Sunday, September 24, 2023
முகப்புஅரசியல்ஊடகம்அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0

அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0

-

அண்ணா ஹசாரே

ங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் தோல்வி மேல் தோல்வி பெற்று இந்திய அணி சாதனை படைத்து வரும் வேளையில் இந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்கள் அதாவது படித்த நடுத்தர வர்க்க கனவான்கள் இலண்டனில் நடந்த இளைஞர்களின் கலகத்தைக் கூட கண்டு கொள்ளாமல் இருந்த நேரம். இந்திய அணி தோல்வியால் டி.ஆர்.பி ரேட்டிங் சரிந்து தொலைக்காட்சிகளின்  விளம்பரங்களும் குறைந்து போன நிலை. கிரிக்கெட் பால் போனால் என்ன இருக்கவே இருக்கிறது லோக் பால் எனும் பந்து. வந்தார் அண்ணா ஹாசாரே. அவர் அடிக்காத சிக்சரை அடித்ததாக நம்ப வைக்க ஊடகங்களும்  அணிவகுத்தன. சின்னத்திரையில் கோக் குடித்தும், லேஸ் கடித்தும் காட்சிகளை மலிவான உணர்ச்சிகளாக உசுப்பேற்றிக் கொள்ளும் மேன்மக்களும் ஆட்டத்திற்கு தயாரானார்கள். இதோ ஆரம்பித்து விட்டது ஜோக்பால் வெர்ஷன் 2.0

அரசு கொண்டு வர இருக்கும் லோக்பாலுக்கு பல் இல்லை என்று அவர்கள்  உருவாக்கியிருக்கும் ஜன லோக்பாலை வலியுறுத்தி அண்ணா அணியினர் காலவறையற்ற உண்ணாவிரதத்தை அறிவித்தார்கள். வழக்கமாக இந்தியாவில் குறிப்பாக பெருநகரங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்றால் ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் சமீபத்திய ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வருகின்றது. தாராளமயமாக்கம் சூடுபிடித்த இந்த ஆண்டுகளில் மக்களின் அரசியல் நடவடிக்கைகளை இல்லாமல் செய்ய வேண்டுமென்றே இந்த நிபந்தனைகளை அரசும், நீதிமன்றங்களும் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுத்தி வந்தன.

சென்னையில் கூட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்திய இடங்களில் எல்லாம் இப்போது நடத்தக் முடியாது. சுவர் எழுத்து எழுத தடை, சுவரொட்டி ஒட்ட தடை, முக்கிய சாலைகளில் கூட்டம் நடத்த, ஊர்வலம் நடத்தத் தடை என்பதெல்லாம் அரசியல் கட்சிகளில் இருக்கும் அனைவரும் அறிந்த விசயம். இந்தகைய அடக்குமுறைகளை ஒழுங்கு என்ற பெயரில் கொண்டு வந்த போதும், அப்படி கொண்டு வரவேண்டுமென்று குத்தாட்டம் போட்ட மேட்டுக்குடி வர்க்கம்தான் இப்போது அண்ணா போராட்டத்திற்கு தடை என்றதும் சீறி எழுகிறது.

டிராபிக் ராமசாமி முதல் இப்போது அண்ணாவின் போராட்டத்தில் மெழுகுவர்த்தியை ஏந்தும் முன்னாள் ஐ.ஏ.எஸ் பெரிசுகள் வரை இந்தகைய ‘ஒழுங்கைக்’ கொண்டு வரவேண்டுமென்று நீதிமன்றங்களில் வழக்கும் தொடுத்திருக்கிறார்கள். இந்து பத்திரிகையில் வாசகர் கடிதம் எழுதியும் பொங்கியிருக்கிறார்கள். அத்தகைய பெரிசு அம்பிகள்தான் இப்போது மீண்டும் எமர்ஜென்சி வந்து விட்டது என்று துள்ளுகிறார்கள்.

சமச்சீர் கல்விக்காக எமது தோழர்கள் தமிழகமெங்கும் போராட்டம் நடத்திய போது பல இடங்களில் போலிஸ் தடியடி, சிறை, வழக்குகளை சந்தித்துதான் நடத்தியிருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறையில் சில, பல நாட்கள் இருந்திருக்கிறார்கள். அதில் பதினைந்து வயது மாணவனும் உண்டு. இது இந்தியாவெங்கும் அன்றாடம் நடக்கும் நிகழ்வு. எந்தப் போராட்டமும் இத்தகைய அடக்குமுறைகளை சந்தித்தே நடைபெறுகிறது. அப்போதெல்லாம் ஜனநாயகம் காக்கப்படுவதாக ராகம் பாடும் அம்பிகள் இப்போது மட்டும் அதுவும் செல்லமாக அண்ணா போராட்டம் சீண்டப்படும் போது துள்ளுவது காணச்சகிக்க வில்லையே?

அண்ணாவின் வீரகாவியமாக சித்தரிக்கப்படும் அந்த காலவறையற்ற உண்ணாவிரதம் நடத்துவதற்கு டெல்லி காவல்துறை விதித்த 22 நிபந்தனைகளில் வெறும் ஆறு மட்டும் அண்ணா அணியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. 5000 பேர்களுக்கு மேல் கூடக்கூடாது, மூன்று நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தக்கூடாது என்ற அந்த நிபந்தனைகளை டெல்லி போலீசு புதிதாக ஒன்றும் உருவாக்கவில்லை. இவையெல்லாம் தில்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உருவாக்கியிருக்கும் வழிகாட்டுதல்கள்தான். அதன் படிதான் நிபந்தனைகளை விதித்திருப்பதாக டெல்லி போலீசு சத்தியமடிக்காத குறையாக தெரிவித்திருக்கிறது.

இத்தகைய நிபந்தனைகள் மட்டுமல்ல இன்னும் பல்வேறு நிபந்தனைகளெல்லாம் இந்தியாவெங்கும் அன்றாடம் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. காஷ்மீர், வடகிழக்கு போன்ற போராட்ட மாநிலங்களில் இது இன்னும் காட்டு தர்பாராக இருக்கும். எனில் இத்தகைய நீதிமன்ற, அரசு நிபந்தனைகள், மக்களின் போராடும் உரிமையை ரத்து செய்கிறது, இவற்றை இந்தியாவெங்கும் ரத்து செய்ய வேண்டும் என்று அண்ணா அம்பிகள் அணி கோரவில்லை. சொல்லப்போனால் அத்தகைய நிபந்தனைகள் இன்னும் அதிகம் வேண்டுமென்பதுதான் அண்ணாவின் பின் இருக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தின் நிலை.

அண்ணாவிற்காக சென்னையில் சீன் போடும் அருணா சாய்ராம், அனிதா ராம், சுவர்ணமால்யா போன்ற கருநாடக, பரதநாட்டிய தாரகைகளிடம் அண்ணா சாலையில் தொழிலார்களின் ஊர்வலங்களை தடை செய்யலாமா என்று கேட்டுப் பாருங்கள்; கண்டிப்பாக தடை செய்ய வேண்டும் என்று ஒரே ஸ்வரத்தில் பாடுவார்கள், ஆடுவார்கள்! ஆனால் அவர்களது கோரிக்கைதான் ஏற்கனவே அமலில் இருக்கிறது என்பதால் இது ஒன்றும் பிரச்சினை அல்ல.

ஐரோம் ஷர்மிளா காலவறையற்ற உண்ணாவிரதம் இருக்கும் போது போலீசு வலுக்கட்டாயமாக அவரை தூக்கிச் சென்று மருத்துவ மனையில் வைத்து உணவையும், மருந்தையும் வலுக்கட்டாயமாக புகட்டிவிடும். இது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் அண்ணாவின் போராட்டத்திற்கு மட்டும் போலிசு பவ்யமாக நிபந்தனைகளை விதிக்கிறது. தாள் பணிந்து பேசுகிறது. அதை அண்ணா ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்ன போது பவ்யமாக கைது செய்கிறது. மாஜிஸ்ரேட் கூட அண்ணாவின் இடத்திற்கு வந்து பவ்யமாக விசாரிக்கிறார். பின்னர் நீதிமன்றக் காவல் என்றதும் சிறையில் உண்ணாவிரதத்தை நடத்துகிறார். இரவே விடுதலை என்றதும் சிறையை விட்டு அகல மறுக்கிறார்.

