பஞ்சாயத்தையும், ஜாட் சாதி வெறியையும் அனாயசமாக கையாளும் அவர்களுக்கு “மாதொரு பாகன்” ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்பு.
இணையத்திலோ இல்லை பொதுவெளியிலே இந்த நாவல் குறித்து உருவாக்கப்பட்ட “பெண்களை இழிவுபடுத்துவது” என்ற கருத்து சகலரையும் தன் (அ)நியாயத்தை ஏற்கச் செய்யும் தந்திரமே அன்றி அதுவே பெருமாள் முருகனை ‘கொன்று’ விடுவதற்கு போதுமானதில்லை.
எதிர்ப்பது, எரிப்பதைத் தாண்டி அவரை அச்சுறுத்தி ‘மரணிக்க’ வைப்பதற்கு இன்னும் பெரிய ஆத்திரமும் வன்மும் வேண்டும். திருச்செங்கோட்டில் இந்த நாவலின் இரு பக்கங்களை நகலெடுத்து வீடு வீடாகவும், கோவில் வாயிலிலும், இன்னும் பொதுவெளிகளிலும் ஆயிரக்கணக்கில் விநியோகித்திருக்கிறார்கள்.
அந்த விநியோகத்தின் போது அவர்கள் கவுண்டர் சாதி மக்களிடையே கோபத்தை வரவழைத்தது எப்படி?
‘வேறு சாதியில் பெண் கட்டியிருக்கும் பெருமாள் முருகன் எனும் நம்ம சாதிக்காரன், நம்மளையும் சக்கிலிக்கு பிறந்தவன்னு எழுதி இழிவுபடுத்துகிறான்’ என்றே அவர்கள் அனல் பறக்க பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.
பெண்ணின் மானம் காப்பவர்கள் எனும் முகமூடி அணிந்து ஆதிக்கசாதி வெறி இங்கே தனக்கு அணி திரட்டுகிறது. இதுவே திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் பகுதிகளில் காட்டுத்தீயைப் போல பரவி இறுதியில் பெருமாள் முருகனையும் ‘எரித்திருக்கிறது’.
நாம் விசாரித்த ஊடக நண்பர்கள், தோழர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதை உறுதி செய்தார்கள். இதை ஒரு ஆதாரமாக ஏற்க முடியாது என்பவர்களுக்கும் ஒரு செய்தி உண்டு. ஈஸ்வரன் கட்சியோ இல்லை ஹெச்.ராஜா கூட்டமோ, “அருந்ததி சாதி இளைஞர் ஒருவர், கொங்கு வேளாள பெண்ணை மணம் முடிப்பதில் ஆட்சேபணை இல்லை” என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்! குதிரைக்கு கொம்பு முளைத்தாலும், கிராபிக்ஸ் உதவயின்றி உண்மையிலேயே டயனோசர் மீண்டும் பிறந்தாலும் ஒரு கவுண்டரின் வாயிலோ, கவுண்டர்களுக்கு மதவெறி கஞ்சாவை சப்ளை செய்யும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமோ இதை ஒரு போதும் சொல்லாது.
மேற்கண்ட நாவல் உரையாடலிலேயே இது வருகிறது. கோவில் திருவிழாவில் பிள்ளைப் பேறு வேண்டி ஆண் சாமிகளை நாடி வரும் ஆதிக்க சாதிப் பெண்கள் அவர்களுடைய சாதியிலேயே கூடிக் கொண்டால் பிரச்சினை இல்லை. தீண்டாச் சாதியோடு தொட்டு உறவாடி அதில் பிறந்த குழந்தையை எப்படி தூக்கி கொஞ்சுவது என்கிறான் காளி.
எங்கள் அம்மாக்கள், பாட்டிகள், சகோதரிகளை இழிவு படுத்துவதாக குமுறும் திருச்செங்கோட்டுகாரர்களின் கவலை பொதுவில் பெண்களின் ‘கற்பொ’ழுக்கம் சார்ந்த ஒன்றல்ல. சரியாகச் சொன்னால் ‘கற்பு’ என்பதே சுய சாதியில் நெகிழ்வையும் – மீறலையும் கொண்டிருக்கும் அதே நேரத்தில் ‘கீழ்’ சாதிகளிலிருந்து காத்துக் கொள்ளும் புனிதம் – தூய்மையையும் ஒரு சேர பெற்றிருக்கிறது.
‘கீழ்’ சாதிகள் என்பதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று வரும் போது அதிலும் மேற்கு பிராந்தியத்தில் கணிசமாக வாழும் தலித்துகளிலேயே அடித்தட்டு பிரிவு மக்களான அருந்ததியினர் என்று புரிந்து கொண்டால்தான் இந்தக் ‘கற்பின்’ இலக்கண ‘பிழை’யை அறிய முடியும்.
நாவலை எரிக்கும் ஆதிக்க சாதி வெறி மற்றும் இந்துமதவெறி கூட்டணி
இதனை திருச்செங்கோடுக்கு மட்டுமல்ல. உலகெங்கும் இனக்குழு வரலாற்றில் தாய்வழிச் சமூகமாக தொடங்கி தந்தை வழிச்சமுதாயமாக மாறிய அனைத்து நாடுகளிலும் பார்க்கலாம். ஒரு இனக்குழு அல்லது சாதிப்பிரிவின் கௌரவம் என்பதே அந்தக் குழுவின் பெண்களோடு வேற்று இன ஆண்களின் உயிரணு கலந்து விடாமல் இருப்பதுதான். மொகலாயர் ஆட்சி மற்றும் பல்வேறு ‘இந்து’ அரசர்களின் ஆட்சியில் ரஜபுத்திர பெண்கள் கூட்டம் கூட்டமாக தீக்குளித்ததும், இன்றும் சாதி மத மறுப்பு காதலர்கள் கொல்லப்படுவதும், அதை சமூக சட்டமாக அமல்படுத்தும் கப் பஞ்சாயத்துக்கள் கொண்டிருக்கும் கௌரவமும், கற்பும் இப்படித்தான் நடந்தன, நடந்து வருகின்றன.
