ஈழத்தின் நினைவுகள் – பாகம் -8
காந்தி தேசத்தின் காவலர்கள் ஈழத்தமிழர்களை சிங்கள பேரினவாதத்தின் வன்கொடுமைகளிலிருந்து காப்பாற்ற கருணைக்கொலை செய்திருந்தால் கூட நன்மைக்கே என்று நாங்கள் சந்தோசமாய் செத்திருப்போம். காலங்காலமாய் எங்களை நம்பவைத்து முதுகில் குத்தியே பழக்கப்பட்ட இந்தியா, ஈழத்தமிழனுக்கென்றே ஓர் கொம்பு சீவியது. அதுதான் இந்திய அமைதிப்படை. இந்தியாவில் காந்தியை பின்பற்றுபவர்களும் சரி, இலங்கையில் புத்தரின் பெயரால் ஆட்சி செய்பவர்களும் சரி இருசாராருமே எங்களின் இரத்தத்திலும், கண்ணீரிலும்தான் அதிக சந்தோசம் காண்பார்கள் போலும்.
ஏற்கனவே இலங்கை ராணுவத்தின் வன்கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த எங்களை, இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்து ஈழத்தில் அப்பாவித் தமிழர்களான எங்கள் மீது போர்தொடுத்த கொடுமையை நாங்கள் சொல்லியழுதாலும் தீராது. இந்திய அமைதிப்படையை ஆங்கிலத்தில் Indian Peace Keeping Force-IPKF என்று கொண்டாலும், ஈழத்தமிழர்கள் சொல்வழக்கில் அது Indian People Killing Force என்றே சொல்லப்படுகிறது. அதாவது, ஈழத்தமிழர்களை கொல்வதற்கென்றே உருவாக்கப்பட்ட படை என்றுதான் சொல்வார்கள்.
எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த சிங்களராணுவமும், புதிதாக அமைதிப்படை என்ற பெயரில் வந்த இந்திய ராணுவமும் சரி ஒரே மாதிரித்தான் தெரிந்தார்கள். இந்திய அமைதிப்படை என்னும் போது, அது ஏனோ எங்களுக்கு அதிகமாகவே வலிக்கத்தான் செய்கிறது. ஒருவேளை அது தமிழ்நாடும், ஆறரை கோடி தமிழர்களும் இருந்தும் எங்களுக்கு இந்த அவலங்கள் நிகழ்ந்ததே என்ற ஈழத்தமிழர்களின் ஆதங்கமாக இருக்கலாம்.
ஏற்கனவே ஆண்டாண்டு காலமாய் ராணுவ அடக்குமுறையினாலும், ஒப்பரேஷன் லிபரேஷன் என்ற ராணுவ நடவடிக்கையாலும் சோர்ந்து போயிருந்த எங்களுக்கு இந்திய ராணுவத்தின் வருகை ஓர் தற்காலிக விடுதலையை தரும் என்றுதான் நம்பியிருந்தோம். வடமராட்சியிலிருந்து தென்மராட்சிக்கு போகும் போது இருந்த வலி திரும்பி வரும்போது ஏனோ அதிகமாகத் தெரியவில்லை. ஆனாலும், இதுவும் ராணுவம் என்கிற பயத்தை மட்டும் எங்களின் மனங்களிலிருந்து முற்றுமுழுதாக அகற்ற முடியவில்லை.
வழி நெடுக இந்திய ராணுவமும் எங்களை கொடுமைப்படுத்துமா என்றெல்லாம் கேள்விகேட்டே என் சித்தப்பாவின் உயிரை நான் எடுத்துவிட்டேன். அதற்கு அவர் அப்போது சொன்ன பதில்தான் அந்த வயதில் என்னை வாய்பிளந்து கேட்கவைத்தது. இந்தியா ராணுவத்தை அனுப்பியது ஈழத்தமிழர்கள் பாலுள்ள அக்கறையால் அல்ல. அது அவர்களின் தேசிய நலன் சார்ந்தது என்றார். எனக்கு அது அப்போது புரிந்த மாதிரியும் இருந்தது, புரியாத மாதிரியும் இருந்தது. மாணவப்பருவத்தில் படிப்பு, நட்பின் அரட்டைகள், இனிமையான எதிர்காலக் கனவுகள் இப்படித்தானே அநேகமானவர்களுக்கு வாழப்பிடிக்கும். நான் மட்டும் விதிவிலக்கா என்ன? போர் பூமியில் மாணவப்பருவத்தின் அத்தனை சந்தோசங்களையும் இழந்த எனக்கு அது ஏனோ ஓர் வடுவாக என்மனதில் இன்றுவரை பதிந்துதான் விட்டது.
சரி, இனிமேலாவது நாங்கள் பயமில்லாமல் பள்ளிக்கூடம் போகலாம், எங்கள் சொந்தமண்ணில் எங்களுக்கு பிடித்த இடங்களில் அடையாள அட்டை இல்லாமலே சுதந்திரமாய் நடமாடலாம், குண்டுச்சத்தங்கள் இல்லாமல் தூங்கலாம், குறிப்பாக பதுங்குகுழி வாழ்க்கையிலிருந்து விடுதலை, அடிக்கடி தலையை நிமிர்த்தி வானத்தைப் பார்த்து எப்போது தலை மீது குண்டுவிழும் என்று பயப்படத்தேவையில்லை, உலகில் பெரும்பான்மையான மக்களைப்போல் நாங்களும் ஓர் இயல்பு வாழ்க்கை வாழலாம் என்று, காந்திதேசத்தின் மகாத்மா எப்படி எதிர்கால இந்தியாவை கனவு கண்டாரோ அப்படியொரு வாழ்க்கையை நாங்கள் சொற்ப காலமெனும் ஈழத்தில் வாழப்போகிறோம் என்ற சந்தோசக் கற்பனையுடன்தான் வடமராட்சிக்கு திரும்பினேன். என் அத்தனை சந்தோசமும் அமைதிப்படை என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடங்கியிருந்தது.
அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் ஊர் திரும்ப ஆரம்பித்திருந்தார்கள். வழிநெடுக பார்த்தவர்களிடமெல்லாம் இந்தியராணுவம் நல்லவிதமாக நடந்துகொள்கிறார்களா என்றெல்லாம் விசாரித்தபடியே ஊர்வந்து சேர்ந்தோம். எல்லோரும் சொன்னது, “ஓம், ஓம் (ஆம்) ஒரு பிரச்சனையும் இல்லை. அவங்கள் நல்லவிதமாகத்தான் ஆக்களை நடத்துறாங்கள். நீங்கள் பயப்படாமல் போங்கோ” என்பதுதான். சிங்கள பேரினவாதத்தின் ராணுவ கைக்கூலிகளிடம் மிதிபட்ட எங்களை யாராவது மனிதர்களாக மதித்தால் நிச்சயமாக கண்கலங்கி விடுவோம். ஆரம்பத்தில் இந்தியராணுவம் அப்படித்தான் எங்களை கண்கலங்க வைத்தார்கள். எங்களையும் மனிதர்களாக மதியுங்கள் என்பதுதானே எங்கள் அறுபது வருட கோரிக்கை.
எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு ஈழத்தில் அகாலமரணமான எங்களின் உறவுகளுக்காய் எந்த ராணுவ இடையூறுமின்றி, தலையில் குண்டு விழும் என்ற பயமின்றி வாய்விட்டு அழமுடிந்தது இந்த நாட்களில்தான். இதற்காக இந்திய ராணுவத்திற்கு நாங்கள் நன்றி சொல்லியே தீரவேண்டும். ஆனால், பிற்காலத்தில் எங்களின் கண்ணீரின் காரணகர்த்தாக்களாகவும் இவர்களே இருந்தார்கள் என்பது சோகத்திலும் சோகமான விடயம். ஊருக்கு வந்து எங்கள் வீட்டைப் பார்த்தபோது எங்களின் உரிமைகளைப் போலவே உடமைகளும் சிதைக்கப்பட்டும், சிதறடிக்கப்பட்டும் கிடந்தன. ஊருக்கு வந்து சேர்ந்ததும் சிலகாலம் செத்தவீடு, துக்கவிசாரிப்புகள், உடைமைகளின் இழப்புகள், உடைந்த எங்களின் வீடுகளை சரிப்பண்ணி ஏதோ வீடு என்ற ஓர் கட்டிடத்தை உருவாக்குவது இப்படித்தான் நகர்ந்தது.