இதுவே மற்றவர்களென்றால் இப்படி எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை. போராட்டங்களுக்காக நீதிமன்றக் காவலில் வைக்கப்படும் எவரும் அன்றிரவே விடுதலை செய்யப்பட்டதாக சரித்திரம் இல்லை. அப்படி விடுதலை செய்யப்பட்டாலும் யாரும் சிறையிலேயே தங்குவேன் என்று அடம்பிடிக்க முடியாது. குண்டு கட்டாக இழுத்து வந்து வெளியே தூக்கி எறிவார்கள். ஆக அண்ணா ஹசாரேவுக்காக போலீசு, நீதிமன்றம், சிறை எல்லாம் அடிபணிந்து சேவகம் செய்கிறது. இந்த இலட்சணத்தில் இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று அண்ணா அறிவித்திருப்பதை என்ன சொல்ல? முருகா, முருகா என்று வயிற்றிலும் வாயிலும் அடித்து அழவேண்டியதுதான்.

அரசு கொண்டு வர இருக்கும் லோக்பால் மசோதா தற்போது  பாராளுமன்ற நிலைக்குழு முன் இருக்கிறது. இத்தகைய முறைகளில் பாராளுமன்றம்தான் இதை நிறைவேற்ற வேண்டும், மாறாக பாராளுமன்றத்திற்கு வெளியே சிலர் டெண்டு அடித்து போராட்டம் நடத்தி கொண்டு வருவது பாராளுமன்ற ஜனநாயகத்தை மறுப்பதாகும் என்று பிரதமர் மன்மோகன் உட்பட பல காங் அரசு ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

பாராளுமன்றத்திற்கு தெரியாமல் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கைநாட்டு இட்டது முதலான இட்டதுகளில் இருந்தே பாராளுமன்றத்திற்கு இறையாண்மையோ, புனிதமோ, உரிமையோ ஒரு எழவும் கிடையாது என்பது ஊரறிந்த விசயம். ஆனால் இதையெல்லாம் அண்ண அணி கூறவில்லை. நாங்கள்தான் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். ஆக பாராளுமன்றத்தின் பல் எப்போதோ பிடுங்கப்பட்டு விட்டது என்பதும், இந்திய அரசும் இப்போது அமெரிக்காவின் அடிமையாகி விட்ட நிலையில் அது குறித்தெல்லாம் அண்ணா ஹசாரே அணி கவலைப்படவில்லை. அவர்கள் கவலை எல்லாம் அந்த லோக்பாலை தூக்கிவிட்டு இவர்களது ஜன லோக்பாலை கொண்டு வரவேண்டும் என்பதுதான்.

அமைப்பு முறை என்ற முறையில் இந்திய அரசு அமல்படுத்தி வரும் தனியார் மயம்தான் ஊழலின் ஊற்று மூலம் என்பதை மறுத்து அந்த தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஊழலை மட்டும் ஒழிக்க வேண்டுமென்று பொத்தாம் பொதுவான முழக்கத்தோடு அண்ணா அணி நடத்துவது ஒரு பச்சையான நாடகமே.

மேலும் அண்ணா ஹசாரே அணி உருவாக்கியிருக்கும் ஜன் லோக்பாலை காங்கிரசு மட்டுமல்ல, பா.ஜ.க, கம்யூனிஸ்டுகள் உட்பட எந்தக் கட்சியும் இதுவரை ஆதரிக்கவில்லை. எனில் எல்லா கட்சிகளையும் எதிர்த்து அண்ணா அணி போராடியிருக்க வேண்டும். அப்படி போராடமல் இருப்பதற்கு என்ன காரணம்? “நீ போராடுற மாதிரி ஆடு, நான் ஆதரிக்கிற மாறி நடிக்கிறேன்” என்று எதிர்க்கட்சிகளும் இந்த நாடகத்தை தெரிந்தே நடத்துகின்றன. அண்ணாவின் ஜன் லோக்பாலை பா.ஜ.க கட்சி ஏற்காத நிலையில் அதன் உறுப்பினர் வருண் காந்தி அதை தனிநபர் மசோதாவாக பாரளுமன்றத்தில் எழுப்புவேன் என்று கூறியிருக்கிறார். இது நாடகம் என்பதற்கு இது ஒன்றே போதும்.

அடுத்து சமீபத்திய பெரும் ஊழலான 2 ஜியை எடுத்துக் கொள்வோம். குற்றவாளி ராசா எடுத்து வைத்த வாதப்படியும், உண்மைகளின் படியும் பிரதமர் மன்மோகன் சிங்கையே இப்போது கைது செய்திருக்க வேண்டும். அவரையும், ப.சிதம்பரம் உள்ளிட்ட அமைச்சர்களையும், முன்னர் ஆட்சியில் இருந்த பா.ஜ.கவின் அமைச்சர்களையும் கைது செய்ய வலுவான முகாந்திரம் உள்ள நிலையில் இப்படி எந்தக் கோரிக்கையையும் எழுப்பாமல் பொத்தாம் பொதுவாக ஊழல் எதிர்ப்பு என்று பேசுவது யாரை ஏமாற்ற?

காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல் என்று ஊழலின் குறிப்பான விசயங்களைப் பற்றி எதுவும் பேசாமல், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தை கலைக்கவே அண்ணாவின் காமடி நாடகம் பயன்படுகிறது. அது தெரிந்தே காங் அரசும் அண்ணாவை எதிர்ப்பது போல எதிர்த்து அணைப்பது போல அணைத்து இந்த ஆட்டத்தை தொடர்கிறது.

ஆனால் இந்த ஆட்டத்தில் தனது தராதரத்தை மறந்து அண்ணா கோஷ்டி அதிகம் ஹீரோயிசம் போட நினைப்பதுதான் காங்கிரசு அரசின் பிரச்சினை. இந்த ஆட்டத்தின் மூல நோக்கத்தில் இருவருக்கும் உடன்பாடு இருந்தாலும் உடனடி நற்பெயர் யாருக்கு என்பதில்தான் தற்போதைய காமடி சண்டை எழுந்திருக்கிறது.

ஊடகங்கள் அனைத்தும் ஒற்றுமையாக இந்த நாடகத்தை மாபெரும் வீரக்காவியமாக சித்தரிக்கின்றன. இந்தியா முழுவதும் 20 நகரங்களில் மக்கள் எழுச்சி என்றெல்லாம் தொடர்ந்து உசுப்பேற்றுகிறார்கள். எங்கும் காமராவின் எல்லைகளைத் தாண்டி கூட்டம் இல்லை. இருக்கும் கூட்டமும் அரசியல் என்றால் என்ன என்று அ-னா, ஆவன்னா கூட தெரியாத கனவான்கள் கூட்டம். அதிலும் டெல்லி திகார் சிறைக்கு கார்களில் வரும் மேன்மக்கள் ஒரு கி.மீட்டர் தொலைவில் காரை நிறுத்தி விட்டு நடந்து வந்து சிறை முன்பு கூடுகிறார்களாம். இத்தகைய மாபெரும் தியாகங்களை வைத்துத்தான் இதை இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று தொடர்ந்து ஓதி நம்மை துன்புறுத்துகிறார்கள்.

42 வருடங்களுக்கு முன்னர் சி.என் அண்ணாதுரை காலமான பிறகு தமிழகம் தற்போது இரண்டாவது அண்ணாவை கண்டெடுத்திருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா குதூகலிக்கிறது. சில நூறு சேட்டுபையன்கள் தோற்றத்தில் இருக்கும் அம்பிகளின் கூச்சலை வைத்து திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்துவது அதன் நோக்கம். அதனால்தான் எந்த இந்தி மொழியை எதிர்த்து தமிழகம் போராடியதோ அந்த இந்தி மொழி பேசும் ஒரு தலைவரை தமிழகம் ஏற்றிருப்பதாகவும் அந்த நாளிதழ் விசமத்தனமாக பொய்யுரைக்கிறது.

அண்ணா ஹசாரேவின் காந்திய வேடங்களை பலர் தோலுரித்திருக்கிறார்கள். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்டது, இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட் நிதியில் கையாடல் செய்தது, அதை நீதிபதி பி.பி.சாவந்த் உறுதி செய்தது, அண்ணா ஹசாரேவின் கிராமமான ராலேகாவ் சித்தியில் நாட்டாமையாக ஆட்டம் போட்டது, குடித்தவரை தூணில் கட்டி அடிப்பது, அசைவ உணவை கிராமத்தில் தடை செய்தது, கேபிள் டி.வியை முடக்கியிருப்பது வரை பல வண்டவாளங்கள் அண்ணா ஒரு நிலபிரபுத்துவ நாட்டாமை என்பதை தெரிவிக்கின்றன.

ஊடகங்களின் கவரேஜ்ஜுக்கு பொருத்தமாக தனது உண்ணா விரதத்தின் தேதியையெல்லாம் தள்ளிவைக்கும் இந்த விளம்பர மோகியின் பலவீனத்தை புரிந்து கொண்டு ஊடகங்களும் அவரை மாபெரும் போராளியாக சித்தரிக்கின்றன. குறைந்தபட்சம் நமது தங்கபாலு அளவுக்கு கூட அறிவில்லாத இந்த காமடியனை ஊடகங்கள் ஜாக்கி வைத்து தூக்க தூக்க அவரும் தன்னை ஒரு 70 எம்.எம் ஹீரோவாக கருதிக் கொள்ள நாட்டு மக்கள் இந்த நாடகத்தை பார்த்து தொலைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை.

