Friday, May 14, 2021
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் போலீசு பாசறைகளாக பள்ளிக்கூடங்கள்! போராளிகளாக மாணவர்கள்!!

போலீசு பாசறைகளாக பள்ளிக்கூடங்கள்! போராளிகளாக மாணவர்கள்!!

-

போலீசு பாசறைகளாக பள்ளிக்கூடங்கள் ! போராளிகளாக மாணவர்கள் !!  ரிசாவில் போஸ்கோ நிறுவனத்திற்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தில் சிறுவர்கள் முன்னணியில் நிற்பதை ஒரிசா மாநில அரசு மட்டுமின்றி, பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அறிவுஜீவிகளும் கண்டித்து வருகின்றனர்.  அம்மாநிலத்தில் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ள நவீன் பட்நாயக் அரசு, போராடும் சிறுவர்களின் படிப்பு பாழாவதாகப் புலம்புவது நகைப்புக்குரிய முரண்.

சிறுவர்கள் ‘தவறான’ பாதைக்கு அழைத்துச் செல்லப்படுவது குறித்து ஆராய குழந்தை உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிசன் போராட்டங்கள் நடந்துவரும் பகுதிக்கு தனது அதிகாரிகளை அனுப்பி வைத்தது.  அந்த அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம், “குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வையுங்கள்சு என அறிவுறுத்தியபொழுது, “நாங்கள் எங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம்; அதற்கு முன்னால் பள்ளிக்கூடங்களிலிருந்து போலீசாரை வெளியேற்றுங்கள்சு எனப் பதிலளித்து, போராட்டக்காரர்கள் அதிகாரிகளுக்கு நிலைமையைப் புரிய வைத்தார்கள்.

போஸ்கோவிற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்துவரும் திங்கியா, கோவிந்தபூர் பகுதிகளில் உள்ள பள்ளிகள் இன்று போலீசு பாசறைகளாக மாற்றப்பட்டுள்ளன.  “எங்கள் பள்ளிக்கூடத்திலுள்ள ஆறு வகுப்பறைகளில் நான்கை போலீசு ஆக்கிரமித்திருக்கும்பொழுது, எங்களால் எப்படி பள்ளிக்கூடத்தை நடத்த முடியும்? எனக் கேட்கிறார், பாலியா நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்.

“அவர்கள் எங்களது பெற்றோரை நோக்கித் துப்பாக்கியைத் திருப்பும் அதேசமயம், நாங்கள் வகுப்பறைகளில் உட்கார்ந்திருக்க விரும்புகிறார்கள் என ஒரிசா அரசின் குரூர புத்தியை நையாண்டி செய்கிறான், ஒரு மாணவன்.

ஆங்கிலேய காலனிய ஆட்சியில் போலீசார் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தேடிவந்த பொழுது, பாஜி ரௌத் என்ற 13 வயது படகோட்டும் சிறுவன், அப்போலீசாரை படகில் ஏற்றிச் செல்ல மறுத்ததற்காகச் சுட்டுக் கொல்லப்பட்டு தியாகியானான்.  “ஒரிசாவின் தேசிய வீரனாகக் கொண்டாடப்படும் பாஜி ரௌத்தின் கதையை எங்களுக்குக் கூறி, அச்சிறுவனைப் போல நாட்டைக் காக்க வேண்டும் எனப் போதிக்கிறார்கள்; அதேசமயம், நாங்கள் எங்களது கிராமங்களை போஸ்கோவிடமிருந்து காப்பாற்ற போராடத் துணிந்தால், எங்களை மோசமாக நடத்துகிறார்கள் என அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறான், 10 வயதான ராகேஷ் பர்தன்.

“நாங்கள் எங்கள் வயல்களையும் கிராமத்தையும் இழந்துவிட்டால், இங்கே பள்ளிக்கூடமே இருக்காது என்பது அவர்களுக்குத் தெரியும்சு என 14 வயது சிறுவனான பீஷ்வாம்பர் மோகந்தி பதில் அளிக்கிறான்.

பள்ளிக்கூட மாணவர்கள் இப்போராட்டத்தில் முன்னணியில் நிற்பது பற்றி ஆசிரியர்கள் என்ன கருதுகிறார்கள்?  “அவர்கள் தமது பெற்றோர்கள் மீது போலீசார் ரப்பர் குண்டுகளைக் கொண்டு தாக்குவதைப் பார்க்கிறார்கள்; அவர்கள் தமது வெற்லை கொடிக்கால் வயல்களும் வீடுகளும் போலீசாரால் நாசப்படுத்தப்படுவதைப் பார்க்கிறார்கள்; இவையெல்லாம் ஒரிசாவின் வளர்ச்சிக்காகச் செய்யப்படும் நல்ல காரியங்களென அரசாங்கம் கூறுகிறது.  இதன் பிறகு அவர்களால் போராடாமல் வேறெப்படி இருக்கமுடியும்?ச எனச் சிறுவர்கள் பக்கமிருக்கும் நியாயத்தை எடுத்துக் கூறுகிறார், ஒரு ஆசிரியர்.

