சசிகலா நீக்கம் : மன்னார்குடிக்குப் பதிலாக மயிலாப்பூர் கும்பல் !

சசிகலா நீக்கம் : மன்னார்குடிக்குப் பதிலாக மயிலாப்பூர் கும்பல் !

கடந்த டிசம்பர் 19ஆம் தேதியன்று தனது நெருங்கிய தோழியும் அ.தி.மு.க.வின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சசிகலா மற்றும் அவரது உறவினர்களைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாகவும், இவர்களுடன் கட்சிக்காரர்கள் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவித்துள்ள தமிழக முதல்வரும் அ.தி.மு.க. தலைவியுமான ஜெயலலிதா, சசிகலாவை போயஸ் தோட்டத்திலிருந்தும் வெளியேற்றியுள்ளார். மன்னார்குடி மாஃபியா என்று அழைக்கப்பட்ட சசிகலா கும்பலின் விசுவாச அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

யாருடைய தலையீடும் இல்லாத, நிர்வாகத் திறன்மிக்க ஆட்சியை ஜெயலலிதா தருவார் என்று பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கிய பிம்பம் கடந்த ஆறு மாதங்களுக்குள்  உடைந்து நொறுங்கிவிட்டது. ஜெயாவின் ஆட்சி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி, எதையும் உருப்படியாகச் சாதிக்க முடியாமல்  சீர்கேடைந்துள்ளது என இந்தியா டுடே போன்ற ஊடகங்களே குறிப்பிடுகின்றன. ஜெயா ஆட்சியில் சசிகலா கும்பலின் ஆதிக்கத்தை மூடிமறைத்தும், கருணாநிதியின் குடும்ப ஆட்சியைச் சாடியும் நேற்றுவரை பிரச்சாரம் செய்துவந்த பார்ப்பனப் பத்திரிகைகள், இப்போது  சசிகலா கும்பல் வெளியேற்றப்பட்டதும்,  ஜெயா ஆட்சியில் சசிகலா கும்பலின்  தலையீடு காரணமாகவே ஊழல்கொள்ளை, நிர்வாகச் சீர்கேடுகள் பெருகியதாகவும், ஜெயாவுக்கு எதுவுமே தெரியாது என்பது போலவும், ஊரறிந்த ஊழல் பெருச்சாளியை உத்தமராகக் காட்டி ஒளிவட்டம் போடுகின்றன.

சசிகலா வெளியேற்றப்பட்டதை மாபெரும் புரட்சி போலச் சித்தரிக்கும் பார்ப்பன ஊடகங்கள், இனி தலையீடற்ற, ஊழலற்ற நிர்வாகம் தொடங்கப் போவதாகவும், ஜெயாவின் அற்புதமான ஆட்சியில் இருந்த ஒரேயொரு குறையும் அகற்றப்பட்டுவிட்டது போலவும் சித்தரிக்கின்றன. ஜெயலலிதா மயக்கத்திலிருந்து தெளிந்து விட்டதாகவும், தொண்டர்களிடம் நிலவி வந்த அதிருப்தி நீங்கிவிட்டதாகவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றன.  அன்றைய ரஷ்யப் பேரரசி ஜாரினிக்கு ஒரு ரஸ்புடீன் இருந்ததைப் போல, ஜெயாவுடன் ஒட்டியிருந்த மன்னார்குடி கும்பல் இலஞ்சஊழல், நியமனங்கள், வெளியேற்றங்கள் அனைத்தையும் ஜெயாவுக்குத் தெரியாமல் செய்ததாகச் சித்தரிக்கும் பார்ப்பன  ஊடகங்கள், ஜெயாவை நிரபராதியாகக் காட்டும் முயற்சியில் அம்மா எதுவும் தெரியாத களிமண் என்பதை எதிர்மறையில் ஒப்புக் கொள்கின்றன.  இவர்கள் கூறும் களவாணிக் கும்பலால் கடந்த 20 ஆண்டுகளாக ‘ஆட்டுவிக்கப்பட்ட பொம்மை’யை வேறென்னவென்று அழைப்பது?