மேற்கு தமிழகத்தில் ஒரு கொங்கு வேளாள ஆண் ஒரு தலித் பெண்ணை காதலித்து, கல்யாணம் செய்த சம்பவங்கள் உண்டு. அதிலும் ஆகப்பெரும்பான்மை ஜோடிகள் பிரிக்கப்பட்டு கவுண்டர் ஆண்களுக்கு மறுமணம் செய்து முடித்து விடுவார்கள். ஆனால் ஒரு அருந்ததி ஆண், ஒரு கவுண்டர் பெண்ணை மணம் முடித்தார் இல்லை காதலித்தார் என்பதெல்லாம் கற்பனையில் கூட சாத்தியமில்லை. மிக அபூர்வமாக ஓரிரு விதி விலக்குகள் இருக்கலாமென்றாலும் மேற்கண்டதுதான் இன்றளவும் உள்ள மாற்ற முடியாத நியதி.
ஆதிக்க சாதிகளைப் பொறுத்தவரை இதில் ஆண் பெண் வேறுபாடில்லை. கவுண்டர் எப்படி தாழ்த்தப்பட்ட மக்களை நடத்துவாரோ அப்படித்தான் கவுண்டர் பெண்களும் நடத்துவார்கள். அதே நேரம் அந்த ஆதிக்க சாதிப் பெண்கள்தான் சுய சாதியால் பல்வேறு காரணங்களின் துணை கொண்டு ஒடுக்கவும் படுகிறார்கள்.
சொல்லப்போனால் கவுண்டர் பெண்களை மட்டுமல்ல அனைத்து ஆதிக்க சாதிப் பெண்களையும் களங்கப்படுத்தவதே பார்ப்பனிய சாதியமைப்பும் அதன் ஆணாதிக்க நடைமுறையும்தான்.
அதில் முதன்மையானது “மலடி” அல்லது நாவலின் படி “வறடி”.
ஒரு கோவில் திருவிழாவில் பிள்ளை வேண்டி உறவு கொள்வதை கேட்பதற்கும், கற்பனை செய்வதற்கும் நாராசமாக உள்ளதே என்று ‘வேதனை’ப்படுவோர் தங்களது வேதனையை நிரூபிக்க வரலாற்று ஆதாரம் அளியுங்கள் என்று பெருமாள் முருகனைக் கேட்கிறார்கள். ஆதாரங்கள் மட்டும் வரலாற்றையோ இல்லை வரலாற்றின் நியாயத்தையோ கொண்டு வந்து விடாது.
ராமர் பிறப்புக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இந்த இடம்தான் ராம ஜன்ம பூமி என்று வரலாறு கட்டியமைக்கப்படுகிறது. குரங்குகள் போட்ட பாலம்தான் ராமர் சேது என்று சேது சமுத்திர திட்டமே நிறுத்தி வைக்கப்படுகிறது.
ஆதிக்கத்தில் இருப்போரே வரலாற்றை மட்டுமல்ல ‘ஆதாரங்களையும்’ கொண்டு வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கோ இல்லை அதன் போராட்டங்களுக்கோ உரிய வரலாற்றை கண்டுபிடிப்பது மிகவும் கடுமையான பணி.
எளிமையாகச் சொல்வதானால் பிள்ளைப் பேறு குறித்த பிரச்சினைகள், தீர்வுகள், விளைவுகள் இன்றைய சமகாலத்தில் நமது மக்களிடம் எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் திருவிழா பாலுறவு குறித்த ஆதாரங்களை தருமாறு பெருமாள் முருகனைக் கேட்க வேண்டியிருக்காது.
எனினும் சில சமகால உண்மைச் சம்பவங்கள் உங்கள் பார்வைக்கு……
ஆதிக்க சாதிப் பெண்களை களங்கப்படுத்துவது யார்? பாலியில் ரீதியிலும், குடும்ப நிலையிலும், மண வாழ்க்கையிலும் அவர்களை காலமெல்லாம் துன்புறுத்துவது யார்? தலித் மக்களா? ராமதாஸ் கூறியது போல ஜீன்ஸ் பேண்டு, கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு தலித் இளைஞர்கள் ஆதிக்க சாதி பெண்களை சூறையாடுகிறார்களா?
சொத்துடமை அமைப்பில் இல்லாதவர்களாக சிறைவைக்கப்பட்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் துன்பம் ஒடுக்கும் சமூகத்தின் ஏழைகளுக்கும் பெருமளவுக்கு இருந்தே தீரும்.
ஆதிக்க சாதிகளின் கௌரவம் பெண்களின் “தூய்மையோடு” சேர்ந்திருப்பதை தூக்கி நிறுத்துவது நிலவுடமை எனும் சொத்து வடிவம். அந்த சொத்து இல்லாத பட்சத்தில் அதே சாதி பெண்களாக இருந்தால் கூட ‘தூய்மை’க்கான மதிப்பு மிகமிகக் குறைவு.
ஆதிக்க சாதி ஆண்களில் பொறுக்கிகள், குடிகாரர்கள், அதிக வயது ஆண்கள், ‘பெரு நோய்’ வந்தவர்கள், குழந்தைப் பேறுக்காக இரண்டாம் தாரம், மூன்றாம் தாரம் தேடும் கணவன்கள், முக்கியமாக வைப்பாட்டிகளைத் தேடும் ஆதிக்க சாதி பெருங்கிழார்கள் …….இவர்களுக்கு அபயமளிக்கும் ‘சேவையினை’ ஆதிக்க சாதி ஏழைப்பெண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏன் அவள் ஊரை விட்டு ஓடிவரலாமே என்று கேட்பவர்கள் மணிரத்தினத்திடம் வேண்டுமானால் உதவி இயக்குநராக சேரலாம். இங்கு மறுப்போ, மாற்றோ கிடையாது. குறைந்த பட்சம் விடுதலை உணர்ச்சியை கற்பனையில் கூட காண முடியாது.