அது தவிர முகாமிலிருந்து முன்னேறிய சிங்கள ராணுவத்தால் ஆங்காங்கே புதைக்கப்பட்ட Land Mine என்று சொல்லப்படும் கண்ணிவெடிகளால் காலை இழந்த ஆடு, மாடு, மனிதர்கள் பற்றிய சோகம் ஒருபுறமும், தெருவில் இறங்கி நடந்தால் காலை இழந்துவிடுவோமோ என்ற பயமும் இருக்கத்தான் செய்தது. பேச்சுவழக்கில் கண்ணிவெடி, “மிதிவெடி” என்றே அழைக்கப்படுகிறது. அப்படி கண்ணிவெடியில் மிதித்தால் என்ன செய்யவேண்டும் என்றும் பொதுவாகவே ஈழத்தமிழர்கள் அறிந்துதான் இருந்தார்கள். இந்த மிதிவெடிகளைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
போர் நடக்கும் இடங்களில் இவை பெரும்பாலும் விதைக்கப்படுகின்றன. இதனால் பலர் கால்களை இழந்து அங்கவீனர்கள் ஆகிறார்கள். ஒரு காலத்தில் இதைப் பற்றி விளம்பரப் படுத்த ஓர் உலகப்பிரபலம் வேண்டுமென்று யார் நினைத்தார்களோ, மறைந்த இங்கிலாந்தின் இளவரசி டயானாவை வைத்து பெருமளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அவரால் கண்ணிவெடியின் அவலத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்ட ஜெனீவாவில் ஐ. நா. சபையின் முன் மூன்றரை கால் நாற்காலி ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. ஈழத்திலும் இந்த கண்ணிவெடியால் பலர் கால்களை இழந்திருக்கிறார்கள்.
சரி, எதற்கு இப்போது இதைப்பற்றி பேசுகிறேன் என்றால் இன்று வன்னியில் மக்களை மீள்குடியேற்றம் செய்ய முடியாது என்று சிங்கள அரசு சொல்லும் நொண்டிக் காரணங்களில் ஒன்று இந்த மிதிவெடிகள்தான். ஐ. நாவும் தங்களிடம் அதை அகற்றும் பணிக்கு தர பணம் இல்லை என்கிறது. சிங்கள அரசும் யாரும் பணம் தரமாட்டார்களாம் என்று மூக்கால் அழுகிறது. அட, இவர்கள் சொல்லுமளவிற்கு அப்படியேதும் மிதிவெடிகள் இருந்தால்தானே யாராவது அதை அகற்ற முடியும். இப்படித்தான், வன்னியில் இல்லாத கண்ணிவெடியை இந்தியாவின் ஏறக்குறைய இரண்டாயிரம் ராணுவம் இன்றுவரை அகற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லப்படுகிறது.
எப்படியோ, இந்திய ராணுவம் புலிகளை அழிக்கவேண்டும் என்று வந்த நோக்கத்தின் முதல் கட்டவேலையை சுபமே தொடங்கினார்கள். இந்தியராணுவம் தெருவில் போவோர், வருவோரையெல்லாம் மறித்து ஜூஸ் கொடுத்தார்கள் எங்கள் ஊரில். “நீங்கள் ஒப்பரேஷன் லிபரேஷனால் நிறையக் கஷ்டங்களை அனுபவித்திருப்பீர்கள். உங்களுக்கு உதவத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். ஒன்றுக்கும் பயப்படாதீர்கள். என்ன உதவி வேண்டுமானாலும் எங்களின் முகாமில் வந்து தெரிவியுங்கள்” என்றெல்லாம் ஆரம்பத்தில் தேனொழுகப் பேசினார்கள். சிங்கள ராணுவம் இதையெல்லாம் சொல்லியிருந்தால் நாங்கள் நம்பியிருக்க மாட்டோம். இந்திய ராணுவம் சொன்ன போது அதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை.
அப்படி முகாமில் சென்று இவர்களோடு பேசியவர்களிடம் அவர்களின் அவலவாழ்வைப் பற்றி கேட்டதை விட புலிகளைப் பற்றித்தான் அதிகமாக இந்திய ராணுவம் கேட்டதாகச் சொன்னார்கள். வல்வெட்டித்துறையை சுற்றியிருந்த ஊர்களான பொலிகண்டி, உடுப்பிட்டி என்ற ஊர்களிலும் இந்திய ராணுவ முகாம்கள் இருந்தன. இவையிரண்டும் முற்றுமுழுதாக இந்தியராணுவம் மட்டுமே இருந்த முகாம்கள். அமைதிப்படைக்கு இந்த சிறிய ஊர்களில் இத்தனை ராணுவமுகாம்கள் தேவையா என்ற கேள்விக்கெல்லாம் பதில் இந்திய மேலாதிக்க அரசியலைப் புரிந்தவர்களுக்கு கண்டிப்பாக புரியும்.
பொலிகண்டி முகாம் பொதுமக்களின் வீடுகளை மட்டுமே முகாமாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டு உரிமையாளர்கள் சிலர் போய் நியாயம் கேட்டபோது இந்தியராணுவத்தால் விரட்டியடிக்கப்பட்டார்கள். உடுப்பிட்டி இராணுவமுகாம் பெண்கள் பாடசாலை ஒன்றை இராணுவமுகாமாக மாற்றி விட்டு, ஒருபக்கம் தாங்கள் இருக்கிறோம் என்றும் மற்றபக்கம் பாடசாலையை நடத்தும் படியும் சொன்னார்கள். அப்படித்தான் சிலகாலம் நடந்தது. ஆனால், அங்கு கல்வி கற்க வந்த மாணவிகளிடம் இவர்கள் தகாத முறையில் நடக்க முற்பட்டதாகவும், மாணவிகளை கிண்டல் செய்வதாகவும் நிறையவே கேள்விப்பட்டேன். பெற்றோர் பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவே பயந்தார்கள். பின்னாட்களில் அது முழுவதுமாக இந்திய ராணுவமுகாமாகவே மாற்றப்பட்டுவிட்டது.
வல்வெட்டித்துறை இராணுவ முகாமில் சிங்கள ராணுவமும், இந்திய ராணுவமும் சேர்ந்தே இருந்தார்கள். அதனால்தான் இருவருமே எங்களின் அன்பைப் பெறுவதில் போட்டி போட்டார்கள். ஒரு கட்டத்தில் எங்கள் மீது யார் அதிகம் அன்பாய் இருக்கிறார்கள் என்பதில் சிங்கள ராணுவத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே போட்டியே வந்து காமெடி கலாட்டாக்களும் இடம்பெற்றது. இந்திய ராணுவம் ஜூஸ் கொடுத்தால், சிங்கள ராணுவம் ஜூசோடு ஏதாவது சாப்பாடும் கொடுத்தார்கள். முதன்முதலாக நாங்களும், சிங்கள சமூகமும் சகோதர உறவுகள் என்றார்கள். இந்திய ராணுவம் மூன்றாம் மனிதர்கள் என்றார்கள். இந்திய ராணுவத்தோடு பேசாதீர்கள், உங்களை எப்போதுமே நாங்கள்தான் காப்பாற்றுவோம் (அதன் பொருள் உங்களை நாங்கள் மட்டும்தான் அழிக்கலாம் என்பதுதான்) என்றெல்லாம் அன்புக்கட்டளை போட்டார்கள்.
நாங்கள் தான் பலியாடுகள் ஆயிற்றே. எந்தப்பக்கம் தலையை ஆட்டினாலும் தலையை வெட்டுவார்கள். அதனால் தமிழ் சினிமா வடிவேல் கதாபாத்திரங்கள் மாதிரி “ஆஹா” என்று முழித்து, பொதுவாக சிரித்து, பொதுவாக தலையை ஆட்டி பரிதாபத்திற்குரிய பிறவிகளாய் ஆனோம். ஆனால், இன்று சிங்கள சமூகமும் இந்தியாவும் சகோதர உறவுகள் போலவும், ஈழத்தமிழர்கள் மூன்றாம் தர பிரஜைகளாகவும் புறக்கணிக்கப்பட்டு விட்டோம். அதனை அப்படியே இவர்கள் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. எங்களை எங்கள் வழியில் விட்டுவிடுங்கள் என்பதுதான் என் கோரிக்கை.
அமைதிப்படை என்றால் போர் புரியும் இருதரப்பையும் போர் செய்யாமல் கண்காணிப்பதுதானே வேலை. இப்படித்தான் நாங்கள் ஆரம்பத்தில் நம்பினோம். இவர்கள் அமைதிப்படைக்குரிய ஐ. நா மற்றும் சர்வதேச விதிமுறைகளை மதித்து ஈழத்தில் அமைதியை நிலைநாட்டுவார்கள் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால், இந்திய அமைதிப்படை என்ன செய்தது? போரை தடுக்க வந்தவர்களே எங்கள் மீது போர் தொடுத்தார்கள். தற்பாதுகாப்புக்கு மட்டுமே ஆயுதம் தரிக்கவேண்டியவர்கள் அத்தனை போராயுதங்களையும் எங்கள் மீது ஏவிவிடத் தவறவில்லை. யாழ்ப்பாணத்தில் விமானம் மூலம் குண்டு கூடப் போட்டார்கள். அடிக்கடி ரோந்து போகிறோம் பேர்வழி என்று வீதி வீதியாய் ஊவலம் போய் எங்கள் வயிற்றில் பீதியை கிளப்பினார்கள்.