சொந்த சிந்தனை முறையில் ஜெயா ஒரு பார்ப்பன பாசிஸ்டு. அந்த வகையில்  அவரது தலைமையிலான அ.தி.மு.க. என்ற பொறுக்கி கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியதும் பார்ப்பனக் கும்பல் மகிழ்ந்தது. எனினும், ஓட்டுக்காக, பிற்படுத்தப்பட்ட சாதி ஆதிக்க சக்திகளைக் கொண்ட சமூக அடித்தளத்தை மன்னார்குடி மாஃபியா மூலமாக ஜெயலலிதா பராமரித்துப் பயன்படுத்தி வந்தார். தொடக்கம் முதலே ஜெயாவின் ஊழல்கொள்ளையை மறைக்க இந்தக் கும்பல் மீது பழிசுமத்திப் பார்ப்பன ஊடகங்களும் பயன்படுத்திக் கொண்டன. கட்சியிலுள்ள எதிர்கோஷ்டிகளும் சசிகலா கும்பலின் தலையீட்டினால்தான் அமைச்சர்களேகூட அம்மாவை நெருங்க முடியாமல்,  கட்சிக்கும் ஆட்சிக்கும்  கெட்டபெயர் ஏற்பட்டுள்ளதாகக் கருத்தை உருவாக்கின.

ஜெயாவையும் அவரது கட்சியையும் சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கும் அரசியல் விமர்சகராகக்  காட்டிக் கொள்ளும்  துக்ளக் சோ, இது சட்டத்துக்கு அப்பாற்பட்ட எவ்வித அதிகார மையமும் செயல்படாமல் முடக்கும் தீர்மானகரமான நடவடிக்கை என்று சசிகலா கும்பல் வெளியேற்றப்பட்டதைப் பற்றி பெருமையுடன் கூறுகிறார். ஜெயலலிதாவின் ஆலோசகரான துக்ளக் சோவின் உறவினர்களும், பார்ப்பனக் கூட்டமும் போயஸ் தோட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருப்பதாகக் கிசுகிசு ஏடுகள் பரபரப்புச் செய்திகளை வெளியிடுகின்றன. குஜராத்தின் மோடி பாணியில், “ஊழலற்ற நல்லாட்சி’’, “சிறந்த அரசாளுமை” முதலான முழக்கங்களை முன்வைத்து 2014இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியைச் சாதிக்கவும், அந்நிய முதலீடுகளை ஈர்த்து கார்ப்பரேட் சேவையில் புதிய அத்தியாயம் படைக்கவும், ஏற்கெனவே ஊழல்கொள்ளைக் கூட்டமாக அம்பலப்பட்டுப் போயுள்ள சசிகலா கும்பலின் மீது பழி போட்டு  தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொள்ளவும்தான் ஜெயலலிதா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

உலகவங்கி எடுபிடிகளான மன்மோகன் சிங் பிரதமராகவும், அலுவாலியா திட்டக் கமிசன் துணைத்தலைவராகவும், தரகு முதலாளிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரான அமித் மித்ரா மே.வங்க நிதியமைச்சராகவும் இருப்பதைப் போல, மறுகாலனியாதிக்கத்தின் கீழ் கார்ப்பரேட் சேவைக்கேற்ற வகையில் அரசு அமைப்பிலும் அரசியல் கட்சிகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அரசியல் சாராத படித்த வர்க்கத்தினரும், நிபுணர்களும், வல்லுநர்களும் நிர்வாகத்தை நடத்தினால்தான் நாடு முன்னேறும்; வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற பிரச்சாரத்துடன், நிபுணர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உலக வங்கித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நேற்றுவரை சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக இயங்கிய தமது விசுவாசக் கும்பல்களை வைத்துக் கொண்டு இத்தகைய நோக்கத்தை நிறைவேற்ற இயலாது என்பதால், அந்த இடத்தில் கார்ப்பரேட் சேவைக்கேற்ற ஆலோசகர்களை ஆளும் கட்சிகள் அமர்த்தி வருகின்றன.

