Saturday, June 15, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமூவர் தூக்கு: கிழிந்தது அம்மாவின் கருணைமுகம்!

மூவர் தூக்கு: கிழிந்தது அம்மாவின் கருணைமுகம்!

-

மரண தண்டனை விதிக்கப்பட்டு, 21 ஆண்டுகளாகக் கொடுஞ்சிறையில் வைத்து வதைக்கப்படும் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன்

தமக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனைக்கு எதிராக முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு அக்டோபர் 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் வழக்குரைஞர் மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்யவேண்டுமென்றும்,  தூக்குத் தண்டனையை நிறைவேற்றவேண்டுமென்றும் வாதாடினார். இது அனைவரும் எதிர்பார்த்ததுதான்.

ஆனால் “”தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் மூவரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டும்” என்று ஒரு தீர்மானத்தை ஆகஸ்டு 30ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில் முன்மொழிந்த ஜெயலலிவின் அரசு, தற்போது அதற்கு நேர் எதிராகப் பேசியிருக்கிறது. “”கருணையை நியாயப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் எதுவும் தோன்றிவிடவில்லை” என்று கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் கருணை மனுவை நிராகரிப்பதற்கு ஆளுநர் கூறிய வார்த்தைகளை அப்படியே வழிமொழிந்திருக்கிறது. எந்தத் தமிழ் மக்களின் பெயரால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்  பட்டதோ, “”அந்த மக்களின் உணர்வு குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை” என்று அலட்சியமாகச் சொல்லியிருக்கிறது தமிழக அரசின் மனு.

ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானத்தின் பின்புலத்தில் இருந்திருக்கக் கூடிய காரணிகளை விளக்கி, “”இது அமைச்சரவை முடிவல்ல… இது இடுக்கண் களைவதற்காக நீண்ட கரமல்ல… இது அரசியல் ஆதாயத்தை ஜேப்படி செய்வதற்காகவே நீண்டிருக்கும் கரம். அதிலும் கொஞ்சம் வேண்டா வெறுப்பாகவே நீட்டப்பட்டிருக்கும் கரம். இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்குமாறு மத்திய அரசைக் கோருகின்ற தீர்மானத்தைப் போல, இது இன்னொரு தீர்மானம். அவ்வளவே” என்றும், இதுவும் கூட மக்கள் போராட்டம் தோற்றுவித்த நிர்ப்பந்தத்தின் விளைவு  என்றும் புதிய ஜனநாயகம் செப்டம்பர் இதழில் குறிப்பிட்டோம்.

ஆனால் மூவர் தூக்கினை எதிர்த்துப் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த தமிழ் உணர்வாளர்கள் எனப்படுவோர் ஜெயலலிதாவைப் பாராட்டினார்கள்; அம்மாவையும் “தம்பி’யையும் அக்கம்பக்கமாகப் போட்டு சுவரொட்டி அடித்து பாராட்டு விழா நடத்தினார்கள். சட்டமன்றத் தீர்மானத்துக்குப் பழிவாங்கத்தான் பெங்களூரு வழக்கு முடுக்கி விடப்படுகிறது என்பன போன்ற அரிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்கள். ஆட்சிக்கு அரணாக இருப்போம் என்று சத்தியம் செய்தார்கள். நாப்புண்ணாகிப் புழுத்து நாறுமளவுக்கு அம்மாவின் புகழ் பாடினார்கள். இப்போது?

“முன்னுக்குப் பின் முரண்’, “அதிர்ச்சி’, “துரோகம்’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டே, “”சட்டப்பிரிவு 161இன் கீழ் கருணை மனுவை அங்கீகரிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரமிருக்கிறது” என்று ஜெயலலிதாவுக்கு ஆலோசனையும் கூறுகிறார்கள். அரசியல் சட்டப்படி அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்பதா இப்போது பிரச்சினை? அரசியல் சட்டமாவது, வெங்காயமாவது? காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மீறும் அதிகாரம் அரசியல் சட்டத்தின்படி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதென்று தெளிந்ததனால்தான் கர்நாடக, கேரள அரசுகள் தீர்ப்பை மீறி செயல்படுகிறார்களா? கருணை மனுவை அமைச்சரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப முடியாமல் சட்டம்தான் ஜெயலலிதாவின் கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறதா?