புரட்சிகரமான முழக்கங்களின் மூலம் மக்களை திரட்டி அவர்களது அரசியலை காயடிப்பதை குறிக்கோளாக வைத்து இயங்கும் ஏகாதிபத்தியங்களின் ஆசி பெற்ற தன்னார்வக் குழுக்கள் அண்ணாவின் நாடகத்தை பயன்படுத்திக் கொள்கின்றன. இவர்கள்தான் ‘இந்தியா’வெங்கும் மேன்மக்களை திரட்டி ஏதோ இந்தியாவே போராடுவது போன்ற சித்திரத்தை உருவாக்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற இந்துத்வ இயக்கங்களும் அண்ணாவின் மூலம் கல்லா கட்டலாம் என்று மனப்பால் குடிக்கின்றன. ராம்தேவ், டபுள் ஸ்ரீ ரவி சங்கர் போன்ற கார்ப்பரேட் சாமியார்களும் தங்களது சாம்ராஜ்ஜியத்தின் நலன் கருதி இந்த நாடகத்தில் முக்கிய பாத்திரமாற்ற விழைகிறார்கள். இந்த வகையில் ஏராளமான உள்குத்துகள் நடந்தாலும் அது நமது கவனத்திற்கு வராது.

ராசா, கல்மாடி இருக்கும் திகார் சிறையில் அண்ணா அடைக்கப்பட்டதையே ஒரு மாபெரும் அநீதியாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. திருடர்களுடன் சிலுவையில் அறையப்பட்ட இயேசு நாதர் கூட இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்ததில்லை. கைது என்றால் சிறையில்தான் அடைப்பார்கள். சிறை என்றால் குற்றவாளிகள், மற்றும் குற்றம் சுமத்தப் பட்டோர்தான் இருப்பார்கள். சிறையிலும் கூட தீண்டாமையுடன் கூடிய 5 நட்சத்திர தரத்தை எதிர்பார்க்கும் இவர்கள்தான் ஊழலை எதிர்க்க போகிறார்கள் என்றால் எருமை மாடு கூட வெட்கப்படும்.

பேரறிவாளன் 9வால்ட் பேட்டரியை வாங்கிக் கொடுத்தார் என்று சொல்லி அதுவும் ஒரு பொய்க்குற்றச்சாட்டு என்றாலும் அதற்கே தூக்குத் தண்டனை என்று தீர்ப்பளித்த  நாட்டில்தான் நோகாமல் மீடியா டார்லிங்காக இருக்கும் அண்ணாவிற்காக அரசு செய்யும் காமடிகளை மாபெரும் அடக்குமுறை என்று சித்தரிக்கிறார்கள். அந்த வகையில் அண்ணாவுக்கு கிடைக்கும் மலிவான கவரேஜ் அனைத்தும் இந்த நாட்டின் மக்கள் உரிமைகளை காவு கேட்பதற்கு பயன்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

2ஜி ஊழலில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள், அரசு அனைவரும் குற்றவாளிகளாக தெரியவரும் நேரத்தில் அதை மறைப்பதற்கே அண்ணாவின் நாடகம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. அந்த வகையில் அண்ணாவின் உண்ணவிரத நாடகம் அரசின் மறைமுக ஆதரவோடு இன்னும் கொஞ்ச நாட்கள் நடைபெறும். கார்ப்பரேட் ஊடகங்களும் அதை வைத்து வரும் நாட்களில் ஊதிப்பெருக்கும். ஓய்வு நேர அரசியலுக்கு வாகாக இருக்கும் இந்த மெழுகுவர்த்தி பேஷன் ஷோவில் கலந்து கொள்வதால் எந்தப் பிரச்சினையும் வராது என்பதை உறுதி செய்து கொண்டு வரும் படித்த நடுத்தர வர்க்கம் மேலும் பாசிசமயமாவதற்குத்தான் இந்த நாடகம் உதவி செய்யும்.

அந்த வகையில் அண்ணாவின் வீரகாவிய காமடி நாடகம் ஆளும் வர்க்கத்திற்கு தற்செயலாக கிடைத்த பொக்கிஷம். இந்த பொக்கிஷத்தை பாதுகாக்க அண்ணா ஹசாரேவே மறந்தாலும் ஆளும் வர்க்கம் மறக்காது. ஊழலின் ஊற்று மூலமான இந்த அரசு அமைப்பு முறையை மாற்ற வேண்டும் என்று சிந்திப்பவர்கள் இந்த காமடி நாடகத்திற்கு அழ முடியாது. மீறி அழுபவர்களை யாரும் காப்பாற்றவும் இயலாது.

_______________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

 1. பி ஜே பி காலத்தில் அப்துல் கலாம் என்றொரு காமெடியன் வந்து அனைவரையும் சிரிக்க வைத்தார். கோமாளி சனாதிபதி. இப்போது காங்குரசுக்கு இதோ ஒரு கோமாளி. கோமாளி வாரார். பராக்கு. பராக்கு.நல்லா சிரிங்கோ.

  ஆகப்போறதுன்னா ஒண்ணுமில்லீங்கோ.

  • PLEASE DONT READ PLEASE DONT READ ….STATUARY WARNING..,… PLS DONT READ ALL ARE TALKING ABOUT SAMCHEER KALVI….U FOOLS PLS TALK ABOUT SAMCHEER FOOD …SAMACHEER PETROL PRICES….SAMACHEER ELECTRICITY….U ALL ARE FOOOLS SO ONLY U ALLL ARE TALKING ABOUT SAMCHEER KALVI ONLY… IS SAMACHEER KALVI ONLY IN THE MIDDLE OF EVERYTHING….EDUCATION IS WASTE …IS THERE ANYONE WHO CAN TELL THAT EDUCATION IS USEFUL…PLS TELL A SINGLE GOOD THING WHICH EDUCATION DID….IF U SAY SO THEN I WILL ACCEPT U AS AN INTELLIGENT….EDUCATION MADE US TO DIE…EDUCATION CHAGED OUR ENVIROINMENT…EDUCATION SPOILED THE HUMAN BEINGS CULTURE…..THINK THINK…

   ANNA HAZAREE….WATS IS THERE IN ANNAS BILL…LET HTE BILL COME…. U FOOLS WHY U OPPOSE ANNA…WHY ARE U AFRAID…LET US SEE WAT WILL HAPPEN IF THE BILL COMNES…THIS IS NOT AN ATOMIC BOMB BILL…U ALL ARE JUMPING ON ANNA…U FOOLS U CANT STOP THE WORLD FROM PRODUCING ATOM IC BOMBS…BUT U ALL ARE BLAMING ANNA….THINK WELLL FOOLS…ANNAS BILL IS NOT ATOM NUCLEAR BOMB BILL OKOK..UNDERSTAND

 2. முருகா முருகா என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் அளவுக்கு வினவுக்கு பக்தி முற்றி விட்டதா? தோழர்களே இந்த வாய்ப்பை பயன்படுத்தி தான் நம் போராட்டக் களங்களுக்கு போடப்படும் தடைகளை தகர்த்து எரிய வேண்டும்… இத்தனை ஆண்டுகாலமாய் செயல்பாட்டில் இருக்கும் இந்த தடைகள் குறித்து இதுவரை பாராளுமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ சட்டசபயிலோ பார்க்க முடிந்ததா, இப்பொழுது பேசுகிறார்கள் அல்லவே? இதை வைத்து தான் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.. தவறு செய்யும் ngoக்களுக்கு ஆதரவாய் செயல் படும் அண்ணாவையும் தோலுரிக்க வேண்டிய கட்டாயம் நம்மிடம் உள்ளது..

 3. வினவின் பல கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை எனினும், அண்ணா ஹஜாரே என்ற ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்ட பிம்பத்தை உடைத்தெறிய இதுபோன்ற இடுகைகள் அவசியம் என்பதை உணர்கிறேன்.

  இப்போது கூட “எவ்வித நிபந்தனைகளுமின்றி உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்,” என்றுதான் திஹார் சிறையை விட்டு வர மறுக்கிறாரே தவிர, “ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தால்தான் வெளியே வருவேன்,” என்று சொல்லவில்லை. இதிலிருந்தே, அவரது குறிக்கோள் ஜன்லோக்பாலோ, ஊழல் ஒழிப்போ அல்ல என்பதனை மக்கள் புரிந்து கொண்டால் சரி.