மக்களுக்கும் கட்சி ஊழியர்களுக்கும் அப்பாற்பட்ட அதிகாரமாகச் செயல்பட்ட மன்னார்குடி கும்பலை அகற்றிவிட்டு, அந்த இடத்தை இப்போது பார்ப்பனக் கும்பல் கைப்பற்றியிருக்கிறது. பா.ஜ.க. இல்லாத பா.ஜ.க. ஆட்சியாக ஜெயலலிதாவின் ஆட்சி உருமாற்றம் பெற்றிருப்பதைப் பார்ப்பன பாசிஸ்டுகள் உச்சிமுகர்ந்து கொண்டாடுகின்றனர். சட்டத்துக்கு அப்பாற்பட்ட மன்னார்குடி கும்பலோ பொறுக்கித் தின்பதற்கு மட்டும்தான் அதிகாரத்தைப் பயன்படுத்தியது. ஆனால், பார்ப்பனக் கும்பலின் அதிகாரம், தமிழகத்தில் கடுமையான விளைவுகளையே ஏற்படுத்தும். பகுத்தறிவு, திராவிடம், ஈழ ஆதரவு, பார்ப்பன எதிர்ப்பு, தமிழின உணர்வுகளை வேரறுப்பதும், தீவிரவாத  பயங்கரவாதப் பீதியூட்டி புரட்சிகர ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதும், கார்ப்பரேட் கொள்ளைக்கான மறுகாலனியாக்கத்தை புதுவேகத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதும்தான் நடக்கும். இப்படித்தான் குஜராத்தில் மோடியின் ஆட்சி பயங்கரவாதப் பீதியூட்டி, பெயரளவிலான மனித உரிமை ஜனநாயக உரிமைகளை நசுக்கி, கார்ப்பரேட் கொள்ளைக்கான களமாக அம்மாநிலத்தை மாற்றியது. குஜராத்தின் மோடி மற்றும் பார்ப்பனக் கும்பலின் ஆலோசனைப்படி ஆட்சி நடத்தக் கிளம்பியிருக்கிறார், பாசிச ஜெயா. பாசிசம் என்பதை கார்ப்பரேட்டிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும் பொருத்தமானது என்று விளக்கமளித்தான், முசோலினி. அதற்கு இலக்கணப் பொருத்தமாகத் திகழ்கிறது பாசிச ஜெயாவின் பச்சையான பார்ப்பன ஆட்சி.

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

114 மறுமொழிகள்

 1. //பா.ஜ.க. இல்லாத பா.ஜ.க. ஆட்சியாக ஜெயலலிதாவின் ஆட்சி உருமாற்றம் பெற்றிருப்பதைப் பார்ப்பன பாசிஸ்டுகள் உச்சிமுகர்ந்து கொண்டாடுகின்றனர்//
  //விரவாத பயங்கரவாதப் பீதியூட்டி புரட்சிகர ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதும், கார்ப்பரேட் கொள்ளைக்கான மறுகாலனியாக்கத்தை புதுவேகத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதும்தான் நடக்கும்.//

  வினவின் நியாமான பதிவு.

 2. //அதிகாரமாகச் செயல்பட்ட மன்னார்குடி கும்பலை அகற்றிவிட்டு, அந்த இடத்தை இப்போது பார்ப்பனக் கும்பல் கைப்பற்றியிருக்கிறது. பா.ஜ.க. இல்லாத பா.ஜ.க. ஆட்சியாக ஜெயலலிதாவின் ஆட்சி உருமாற்றம் பெற்றிருப்பதைப் பார்ப்பன பாசிஸ்டுகள் உச்சிமுகர்ந்து கொண்டாடுகின்றனர்.//

  //பார்ப்பனக் கும்பலின் அதிகாரம், தமிழகத்தில் கடுமையான விளைவுகளையே ஏற்படுத்தும். பகுத்தறிவு, திராவிடம், ஈழ ஆதரவு, பார்ப்பன எதிர்ப்பு, தமிழின உணர்வுகளை வேரறுப்பதும், தீவிரவாத பயங்கரவாதப் பீதியூட்டி புரட்சிகர ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதும், கார்ப்பரேட் கொள்ளைக்கான மறுகாலனியாக்கத்தை புதுவேகத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதும்தான் நடக்கும். //