தற்போது தமது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மூவரும் தொடுத்துள்ள வழக்கில், தீர்ப்பு வழங்கப்போவது உயர் நீதிமன்றம்தான். மாநில அரசு தெரிவிப்பது வெறும் கருத்து மட்டுமே. எனினும், மனுவைக் கருணையுடன் பரிசீலிக்குமாறு கருத்து தெரிவிப்பதற்குக் கூட ஜெ. அரசு தயாராக இல்லை. தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில் கூறப்பட்டுள்ளதுதான் ஜெயலலிதாவின் உண்மையான கருத்து. இந்தக் கருத்துக்கு மாறாக, சட்டமன்றத்தில் அன்று நிறைவேற்றிய தீர்மானம்தான் முரண். அந்த வகையில் “பின்னதற்கு முன்னது முரண்’ என்பதே உண்மை. 20 ஆண்டுகளாக புலி எதிர்ப்பு, தீவிரவாத எதிர்ப்பு என்பதையே தனது அரசியலாகக் கொண்டு, தமிழ்தமிழின உரிமை என்று பேசுவோரையெல்லாம் ஒடுக்கிவரும் ஒரு பாசிஸ்டு, திடீரென்று சட்டமன்றத்தில் அப்படியொரு தீர்மானம் நிறைவேற்றியதுதான் அதிர்ச்சிக்குரியதேயன்றி, தற்போது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனு அல்ல. இந்த சட்டமன்றத் தீர்மானமாக இருக்கட்டும், சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது ஈழம் வாங்கித் தருவதாக அம்மா தந்த வாக்குறுதியாக இருக்கட்டும், இவையனைத்துமே “சும்மா’ என்பதை சு.சாமியும் “சோ’வுமே தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.

மூவர் தூக்கு: கிழிந்தது அம்மாவின் கருணைமுகம்!
அம்மாவின் கருணைக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் இயக்கம் நடத்திய பொதுக்கூட்டத்தில் சீமான் உள்ளிட்டோர்

“ஜெயலலிதாவே தமிழினத்தின் மீட்பர்’  என்று உடுக்கடித்துத் தமிழக மக்களை நம்பவைத்ததும், சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றியவுடனே விழா எடுத்து புகழ்பாடியதும் தமிழின உணர்வாளர்கள் எனப்படுவோர்தான். இப்படியெல்லாம் தமிழ் மக்களை நம்பவைத்த பூசாரிகள் என்ற முறையில்தான், நெடுமாறன், சீமான், வைகோ, பெரியார் தி.க உள்ளிட்டோர், இப்போது ஜெ அரசின் கருத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள் போல முகத்தை வைத்துக் கொள்கிறார்களேயன்றி, ஜெயலலிதா ஒரு பார்ப்பன பாசிஸ்டு என்பது பூசாரிகள் அறியாத உண்மையல்ல. “கேழ்வரகில் நெய் வடியும்’ என்று தெரிந்தேதான் இவர்கள் பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள். கேட்டால், “”ஜெயலலிதாவைப் பற்றி எங்களுக்கும் தெரியும். சும்மா கொள்கை பேசிக்கொண்டிருந்தால் மூன்று உயிர்களைக் காப்பாற்ற முடியாது” என்று ஏகடியம் பேசுவார்கள். விமரிசிப்பவர்களை காரியத்தைக் கெடுப்பவர்கள் என்று ஏசுவார்கள்.