தங்கள் பாதுகாப்புக்காக எங்களை கைதிகள் போல் பிடித்து வைத்தார்கள். ஒரு தடவையல்ல பலதடவை இப்படி நான் கைதியாக்கப்பட்டேன். கேட்பார் கேள்வியின்றி வீடு புகுந்து நேரம் காலமில்லாமல் வீட்டிலிருந்த என்னையும் என் தாயாரையும் அதேபோல் வீதியில் போனவர்களையும் இழுத்து வந்து ஓர் இடத்தில் கூட்டமாக இருத்தி வைப்பார்கள். பெரும்பாலும் ஆண்களைத்தான் கைது செய்தார்கள். எங்கள் வீட்டில் ஆண்கள் இல்லாததால் என் தாயார், தங்கை, நான் கைதிகளானோம்.
பெரும்பாலும் அன்றாடம் வேலைக்குப் போகிறவர்கள், பால் மற்றும் மரக்கறி விற்பவர்கள், வயதானவர்கள் இப்படித்தான் இவர்களிடம் மாட்டுவார்கள். இந்த வழியால் புலி போனதா என்று கேட்பார்கள். வீட்டிற்குள் இருக்கும் எனக்கு வீதியில் போனது புலியா அல்லது பிசாசா என்று எப்படித்தெரியும்? இப்படித்தான் பதில் சொல்ல நினைப்பேன். ஆனால், என்னை பிறகு அடித்து விடுவார்கள் என்ற பயத்தினால் அடக்க ஒடுக்கமாக பதில் சொன்னேன். இளைஞர்கள் என்றால் அடித்துத்தான் கேள்வி கேட்டார்கள்.
இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கானால் இரத்தம் கொதிக்கும். யாருடைய மண்ணில் வந்து யார் யாரை அதிகாரம் செய்வது? இப்படி அன்று மணிக்கணக்கில் வீதியில் ஓரத்தில் உட்கார்த்தி வைக்கப்பட்டிருக்கிறேன். என்னை சோதனை போடுகிறோம் என்று வரம்பு மீறிவிடுவார்களா என்று பயந்துகொண்டே ஒவ்வொரு நிமிடத்தையும் கழித்தேன். இந்திய ராணுவம் என்னிடம் வரம்பு மீறி நடந்த சம்பவங்களும் அடிக்கடி என் நினைவுகளில் வந்து வலியை கொடுக்காமல் இல்லை. ஆனாலும், என்னுடன் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்களே என்ற தைரியம் வரும். இவர்கள் அங்கெ இங்கே பராக்கு பார்க்கும் நேரம், ஏன் எங்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று சன்னக்குரலில் ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வோம். சத்தமாய் ஏதாவது பேசினால் என்ன பேசினீர்கள் என்று ஒரே போடாய் போட்டுவிடுவார்கள்.
பசி, தாகம், இயற்கை உபாதை என்று எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இந்தியராணுவ படை எங்களை போ என்று சொல்லும் வரை காத்திருக்க வேண்டும். சொந்த மண்ணிலேயே இன்னோர் நாட்டு ராணுவத்திடம் அடிமையாய் போன அவலம் மனதில் எரிச்சலையும் கோபத்தையும்தான் கிளப்பியது. ஆனால் என்ன செய்ய முடியும். கைதிகளாய், கையாலாகாதவராய் அமைதியாய் இருந்தோம். மனம் வலித்தது. ஆனாலும், கண்ணீர் விடக்கூடாது என்ற உறுதியுடன் இருந்தேன்.
இந்தியராணுவம் சம்பந்தமான என் அனுபவத்தில் ஓர் சிறிய ஆறுதலான சம்பவமும் இருக்கத்தான் செய்தது. இந்திய அமைதிப்படையில் (?) தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஒருவர் இருந்தார். என்ன இது தமிழ் பெண்களையும் வீதியில் கைதிகள் போல் உட்கார்த்தி வைத்திருக்கிறார்களே என்ற ஓர் ஆதங்கம் அல்லது இந்தியராணுவத்தின் பெயர் கெடப்போகிறதே என்ற கவலை எதுவோ ஒன்று அவரை எங்களுக்கு தன்னாலான உதவியை செய்யவேண்டும் என்று தூண்டியிருக்கலாம். ஒருநாள் வழக்கம் போல் வீதியில் மற்றவர்களுடன் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தேன். நாங்கள் மட்டுமே பெண்கள். இவர் தமிழர் என்று தெரிந்ததும் நான் இவரிடம் கெஞ்சுவது போல் கேட்டேன். எங்களை தயவு செய்து விட்டுவிடுங்கள் என்று.
இந்த தமிழ்நாட்டை சேர்ந்த சகோதரர் தலை மீது சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் போல் (சீக்கியரோ?) தலைப்பாகை கட்டிய, சீருடையில் ஏதோ பட்டைகள் உள்ள ஓர் அதிகாரியிடம் சென்று அவருக்கு தெரிந்த ஹிந்தி அல்லது பஞ்சாபி மொழியில் ஏதோ உரையாடிக்கொண்டிருந்தார். இவர் பதுங்கிப் பதுங்கிப் பேசுவதும், அவர் கண்கள் சிவக்க, உரத்த குரலில் கடித்துக் குதறுவது போல் பதில் சொல்வதும் எனக்கு ஏனோ ஓர் தர்மசங்கடத்தை இவருக்கு உண்டாகி விட்டோமோ என்று தோன்றியது. அந்த அதிகாரியின் பேச்சும், அவர் நின்ற தோரணையும் அவ்வளவு பயத்தைக் கொடுத்தது எனக்கு. ஒருவாறாக திரும்பி வந்தவர் சொன்னார் “சரிம்மா, என்னோட வாங்க உங்களை உங்க வீட்ல விடுறேன்” என்றார். நான் ஏதோ பெரிய மேதாவி போல் முந்திக்கொண்டு “உங்களுக்கு எதுக்கு சிரமம். நாங்களே போய்க்கறோம்” என்றேன்.
அவர் திரும்பி என்னை பார்த்து சிரித்துவிட்டு சொன்னார், “நீங்கள் தனியே போவதை இவர்கள் பார்த்தால் மறுபடியும் பிடித்து உட்கார்த்தி வைப்பார்கள் அதனால் தான் சொல்கிறேன் என்னோடு வாருங்கள் என்று”. அவர் சொல்வது சரியென்று தோன்றவே அவரோடு நடந்தோம். ஒரு இரண்டு நிமிட நடை என் வீட்டிற்கு. அப்படி தான் ஓர் நாள் என் மனதில் தோன்றியதை இவரிடம் கேட்டேன். “நீங்கள் எப்படி இந்த ராணுவத்தில்….” என்று. ஏனென்றால் என் கண்களுக்கு அவர் மிக நல்லவராகவே தோன்றினார். அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால், திரும்பி என்னை ஒருகணம் பார்த்துவிட்டு மறுபடியும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார். ஐயோ அந்த முகத்தில் தெரிந்த வலியை விவரிக்க எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை.
அந்த முகத்தில் ஈழத்தமிழர்கள் பற்றிய ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வலியைப் பார்த்தேன், உணர்ந்தேன். உண்மையில் ஈழத்தில் அமைதிதான் காக்கப்போகிறோம், ஈழத்தமிழர்களுக்கு உதவப்போகிறோம் என்று நம்பி வந்திருப்பார் போலும். ஆனால் நடந்தது தலைகீழாய் இருக்க, அந்த வலி அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. பேச்சை திசை திருப்ப “உங்க பேர் என்ன”? என்றேன். நான் இப்படித்தான் சிலசமயம் மனதில் படுவதை படக்கென்று யாரிடமாவது கேட்டுவிடும் பழக்கம் உள்ளவள். அவர் பெயர் சொல்லவில்லை. சரி எந்த ஊர் என்றாவது சொல்லுங்கள் என்றேன். தான் மானாமதுரையை சேர்ந்தவர் என்றார். ஒரு சில சமயங்களில் என் தங்கையையும் கைதியாக்கிய சந்தர்ப்பங்களில் இவர் தான் அவள் சிறுமி என்பதால் என் வீட்டிற்கு முன்னாலுள்ள சிறிய தாயார் வீட்டிற்கு போகச்சொல்லுவார். நானும் போகலாமா என்றால், உங்களை போக விடமாட்டார்கள் என்றார். சரி, எவ்வளவு தான் அவர் எனக்கு உதவ முடியும் என்று நினைத்துக்கொண்டேன்.
அந்த சகோதரர்தான் சில விடயங்களை கற்றுத்தந்தார். ராணுவம் வருவது தெரிந்தால் வீட்டிற்குள் இருக்காதீர்கள். தெருவில் வந்து நில்லுங்கள். வீட்டின் கதவுகளை மூடி வைத்தால் சந்தேகப்படுவார்கள் அதனால் திறந்தே வைத்திருங்கள், ராணுவம் ரோந்து வரும் போது முடியுமான வரைக்கும் அதிகாரியின் அருகிலேயே நில்லுங்கள் அப்படி என்றால் அவர்கள் உங்களுடன் தகாத முறையில் நடக்க பயப்படுவார்கள் என்று. ஆனால், அவருக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. அவரை சிறிது காலத்திற்கு பின் நான் ரோந்து வந்த ராணுவத்துடன் பார்க்கவில்லை. இந்தியராணுவம் பற்றிய நினைவு வரும்போதெல்லாம் இவரின் நினைவும் மறக்காமல் வரும் எனக்கு. நன்றிகள் சகோதரரே.