இனி கதைகளைப் பார்ப்போம்.
1) இந்தக் கதையில் வரும் மூத்தவள் சம தகுதி கொண்ட சாதிக்காரரோடு ஓடி விட்டாள். அந்த வகையில் அது பெரிய பிரச்சினையாகவில்லை. ஆனாலும் ஏழைகள் என்பதால் இவர்களுக்கிருக்கும் கொஞ்ச நஞ்ச சாதி கௌரவமும் தள்ளாடத் துவங்கியது. அவசர அவசரமாக பதினாறு வயது இளையவளை முப்பது வயதுக்காரனுக்கு மணமுடித்தார்கள், பெற்றோர்கள். அவனோ பிறவியிலேயே இதயத்தில் ஓட்டையும், கிராமத்தில் கொஞ்சம் நிலபுலமும் கொண்டவன். விவசாயியாக வாழ்ந்தாலும் கடின வேலைகள் எதுவும் செய்ய முடியாது. மக்கள் வழக்கில் அவனொரு ஆஸ்மாக்காரன். ஓரிரு வருடங்களில் ஒரு கைக்குழந்தையை கொடுத்துவிட்டு அவன் மரித்துவிட்டான்.
பதினேழு, பதினெட்டு வயதில் அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தை. பத்தாவது படிப்பை துறந்து மண வாழ்க்கையில் சிக்கியவளுக்கு கண்ணுக்கெட்டிய தூரத்தில் எதுவுமில்லை. வயது, தனிமை ஒரு புறம். விதவைகளுக்கு ‘உதவ’ நினைக்கும் ஆதிக்க சாதி ஆண்களின் பொறுக்கித்தனமான தொல்லைகள்.
இறுதியில் அது அல்லும் பகலும் தொடரும் சித்ரவதையாக மாறியது. அதில் ஒரு சில வன்புணர்வுகளாகவும், மனத்தை சிதைக்கும் ரணமாகவும் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் கூடிய சீக்கிரமே அந்தப் பெண் மனச்சிதைவுக்கு ஆளானாள். வழக்கில் பைத்தியம். தற்போது அவள் நிலை என்ன, எங்கிருக்கிறாள்? யாருக்கும் தெரியாது.
2) இதுவும் ஒரு விதவையின் கதை. இந்தப் பெண் ஏழையில்லை என்பதால் மேற்சொன்னபடியான நிலைமை இல்லை. ஆனாலும் நெருங்கிய உறவில் ஒரு நிலக்கிழாரின் வைப்பாட்டி. அதே நேரம் அந்தக்கிழாருக்கு வேறு கல்யாணம் நடந்து குழந்தை குடித்தனமாக இருந்தாலும் இவளுக்கென்று அங்கே ஒரு ‘மரியாதை’ இருந்தது நிஜம். அவளும் அங்கே சென்று வருவாள். நல்லது கெட்டதற்கெல்லாம் கொஞ்சம் உரிமையோடு தலையிடுவாள். ஆனாலும் தாலியற்ற, அதிகாரபூர்வ உரிமையற்ற நிலை. வயதானதும் அங்கே சென்று வரும் தேவையோ இல்லை அனுமதியோ இல்லை அழைப்போ இல்லை. நிலக்கிழாரும் இறந்து விட்டார்.
விதவையின் துயரமும், தனிமையின் பயமும், முதுமையின் அவலமும் சேர்ந்து மனத்தை சிதைத்தன. ‘பெருந்தன்மை’ வாய்ந்த அந்ந நிலக்கிழாரின் வாரிசுகளோ அந்த அம்மாவை ஏதோ அனாதை இல்லத்தில் சேர்த்து விட்டு வந்தார்கள். சந்தையில் வாங்கிய பாத்திரம் பளபளப்பு போய் ஓட்டை விழுந்ததும் பழைய கடைக்கோ இல்லை குப்பை மேட்டிற்கோ போய்ச் சேருகிறது. இதுதான் இப்பெண்ணின் நிலை.
3) அடுத்த கதையில் வரும் கிராமத்தில் இரு தார மணம், வீட்டுக்கு வீடு சகஜம். எல்லாம் குழந்தைப் பேறின்மை காரணம்தான். இரண்டாம் மணம் நடக்கும் நாட்களின் முன்னும் பின்னும் நடக்கும் உளவியல் துன்பங்களை முதல் தாரமானவள் கடந்து வருவது என்பது அமில வீச்சை எதிர் கொண்டு முடங்கிப் போகும் ஒரு பெண்ணின் துயரத்தோடு ஒப்பிடக் கூடியது.
அப்படி அந்த வீட்டுக்காரர் இரண்டாம் தாரத்தை மணக்கிறார். அவருக்கே ஆண்மைக் குறைவு (உயிரணு குறைபாடு) எனும் போது எத்தனை தாரம் மணந்து என்ன பயன்? இதை ஒரு வருடத்தில் உணரும் போது இரண்டாம் தாரத்துக்கு பதட்டம் வந்து விடுகிறது? எதிர்காலம் என்ன? சொத்து, நிலபுலம், வாழ்க்கை என்னவாகும்? முக்கியமாக குத்திக் காட்டும் ஊரார் பேச்சு…கணவனுக்கும் இதே போன்றதொரு சிக்கல். கூடுதலாக ஆண்மை குறித்த கவுரவக் குறைவு.
பெண்ணின் வலியை ஒரு பெண், அதிலும் அடுத்த வீட்டு பெண் புரிந்து கொள்வாள். அப்படி அந்த அடுத்த வீட்டுப் பெண்ணும் இது குறித்து பல முறை யோசித்து விட்டு தனது கணவனை இரண்டாம் தாரத்து பெண்ணோடு உறவு கொள்ள ஏற்பாடு செய்கிறாள். எல்லாம் நல்லபடியாக முடிந்து குழந்தை பிறக்கிறது. சொத்துக்கள் காப்பாற்றப்படுகின்றன. இதை அசிங்கம் என்று கருதிய முதல் தாரம் சொத்தில் பாதியைக் கேட்டு பஞ்சாயத்து கூட்டுகிறாள். பஞ்சாயத்து போவதற்கு முன்பே கொடுத்து விடுகிறார், நிலக்கிழார். என்னதான் ஆதிக்க சாதி, சொத்து பத்து என்று இருந்தாலும் இந்த விவகாரங்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கையாள முடியாதல்லவா?
