இந்து புராணக் குப்பைகளில் சூப்பர் ஸ்டார் அவதாரம் என்று போற்றப்படும் கிருஷ்ணன், என்ற கிரிமினலின் லீலைகள் எப்படி வருணிக்கப்பட்டுள்ளன என்பதை நாம் படித்திருப்போம். கிருஷ்ணன் கோபியர்களின் சேலையைப் பிடித்து இழுத்தது, குளத்தில் குளிக்கும் போது எட்டிப் பார்த்தது போன்ற ‘ஈவ் டீசிங்’ வேலைகளை அன்றைய வியாசனில் இருந்து நேற்றைய கண்ணதாசன் வரை எப்படியெல்லாம் விதந்தோதி எழுதியிருந்தார்கள் என்பதைப் பார்த்திருக்கிறோம்.
அவன் துவாபர யுகத்தில் வெண்ணை திருடித் தின்றதையும், கோபியரோடு குத்தாட்டம் போட்டதையும் புராணமாகவும் வரலாறாகவும் போற்றும் ஒரு தேசத்திற்கு கலியுகத்தில் மீண்டும் ஒரு ‘அவதாரம்’ எழுந்தருளினால் காட்சிகள் எப்படியிருக்கும் என்பதை கடந்த சில நாட்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த மாதம் 6ம் தேதி இந்திய ஆளும் வர்க்கத்தின் சமூகத்திலும் தரகு முதலாளிகளின் சமூகத்திலும் ‘ஒபாமாவதார்’ எழுந்தருளியது. அவதாரம் சும்மா வருமா…? கூடவே உளவுத்துறை, ஒற்றர்கள், அமெரிக்க அரசு அதிகாரிகள், பாதுகாப்புக்காக கமாண்டோக்கள், பத்திரிகையாளர்கள் என்று தன்னோடு சேர்த்து ஒரு மூவாயிரம் பேரையும் கூட்டி வந்துள்ளார். இந்த மந்தையையும், மந்தையின் மேய்ப்பரையும் பாதுகாக்க அமெரிக்க அரசு நாளொன்றுக்கு 900 கோடி ரூபாய் செலவு செய்கிறதாம். மூன்று நாள் கணக்கு – சுமார் 2700 கோடிகள்! கொஞ்சம் காஸ்ட்லியான அவதாரம் தான். போகும்போது “பில்லை சார் கையில கொடுத்திடு” என்று மன்மோகன்சிங்கை கையைக் காட்டி விட்டு பரிவாரங்கள் கிளம்பிவிடும். 2700 கோடி என்பது அமெரிக்காவின் செலவுக் கணக்கு தான் – இதற்குச் சற்றும் குறையாத வகையில் இந்திய அரசும் மொய் வைத்திருக்கும். மொய்க் கணக்கு நோட்டை நாம் எந்தக் காலத்திலும் பார்க்க முடியாது.
வந்து இறங்கியுள்ள துரைமார்களுக்கு துரைசானிகளுக்கும் மனம் கோணாமல் சேவை செய்து விட வேண்டும் என்ற பதைப்பில் இந்திய ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் நாணிக் கோணிக் கொண்டு நிற்பதைக் காணக் கண் கோடி வேண்டும். மும்பை தாஜ் ஓட்டலின் அத்துணை அறைகளையும் ஒபாமாவதாருக்கும் அவரின் சம்சாரவதாருக்குமாகச் சேர்த்து முன்பதிவு செய்து விட்டார்கள்.
சீமைத்துரைக்கும் அவரது பரிவார தேவதைகளுக்கும் லோக்கல் சோம பானமா ஊத்திக் கொடுக்க முடியும்? இவர்களுடைய தாக சாந்திக்காக வாங்கப்பட்டிருக்கும் சீமை பானம் பாட்டில் ஒன்றின் விலை மட்டும் 5 லட்சம் ரூபாயாம்! மூவாயிரம் பேருக்கும் மூன்று நாட்களுக்கு “தண்ணி செலவு” மட்டும் எவ்வளவு ஆகுமோ தெரியவில்லை. தலைக்கு “ஆஃப்” அடித்தாலும் மூணு நாளுக்கு 225 கோடி ரூபாய் கணக்கு வருகிறது.
அப்புறம் இந்த 3000 பேருக்கும் கம்பெனி கொடுத்த வகையில் நம்மூர் அதிகாரிகள், அமைச்சர் பெருமக்களுக்கான செலவு, அனைவருக்குமான சாக்கனா செலவு இதெல்லாம் தனி. மொத்தத்தில் என்ன செலவு ஆகியிருக்கும் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. இதெல்லாம் அரசாங்க ரகசியங்கள். அமெரிக்க சக்ரவர்த்தி திவாலாகி டவுசர் கிழிந்த நிலையில் விஜயம் செய்யும்போதே இவ்வளவு தடபுடலான வரவேற்பு! இன்னும் இருக்கவேண்டிய படி இருந்தால் என்ன நடக்குமோ, கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
“ரெம்ப நல்லவர்” என்று அமெரிக்காவிடம் பேரெடுத்தவரான, இதே மன்மோகன் சிங் தான் அழுகி வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு வழங்க அத்தனை பகுமானம் காட்டியவர். முதலாளித்துவ ஊடகங்களுக்கு இந்த ஆபாசங்களெல்லாம் ஒரு பொருட்டேயில்லை – மிஷேல் ஒபாமா “பாண்டி” விளையாண்டது, பல்லாங்குழி விளயாண்டது, புருசனோடு சேர்ந்து டப்பாங்குத்து ஆடியது போன்ற அவதார லீலைகளையெல்லாம் கதை கதையாக முன்பக்கத்தில் வெளியிட்டு வருகின்றன. இன்றைய செய்தி நாளைய வரலாறு. நாளன்னிக்கு புராணம்.
செத்துப் போன பார்ப்பன இந்து மதத்தைப் புதைக்காமல் விட்டதைப் போல இந்த அதிகாரவர்க்கத் தரகர்களையும் விட்டுவிட்டால் இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின் இந்த ஒபாமாவதார ஆபாசங்களும் கிருஷ்ணாவதாரக் கதையைப் போல் ஒரு புராணமாக செட்டில் ஆகிவிடும் வாய்ப்பும் இல்லாமல் இல்லை.
இந்தியாவின் ‘பெரும்’ இடதுசாரிக் கட்சியான சி.பி.எம் கட்சி தமது பலத்தை அணிதிரட்டாமல் ஒபாமாவுக்கு வெறும் அடையாள எதிர்ப்பு காட்டப்போதாக அறிவித்ததையே பொறுக்க முடியாமல் ஆன்மீகப் பேரொளி சிரீ.சிரீ ரவிசங்கர் கண்டித்திருக்கிறார்.
ஆளும் வர்க்கத்துக்கே மிகவும் பிடித்தமான ‘தீவிரவாதப்’ பிரச்சினையில் தான் சரியாக ஒத்துழைக்கவில்லை என்பது அவர்களது மனக்குறை. அதற்கே இந்த சாமியார் குதிக்கிறார். ‘அதிதி தேவோ பவ:’ என்ற ஹிந்து கலாச்சாரமே பாதிக்கப்பட்டு விட்டதாக பதறுகிறார். ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாகக்கூறி டாக்டர் ஸுப்ரமண்யம் ஸ்வாமி அவர்கள், ஸுப்ரீம் கோர்ட்டில் ஒரு ஸ்பெஷல் லீவ் பெட்டிஷன் போடக்கூடும். ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளும் களத்தில் குதிக்கக் கூடும்.
ஒபாமா வருகையின் ஒவ்வொரு நொடியும், ஆளும் வர்கத்தின் பவ்யமும், தரகு முதலாளி வர்க்கத்தின் ஏக்கப்பார்வைகளும் முதலாளித்துவ ஊடகங்களில் விரிவாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒரு காட்சி தான் பாக்கி; ஒபாமாவும் மிஷேலும் நடந்து வரும் போது ‘எசமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்…’ என்று பாடிக் கொண்டே சோனியாவும் மன்மோகனும் துண்ணூறு பூசிக் கொள்ளும் காட்சி!
வாராது வந்த இந்த மாமணி ஒன்றும் சும்மாங்காச்சுக்கும் இந்தியாவுக்கு இன்பச் சுற்றுலா வரவில்லை. இப்போது அமெரிக்காவில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. பொருளாதாரப் பெருமந்தத்தைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஒபாமா, தனது தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க முடியவில்லை. அவர் கொண்டுவந்த காப்பீட்டு மசோதா அமெரிக்கர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது உள்நாட்டில் பணப்புழக்கத்தையும் வேலைவாய்ப்பையும் தூண்டிவிட்டாக வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.
இந்தப் பின்னணியில்தான் இந்தியா இராணுவ தளவாட உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதத்திற்கு உயர்த்தியுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் கோடிகள் ($30 Billion) மதிப்புக்கு இராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய இந்திய அரசு பட்ஜட் ஒதுக்கீடு செய்துள்ளதையும் இதனுடன் இணைத்துப் பார்த்தால் ஓரளவு தெளிவான சித்திரம் கிடைக்கும்.
மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க அரசுச் செயலர் ராபர்ட் ஓ ப்ளேக்கின் கூற்றுப்படி, அமெரிக்காவின் F-16 ரக போர் விமானங்கள் இந்திய பாதுகாப்புத் துறையின் டென்டரில் பங்கேற்கிறது – இந்த டென்டரை அமெரிக்கா வென்றால் அது அமெரிக்காவில் 27,000 வேலைகளை உருவாக்கும் என்கிறார் பிளேக். அவர்கள் எப்போதுமே தொழிலாளிகளுக்கு கிடைக்கப்போகும் “ஜாப்” பற்றித்தான் கணக்கு சொல்வார்கள். முதலாளிகளுக்கு கிடைக்கப் போகும் இலாபக்கணக்கை சொல்வது அமெரிக்க மரபு அல்ல. அந்த இலாபமும், இந்திய பாதுகாப்புத் துறையின் சுயேச்சைத் தன்மையைக் குலைப்பதால் கிடைக்கப் போகும் பலனும் தனி கணக்கு. முதலில் F-16 ரக போர் விமானங்கள் டென்டரில் இருந்து நிராகரிக்கப் பட்டதையும், பின்னர் அதை திரும்பச் சேர்த்துக் கொண்டதையும் இப்போது நினைவு படுத்திப் பாருங்கள்.
இதுல ஒரு உள் குத்தும் இருக்கிறது. பாக்கிஸ்தான் விமானப்படையிலும் இந்த எஃப்-16 விமானங்கள் இருக்கின்றன. இந்தியாவிலும் வரப்போகின்றன என்றால் இரண்டில் எது உசத்தியான தேசபக்தி விமானமென்பது தெரியவில்லை.