அன்று முதல் இன்றுவரை எல்லா அரசியல் மற்றும் ராணுவ விமர்சகர்களின் விமர்சனம் அல்லது ஒப்பீடு “ஈழம் இந்தியாவின் வியட்நாம்” என்பதுதான். அவர்கள் இந்தியா அல்லது இந்திய அமைதிப்படை (என்னைப்பொறுத்தவரை அது இந்திய ராணுவம்) ஈழத்தில் ஏன் தோற்றது என்று அதற்குரிய காரணத்தை அடுக்குகிறார்கள். இந்தியா தன் முழுப்பலத்தையும் அதாவது படை மற்றும் ஆயுத பலத்தை பிரயோகிக்கவில்லை என்று இவர்கள் சொல்லும் போது எனக்கு உண்மையிலேயே எரிச்சல்தான் வருகிறது. ஐயா, அறிவாளிகளே இந்திய ராணுவம் வந்தது “அமைதிப்படை” என்ற பெயரில். பிறகேன் நீங்கள் உங்கள் பலத்தை எங்கள் மீது மொத்தமாக பிரயோகிக்க முடியவில்லை என்று மூக்கால் அழுகிறீர்கள்? நீங்கள் கொஞ்சமாக பிரயோகித்த பலத்துக்கே நாங்கள் ஏறக்குறைய மூவாயிரம் அப்பாவிகளை இழந்து விட்டோம். இதில் முழுவதுமாக நீங்கள் படைப்பலத்தை காட்டினால் நாங்கள் என்னாகியிருப்போம்?
இந்தியாவின் வியட்நாம் ஈழம் என்றால் அதன் “மை லாய்” (Mai Lai) கிராமங்களை பற்றியும் பேசுங்களேன். இந்தியாவின் வியட்நாமில் எங்கள் ஊர்கள் மை லாய் கிராமங்களாய் பலிகொள்ளப்பட்டதை, அப்பாவிகளின் உயிர்கள் காவு வாங்கப்பட்டதை இவர்கள் பேசமாட்டார்கள். வினவு எனக்கு கொடுத்த இந்த அருமையான சந்தர்ப்பத்தில் நானாவது அதன் வலிகளை நினைவு கூரலாம் என்று நினைக்கிறேன்.
தொடரும்
–ரதி
தொடர்புடைய பதிவுகள்
- இனி ராஜீவ் காந்தியின் ஆன்மா சாந்தி அடையுமா?
- ஈழத்தின் நினைவுகள் – பாகம் -1
- ஈழம்: பதுங்குகுழிகளும் பாடசாலைகளும் ! பாகம் –2
- ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி ! – பாகம் -3
- பொருளாதாரத் தடையில் ஈழத்து வாழ்க்கை !- பாகம் -4
- ஈழம்: சிங்கள இராணுவத்தின் பயங்கரவாத நினைவுகள்!! பாகம் -5
- ஈழம்: உயிர் பிழைக்க ஓடு, ஓடிக்கொண்டே இரு….!!பாகம் -6
- ஈழம்: துயரங்களின் குவியல்! – பாகம்-7
இந்த கொடுமைகளுக்கு எதைத்தான் தீர்வாகச்சொல்ல முடியும்……???
தீர்வஹா சொல்ல முடியாது சமமஹா சொல்ல முடியும் இந்திய முஸ்லிம்களின் நிலைமையை
இந்தியாவை வரைபடமாக, பாரதமாதா பூசைப்படமாக சிலாகிக்கும் பொய்மை தேசபக்திக் குஞ்சுகள் இந்த அமைதிப்படையின் அடக்குமுறை குறித்து என்ன பதில் சொல்லுவார்கள்?
Premadasa armed LTTE: Panel
http://www.expressindia.com/news/ie/daily/19980418/10850534.html
Premadasa aided LTTE: Panel http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19980316/07550024.html
Kobbekaduwa Murder
http://www.sangam.org/FB_PROPAGANDA/Denzil.htm#2
ரதி உங்களது நினைவுகள் தொடரட்டும். இந்திய மேலாதிக்கத்தின் வன்மங்களை உங்களது வலி நிறைந்த அனுபவங்கள் தோல்உரிக்கட்டும்.
உங்களது கசப்பான நினைவுகளை விதையுங்கள்! மனதில் புதைக்காதீர்கள்
! அவை இந்திய அரசுக்கு எதிரான ஒரு பெரும் புரட்சிக்கு தூண்டுகோலாக அமையட்டும்! பேரினவாதத்திற்கு பேரிடியாக அமையட்டும்! தொடர்க உங்களது எழுத்துப்பணி !
ரதி,
இதையும் பாருங்கள் :
நான் எப்போது அடிமையாயிருந்தேன்
http://www.shobasakthi.com/shobasakthi/?p=507
நான் எப்போது அடிமையாயிருந்தேன்
நேர்காணல்: புஸ்பராணி
ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் தோழியர் புஸ்பராணி. தலைமறைவுப் போராளிகளிற்குச் சோறிட்டு வீட்டிற்குள் தூங்கவைத்துவிட்டு, பட்டினியுடன் வீட்டு வாசலில் காவலிருந்த ஒரு போராளிக் குடும்பத்தின் மூத்த பெண்பிள்ளை. ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்” தந்த மறைந்த தோழர் சி.புஸ்பராஜாவின் மூத்த சகோதரி. அறுபது வயதை நெருங்கும் பராயத்திலும் அரசியற் கூட்டங்கள், இலக்கியச் சந்திப்புகள், பெண்கள் சந்திப்புகள், தலித் மாநாடுகள் என உற்சாகமாகத் தனது பங்களிப்பைச் செலுத்திக்கொண்டிருப்பவர். தனக்குச் சரியெனப்பட்டதை எந்தச் சபையிலும் சந்தர்ப்பத்திலும் எதற்கும் அஞ்சாமல் துணிந்து பேசிக்கொண்டிருக்கும் கலகக்காரி.
தமிழரசுக் கட்சியின் தொண்டராக ஆரம்பிக்கப்பட்ட அவரது அரசியல் வாழ்வு எழுபதுகளின் ஆரம்பத்தில் ஆயுதந் தாங்கிய இளைஞர் போராட்டக் குழுக்களின் பக்கம் அவரைக் கூட்டிவந்தது. சில வருட இயக்க அனுபவங்களிலேயே போராட்ட இயக்கங்களுக்குள் பெரும் கசப்புகளைச் சந்திக்க நேரிட்ட அவர் இயக்க அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொண்டாலும் தொடர்ந்தும் இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிட்டது. புஸ்பராணி 1986ல் ஃபிரான்சுக்குப் புலம் பெயர்ந்தார்.
ஈழப் போராட்டத்தில் தனது அனுபவங்களை நூலாக எழுதி வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் புஸ்பராணியைச் சந்தித்து ‘எதுவரை” இதழிற்காகச் செய்யப்பட்ட இந்நேர்காணல் அவரின் புத்தகத்திற்கான ஒரு முன்னுரைபோல அமைந்துவிட்டதில் மகிழ்ச்சியே. ஒன்றரைமணி நேரங்கள் நீடித்த இந்த நேர்காணல் பாரிஸில் 20.06.2009ல் பதிவு செய்யப்பட்டது.
சந்திப்பு: ஷோபாசக்தி
படங்கள்: தியோ ரூபன்
——————————
இந்திய ராணுவம் ஈழத்தில் மிக கொடுமையான அக்கிரமங்களை, மீறல்களை செய்தன. அதை பற்றி நிறையவே கேள்விபட்டுள்ளேன்.
மறைந்த தோழர் சி.புஸ்பராஜாவின் :
‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்” என்ற நூல் அனைவராலும் அவசியம் படிக்க்பட வேண்டிய ஒன்று. பெரிய புத்தகம். ஒரு புத்தக கடையில் சில வருடங்களுக்கு முன்பு அதை சிறிது நேரம் புரட்டிப்பார்த்து, அங்காங்கே படித்தேன். தொடர்ந்து வாங்கி படிக்க மன திடமில்லை. மிக கொடுமையான விவரிப்புகள். அனைத்து தரப்பினராலும் செய்யப்பட்ட வன்கொடுமைகளை விரவாக சொல்கிறது இந்நூல். வாங்கமல் திரும்பிவிட்டேன். i regret missing it now. பிறகு அதை பார்க்க முடியவில்லை. வாங்க வேண்டும்.
முதலாளித்துவ அல்லது ஏகாதிபத்திய இராணுவ அமைப்பு என்பது எக்காலத்திலும் மக்களுக்கான இராணுவ அமைப்பாக செயல்படமாட்டாது என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவே இப்பதிவு துணைசெய்துள்ளது.
