புதிய ஜனநாயகம் – ஜனவரி 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்! -

புதிய ஜனநாயகம் ஜனவரி 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்!

  1. “இரட்டை வேடம் போடும் ‘தேசிய’க் கட்சிகளைத் தோலுரிப்போம்! தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்!” தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்  மறியல் போராட்டங்கள்!
  2. மன்னார்குடிக்குப் பதிலாக மயிலாப்பூர் கும்பல்: பாசிச ஜெயாவின் பச்சையான பார்ப்பன ஆட்சி!
  3. முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்!
  4. தமிழக மீனவர் பிரச்சனை: நெஞ்சில் சுடுகிறான் சிங்களன்!முதுகில் குத்துகிறது இந்திய அரசு!!
  5. புதிய ஓய்வூதியத் திட்டம்: சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை!
  6. “காமவெறி பயங்கரவாத போலீசைத் தண்டிப்போம்!”புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்!!
  7. கறுப்புப் பணம்: கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில்…
  8. “கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரேவின் முகத்திரையைக் கிழித்தெறிவோம்!”
  9. ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது!
  10. கருத்துரிமைக்குக் கல்லறை!
  11. சில்லறை வர்த்தகத்தில் அந்திய முதலீடு:இந்து மதவெறிக் கும்பலின் சுதேசிப் பித்தலாட்டம்!
  12. மாருதி சுசுகி, வால்ஸ்ட்ரீட் போராட்டங்கள் கற்றுத்தரும் பாடம்:“புரட்சிகர அரசியலே தீர்வு!” பு.ஜ.தொ.மு.வின் அரங்கக் கூட்டங்கள்
  13. விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் சுற்றிவளைக்கப்படும் சீனம்
  14. மாணவர் விடுதியா?அரசின் வதைமுகாமா?பு.மா.இ.மு. தலைமையில் மாணவர்களின் மறியல் போராட்டம்!!
  15. “பயங்கரவாத ஓநாய் ஏகாம்பரத்தின் கொட்டத்தை அடக்குவோம்! தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டப் போராடுவோம்!”
  16. குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர்களின் போராட்டம்!!
  17. இந்துஸ்தான் யுனிலீவரின் பழிவாங்கலுக்கு எதிராக தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமை போராட்டம்!
  18. குஜராத்: மோடியின் கொலைக்களம்!

புதிய ஜனநாயகம் ஜனவரி 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க்  ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK –  SAVE TARGET AS or SAVE LINK AS)

6 மறுமொழிகள்

  1. அட்டைப் படத்திலேயே சீசனுக்கு ஏற்ப/பிரச்சனைக்கு பொருத்தமாக ஐயப்பன் போஸில் மூன்று தலைகளாக காங்கிரசின் மன்மோகன் சிங், பாஜகவின் அத்வானி, சிபிஎம்மின் பரதன் மூன்று பேரையும் பொட்டு முல்லைப்பெரியாறு விவகாரத்தில் ‘தேசிய’ கட்சிகளின் துரோகம் என்று பளீரென்று வரவேற்கிறது புதிய ஜனநாயகத்தின் ஜனவரி இதழ். கட்சிகள் மூன்றாக இருந்தாலும் ஒரே ‘தெய்வத்தின்’ வெவ்வேறு முகங்கள்தான் என்று நச்சென்று உணர்த்தும் கேலிச் சித்திரம். சுதந்திரப் போராட்ட வரலாற்று முகமூடியோடு மக்கள் விரோத காங்கிரஸ், இந்துத்துவ கோர முகத்தோடு மக்களை சில நூற்றாண்டுகள் பின்னோக்கிக் கொண்டு போக நினைக்கும் பாரதீய ஜனதா, கம்யூனிஸ்டுகள் என்று பெயரில் மக்களை ஏமாற்றி ஏகாதிபத்தியங்களுக்கு அடகு வைக்கும் சிபிஎம், இவர்களால் கட்டமைக்கப்பட்டு காபந்து பண்ணப்படுவதுதான் இந்திய தேசியம் என்ற அறிமுகம்.