  மிகவும் சரியான பதிவு

 3. // மக்களுக்கும் கட்சி ஊழியர்களுக்கும் அப்பாற்பட்ட அதிகாரமாகச் செயல்பட்ட மன்னார்குடி கும்பலை அகற்றிவிட்டு, அந்த இடத்தை இப்போது பார்ப்பனக் கும்பல் கைப்பற்றியிருக்கிறது. பா.ஜ.க. இல்லாத பா.ஜ.க. ஆட்சியாக ஜெயலலிதாவின் ஆட்சி உருமாற்றம் பெற்றிருப்பதைப் பார்ப்பன பாசிஸ்டுகள் உச்சிமுகர்ந்து கொண்டாடுகின்றனர். சட்டத்துக்கு அப்பாற்பட்ட மன்னார்குடி கும்பலோ பொறுக்கித் தின்பதற்கு மட்டும்தான் அதிகாரத்தைப் பயன்படுத்தியது. ஆனால், பார்ப்பனக் கும்பலின் அதிகாரம், தமிழகத்தில் கடுமையான விளைவுகளையே ஏற்படுத்தும். பகுத்தறிவு, திராவிடம், ஈழ ஆதரவு, பார்ப்பன எதிர்ப்பு, தமிழின உணர்வுகளை வேரறுப்பதும், தீவிரவாத பயங்கரவாதப் பீதியூட்டி புரட்சிகர ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதும், கார்ப்பரேட் கொள்ளைக்கான மறுகாலனியாக்கத்தை புதுவேகத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதும்தான் நடக்கும். இப்படித்தான் குஜராத்தில் மோடியின் ஆட்சி பயங்கரவாதப் பீதியூட்டி, பெயரளவிலான மனித உரிமை ஜனநாயக உரிமைகளை நசுக்கி, கார்ப்பரேட் கொள்ளைக்கான களமாக அம்மாநிலத்தை மாற்றியது. குஜராத்தின் மோடி மற்றும் பார்ப்பனக் கும்பலின் ஆலோசனைப்படி ஆட்சி நடத்தக் கிளம்பியிருக்கிறார், பாசிச ஜெயா. பாசிசம் என்பதை கார்ப்பரேட்டிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும் பொருத்தமானது என்று விளக்கமளித்தான், முசோலினி. அதற்கு இலக்கணப் பொருத்தமாகத் திகழ்கிறது பாசிச ஜெயாவின் பச்சையான பார்ப்பன ஆட்சி. //

  ஒரு பாராவில் 6 இடத்தில் ”பார்ப்பன” வார்த்தை வந்துடுத்து. அம்மாவை அப்போ கைப்பாவை இல்லை, ஆன இப்போ கைப்பாவைன்னு குழப்றீங்க. சோவிடம் அம்மா மாட்டிக்கொண்டுவிட்டாரா இல்ல அம்மாவிடம் சோ மாட்டிகொண்டுவிட்டாராங்கறத பதட்டப்படாம பொறுத்திருந்து பாருங்கோ..

 4. Best line was what would happen to the following in amma’s aatchi

  1.Dravidam
  2.Pagutharivu
  3.Paarpana edhirppu
  3.Tamil Emotionalism
  4.Eazha support

  basically the top 5 negative qualities of TN and its people which alienates them and gets them a bad name nationwide and worldwide,and a legacy of half baked verbose crooked corrupt politicians.

  If anything could get rid of these bad qualities,i guess most people ll be happy.

  • தமிழின உணர்வு, ஈழ ஆதரவு – இரண்டும் தவறென்றால் தமிழ் நாடு என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

 5. http://viruvirupu.com/people-demanding-money-from-sasikala-family/tamil-news/13015/

  “வாங்கிய பணத்தை திருப்பி கொடுங்கள்” என்று சசிகலா குடும்பத்துக்கு நெருக்கடி!