4) இந்த கிராமத்தின் கதையில் வரும் இந்த நபருக்கு தொழு நோய். அதுவும் கை, கால்களில் கட்டு கட்டும் அளவில் கொஞ்சம் முற்றிய நிலையில். நோய் முற்றுவதற்கு முன்பே திருமணம் நடந்திருந்தாலும் தாம்பத்தியம் நடக்கவில்லை. இப்படி ஒரு திருமணத்திற்கு யார் சம்மதிப்பார்கள்? கண்டிப்பாக ஏழைகள்தான். எனினும் பாலுறவை வலியுறுத்தாத அளவுக்கு அவரிடம் ‘கருணை’ இருந்தது. அதே நேரம் நிலபுலத்தை காப்பாற்றுவதற்கும், அந்த பெண்ணின் எதிர்காலத்திற்கும் குழந்தைகள் தேவைப்படுகிறது. ஆணொன்றும், பெண்ணொன்றுமாக இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. தந்தை அவரில்லை என்பது அவருக்கும் தெரியும்.
5) அடுத்த கதை. ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஏழைப்பெண். பொருளாதாரத்தில் நொடித்துப் போன குடும்பம். ஆதலால் மண வாழ்க்கையிலும் அதே நொடித்தல். முதலிரவு துவங்கி ஓரிரு மாதம் வரை எதுவும் நடக்கவில்லை. முழு ஆண்மைக்குறைவு என்று தெரிந்தே நடந்த கயமைத்தனமான திருமணம். பிறகு ஒரு நாள் அந்த கணவன், தான் தொட முடியாத பெண்ணின் காலில் விழுகிறான். தனது குறைபாட்டை ஏற்றுக் கொண்டு மணமுடித்தமைக்கு நன்றி தெரிவிக்கிறான். கூடவே ஒரு கோரிக்கை.
எப்படியும் ஒரு குழந்தை வேண்டும். அது மட்டும் நிறைவேறிவிட்டால் வேறு எந்த பிரச்சினையும் இல்லை. என்ன செய்வது? தனது தம்பியிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன். இதற்கு மட்டும் சம்மதியென்று மன்றாடுகிறான். அந்தப் பெண்ணோ அழுவதா சிரிப்பதா என்று திகைத்து நிற்கிறாள். அவளைப் பொறுத்த வரை இது ஒரு அழுகுணியாட்டம் என்ற வகையில் அசிங்கம். பிறகு அவள் மசியவில்லை என்றானதும் வேறு சந்தர்ப்பங்களில் அடிக்கிறான். அங்கே மட்டும் ஆண்மை எழுச்சி பெறுகிறது. பிறகு அவனும் செத்துப் போகிறான். அந்தப் பெண் விதவை.
6) குழந்தை வேண்டி சனிபகவானை மூலவராக கொண்ட ஒரு சிறு கோவிலுக்கு போகிறது ஒரு குடும்பம் (திரு நள்ளாறு அல்ல). பார்ப்பன பூசாரியைப் பார்த்து பிரச்சினையை சொல்கிறார்கள். அவனோ அந்த பெண்ணை சற்று தனியாக அழைத்து பேசுகிறான். மருத்துவர்களே தீர்க்க மூடியாத இந்தப் பிரச்சினைகளை தாங்கள் தீர்த்திருப்பதாக நம்பிக்கையூட்டுகிறான். சில விவரங்களை கேட்கிறான். தூக்கி வீசப்பட்ட தூமை துணியில் நல்ல பாம்பு புரண்டு விட்டதால் கருப்பையில் நாக தோஷம் இருப்பதாக சொல்கிறான். பிறகு விசயத்திற்கு வருகிறான். மார்பகங்கள் இரண்டும் ஒரு அளவாக ஒரே அமைப்பில் இருக்க வேண்டும். இரண்டில் ஒன்று சற்றே மாறினாலும் பிரச்சினை, உனக்கு எப்படி என்கிறான். சாங்கியத்தை எதிர்பார்த்து வந்த அந்த பெண்ணுக்கு சங்கடம் வருகிறது. இதற்காக என் ஜனங்கள் கூட்டி வரவில்லை என்று போய்விடுகிறாள்.
போனவள் அவர்களிடமும் சொல்லவில்லை. சொல்லமாட்டாள் என்று இவனுக்கும் தெரியும். பாலியல் வன்புணர்வுக்கு உடல் ரீதியாக அல்ல உள ரீதியாக பலவீனமான பெண்களே வேட்டைக்காரர்களுக்கு உகந்தவர்கள். அந்த வகையில் ஆதிக்க சாதியின் ஏழைப் பெண்கள் ஏதோ சில வகைகளிலாவது பலவீனமானவர்கள்தான்.
7) அடுத்த கதையின் நாயகன் ஒரு ஆதிக்க சாதி ஆண். முதல் தாரத்திற்கு குழந்தை இல்லை என்று ஆனவுடன் வழக்கமான பேச்சு ஆரம்பிக்கிறது. அவனும் சம்மதிக்கிறான். முதல் தாரத்தின் உறவினர்கள் கொஞ்சம் செல்வாக்கானவர்கள் என்பதால் அவர்களுக்கு தெரியாமல் திடீரேன திருமணம் ஏற்பாடு செய்து நடத்துகிறார்கள். அது தெரிந்து முதல் தார உறவினர்கள் உடன் வந்து சண்டை போடுகிறார்கள். போலீசுக்கு போவோம் என்று எச்சரிக்கிறார்கள். பேச்சு வார்த்தை பெருஞ்சண்டையாக ஆகும் முன் தனியே சென்று விடுகிறான் அந்தக் கணவன். அரை மணிநேரத்தில் அவனை தூக்கில் தொங்கிய நிலையில் பார்க்கிறார்கள். மணமேடை கோலத்தில் இருக்கும் இரண்டாம் தாரமும், அதை எதிர்த்து சண்டை போட்ட முதல் தாரமும் அடுத்த கணமே விதவைகள். இனி அவர்களின் எதிர்கால தகுதி என்ன?