மேலே சொன்னது இராணுவத் துறையில் மட்டும் தான். உலகளவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 15% அணு சக்தியிலிருந்து உற்பத்தியாகிறது. அணு உலைகளினால் ஏற்படும் கதிர்வீச்சு ஆபத்துகளைக் கணக்கில் கொண்டு அங்கே கழித்துக் கட்டப்பட்ட இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவின் தலையில் சுமத்தவும், அணு தொழில் நுட்பத்தில் இந்தியா பெற்றிருக்கும் சுயேச்சைத் தன்மையைக் குலைக்கவும் போடப்பட்டிருக்கும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அணு உலைகளை அமைப்பதிலுயும் இந்திய அரசு அந்நிய முதலீடுகளை அனுமதித்திருக்கிறது.
இப்படி இறக்குமதி செய்து நிறுவப்படும் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பில் இருந்து அந்நிய முதலாளிகளைக் கழற்றி விடும் வகையிலான சட்டத்தையும் அண்மையில்தான் மன்மோகன் அரசு நிறைவேற்றியிருக்கிறது தொழில்நுட்பக் கோளாறுகள், இயந்திரக் கோளாறுகள், பாதுகாப்புக் குறைபாடுகள் போன்றவற்றால் ஏற்படும் விபத்துகளுக்கான பொறுப்பில் இருந்து அமெரிக்க, அந்நிய முதலாளிகளைத் தப்புவிக்கும் CSC (Convention for supplimentary compensation for nueclear damage) ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்து இட்டுவிட்டது. எல்லாம் திட்டமிட்டபடி வரிசைப் படி செய்து முடித்ததற்காக தன் அடிமைகளை ஒரு வார்த்தை பாராட்டி விட்டு ஒரு மேஸ்திரி பார்வை பார்த்து விட்டுச் செல்லவும், அப்படியே சம்சாரத்தோடு தீவாளி கொண்டாடவும் ஒபாமா வந்து விட்டார்.
இந்திய அமெரிக்க அறிவுத்துறை முன்முயற்சி, விவசாயத்துறையில் அமெரிக்கா கொண்டு வரும் உமியையும், இந்தியா கொண்டுவரும் அவலையும் ரெண்டு பேரும் சேர்ந்து ஊதி ஊதித் தின்பதற்கான ஒப்பந்தம், அப்புறம் 4 கோடி குடும்பங்களின் வயிற்றுப் பிழைப்பான சில்லறை வணிகம் முதலான சில்லறை சமாச்சாரங்களை அமெரிக்காவுக்கு திறந்து விடுவதற்கான சுபமுகூர்த்த நாட்கள்.. போன்றவை இந்த விஜயத்தின் போது முடிவாக இருக்கின்றன.
திவான் பகதூர் மன்மோகன் சிங்கின் விசுவாசத்தையும் சேவையையும் மெச்சி, தெற்காசியப் பிராந்திய பாதுகாப்பு என்ற எல்லையைத் தாண்டி, ஆப்பிரிக்கா உள்ளிட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்காவின் சார்பில் ரோந்துப் பணியில் ஈடுபடும் “பங்களா நாய்” பதவியையும் இந்தியாவுக்கு வழங்கவிருக்கிறார் ஓபாமா.
குனிந்து, வளைந்து கும்பிடு போட்டு, கையது கொண்டு வாயது பொத்தி, “எசமான,.. அப்டியே இந்த பாகிஸ்தானை ‘லைட்டா’ கண்டிச்சி ஒரு வார்த்தை ஒங்க வாயால சொல்லிட்டு போனீங்கன்னா…” என்று ஒபாமாவிடம் இழுத்துப் பார்த்தார் மன்மோகன்சிங்.
“பாகிஸ்தானில் குழப்பம் நிலவுவது (அதாவது நீ குழப்பம் விளைவிப்பது) உனக்கு நல்லதல்ல. பாகிஸ்தான் வளமாகவும், வலிமையாகவும், ஸ்திரமாகவும் இருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது” என்று கூறி நறுக்கென்று மன்மோகன் சிங்கின் தலையில் ஒரு குட்டு குட்டி விட்டார் ஒபாமா. டர்பன் மறைத்திருப்பதால், வீக்கம் வெளியில் தெரியவில்லை. “இருக்கட்டும்.. இருக்கட்டும்… அதனாலென்ன.. சும்மா ஒரு இதுக்கு சொன்னேன் மன்னா…” என்று தலையைத் தடவிக் கொண்டுவிட்டார் மன்மோகன்சிங்.
பரமசிவனுக்கு ஒரு பாம்பு. அமெரிக்காவின் கழுத்திலோ இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டு பாம்புகள். இருந்தாலும் “நீதான் நல்ல பாம்பு” என்று இந்தியாவுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார் ஒபாமா.
மொதல்ல நல்லவரா இருந்தாதானே அப்புறமா இந்தியா வல்லவராக முடியும்?
திரும்பிச் செல்லும் போது ஒபாமார மிஷேலிடம் சொல்வாராயிருக்கும் – “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் ரெண்டு பேருக்கும் நாக்குதான் கொஞ்சம் நீளம். ஓயாமல் நக்கித் தொலைக்கிறார்கள் ” என்று!
____________________________________________
வினவுடன் இணையுங்கள்
தொடர்புடைய பதிவுகள்
- அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்!
- மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா?
- அப்படியா திருவாளர் பிரதமர் அவர்களே! – பி.சாய்நாத்
- பயங்கரவாதி: மன்மோகனிஸ்ட்டா? மாவோயிஸ்ட்டா!
- அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!
- அமெரிக்க கனவு : வீடியோ
- ஒபாமா : ஆனந்தக் கண்ணீரின் அரசியல்!
- ஆரவாரத்தில் ஒபாமா ! அவலத்தில் அமெரிக்க மக்கள் !!
- வாழ்த்துக்கள் கிடக்கட்டும் ஒபாமா ! இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல் !!
- திவாலாகும் அமெரிக்காவிற்கு அடிமையாகும் இந்தியா !
- புஷ்ஷுக்கு செருப்படி – தமிழகத்தில் கொண்டாட்டம் – புகைப்படங்கள் !
“நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்” – ஒபாமா..!…
பாண்டி விளையாண்டது, பல்லாங்குழி விளயாண்டது, டப்பாங்குத்து ஆடியது போன்ற அவதார லீலைகளையெல்லாம் செய்தியாய் வருகின்றன. இன்றைய செய்தி நாளைய வரலாறு. நாளன்னிக்கு புராணம்….
சும்மா காரம் சுர்ர்ருன்ன்னு ஏறுது.
நல்லா வந்திருக்கு. 🙂
1 2 8 9 10
மேலே உள்ள பத்திகளை நீக்கி விட்டு படித்தால் கொடுத்த தலைப்புக்கும் சொல்ல வந்த விசயத்திற்கும் பொருந்திப் போகின்றது.
சே.. மனசு கொதிக்குது…
பூலோக சொர்கமான ரஷ்யா காரனை விட்டு விட்டு…
அற்ப பயல் அமெரிக்க காரனை கொண்டாடினா…?
நம்ம மனசு தாங்க மாட்டேங்குது…
எதாவது செய்யனும் அய்யா?
//“பாகிஸ்தானில் குழப்பம் நிலவுவது “(அதாவது நீ குழப்பம் விளைவிப்பது)” உனக்கு நல்லதல்ல.//
ஓ!!!
சூப்பர் அருமையான ஒரு கட்டுரை..
பதிவை (இன்னும்) படிக்கவில்லை. கார்டூன்ஸ் கலக்கல்
thanks for removing my past comment…
i understood ur politics.. i read some article..i thought vinavu is good and doing good work.finally u proved u r also doing cheating politics..by deleting my comment.
i dont like ur cheep communism.
என்னப்பா சரவணன்! எட்டப்பன்,தொண்டைமான் போன்றவர்கள் உன் சொந்தக்காரர்கள் போல தெரியுது.
அய்யா ரூபகாந்தன் அவர்களே!
எல்ல இந்தியனும் எனக்கு சொந்தகாரங்கன்னு நினைச்சா..
எட்டப்பன்,கந்தப்பன், தொண்டைமான்,தொண்டை இல்லாத மான், சல்மான்,சுந்தரலிங்கம்,சுப்புலிங்கம்,முதலாம் பராந்தகசோழன் எல்லாம் என் சொந்தகாரங்கதான்…..
ஆனால்,இந்தியால பொறந்துட்டு,,, பூலோக சொர்கம் ரஷ்யா விசா வாங்க நிக்குற…உங்களுக்கு…இந்த்யா காரங்க எல்லாம்… எப்படி தெரிவாங்கன்னு தெரியல…
ஏம்ப்பா சரவணா கூட்டிக்கொடுக்குரவங்க,தாய்நாட்டை காட்டிக்கொடுக்குரவங்க எல்லாம் உங்க சொந்தகாரங்கதான்.அன்று கட்டபொம்மன் தாய்நாட்டுக்காக வெள்ளையனை எதிர்த்தான்.பார்ப்பனர்கள்,எட்டப்பன்கள் வெள்ளையனுக்கு பக்கவாத்தியம் வாசித்தார்கள்.இன்று என்ன செய்கிறோம் என்று கொஞ்சம் சிந்தித்துப்பாருங்க. அன்றைக்கு போர் என்பது செல்வங்களைக்கொள்ளையடிப்பதற்காகவும்,அடிமைப்படுத்துவதற்காகவும், பீரங்கிகள்,விமான குண்டுகள் மூலம் செய்து கொள்ளையடித்தார்கள்.இன்று என்ன செய்கிறார்கள் ஒபாம ,காந்தி,மன்மோகன் போன்றோரையும் வளைத்து திறந்த சுதந்திர வாணிபம் என்பதின் மூலமாக கொள்ளையடிக்கிறார்கள். அட நாங்க குரல் கொடுப்பதே தொழிலாளிகளுக்காக மட்டும் இல்லை,உள்நாட்டு முதலாளிகளுக்காவும்தாம்ப்பா.முதலில் அவன் விழுங்குவதே உள்நாட்டு முதலாளிகளைதான்.பிறகு தொழிலாளிகளுக்கு என்று ஒரு நாடே இல்லாத போது நாங்க ஏம்பா ரஸ்யாவுக்கு விசா வாங்கபோரம்.இப்பொழுது ரஸ்சியா,சீனாவெல்லாம் முதலாளித்துவ நாடுகளாக மாறிவிட்டது.
செம நெக்கல்.கலக்கலாக இருக்கு.
[…] This post was mentioned on Twitter by வினவு and nandhakumar, ஏழர. ஏழர said: “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்” – ஒபாமா..! http://j.mp/cpls9K #MustRead #Obama #Vinavu #Cartoons #USofA #ManMohanSingh […]
நல்ல காரம்! ஆனா ஒண்ணு… மன்னுமோகனுக்கு நாக்கு செத்துப்போச்சாம். என்ன காரம் போட்டாலும் ஒண்னுமே உறைக்காதாம்!
பொதுவுடமைவாதிகளே,
மாத வருமானம் 1000 கும் குறைவாக உள்ள நாட்டில், 20000 மேல் சம்பளம் வாங்கும் பொழுது உங்கள் கை கூச வில்லை?
நடபதற்கு செருப்பு வாங்க காசு இல்லாத மக்கள் உள்ள நாட்டில் நீங்கள் பைக், கார் வைத்திருப்பது அருவருபாக இல்லை ?