  இங்கே கவனியுங்கள், இந்த நெருக்கடி சசிகலா கும்பலுக்குத்தான்! ஜெயாவிற்கு இல்லை. எனவே யார் அதிகம் அடித்தது, அதும் வெறும் இந்த ஆறு மாதத்தில். ஆனால், அடிக்க விட்டு அதை வேடிக்கை பார்த்ததோ அல்லது கண்டும் காணாமல் இருந்ததோ கட்டாயம் ஜெயாவின் குற்றமே.

  இப்போது ஜெயாவிடம் இருக்கும் சொத்து போயஸ் வீடும், ஜெயா டிவியும், கொடநாட்டு எஸ்டேட்டும் மட்டும்தான். அதுபோக ரொம்பநாட்கள் முன்பு விஜய் மல்லையாவிடம் கிங் ஷர் துவங்க கொடுத்த 5000 கோடி, இது எப்படி திரும்பிவரும் என தெரியாது. தாடிக்காரரே இப்போது பணப்பஞ்ச்சத்தில் உள்ளார். அது போக திமுக ஜே.வை கைது செய்தபோதும் 65 கோடி பணம் மற்றும் நகைகளை அள்ளிக்கொண்டு கோர்ட்டில் ஒப்படைத்துவிட்டன்ர(அது என்ன கதி ஆயிற்று என்பது அந்த திமுகவுக்கே வெளிச்சம்!)

  ஆக, இத்தனை நாள் சசி கும்பல் போட்ட ஆட்டத்தின் பலனாக பணத்தை அவர்களும் பழியை ஜெயாவும் பெறுகின்றனர். பார்ப்போம் யணிஏதாவது நல்லது நடக்கிறதா என

 6. தமிழகம் இப்போது அழகாய் அமைதியாய் ஆகிப்போச்சு…கொலை இல்லை..கொள்ளை இல்லை..சசிகலாவை நீக்கியதால் எல்லாம் சரி ஆகிப்போச்சு..
  ஜல்லிகட்டை நிப்பாட்டிடுங்கோ..
  ஆடு கோழி வெட்ட கூடாதுனு சொல்லிடுங்கோ..
  கரகாட்டம்,ஒயிலாட்டம், பறையாட்டம் எல்லாத்துக்கும் தடை போட்ருங்கோ…
  திராவிடம்..டம் டம் டம்
  பெரியார்..டம் டம் டம்
  வாழ்க டமிழகம்..

 7. சும்மா கதை விட வேண்டாம்!சில வயதானவர்களைத் தவிர பெரும்பாலான தமிழ் பிராமணர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி எத்தனையோ காலமாகிவிட்டது!பிராமணர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மேலும், ஏன் அரசு வேலை மேலும் வைத்திருந்த நம்பிக்கை எப்போதோ போய்விட்டது!கடந்த 30தாண்டுகளில் அரசு வேலைகளில் நியமிக்கப்பட்டவர்களில் ஒரு விழுக்காடு கூட பிராமணர்கள் இல்லை!மொத்தம் இரண்டே Mளா க்கள்தான் !சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசும் திமுக சீட்டுக் கொடுத்ததேயில்லை!பிராமணர்களில் பெரும்பாலானோர் பல ஆண்டுகளுக்கு முன்பே பெரும் தனியார் நிறுவனங்கள், சாப்ட்வேர், அந்நியநாடு என வெளியேறிப்போய் வெகு காலமாகிவிட்டது!இப்போது மிச்சம் 10 விழுக்காடு கூட இங்கில்லை!அதிலும் வயதானவர்களே அதிகம்! அவர்களுக்கும் அரசியலிலோ, அதிகார பதவிகளிலோ ஆர்வமே இல்லை!கற்பனையுலகில் சஞ்சரித்துக்கொண்டு வழக்கம்பொல் மிருகடதனமாக எழுதவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன!

  • ஏன் பிராமணர்களல்லாம் பிள்ளை பெற்றுக்கொல்வதை நிருத்தி விட்டார்களா ? இப்ப தமிழ் நாட்டை ஆல்ரதே பிராமண கூட்டம்தானெ

  • //சில வயதானவர்களைத் தவிர பெரும்பாலான தமிழ் பிராமணர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி எத்தனையோ காலமாகிவிட்டது//

   சோ,ஜெயா,எஸ்.வி.சேகர் ஜால்ரா போன்ற பலர் இன்னும் தமிழ்நாட்டில் இருக்கிறது உங்களுக்கு தெரியாதா?