8) இதிலும் ஒரு ஆண்தான். ஊருக்கு வந்த பிற மாவட்டத்து ஆதிக்க சாதி பெண்ணை விரும்பி காதலிக்கிறான். சம தகுதி சாதி என்பதால் பிரச்சினை இல்லை என்றாலும் அவனது தந்தை ஏற்கவில்லை. அதாவது அந்த பிற சாதி பெண்ணை மணமுடித்தால் சொத்தில் எதுவும் கிடையாது என்கிறார். காதலையும் துறக்க முடியாமல், சொத்தையும் விட முடியாதவன் ஒரு வாரத்தில் தனது உயிரை துறக்கிறான்.
ஆதிக்க சாதிகளின் ஆண்களும் கூட அங்கே நிம்மதியாக எப்போதும் வாழ்வதில்லை. சாதியக் கட்டுமானத்தை கொஞ்சம் மீற நினைத்தாலும் சரி கட்டுமானத்தை காப்பாற்ற செய்யப்படும் குறுக்கு வழிகளும் சரி ஆண் பெண் இருபாலாரையும் ஒருங்கே வதைக்கிறது. பெண்ணுக்கு இதன் பரிமாணங்கள் அதிகம்.
கதைகளை முடித்துக் கொள்வோம்.
பெருமாள் முருகனது நாவலை நகலிட்டு விநியோகித்து பெண் மானம் போனது என்று பொங்கியெழுந்த திருச்செங்கோட்டு கொங்கு வேளாளக் கவுண்டர்களுக்கும், அவர்களது மானத்தை புரிந்து கொண்டதாக கண்ணீர் விட்ட இதர ஆதிக்க சாதி கனவான்களுக்கும் இந்த கதைகளை சமர்ப்பணம் செய்கிறோம்.
இந்தக் கதைகளின் கொடூரங்களை விட திருச்செங்கோடு கோவில் திருவிழாவின் பிள்ளைப் பேறு உறவு முறை எவ்வளவோ நாகரீகமானது. திருவிழாவில் பிள்ளை வரம் வேண்டி சாமிகளுடன் உறவு கொள்ளும் நிகழ்வு உண்மையா அதற்கு ஆதாரம் உண்டா என்ற கேள்வியின் தேவை இன்னும் இருக்கிறதா? இல்லை அது கற்பனை என்றே வைத்துக் கொள்வோம். மேற்கண்ட கதைகள் இதையும் விஞ்சிவிடவில்லையா?
இந்தக் கதைகளை தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும், எந்த ஆதிக்க சாதியினரிடத்திலும் பார்க்கலாம். ஊர், பெயர், சாதி பெயர்களை குலுக்கல் முறையில் எடுத்தாலும் எந்தக் கதையும் எங்கேயும் இல்லாமல் போகாது. கதைகளுக்கு இங்கே முடிவில்லை. பார்ப்பனிய சாதியக் கட்டமைப்பால் கண்ணீரில் வெந்துக் கொண்டிருக்கும் தேசமிது.
கணவன் இறந்தால் மனைவிக்கு மறுமணம் கூடாது என்பதில் என்னய்யா புனிதம் அல்லது ஒழுக்கம்? விதவைப்பட்டம் சூட்டி வெள்ளுடை தரித்து வீட்டில் சிறை வைப்பது எதற்கு? விதவையின் உண்மைப் பொருள் என்ன? இலவச விபச்சாரமா? இல்லை மறுக்கவோ, தண்டிக்கவோ முடியாத வாய்ப்பை வழங்கும் வன்புணர்வா? இதுதான் பெண்களின் ஒழுக்கத்தை காப்பாற்றும் இலட்சணமா?
இல்லை, நீங்கள் பெண்களின் ஒழுக்கத்தை காப்பாற்றவில்லை. உங்களது கொழுப்பு பறி போய்விடுமோ என்பதையே ஒழுக்கம் என்று அலறுகிறீர்கள்.
அனேக ஆதிக்க சாதிக் கிராமங்களில் கால் பங்கு குடும்பங்களிலாவது இருதார மணங்களை பார்க்கிறோம். அதற்கு ஆயிரத்தெட்டு விளக்கங்கள். குழந்தை தொடங்கி மைனர் தனம் வரை ஏராளமான சலுகைகள். சரி. அதே சலுகைகளை பெண்ணுக்கும் கொடுங்களேன். ஆண்மைக் குறைவு காரணமாக அதே முதல் மனைவி இரண்டாம் கணவனையும் மணக்கட்டுமே. ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளோடு வாழலாம் என்றால் இரண்டு கணவன்களோடும் வாழலாம் என்று ஒரு பெண் கோரலாமா கூடாதா?
முதல் தாரத்தை புழுங்கச் செய்த கையோடு இரண்டாம் தாரத்தோடு முதலிரவில் கலந்து இன்பத்தையும் பிறகு குழந்தை எனும் சொத்துடைமை பிம்பத்தையையும் பெற்றுக் கொண்டு திவ்யமாக காலம் கழிக்கும் ஆண்களின் உரிமையை பெண்ணுக்கும் அளிக்க மறுப்பது ஏன்?
அதை ஒரு பெருமாள் முருகனோ இல்லை அல்லா பிச்சையோ கற்பனை கதையாக எழுதினால் இது நடந்ததற்கு ஆதாரம் என்ன என்று கேட்பீர்களா? உங்களுக்குத் தேவை ஆதாரமில்லை. அதிகாரம். கேள்வி கேட்க முடியாத சாதி அதிகாரம்.