பெரும்பாலான மக்கள் குடிசையில் வாழும் பொழுது நீங்கள் நல்ல வீட்டில் இருக்கலாமா? அவர்களையும் உங்கள் வீட்டில் தங்க வைக்கலாமே?
ஒரு வகையில் நீங்களும் ஒரு போலி கம்யூனிஸ்ட்
உங்கள் கோபம் நியாயமானது, ஆனால் உங்கள் குற்றச்சாட்டு அனுமானமாக உள்ளது.
அய்யா, நீங்கள் வைத்துள்ள மொபைல் போன் விலை என்ன?
உங்கள் சட்டை, சூ பிராண்ட் என்ன?
ஒருவர் தன்னை பொதுவுடைமைவாதி என்று ஏற்றுக்கொண்டு நடைமுறையில் சமூகத்திடமிருந்து விலகிய அல்லது நிலவும் சமூக அமைப்பை எவ்விதத்திலும் கேள்விக்குள்ளாக்காமல் அதை பாதுகாத்துக்கொண்டே சீர்திருத்தத்துக்காக போராடிக்கொண்டு ஆக மலிவான (தனியுடைமைவாதியாக) சுகபோகவாதியாக வாழ்வாரென்றால் அவர் போலி பொதுவுடைமைவாதிதான். ஆனால் ஒருவர் உண்மையான பொதுவுடைமைவாதியா என்பதை தீர்மானிக்கும் அளவுகோல்கள் என்னென்ன? என்ற கேள்விக்குள் போவதற்கு முன் பொதுவுடைமைத் தத்துவம், கோட்பாடு, கொள்கைகள் பற்றிய தங்களின் மதிப்பீடு அல்லது கண்ணோட்டமாவது கேள்விக்கிடமற்றதா என்பதுதான். என்றாலும் ஒரு கம்யூனிஸ்ட் தனது அலைபேசி, அல்லது இருசக்கர வாகனத்தை வைத்துக்கொண்டு என்ன நோக்கத்துக்காக பயன்படுத்துகிறார் என்பதை வைத்துதான் பார்க்கவேண்டுமேயொழிய அவர் வைத்திருக்கிறா? இல்லையா என்பதை வைத்து அளவிடக் கூடாது.
பாஸ், உங்க மொபைல் போன் விலை சொல்லுங்க, அப்புறமா பதில் சொல்லுறன், ( உண்மையான விலை சொல்லுவீர்கள் என நம்புகிறேன் ..
( அல்லது இது வரை நீங்கள் உபயோகிததிலையே விலை உயர்ந்த போன் விலை)
மூணு நாள் கூத்துக்கு செலவாகும் இந்த 2700 கோடி எத்தனை பேர் வறுமையை நிரந்தரமாக தீர்த்து விடும் என்று இவனுங்களுக்கெல்லாம் தெரியாதா?சோமாலியாவில் எத்தியோப்பாவில் தினந்தோறும் சாகும் மக்கள் எண்ணிக்கை எல்லாம் இவனுங்களுக்கு தெரியாதா?இவ்வளவு போட்டு எவ்வளவு எடுக்கலாம் என்ற முதலாளித்துவ கணக்கு மனிதநேயத்தை மைனஸ் பண்ணிவிடுமா? இராக்குல இத்தினி வருஷமா நீ போடற சண்டைக்கு எவ்வளவு செலவு என்பதை கணக்கு பண்ணாமல் எண்ணெய் விலை ஏறியதில் பத்து ஆயில் கம்பெனிகாரனுக்கு கிடைத்த லாபக்கணக்கை மட்டும் கணக்கு பண்ணுபவர்களை கொண்டாடுவோர் நான் வோட்டு போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் என்பதை எண்ணி தலை குனிகிறேன்.
The details about the money spent is pure guess work with no truth in it. Can the author share how did he know about the statistics? I think only CIA/secret service can know the details, beware, this author may be one of them!!!
அறிவுடையோன்,
இங்கே பாருங்க –
http://economictimes.indiatimes.com/news/news-by-industry/et-cetera/Tata-Suite-where-Obamas-stayed-costs-Rs-7-lakh-per-night/articleshow/6885790.cms
http://www.bbc.co.uk/news/10334239
அதுல ஒரு குறிப்பிட்ட பாட்டிலோட விலை 13 லட்சமாம் (25000 Euro). அப்புறம் சிக்கனு மட்டனு.. போன்ற சைடு டிஷ் வகையறாக்கள்…. இந்த மூணாயிரம் பேருக்கு கம்பேனி கொடுத்து நம்மூரு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஊற்றிக் கொண்டது…. அடேங்கப்பா…. எல்லாம் யாரு ஊட்டுக் காசு???
“பாகிஸ்தானில் குழப்பம் நிலவுவது (அதாவது நீ குழப்பம் விளைவிப்பது) உனக்கு நல்லதல்ல. பாகிஸ்தான் வளமாகவும், வலிமையாகவும், ஸ்திரமாகவும் இருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது” என்று கூறி நறுக்கென்று மன்மோகன் சிங்கின் தலையில் ஒரு குட்டு குட்டி விட்டார் ஒபாமா//
டெண்டர் , வேலை னு இங்கேயும் நிறைய விஷயம் இருக்குமே..
வினவு
அருமையாக ஹிந்து மதத்தை இழிவு படுத்தி இருகிறிர்கள்/ தோலுரித்து இருகிறிர்கள். இதே துணிவுடன், கிருத்துவ , முஸ்லிம் மதத்தை பற்றியும்
ஒரு வார்த்தை எழுதலாமே? பயமாக உள்ளதா?
இது போலி மத வாதமா இல்லை நீங்கள் கிருத்துவ மதத்துக்கு ஆள் பிடிக்கும் கும்பலை சேர்ந்தவரா ?
வினவை தொடர்ந்து படிப்பவராயிருந்தால் இக்கேள்வி வந்திருக்காது..
மத தோலுறிப்பில் பாரபட்சம் இல்லை . சமீபத்தில் வந்தது திருச்சி பாதிரியார் பற்றி…
அதே பதிவில் என் கேள்விகள் இன்னும் விடையளிக்க படாமல் உள்ளன, அதையும் பொய் பாருங்கள்.
வினவின் கருத்து எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில்…
உதாரணம் ஒன்று எடுத்துக் கொள்ளலாம். பார்ப்பனர் மற்றும் தேவர், கவுண்டர், வன்னியர் ஆகிய சாதி சங்கங்களையும் பள்ளர்/ அருந்ததியினரின் சாதி சங்கங்களையும் ‘சாதி வெறி’ என்று ஒரே அளவுகோலால் அளந்து விட முடியாது.
முன்னது தமது ஆதிக்கத்தை தக்கவைத்துகொள்ளும் முயற்சியிலானது. பின்னது தாம் அடிமைப்படுத்தப் படுவதை எதிர்கொள்ள அணிதிரள்கிறது. இரண்டுமே சாதி அடிப்படையில் ஒன்று சேரும் பிற்போக்குத்தனமாது என்பதற்காக அவற்றை ஒரே அளவுகோல் கொண்டு அளக்க முடியாது. சாதி என்ற அடிப்படையில் அணி திரள்வதென்பதே பார்ப்பனியத்தை ஏற்றுக்கொள்வதாகும் என்று அடிப்படை உண்மையை தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் புரியவைத்து ஒடுக்கப்பட்ட உழைக்கிற மக்கள் என்ற வர்க்க அடிப்படையில் ஒன்றாக்குவது தான் ஒரு முற்போக்குக் கட்சியின் வேலை. ஆனால் பார்ப்பனியத்தையும் ஆதிக்க சாதி வெறியையும் கடும் மூர்க்கத்துடன் எதிர்க்க வேண்டும்.
அதுபோல இந்துத்துவம் ஆதிக்கம் செலுத்துகிற இந்தியாவில் மதங்களுள் முதல் எதிரி இந்துத்துவம் தானே? மோடியை கழிசடையான மதவாதியாக ஒத்துகொள்கிற நீங்கள், அவர் அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப் படும் ஆபாசத்தையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள். இங்கே இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் சீக்கியர்களும் ஒடுக்கப் படுகிற மக்களாக இருக்கிறார்கள் என்று தான் இன்றைய நிலவரம் தெரிவிக்கிறது.
வினவில் வறட்டு நாத்திகம் பேசப்படவில்லை. ராமன் பார்ப்பன அடிமை. புராணப் புரட்டு என்றாலும் அதிலும் சூத்திரனை ஒடுக்குகிறான். சும்மா ராமனைத் திட்டினால் ஏசுவையும் திட்டு என்பது நியாயமாக இல்லை. இனத்தால் மதத்தால் சாதியால் ஒடுக்கப்படுவோரின் பக்கம் தான் கம்யூனிஸ்டுகள் இருப்பார்கள் . ஆனால் திருச்சபையின் பெயரால் நடக்கிற அட்டூழியங்களையும், இஸ்லாமில் பெண்ணடிமை பற்றியும் எந்த சமரசமும் இல்லாமல் நிறைய எழுதியிருக்கிறார்கள். கொஞ்சம் பொறுமையாக படிக்கும்படி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
ஆதிக்கம் செலுத்துகிறவனிடம் காட்டுகிற கோபத்தை ஒடுக்கப் படுபவனிடம் காட்ட முடியாது என்பது என் கருத்து.
நீங்கள் ஒடுக்க பட்டவர்கள் என்று சொல்லுபவர்கள் பிற நாடுகளில் அடக்குபவர்களாக இருகிறார்கள். இங்கும் அடக்குபவர்களாக, மற்றவர்களை தன்மதங்களுக்கு இழுக்க விரும்புகின்றார்கலே தவிர , சம உரிமை பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
எவர் தவாறன நம்பிக்கையில் வாழ்ந்தாலும் அவர்களை மாற்றமுயற்சி செய்ய வேண்டும், அவர்களின் அடிபடை நம்பிக்கையே தவறாக இருக்கும் பொழுது , அவர்கள் தங்களை சிறு வட்டத்துக்குள் அடைக்க முயல்வார்கலே தவிர , பரந்த சிந்தனை இருக்காது. அப்புறம் எப்படி சம வுரிமை?
மதம் என்னும் சிறு வட்டத்துக்குள் அடை பட்டுள்ள வரை அவர்கள் ஒடுகபடுவாரகள்.
// ஆதிக்கம் செலுத்துகிறவனிடம் காட்டுகிற கோபத்தை ஒடுக்கப் படுபவனிடம் காட்ட முடியாது என்பது என் கருத்து. //
கோபம் காட்ட வேண்டாம். தவறை சுட்டி காட்டலாம் ..
//
உதாரணம் ஒன்று எடுத்துக் கொள்ளலாம். பார்ப்பனர் மற்றும் தேவர், கவுண்டர், வன்னியர் ஆகிய சாதி சங்கங்களையும் பள்ளர்/ அருந்ததியினரின் சாதி சங்கங்களையும் ‘சாதி வெறி’ என்று ஒரே அளவுகோலால் அளந்து விட முடியாது.
