2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் லண்டனில் நடக்கப்போவது தெரிந்த விஷயம்தான். கண்கவர் அம்சமாகவும், அதே சமயம் பாதுகாப்பிற்காகவும் ஒலிம்பிக் அரங்கைச் சுற்றி ஒரு மூடுதிரை அமைக்கப்பட உள்ளது. அந்த திரைக்காக பிரத்யேக பிசின்கள் உபயோகப்படுத்த உள்ளது. மற்ற திரைகளோடு ஒப்பிடும்போது, இந்த கலைநயமிக்க திரை 35 சதவீதம் லகுவானது. முக்கியமாக, அதில் உள்ள கார்பனின் அளவும் குறைவானது. மேலும், அந்த திரையின் முக்கிய அம்சமே, மறுசுழற்சியால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உள்ளடக்கியிருப்பதுதான். அது மட்டுமா? அந்த திரையை தொங்க விடுவதற்கான பொருட்கள் கூட மறுசுழற்சியாலானதுதான்.
அந்த திரையைச் செய்யும்போது, வெளியேறும் மாசுப்பொருட்களை குறைப்பதற்குக்கூட கவனமெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்காகவே, புற-ஊதா கதிர்களை நிவர்த்தி செய்யும் மைதான் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. லண்டன் ஒலிம்பிக் அரங்கம் எந்த சுழலையும் தாக்குபிடித்து நிற்க வேண்டுமென்பதற்காக இத்தனை மெனக்கெடல்கள். இதனை அந்த திரை கச்சிதமாக செய்துமுடிக்கும்.
விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் அமைச்சர்களை அசத்தியுள்ள இந்த திரை பார்வையாளர்களையும் பரவசமடையச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த திரை மட்டுமல்ல, திரையை தயாரிப்பது யார் என்ற செய்தியே நம்மை பரவசமடையச் செய்கிறதே! ஆம், மக்கள் மீதும் சுற்றுச்சூழல் மீதும், பூவுலகின் மீது இவ்வளவு அக்கறையோடு இந்த திரையை டௌ கெமிக்கல்சை தவிர வேறு யார் செய்யக்கூடும்?
டௌ கெமிக்கல்ஸ் – யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியிருக்கும் நிறுவனம் என்று சொன்னால் தரம் எளிதில் விளங்கும். அப்படியும் விளங்கவில்லையென்றால், உங்கள் நினைவுச்செல்களைத் தேடிப்பாருங்கள். பிறந்து சில மாதங்கள் கூட ஆகியிராத குழந்தையின் முகம், மண்ணில் புதையுண்ட அந்த முகத்தை வருடும் கரங்கள் – நினைவுக்கு வருகிறதா போபால் விஷ வாயுக்கசிவு! ஆம், குப்பைகளைப் போல மண்ணுக்குள் தள்ளி புதைக்கப்பட்ட பிஞ்சுக்குழந்தைகளுள் ஒன்று அது.
இந்த படுகொலைகள் நடந்து 27 ஆண்டுகளுக்கு முடிந்துவிட்டன. யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய நச்சு வாயுக்கசிவு 23000க்கும் அதிகமானோரை காவு கொண்டது. அந்த நஞ்சும், நச்சுக்காற்றும் மாண்டு போனவர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. இன்றும் போபாலில் குழந்தைகள் மரபணு மாற்றத்துடன் மண்டைகள் வீங்கி, விழிகள் பிதுங்கி, கை கால்கள் வளைந்து ஊனத்துடன் பிறக்கின்றன,. கருவிலேயே அழிந்தும் போகின்றன.
அன்று நஞ்சினால் பாதிக்கப்பட்டவர்கள், இன்றும் நடைபிணமாகவே வாழ்கின்றார்கள். நடந்து முடிந்த அந்த படுகொலைக்கு நீதி வழங்கப்படவே இல்லை. அதை விபத்து என்று சொல்லி வழக்கை இழுத்து மூடியது, இந்திய நீதிமன்றம். இந்த ரத்தக்கறை படிந்த கைகளோடுதான் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பு கவசத்தை தயாரிக்கப் போகிறது என்பது கொடூரமாகக இல்லையா?