(2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதி மன்றம் ஜல்லிக் கட்டு நடத்துவதை தடை செய்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதை ஒட்டி புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை)
ஜல்லிக்கட்டிற்கு அண்மையில் உச்சநீதி மன்றம் தடை விதித்ததும் தமிழர்கள் பொங்கியெழுந்து வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியதாகவும் பொது மக்கள் ஆத்திரமடைந்து கருப்புப் பொங்கலாக அறிவித்துப் பொங்கல் விழாக்களைப் புறக்கணித்து விட்டதாகவும் செய்தி ஊடகங்கள் பரபரப்பூட்டின. முரட்டுத்தனமான இந்த விளையாட்டில், மனிதர்கள் மாண்டு போகும் கவலையைவிட, காளை மாடுகள் மீது கரிசனம் கொண்டு, ஜல்லிக்கட்டுக்குத் தடைகோரி சென்ற ஆண்டு ஜூலையில் விலங்கு நல வாரியம் உச்சநீதி மன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கில் நீலச்சிலுவை சங்கமும் (புளூ கிராஸ்) தன்னை இணைத்துக் கொண்டது.
வழக்கை விசாரித்து வந்த உச்சநீதி மன்றம், பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பாக ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்துத் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், “ஜல்லிக்கட்டு போட்டியை அனுமதிக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் கூறவில்லை” என்றும், “அதேநேரத்தில் ரேக்ளா எனப்படும் மாட்டு வண்டிப் பந்தயத்தை நடத்த எந்தத் தடையுமில்லை” என்றும் கூறியிருந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் “ரேக்ளா பந்தயத்தை மட்டும் எந்தச் சட்டம் அனுமதிக்கிறது?” என்று யாரும் கேட்கவில்லை.
ஜல்லிக்கட்டுக்குத் தடை வந்ததும் ஓட்டுக்கட்சிகள் அனைத்திற்கும் ‘தமிழன் வீரம்’ பற்றிய நினைப்பு வந்து, அறிக்கைகளால் பத்திரிகைகளை நிரப்பி விட்டன.
சி.பி.எம். கட்சியோ “முழுமையான காவல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து ஜல்லிகட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்” எனக் கூறி, நிலப்பிரபுத்துவக் கலாச்சாரமான ஏறு தழுவுதலுக்கு ஆதரவாக வரிந்து கட்டியது. ஏகாதிபத்தியத்தைக் கட்டிக் காக்க நந்திகிராமம்! நிலப்பிரபுத்துவத்தைக் கட்டிக் காக்க அலங்காநல்லூர்! ஆனால், பெயர் மட்டுமோ ‘கம்யூனிஸ்ட்’ கட்சி!
பா.ம.க.வின் இராமதாசு, “தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் அழியாத சில அடையாளங்கள் இருக்கின்றன. அந்த அடையாளங்களை அழித்து விட அனுமதிக்கக் கூடாது” என்று சீறினார். தமிழனின் நீரும் நிலமும், உழவும் நெசவும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களால் நாசமாக்கப்பட்டு, அவற்றின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், ஜல்லிக்கட்டுதான் தமிழனின் அழியாத அடையாளமாக இந்த மருத்துவருக்குத் தெரிகிறது.
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும் உசுப்பேற்றியதும், ஜல்லிக்கட்டு போட்டியை ஆண்டுதோறும் நடத்திவரும் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு வட்டார மக்கள், உச்சநீதி மன்றத் தடையைத் துச்சமாக மதித்து இவ்வாண்டும் ஜல்லிக்கட்டை நடத்தப் போவதாக அறிவித்தனர். “காவிரி ஆற்று நீர் சிக்கலில் கர்நாடகமும், முல்லைப் பெரியாறு தாவாவில் கேரளமும் உச்சநீதி மன்றத் தீர்ப்பை மதிக்காத போது, நாங்கள் மட்டும் ஏன் தீர்ப்பை மதிக்க வேண்டும்?” என்று நியாயவாதம் பேசினர்.
“அலங்காநல்லூர் வட்டாரத்தில் கருப்புக் கொடி ஏற்றினர். ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் திருப்பிக் கொடுக்கப் போவதாக சுவரொட்டி ஒட்டியுள்ளனர். கருப்புப் பட்டை அணிந்து தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். மூன்று நாட்களாகக் கடைகள் அடைக்கப்பட்டன” என்றெல்லாம் ‘குமுறி எழுந்த தமிழர்களின் கோபாவேசத்தை’ ஊடகங்கள் வர்ணித்தன.
ஓட்டுக் கட்சிகளும் ஊடகங்களும் ஊதிப் பெருக்குவது போல, ஜல்லிக்கட்டு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளமல்ல. தென்மாவட்ட ஆதிக்க சாதியினரின் சாதித் திமிரைப் பறைசாற்றும் ஓர் ஆதிக்கப் பண்பாட்டுச் சின்னம்தான். இது ஒட்டுமொத்தத் தமிழர்களின் அடையாளம் என்றால், ஏறு தழுவுதலில் தேவர் சாதிக்காரன் வளர்த்த காளையை அடக்கும் உரிமை தாழ்த்தப்பட்டோருக்கு ஏன் இல்லை? வாடிவாசல் முன் திரண்டு நிற்கும் இளைஞர்கள், சாதி அடையாளத்தைக் குறிக்கும் மஞ்சள் நிறச் சீருடையை அணிவது ஏன்? தாழ்த்தப்பட்டோர் தாங்களாகவே தனியாக ஜல்லிக்கட்டு நடத்தினால் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்காமல் தொடர்ந்து நடத்தக்கோரி நீதிமன்றம் சென்றவர்களில் பலரும் தேவர் சாதித் தலைவர்களாகவே உள்ளனரே, அது ஏன்?