முன்னது தமது ஆதிக்கத்தை தக்கவைத்துகொள்ளும் முயற்சியிலானது. பின்னது தாம் அடிமைப்படுத்தப் படுவதை எதிர்கொள்ள அணிதிரள்கிறது.
//
அதே பள்ளர்/ அருந்ததியியினர் சக்கிலியர்கள் , குறவர்கள் மீது தன் ஆதிக்கத்தை தக்கவைத்து கொள்ள முயல்கின்றர்கள் என்பது எல்லாருக்கும் தெரியும், இரண்டுமே சாதி வெறி, தவிர்க்க பட வேண்டும்,
பார்ப்பனர் செய்வது தவறு, பள்ளர் செய்வது சரியா? இரண்டுமே தவறு, அது போல மதம் எந்த விதத்தில் வந்தாலும் எதிர்ப்பதை விட்டு ஒரு மதத்தை மட்டும் குறை கூறுவது தவறு.
//நீங்கள் ஒடுக்க பட்டவர்கள் என்று சொல்லுபவர்கள் பிற நாடுகளில் அடக்குபவர்களாக இருகிறார்கள்.//
சதாம் ஹுசேனை இராக்கில் கம்யூனிஸ்டுகள் தானே எதிர்த்தார்கள். வினவு பாகிஸ்தானில் இயங்கியிருந்தால் இஸ்லாமிய மதவாதம் தான் முதல் எதிரி. இஸ்லாமியர்கள் எல்லாரும் மத நம்பிக்கையை கைவிட்ட பிறகு தான் குஜராத்துக்கு நீதி கேட்போம் என்று நீங்கள் எதிர்பார்க்கிற வறட்டு மத எதிர்ப்பு இங்கு இல்லை தான்.
//கோபம் காட்ட வேண்டாம். தவறை சுட்டி காட்டலாம் ..//
தாழ்த்தப்பட்ட மக்களும் அருந்ததியினரை ஒடுக்குகிறார்கள்… இஸ்லாமில் பெண்கள் அடிமைப்படுத்தப் படுகிறார்கள்… பாதிரிகள் பாலியல் தவறுகள் செய்கிறார்கள்… சீனா தொழிலாளிகளை சுரண்டுகிறது…
இதில் எந்த விஷயம் வினவிலோ, புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகத்திலோ விமர்சிக்கப்பட்டதில்லை என சொல்ல முடியுமா?
சும்மா குறை கூறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களும் அருந்ததியினரை ஒடுக்குகிறார்கள்… இஸ்லாமில் பெண்கள் அடிமைப்படுத்தப் படுகிறார்கள்… பாதிரிகள் பாலியல் தவறுகள் செய்கிறார்கள்… சீனா தொழிலாளிகளை சுரண்டுகிறது…
இதில் எந்த விஷயம் வினவிலோ, புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகத்திலோ விமர்சிக்கப்பட்டதில்லை என சொல்ல முடியுமா?
சும்மா குறை கூறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது.
தாழ்த்தப்பட்டவனும் இந்துத்துவ பார்ப்பனிய படிக்கட்டை நம்புகிறான். அதனாலேயே ஒடுக்கவும் படுகிறான் என்பதால் தானே பார்ப்பனிய ராமன் விமர்சிக்கப் படுகிறான்.
//தாழ்த்தப்பட்ட மக்களும் அருந்ததியினரை ஒடுக்குகிறார்கள்… இஸ்லாமில் பெண்கள் அடிமைப்படுத்தப் படுகிறார்கள்… பாதிரிகள் பாலியல் தவறுகள் செய்கிறார்கள்… சீனா தொழிலாளிகளை சுரண்டுகிறது…//
மதவாதிகளை விமர்சித்துள்ளனர் , எங்கேயும் மதத்தை விமர்சிக்கவில்லை, ..
வினவு கட்டுரையாளர்கள் பதிலளிக்க முடியாதோ?
//சதாம் ஹுசேனை இராக்கில் கம்யூனிஸ்டுகள் தானே எதிர்த்தார்கள் //
அமெரிக்க கைகூலிகள் எதிர்த்தார்கள், அவங்கள் கம்யூனிஸ்டுகளா என எனக்கு தெரியாது…
// சும்மா குறை கூறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. //
என்ன சொன்னாலும் ஆமாம் என்று சொல்ல வேண்டும் என விரும்புகின்றிர்களா ???
அப்படியாயின் இந்து மதத்தை பற்றி 10 கட்டுரை எழுதும் பொழுது மத மதத்தை பத்தி ௧ கட்டுரை எழுதலாமே .. மருந்துக்கு கூட எதுவுமில்லை. ஏன் இந்த ஒரு தலைபற்றம்???
பிற மதத்தவர் மதம் எனும் மதத்தில் இருந்து வெளி வர வேணாமா?????
காலப்போக்கில் அனைத்து மதங்களுமே சுரண்டல் வர்க்கங்களின் கருவியாக மாறியபோதிலும் மற்ற மதங்கள் தோன்றியதற்கும் இந்துமதம் தோன்றியதற்கும் அடித்தளத்திலே பாரிய வேறுபாடுகள் உள்ளன. அடிமைகளின் விடுதலைக்காக தோன்றியது கிறித்துவம், இனக்குழுக்களின் ஒற்றுமைக்காக தோன்றியது இஸ்லாம், அடக்கி ஒடுக்கப்பட்ட கீழ்த்தட்டு சாதியினருக்காக உருவானது பௌத்தம். இவை அனைத்துமே தத்தமது மதத்தில் உள்ளவர்களுக்கு சமத்துவத்தையே அளிக்கின்றன. ஆனால் இந்து மதம் மட்டுமே தோன்றும்போதே ஆதிக்க வர்க்கங்களின் கருவியாக தோன்றியது. ஆதிக்கவெறியும் இனவெறியும் சுரண்டலும் இதன் வழிமுறை,கோட்பாடுகள். பிறப்பிலிருந்தே ஏற்றத்தாழ்வை உருவாக்கியது இந்துமதம் மட்டுமே. ஏனைய மதங்களைப் போலல்லாமல் இந்துமதம் தன் மதத்திலுள்ள சக மனிதனையே இழிவு படுத்துகிறது.கீழ்த்தட்டு மக்களை சுரண்டுவதை பிறப்பாலேயே தீர்மானித்துவிடுகிறது. எனவேதான் இந்துமதத்தை அதனின் ஆன்மாவிலிருந்தே கடுமையாக எதிர்க்கவேண்டியுள்ளது.
இந்துயிசத்தின் ஆன்மாவே, மையக்கோட்பாடே ஒழுக்கநெறியற்றதும், மனிதநேயமற்றதும் ஆகும்.- அம்பேத்கர்.
இதனை நான் மறுக்கவில்லை, கிறித்துவம்,இஸ்லாம் ஒடுக்கப்பட்ட கீழ்த்தட்டு மகளுகாக உருவாகபடிருகலாம், ஆனால் அவை காட்டும் வழிமுறை என்ன? சுவர்க்கம் / பரலோக பதவி ,,, & கடவுள்,
கிறித்துவம்,இஸ்லாம் கடவுள்கள் என்று சொல்லுகிண்டிர்களா ?
இயேசு செத்த பிறகு உயிரோடு வந்தார் என்பது புரட்டு இல்லை ??????????????????????????????????????????
கிறித்துவம்,இஸ்லாம் மதங்கள் கடவுள் என்பதை கொண்டே உருவாகபட்டன, அந்த கடவுள்களை மன்னித்து விட்டுடலாமா?
இயேசு செத்த பிறகு உயிரோடு வந்தார் என்பது புரட்டு இல்லை ??????????????????????????????????????????
இந்த கேள்விகளுக்கு நேரடியான பதில் கொடுக்கவும், கருணாநிதி ஸ்டைல் பதில் வேணாம், மத நம்பிக்கை உள்ளவர்கள் , தயவு செய்து இதற்கு பதில் அளிக்க வேண்டாம்,
ஒரு மார்க்சியவாதி பொருள்முதல்வாதியாகத்தான் இருக்கவேண்டும். அதாவது மதத்தின் எதிரியாகத்தான் இருக்கவேண்டும்.-லெனின்
மதங்களின் எதிரிகள் கம்யூனிஸ்டு எனும்போது உங்களின் முதல்கேள்வி தேவையற்ற ஒன்று. மதங்களை எதிர்த்து போராடுவதென்பது ஒரு பாட்டாளி வர்க்க கட்சியின் கடமையுங்கூட.
இயேசு செத்த பிறகு உயிரோடு வந்தார் என்பது புரட்டுதான்.
இங்கு (வினவில்) இந்துமதத்தை விமர்சித்து தனிப்பட்ட ரீதியில் எந்தக் கட்டுரையும் இல்லை. மதம் தனிப்பட்ட விவகாரமாக இருக்கவேண்டும். ஆனால் இந்தியாவில் பார்ப்பனீயம் சட்டவடிவமாக உள்ளது, மேலும் அரசின் செல்லப்பிள்ளையாகவும், ஆதிக்க வ்ர்க்கத்தின் சுரண்டும் கருவியாகவும் உள்ளது. எனவே அரசியல்,சமூகப் பிரச்சினைகளைப் பற்றி எழுதப்படும்போது பார்ப்பனீயத்தையும் விமர்சினத்திற்குள்ளாக்க வேண்டிய தேவையுள்ளது. இதன் காரணமாகவே இந்துமதத்தைப் பற்றி அதிகம் எழுதப்படுவதாக உங்களுக்குத் தோற்றமளிக்கிறது.
“ஒரு மார்க்சியவாதி பொருள்முதல்வாதியாகத்தான் இருக்கவேண்டும். அதாவது மதத்தின் எதிரியாகத்தான் இருக்கவேண்டும்” – அப்படீன்னு ரூல்ஸ் போட்டு எதிர்த்தா அப்ப அதுவும் ஒரு மதம் தானே?
சீனு,
உடம்பில் இருக்கும் சிரங்கு போன்று சமூகத்திற்கு கேடுவிளைவிப்பது மதம். அதை ஒழித்துக்கட்டுவதைவிடுத்து வேறு என்ன செய்யலாம்!
ஆனாலும் நாத்திகர்களைப் போன்று மதத்தைக் கரடுமுரடாக எதிர்ப்பதை மார்க்சியம் மறுக்கிறது.
இந்துமதத்தைப் பற்றி அதிகம் எழுதப்படுவதாக தோன்றவில்லை,, அதுதான் உண்மை. இந்து மதம் பல இடங்களில் கடுமையாக விமர்சிக்க பட்டுள்ளது. மற்ற மதங்களில் சில மோசமான மதவாதிகள் மட்டும் உறுகாயாக விமர்சிக பட்டுள்ளனர்.. ஒடுக பட்டவர்கள் மதம் என்னும் ஒரு தவறான கோட்பாட்டில் கட்டுண்டு கிடக்கும் பொது எங்கிருந்து புரட்சி வரும், முதலில் அவர்களிடம் உள்ள தவறான நம்பிக்கைகள் நீக்க பட்டு, ஓன்று பட வேண்டும், அது வரைக்கும் எதுவும் நடக்காது, குட்டை குழம்பி கொண்டே இருக்கும், மீன் அறுவடை அமோகமாக இருக்கும்.