இலங்கை தமிழர்களின் விடுதலை, சுதந்திரம்
நாட்டின் விடுதலைக்காக உயிரையே கொடுக்க முன்வந்த இளைஞர்கள்/இளைஞிகள் இயக்கங்களுக்கிடையே நடந்த அராஜகங்களால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர். முதாலளித்துவ இராணுவ அமைப்பாக இயக்கங்கள் மாறி, எரிந்து கொண்டிருந்த தேசபக்தியை வெறும் செவகம் செய்வதற்கே இளைஞர்கள்/இளைஞிகள் மாற்றப்பட்டார்கள். விளைவு…(?)
அக்கறையுள்ள ம/லெ/மா கொள்கை அமைப்புகள் வாயை திறந்துகொண்டு வெளியே செயலுக்கு வாருங்கள். வெறுமனே மறைந்துநின்றுகொண்டு மறைபொருளில் பேசியும் எழுதியும் என்ன பயன்? போராட்டத்தை முன்நகர்த்த சரியான கொள்கை அமைப்புகள், இருக்கின்ற தளத்தில் பணியாற்றக்கூடிய மிக முக்கிய தேவை இப்போது உள்ளது. இதை ஒரு அறைகூவலாக எடுத்துக்கொள்ளுங்கள்.
உடன் அனுப்பவும்
http://www.srilankacampaign.org/takeaction.htm .Thanks.
Tamils were never raped by Indian Army. They were raped by Tigers and put the blamed on IPKF.
Shanmugalingam.Toronto Canada 416-431-5095
என்னது தங்கைகளை அண்ணன்கள் உறவு கொண்டார்களா (உன் பாசையில்)?????? யோவ் Shanmugalingam (Toronto Canada 416-431-5095), சும்மா உளறாதீர்… உன் மரியாதையை காப்பாத்திக் கொண்டு சென்று விடு…
Lenin
Chennai, India
Mobile: 09444877443
//Tamils were never raped by Indian Army. They were raped by Tigers and put the blamed on IPKF.//
அப்ப மிசோராமிலும், அசாமிலும், மணிப்பூரிலும் பெண்களை கற்பழித்து இந்திய ராணுவத்தின் மீது பழி போடுவது கூட புலிகள் தானே
அட்றா சக்கை
ஈழப்போரின் இறுதி நாட்கள்
http://www.shobasakthi.com/shobasakthi/?p=488
ஈழப் போராட்டமும் தமிழக ஆதரவாளர்களும்
ஈழப்போரின் இறுதி நாட்கள்
இம்மாத ‘காலச்சுவடு’ இதழில் ‘ஈழப்போரின் இறுதி நாட்கள்’ என்ற மனம் பதைக்க வைக்கும் நீள்கட்டுரை வெளியாகியிருக்கிறது. புலி ஆதரவாளர்கள், அரச ஆதரவாளர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் முன்முடிவுகளையும் சாய்வுகளையும் சற்றே தள்ளிவைத்து விட்டு நிதானமாகப் படிக்க வேண்டிய கட்டுரையிது.
இந்தக் கட்டுரை ராஜபக்ஷவின் கைக்கூலிகளால் எழுதப்பட்டது என்றோ, ஒட்டுக்குழுக்களின் சித்துவேலை என்றோ பழிக்கப்படலாம் அல்லது இதைக் கண்டுகொள்ளாமலே விடும் தந்திரமும் நடக்கலாம். ஒருவர் உண்மையை எதிர்கொள்ள மறுப்பதால் உண்மைக்கு இழப்பு ஏதுமில்லை என்பதைத்தான் இப்போதைக்குச் சொல்லிவைக்க முடிகிறது.
http://www.kalachuvadu.com/issue-116/page47.asp
கட்டுரை
வன்னியில் என்ன நடந்தது?
களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு
ஈழப்போரின் இறுதி நாட்கள்
காலச்சுவடு 1994இல் மீண்டும் துவங்கப்பட்ட காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் இதழியல் அறங்களில் ஒன்று, எந்தப் படைப்பையும் மறைவான பெயரில் வெளியிடுவதில்லை என்பது. இது தமிழக எழுத்துக்களுக்கு உறுதியாகக் கடைபிடிக்கப்பட்டாலும் இலங்கை அரசியல் சூழலைக் கருதி அன்றிலிருந்தே விதிவிலக்காகப் பல ஈழத்துப் பதிவுகளை மாற்றுப் பெயர்களில் வெளியிட்டு வருகிறோம். எனினும் அவர்கள் அடையாளம் எங்களுக்குத் தெரிந்திருக்கும். எழுதியவர் அடையாளம் தெரியாமல் ‘காலச்சுவடில்’ வெளிவந்த முதல் எழுத்து ‘அநாமதேயன் குறிப்புகள்’. மீண்டும் இலங்கை அரசியல் சூழலைக் கணக்கில்கொண்டு எடுக்கப்பட்ட முடிவு அது.
இலங்கையில் இப்போது அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் முகாம்கள் பற்றிய முதல் நிலை அனுபவக் கட்டுரை ஒன்றைக் ‘காலச்சுவ’டில் வெளியிட வேண்டும் என்று விரும்பினோம். அத்தகைய ஒரு முகாமிலிருந்த நண்பர் ஒருவருடன் கைபேசியில் தொடர்புகொண்டேன். வன்னி அனுபவங்கள் பற்றியும் முகாம் வாழ்க்கை பற்றியும் எழுதி அனுப்புவதாகக் கூறியவரின் 40 பக்க கையெழுத்துப் பிரதிகள் பொது நண்பர் ஒருவர்வழி, முதல் பதிவான வன்னி அனுபவங்கள் மின்னஞ்சல்வழிக் கிடைத்தன. தன்னுடைய பெயரையோ முகாம் பெயரையோ வெளியிடக் கூடாது என்று நிபந்தனை விதித்தார் நண்பர். ஏற்றுக்கொண்டோம்.
இலங்கை அரசு பற்றி மட்டுமல்ல விடுதலைப்புலிகள் பற்றியும் கடுமையான விமர்சனங்களுடன் இந்தப் பதிவு அமைந்துள்ளது. இந்த நண்பருடன் எனக்கு சுமார் 15 ஆண்டுகள் தொடர்பு உண்டு. விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக இருந்தார். 1999இல் சேரனின் நேர்காணல், விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனங்களுடன் ‘காலச்சுவ’டில் வெளிவந்த பின்னர் என்னுடன் பல ஆண்டுகள் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டார். வெறும் வாய்ச்சொல் வீரர் அல்ல. விடுதலை இயக்கத்தில் நம்பிக்கைகொண்டு வன்னியில் வாழ்ந்த அவரது அனுபவங்களை நாம் திறந்த மனதுடன் அணுக வேண்டும். முகத்தில் அறையும் யதார்த்தங்களை நேர்மையுடன் எதிர்கொள்வது நம்மை வலுப்படுத்தும். நாம் கட்டிக் காக்க விரும்பும் பிம்பங்களைவிடப் போர்க்களத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவங்களும் ரத்தசாட்சியான உண்மைகளுமே முக்கியமானவை.
கண்ணன்
அன்புள்ள கண்ணன்,
உங்களுடன் கதைத்ததில் நிறைய மகிழ்ச்சி. பேசுவதற்கு எவ்வளவோ விசயங்கள் உள்ளன. ஆனால் சூழலும் நிலைமையும் அதற்கு வாய்ப்பாக இல்லை. தவிர கைபேசி மூலமான உரையாடல் அதற்குரியதும் இல்லை. பிற வழிகளில் பேசுவதற்கு வாய்ப்பும் இல்லை.