“யார் தடுத்தாலும் நாங்கள் ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம்; ஜல்லிக்கட்டு என்பது வீரத்தின் அடையாளம்” என்று மீசையை முறுக்குபவரோ ஜல்லிக்கட்டு பாதுகாப்புக் கழகம் எனும் லெட்டர்பேடு தேவர்சாதி அமைப்பின் தலைவரான செந்தில் தொண்டைமான். இன்னொருவர், அமைச்சர் சுப. தங்கவேலனின் பேரனும், தேவர் சாதிய அடையாளத்துடன் தனக்குத்தானே கட்அவுட் வைத்துக் கொள்ளும் கருப்புப் பண சினிமா நடிகனும், ‘தமிழர் வீரவிளையாட்டுப் பாதுகாப்புக் குழு’வின் தலைவருமான ஜே.கே. ரித்தீஸ். ஜல்லிக்கட்டை நடத்தாவிட்டால், ‘தெய்வக் குற்றம்’ ஏற்பட்டுவிடும் என்று கூறி, தடையை மீறி சிவகங்கை மாவட்டம் எம்.சூரக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட நாட்டாமைகளும் தேவர் சாதிக்காரர்களே.
ஜல்லிக்கட்டு என்பதை தேவர் ஜெயந்திக்கு இணையான சாதிய ஆணவச் சின்னமாகத்தான் தேவர் சாதியினர் பார்க்கின்றனர். ஜல்லிக்கட்டினைப் பாரம்பரியமாக நடத்திவரும் இந்த ஆதிக்க சாதியினர், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எங்களைப் பாதிக்கின்றது என்று கூடப் பேரணி நடத்தியிருக்கின்றனர். காளைகளிடம் மட்டும்தானா இவர்கள் விளையாடியிருக்கின்றனர்? மேலவளவு முருகேசனின் தலையைச் சீவி, சாதிவெறியோடு மீசையை முறுக்கி கோரத் தண்டவமும் ஆடியிருக்கின்றனர். இருப்பினும், தேவர் சாதியினரின் குல தெய்வமான முத்துராமலிங்கத் தேவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடச் சொன்ன ‘சேரிப்புயல்’ தொல். திருமா இதுவும் போதாதென்று, “ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையானது, இந்த விளையாட்டைப் பாரம்பரியமாக நடத்திவரும் மக்களை இழிவுபடுத்துவதாக உள்ளது” என்று வேதனைப்படுகிறார்.
ஓட்டுக்காக இக்கட்சிகள் இருவிழி சிவந்து கனற்பொறி தெறிக்க பத்திரிக்கைகளில் அறிக்கைகளை வெளியிடுவது ஒருபுறமிருக்க, 400 ஆண்டுகளாக இவ்வீர விளையாட்டு பாரம்பரியமாக நடந்து வருவதாக தமிழக அரசே உச்சநீதி மன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
ஏறு தழுவுதல் மட்டும்தான் பாரம்பரியமாக வந்ததா? சாதிதீண்டாமை, வலங்கை இடங்கை வெறியாட்டங்கள் கூடப் பாரம்பரியமாக வந்தவைதான். அதற்காக அவற்றையெல்லாம் ஆதரிக்க முடியுமா? பாரம்பரியமாக நீடித்துவந்த பொட்டுக் கட்டுதலைச் சட்டம் போட்டுத் தடுக்க முற்பட்டபோது, பார்ப்பனஆதிக்க சாதியினர் பதறியதைப் போலத்தான் இருக்கிறது, சாதிவெறியை மறைத்துக் கொண்டு ‘தமிழன் வீரம்’, ‘பாரம்பரியம்’ எனப் பூசி மெழுகிடும் வாதமெல்லாம்.
பா.ஜ.க.வின் இல.கணேசன், அகண்ட பாரதத்திலிருந்து இறங்கி வந்து ‘தமிழரின் பாரம்பரியம்’ பற்றி அங்கலாய்க்கிறார். ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து சிவசேனா குண்டர்களோ மதுரையில் ரயில் மறியல் செய்கின்றனர். அதேசமயம், தடை கோரி வழக்கு போட்ட விலங்குநல வாரியத்தை, பா.ஜ.க.வோ, சிவசேனாவோ எதிர்க்கவில்லை. ஏனெனில், இதே விலங்கு நல வாரியம்தான் ‘கோசாலை’களை (பசு பாதுகாப்பு மையம்) நவீனப்படுத்த நிதியுதவி செய்கிறது. பசுவதை கூடாது என்று சீறும் இந்த இந்துவெறிக் கட்சியினர்தான், காளைகளின் கண்களில் எலுமிச்சை சாறையும் மிளகாய்ப் பொடியையும் தூவி நடத்தப்படும் காளை வதை ‘பாரம்பரிய’ ஜல்லிக்கட்டுக்காக வரிந்து கட்டுகின்றன.
இவை ஒருபுறமிருக்க, உச்சநீதி மன்றத்துக்கு காளைகள் மீது திடீர்க் கரிசனை ஏன்? “இது காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு; இதனால் பலருக்குப் படுகாயங்களும் ஒரு சிலர் பலியாவதும் நடக்கிறது” என்று அது நியாயவாதம் பேசுகிறது. ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது என்றால், அதைவிடக் காட்டுமிராண்டித்தனமான சாதியும் தீண்டாமையும் தலைவிரித்தாடுவதைத் தடுக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? பாசிச ஜெயா ஆடுகோழி வெட்டத் தடை விதித்து கிராமக் கோயில்களைப் பார்ப்பனமயமாக்க முயற்சித்தார் என்றால், நீதிமன்றமோ ஜல்லிக்கட்டு போட்டியை உலகமயமாக்கலுக்கு ஏற்ப மறுவார்ப்பு செய்ய முயற்சிக்கிறது. அதனால்தான் முதலில் தடை விதித்துவிட்டு பின்னர் எட்டுக் கட்டுப்பாடுகளை விதித்து, ஜல்லிக்கட்டை நடத்த அனுமதித்துள்ளது.