    அந்த அறிமுகத்தைத் தொடர்ந்து “இரட்டை வேடம் போடும் ‘தேசிய’க் கட்சிகளைத் தோலுரிப்போம்! தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்!” என்ற முழக்கத்தின் கீழ் தமிழகமெங்கும் நடத்தப்பட்ட மக்கள் திரள் போராட்ட விபரங்கள் முன்னட்டையிலும் பின்னட்டையிலும் புகைப்படங்களுடன்.

    பாரதீய ஜனதா கட்சியின் மக்கள் நல முகமூடிகளில் முக்கியமானது சுதேசிக் கொள்கை. அவர்கள் ஆட்சியிலிருந்த போதும், எதிர்க்கட்சியாக இருந்த போதும் சரி காங்கிரசோடு கூட்டுச் சேர்ந்து அன்னிய நிறுவனங்களுக்கு இந்திய பொருளாதாரத்தை அடகு வைக்கும் முக்கிய முடிவுகளுக்குக் காரணமான அவர்கள் சுதேசி இயக்கம் என்று பித்தலாட்டம் செய்து கொண்டிருப்பதை ‘இந்து மதவெறிக் கும்பலின் சுதேசிப் பித்தலாட்டம்’ என்ற கட்டுரை விளக்குகிறது.

    சரி, தேசியக் கட்சிகள் மட்டும்தான் மக்களை ஏமாற்றும் சக்திகள் என்று யாராவது நினைத்திருந்தால், இந்துத்துவா சக்திகளின் கையில் தனது பாசிச ஆட்சி அதிகாரத்துடன் தஞ்சம் புகுந்திருக்கும் ஜெயலலிதாவின் சசிகலா வெளியேற்றம் பற்றி யாருக்கும் எந்த சந்தேகமும் மிச்சமிருக்க முடியாத படி தெளிவு படுத்துகிறது தலையங்கம். தமிழ்நாட்டில், திராவிட நாட்டில் இந்துத்துவாவுக்கு இடமில்லை என்று யாராவது நம்பிக் கொண்டிருந்தால், பின் கதவு வழியாக எப்படி ஆர்எஸ்எஸ் கும்பல் தமிழ்நாட்டின் அதிகார மையங்களைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது என்பதை தலையங்கம் ஆணித்தரமாகச் சொல்கிறது.

    முல்லைப்பெரியாறு பிரச்சனையின் வரலாற்றுப் பின்னணி, கடந்த கால நிகழ்வுகள், கேரள அரசின் மக்கள் விரோதப் போக்குகள், தமிழக அரசுகளின் துரோகம், தொழில்நுட்ப தகவல்கள், போராட்ட வழிமுறை என்று முழுமையான ஒரு கையேடாக 4 பக்கக் கட்டுரை. அதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிப் போவதால்தான் தாக்கப்படுகிறார்கள் என்று முதுகில் குத்தியுள்ள கடலோரக் காவல்படையின் நயவஞ்சகத்தையும் இந்திய அதிகார மட்டங்களில் நிலவும் தமிழின வெறுப்பையும் படம்பிடித்துக் காட்டும் கட்டுரை.

    லட்சக் கணக்கான அரசு ஊழியர்களுக்கும் பொதுத்துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதிய உரிமையை ஒழித்துக் கட்ட எடுக்கப்பட்டு வரும் அதிகார வர்க்க நடவடிக்கைகளைப் பற்றி மனதைப் பதைக்க வைக்கும் கட்டுரை. உழைத்து உடல் சக்கையாக வெளித் தள்ளப்பட்ட பிறகு முதுமையில் எந்த வாழ்வாதாரமும் இல்லாமல் தெருவில் விடப்படும் எதிர்காலம்தான் இந்த அரசுகள் மக்களுக்கு திட்டமிட்டுள்ளன. ஐந்தரை பக்க அளவிலான இந்தக் கட்டுரைக்கு குறைந்தது அரை மணி நேரம் ஒதுக்கி கவனமாகப் படிக்க வேண்டியது சொந்த நலனையும் சமூக நலனையும் விரும்பும் ஒவ்வொருவரின் கடைமை என்றே சொல்லலாம்.