ஜெயலலிதாவை அண்டியும், ஒண்டியும் அரசியல் நடத்தி, அதையே மாவீரமென்று சித்தரித்து வாய்ப்பந்தல் போட்டு, தமிழ் சினிமாவின் குத்தாட்டத்துக்கு இணையான ரசிக அனுபவத்தை வழங்கும் மேடைக் கச்சேரிகளை நடத்தி வந்தவர்களுக்கு அரசியல் பேசும் வாய்ப்பை அம்மா வழங்கியிருக்கிறார். மனிதாபிமானம், மரண தண்டனை ஒழிப்பு போன்ற அரசியலற்ற சொற்றொடர்களுக்குள் ஒளிந்து கொண்டு அம்மாவின் கருணைக்கு மன்றாடி இனிப் பயனில்லை. மூவரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான அரசியல் நியாயத்தை இனி பேசலாம். இனியாவது பேசுவார்களா என்று பார்க்கலாம்.

_________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2011

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

 1. ஜெ-விற்கு அடுத்த பாராளுமன்றத் தேர்தல் வரை பெரிதாய் மக்களின் மீதான கருணையோ பாசமோ தேவையில்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கான வேடம் இனியும் தேவையில்லை.

  இதில் – தம்பி சீமான் மட்டுமல்ல மற்றெல்லா தமிழ் விற்பவர்களுக்கும், மன்னிக்க தமிழ் விற்பன்னர்களுக்கும் சுயசிந்தனையில்லை என்பது ஈழத்தாயின் அறிவால் இன்னுமொரு முறை அம்பலமாயிருக்கிறது.

  அம்மா ஆட்சிக்கு வந்ததிலிருந்து புதிய சட்டசபைக் கட்டிடத்தை பயனழித்தது, அண்ணா நூலகத்தில் கைவைத்தது, காப்பீட்டுத் திட்டத்தை தூக்கியது போன்று மிகப்பல மனிதநேய வேலைகளில் கவனமாக இருக்கிறாரே தவிர, மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்؟ கருணாநிதியும் ஓய்வு எடுக்கவில்லை, அம்மாவும் அழிச்சாட்டியத்திலிருந்து நகரவில்லை – மழைக்கு ஒதுங்காத அருமைத்தமிழர்களை என்ன செய்ய؟

 2. […] https://www.vinavu.com/2011/11/11/jayas-mask/ GA_googleAddAttr("AdOpt", "1"); GA_googleAddAttr("Origin", "other"); GA_googleAddAttr("theme_bg", "ffffff"); GA_googleAddAttr("theme_text", "333333"); GA_googleAddAttr("theme_link", "222222"); GA_googleAddAttr("theme_border", "dddddd"); GA_googleAddAttr("theme_url", "346ba4"); GA_googleAddAttr("LangId", "1"); GA_googleAddAttr("Tag", "%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d"); GA_googleFillSlot("wpcom_sharethrough"); Share this:TwitterFacebookLike this:LikeBe the first to like this post. Posted in: தமிழக மீனவர் ← இந்திய பிரதமர் மன்மோகன் சிங் – இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் நேற்று மாலைதீவின், வில்லிகின்லி தீவுகளில் உள்ள ஹோட்டலில் விசேட சந்திப்பு இடம்பெற்றது Be the first to start a conversation […]

 3. சரி நீங்கள் ஒரு புரட்சிகரமான கட்சி என்கிறீர்கள்.நீங்கள் என்ன செய்து கிழித்து விட்டீர்கள்.சொல்லுங்கள்.சும்மா வீண் கதை பேசி நேரத்தை வீணடக்கிரீர்கள்.வெட்டி பயல்களா .