ஒலிம்பிக் அரங்கு தயாரிப்பில் டௌ கெமிக்கல் நிறுவனம் பங்கேற்பதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக 5000 பேர் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்திய விளையாட்டு வீரர்கள் சம்மேளனமும் தனது எதிர்ப்பை காட்டியது. விளையாட்டில் கலந்துக்கொள்ளாமல் வெளிநடப்பு செய்வதாகவும் தெரிவித்திருக்கிறது.
இதற்கெல்லாம் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பதில் என்ன? போபால் விஷ வாயு கசிவின்போது யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கும் டௌவுக்கும் எந்த சம்ப்ந்தமும் இல்லையென்றும், 1989-ல் யூனியன் கார்பைடு நிறுவனம் மக்களுக்கு போட்ட பிச்சைக்காசுதான் நிவாரணம் என்று முடித்துக்கொண்டது.
போபால் விஷவாய் படுகொலை நிறுவனத்தை வாங்கியதோடு மட்டுமல்லாமல் டௌ கெமிக்கல்சின் வரலாறே படுகொலைகளோடு சம்பந்தப்பட்டதுதான். வியட்நாமில் மக்கள் மீது வீசுவதற்கு நாபாம் குண்டுகளையும், வயல்வெளிகள் மீது வீசுவதற்கு ஆரஞ்சு குண்டுகளையும் தயாரித்து வழங்கியது டௌதான். அமெரிக்காவின் பேரழிவு ஆயுதங்களை வழங்குவது இந்த நிறுவனம்தான். இந்த நிறுவனம்தான் இன்று ஒலிம்பிக் அரங்கத்துக்காக 11 மில்லியனில் திரையை தயாரித்துக்கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலை பற்றியும், மக்களின் பாதுகாப்பைப் பற்றியும் முதலைக்கண்ணீர் விடுகிறது.
போபாலில், இன்றும யூனியன் கார்பைடு நிறுவனத்தின் கழிவுகள் அகற்றப்பட வில்லை. எந்த பாதுகாப்புமின்றி மக்கள் அந்த தொழிற்சாலையின் அருகில்தான் வசிக்கின்றனர். அசுத்தமான தண்ணீரைத்தான் உபயோகப்படுத்துகின்றனர். சரியான மருத்துவ வசதிகளின்றி, கிட்டதட்ட 1 லட்சத்துக்கும் அதிகமானோர், நோய்வாய்ப்பட்டும், பாதிக்கப்பட்டும் வேறுவழியின்றி வாழ்க்கையை தள்ளிக்கொண்டிருக்கின்றனர். எனில், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சொத்தில் மட்டும்தானா டௌவுக்கு பங்கு? கழிவுகளை அகற்றுவதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நிவாரணத்தையும் கொடுப்பதும் டௌவுக்கு கடமையில்லையா?
கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்குமான கணக்கை நேர் செய்துவிட்டு ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பை பற்றி கவலைப்படட்டும், டௌ கெமிக்கல்ஸ். அதுவரை, கொலைகார கரங்களிலிருந்து கண்ணுக்கினிய திரையை போர்த்திக்கொண்டு ஒளிர்வதை விட, திரையற்ற ஒலிம்பிக் அரங்கமே அழகு மிக்கது!
______________________________________________________
– ஜான்சி
_______________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
தொடர்புடைய பதிவுகள்
- போபால்: நீதி வேண்டுமா, புரட்சி ஒன்றுதான் பாதை !!
- போலி சுதந்திர தினத்தில் ஒரு உண்மையான சுதந்திரப் போராட்டம் !
- புதிய ஜனநாயகம்,போபால் – சிறப்பிதழ், ஜூலை-2010, மின்னிதழ் (PDF) டவுண்லோட் !
- எவன்டா அவன் சவுண்டு கொடுக்கறது?
- போபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு!
- சென்னையில் போபால் ஓவியக்காட்சி: துரோகத்தின் விலை என்ன?
- விக்கி லீக்ஸ் – இந்தக் கதை இதோடு முடியவில்லை…..
- ராஜீவ் காந்தி : மனித உணர்ச்சியே இல்லாத பிண்டமா?
- போபால்: ஆகஸ்டு 15 கிண்டியில் டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை !
- தமிழகத்தின் போபால் நோக்கியா? – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் !!