சவுதியில் பணிப்பெண்களுக்கு நேரும் கொடுமைகளை விளக்கிய ஒரு பதிவில் குரான் வசனங்கள் விமர்சிக்கப் பட்டன. பதிவுலகின் ஒட்டு மொத்த இஸ்லாமிய மதவாதிகளும் அங்கே ஆஜராகி எதிர்ப்பு தெரிவித்து RSS -வும் ம.க.இ.க வும் ஒண்ணுன்னு தீர்ப்பு சொன்னாங்க. https://www.vinavu.com/2010/08/13/saudi-women-labours/
பெரியார் தாசன் மதம் மாறியதை பற்றிய விமர்சனக் கட்டுரையிலும் விவாதத்திலும் இஸ்லாம் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு உள்ளது. https://www.vinavu.com/2010/04/19/periyardasan-islam/
இஸ்லாமில் பெண்கள் நிலைமை குறித்த பதிவில் புர்கா, தலாக் விஷயங்கள் விமர்சிக்கப் பட்டன. https://www.vinavu.com/2010/03/22/muslim-women-today/
வினவில் கட்டுரைகள் எழுதிய ம.க.இ.க தோழரான செங்கொடி போன்றோர் அதையே பெரும்பணியாக செய்து வருகிறார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட பதிவுகள்.
http://senkodi.wordpress.com/
நீங்கள் ஒரு கட்டுரை தான் கேட்டீர்கள். உங்களுக்கு நிறைய கொடுக்கப் பட்டிருக்கிறது. படித்து பார்க்கச் சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது என்பதால் இதற்கு மேல் உங்கள் இஷ்டம். 🙂
//இயேசு செத்த பிறகு உயிரோடு வந்தார் என்பது புரட்டு இல்லை ????????
இந்த கேள்விகளுக்கு நேரடியான பதில் கொடுக்கவும், கருணாநிதி ஸ்டைல் பதில் வேணாம், //
சினிமா விமர்சனங்களில் எந்திரனின் ஏகாதிபத்தியத்தையும் , உன்னைப் போல் ஒருவனின் பாசிசத்தையும் விமர்சித்த போது, விஜய்யின் ‘சுறா’ வை என் பொறித்து எடுக்கவில்லை என்று கேட்டால்…. என்ன சொல்வதென்றே தெரியாமல் விழி பிதுங்குகிறேன். 🙂 🙂
பாஸ், என்னால பழைய படி முதல்ல இருந்து வர முடியாது,
நீங்கள் கொடுத்த சுட்டிகளை மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள், இந்து மதத்தை விமர்சிக்கும் சுட்டிகளையும் படித்து பாருங்கள், இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியாது எனில் நாம் இருவரும் விவாதம் செய்வதில் அர்த்தம் இல்லை. .. 🙂
இந்து மதத்தை விமர்சிக்கும் பொழுது பயன் படுத்திய வார்த்தைகள் என்ன? நீங்கள் கொடுத்த சுட்டிகளில் ஒரு மென் போக்கை உங்களால் உணர முடிய வில்லை? ஏன் முஸ்லிம் மதத்தை கடுமையாக விமர்சிக்க பயமா?
குரானுக்கு ஏன் அவ்வளவு மரியாதை? கீதை, மனு தர்மம் பற்றி சொல்லும் பொது பயன் படுத்தப்படும் வார்த்தைகள் என்னன்ன என நினைத்து பாருங்கள் ..
ஒரு கண்ணில் சுண்ணாம்பு, 🙂
@கலை
முஸ்லிம்கள் மதத்தில் மூழ்கி உள்ளனர், அவர்களிடம் உள்ள மத நம்பிக்கை சிலரால் தவறாக பயன்படுத்த படுகிறது, இல்லாத கடவுளுக்காக தீவிரவாதம் பக்கம் செல்கிறார்கள். அவர்களின் (தீவிர மதவாதிகள்) ) எண்ணம் பிற மதத்தவர்கள் பாவிகள், சாத்தான்கள்.
கிருத்துவ மதத்தை பெரும்பான்மையானவர்களாக மாற்றி தங்கள் வருமானத்தை பெருகலாம் என சிலர் செயல் படுகிண்டனர்.
அந்த மதங்களுக்குள்ளும் பல பிரிவுகள் உள்ளன, அவர்களுளும் சண்டை உள்ளது..
ஒடுக பட்டவர்கள் மதம் மாறினால் அவர்கள் வாழ்வு மேம்பட்டு விடுமா என்ன? அவர்கள் மதத்தை விட்டு வர வேண்டுமே தவிர மத மாற்றத்தால் அவர்கள் வாழ்வில் எந்த மற்றமும் வராது … நீங்கள் ஈழ தமிழர் என நெனைக்கிறேன் . நீங்கள் தமிழக கடலோர மாவட்டங்கள் பக்கம் வந்து பாருங்கள், புரியும்..
// ஆனாலும் நாத்திகர்களைப் போன்று மதத்தைக் கரடுமுரடாக எதிர்ப்பதை மார்க்சியம் மறுக்கிறது. //
மார்க்சியம் ஏன் ஒரு தலை பற்றமாக செயல் பட வேண்டும். எதிர்தால் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் . இல்லையெண்டால் அது குறிப்பிட்ட மதத்தை சாந்து செயல் படுவது போல் இருக்கும்.
கருணாநிதியின் பகுத்தறிவு போல இந்து மதத்தை திட்டி விட்டு , குல்லா போட்டு நோன்பு கஞ்சி குடிப்பது போல உள்ளது..
இதன் பெயர் நடு நிலை இல்லை..
ஆதிக்கம் செலுத்துகிறவனிடம் காட்டுகிற கோபத்தை ஒடுக்கப் படுபவனிடம் காட்ட முடியாது என்பது என் கருத்து – என்று நான் சொன்னதற்கு நீங்கள் அளித்த பதிலை நியாபகப் படுத்துகிறேன்.
///கோபம் காட்ட வேண்டாம். தவறை சுட்டி காட்டலாம் ..///
//ஒரு கண்ணில் சுண்ணாம்பு//
இந்துயிசத்தின் ஆன்மாவே, மையக்கோட்பாடே ஒழுக்கநெறியற்றதும், மனிதநேயமற்றதும் ஆகும்.- அம்பேத்கர்.
அதனால் தான் சுண்ணாம்பு வைக்கப்படுகிறது.
சக மனிதரில் சிலர் பிறப்பால் கீழானவர்கள் என்கிற இந்து பார்ப்பனிய எண்ணமும் , இயேசு உயிர்த்தெழுந்தார் என்கிற மூடநம்பிக்கையும் ஒன்றா?
அணைத்து மதங்களின் மைய கோட்பாடே கடவுள்
ராஜசேகர்,
###முஸ்லிம்கள் மதத்தில் மூழ்கி உள்ளனர், அவர்களிடம் உள்ள மத நம்பிக்கை சிலரால் தவறாக பயன்படுத்த படுகிறது, இல்லாத கடவுளுக்காக தீவிரவாதம் பக்கம் செல்கிறார்கள். அவர்களின் (தீவிர மதவாதிகள்) ) எண்ணம் பிற மதத்தவர்கள் பாவிகள், சாத்தான்கள்.###
முஸ்லீம்கள் மதத்தில் மூழ்கி உள்ளனர் என்ற உங்களது கூற்றை நான் மறுக்கிறேன். முஸ்லீம்கள் மதத்தில் மூழ்கியுள்ளவர்களாக இருந்தால் இன்றைய நிலையில் இருக்கும் பள்ளிகள் போதாது. முஸ்லீகளின் முக்கிய கடமையான ஐவேளைத் தொழுகையின் போது ஒரு பள்ளிக்கு 10 பேர் கூட தேறமாட்டார்கள். குறிப்பாக தர்ஹா வழிபாடு என்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது. ஆனாலும் இன்றளவும்கூட உழைக்கும் முஸ்லீம்கள் தர்ஹாவில் நடத்தப்படும் சந்தனக்கூடு நிகழ்ச்சிகளில் திரளாகவே கலந்துகொள்கின்றனர். மேலும் முஸ்லீம்கள் கிருத்துவர்களைப் போல சில இந்துமத சடங்குகளை நடைமுறையில் பின்பற்றுவதில்லை, இதனாலே அவர்கள் அனைவருமே மதக்கடுங்கோட்பாட்டுவாதிகளாக உங்களது பார்வைக்குத் தெரிகின்றனர். மிகச்சிலரே கடும் மதக்கோட்பாட்டுவாதிகளாக உள்ளனர். இது அனைத்து மதங்களிலும் உள்ள நிலைதானே. கிறித்துவத்தில்கூட அல்லேலூயாக்களே மதக்கோட்பாட்டுவாதிகளாக உள்ளனர். தன் மதத்தைப் பின்பற்றுபவனைத் தவிர மற்றவர்கள் பாவிகள் என எல்லா மதங்களும், மதத்தவர்களுமே போதிக்கின்றனர். ஆனாலும் இந்து மதம் மட்டுமே தன் மத சக மனிதனையே தேவடியாள் மகன் என இழிவுபடுத்துகிறது.
###கிருத்துவ மதத்தை பெரும்பான்மையானவர்களாக மாற்றி தங்கள் வருமானத்தை பெருகலாம் என சிலர் செயல் படுகிண்டனர்.###
இது இந்து மதத்தின் இயலாமையின் ஆதங்கம்.
###அவர்கள் மதத்தை விட்டு வர வேண்டுமே தவிர மத மாற்றத்தால் அவர்கள் வாழ்வில் எந்த மற்றமும் வராது … நீங்கள் ஈழ தமிழர் என நெனைக்கிறேன் . நீங்கள் தமிழக கடலோர மாவட்டங்கள் பக்கம் வந்து பாருங்கள், புரியும்.###
மதமாற்றம் என்பது பொருளாதார ரீதியில் மாற்றத்தைக் கொடுக்காது என்பது மெய்தான் என்றாலும் சுயமரியாதையுடன் வாழ விரும்பியே மதம் மாறுகின்றனர். தமிழக கடலோர மாவட்டங்களில் என்ன நிலை? அப்பகுதிகளில் ஆர் எஸ் எஸ்ஸின் சீண்டுதல் அதிகம் உள்ளன. அதையும் கணக்கில் கொள்ளுங்கள். இந்துமதத்தில் உள்ள பிரிவிற்கும் மற்ற மதங்களில் உள்ள பிரிவிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. பார்ப்பான் என்ன தவறுகள் செய்தாலும் பாரபட்சமான சலுகையைக் கொண்டுள்ளது இந்துமதம். இதுபோன்று மற்ற மதங்களிலும் உள்ளது என உங்களால் கூறமுடியுமா?
இந்துமதத்தைப் விட்டு வெளியேறுவதுற்கு அம்பேத்கர் கூறியது. என் சுயமரியாதை உணர்வு இந்துமதத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.-அம்பேத்கார்
ராசசேகர்.