  அது புரியாமல், அண்ணாவை விமர்சிப்பவர்களை காங்கிரஸின் அடிவருடிகள் என்று வசைமாரி பொழிபவர்கள், அவர்களது தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்! அது அவர்களது தலைவலி!

  • சேட்டைக்காரன், நீங்களும் அண்ணா ஹசாரே குறித்து எழுதிய பதிவையும் பார்த்தேன். ஏராளமான விவரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

   அடுத்து வினவின் என்னென்ன கருத்துக்களுடன் நீங்கள் உடன்படவில்லை என்று தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும். அதை நீங்கள் தனிமடலிலும் அனுப்பலாம். நன்றி

 4. இதுதான் கம்யுனிசத்திற்கும்,காந்தியத்திற்கும் உள்ள வித்தியாசம்.

  கத்தியின்றி,இரத்தம்யின்றி யுத்தம் ஓன்று வருகிறது.
  பாரதி
  First they never accept,They laugh at you, They Ignore you,They fight you and you win.
  Ganghi

 5. #####ஊழலின் ஊற்று மூலமான இந்த அரசு அமைப்பு முறையை மாற்ற வேண்டும் என்று சிந்திப்பவர்கள் இந்த காமடி நாடகத்திற்கு அழ முடியாது. மீறி அழுபவர்களை யாரும் காப்பாற்றவும் இயலாது###

  good lines.

 6. 2ஜி ஊழலை மறக்கடிக்க காங்கிரசுக்கு வேறு வழி தெரியவில்லை.
  முதலில் தூக்குதண்டனை, இப்போ லோக்பால் மசோதா. மக்கள் ஏமாற வேண்டாம்.

  • சட்டரீதியாகவே அங்கீகாரம் பெற்றிருக்கும் ஊழலை புதிய சட்டம் கொண்டு வந்து தண்டிப்பது சட்டப்படியே சரியல்லவே, என்ன செய்யலாம்?

  • //ஊழல் ஒழியனும் அது யார் முலியமாநடந்தால் என்ன//

   ஊழல் ஒழியும்னு யார் சொன்னது? அது யார் மூலமா நடக்குதுன்னு நீங்க நினைக்கிறீங்க? ஊழல்னா என்ன?

 7. அதுதான் காந்தியத்திற்கும்,கம்யுனிசத்திற்கும் உள்ள வித்தியாசம்.
  அன்னா ஹசாரே கம்யுனிசவாதியாக இருந்தால் வினவு தலையில் வைத்து கொண்டாடிருப்பார்

  கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஓன்று வருகிறது.
  பாரதி

  First they never accept you,they ignore you,they laugh at you,they fight you and you win..
  -gandhi

  • ஐயா “கல்நெஞ்சமே“ கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகிறது என்று பாடியது பாரதி யல்ல என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் பாரதியும் காந்தியை எதிர்த்தவர்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 8. //இந்திய அரசும் இப்போது அமெரிக்காவின் அடிமையாகி விட்ட நிலையில் அது குறித்தெல்லாம் அண்ணா ஹசாரே அணி கவலைப்படவில்லை. அவர்கள் கவலை எல்லாம் அந்த லோக்பாலை தூக்கிவிட்டு இவர்களது ஜன லோக்பாலை கொண்டு வரவேண்டும் என்பதுதான்.//

  Dear Vinavu, i can not agree with you here. this is their stand from begining, they are not worried about india becoming slave of America at all, because it is a only concern for Vinavu. so it may be their ignorance and not mistake.

  I se that Mistake here is fully with Vinavu, if your thoughts are correct, you need to cliam yourself as another Mahatma, and get into power to get all changes required. Its very simple to become Mahatma, one need to buy contton dress to become next Mahatma. what to do, you guys don’t accept Mahatma itself. so guys, no way, your ideas won’t reach Masses.

  You need to be little bit flexible, to get people support easily, you need to know that many freedom fighters such as Bose, Tholar Jeeva, JP etc were united with congress just because of Mahatma, they found that people of this country could be united only by Gandhi.

  //அமைப்பு முறை என்ற முறையில் இந்திய அரசு அமல்படுத்தி வரும் தனியார் மயம்தான் ஊழலின் ஊற்று மூலம் என்பதை மறுத்து அந்த தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஊழலை மட்டும் ஒழிக்க வேண்டுமென்று பொத்தாம் பொதுவான முழக்கத்தோடு அண்ணா அணி நடத்துவது ஒரு பச்சையான நாடகமே.//

  Again you are wrong, they never thought this as a issue at all then where is a question of they are doing drama. please understand. please understand they are not such intelligent people, they are average people, otherwise they would have really planned this well and got more suppor than the current level.

  i tried to understand the real frustration among people, why they are showing their interest, it looks like its multifold.

  1. there is a inefficieny with indian government so interest rate has really gone up. people are thinking that its because of corruption.
  2. stock market is not doing good, so there are lots of time to do someother work 🙂
  3. there are scame news such as 2G, 3G, CWG etc which shows politicans have made 100s of crores. oh god, we could never make such money.
  4. people are getting irritated with congress spoke persons, they way they deal with questions. (if you want to really know what i am saying please watch news channels for sometime).
  5. Advisers to PM like PC, Kapil Sibal. people would have listed to these intellects.

  I also think that things are going wrong currently for congress, because our living Gandhi (sonia’ji) is not in station. prince of india is not able to handle the current issue. soon things will change once soniaji is back.

  • ஷான்,
   அண்ணா அணியினர் ஊழல் குறித்து மிக மிக பொத்தாம் பொதுவாகவே பேசி வருகின்றனர். காமன்வெல்த், 2ஜி போன்ற பிரம்மாண்ட ஊழல்களின் தற்போதைய நிலவரத்தின் படி குறிப்பான முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசு எல்லாரும் பிடிபடும் நேரத்தில் நமது கோரிக்கையும், போராட்டமும் குறிப்பானதை நோக்கி போக வேண்டும். குற்றவாளி ராசா தெரிவித்த விவரங்கள், ஆதாரங்கள், வாதங்களின் படி இந்நாட்டின் பிரதமர், அரசு, முந்தைய அரசு அனைவரும் குற்றவாளி என்று ஆகும் போது அண்ணா அணி வைக்கும் பொதுவான மேலோட்டமான ஊழல் எதிர்ப்பு என்பது இத்தகைய குற்றவாளிகளை பாதுகாக்கவே துணை செய்யும்.

 9. லோக் பாலை கொண்டுவந்தாலும் இதே கட்சிகள் தான் ஆளப்போகின்றன.இருக்கின்ற சட்டங்களை முறையாக பயன்படுத்தினாலே போதும்.2ஜியில் டாட்டா, அனில் அம்பானி, நீரா ராடியா எல்லாம் ஏன் கைது செய்யப்படவில்லை? சட்டம் திமுக குற்றவாளிகளை மட்டும் பிடிப்பதற்கா? இதே போன்று தான் லோக் பாலையும் பயன்படுத்துவார்கள்.

  • ஜன் லோக்பால் நிறைவேற்றப்பட்டால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு லோகயுக்தா அலுவலகம் செயல்படவும் அவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் தலைவர்களை ‘குடாய’வும் சட்டப்படி அனுமதி இருக்கும். ஆதாரபூர்வமாக நிரூபித்தால் அதிகாரியை/தலைவரை பதவியிறக்க வைக்கவோ கைது செய்யக்கோரவோ முடியும் இந்த அமைப்பால். உதாரணம் கர்நாடகாவின் லோகயுக்தா தான் எடியூரப்பா மீது குற்றப்பத்திரிக்கை தயாரித்து அவரை பதவியிறக்கியது. ஒது அரசு சாரா அமைப்புக்கு இதுவே பெரிய விஷயம். இத்ல்லாம் ஆரம்பம்தான். வினவு எதிர்பார்ப்பதுபோல் ஒரே நாளில் நடந்துவிடாது. ஆனால் நாமதான் ஆரம்பத்திலேயே வினவு போல் விஞானரீதியா குரை சொல்லியே வளரவிடாம தடுத்துடுவோம்ல!

   • நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விசயங்களை இப்போதுள்ள சட்டங்களின் படியே செய்யலாமே, யார் தடுத்த்து, ஏன் இதுவரை அப்படி நடக்கவில்லை?

    • vinavu sir.. i think whole idea is to have something similar to election commission.. an autonomous body.. i’m aware even the current judicial system is autonomous.. but the investigating system is under power of the politicians and bureaucrats, so wat jan lokpal trying to achieve is to have a single transparent system which can autonomously investigate corruption and dish out punishment(hopefully harsh like china :D).