- பாண்டிச்சேரி கெம்பாப் கெமிக்கல் ஆலை: காத்திருக்கும் மற்றுமொரு போபால் விபத்து?
- முள்ளிவாய்க்கால் – போபால்
முதலாளித்துவத்தின் அதிகோரத்தாண்டவத்தின் உச்சக்கட்டம். அதனை மென்மேலும் ஊக்குவிக்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகளின் நோக்கமுள்ள அலட்சியம். கொடூர டெள கெமிக்கல்ஸ் ஐ விரட்டியடிக்க சூழுரைப்போம். முதலாளித்துவ அடிவருடிகளை அம்பலப்படுத்துவோம். எங்கே சுட்டிகளுடன் வருவார்களே, இன்னும் வரலை முதலாளித்துவத்தின் ஆபாச பக்தர்கள்!
இரு விசியங்கள் :
1. போபாலில் விசவாய்வு கசிந்த தொழிற்சாலை பகுதி கடந்த 27 ஆண்டுகளாக இந்திய அரசின் வசம் தான் உள்ளது. இன்னும் அபாயகரமான கெமிக்கல்கள் அங்கு உள்ளன. சுத்தப்படுத்தப்படவே இல்லை. டவ் நிறுவனம் அந்த இடம் எங்க வசம் இல்லை என்று சொல்கிறது. அரசு சுத்தப்படுத்த எந்த முயற்ச்சியும் எடுக்காமல், அப்படியே போட்டு வைத்துள்ளது.
2. நஸ்ட ஈட்டு தொகையாக 1989இல் 470 மில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிறுவனம் அளித்தது. (1984இல் 350 மில்லியன் அளிக்க முன்வந்தது. வழக்கு தொடரப்பட்டு 5 ஆண்டுகள் நடந்து, பின் வட்டியுடன் சேர்த்து இந்த 350 மில்லியன்). ஆனால் பிரச்சனை என்னவென்றால் சுமார் 10 லச்சம் claims வந்தன. பல பத்தாண்டுகள் விசாரணை நடந்து அதில் ஏறக்குறைய பாதி மகஜர்களை இந்திய நீதிமன்றங்கள் நிராகரிக்க வேண்ட்யிருந்தன. இதனால் பெரும் கால தாமதம்.
//முதலாளித்துவத்தின் அதிகோரத்தாண்டவத்தின் உச்சக்கட்டம்.//
ஆம். ஆனால் அன்று இந்தியாவில் இருந்தது முழுமையான, ஒழுங்கான ‘முதலாளித்துவம்’ அல்ல. crude form with cronyism, etc. இதே விபத்து, அய்ரோப்பாவ்ல் நிகழ்ந்திருந்தால், இப்படி எல்லாம் ‘தப்பிக்க’ முடியாது. கடுமையான விளைவுகளை பெரும் நிறுவனங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்
1986இல் சோவியத் ரஸ்ஸியாவின் செர்னோபிலில் பெரும் அணு உலை விபத்து. 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர். மேலும் பல லச்சம் மக்கள் கதிர்வீச்சினால பெரும் பாதிப்புக்குள்ளானர். அதை ‘கம்யூனிசத்தின் அதிகோரத்தாண்டவத்தின் உச்சக்கட்டம்’ என்று வர்ணித்தால் ஏற்க்க மாட்டீர்கள் அல்லவா. அன்று ரஸ்ஸியாவில் இருந்தது உண்மையான கம்யூனிசமே அல்ல என்பீர்கள். அதே போல் தான் இந்தியாவில் இருப்பது உண்மையான ‘முதலாளித்துவம்’ அல்ல.
//முழுமையான, ஒழுங்கான ‘முதலாளித்துவம்’ அல்ல.// போன பதிவில் அண்ணன் அதியமான் மேற்படி முழுமையான ‘முதலாளித்துவம்’ சாத்தியமாகவில்லை என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்துவிட்டபடியால், இனிமேற்கொண்டு தோழர்கள் அனைவரும் 1) முழுமையில்லாத ‘முதலாளித்துவத்தின்’ சீரழிவுக்கு முழுமையான ‘முதலாளித்துவத்தை’ குறை சொல்வதை விட்டு விட வேண்டும் என்றும், 2) சோசலிச புரட்சியை கைவிட்டு விட்டு முழுமையான ‘முதலாளித்துவ’ புரட்சியை அதுவும் அண்ணன் வழி புரட்சியாக மட்டுமே செய்ய அணி திரளு மாறும் பக்கத்து வீட்டு ஜோசிய பஞ்சாயத்து கேட்டுக் கொள்கிறது.