“ஜல்லிக்கட்டை மனிதத்தன்மை கொண்டதாகவும், நாகரீகமான முறையில் நடத்தப்படும் நிகழ்ச்சியாகவும் மாற்றப்பட வேண்டும்” என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகம், நீதிமன்றத்திற்கு வேறு உள்நோக்கம் இருப்பதை உணர்த்துகிறது. இதற்கேற்ப மதுரை மாவட்ட ஆட்சியரும், “ஜல்லிக் கட்டை முறைப்படுத்தி நடத்திட அரசு விரைவில் அவசரச் சட்டம் பிறப்பிக்கவுள்ளதாக” அறிவித்துள்ளார்.
இந்த அவசரச் சட்டம் எவ்வாறு இருக்கும்? உலகமயமாக்கலுக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு போட்டியை மாற்றியமைக்கும் வகையிலே இருக்கும். “இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் கோக்” என தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரம் போல, இனி அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டை வழங்குவது பெப்சி, டாடா என்று மாற்றப்படலாம். “சென்னை சங்கமம்” போல, ‘நாட்டுப்புறக் கலை மற்றும் விளையாட்டுக்களை’ப் பாதுகாத்து வளர்த்திட ஃபோர்டு பவுண்டேசன், பில்கேட்ஸ் பவுண்டேசன் என அனைத்து ஏகாதிபத்திய நிறுவனங்களும் தரகு முதலாளிகளும் தயாராகவே உள்ளனர். இதனால்தான் நீதிமன்றம் ஜல்லிக்கட்டை ஒழுங்குபடுத்தி ‘மனிதத்தன்மை நாகரிகம்’ கொண்டதாக மாற்றச் சொல்கிறது.
இதன்படி, இனி வாடிவாசல் “பெப்சி” வாசலாகலாம். “நைக்” பனியன் அணிந்த ஜல்லிக்கட்டு வீரர்கள், “கோக்”கைப் புரவலராகக் கொண்ட மாட்டையும், ரிலையன்ஸ் பிரஷ் வளர்த்த மாட்டையும் அடக்கும் வீர விளையாட்டை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பலாம்.
இவை மிகைப்படுத்தல்கள் அல்ல. ஏற்கெனவே “சென்னை சங்கமம்” நிகழ்ச்சிகள் நடந்த விதத்தைப் பார்த்தாலே இதனைப் புரிந்து கொள்ள முடியும். சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை பன்னாட்டு தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் தத்தெடுத்துக் கொள்ள, இந்நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் விற்கப்பட்டதைப் போல, கடைசியில் தமிழர்களின் ‘பாரம்பரிய’ ஜல்லிக்கட்டும் உலகமயமாக்கலுக்கு ஏற்ப மறுவார்ப்பு செய்யப்பட்டு வருகிறது.
· இரணியன்
தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு : ஜல்லிக்கட்டா? மஞ்சு விரட்டா?
தமிழகத்தில் கி.மு 1500 காலத்தில் (அதாவது, இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பு) “மஞ்சு விரட்டு” அல்லது “எருது கட்டுதல்” என்ற வீர விளையாட்டே பாரம்பரியமாக நிலவியது. பொங்கல் விழாக்களின் போது காளைகள் நெடுஞ்சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டு, கிராமத்து இளைஞர்கள் அவற்றை விரட்டிக் கொண்டு ஓடுவர். சாலையின் இருமருங்கிலும் மக்கள் திரண்டு ஆரவாரிப்பர். அப்பந்தயத்தில் முதலில் வந்து வெற்றிபெறும் வீரருக்குப் பரிசளிக்கப்படும். இதில் மாடுகளுக்கோ மனிதர்களுக்கோ காயமேற்படாது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கருக்கியூர் குன்றில் ஏறத்தாழ 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தில் காணப்படும் மஞ்சு விரட்டு காட்சி : மஞ்சு விரட்டு அல்லது எருது கட்டுதலே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்பதற்கான சான்று.
நீண்ட நெடுங்காலமாக தமிழர்களின் பாரம்பரியமாக நிலவி வந்த “மஞ்சு விரட்டு”, ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டாக மாறியது. நாயக்கர் ஆட்சியில் படிப்படியாக ஜமீன்தாரி முறை உருவாகி வந்தது. ஜமீன்தார்கள் தமது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் பறைசாற்றும் அடையாளமாக உருவாக்கியதுதான் ஜல்லிக்கட்டு. ஜமீன்தார்களே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து, அதை யாராலும் அடக்க முடியாது என்று வீரப் பெருமை பேசினர். மாடுகளின் கொம்புகளில் தங்கக் காசுகளைப் பையில் போட்டுக் கட்டி, அதை அடக்குவோருக்கு அப்பரிசுத் தொகை வழங்கப்படுவதாக அறிவித்தனர். ஜமீன்தார்களின் ஆதிக்கம், சாதி ஆதிக்கமாகவும்; காளையை அடக்கும் வீரம், தாழ்த்தப்பட்ட சாதியினரை ஒடுக்கும் வீரமாகவும் வேர் விட்டது.
இந்த உண்மைகளை தொல் ஓவிய வரலாற்றாளரான காந்திராஜனும், சென்னை கவின்கலைக் கல்லூரி முதல்வரான பேராசிரியர் சந்திரசேகரனும் வெளிக் கொணர்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள கருக்கியூர் குன்றில் ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தில் காணப்படும் மஞ்சு விரட்டு காட்சியையும், மதுரை திண்டுக்கல்லுக்கிடையே கல்லூத்து மேட்டுப்பட்டியிலுள்ள தொன்மை வாய்ந்த குகை ஓவியத்தையும் ஆதாரமாகக் காட்டி, மஞ்சு விரட்டுதான் தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டாகத் திகழ்ந்ததை வரலாற்று அறிவியல் முறைப்படி நிரூபித்துள்ளனர்.
______________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2008
______________________________