வன்னி நிலைமைகள் – வன்னியில் என்ன நடந்தது என்பதைச் சாட்சி நிலையில் நின்று எழுத வேண்டும். ஈழப்போராட்டத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன? எப்படி இந்த வீழ்ச்சி ஏற்பட்டது? இந்த வீழ்ச்சிக்கு யார் யார் காரணம்? ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொரு சக்திக்கும் எவ்வளவு பொறுப்பு? போராளிகள் தோற்றார்களா, தோற்கடிக்கப்பட்டார்களா? சிங்கள இராஜதந்திரத்தின் ரகசியம், அதன் வீரியம், சிங்கள அரசின் மேலாதிக்க உபாயம், இந்தியா வகித்த, வகித்துவரும் பங்கு, வகிக்க வேண்டிய பாத்திரம், சர்வதேசச் சமூகத்தின் நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும், தமிழ்மக்களின் 50 ஆண்டு காலப் போராட்டப் பாதையின் போக்கு, ஜனநாயகம் பற்றிய தமிழ் மக்களின் புரிதல், பன்மைத்துவத்தை ஏற்கமுடியாத உளவியல் உருவாக்கம், சாதிய மனோபாவத்தின் கூட்டுருவாக்கம் எப்படி முஸ்லிம் விரோத, பிற அமைப்புகளின் மீதான காழ்ப்புணர்ச்சியாக உருமாற்றம் பெற்றது, ஈழப்போராட்டம் புலிகளின் போராட்டமாகச் சுருங்கியதும் புலிகளின் மீதான தடைகளும் எதிர்ப்புகளும் எப்படி ஈழப்போராட்டத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அம்சமாக மாறின என்பதைப் பற்றியுமாகப் பல நிலைகளில் சாட்சிநிலை நின்று எழுதப்பட வேண்டும். அப்படியொரு எண்ணமும் உண்டு. ஆனால், இப்போது நாங்கள் இருக்கின்ற முகாம் சூழலி
முழு கட்டுரை :
http://www.kalachuvadu.com/issue-116/page47.asp
நன்றி ..ரதி..உங்கள் மனக்குமுறல்கள் தொடரட்டும் .. தமிழ் மண்ணில் பிறந்திருந்தும் ஈழத்து ரத்தம் மண்ணில் விழுகையில் ஒன்றும் செய்யாத கையலகதவர்கள் கூட்டத்தில் நானும் ஒருவனே ..இன்றும் தமிழகத்தில் , ஈழமும் புலிகளும் தமக்கு சற்றும் தொடர்பில்லாத வேற்று நாட்டு சங்கதிகள் என்ற எண்ணம் இருக்கவே செய்கிறது ..எம் கருத்தை ,நியாயம் என்றாலும் , மற்றவர் மனதில் திணிக்க முடியாத நிலை தான் இங்கு..உங்கள் குமுறல்கள் அதை மாற்றதா ? என்ற ஏக்கம் மட்டும் இப்போது …
//இன்றும் தமிழகத்தில் , ஈழமும் புலிகளும் தமக்கு சற்றும் தொடர்பில்லாத வேற்று நாட்டு சங்கதிகள் என்ற எண்ணம் இருக்கவே செய்கிறது //
இது முழுக்க முழுக்க உண்மை. செல்வி. ரதியிடம் இதை நான் எடுத்து சொல்ல பல தடவைகள் முயற்சித்திருக்கிறேன். இந்த எண்ணம் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு இன்னும் அழுத்தமாகப் பதிந்து விட்டது. இறுதிப் போரின் போது தமிழகத்திலிருந்து தேவையான அளவு குரல் எழும்பாததன் காரணமும் இதுவே.
ராஜீவுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை ஒரு முகாந்திரமாகக் கொண்டு, பயங்கரவாத பீதீயூட்டி ஈழப் போராட்டத்தை தமிழக மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதில் அரசு வெற்றிபெற்றது என்ற அடிப்படையில்தான் புலிகளை விமர்சிக்கலாம்.
மேலும், இயல்பாகவே ஒரு முக்கிய விசயத்தையும் பலரும் கவனிப்பதில்லை(தலைவர்கள் மறைத்து விடுகிறார்கள்) ஈழத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் வேவ்வேறு தேசிய இனங்கள்.
//ஈழத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் வேவ்வேறு தேசிய இனங்கள்.//
உண்மைதான். ஆனால் எல்லோரும் மனிதர்கள்தானே. அந்த வகையில் யாரும் பேசலாம். இது தமிழ் பேசும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் பொருந்தும். ஒரு நாட்டில் பிறந்து ஒரு மொழி பேசும் மனிதர்களை சொந்த வீடுகளிலிருந்து ஓட விரட்டியவர்கள் புலிகள். எல்லா ஈழத் தமிழர்களுக்கும் அவர்கள்தான் தெய்வங்கள் என்பது ஆதிக்க சாதி இந்துவின் பேச்சு. இதில் நாணயமோ பிற இனத்தவர் மீது கரிசனமோ துளியும் இல்லை.
//ராஜீவுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனை//
மரண தண்டனை கொடுக்கும் தகுதியை புலிகளுக்கு வழங்கியது யார்? இந்தக் கட்டைப் பஞ்சாயத்து திமிரை தமிழகத்தில் கொண்டு வந்ததால்தால் புலிகள் வெறுத்து ஒதுக்கப் பட்டார்கள்.
// //ராஜீவுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனை//
மரண தண்டனை கொடுக்கும் தகுதியை புலிகளுக்கு வழங்கியது யார்?//
ஈழத் தமிழர்களை கொல்வதற்கு இந்திய ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கியது யார்?
This is pure LTTE propaganda without an iota of truth. IPKF was forced into a war by the LTTE. Indian soldiers did not go to SL to kill Tamils. Any way, LTTE bringing their gun culture to the shores of India spelled doom for them ultimately. Good for Srilanka Tamils that they dont have to live under fascists anymore.
//IPKF was forced into a war by the LTTE. //
ஹாஹா… யுத்தத்திற்கு புலிகள் காரணம். வன்புணர்ச்சிக்கு?
புலிகள் இந்திய ராணுவத்தை வன் புணர்ந்தனரா வித்தகன்?
http://www.tamilnation.org/intframe/india/warcrimes/index.htm
//”..the Indian Army came here, massacred innocent Tamil civilians, raped our women and plundered our valuables. The acronym IPKF will always stand for Indian People Killing Force where we are concerned. We will one day erect a memorial in the heart of Jaffna town, in the centre of Hospital Road, in memory of all the innocent civilians – ranging in age from the very old past 80 to young children massacred by the IPKF and to the women who were raped.” IPKF – Innocent People Killing Force, Dr. T. Somasekaram
“…as an Indian I feel ashamed that under the Indo Sri Lanka agreement, our forces are fighting with Tamils whom they went to protect…I believe that the Indian Government had betrayed its own culture and ethics…The guilt, therefore, rests entirely on those who sent them to do this dastardly business of fighting in Sri Lanka against our Tamil brothers and sisters…” India’s former Foreign Secretary, A.P.Venkateshwaran, speaking in London in April 1988//
ராஜீவின் கிரிமினல் யுத்தக் குற்றங்கள்
http://worldub.blogspot.com/2007/08/rajiv-gandhis-war-crimes-in-tamil-eelam.html
நண்பர் திரு.வித்தகன்,
//IPKF was forced into a war by the LTTE.//
அப்பட்டமான பொய். “Intervention in Sri Lanka: the I.P.K.F. experience retold” By Harkirat Singh என்ற புத்தகத்தில் எல்லாம் சொல்லப்பட்டுள்ளது. LTTE-IPKF போர் ஏற்பட்டதற்குக் காரணமே ஜெ.என்.தீட்சித் மற்றும் எம்.கே. நாராயணன் திரை மறைவில் நடத்திய செயல்கள் தான். மாற்றுக் கருத்து இல்லை.
வித்தகன், இலங்களை என்பது இந்தியாவை விட பலமடங்கு சிறிய நாடாயிருப்பினும் ராஜதந்திர ரீதியில் அவர்கள் இந்தியாவைவிட பலமடங்கு மேல். இந்தியாவின் பெரியண்ணன் தனத்தை தனக்கு சாதகமாக மாற்றி, அமைதி ஒப்பந்தத்தை அமலாக்கும் பொறுப்பை நைசாக இந்தியாவிடமே தள்ளிவிட்டு அதன் மூலம் இந்தியா LTTE முரண்பாட்டை தோற்றுவித்தது ஜெயவர்தனே அரசின் மாஸ்டர் ஸ்டிரோக், ஒரே கல்லில் பல மாங்காய். கொஞ்சமும் அறிவில்லாமல் இருவரும் வகையாக சிக்கி சின்னாபின்னமானதுதான் மிச்சம். இதில் ஜெயவர்தனே அரசு LTTEக்கு ஆயுதம் கொடுத்து, இந்திய இராணுவத்துக்கு தடவாளம் கொடுத்து, ச்சே…உண்மையில் இதைப்பற்றிய ஒரு திறந்த ஆய்வு தேவை. இதை அவசியம் படியுங்க்ள https://www.vinavu.com/2008/10/23/eelam1/
வித்தகன் good for Srilanka Tamils that they dont have to live under fascists anymore. என்று நீங்கள் கோபத்தில் சொல்கிறீர்கள். இப்போது நடக்கும இராஜபட்ச ஆட்சி என்ன ஜனநாயக ஆட்சியா? புலிகளிடம் பாசிசத்தன்மை இல்லை என்று நான் சொல்லவில்லை ஆனால் அது எத்தகைய பாசிசம்? ஒரு பேரினவாதத்தை பாசிசத்தை எதிர்த்து வளர்ந்தது. அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நீங்கள் இந்த பதிவை வாசிப்பது நலம் https://www.vinavu.com/2009/09/04/raya3/
வித்தகன்,
தமிழ்நாட்டில் ராஜீவின் மரணத்திற்குப்பின் ஈழ ஆதரவு குறைந்தது, சரி. ஆனால், இறுதிப்போரில் ஆதரவுக்குரல் தமிழ்நாட்டில் எழாததற்கு, அது மட்டும் தான் காரணமா? என்ன சொல்லவருகிறீர்கள்?