   • என்னே ஒரு சுவாரசியமான சுறுசுறுப்பு இருக்கும் ஒரு சில பிராமணர்களையும் பெயர் சொல்லி அழைத்து நாட்டை விட்டு துரத்த…

    பரவாயில்லை, பிராமண சமூக தாக்கு என்பதுl இப்போது வெகுவாக குறைந்திருக்கிறது.. ஒரு நான்கைந்து நபர்களை பெயர்களை குறிப்பிட்டு தாக்குவது வரை குறைந்திருப்பது மகிழ்வே.. சென்னையில் உள்ள இந்த நான்கைந்து பிராமணர்களும், காஞ்சியில் உள்ள ஒன்றிரண்டு பிராமணனையும் தவிர நாட்டில் உள்ள பிற பிராமணர்கள் பெரும்பாலும் புலம் பெயர்ந்து விட்டனர் என்று கேசவன் சொல்வது உண்மைதான்…

    பிராமணன் இல்லாத தெருக்கள், சிற்றூர்கள், ஊர்கள், பேரூர்கள் நிறைய உள்ளன இன்றைய தமிழத்தில்.. அங்கெல்லாம் சமத்துவம் மேலோங்கி இருக்கிறதா? தென் தமிழகத்தின் தீண்டாமை கொடுமைக்கு நீங்கள் குறப்பிட்ட எஸ்.வி.சேகர் ஜால்ரா உள்ளிட்ட பார்ப்பனர்கள்தான் காரணமா? அல்லது பதிவர் குறிப்பிடும் சாதி ஆதிக்க சக்தி காரணமா?

    இன்னும் பிராமண பார்ப்பன எதிர்ப்பு என்ற பெரியார் காலத்து வட்டத்துக்குள் வசிக்கமால் வெளியே வந்து உண்மையான கருப்பு பார்ப்பனர்களை தாங்கள் சார்ந்திருக்கும் சாதியில் இருந்தாலும் அழித்தொழித்து சமத்துவம் சமைத்திட முற்படுங்கள்…

    • //சாதி ஆதிக்க சக்தி காரணமா?//

     சாதி ஆதிக்க பண்பு எங்கிருந்து பிறப்பெடுக்கிறது மனிதன்?

    • \\சென்னையில் உள்ள இந்த நான்கைந்து பிராமணர்களும், காஞ்சியில் உள்ள ஒன்றிரண்டு பிராமணனையும் தவிர நாட்டில் உள்ள பிற பிராமணர்கள் பெரும்பாலும் புலம் பெயர்ந்து விட்டனர் என்று கேசவன் சொல்வது உண்மைதான்//

     சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரட்டும்.கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு. கேசவன் புளுகு எத்தனை நாளைக்கு என்று பார்த்து விடலாம்.அதிகார மையங்கள்,அரசு அலுவலகங்கள்,மக்கள் வரிப்பணத்தில் இயம்கும் கல்வி நிலையங்கள் அத்தனையிலும் உட்காந்துகிட்டு என்ன ஒரு மாய்மாலம்.

     \\பிராமணன் இல்லாத தெருக்கள், சிற்றூர்கள், ஊர்கள், பேரூர்கள் நிறைய உள்ளன//

     ஆமாம் மனிதன்,நெறயவே இருக்கு.ஆனால் நகரங்களையும்,பெருநகரங்களையும் விட்டு விட்டீர்களே.அங்கேதானே சூட்சுமம் உள்ளது.தமிழகம் முழுவதும் நில உடைமையே பிரதான வருவாய் வழியாக இருந்த வரைக்கும் பார்ப்பன சமூகத்தினர் எல்லா ஊர்களிலும் இருந்தனர். மன்னர்களின் உதவியோடு கிராமங்களை ஆட்டையை போட்டு விட்டு வெள்ளைக்காரன் காலத்தில் அதிகார மையங்களாக நகரங்கள் உருவெடுத்தபோது அங்கு டேராவை மாற்றி கொண்டீர்கள்.