பள்ளிக்கூடங்கள் போலீசு பாசறைகளாக மாற்றப்படும்பொழுது, மாணவர்கள் போராளிகளாக மாறுவது தவிர்க்க முடியாதது.  அறிவுக்கண்ணைத் திறப்பதுதான் கல்வியின் நோக்கமெனில், இப்பழங்குடியினச் சிறுவர்கள் வெறும் ஏட்டுக் கல்வியை மட்டுமல்ல, வர்க்கப் போராட்டக் கல்வியையும் கற்றுத் தேறியிருக்கிறார்கள் என்பதை அவர்களின் பதில்களே நமக்கு உணர்த்திவிடுகின்றன.

______________________________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2011

________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

 1. ஆஹா…அபாரம்….பிஞ்சுகளுக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சியும், வர்க்க உணர்வும் புல்லரிக்க வைக்கின்றது. வெல்லட்டும் அவர்களது போராட்டம்!!

 2. 4. அந்த “பெல்ட் பாமிற்கு” 9V பேட்டரி வாங்கித் தந்தேன் என்பதின் மூலமே நான் அந்த “பெல்ட் பாம்” ஐ செய்தேன் என வழக்குரைத்தனர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். அதற்க்கு வசதியாக என்னுடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டய படிப்பும் இவர்களின் கதைக்கு கருவானது. ஆனால் வழக்கின் எந்தவொரு இடத்திலும் நான் வங்கித் தந்த 9V பேட்டரி தான் பெல்ட் பாம் வெடிக்கப்பயன் படுத்தப் பட்டது என்பது நிரூபிக்கப் படவில்லை.
  5. உண்மை என்னவெனில் நான் 9V பேட்டரியை வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவுமில்லை. ஆனால் நான் 9V பேட்டரி வாங்கினேன் என்பதற்கு வழக்கில் உள்ள ஒரே ஆதாரம், ஒரு பெட்டி கடைக்காரரின் சாட்சி தான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று தடா நீதிமன்றத்தில் கூறிய நீதிபதி பிறகு என்ன காரணத்தினாலோ இந்த சாட்சியை ஏற்றுக்கொண்டுவிட்டார். நான் வாங்காத பேட்டரியை வாங்கினேன் என்று ஒருவர் மூலம் சொல்லவைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.
  6. தடா சட்டத்தில் இவ்வழக்கு விசாரிக்கப் பட்டதே தவறு என்று உச்சநீதி மன்றம் இடித்துரைத்தது. காரணம் இந்த கொலை குற்றவாளிகளுக்கு கொலை செய்யப்பட்டவர் தவிர யாதொருவரையும் அச்சுறுத்தவோ, கொல்லவதோ நோக்கம் இருந்திருக்கவில்லை என்று எடுத்துரைத்தது.

  அப்படி இருக்கும் வேளையில், எங்களை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிமைகள் மறுக்கப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலம் மட்டும் எப்படி செல்லுபடியாகும்?

  மேலும் நம் நாட்டில் வாக்குமூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடுமையான சித்திரவதை, மிரட்டல், அடி உதைக்கு பயந்து தான் பல வாக்கு மூலங்கள் ரத்தத்தால் கையழுத்தாகின்றன. பொதுவாக அப்படிப் பெறப் படும் வாக்கு மூலங்களை மட்டுமே வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பினைத் தருவது கிடையாது, ஆனால் என் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அவ்வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது.