இந்து மதத்தை வினவு விமர்சித்தால் அந்த விமர்சனத்துக்கு உங்கள் பதில் என்ன என்பதை பதிவு செய்யலாம்.அதை விடுத்து இசுலாம் மதத்தையும் கிறித்துவ மதத்தையும் ஏன் விமர்சிக்கவில்லை என கேட்கிறீர்கள்.இதுதான் விமர்சனத்துக்கான உங்கள் விடையா.
வினவின் ஆதரவாளர்கள் வினவு அப்படி ஓரவஞ்சனையாக நடந்து கொள்ளவில்லை என இவ்விரு மதங்களையும் விமர்சிக்கும் வினவின் பழைய கட்டுரைகளை சுட்டிக்காட்டி நேர்மையாக வாதிடுகிறார்கள்.ஆனால் நீங்களோ வினவு விமர்சித்துள்ளது,ஆனால் கடுமை போதாது என்கிறீர்கள்.இது சரியான பதிலாகுமா.
இசுலாமும் கிறித்துவமும் விமர்சிக்கப்படும் கட்டுரைகளின் பின்னூட்டாங்களை படித்து பாருங்கள்.அம்மதங்களுக்கு ஆதரவாக வாதிடும் அம்மத அன்பர்கள் எவரும் பிற மதங்களை இழுத்து குறை கூறவில்லை.அதே போன்ற நாகரீகத்தை உங்களிடம் கோருகிறேன்.உங்களின் இந்து மதம் விமர்சிக்கப்பட்டால் அதற்கு பதில் சொல்லுங்கள்.
// இசுலாமும் கிறித்துவமும் விமர்சிக்கப்படும் கட்டுரைகளின் பின்னூட்டாங்களை படித்து பாருங்கள்.அம்மதங்களுக்கு ஆதரவாக வாதிடும் அம்மத அன்பர்கள் எவரும் பிற மதங்களை இழுத்து குறை கூறவில்லை.அதே போன்ற நாகரீகத்தை உங்களிடம் கோருகிறேன்.உங்களின் இந்து மதம் விமர்சிக்கப்பட்டால் அதற்கு பதில் சொல்லுங்கள்.
//
பிராமணர்கள் சூதிரர்கலை தானே கீழ்த்தரமாக நடத்துகிறார்கள், உங்கள் ஜாதியை இல்லையே என நான் கேட்டால் அது கீழ்த்தரமாக இருக்காதா?
நீங்கள் பொதுவுடமைவாதி, முதலாளித்துவம் பற்றி விமர்சிப்பது நாகரிகமா என கேட்டால் அது எவ்வளவு நகைச்சுவையாக இருக்கும்???
எனது வாதத்திற்கு இது பதிலல்ல. இந்து மதத்தின் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டால் அதற்கு தகுந்த பதில் சொல்லுங்கள்..பிற மதங்களின் குறைபாடுகளை சுட்டிகாட்டுவது தக்க பதிலாகாது என்கிறேன்.அதற்கு என்ன பதில்.
\\\\\\\\இசுலாமும் கிறித்துவமும் விமர்சிக்கப்படும் கட்டுரைகளின் பின்னூட்டாங்களை படித்து பாருங்கள்.அம்மதங்களுக்கு ஆதரவாக வாதிடும் அம்மத அன்பர்கள் எவரும் பிற மதங்களை இழுத்து குறை கூறவில்லை.அதே போன்ற நாகரீகத்தை உங்களிடம் கோருகிறேன்.உங்களின் இந்து மதம் விமர்சிக்கப்பட்டால் அதற்கு பதில் சொல்லுங்கள்.
//
பிராமணர்கள் சூதிரர்கலை தானே கீழ்த்தரமாக நடத்துகிறார்கள், உங்கள் ஜாதியை இல்லையே என நான் கேட்டால் அது கீழ்த்தரமாக இருக்காதா?///////
இந்து மதத்தில் சூத்திரர்கள் நடத்தப்படும் விதம் குறித்து இங்கு நான் ஏதும் சொல்லவில்லையே,என்னிடம் எப்படி இந்த கேள்வியை எழுப்ப முடியும்.
\\\\\\\நீங்கள் பொதுவுடமைவாதி, முதலாளித்துவம் பற்றி விமர்சிப்பது நாகரிகமா என கேட்டால் அது எவ்வளவு நகைச்சுவையாக இருக்கும்??/////////
பொதுவுடைமை சித்தாந்தமும் முதலாளித்துவமும் ஒன்றுக்கொன்று எதிரானவை.ஒன்றை வீழ்த்தாமல் மற்றொன்று உயிர்த்திருக்க முடியாது.ஆகவே அவர்களுக்குள் விமரசனங்கள் தவிர்க்கமுடியாதவை.இந்த மதமும் பிற மதங்களும் அப்படி ஒன்றுக்கொன்று எதிரிகள் அல்லவே.அதனால்தான் இந்து மத அன்பர்களும் பிற மத அன்பர்களும் அப்படி ஒருவரையொருவர் எதிரியாக கருதுவதில்லை.
.
முடியல.. உங்கள் பாணியில் கேக்கிறேன் .
மதங்களை குறை சொல்வதற்கு நீங்கள் யார்?
//முடியல..//
எங்களுக்கும்தான் முடியல.
/கையப்புடுச்சு இழுத்தியா/
என்ன கையப்புடுச்சு இழுத்தியான்ற ரேஞ்சுக்கு விவாதம் பண்றீங்களே.
உங்கள் பாணியில் கேக்கிறேன் .
மதங்களை குறை சொல்வதற்கு நீங்கள் யார்/
உங்கள் பாணியில் நானும் கேக்கிறேன் . அதைக் கேட்க நீங்கள் யார்?
ராசசேகர்,உங்கள் பாணியிலேயே இதற்கொரு பதில்,
\\கிறித்துவம்,இஸ்லாம் ஒடுக்கப்பட்ட கீழ்த்தட்டு மகளுகாக உருவாகபடிருகலாம், ஆனால் அவை காட்டும் வழிமுறை என்ன? சுவர்க்கம் / பரலோக பதவி ,,, & கடவுள்,
கிறித்துவம்,இஸ்லாம் கடவுள்கள் என்று சொல்லுகிண்டிர்களா ?
இயேசு செத்த பிறகு உயிரோடு வந்தார் என்பது புரட்டு இல்லை ??????????????????????????????????????????//
கிறித்துவ,இசுலாமிய மதங்களை இப்படி விமரிசிக்க நீங்கள் யார்.
எனது பாணி பதில் கீழே.
மதங்கள்/சித்தாத்தங்கள் எதுவுமே விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல.ஒரு கொள்கையை பரந்து பட்ட மக்களுக்கானது என ஒரு சாரார் முன் வைக்கும்போது அதை ஏற்காதவர்கள் அதில் தாங்கள் காணும் குறைபாடுகளை எடுத்து வைக்கிறார்கள்.அதுதானே விமரிசனம்.அக்கொள்கையை நேசிப்பவர்கள் அந்த விமரிசனத்திற்கு பதில் சொல்கிறார்கள்.பதிலும் விமரிசிக்கப் படுகிறது.அதற்கும் விளக்கம் தரப்படுகிறது.இப்படியாக நீண்டு செல்லும் விவாதத்தை படிப்பவர்கள்/கேட்பவர்கள் இரு தரப்பு விவாதங்களையும் சீர்தூக்கி பார்த்து எது சரியானது என்று ஒரு முடிவுக்கு வரலாம்.ஆகவே ஆக்கபூர்வமான விமரிசனங்களும் அது பற்றிய ஆரோக்கியமான விவாதங்களும் வரவேற்கத் தக்கவையே.
உங்களிடம் கூட நான் வைத்த கோரிக்கை என்ன.உங்கள் இந்து மதம் விமரிசிக்கப்பட்டால் அதற்கான பதிலை சொல்லுங்கள் பிற மதங்களில் நீங்கள் காணும் குறைகளை பதிலாக தர முடியாது என்பதுதான்.
@ கலை
// உங்களின் இந்து மதம் விமர்சிக்கப்பட்டால் அதற்கு பதில் சொல்லுங்கள். //
( அணைத்து உரிமைகளும் உள்ள கட்ட பஞ்சயது போல, ,, இந்து மதத்தை பத்தி மட்டும் நான் பேச வேண்டுமாம், அதான் நாகரிகமாம் 🙂 )
என்று திப்பு கேட்டதற்கு எனது பதில்
// பிராமணர்கள் சூதிரர்கலை தானே கீழ்த்தரமாக நடத்துகிறார்கள், உங்கள் ஜாதியை இல்லையே என நான் கேட்டால் அது கீழ்த்தரமாக இருக்காதா?
நீங்கள் பொதுவுடமைவாதி, முதலாளித்துவம் பற்றி விமர்சிப்பது நாகரிகமா என கேட்டால் அது எவ்வளவு நகைச்சுவையாக இருக்கும்???
//
இதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் நீங்கள் பேசுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது.
வீட்டில் யாராவது பெரியவங்க இருந்தா வர சொல்லுங்க ,, 🙂
\\( அணைத்து உரிமைகளும் உள்ள கட்ட பஞ்சயது போல, ,, இந்து மதத்தை பத்தி மட்டும் நான் பேச வேண்டுமாம், அதான் நாகரிகமாம் )//
புதிய பதில்கள் எதுவும் தேவைபடாத வாதம் இது
\\மதங்கள்/சித்தாத்தங்கள் எதுவுமே விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல//
\\இந்து மதத்தின் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டால் அதற்கு தகுந்த பதில் சொல்லுங்கள்..பிற மதங்களின் குறைபாடுகளை சுட்டிகாட்டுவது தக்க பதிலாகாது என்கிறேன்.அதற்கு என்ன பதில்//
//“நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் ரெண்டு பேருக்கும் நாக்குதான் கொஞ்சம் நீளம். ஓயாமல் நக்கித் தொலைக்கிறார்கள் ”// Excelent comment..
மிகவும் அருமை ஆனாலும் இன்னும் வரும் நாட்களில் இந்த (ஒ)பாமா விஜயம் தொடர்பாக மிகவும் விரிவான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
செங்கொடி வீரர்களே,
இந்த செய்தியை பாருங்கள்
http://thatstamil.oneindia.in/news/2010/11/09/sinhala-families-be-settled-jaffna.html
உங்களுக்கெல்லாம் எத்தன தடவ சொல்றது? ச்சே…
வினவில் ‘மாஃபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்’!’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் ஒரு பத்தி…
https://www.vinavu.com/2010/01/27/chinese-mafia/
“மகத்தான சீனப் புரட்சியின் 60-வது ஆண்டுவிழாவை உலகெங்குமுள்ள புரட்சிகர-ஜனநாயக சக்திகள் கொண்டாடிவரும் இத்தருணத்தில், சீன நாடானது முதலாளித்துவத்தின் எல்லா கடைகோடி கழிசடைத்தனங்களையும் கொண்டு சீரழிந்து நிற்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக அந்நாடு பின்பற்றிவரும் முதலாளித்துவம், இன்று அந்நாட்டையே அச்சுறுத்தும் அபாயமாக மாறி, நாட்டையும் மக்களையும் வதைத்துக் கொண்டிருக்கிறது. சீரழிந்த சீனா, இன்னுமொரு பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியை எதிர்நோக்கி நிற்கிறது.”
