Description
2019, நாடாளுமன்றத் தேர்தலில் மோடி – அமித்ஷா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி எப்படியாவது தோல்வியடைந்துவிட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் விருப்பமாக இருக்கிறது. ஏழை நடுத்தரவர்க்க மக்களின் மீது அந்த அளவு கடுமையான தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது பாஜக. காஷ்மீர் முதல் ஸ்டெர்லைட் வரை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்தக் கார்ப்பரேட் – காவி பாசிசம், இந்தத் தேர்தலோடு முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல. இந்த அரசு இயந்திரத்தின் அனைத்து உறுப்புகளிலும் ஊடுறுவியிருக்கும் இந்த நச்சுப் பாம்பை வீதிப் போராட்டங்களின் மூலம்தான் வீழ்த்தமுடியும். அதற்கான ஆயுதம்தான் இந்நூல்.
கார்ப்பரேட் காவி பாசிசம் ! புதிய ஜனநாயகம் அச்சுநூலில் இடம்பெற்றுள்ள தலைப்புகள் :
- பதிப்புரை
- கார்ப்பரேட் முதலாளிகளின் அடியாட்படை
- கொள்ளையிடப்படும் பொதுத்துறை வங்கிகள்
- விவசாயத்தின் மீதான இரட்டைத் தாக்குதல்
- கார்ப்பரேட் – காவிமயமாகும் கல்விப்புலம்
- பார்ப்பனியத்தின் கோரத்தாண்டவம்
- ஆர்.எஸ்.எஸ். : கிரிமினல்களின் கூடாரம்
- ஆர்.எஸ்.எஸ். – ம் அரசியல் சட்ட நிறுவனங்களும்
- ஊழல் சட்டபூர்வமாகிறது
- பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவது எப்படி?
- பிற்சேர்க்கை