  1. ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த திரு.தியாகராஜன் கேரளா மாநிலத்தில் 1993 ல் நடைபெற்ற அருட்சகோதரி.அபயா கொலைவழக்கை “தற்கொலை” என முடிக்க அழுத்தம் கொடுத்தவர் என்பதும் அவரது முறைகேட்டை எதிர்த்து அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு.தாமஸ் வர்கீஸ் என்பவர் தனது பதவியை துறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிறகு இது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று திரும்பியது. எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நடுவர் அவர்கள் 23-06-2000 அன்று அளித்த தீர்ப்பில் கடுமையான கண்டனங்களை வாங்கியவர் இந்த தியாகராஜன். இவர் என்னிடம் வாங்கிய வாக்குமூலங்கள் ஏன் உண்மையாக இருக்கவேண்டும்? யாருக்காகவோ வழக்கை எப்படியும் வளைப்பவர்கள் தானே இவர்கள்..
  2. தடா சட்டத்தில், சிறப்பு தனி நீதி மன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப் பட்டதால், பெரும்பான்மையான உரிமைகள் எனக்கு மறுக்கப் பட்டன, அதுவே என் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற இயலாமற் செய்துவிட்டது. பொதுவாக ஒரு மாவட்ட நீதி மன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு, உயர் நீதி மன்றம், பிறகு உச்ச நீதி மன்றம் என்று இரு முறை மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. இந்த செயல்பாடு ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மறு இடத்தில் நீதி சரியாக கிடைக்க உதவி வந்தது. ஆனால் எங்கள் விஷயத்தில் தடா கொடுங்கோல் வழக்கு என்பதால், உயர்நீதி மன்றம் செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டு இரண்டில் ஒரு மன்றத்தின் கதவு அடைப்பட்டு போனது. இப்பொழுது தடா நடைமுறை தவறு என்று அந்த சட்டமே நம் நாட்டில் வாபஸ் பெறப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட என் போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும், எப்பொழுது கிடைக்கும்.

 3. 1. தூக்குக் கொட்டடியிலிருந்து நான் கேட்பது

  உயிர் பிச்சையல்ல ! மறுக்கப் பட்ட நீதி !!

  பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே,

  வணக்கம். நான், அ.ஞா.பேரறிவாளன், இராசீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவால் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள்முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன் என்பதாலும், அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.

  தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன்

  என்பதால் மனித நேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின் அடிப்படையிலும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்தை ஆதரித்து அதற்காக தமிழக மண்ணில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற காரணத்தால் என்மீது தவறான குற்றச்சாட்டு புனையப்பட்டது என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

  19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களை யெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காகத் தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப் பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.

  1. திரு.இராஜீவ் அவர்களின் கொலையை நியாப்படுத்துவதல்ல இக்கடிதத்தின் நோக்கம், மாறாக இக்குற்றத்திற்கு எவ்வித தொடர்புமில்லாத நானும், என்னை போன்றவர்களும் மரணதண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று எடுத்துரைப்பது மட்டுமே.
  2. திரு.ராஜீவ் கொலை விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி 11-06-1991 அன்று விசாரனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு தூக்கு மரத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறேன்.
  3. அக்கொலைக்கு பயன்பட்ட “பெல்ட் பாம்” செய்வதற்கு நான் உதவினேன் என்பதே என் தண்டனைக்கு வழிவகுத்தக் குற்றச்சாட்டு. இதற்க்கு ஏதுவாக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பப்பட்டது. இந்தியா டுடே நாளிதழும் நான் எப்படி வெடிகுண்டு செய்தேன் என்று பொய்யாக ஒரு செய்முறை விளக்கம் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், “சிபிஐ யால் இறுதிவரை கண்டுப்பிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்று, அந்த “பெல்ட் பாம்” ஐ செய்தவர் யார் என்பதே” என்று இந்த வழக்கை விசாரித்த தலைமை புலனாய்வு அதிகாரி திரு, இரகோத்தமன் தான் ஓய்வு பெற்றவுடன் எழுதிய நூலிலும், பல்வேறு பேட்டிகளிலும் கூறியுள்ளார். ஆக விடைத் தெரியா கேள்விக்கு விடையாக நான் பலியிடப் படவேண்டுமா ?

  • நெஞ்சமே பதறுகிறது..!!! பேரறிவாளா!! உனக்குமா இந்த அநீதி! உனக்கான நீதியை எடுத்துரைக்க இங்கு ஒரு தேசப்பற்றாளர் கூட இல்லையே!

 4. ஒரிசா உழைக்கும் மக்களின் போராட்டம் வெல்லட்டும்.
  ///அம்மாநிலத்தில் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ள நவீன் பட்நாயக் அரசு, போராடும் சிறுவர்களின் படிப்பு பாழாவதாகப் புலம்புவது நகைப்புக்குரிய முரண்.///
  ஆளும் வர்க்கங்களின் வேலையே இதுதானே. போஸ்கோ ஆலை விவகாரத்தினால் படிக்க வேண்டிய சிறுவர்கள் போராட காரணமாக இருப்பதே அந்த மாநில அரசு தானே. ஆனால் சிறுவர்களின் படிப்பு கெடுவதாக நீலிக்கண்ணீர் விடுகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க