Description
தொற்று நோய் தடுப்பு, ஆயுள் சராசரி கூடியது, குழந்தை – பிரசவகால மரணங்கள் வெகுவாக குறைந்திருப்பது, ஆட்கொல்லி நோய்களுக்கு மருத்துவம், சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் எளிதாக்கியிருப்பது… என அறிவியலால் வழிநடத்தப்படும் நவீன மருத்துவம் பல சாதனைகளைச் செய்து வருகின்றது. உண்மையில் தாய்மார்களைக் காப்பாற்றுவது நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ? என்பதை இந்த மாதத்திற்கான புதிய கலாச்சாரம் இதழ் தொகுத்துள்ளது.
தாய்மார்களைக் காப்பாற்றுவது நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ? நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரிசாலனையும் கைது செய் !
- பாட்டி வைத்தியத்திற்கும் பாதுகாப்பான மகப்பேற்றிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை !
- பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !
- அறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி
- பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்கள் இலுமினாட்டிகளை எப்படி சமைக்கிறார்கள் ?
- பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர் : பெரியார் ஒரு இலுமினாட்டி என்று ஏன் நம்புகிறார்கள் ?
- பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்களை நாம் எப்படி கையாள வேண்டும் ?
- இந்தியாவின் பழங்கால பிரசவ கொடுமைகள்
- ஹீலர் பாஸ்கர் கைது – மற்ற மூடர்களை என்ன செய்யலாம் ?
- மரபுவழி பிரசவம் : முகலாய ராணி மும்தாஜ் மரணம் கற்றுத்தரும் பாடம் என்ன ?
- ஆன்மீகத்தால் அச்சுறுத்துகிறார் செந்தமிழன் !
- ஆர்கானிக் உணவு: சதிக்கு பலியாகும் நடுத்தர வர்க்கம்!
- மருத்துவத் துறையை சீரழிக்கும் தனியார்மய வைரஸ் !
உலகமயத்தின் காலத்தில் சுகாதாரம் என்பது அரசின் சேவைப் பட்டியலில் இருந்து தூக்கி எறியப்பட்டு வணிக சேவையாக மாற்றப்பட்டு விட்டது. தனியார் மருத்துவமனைகள் பெருகிவிட்டன. மறுபுறம் அரசு மருத்துவமனைகளை திட்டமிட்டே நலிவடையச் செய்கிறார்கள். அரசின் கொள்கை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கொள்ளை ஆகிய இப்பிரச்சினைகளை ஆங்கில மருத்துவத்தின் தவறாக சித்தரித்து பல்வேறு போலி வைத்தியர்கள் பெருகிவிட்டனர். இவர்களும் மக்களிடம் முடிந்த மட்டும் கொள்ளையடிக்கின்றனர்.
நவீன மருத்துவமும், அரசு மருத்துவமனைகளை நலமாக வைத்திருப்பதும்தான் நமது நலத்தைக் காப்பாற்றும் என்பதையும் இலுமினாட்டி சதிக் கோட்பாட்டாளர்களின் பின்னணியையும் அறியத் தருகின்றது இத்தொகுப்பு!
பதிமூன்று கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்