//அன்று ரஸ்ஸியாவில் இருந்தது உண்மையான கம்யூனிசமே அல்ல என்பீர்கள். அதே போல் தான் இந்தியாவில் இருப்பது உண்மையான ‘முதலாளித்துவம்’ அல்ல.
// அன்று ரஷ்யாவில் இருந்தது கம்யூனிசமே இல்லை என்கிறோம். அது சமூக ஏகாதிபத்தியம் என்கிறோம். அது அரசு மூலதனத்துடன், கொள்ளைப் புற முதலாளிகளின் மூலதனத்தின் சுரண்டல் காலம் என்கிறோம். உங்களைப் போல புரட்டி புரட்டி தாவித் தாவி பேசி முதலாளித்துவத்தின் அயோக்கியத்தனங்களுக்கு முட்டுக் கொடுக்கவில்லை நாங்கள்.
//ஆம். ஆனால் அன்று இந்தியாவில் இருந்தது முழுமையான, ஒழுங்கான ‘முதலாளித்துவம்’ அல்ல. //
இந்தியாவில் முழுமையான, ஒழுங்கான முதலாளித்துவம் மலர அனைவரும் ஒன்றுபடுவோம், பாடுபடுவோம். அப்போதுதான் பல பேர் தாலியை அறுக்க முடியும்.
அண்ணன் வழி நடக்கும் தம்பி……
தோழன்
//1986இல் சோவியத் ரஸ்ஸியாவின் செர்னோபிலில் பெரும் அணு உலை விபத்து. 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர்// அண்ணன் அதியமானின் பொய் புரட்டுகளுக்கு மேலும் ஒரு உதாரணமாக மேற்படி புள்ளிவிவரம் உள்ள போதிலும், இது முக்கிய நிருபர் ஒருவர் தந்த புள்ளிவிவரம் ஆகிறபடியால் இதனை அனைவரும் அப்படியே நம்ப வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அடுத்ததாக சோவியத் ரஷ்யாவில் ஆய் போன ஆயாக்கள் ஒரு 10 லட்சம் பேர் வழுக்கி விழுந்து செத்த தகவல் குறித்து அண்ணன் ஆயாசம அடையும் அளவு ஆய்வு செய்து ஒரு பதிவு எழுத உள்ளார். அதை ஞான் எழுதிய பதிவு என்று எங்கேனும் அவர் குறிப்பிடும் பொழுது பக்த பின்னூட்டர்கள் படித்து அஞ்ஞனமே பயன் பெற்றுக் கொள்ளுங்கள்.
தகவலுக்கு சில: 31லிருந்து 64 பேர் வரை விபத்தில் பலியானவர்கள். இந்த புள்ளிவிவரத்தைத்தை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஆயிரம், ரெண்டாயிரம், மூவாயிரம் என இழுத்து இன்று 20000 என்று அதியமானும் அவரே இங்கு சொல்லிக் கொள்ள வெட்கப்படும் அளவுக்கு 9 லட்சம் என்று ஒரு புள்ளிவிவரமும் நம்மை பிம்பிலிக்கி பியாப்புகின்றன. அணுக் கதிர் வீச்சின் பாதிப்பால் பிற்பாடு பலர் இறந்துள்ளனர் என்பது உண்மை எனும் போதும் அதனை இங்கு அதியமான் தம் கட்டி குறிப்பிடுவது கொல்லப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க அல்ல. மாறாக, டௌ கெமிக்க்ல்ஸின் கொடூர முகத்திற்கு முட்டைக் கட்டை கொடுக்கவே ஆகும். டௌ கெமிக்கல்ஸ் உலகம் முழுவதும் குண்டுகள் போட்டு நாசகர வேலை செய்ய உதவும் நிறுவனம் என்பது பற்றி அவர் வாய் முடி இருப்பதே இதற்கு சாட்சி
[…] கொலைகார டௌ கெமிக்கல்ஸ் தயவில் இலண்டன… […]