    இந்த பணமெல்லாம் எங்குதான் போகிறது என்று கேள்வி எழுந்தால், அதுதான் கருப்புப் பணமாக சுவிட்சர்லாந்திலும், குட்டித் தீவு நாடுகளிலும் மிதந்து கொண்டிருக்கிறது என்று கருப்பு/வெள்ளை பணங்களின் தோற்றம், அளவு, நகர்வு பற்றிய தொடரின் முதல் பகுதி. டௌ கெமிக்கல்ஸ் என்ற கொலைகார நிறுவனத்தை ஒலிம்பிக் ஸ்பான்சராக ஏற்றுக் கொண்டதை ஒட்டிய விவாதத்தின் பின்னணியையும் இந்திய அதிகார வர்க்கம் மற்றும் விளையாட்டு வீரர்களின் சுயநலத்தையும் தெளிவுபடுத்துகிறது ‘நாய் விற்ற காசு குரைக்காது’ என்ற கட்டுரை.

    மக்களுக்கு இருக்கும் உரிமை, உழைப்பது, முடிந்த அளவுக்கு கஞ்சி குடிப்பது, டாஸ்மாக், திரைப்படம் என்று நேரத்தைப் போக்குவது. இதற்கு மேல் கார்பொரேட்டுகளுக்கு எதிராக பேச ஆரம்பித்தால் அதிகார வர்க்கத்தின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதற்கு ஜார்கண்டில் காவல் துறையாலும், நீதித் துறையாலும் பழி வாங்கபட்ட சமூக ஆர்வலர்களின் போராட்ட வரலாறு ‘கருத்துரிமைக்குக் கல்லறை’ என்ற கட்டுரையில்.

    உலகப் பயங்கரவாதி அமெரிக்கா தனக்குப் போட்டியாக நினைக்கும் நாடுகளை வட்டம் கட்டி நெருக்குவதற்கு இந்தியாவை அடியாளாக செயல்பட வைக்கும் இந்திய அரசைப் பற்றியும், இந்துத்துவா பயங்கரவாதி மோடியின் குஜராத்தில் நடந்த போலீஸ் படுகொலைகள் குறித்த ஆதாரங்கள் குவிந்து கொண்டிருப்பதை பற்றியும் விளக்கும் கட்டுரைகள் சமூக அரசியலில் ஆர்வமுடையவர்கள் தவற விடக்கூடாத கட்டுரைகள்.

    அன்ன ஹசாரேக்கு கறுப்புக் கொடி காட்டிய போராட்டம், ‘புரட்சிகர அரசியலே தீர்வு’ என்ற தலைப்பில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நடத்திய அரங்கக் கூட்டங்கள் பற்றிய விபரங்கள், மாணவர் விடுதிகளில் நடக்கும் மோசடிகளுக்கு எதிரான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினரின் போராட்டம், குளோபல் ்பார்மாடெக் தொழிலாளர்களின் போராட்டம் பற்றிய அறிக்கை, புதுவை இந்துஸ்தான் யூனிலீவரின் பழி வாங்கலுக்கு எதிரான போராட்டத் தகவல்கள் இந்த இதழின் முக்கியமான ஆவணப் படுத்தல்கள்.

  2. புத்தக விற்பனை அனுபவம்.