இதிலிருந்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீகள்?
பலரின் அழிவில்தான் ஒருவன் நன்றாக வாழ முடியும் என்பதனை communism பின்பற்றும் நாடுகளும் கோட்பாடாக கொண்டுள்ளன .
communism என்ற போர்வையில் சர்வாதிகார ஆட்சி நடத்துவது எளிது . மதம் எதற்காக உருவாக்கப்பட்டதோ , அதனை போல communism உருவாக பட்டுள்ளது . கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்ன அடித்தட்டு மக்கள் போல குடிசையிலா இருந்தார்கள் ? ஸ்டாலின் ,லெனின் போன்றவர்கள் வாழ்ந்த வீடு, வாழ்க்கை முறை ஆகியவை பற்றிய ஆவணங்கள் பார்க்கவும்.
ராஜசேகர்,
கம்யூனிசம் என்று பெயர் தாங்கியிருந்தாலே அது கம்யூனிச நாடு என்ற உங்களது புரிதல் தவறானது. உங்களது குற்றச்சாட்டுகளுக்கு பதில்களாக வினவில் பல கட்டுரைகளும் பல பின்னூட்டங்களும் உள்ளன படித்துப் பாருங்கள்.
ராஜசேகர்,
கம்யூனிசம் என்று பெயர் தாங்கியிருந்தாலே அது கம்யூனிச நாடு என்ற உங்களது புரிதல் தவறானது. உங்களது குற்றச்சாட்டுகளுக்கு பதிகளாக வினவில் சில கட்டுரைகளும் தோழர்களின் பல பின்னூட்டங்களும் உள்ளன. படித்துப்பாருங்கள்
ஹ்ம்ம் பதில் சொல்ல முடியவில்லை எனில் அங்க பொய் பார், இங்க பொய் பார் என சொல்வதையே வழக்கமாக கொண்டுளீர்கள்,
எனது பிற கேள்விகளுக்கும் இதே பதிலா?
மதத்தை பின்பற்றுவர்களுக்கு உங்களால் எளிதாக பதிலளிக்க முடியும், அதனால் பக்கம் பக்கமாக எழுதுவீர்கள், நல்ல கொள்கை ..
சிறுபான்மையின மக்களை தன பக்கம் இழுக்க கருணா பின்பற்றும் மத சார்பின்மை, ஆதிகம் போலவா?
தூங்குபவனை எழுப்பிவிடலாம் ராஜசேகர். தூங்குபவனைப் போல் நடிப்பவனை எழுப்பமுடியாது. சீனா இன்னமும் கம்யூனிச நாடு என்று அடம்பிடிக்கும் உங்களிடம் என்னத்த விவாதிப்பது. லெனினைப் பற்றியும் ஸ்டாலினைப் பற்றியும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு அவதூறு பரப்பியாயிற்று. இருந்தும் கம்யூனிசத்தை மக்களிடமிருந்து அகற்றமுடியாததினால் முதலாளிகளுக்கு வேறுவழியில்லை, இன்றுள்ள சீனாவைக்காட்டி பயமுறுத்துவதைத் தவிர. கம்யூனிசம் செத்துவிட்டது என்று ரஷ்யாவைக் காட்டி ஒப்பாரி வைத்தாயிற்று. எனவே இனி ரஷ்யாவைக் கூறமுடியாது என்பதினால் மேதகு கனவான்கள் சீனாவைக் காட்டி பயமுறுத்திக் கொண்டிருக்கின்றனர்.
சீனா கம்யூனிச நாடல்ல. மேலதிக விபரங்களுக்கு போதம்கின் கொடுத்துள்ள சுட்டியைப் படியுங்கள்.
ஸ்டாலின் ,லெனின் போன்றவர்கள் வாழ்ந்த வீடு, வாழ்க்கை முறை ஆகியவை பற்றிய கட்டுரை எழுத முடியுமா ? வீட்டின் அளவுகள், படுக்கை அறையின் அழகு பற்றி விவரித்து எழுத முடியுமா? அதே நேரத்தில் அங்கு வாழ்ந்த சராசரி மனிதனின் வாழ்க்கை முறையையும் நடு நிலையுடன் அலசி ஒரு பதிவு எழுத முடியுமா?
எங்குமே கம்யூனிசம் நெடு நாள் வெற்றி பெறவில்லை. சிலர் கம்யூனிச போர்வையில் சர்வாதிகாரம் செய்தார்கள் ..
மனிதனாகப் பிறப்பவர்களெல்லாம் மனிதனாகிவிட முடியுமா? நிச்சயமாக முடியாது. லெனின், ஸ்டாலின் மனிதத்தின் குறியீடுகள். உலகில் மனிதனாக வாழ்ந்த சில மனிதர்களில் இவ்ர்களும் அடங்கும்.
குறைந்த பட்சம் இதைப் புரிந்துகொள்ள வேண்டாம். விளையாட்டுக்காகவாவது உங்களால் இந்த குணாம்சத்தைப் பற்றி சிந்திக்க முடியுமா?
கருணாநிதி மாதிரி பதில் சொல்லுரிங்க….
வினவு கட்டுரையாலர்கலே, இதனை அம்பானியின் மாளிகையை விமர்சித்தது போல விரிவாக எழுத துணிவு இருகிறதா??
இந்தியாவில் ஒபாமாவதார் எழுந்தருளியதன் பின்னணியை வினவு மிக அருமையாக போட்டு உடைத்திருக்கிறது. ஜனநாயகம் என்ற பெயரில் மக்களிடம் ஓட்டு வாங்கி பதிவியை பிடித்துக்கொண்டு நாட்டை என்னமாய் காட்டிக்கொடுக்கிறாங்க பாருங்க! விட்டா “அமெரிக்கிந்தியா” என்று பேரை மாத்திடுவாய்ங்க போலிருக்கே!
ஒரு அப்பா பிள்ளையிடம் பேசி கொண்டு இருந்த போது…
பாப்பா நாளைக்கு மன்மோகனுக்கு சாப்பாடு என்ன தெரியுமா?
தெரியலப்பா
இன்னிக்கு நைட் ஒபாமா குடிச்சிட்டு வாந்தி எடுக்கிறத கொண்டு போய் நாளைக்கு காலையில மண்டையில் மூளையில்லாத, மயிரில்லாத மன்மோகன் சாப்பிடுவான்
அப்படியாப்பா, நான் என் பிரண்ட்கிட்ட எல்லாம் சொல்றேன்…
” நாணிக் கோணிக் கொண்டு நிற்பதைக் காணக் கண் கோடி வேண்டும்”. நானும் பார்த்தேன். இதைப்பற்றி இன்று நான் ஒரு சிலரிடம் பேசினேன். அதில் என்ன தவறு இருக்கிறது. இது பணிவுதானே. நம்மைவிட பெரியவர்களை நாம் சந்திக்கும் போது இது தேவைதானே என்றார்கள்.
இயல்பான மரியாதைக்கும் நாணிக் கோணுவதற்குமான வேறுபாடு பாவம் இவர்களுக்குத் தெரியாது போலும்.
நாணிக் கோணிக் கொண்டு நிற்பதைத்தானே இதுவரை நம்மை ஆண்ட ஆண்டைகளின் ஆட்சியும் ஆங்கிலேயனின் ஆடசியும் மக்களிடம் வளர்த்துள்ளன. நம்மை ஆள்பவர்களிடம் நாம் நாணிக் கோணிக் கொண்டு நிற்கிறோம். மன்மோன்சிங், மீராகுமார் உள்ளிட்டோர் தங்களை ஆளும் எஜமானனிடம் நாணிக் கோணிக் கொண்டு நிற்கின்றனர். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
நத்திப்பிழைப்பவன் மட்டுமே நாணிக்கோணலாம். ஆனால் நாம்……
நத்திப்பிழைப்பவன் என்ன செய்வான்? இனி நாம் அனுபவிக்கத்தானே போகிறோம்.
ஊரான்.
1.cardoon super. 2.rajasekar sir,comnust-karanga (helf)kodutha poorachi vamduruma?comnust bookga nalla padinga sir!!
இங்கு நாம் யாருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதே பிரச்சனை! அமெரிக்காவுக்கா? இல்லை செங்கொடிகள் விரும்பும் சீனத்திற்கா?
ரம்மி, எப்படியும் அடிமையாகத்தான் இருந்தாக வேண்டும் என்கிறீர்களா?
சோவியத்துடன் நமக்கிருந்தது நட்பா?அடிமையா?
ரம்மி,
எப்பொழுது என்று குறிப்பிட்டுச் சொல்லுங்கள்?
சோவியத் இருந்த பொழுதுகள், அனைவருக்கும் தெரிந்ததே!
http://www.greenpeace.org/india/en/Tell-manmohan-singh-to-stop-import-of-untested-nuclear-reactors/
அண்ணே வினவு
///ஒரு காட்சி தான் பாக்கி; ஒபாமாவும் மிஷேலும் நடந்து வரும் போது ‘எசமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்…’ என்று பாடிக் கொண்டே சோனியாவும் மன்மோகனும் துண்ணூறு பூசிக் கொள்ளும் காட்சி!///
இத இப்பத்தே படிக்கிறேன் கலக்கிட்டிங்கப்பு
அட ஒபாமா எசமானர் இல்லையா?ஆதலால் அடிமைகள் கொண்டாடினர்!!
*
*
சில கருத்து படங்கள் கீழே உள்ளன
*
http://writerviki.blogspot.com/2010/11/blog-post_09.html
கட்டுரையின் மையமான விசயத்தின் மீதான விவாதத்திலிருந்து வாசகர்களை திசை திருப்புவதில் ராஜசேகர் கில்லாடிதான்.
//எங்குமே கம்யூனிசம் நெடு நாள் வெற்றி பெறவில்லை.//
கம்யூனிசம் என்பது திமுக தோற்று அதிமுக வெற்றிப் பெறுவதைப் போன்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா!
[obscured]
பைபிள், குரான் , கீதை அனைத்தும் சாக்கடை என என்னால் துணிந்து கூற முடியும், அந்த துணிச்சல் இல்லாத , மதசார்புள்ள நீங்களும் போலி கம்யூனிஸ்ட்.. ..
சிறுபான்மை மக்களை கருணாநிதி ஏமாற்றுவது போல நீங்களும் கபட நாடகம் போடுங்கள்.
CPI, CPM போலி கம்யூனிஸ்ட் என சொல்லும் நீங்களும் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்..
//மிஷேல் ஒபாமா “பாண்டி” விளையாண்டது, பல்லாங்குழி விளயாண்டது, புருசனோடு சேர்ந்து டப்பாங்குத்து ஆடியது போன்ற அவதார லீலைகளையெல்லாம் கதை கதையாக முன்பக்கத்தில் வெளியிட்டு வருகின்றன//
1988ல் கோர்பசேவ் அரசு முறை பயணமாக இந்தியா வந்த பொழுது கூடவே மனைவி ரெய்ஸாவை அழைத்து வந்து விட்டார் என்றும் மேற்கத்திய கலாசாரத்தை காப்பியடிக்கிறார் என்றும் பொருமிய கம்யூனிஸ்ட் கூட்டத்திற்கு (கீழே உள்ள சுட்டியை பார்க்க) மிஷேல் இங்கு வந்து டப்பங்குத்து ஆடினால் தாங்குமோ? அபசாரம் அபசாரம்
http://www.nytimes.com/1988/11/19/world/gorbachev-in-india-to-reaffirm-ties.html?pagewanted=2
ராம் காமேஸ்வரன்,
ஒபாமாவின் இந்திய வருகையின் அரசியல் உள்நோக்கத்தைப் பற்றி பேசுங்கள்.