  • ஏன்யா இந்த கழிசடை பசங்களோடெல்லாம் கூட்டு சேர்ர, இந்த கொசுவ அடிச்சி விரட்டுங்கப்பா…

 4. கருணாநீதியை ஒரு வழி பன்னிட்டுத்தான் அம்மா உக்காரும் அதுவரைக்கும்
  அது யாரையும் பாக்காது அம்மான்னா அன்புன்னு சொல்வாங்க இது பேய்

 5. அம்மா[ஜெ] சரி பாப்பாத்தி தமிழர்களை பிடிக்காமபோவதற்கு வாய்ப்பிருக்கு. அட நம்ம சித்தி[சசி] உதவி செய்ய சொல்லி வற்புருத்தலாமில்லை. நம்ம சித்தப்பா[நட ரா ] கூட முயற்சி செய்யலாம் சித்திமூலமாக[உள் மூலம்]

 6. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தாலும் அமைச்சரவை முடிவு எடுக்கும் வரை, தமிழக அரசால் நீதிமன்றங்களில் மூவருக்கும் சாதகமாகப் பேசவே முடியாது. முதலமைச்சர் அமைச்சரவையை உடனே கூட்டி தைரியமாக மனிதாபிமான அடிப்படையில் முடிவெடுக்கணும். கருணா நிதி, ’நான் சொன்னதை அப்பவே செய்திருக்காலாம்’ன்னு சொன்னா சொல்லிட்டுப் போகட்டும்.

 7. இந்த மூணு பேர் என்ன தியாகிகளா, ஒரு மானிலத்தின் முதலமைச்சருக்கு இவஙகள காப்பாத்துரதுதான் தலயாய கடமையா…சும்மா வெட்டிக்கட்டுரை எழுதாமப்போயி வேலவெட்டியப்பாருடா தம்பி,…

  • பையா சொல்லுவது சரியானதே.. இந்த மூணு பேரு குற்றவாளிகள் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து, அதன் பின் குடியரசு தலைவர் கருணை மனுவை நிராகரித்துள்ளார்.. இதையும் மீறி இவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று சொன்னால், இது யாரையோ ஏமாற்றும் வேலை.. குற்றவாளிகளை தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என இனங்கண்டு அதற்காக போராடுவோம் என்று சொல்லுவது வேடிக்கையாக உள்ளது.. இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்பதற்கு சான்றாக சாமி முதல் சந்திராசாமி வரையிலான தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியான் காலத்து பத்து பதினைந்து கேள்விகளை வைத்துக்கொண்டு இன்னமும் அரசியல் செய்வது நாகரிகம் இல்லை…

   ஒரு வேலை குற்றவாளிகள் அல்ல என கூறி மூவரும் வெளியில் வந்தால் தமிழர்களுக்கு அதனால் ஆகப்போகும் நன்மை என்ன? வை.கோ-வுக்கு வேண்டுமானால் பத்து ஒட்டு அதிகம் கிடைக்கும், ஏனைய சில தமிழ் குழுக்களின் தலைவர்களுக்கு சில பல பெட்டிகளும்… வேறு யாருக்கும் எந்த நன்மையும் இருப்பதாக தெரியவில்லை?

   மற்றபடி ஜெயலலிதா அமைச்சரவை தீர்மானத்தில் ஏற்கனவே சொல்லி இருக்கிறார், இத்தீர்மானம் தமிழத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்கவும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இயற்றப்படுகிறது என்று.. ஆனால் ஒரு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி அரசின் நிலையை விளக்க கேட்கும்போது அதனிடம் பொய் அனைத்து கட்சி வேண்டுகோள், மக்களின் உணர்வுகள் என கட்டுரை எழுத முடியாது… அரசியல் சாசன சட்டப்படி நீதிமன்றத்தில் மத்திய அரசின் குற்றவாளிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கூறும்போது ஒரு மாநில அரசு ஒன்று அதை ஆதரித்து விரைந்து நடவடிக்கை எடுங்கள் என வக்காலத்து வாங்க முடியும், அல்லது அதில் தங்கள் தரப்பில் கூற ஏதும் இல்லை என்று கூற முடியும்… இரண்டாவதைத்தான் தமிழக அரசு செய்திருக்கிறது… முன்னதை விட பின்னதை தேர்ந்தேடுத்தலின் காரணமும் அம்மக்களின் உணர்வுகளுக்காகவே என புரியும்…

   • //அதில் தங்கள் தரப்பில் கூற ஏதும் இல்லை என்று கூற முடியும்//

    இதை ஜெயா முதலிலேயே சொல்லி இருக்கலாமே!