    ‘தமிழ்நாட்டில் பல விதமான தொழில்கள் செய்து பிழைக்கிறோம். விவசாயிகள் இருக்கிறார்கள், மீனவர்கள் இருக்கிறார்கள், தனியார், அரசு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் உண்டு, கூலி வேலை, கட்டட வேலை, கடை வைத்துப் பிழைப்பவர்கள் என்று ஒவ்வொருவரும் பாடுபட்டுத்தான் வாழ்கிறோம். ஆனால் எல்லாத் துறையிலும் ஏதாவது நெருக்கடி வந்து கொண்டுதான் இருக்கிறது.

    கடந்த சில நாட்களாக பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சனையையே எடுத்துக் கொள்வோம். இது ஒரு பிரச்சனையே இல்லை. முல்லைப் பெரியாறு அணை மூலம் தென் தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் பிழைக்கிறார்கள். கேரள அரசியல்வாதிகள் ஓட்டு அரசியலுக்காக வேண்டுமென்றே ஒரு பிரச்சனையை கிளப்புகிறார்கள். கேரள மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கேரளாவில் இருக்கும் காங்கிரசு, போலியாக கம்யூனிசம் பேசும் சிபிஎம், பாரதீய ஜனதா கட்சி போன்றவை தமிழ்நாட்டில் ஒன்று பேசுகிறார்கள், கேரளத்தில் இன்னொன்று பேசுகிறார்கள். தேசியக் கட்சி என்று பெயரளவில் வைத்துக் கொண்டு மாநிலத்துக்கு மாநிலம் பேச்சை மாற்றி பிரச்சனை செய்கிறார்கள்.

    இந்த கேஸ் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போய், இந்த அணை பலமாகத்தான் இருக்கிறது, நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தாகி விட்டது. அதைக் கூட கேரள அரசாங்கம் மதிக்க மாட்டேன் என்கிறார்கள். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும்.

    மீனவர்களைப் பார்த்தீங்கண்ணா, கடலில் மீன் பிடிக்கப் போனா இலங்கை கடற்படை சுட்டுக் கொல்கிறது. குருவி சுடுவது போல சுட்டுக் கொல்கிறது. இவங்களைப் பாதுகாக்க வேண்டியது இந்தியக் கடற்படையின் பொறுப்பு. ஆனா, அவங்களோ, ‘இலங்கை கடற்படை மீது எந்த தப்பும் இல்லை, நம்ம மீனவர்கள்தான் எல்லை தாண்டி போகிறாங்க, அதனால்தான் சுடப்படுகிறார்கள்’ என்று கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்கிறார்கள். நம்ம நாட்டு குடிமக்களையே காப்பாற்ற முடியாத அரசாங்கம் இருக்கிறது. உங்களுக்கே தெரியும் இராமேஸ்வரம் அருகில் இலங்கைக்கு இடையிலான கடல் மிகவும் குறுகியது. மீனவர்கள் மீன்பிடிக்கப் போகும் போது எல்லையைத் தாண்டுவதை தவிர்க்க முடியாது. அப்படியே தாண்டினாலும், அவர்களைப் பிடித்து திருப்பி அனுப்பலாமே தவிர சுடுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது.

    அரசாங்க வேலை பார்க்கிறவர்கள், அல்லது தனியார் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு பிஎப் பிடிப்பார்கள், அதை வைத்து பென்சன் கொடுப்பார்கள். இந்த பிஎப் பென்சன் பணத்தை பாதுகாப்பா வைத்திருந்து திருப்பிக்கொடுப்பது அரசின் பொறுப்பு. சில தனியார் கம்பெனகளில் பிஎப் பணத்தை ஒழுங்காகக் கட்டுவதில்லை என்று பிரச்சனைகள் வரும். இப்போது மத்திய அரசு இந்த பிஎப் பணத்தை தனியார் நிதி நிறுவனங்கள் கையில் கொடுத்து முதலீடு செய்ய பார்க்கிறது. அந்தக் கம்பெனி முழுகிப் போனால், சேமித்து வைத்தவர்களின் நிலை என்ன ஆகும்? அமெரிக்காவில் இது போல தனியார் நிதி நிறுவனங்கள் பிஎப் பணத்தை முதலீடு செய்ய எடுத்து, பணமே பங்குச் சந்தையில் மூழ்கிப் போய் பலருக்கு பணம் கிடைக்காமல் போயிருக்கிறது. இது பற்றிய முழு விபரங்களையும் சொல்லும் கட்டுரையைப் படிக்கலாம்.