   • என்ன இருந்தாலும், இப்போது எட்டியுரப்பாவின் கைப்பாவை தானே முதல்வராக வந்துள்ளார். புருசன் கைதானால், மனைவியைக் கொண்டு அரசாள்வதை நாம் பார்த்தது இல்லையா? நமக்குத் தேவை ஒட்டு மொத்த அரசியல் அமைப்பும் மாற வேண்டும். அன்னா இப்படி அடம்பிடிக்காமல், ஒரு முன்மாதிரி கட்சி தொடங்கி நேர்மையானவர்கள் கொண்டு தேர்தலில் போட்டியிட்டால் நாம் பரிசிலிக்கலாம்.

   • //உதாரணம் கர்நாடகாவின் லோகயுக்தா தான் எடியூரப்பா மீது குற்றப்பத்திரிக்கை தயாரித்து அவரை பதவியிறக்கியது. ஒது அரசு சாரா அமைப்புக்கு இதுவே பெரிய விஷயம்.//

    முதல் விசயம் கர்நாடக லோக்பால் அண்ணாவின் ஜன் லோக்பாலால் வந்தது அல்ல. அது ஏற்கனவே இருக்கும் ஒரு அமைப்பே. இதைத்தான் வினவும் சொல்கிறது. ஏற்கனவே இருக்கின்ற சட்டங்களை வைத்தே ஊழலை ஒழிக்க வக்கில்லையே எனும் போது ஜன்லோக்பால் எனும் வெளுக்கமாத்து குஞ்சலம் மட்டும் என்ன கிழித்துவிடும் என்று.

    இதில் சில விசயங்களை பார்க்க வேண்டியுள்ளது, அவை முறையே முதல் விசயம், இருக்கின்ற ஊழல் ஒழிப்பு சட்டங்களுக்கும் ஜன் லோக்பாலுக்கும் ஊழலை ஒழிப்பது என்ற அம்சத்தில் ஒரு வித்தியாசமும் கிடையாது.ஏனேனில் ஊழல் என்றால் என்னவென்பதை இவர்கள் வரையறுப்பதே மோசடியானது(ஜன்லோக்பால் உள்ளிட்டு).

    இரண்டாவது விசயம், ஜன் லோக்பால் இல்லாத போதும் கூட கர்நாடகாவில் நடந்திருக்கின்ற விசயம் பாஜக காங்கிரசு அதிகாரப் போட்டியின் விளைவுதானேயன்றி வேறல்ல. ஏனேனில், சந்தோஷ் ஹெக்டே கர்நாடகாவில் நடக்கும் ஊழல் பற்றி பல வருடங்களாக கதறியழுது இப்போதுதான் அதுவும் காங்கிரசு பாஜக மோதலால்எடியூரப்பாவிற்கு விடுப்பு (விடுப்புதான்) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எழவை சாதிக்கத்தான் அண்ணா உண்ணா என்று குதிக்கிறீரக்ள் என்றால் இதற்கு பேசாமல் கடலில் மூழ்கி செத்து விடலாம். மேலும், சந்தோஷ் ஹெகடேவின் லோக்பால் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ள குமாரசாமி(ம.ஜ.த), காங்கிரசின் தரம்சிங்-எஸ்எம் கிருஷ்ணா இப்படி சர்வ கட்சி மாமாக்களும் தண்டிக்கப் படுவது என்றால் அது இந்தியாவின் மொத்த வோட்டுக் கட்சி அரசியலமைப்பையுமே சிறைக்குள் வைப்பதே ஆகும். அதன் பெயர் புரட்சியாகத்தான் இருக்குமே ஒழிய ஜன்லோக்பாலாக இருக்க முடியாது.

    மூன்றாவது விசயம், எடியூரப்பா பதவி விலகியதும், தனது பினாமியை வைத்து (ஜெயலலிதாவின் பன்னீர்செல்வம் போன்று) ஆட்சி செய்வதையும் தண்டனை, விசாரணை என்று சொல்வது மட்டரக ரசனை கொண்ட காமெடி எனில் இன்னொரு பக்கம் இந்த எடியுரப்பா ஊழலுக்கு காரணமான ரெட்டி சகோதரர்கள் உள்ளிட்ட இந்தியாவின் பாகசுர கம்பனிகளும், ஆ. ராசா ஊழலின் ஊற்றுக் கண்ணான அம்பானி, டாடா கும்பலும் இன்னும் சுதந்திரமாகத்தான் வலம் வருகிறார்கள் என்பதை அம்பானிதாசர் அதியமான் பேசாமல் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் மற்றவர்களும் பேசுவதில்லையே ஏன்? முதலாளிகளிடம் துட்டு வாங்கி போராடும் அண்ணாவின் ஜன்லோக்பாலில் இவை பற்றியெல்லாம் எந்த மசிருகளும் கிடையாது.

    மொத்தத்தில் பின்னூட்டம் நம்பர் 20ல் ஒருவர் சொன்னது போல லோக்பால் என்பது சாதா ‘ஆல் அவுட்’ ஜன் லோக்பால் என்பது ‘ஆக்சன் ஆல் அவுட்’ கொசுவைப் பொறுத்தவரை இவற்றிற்கு ஒரு வித்தியாசமும் கிடையாது. எப்போதும் போல ரத்தம் குடித்துக் கொண்டுதான் இருக்கும்(கொசு- டாடா, அம்பானி).

 10. //இந்திய அணி தோல்வியால் டி.ஆர்.பி ரேட்டிங் சரிந்து தொலைக்காட்சிகளின் விளம்பரங்களும் குறைந்து போன நிலை.//
  உளரிக்கொட்டும் வினவு, சரியாக ஆகஸ்ட் 15 என தேதி அறிவித்த போராட்டத்தின்போதுதான் இந்திய அணி தோற்குமா?!? கிரிக்கெட்டில் வெற்றிதோல்வி என்றால் என்னைக்கு நியூஸ் சேனலின் டீ.ஆர்.பி ஏரியிருக்கிறது?!?

  //அண்ணாவிற்காக சென்னையில் சீன் போடும் அருணா சாய்ராம், அனிதா ராம், சுவர்ணமால்யா போன்ற கருநாடக, பரதநாட்டிய தாரகைகளிடம் // அதாவது ஒட்டுமொத்த சென்னையில் எல்.பி சாலையில் போராடினது இவங்க மட்டும்தான் இல்லையா? வேற யாருமே வராம காத்து வாங்குச்சி இல்லையா திரு.கண் அவிஞ்சு போன வினவு?!?

  அன்னாவின் முதல் போராட்டத்தின்போது என்ன சொன்னீர்?!? “தினமும் மாலை கேர்ள்ஃப்ரெண்ட்ஸுடன் ஷாப்பிங்க் செல்லும் அரசியல் தெரியாத ஐ.டி தத்திகள், ஒரு மாறுதலுக்கு மெழுகுவர்த்தி பிடித்து, பந்தாவிற்காக இதுபோன்ற கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்” என உளரிக்கொட்டிய வினவே, ஏன் இம்முறை அவர்களைப்பற்றி எழுதவில்லை?!? ஏனெனில் பல ஐ.டி துறை நன்பர்களும் கட்டாய விடுப்பு போட்டுவிட்டு நாள்முழுக்க நாடுமுழுக்க நிஜமான உணர்வுடன் போராடுகின்றனர். சுதந்திர விடுமுறை சேர்த்து 3 நாள் முடிந்தும் தைரியமாக இரண்டு நாள் விடுப்பு எடுக்கின்ரனர் ஐ.டி துறை நண்பர்கள். எனவே அவர்களை குறைகூற முடியவில்லை.

  //இதுவே மற்றவர்களென்றால் இப்படி எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை.யாரும் சிறையிலேயே தங்குவேன் என்று அடம்பிடிக்க முடியாது. குண்டு கட்டாக இழுத்து வந்து வெளியே தூக்கி எறிவார்கள்.// ஆமாம், மற்றவர்களென்றால் இந்தளவு கூட்டம் கூடுமா?!? கூட்டத்திற்கு பயந்துதானே உள்ளே இருக்கவிட்டார்கள், இல்லையென்றால் வெளியே தூக்கி வீசியிருக்கமாட்டார்களா?!?

  //ஜன் லோக்பாலை காங்கிரசு மட்டுமல்ல, பா.ஜ.க, கம்யூனிஸ்டுகள் உட்பட எந்தக் கட்சியும் இதுவரை ஆதரிக்கவில்லை. எனில் எல்லா கட்சிகளையும் எதிர்த்து அண்ணா அணி போராடியிருக்க வேண்டும். அப்படி போராடமல் இருப்பதற்கு என்ன காரணம்? // 30 நாள் உண்ணாவிரதமிருக்க முதலில் விடுங்கள் பின்னால் என்ன நெருக்கடி வருகிரதென்று பாருங்கள், அதர்குமுன்னரே உங்கள் திரைக்கதை வசன கற்பனைத்திரனை காட்டவேண்டாம்.