ரதி. ராஜீவ் கொலையால் புலிகள் மீது சாதாரணத் தமிழர்களுக்கு ஏற்பட்ட கசப்பும், இறுதிப்போர் புலிகளைக் குறிவைத்து இலங்கை ராணுவம் நடத்துகிறது என்ற எண்ணமும், அது சரிதான் என்கிற கருத்தும் தான் தமிழக மக்களை ஊமையாக்கி விட்டன. அதனால்தான் ஒரு சில தீக்குளிப்புகள், சில்லறை அரசியல்வாதிகளின் பல போராட்டங்கள், போரில் சாதாரண ஈழத் தமிழர்கள் அடைந்த துயரங்கள் எல்லாம் பரவலாகத் தெரிந்தும் காங்கிரசுக்கு மீண்டும் ஆட்சி வழங்கப் பட்டது. புலிகளின் தலைவர்கள் கொல்லப் பட்ட அன்று எக்குறையும் இன்றி சகஜ வாழ்வு தொடர்ந்தது. புலிகள் ராஜீவையும் பத்மனாபாவையும் அழிப்பதற்கு தமிழ் நாட்டுக்குள்ளேயே துப்பாக்கி கலாசாரத்தைக் கொண்டு வராமல் இருந்திருந்தால் அவர்களுக்கு பொது மக்கள் மத்தியில் அவப் பெயர் வந்திருக்காது. ஒன்று நினைவில் கொள்ளுங்கள். இந்திய அமைதிப் படையை வென்றதாக புலிகள் மார்தட்டிக் கொண்டதை எந்த இந்தியனும் ரசித்ததே கிடையாது. அப்போதிலிருந்தே ஈழமும் புலிகளும் வேற்று நாட்டவர் என்பது பெரும்பான்மைத் தமிழர்களின் மனதில் பதிந்து விட்ட எண்ணம். இணையத்தில் உணர்ச்சி வசப் படுபவர்களை நம்பி ஏமாறாதீர்கள். தமிழகத்தில் ஈழ ஆதரவு 80 சதம் இருக்கலாம். புலி ஆதரவு 20க்கும் கீழே தான் இருக்கும்.
வித்தகன்,
ராஜீவின் ஒரு மரணத்திற்காய் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் நிறையவே விலைகளை கொடுத்தாகிவிட்டது. இனிமேலும் இதைப்பற்றியெல்லாம் பேசி, விதண்டாவாதம் செய்து எங்களுக்கு போன எந்த உயிரும் திரும்பி வரப்போவதுமில்லை; இந்தியா சகுனியாட்டம் ஆடும் வரையில் எங்கள் உரிமைகளும் கிடைக்கப்போவதில்லை. புலிகளை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் தமிழ்நாட்டு தமிழர்களின் ஜனநாயக உரிமை. அதைப்பற்றியெல்லாம் நான் சொல்ல ஏதுமில்லை. புலிகளின் இழப்பை ராஜீவின் விடயத்தால் நீங்கள் எவ்வளவு தான் நியாப்படுத்தினாலும், புலிகளின் இழப்பு எங்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒன்றுதான். புலிகள் இல்லாத ஈழத்தமிழன் இன்று அரசியல் அநாதை தான்.
இணையத்தில் உணர்ச்சிவசப்படுபவர்களை நம்பி ஏமாற வேண்டாமா? நீங்கள் என்னைப்பற்றி ஏதோவொன்றை தீர்மானித்துவிட்டுத்தான் எழுதுவீர்கள் போலும். ஆனால், அது என்னவென்றுதான் எனக்கு புரியவில்லை, போகட்டும். தமிழ்நாட்டு சட்டசபையிலிருந்து இந்திய நாடாளுமன்றம் வரையில் இந்த அரசியல்வியாதிகள் ஈழத்தமிழர்கள் பால் அக்கறையுள்ளது போல் நீட்டி முழக்கி வில்லங்கத்துக்கு தெரியாத தமிழில் பேசி… இந்த …… ஜென்மங்களின் இம்சை தாங்கமுடியவில்லை. இவர்களை விட இணையத்தில் உணர்ச்சிவசப்படுபவர்கள் எவ்வளவோ மேல்.
Dear Mr. வித்தகன்,
உங்களுக்கும் ஒரு சில தமிழக தமிழர்களுக்கும் வேண்டுமானால் ராஜீவ் ஒரு மிகப்பெரிய நேசிக்கக் கூடிய தலைவராக இருக்கலாம். அதனால் அவருடைய இழப்பு உங்களுக்கு ஈடு செய்ய முடியாததாக இருக்கலாம். ஆனால் ஈழத் தந்தை செல்வாவின் கொள்கைக்கு எதிரான ஒரு ஒப்பந்தத்தை ஈழ மக்கள் மீது திணிக்க முயன்று, அதை பிற போராளிக் குழுக்களை ஏற்கச் செய்து, அதற்கு ஒத்து வராத விடுதலைப் புலிகளை பிற போராளிக் குழுக்களின் மூலம் அழிக்க நினைத்து, அது முடியாமல் பல்லாயிரக்கணக்கான தமிழ் உயிர்கள் இந்திய ராணுவத்தால் பலியாவதற்கு காரணமான ராஜீவ்காந்தி களை எடுக்கப்பட்டதற்கு ஈழத் தமிழர்கள் யாரும் வருத்தப்பட மாட்டார்கள் (RAWவிடம் இணைந்து அதற்கு உதவியவர்கள் உயர் மட்டத்தில் இருந்த இரு பார்ப்பனர்கள் – எம்.கே.நாராயணன் மற்றும் தீட்சித்). ஈழத் தமிழர்கள் மனநிலையில் ராஜீவ் மரணம் நியாயமானதுதான்… அதை இனி மேல் பேசிப் பயனில்லை.
//ராஜீவ் கொலையால் புலிகள் மீது சாதாரணத் தமிழர்களுக்கு ஏற்பட்ட கசப்பும், இறுதிப்போர் புலிகளைக் குறிவைத்து இலங்கை ராணுவம் நடத்துகிறது என்ற எண்ணமும், அது சரிதான் என்கிற கருத்தும் தான் தமிழக மக்களை ஊமையாக்கி விட்டன.//
அப்படி எனக்கு தோன்றவில்லை. ராஜீவ் கொலையை தவறு என்று என்னிடம் சொன்னவர்கள் இதுவரையில்லை (சில பார்ப்பனர்கள், ஆர் எஸ் எஸ்க்காரர்கள் விதிவிலக்கு).
ராஜீவுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனை புலிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்பது உண்மைதான். அதை புலிகள் செய்த விதம், நேரம் இப்படி பல விசயங்களில் அது சாதகமானதாக இல்லாமல் போய்விட்டது. இதுதான் இந்த விசயத்தில் புலிகளுக்கான விமர்சனம்.
ராசிவ் காந்தியை புலிகள் கொன்றதற்க்கு முக்கிய காரணம், பழிவாங்குவது அல்ல. (அதுவும் ஒரு துணை காரணியாக இருக்கலாம்). 199ஒஇல், இந்திய பிரதமர் வி.பி.சிங், இந்திய ‘அமைதி’ படையை திரும்பப் பெற்றார். 1991இல் மத்திய அரசு கவிழ்ந்து, பாரளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ppoடது. ராஜிவ் வெற்றி பெற்று மீண்டும், பிரதமரானால், இலங்கைக்கு மீண்டும் இந்திய படைகளை அனுப்புவர் என்ற (மிக தவறான) அனுமானம். இது தான் முக்கிய காரணம் என்று ஒரு யூகம். one angle for the motive for this assasination which cost LTTE and its supporters a lot. they lost their base in TN and India. a strategic mis-calculation due to poor intellegence gathering mechanism of LTTE then. Almost equal to the blunder in boycotting the 2006 SL parliamentary elections which paved way for Rajapakse to defeat the more moderate Ranil.
நண்பர் திரு.அதியமான்,
உங்களின் யூகம் வேடிக்கையாக உள்ளது. இந்திய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பிலேயே அது பழிவாங்கும் நடவடிக்கை என்று தான் கூறப்பட்டுள்ளது. மற்றபடி 2006 தேர்தலை புறக்கணித்தது மிகப்பெரிய தவறு தான்.
