privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்நூல் அறிமுகம்புத்தக கண்காட்சியில் பதிவர் கலையரசனின் நூல் 'ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா'

புத்தக கண்காட்சியில் பதிவர் கலையரசனின் நூல் ‘ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா’

-

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா
– கலையரசன், பக்கம்: 112, விலை ரூ.50.00

வினவில் தொடராக வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் கட்டுரை இப்போது அழகிய நூலாக வெளிவந்துள்ளது.

எண்ணெய் மணம் வீசும் அங்கோலா, நைஜீரியா…துள்ளிக் குதிக்கும் மீன் வளம் நிரம்பிய மேற்கு ஆப்பிரிக்கக் கடல், வேலையை வேகமாக முடிக்காத காரணத்தால் வெட்டப்பட்ட கறுப்பின மக்களின் கைகளில் ரப்பர்பால் வழியும் காங்கோ, கறுப்புத் தோலை உரித்து எடுக்கும் சூடானின் கட்டித் தங்கங்கள், உலகின் நாவுக்கு சாக்லேட்டின் மூலப்பொருளை வாரிவழங்கும் ஆப்பிரிக்காவின் ஐவரிகோஸ்ட், உலகுக்கே கோப்பியை ஏற்றுமதி செய்துவிட்டு எலும்பும் தோலுமாய் சாவை இறக்குமதி செய்யும் எத்தியோப்பியா…. இப்படி ஆப்பிரிக்காவின் இயற்கை வளங்களையும் அவைகளைக் கொள்ளையடித்து ஆப்பிரிக்க மக்களை பட்டினிச் சாவுக்கும், கொலை வெறிக்கும் ஆளாக்கும் இருண்ட ஐரோப்பாவை எளிய முறையில் நமக்கு அறிமுகம் செய்கிறது இந்நூல்.

இந்நூலாசிரியர் கலையரசன் தற்போது நெதர்லாந்தில் அகதியாக வாழும் ஈழத்தமிழராவார். புதிய வாசகர்களின் உலக அறிவிற்கும், தேடலுக்கும், முக்கியமாக உலக விசயங்களை அரசியல் ரீதியாக அணுகுவதற்கும் இந்நூல் பெரிதும் உதவும்.

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று  விற்பனை அரங்கு, எண் 64-65

மனிதவாழ்வை மறுக்கும் முதலாளித்துவக் கொடுங்கோன்மைக்கு
மார்க்சிய-லெனினியமே ஒரே மாற்று
மக்களிடம் கொண்டு செல்லும் கீழைக்காற்று

சென்னை புத்தகக் கண்காட்சி
(டிச.30 – சன.10 வரை, ஜார்ஜ் பள்ளி,பச்சையப்பன் கல்லூரி எதிரில்)

கீழைக்காற்று  விற்பனை அரங்கு, எண் 64-65

  • உரைவீச்சுக்களாய், இசைப்பாடல்களாய், அரசியல் போராட்டக்காட்சிப் பதிவுகளாய், ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் ஒலி,ஒளி வட்டுகள், பெரியார், அம்பேத்கார் படைப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அனைத்து ஆக்கங்களும் கீழைக்காற்றில் கிடைக்கும்.
  • வாருங்கள், நண்பர்களிடம் சொல்லுங்கள்!

vote-012

தொடர்புடைய பதிவுகள்

__________________________________________________________________________________________

  1. ஆப்பிரிக்காவின் மீதான ஏகாதிபத்திய சுரண்டலை ஒரு பறவைப்பார்வையில் கூர்மையாக உணர்த்திய தோழர் கலையரசனின் நூல் இணையமறியா மக்களுக்கு கொண்டு செல்லப்படும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

  2. நூலாசிரியருக்கு இது ஒரு தேடல், தேடலுக்கான உழைப்பு அதிகம். மக்களை சந்தித்து செய்தி திரட்டுதல் வரலாற்று ஆதாரங்களை கொடுப்பது, மேலும் இதை ஒட்டு மொத்த சமூகம் அறிய வேண்டிய அவா. மிகப் பெரியது தொடரட்டும் கலையரசனின் பணி. வாழ்த்துக்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க