  //பிரதமர் மன்மோகன் சிங்கையே இப்போது கைது செய்திருக்க வேண்டும். அவரையும், ப.சிதம்பரம் உள்ளிட்ட அமைச்சர்களையும், முன்னர் ஆட்சியில் இருந்த பா.ஜ.கவின் அமைச்சர்களையும் கைது செய்ய வலுவான முகாந்திரம் உள்ள நிலையில் இப்படி எந்தக் கோரிக்கையையும் எழுப்பாமல் பொத்தாம் பொதுவாக ஊழல் எதிர்ப்பு என்று பேசுவது யாரை ஏமாற்ற?//2ஜி உள்பட எல்லா ஊழல்களும் ஜன்லோக்பாலில் சேர்க்கப்பட்டுள்ளதே?!? கைது செய்யவேண்டியது யார் வேலை?!?

  //எங்கும் காமராவின் எல்லைகளைத் தாண்டி கூட்டம் இல்லை.// கூட்டம் இருக்கும் எல்லா இடங்களிலும் கேமரா வைத்தாகிவிட்டது என்பதை இப்படியும் சொல்லலாம்! எல்லோரும் இந்தியா கேட்டில் கூடுங்கள் என சொன்னதும் சேர்ந்த கூட்டத்தை பாருங்கள், காமிராவுக்குள் அடங்கும் கூட்டமா அது?!?

  //எந்த இந்தி மொழியை எதிர்த்து தமிழகம் போராடியதோ அந்த இந்தி மொழி பேசும் ஒரு தலைவரை தமிழகம் ஏற்றிருப்பதாகவும் அந்த நாளிதழ் விசமத்தனமாக பொய்யுரைக்கிறது.// நாட்ல பெருசா ஏதாச்சும் நடந்தா உடனே பலருக்கும் கொண்டாட்டம், சிலர் காமெடியும் பண்ணுவாங்க. நீங்க இங்க காமெடி பண்ரீங்கள்ல அதுபோல அங்க அவங்க பண்றாங்க, தட்ஸால். உடனே தமிழ்நாட்டில் என்னமோ இந்தியை கட்டாயமாக்கிட்டாப்ல இல்ல பேசுரீங்க! இந்த கொசுக்கடியெல்லாம் நீங்க சொல்லித்தான் தெரியவே வருது!

  //அண்ணா ஹசாரேவின் காந்திய வேடங்களை பலர் தோலுரித்திருக்கிறார்கள். //இன்னொரு காந்தி வருவார் என எதிர்பார்க்கிரீங்களா?!? அவர் கெட்டவராவே இருக்கட்டுமே ஜன்-லோக்பால் தான் மக்களின் டார்கெட். அன்னாவுக்கு பிரதமர் என்ன ஒரு கவுன்சிலர் பதவி கூட கிடைக்கப்போவதில்லை. தவிர, உங்க வேடத்தை கூடத்தான் பலர் தோலுரித்திருக்கிறார்கள்?!?

  நம் நாட்டில் ஒரு பெரிய விஷயம் நடந்தால் அதைச்சுற்றி பல கூத்தும் நடக்கத்தான் செய்யும். என்ன, யாரை, எந்த ஆங்கிளில் குறை சொல்லலாம் என்பதற்காகவே நீங்கள் பல செய்திகளையும் படிக்கிரீர். அந்த இந்தி திணிப்பு எல்லாம் காமெடி என உங்களுக்கே புரியவில்லையா?!?

  அன்னா நல்லவரோ இல்லையோ ஜன் லோக்பால் வந்தால் நல்லதுதானே?!? சோம்பேறிகள் பயந்தாங்கொள்ளிகள் சுயநலவாதிகள் என்றரியப்பட்ட இந்தியர்காள் இன்று தெருவுக்கு வந்து போராடுவது ஊழலுக்கு எதிராக மட்டும்தானே தவிர யாருக்கும் ஆதரவாகவெல்லாம் இல்லை. இந்த போராட்டத்தால் கிரன் பேடியோ ரவிசங்கர் சாமியோரோ எலக்சனில் நின்று ஒரு கவுன்சிலராகக்கூட முடியாது. அப்புறம் ஏன் வீண் சிந்தனை?!?

  //2ஜி ஊழலில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள், அரசு அனைவரும் குற்றவாளிகளாக தெரியவரும் நேரத்தில் அதை மறைப்பதற்கே அண்ணாவின் நாடகம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. // ஊழலை மறைக்க ஊழல் போராட்டமா?!? எனவே எல்லோரும் 2க் ராஜா கல்மாடி போஃபர்ஸ் இதெல்லாம் மரந்துவிடுவார்கள் இல்லையா, அப்புரம் எந்த புண்ணாக்கை ஞாபகம் வைத்துக்கொள்வார்கள்?!? இந்தக்கூட்டங்களில் வரும் மக்கள் பேசுவதையும், தட்டிகளில் எழுதிவைத்துள்ளதையும் பார்க்கிரீர்களா?!?

  //ஓய்வு நேர அரசியலுக்கு வாகாக இருக்கும் இந்த மெழுகுவர்த்தி பேஷன் ஷோவில் கலந்து கொள்வதால் எந்தப் பிரச்சினையும் வராது என்பதை உறுதி செய்து கொண்டு வரும் படித்த நடுத்தர வர்க்கம் // உங்க கற்பனை வாந்தியின் நாத்தம் தாங்க முடியல. மக்கள் நடத்துவது அஹிம்சை வழி அறப்போராட்டம். சென்னையில் கூட குழந்தைகள், வயதானவர்கள் பெண்கள் ஊனமுற்றவர்கள் எல்லாம் கலந்துகொண்டார்கள். இவர்களெல்லாம் போலீஸ் தடியடி வாங்கவெண்டும் என்பதுதான் உங்க ஆசையில்லையா?!? சரிய்யா, அப்படிப்பாத்தாலும் பாபா ராம்தேவ் கூட்டத்தில் என்ன நடந்தது? மக்களுக்கு அடி விளுகலியா, ஆனா அப்படியும் இப்ப நாடு முழுக்க மக்கள் தைரியமா வருகிரார்களே! இது இப்பவும் பாதுகாப்பான பேசன் ஷோ வா?!?

  நீங்க ஆயிரம் சொன்னாலும் ஒரு விஷயம் பாக்கணும். சுதந்திர காலத்தில் அனைவருக்கும் பெரிய கமிட்மென்ட் எல்லாம் இல்லை! ஆனால் இன்று லீவ் போடும் ஐ.டி துறை ஆட்களுக்கு வேலையில் அட்டென்டன்ஸ் போட்டே ஆகவேண்டிய பொறுப்பும் நிர்ப்பந்தமும் உள்ளது. உதாரணத்திற்கு உங்க வெப்சைட்டை பராமரிக்கும் ஆள் லீவ் போட்டால் யாரும் ஒரு நாளுக்கு வினவை படிக்கமுடியாது. இன்னிலையில் அவர்கள் இரண்டு நாள் லீவ் போடுவது கூட பெரிய விசயம் தான். உங்களைப்போன்ற ஆட்களுக்கு புரிந்துகொள்ளத்தான் மனமில்லை

  சரி சரி, எல்லோரும் வினவுக்கு மாத நன்கொடை/பதிலடி/செருப்படி அளித்துவிட்டீர்களா?!? வினவு, அடுத்து நீங்க யார்மேலெல்லாம் வாந்தி எடுப்பதென முடிவு செய்துவிட்டீர்களா?!?
  (வினவு, உம்மைப்பொருத்தவரை நீங்க நேர்மையானவர், ஆனா உங்க நன்கொடை பேனரை தவறாகப் புரிந்துகொள்ள கிண்டல் செய்ய எவ்வளவு நேரமாகும்?!?)

  • வினா,

   அண்ணாவின் போராட்டத்தால் ஊழலை கொசு அடிப்பது போல ஒழித்து விடலாமென்ற உங்கள் மன உறுதி யாரையும் வியக்க வைக்கும். இருக்கட்டும், அண்ணா அணியின் ஜன் லோக்பால் வந்தால் ஊழல் எப்படி ஒழியும் என்பதை ஒரு எளிமையான உதாரணத்தோடு கொஞ்சம் விளக்குங்களேன், தெரிந்து கொள்கிறோம்.