    ஐந்து வருஷமா திமுக காரங்க ஆட்சி செய்தார்கள். குடும்பமாக ஊழல் செய்தார்கள், ஊர் ஊராக நில அபகரிப்பு செய்தார்கள் என்று ஓட்டை மாத்திப் போட்டு ஜெயலலிதா ஆட்சி கொண்டு வந்தோம். என்ன ஆச்சு, முதல் மூன்று மாதங்களுக்கு குழந்தைகளுக்குப் படிக்க புத்தகம் கூட கிடைக்காம குளறுபடி செய்தாங்க சமச்சீர் கல்வி விஷயத்தில். பேருந்து கட்டணத்தை இரண்டு மடங்கா ஏற்றி விட்டார்கள். பால் விலையை ஏற்றி விட்டார்கள். பரமக் குடியில் துப்பாக்கி சூடு நடத்தி மக்களைக் கொன்றார்கள். பணம் இல்லை என்று சொல்பவர்கள் பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டியிருந்த தலைமைச் செயலக கட்டிடத்தையும், நூலகத்தையும் இடம் மாற்றப் போவதாகச் சொல்லுகிறார்கள்.

    இதற்கெல்லாம் காரணம் சசிகலாதான் என்று அவர்களை இப்போது வெளியேற்றியிருக்கிறார்கள். 20 வருஷமா சசிகலா குடும்பத்தினர் இப்படிச் செய்கிறார்கள் என்று தெரியாமலா இவங்க கட்சி நடத்தினாங்க? உண்மையில் சசிகலா கும்பலை வெளியேற்றி மயிலாப்பூர் கும்பலாக துக்ளக் சோ தலைமையில் குழு அமைத்திருக்கிறார்கள். இது வரை சாதாரணமாக கொள்ளை அடித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் வெளி நாட்டு கம்பெனிகள், படிச்சவங்களை சேர்த்துக் கிட்டு இன்னும் தீவிரமாக ஊழல் செய்யப் போகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

    கருப்புப் பணமாக நம்ம பணமெல்லாம் வெளி நாட்டில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். கருப்புப் பணம் என்றால் என்ன, அது நம்மை எப்படிப் பாதிக்கிறது என்ற முழு விபரங்கள் கட்டுரையில் படிக்கலாம்.

    இதை எல்லாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும், நடக்கும் போராட்ட விபரங்கள், நாம் எப்படிப் போராட வேண்டும் என்ற விபரங்களைத் தெரிந்து கொள்ள வாங்கிப் படியுங்கள். விலை 10 ரூபாய்தான். எந்த விளம்பரங்களோ, வணிக நோக்கமோ இல்லாமல் வெளி வரும் பத்திரிகை. ‘

    இப்படி முழுமையாகவோ சில பகுதிகளையோ அவரவர் பாணியில் மாற்றி மாற்றி பேசினோம். மக்களின் எதிர்வினை நன்றாக இருந்தது. குறிப்பாக சசிகலா வெளியேற்றம் பற்றிப் பேசும் போது பல பெண்கள் ஆமோதித்து பதில் சொல்வதும், தலையாட்டுவதும் தெரிந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஈர்ப்பு ஏற்படுகிறது. பேசப் பேச அழைத்து வாங்கினார்கள்.

Leave a Reply to தமிழக மீனவர்: நெஞ்சில் சுடுகிறது சிங்கள இனவெறி! முதுகில் குத்துகிறது இந்திய அரசு!! - Tamil News Articles::இனி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க