  • வேலவெட்டி இல்லாமதான் சட்டமன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிந்தார்களா? உடனே படக்குன்னு கருணைமனுவை நிராகரிச்சு தூக்கில போடச்சொல்றதுதான் ஜனாதிபதியோட தலயாய கடமையா? 20 வருஷம் ஜெயில்ல இளமையை தொலச்சவனை தூக்கிலயும் போட்டாதான் நீதி நெலைக்குமா இல்ல கொலைவெறி அடங்குமா?

  • நல்ல பையன்,நீ நல்லா சொன்ன, அம்மாவுக்கு இந்த 3 பேர கவனிக்கரதுதான் வேலையா? எத்தன வேல பாக்கி இருக்குது, அந்த வேலையையும் நீயே சொல்லிடு…

 8. வைகோவின் பேச்சை கேட்டதால் தான் பிரபாகரன் சாகவேண்டி வந்தது என்பதை நார்வே அரசு நேற்று (13.11.2011) அதிகாரபூர்வமாய் அறிவித்திருக்கிறது. நிச்சயம் பாஜக பதவிக்கு வரும். வந்தால் புலிகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்போம் என்று அன்று அவர் சொன்னதை நம்பி கடைசியில் மண்டை சிதறடிக்கப்பட்டு செத்துப் போனது அந்த பெருச்சாளி. இந்த செய்தியை முக்கிய செய்தியாய் முன்பக்கத்தில் வினவு பிரசுரித்து தமிழ்நாட்டின் அறிவுக்கொழுந்துகள் சுய நினைவுக்கு வரும்படி செய்ய,இப்போ நிம்மதியாய் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் சார்பில் (வெளிநாட்டு தமிழர்கள் அல்ல) கேட்டுக் கொள்ளுகிறோம்.

  தவிர வினவு இலங்கை வந்து ஒரு ரவுன்ட் அடித்துவிட்டு, ‘ஈழம்’ பற்றி எழுதினால் நல்லது. வட கிழக்கு மட்டுமல்ல, தென் இலங்கையில் வாழும் இலங்கையின் 60 விழுக்காட்டுக்கு மேலாக (சிங்களவர்கள் மத்தியில் அன்னியோன்யமாய் வாழும்) தமிழர் வாழ்வையும் பார்த்துவிட்டு எழுதினால் இன்னும் நல்லது. ஆமா, எப்போ வருவீக?

  • \\வினவு இலங்கை வந்து ஒரு ரவுன்ட் அடித்துவிட்டு, ‘ஈழம்’ பற்றி எழுதினால் நல்லது. வட கிழக்கு மட்டுமல்ல, தென் இலங்கையில் வாழும் இலங்கையின் 60 விழுக்காட்டுக்கு மேலாக (சிங்களவர்கள் மத்தியில் அன்னியோன்யமாய் வாழும்) தமிழர் வாழ்வையும் பார்த்துவிட்டு எழுதினால் இன்னும் நல்லது. ஆமா, எப்போ வருவீக\\

   அங்க வந்து ரவுண்டு அடிச்சா எங்களுக்கு என்ன எழுத மேட்டர் கிடைக்காதுன்னு பாத்தீங்களா…, தமிழகத்தில் வாழும் தமிழர்களின் இழி நிலையை பட்டியல் போட்டு பதிவு எழுதி பரபரப்பா ஆகிருவோம்ல… என்ன ஒன்னு இலங்கையிலே பார்ப்பனர்களை திட்டி எழுதி ஓட்ட முடியாது… அதான் சிங்கள காடைகள்னு மாத்திக்க வேண்டியதுதான்….