 11. ஊழலால் நாட்டை சுரண்டியது,
  தானியங்களை வீணாக்கிவிட்டு அதை இலவசமாக ஏழைகளுக்குக்கூட தரமறுத்த கொடியவர்கள்,
  அண்டைநாட்டிலுள்ள ந்ம் தமிழ் சொந்தங்களை கருவருக்க ஆயுதங்களை வழங்கிய கொடுங்கோலன்
  நம் நாட்டு ஊழல் பணத்தை திருடி தன் சொந்தநாட்டில் பதுக்கும் திருடி சோனியா
  தீவிரவாதத்தை கட்டுப்படுத்தாது
  சிறைப்பிடித்த தீவிரவாதிக்கு ராஜவாழ்க்கை
  நம் சொந்த நாட்டு பழங்குடிகளுக்கும் மீனவர்களுக்கும் மரணப்பரிசு
  சொந்தநாட்டு இயற்கை வளங்களையே சுரண்டுவது
  ஊழல் மன்னன்கள் குவாத்ரோச்சி, பிரியங்கா புருசன் என கள்ளர்களை தப்பிக்க விடுவது
  டர்பன் சீக்கியனுக்கு நீதி, அப்பாவி தமிழனுக்கு அநீதி என பிரதமனே பிரிவினையை தூண்டுவது
  2ஜி ஊழல் மூலம் அரபுநாட்டில் பணத்தை ரீட் செய்து நமக்கெதிரான தீவிரவாதிகளுக்கே மறைமுக உதவி செய்தது

  என காங்கிரஸின் குற்றப்பட்டியல் கூடிக்கொண்டே போகிறது. 2014 வரை காத்திருக்க முடியாது. இப்போதே காங்கிரசை கறுவருக்கவேண்டும் என்ற கருத்தில் மட்டும் உங்களுடன் ஒத்துப்போகிறேன். அப்படிப்பார்த்தாலும்கூட மற்றவர்களைவிட தமிழனுக்குத்தான் போராட அதிக தேவையிருக்கிரது. ஏதோவகையில் அன்னாவினால் தான் அது நடக்குமென்ரால் அப்படியாவது நடக்கட்டுமே!

  • காங்கிரசு அரசும், அண்ணாவும் கூடிக் குலவி இடையில் கொஞ்சம் ஊடலோடு நடத்தும் ஒரு கைப்புள்ள காமடியை மாபெரும் காங்கிரசு ஒழிப்பு யுத்தமாக நீங்கள் கருதுவதன் காரணம் என்ன?

  • //தானியங்களை வீணாக்கிவிட்டு அதை இலவசமாக ஏழைகளுக்குக்கூட தரமறுத்த கொடியவர்கள்,
   அண்டைநாட்டிலுள்ள ந்ம் தமிழ் சொந்தங்களை கருவருக்க ஆயுதங்களை வழங்கிய கொடுங்கோலன்// வாஜ்பேயியத்தானே சொல்றீங்க?

 12. சேட்டைக்காரன் எழுதிய கட்டுரைக்கு நான் போட்ட பின்னூட்டம் இதற்கும் பொருந்தும். “நல்ல அலசல்!
  லோக்பால் மசோதா என்று சொல்லி இங்கே அரசியல் நடத்தப்படுகிறது. ஏற்கவே இருக்கிற சட்டங்களால் ஊழலை ஏன் ஒழிக்க முடியவில்லை? இப்போது அண்ணா அசாரேவின் பின்னால் திரள்பவர்கள் ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக எத்தனை புகார்களை துணிவோடு பதிவு செய்துள்ளார்கள்? இவர்கள் யாரும் இதுவரை இலஞ்சமே கொடுத்ததில்லையா? இதெல்லாம் கூட்டத்துாடு கோவிந்தா போடுவதற்குத்தான் பயன்படுமே ஒழிய ஊழல் ஒழிய ஒருபோதும் உதவாது. இவர்கள் சொல்கிற லோக்பால் வந்தாலகூட தைரியத்தோடு புகார் கொடுக்க எத்தனைபேருக்கு துணிச்சல் வரும்! ஊழலின் ஊற்றுக்கண் எது என்பதைக் கண்டறியாமல், அதற்கான அடிப்படையை மாற்றாமல் வெறும் சட்டங்களால் ஊழல் ஒருபோதும் ஒழியாது.”

  அகிம்சைப் போராட்டம் என்றுதான் ஹண்ணாவின் போராட்டம் வர்ணிக்கப்படுகிறது. அகிம்சைகூட வன்முறையானதுதான் என்பதற்கு இப்போது நடக்கும் காட்சிகளே ஆதாரம். காவல்துறையோடு மோதல், தள்ளுமுள்ளு, கைதாவதை தடுப்பது, சிறையைவிட்டு வரமறுப்பது, சாலையையை மறிப்பது இப்படி செய்வதெல்லாம் பார்ப்பதற்கு அகிம்சைபோலத் தோன்றினாலும் சாராம்சத்தில் வன்முறையை உள்ளடக்கியதே. ஆக வன்முறைபோராட்டங்களால் மட்டுமே சாரியம் சாதிக்கமுடியும் என்பதை ஹண்ணாவின் போராட்டம் உணர்த்துவதாகவே நான் பார்க்கிறேன்.

  சங்பரிவாரப் பின்னணியில் போராட்டம் நடக்கும்போது வன்முறை இல்லாமல் எப்படி?
  ஹண்ணாவின் போராட்டத்தில் வன்முறை இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

  • ஊரான்,
   எனக்கு ஒன்னு மட்டும் புரியல. ஏழைகள் தங்களது சிதைக்கப்பட்ட வாழ்க்கைக்காக சாலையில் வந்து போராடினால் இந்த நல்லவனுங்க திட்டுறானுங்க. ஆனால், அன்னா போன்றவர்களால் சாலை மறிக்கப்படும்போது மதிக்கப்படுகிறதே! அது ஏன்?

   • வறியவன்-வசதியானவன் என்கிற வர்க்க சிந்தனைதான் காரணம். வசதியானவன் எப்போதும் வறியவனின் போராட்டத்தை ஆதரிக்க மாட்டான். ஆனால் வறியவன் பலசமயங்களில் வசதியானவனின் போராட்டத்திற்கு சொம்பு தூக்குவான். இது அடிமைகள் ஆண்டைகளைக் போற்றும் செயல் போன்றது. இது ஒரு பண்பாட்டு எச்சம். வர்க்கப் போராட்டத்தினூடாகத்தான் இதைத் துடைத்தெறிய முடியும்-சத்தியபாமா ஜேப்பியாரை வாகன ஓட்டுநர்கள் எதிர்கொண்டதைப்போல.

 13. //ஜன் லோக்பால் வந்தால் நல்லதுதானே?!? //
  இந்த ஜோக்பாலைப் பத்தி அப்புறம் பேசுவோம்..
  சட்டப்படி நம்ம நாட்டிலே வரதட்ச்ணை ஒழிக்கப்பட்டிருச்சு..தீண்டாமை ஒழிக்கப்பட்டிருச்சு..கந்து வட்டி ஒழிக்கப்பட்டிருக்கு..பெண்சிசுக் கொலை ஒழிக்கட்டிருக்கு..குழந்தைத் திருமணமும் சதியும் கூடத்தான் ஒழிக்கப்பட்டிருக்கு..

  இதெல்லாம் உண்மைன்னா…லோக்பால்னு ஒன்னு என்னத்துக்கு தனியா? அதான் லஞ்ச ஒழிப்பு சட்டம் இருக்கே..அதை ஒழிக்க தனித் துறையே இருக்கே?

  உங்க பிரச்சினை என்னான்னா? டார்ட்டாய்ஸ் கொளுத்திப் பாத்துட்டோம்..முடியல..குட் நைட் போட்டு பாத்துட்டோம் முடியல..அதனால் ஒரே ரூமுக்கு 2 ஆல் அவுட் போட்டு கொசுவை விரட்டிடலாம்னு நினைக்கீங்க.. ஆனால் உங்க வீடே சாக்கடைக்கு நடுவுல இருக்குய்யா…அதைக் காலி பண்ணனும்..அதுதான் வழிங்குறோம்.. கொசுன்னு நான் சொன்னது ஊழல்..சாக்கடையைன்னு சொன்னது இந்த அழுகி நாறிப்போன அரசமைப்பு..இதைக் காலிபண்ணனுமா? இன்னோரு ஆல் அவுட் வாங்கணுமா?

 14. \\அதுதான் காந்தியத்திற்கும்,கம்யுனிசத்திற்கும் உள்ள வித்தியாசம்.
  அன்னா ஹசாரே கம்யுனிசவாதியாக இருந்தால் வினவு தலையில் வைத்து கொண்டாடிருப்பார்

  கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஓன்று வருகிறது.
  பாரதி//கல்நெஞ்சம் அன்னாஹசாரேயைப் பற்றி என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு போகட்டும். எதற்காக தப்புத்தப்பாக கவிதைகளை எல்லாம் மேற்கோள் காட்டுகிறார் என்பது புரியவில்லை. கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகிறது என்ற கவிதையை பாரதி யாருக்காக எப்போது பாடிவைத்தார் என்பதை கல்நெஞ்சம் தெரிவித்தாரானால் புண்ணியமாயிருக்கும்.
  கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது
  சத்தியத்தின் நித்தியத்தை நம்பி யாரும் சேருவீர்- என்பது நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களின் பாடல். பாரதி எழுதியதல்ல. ஒருவேளை பாரதி இந்தப் பாடலை அன்னாஹசாரேக்காக எழுதி எங்கேயோ வைத்திருக்க அதனை நாமக்கல் கவிஞர் திருடி வெளியிட்டுவிட்டாரா என்பதும் தெரியவில்லை.