எங்களின் வலிகளைப் புரிந்து கொண்டு இங்கே பதில் எழுதிய அனைவருக்கும் என் நன்றிகள். அதியமான், உங்கள் இணைப்புக்களுக்கு நன்றி. இன்னும், இந்திய ராணுவம் ஈழத்தமிழர்களுக்கு செய்த அட்டூழியங்களின் இணைப்புகளையும் நீங்கள் கொடுத்திருக்கலாம். “a strategic mis-calculation” இதைத்தான் இப்போது இந்தியா ஈழம், மற்றும் ஈழத்தமிழர்கள் விடயத்தில் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ரதி ஏன் இன்னும் இங்கே பிடிவாதமாக எழுதிக்கொண்டிருகிரீர்கள் என்று தான் எங்களை போன்ற ஈழ தமிழர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. மீண்டும் சொல்கிறேன் நீங்கள் எவளவுதான் நடைமுறை யதார்த்தம் பற்றி எழுதினாலும் இவர்கள் ராஜீவ் கொலை என்ற ஒன்றை சுற்றியே அதை விவாதிப்பார்கள். இங்கு அவர்கள் அதைத்தான் இப்போதும் செய்து கொண்டு இருகிறார்கள். நடைமுறை யதார்த்தம் பற்றி எழுதுவது இருக்கட்டும் தோழி அதற்கு முதல் நாம் நடைமுறை நாடகங்கள் என்ன என்பதை கற்றுகொள்வது நல்லது. ( எனது தமிழில் பிழை இருந்தால் மனிக்கவும் )
நண்பர் கான்ப்ரோ. புலிகளைக் குறை சொன்னாலே ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பேசுபவர்கள் என்ற மூளைச் சலவை கருத்தை தயவு செய்து விட்டு விடுங்கள். புலி ஆதரவுக் குரல் கேட்கும் போதெல்லாம் ராஜீவ் கொலையை நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. புலிகளைப் புகழாமல், (நேரடியாகவோ மறைமுகமாகவோ) யார் வேண்டுமானாலும் எழுதுங்கள். அதன் பின் சாதாரணத் தமிழர்களைப் பற்றி மட்டும் பேசுவோம்.
நண்பர் அதியமான்
அதைத்தான் நானும் தோழி ரதி அவர்களிடம் வேண்டி நிற்கின்றேன். ஏனெனில் ஈழம் பற்றி பேசினால் புலிகள் பற்றியும் பேச வேண்டி வரும். புலிகள் பற்றி பேசினால் இங்கு வாக்குவாதம் தான் வரும். எனது கணிப்பின்படி இங்கு ஈழத்தமிழர் அவலம் பற்றி பேச ஒரு பாத்து வருடங்களாவது செல்லும். ஈழம் மயானமான பின் அதுபற்றி பேசி கொண்டிருக்கலாம்
நண்பர் திரு.வித்தகன்,
அதையே தான் நானும் சொல்கிறேன். ரதி அவர்கள் கட்டுரையில் எந்த இடத்திலும் புலிகளுக்கு ஆதரவாக எழுதியதாகத் தெரியவில்லை. பின்னர் எதற்காக ஈழத் தமிழர்களின் கஷ்டங்கள் பற்றி ஒருவர் சொல்லும் இடத்தில் பின்னூட்டமிடும் மற்றவர்கள் புலி அரசியலை பற்றி பேசுகிறார்கள்? இந்திய ராணுவத்தின் அட்டூழியங்களை மட்டும் பேசலாமே.
அப்படின்னா ஆதாரமில்லாமல் புலிகளை தரக்குறைவாகப் பேசினால் NO OBJECTION… (For example., Shanmugalingam.Ponnampalam சொன்னது மாதிரி Tamils were never raped by Indian Army. They were raped by Tigers and put the blamed on IPKF) ஆனால் அதை மறுத்து பின்னூட்டமிட்டால் (ஒரு சிலருக்கு அது புலிகளை ஆதரித்து பேசுவது போல் தெரியும்) மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் எனச் சொல்லி ஒரு OBJECTION.
நான் ராஜீவ் காந்தி ரசிகன் அல்ல. இந்திய அமைதிப்படை இலங்கை சென்றது தவறு என்று நினைப்பவன். அவர்களுக்கும் புலிகளுக்கும் மூண்ட போரில் மிகவும் வேதனைப் பட்டவனும் கூட. ஆனால் இந்த மண்ணிலேயே புலிகள் வன்முறைக் கலாசாரத்தைக் கொணர்ந்ததும், ராஜீவ் காந்தி மட்டும இதற்கு பலியாகவில்லை பதமாநாபாவும் மேலும் பதினான்கு பேரும் சேர்த்துதான், இது நமக்கு சரிவராது இவர்களோடு கூட்டு சேர்வது ஃபாசிசத்திற்குத் தரும் ஆதரவு என்று உணர்ந்து, பெரும்பான்மைத் தமிழர்களைப் போல, இனிமேல் இதில் தலையிடக் கூடாது என்று மனத்தால் ஒதுங்கியவன். இதற்கிடையில் உலகில் நான்காம் பெரிய ஆர்மியை தோற்கடித்துவிட்டோம் என்ற சுய தம்பட்டம் காதில் விழும் போது இன்னமும் தூர விலகி விட்டோம். தேவையானபோது திரும்ப வர முடியாத அளவு வெகு தூரம்….
வித்தகன் உங்கள் கருத்து பெரும்பாண்மை தமிழர்களுடைய கருத்து அல்ல. ராஜீவ் காந்தி கொலையை கருணாநிதியை தோற்கடித்து ஜெவை ஆட்சியில் அமர்த்தியவுடன் மறந்து விட்டனர். அமைதிப்படையின் தோல்வியைப்பற்றி யாரும் அலட்டவேயில்லை. எனவே இறுதிப்போருக்கும் குறிப்பிட்ட இந்த இரண்டு விடயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை…..
இருந்தாலும் தமிழக மக்களின் dispassionate approach விவாதிக்கப்படவேண்டிய ஒன்றுதான்… எந்த வகையிலென்றால்… இந்தியாவிலேயே மணிப்பூரிலும் காசுமீரிலும் ஈழத்தை ஒத்த நிலைமை பல ஆண்டுகளாக நீடித்திருக்கும் போது யாருக்கோ நடப்பது என அக்கறயற்றிருந்த தமிழன் இப்போது தனது தமிழனம் அழியும் போதும் அலட்டவில்லை …
மனிதன் கொஞ்ஞம் கொஞ்சமாக தனது சமூகத்தன்மையை இழந்து வருகின்றான் என்பதுதான் எனது கருத்து அதுதான் இதுபோன்ற நிலைமைகளை தோற்றுவிக்கின்றது. மற்ற காரணங்களெல்லாம் கொசுறு… தெருவில் ஒருவர் அடிபட்டு டிராபிக் ஜாம் ஆகும் போது உதவுபவர் முதல் கோலங்கள் சீரியலுக்கு நேராமாச்சு என புலம்புபவர் வரை பலவகை மனிதர்களை பார்க்க முடியும்… இது போன்ற பல உதாரணங்களை கொண்டு சமூக apathy பற்றி ஒரு ஆய்வு தேவை…
உங்கள் மேற்குறித்த கருத்துடன் என்னால் முழுமையாக ஒத்துப் போக முடியாவிட்டாலும் என்னை சிந்திக்கும் வகையில் எழுதியிருக்கிறீர்கள். நன்றி.
Thats right Mr.ஜார்ஜூ புஸ். வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கும் மனநிலையில் வேறுபாடு உள்ளது. பெரும்பான்மையான தமிழகத் தமிழர்கள் நாட்டால் இந்தியன், இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன் என்ற மனநிலையில் வாழ்பவர்கள். இந்த நிலையில் தமிழ் தேசியம் என்ற மனநிலைக்கு மறுபடி அவர்கள் வருவது என்பது சாத்தியம் ஆகுமா இல்லையா என்பதுதான் பிரச்சனைக்குரிய கேள்வி.
லெனின்.
அன்பு லெனின், தமிழ் தேசியம், இன்றைய உலகமயமாக்கல் சூழ்நிலைகளில் நிலைத்திருக்க முடியாத ஒரு அறிவியல்பூர்வமற்ற தத்துவம். தனித்தமிழ் தேசம் இருந்தால் மக்கள் பிரச்சனையெல்லாம் தீரும் என்பது ஒரு பெரிய மோசடியாகும். தவிர தமிழ்தேசியம் சரியென நீங்கள் ஏற்றுக்கொண்டால் பின் சிங்கள தேசிய வெறியையும் நியாயப்படுத்த வேண்டியிருக்கும். குறுகிய கால கிளர்ச்சி மனோபாவத்தை உண்டுசெய்வதை தவிர வேறொரு சாதனையையும் தமிழ் தேசியம் மட்டுமல் என்த குறுந்தேசிய அரசியலும் செய்ததில்லை செய்யவும் முடியாது. அதே நேரத்தில் ஈழப்பிரச்சனைக்கு தனிஈழம்தான் தீர்வு என்ற முடிவுக்கு வர நமக்கு தமிழ்தேசிய அரசியல் தேவையில்லை. ஒரு தேசிய இன அடக்குமுறை நிலவும் பொழுது பிரிந்து போவதுதான் சாத்தியமான ஒரே தீர்வு.
தமிழ்தேசியத்திற்கெதிராக நான் இந்திய தேசியத்தை வைக்கவில்லை, இந்தியா பல தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்பதுதான் என் கருத்து.
இதெயொட்டி நாம் இங்கே விவாதிப்பது ஒரு வகையில் பதிவின் நோக்கத்தை பாதிக்கும். எனவே விரைவில் பேசுவோம்.