 9. கேள்வி கேள் கேலி செய். மருதையன் தனது [அரசியல் நியாயம்\]என்ற தனது கட்டுரையில் “இந்த சட்டமன்றத் தீர்மானம் சில அரசியல் துணை விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. “ஜெயலலிதாவைப் போல, காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு எதிராக நான் ஒரு தீர்மானம் நிறைவேற்றினால், அதற்கான எதிர்வினை இவ்வளவு அமைதியாக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. “இதே தீர்மானத்தை இந்தக் கருணாநிதி நிறைவேற்றியிருந்தால் பிரிவினை வாதம், தேசத்துரோகம் என்று பத்திரிகைகள் என்னை பிரித்து மேய்ந்திருக்க மாட்டார்களா உடன்பிறப்பே” என்று கேட்கத்தான் கலைஞரும் நினைத்திருப்பார்.

  நாம் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், அம்மா உதைத்து விட்டிருக்கும் இந்தப்பாறையானது உருண்டு போகிற போக்கில் பல ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ விளைவுகளை ஏற்படுத்தித்தான் செல்கிறது. தன்னுடைய அரசியல் ஆதாயத்துக்காக சுயேச்சையான பார்ப்பன பாசிஸ்டான ஜெயலலிதா அசைத்திருக்கும் இந்த ஆப்பில், அதிகாரபூர்வ பார்ப்பன பாசிஸ்டுகளான பாரதிய ஜனதாவினரின் உயிர்நிலை மாட்டிக்கொண்டுவிட்டது. அவர்கள் வாயைத் திறக்கிறார்கள், பல்லைக் கடிக்கிறார்கள். ஆனால் வார்த்தை வரமறுக்கிறது. ‘அப்சல் குருவை உடனே தூக்கில் போடு’ என்று தொடைதட்டியவர்கள், அம்மாவின் சட்டமன்றத் தீர்மானத்துக்குப் பின்னர், ‘ஒமர் அப்துல்லா இப்படிப் பேசுவது துரதிருஷ்டவசமானது’ என்று நெளிகிறார்கள்.

  மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு, 21 ஆண்டுகளாகச் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி.
  வட இந்திய ஆங்கில ஊடகங்களைப் பொருத்தவரை மூவர் தூக்குக்கு எதிராக தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ள பொதுக்கருத்தையோ, போராட்டங்களையோ அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அத்தகைய பொதுக்கருத்து தோன்றுவதற்கான நியாயம் ஈழத்தின் இனப்படுகொலையிலும் இந்திய அமைதிப்படையின் ஆக்கிரமிப்பிலும் இருக்கிறது என்பதையும் அவர்கள் அங்கீகரிப்பதில்லை. ‘இந்திய தேசியத்தின்’ சந்தேகப் பட்டியலில் நிரந்தரமாக அவர்கள் தமிழகத்தை வைத்திருக்கிறார்கள். ‘திராவிடதமிழ் அரசியலை’ தைரியமாக எதிர்கொண்டு நின்ற ஜெயலலிதாவும் இப்போது அதற்குப் பணிந்து விட்டார் என்பதுதான் அவர்களது மனக்குமுறல்”

  என்று பாப்பாதியின் பெருமையில் கொஞ்சம் மெய்மறந்து போயிருக்கிறார். உண்மையில் தீர்மானத்திற்கு பாராட்டு. இப்பொழுது காட்டியிருக்கும் கருணை முகத்திற்கு எதிர்ப்பு. ஏன் தேவியில்லாமல் பெ.தி.கவை வம்பிற்கு இழுக்கிறீர்கள். அடுத்டவனை சொரிஞ்ச்சாத்தான் தூக்கம் வரும் என்றால் அது ஒரு வியாதி.

 10. […] தீர்மானம் போட்டு பின்னர் அதை அவரே காறித்துப்பினார் என்பது நினைவு கூறத்தக்கது. ஐந்து […]

 11. சீமான்: வினவு… நாங்கள்லாம் அப்பவே அப்படி இப்ப கேக்கவா வேனும்.
  சரனம் போட்டே சந்துல சிந்துபாடுவோம். எங்கலயும் தமிழன்நம்பரான் பாரு அதுதான் ….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க