 15. ”தோழரே!” என்றுதான் எல்லோரையும் இன்று வரை அழைப்பது எனது வழக்கம். அதைக்கேட்டதும் நெகிழ்ந்து பார்ப்போரும் உண்டு. நமட்டுச் சிரிப்பு சிரிப்போரும் உண்டு.

  சிலர் நேரடியாகவே “நீங்க கம்யூனிஸ்டா?” என்று கேட்ட பிறகுதான் என் அடிவயறு கலக்க ஆரம்பிக்கும். கேட்பவர் எந்தக் ”கம்யூனிஸ்ட்டை” மனதில் வைத்துக் கொண்டு இப்படிக் கேட்கிறார்….? அப்படியானால் இனி இவர் நம்மை எப்படிப் பார்ப்பார்….? என்றெல்லாம் மனசுக்குள் கேள்விகள் ஓடத் துவங்கும்.

  அந்த நேரம் பார்த்து….. தகரம் கண்டுபிடிக்கும் முன்பே உண்டியலைக் கண்டுபிடித்த உள்ளூர் ”கம்யூனிஸ்டுகள்” நினைவுக்கு வர….. ஐய்யய்யோ நான் அந்தக் கம்யூனிஸ்ட் இல்லீங்க…. நான் வேற… அந்தத் தத்துவம் பிடிக்கும்…. அதைச் செதுக்கிய மார்க்சைப் பிடிக்கும்…. அதனை செயல்படுத்திய லெனினைப் பிடிக்கும்….. ஆனால் இவுங்களைப் பிடிக்காதுங்க….. என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க ஆரம்பித்து விடுவேன்.

  • Mr கம்யூனிஸ்ட் தத்துவ பிரியர் – சம்மந்தமே இல்லாம எதுக்கு இந்த சுயபுராணம் ?

  • //தகரம் கண்டுபிடிக்கும் முன்பே உண்டியலைக் கண்டுபிடித்த உள்ளூர் ”கம்யூனிஸ்டுகள்” நினைவுக்கு வர// சுயபுராணத்திலும் இவர் டீசண்டு என்று காட்டும் மேட்டுக்குடித்தனம் வேறு.

 16. //முருகா, முருகா என்று வயிற்றிலும் வாயிலும் அடித்து அழவேண்டியதுதான்//
  நீர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுவதைத் தவர வேறு வழியில்லை…
  25 வருடங்களாக கட்சி கட்டி பத்திரிகை நடத்தி உம் அணியில் ஒன்றிண்டு பேருக்கு மேல் பெரிய தலைவர்கள் தேரவில்லை… ஆனால் ஒற்றை ஆளாக அன்னா செயல்படுவதைக் கண்டு வயிற்றெறிச்சல் படுகிறீர் என்பது தெரிகிறது… ’அதை விளக்கு’ ’இதை விள்க்கு’ என்று கேட்டுக் கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை.. இது காந்திய வழி… மக்களை முதலில் அணிதிரட்டுவது அவர்களுக்கு புரியவைப்பது என்பதுதான்.. தொழிற்சங்கம் போன்று உடன்பாடு போட்டு போனஸ் தருவதைப் போல அல்ல… சனலோக்பால் வரவேயில்லை என்றாலும் அதைப் பற்றி ஒன்றுமில்லை… ஆனால் இந்தப் போராட்ட வீச்சு மக்கள் மனதில் ஏற்படும் தாக்கம் முக்கியம்.. கடுமையான ஊழல்களால் அம்பலப்பட்டுப் போன ஆளும் அரசியல்வாதிகளை மக்கள் மத்தியில் தோலுரிப்பதுதான்..
  அதன் ஊற்றுக்கண்ணாக விளங்கம் முதலாளிகள் தானாக வழிக்கு வருவார்கள்… இது இந்திய ஆயுர் வேதம்… உமது பாணியில் சொல்வதானால் நம்ம ஊர் இளநீர் மாதிரிதான்… உமக்கு வெளிநாட்டு புரட்சி பெப்சி கலர் பாணங்கள்தான் பிடிக்கும் என்பதால் அரற்றுகிறீர்… மாவோ நாடு லெனின் நாடு என்னவாயிற்று.. எத்தை உயிர்
  பலிகள் வாங்கப் பட்டிருக்கின்றன என்பதை உமக்குத் தெரிந்தாலும் அதைப் பற்றி கள்ள மௌனம் இருக்கவே நீர் விரும்புவீர்… லட்சக்கணக்கான உயிர்பலிகளின் பயன் என்ன? தற்போது அங்கு சோசலிசம் இருக்கிறதா காபிடலிசம் இருக்கிறதா இல்லை இரண்டும் கலந்து கட்டின குழப்படியிசம் இருக்கிறதா…? அந்தத் தலைவர் களால் இயலாத விசயத்தை உம்மால் இந்தியாவில் விடுங்கள் தமிழகத்தில் 0.00001 பர்சண்ட் கொண்டு வர
  முடியுமா… அதற்கு முடிந்தால் முயலும்.. அதுவரை வயிற்றெறிச்சலில் பொருமாதீர்..

  • //ஒற்றை ஆளாக அன்னா செயல்படுவதைக் கண்டு வயிற்றெறிச்சல் படுகிறீர் என்பது தெரிகிறது…// அன்னா ஹசாரே ஒற்றை ஆளாக இப்போராட்டத்தை நடத்தவில்லை. இப்போராட்டத்தை நடத்துவது ஊடகங்கள் தான். ஆங்கில ஊடகங்களின் கன்சியூமர்ஸ் தான் அன்னாவின் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். மக்கள் எந்த அளவுக்கு ஊழலை வெறுக்கிறார்களோ அதே அளவிற்கான விரக்தி இந்த சமூக அமைப்பின் மீதும் இருக்கிறது. சில சீர்த்திருத்தங்களை கொண்டு அழுகி நாறும் இந்த சமூக அமைப்புக்கு ஒரு அங்கீகாரம் பெறுவதே அன்னா கும்பலின் நோக்கம். அந்த வகையில் கொதித்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்திய உள்ளங்களுடன் ஒரு பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறது அன்னா கும்பல். எந்த ஒரு சமூக விரோதியும் அண்ணாவுடன் இணையலாம் என்பதே ராம்தேவ், அத்வானி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் அன்னாவுக்கு ஆதரவாக இருப்பது காட்டுகிறது. அன்னா ஆங்கில ஊடங்கள் உற்பத்தி செய்த இமேஜ். உயர் சாதி, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் இந்திய மத்தியதர வர்க்கம் தனது dull and monotonous வாழ்க்கையிலிருந்து தப்பிக்க அன்னா என்ற பிம்பத்துடன் தம்மை இணைத்து அடையாளம் காண்பது கேவலம்.

   • //இணைத்து அடையாளம் காண்பது கேவலம்.///
    SWEEPING STATEMENT VINAVU AND CO என்ற கம்பெனி ஆரம்பியுங்கள்… நல்லபோணி ஆகிறதா என்று பார்க்கவும்… 25 வருடங்கள் கட்சி கட்டி எத்தனை தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள்… என்ன சாதனை (தமிழ்நாட்டில்) செய்து விட்டீர் என்ற சுயவிமர்சனத்தை செய்து கொள்ளுங்கள்… மக்களுக்கு விரக்தி இருக்கிறது என்றும் சொல்வீர்கள்.. ஆனால் போராடுபவர்களை மேட்டுக்குடி சாத்துக் குடி என்று sweeping statement விடுவீர்கள்… டப்பாவாலக்கள் ஆதரிக்கிறீர்களே.. அவர்கள் எந்த வகை சாத்துக்குடி..

 17. அண்ணாவுக்காக பொங்கி எழுந்து முழு பக்கத்தையும் தியாகம் செய்கிற உடகங்களும் அநியாயத்தை தட்டி கேட்க துடியாய் துடிக்கும் மேட்டுக்குடி குழக் கொழுந்துகளும்.

  மூக்குல டியூப்பை மாட்டிகிட்டு எலும்பும் தொலுமாக இருந்துக்கிட்டு உணவருந்தாமல் பல வருடங்களா போராடுகிற ஐரோம் ஷர்மிளாவுக்காக போராடும் மாறு கொஞ்சம் கடுப்போடு கேட்டுக் கொள்கிறோம்