பொறுப்பின்மையின் கேடயம் ஜனநாயகம்!!!
http://priyanparvaiyil.blogspot.com/2010/11/blog-post_12.html
புதியஜனநாயகம் பத்திரிக்கையில் அட்டைப்படமாக வந்து 30,000 பிரதிகளுக்கு மேல் விற்று தீர்ந்த பழைய விஷயம் அது. தமிழ்நாடு உள்ளிட்டு உலகு தழுவிய வாசகர் வரை அனைவரும் வாங்கி,பார்த்து, படித்து, ரசித்து மகிழ்ந்த விசயம் அது. ம.க.இ.க.,/ வி.வி.மு.,/ பு.மா.இ. மு.,/ பு.ஜ.தொ.மு., ஆகிய புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் தமிழ்நாடு முழுக்க பேருந்து , குடியிருப்பு, பொது இடம், புகைவண்டி, பள்ளி கல்லூரி ஆசிரிய மாணவர்கள்,அரசு அலுவலகங்கள், கோர்ட், காவல் நிலையம் உட்பட அனைத்து இடங்களிலும் விற்று இருக்கிறார்கள்! இதற்க்கு என்ன சொல்கிறீர்கள் திரு. ராஜேஷ்!
பொறுப்பின்மையின் கேடயம் ஜனநாயகம் என்றால் தறுதலைகளையும், தற்குறிகளையும் நாம் அங்கீகரித்தாக வேண்டும். எது பொறுப்பின்மை? தான் உண்டு தன் வேலை உண்டு என்று சமூகத்திலிருந்து விலகிக்கொள்வதா? அல்லது ஒட்டுமொத்த சமூகத்தின் நலனில்தான் தன் நலன் அடங்கியுள்ளது என அதற்கான கடமை ஆற்றுவதா? எது ஜனநாயகம்? பொதுக் கருத்தை தழுவியதை அடிப்படையாகக்கொண்டதா? அல்லது தனி மனித அறிப்பையே அடிப்படையாகக்கொண்டதா? மன்மோகனுக்கும், ஒபாமாவுக்கும் இடையே உளள ‘தகாத உறவை’ வினவு கருததுப் படம் மூலம் அம்பலப்படுத்தியதில் என்ன தவறு உள்ளது? அவர் தனிநபர் அல்ல. 110 கோடி மக்களின் பிரதிநிதி.
Raejsh, பொறுப்பின்மையின் கேடயம் ஜனநாயகம் என்றால் தறுதலைகளையும், தற்குறிகளையும் நாம் அங்கீகரித்தாக வேண்டும். எது பொறுப்பின்மை? தான் உண்டு தன் வேலை உண்டு என்று சமூகத்திலிருந்து விலகிக்கொள்வதா? அல்லது ஒட்டுமொத்த சமூகத்தின் நலனில்தான் தன் நலன் அடங்கியுள்ளது என அதற்கான கடமை ஆற்றுவதா? எது ஜனநாயகம்? பொதுக் கருத்தை தழுவியதை அடிப்படையாகக்கொண்டதா? அல்லது தனி மனித அறிப்பையே அடிப்படையாகக்கொண்டதா? மன்மோகனுக்கும், ஒபாமாவுக்கும் இடையே உளள ‘தகாத உறவை’ வினவு கருததுப் படம் மூலம் அம்பலப்படுத்தியதில் என்ன தவறு உள்ளது? அவர் தனிநபர் அல்ல. 110 கோடி மக்களின் பிரதிநிதி.
கொடும்பாவி என்பது வெறும் பொம்மை தானே, அதனை எரித்தால் ஏன் போலீஸ் கைது செய்ய வேண்டும்.. எதிர்ப்பை காட்டவும் சில வரைமுறைகள் உண்டு..
பத்திரிக்கை போன்ற ஜனநாயக கடமையில் சில தார்மீக பொறுப்புகள் உள்ளன.. நீங்கள் கூறியதைப் போல் 110 கோடி மக்களின் பிரதிநிதியை ஒரு நாயின் வடிவில் சித்தரிப்பதை 110 கோடி பேரும் பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது..
உங்கள் கருத்தில் உண்மை இருக்கலாம், நீங்கள் வெளியிட்ட சித்தரிப்பு படம் தவறு… பொறுப்பின்மை.. கண்டிக்கத்தக்கது
Rajesh,
அதென்னங்க உங்க லாஜிக்? உண்மையைச் சொல்லுங்கள், ஆனால் ஒரு வரம்புடன் சொல்லுங்கள் என்கிறீர்கள். முழுப் பொய்யை விட அரை உண்மை ஆபத்தானது என்று நமது வாழ்க்கை அனுபவத்தில்கூடவா கற்றுக்கொள்ளக்கூடாது? கொடும்பாவி என்பது வெறும் பொம்மைதானே, அதனை எரித்தால் போலீசு ஏன் கைது செய்ய வேண்டும் என்று நானும்தான் கேட்கிறேன். இது ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டு போலீசு ஏன் இந்நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, கொடும்பாவி எரிப்புக்காக போலீசு கைது செய்வதாலேயே அந்நடவடிக்கையை ஒரு பொதுவிதியாக வரையறுத்துவிட முடியுமா?
அரசின் உணவுக் கிடங்கில் இருக்கும் தானியங்கள் புழுத்து மக்கி நாசமானாலும் பரவாயில்லை, அதை ஏழைகளுக்கு கொடுக்க முடியாது என்று சொல்கிறார் நாட்டின் பிரதமர். அவருக்கும் மனிதகுல எதிரியான அமெரிக்காவுக்கும் இடையிலான ‘தகாத உறவை’ சித்தரிக்கும் வெறும் காகிதப் படத்தை உங்களால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை, உணவுப் பற்றாக்குறையால் பச்சிளம் குழந்தைகள் உட்பட கோடானு கோடி உழைக்கும் மக்களின் பசி, பட்டினி, அதனால் வரும் நோய் போன்ற எதார்த்த அவலங்களை உங்களால் பொறுத்துக்கொள்ளமுடிகிறது. என்ன சார் உங்க நாட்டுப் பற்று?
இந்த கருத்துப்பட சித்தரிப்பு பற்றி நீங்க மட்டும்தான் ஒரு விசயமாக்கிக்கொண்டு பேசுகிறீர்கள். தோழர்கள் இப்படம் கொண்ட புத்தகத்தை மக்களிடம் கொண்டு சென்ற போது மக்களிடம் அமோக ஆதரவுதான் இருந்தது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
நான் உங்கள் கருத்தை விமர்ச்சனம் செய்ய வரவில்லை.. அதில் உண்மை இருக்கலாம் (உண்மை இல்லாமல் கூட இருக்கலாம்)
உங்கள் சித்தரிப்பு தப்பு..
எந்த ஒரு சாமானியனும் (நான் மற்றும் நீங்கள் கூட) தன் முகம் நாயின் உடம்பில் வருவதை ஏற்றுக்கொள்ள மாட்டான்.. உங்கள் 30000 பிரதி தமிழ்நாட்டைகூட தாண்டாது.. 6 கோடி மக்கள் தொகையில் உங்கள் பிரதி விழுக்காட்டை கணக்கிட்டு கொள்ளுங்கள் (உங்கள் 30000 பதிவு விற்பனை நண்பர்களுக்குள் அரட்டை அடிப்பதற்கு சமம்; எதிர்ப்பை விடுங்கள் உங்கள் புத்தகத்தைப் பற்றி எத்துனை வரவேற்பு கடிதங்கள் உங்களுக்கு வந்தன??).. ஆனால் வலைப்பதிவு அப்படியல்ல.. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை சேரும்.. இந்தியாவை தாண்டும் எந்த ஒரு படைப்பும் இந்தியாவின் பிரதிநிதித்துவம் உள்ளடிக்கியே இருக்கும்.. அதனால் தார்மீக பொறுப்பை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
30000 பிரதிகள் விற்று அதற்கு யாரும் எதிர்ப்பு காட்டவில்லை என்ற ஒரே காரணத்தால் நீங்கள் செய்தது சரியா?? இதற்கு கூட எதிர்ப்பு வரவில்லை என்றால் உங்கள் 30000 பிரதிகள் சரியான ஆட்களை அடையவில்லை என்றே அர்த்தம்.. உங்களுக்கு இதில் சந்தேகம் என்றால் உங்கள் பதிவை ஒரு சில பிரபல பத்திரிக்கையில் வெளியிட முயன்றுபாருங்கள்..
சில ஆண்டுகளுக்கு முன், தினமலரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் வைகோ பற்றி வெளிவந்த கார்டூன் சித்திரத்துக்கு தினமலர் மன்னிப்பு கேட்டதை நினைவு படுத்திக்கொள்ளவும்.
எதிர்ப்பை காட்டாமல் இருந்தால் எல்லோருக்கும் உடன்பாடு என்று அர்த்தம் அல்ல.. அந்த எதிர்ப்பை எவ்வாறு நீங்கள் எடுத்துகொள்கிறீர்கள் என்பதிலும் உண்டு.. உங்கள் கருத்தை எதிர்ப்பவர்களை உங்களின் எதிரியாக பார்த்தால், ஒவ்வொரு முறையும் புதியர்களே எதிர்கருத்து பதிவர்..
சுயக்கட்டுப்பாட்டை பற்றி உங்களுக்கு புரிந்தாலும் புரியாவிட்டாலும் இவ்வளவே என்னால் சொல்ல முடியும்.. உங்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் உங்கள் தவறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..
அமெரிக்காவிற்கு நன்றியுள்ள நாயாக இருக்கும் மன்மோகனின் பண்பு சரி என்கிறீர்களா? அல்லது தவறு என்கிறீர்களா?
நன்றியுடன் இருப்பதற்கு நாயே உவமையாகச் சொல்லப்படுகிறது. எனவே வினவுக் கருத்துப்படம் சரியானதே.
ராஜசேகர், விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கருத்து (கொள்கை) என்று எதையும் நாம் அனுமதிக்க முடியாது.
obama spoke in taj hotlel like as taj hotel brand ambasator sorrey ambasator of interanational TATA’S . MR. MANMOHAN i thik you wash your turban in india and was your brain in america. try to change this other wise ordinary indians are have the iraq model chepples
ராஜேஷ், தன்மானத்தை இழப்பது சரியா, தவறா ? என்பதுதான் நமது விவாதத்தின் மையமே தவிர, அப்படி இழந்த ஒருவரை அம்பலப்படுத்துவது இரண்டாம்பட்சமானதுதான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
கட்டுரை மிகவும் அருமை. தொடருங்கள்……