     \\தென் தமிழகத்தின் தீண்டாமை கொடுமைக்கு நீங்கள் குறப்பிட்ட எஸ்.வி.சேகர் ஜால்ரா உள்ளிட்ட பார்ப்பனர்கள்தான் காரணமா? அல்லது பதிவர் குறிப்பிடும் சாதி ஆதிக்க சக்தி காரணமா?//

     வர்ணாசிரம தர்மத்தை படைத்து பரிபாலித்து வரும் பார்ப்பனியம்தான் காரணம். தீண்டாமை ஷேமகரமானது என்று ”தெய்வத்தின் குரல்” புக்குல விஷம் கக்கும் சங்கராச்சாரியை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யாத அரசுதான் காரணம்.”சூத்திர” ”பஞ்சம” ஆடுகளை முட்ட விட்டு ரத்தம் குடிக்கும் நயவஞ்சக நரிகள்தான் காரணம்.

     \\இன்னும் பிராமண பார்ப்பன எதிர்ப்பு என்ற பெரியார் காலத்து வட்டத்துக்குள் வசிக்கமால் வெளியே வந்து உண்மையான கருப்பு பார்ப்பனர்களை தாங்கள் சார்ந்திருக்கும் சாதியில் இருந்தாலும் அழித்தொழித்து சமத்துவம் சமைத்திட முற்படுங்கள்//…

     பெரியார் என்ற வார்த்தையை கேட்டாலே பத்திக்கிட்டு வருதோ,
     வேறொரு பின்னூட்டத்தில் கேசவன் வன்கொடுமை வழக்குகளில் பார்ப்பனர்கள் ஏன் சிக்குவதில்லை என்று கேட்டதுக்கு இதுல பதில் இருக்கு.மத்தவங்கள ஏவி விட்டே தங்கள் வேலையை சாதிக்கும் எத்து வேலை தெரிந்தவர்கள் அவாள்.சாதி ஆதிக்க மனோபாவம் மனிதப் பண்பற்றது என்பதை பிரச்சாரம் செய்து சாதி ஆதிக்கத்தை தகர்க்க சொல்லாமல் ”அழித்தொழிப்பு” செய்ய சொல்வது கயவாளித்தனம்.

     • // பெரியார் என்ற வார்த்தையை கேட்டாலே பத்திக்கிட்டு வருதோ,
      வேறொரு பின்னூட்டத்தில் கேசவன் வன்கொடுமை வழக்குகளில் பார்ப்பனர்கள் ஏன் சிக்குவதில்லை என்று கேட்டதுக்கு இதுல பதில் இருக்கு. மத்தவங்கள ஏவி விட்டே தங்கள் வேலையை சாதிக்கும் எத்து வேலை தெரிந்தவர்கள் அவாள். //

      வன்கொடுமையைச் செய்ய பார்ப்பனர்கள் ஏவிவிட்டார்களா ? யாரை, எப்போது ?!

      தனித்தமிழ் இயக்கம் பார்ப்பன,வேளாள, தலித் தமிழறிஞர்களால் முன்னெடுக்கப் படுவதை உணர்ந்தவுடன் தமிழனைத் திராவிடனாக்கி பார்ப்பனர்கள் மீது பெரியாரும், நாயரும் ஏவிவிடவில்லையா ?

      கூலி உயர்வு கேட்ட தலித்துகள் கூட்டமாகக் கொலை செய்யப் பட்டபோது செய்தவனைக் காப்பாற்ற பொதுவுடமை இயக்கத்தை குற்றம் சாட்டியது பார்ப்பனனா, பெரியாரா ?

      தேவர்களுக்கும், தேவேந்திரர்களுக்கும் இடையே இருந்த பகைமையை அரசியல் லாபத்திற்காக ஊதிவிட்டு முட்டிமோதவிட்டது பார்ப்பனனா ?

      கவுண்டர்கள்-தலித், வன்னியர்கள்-தலித், பிள்ளைமார்கள்-தலித் மோதல்களில் பார்ப்பானின் பங்கு என்ன ?

      போன வினாயகர் சதுர்த்திக்கு பார்ப்பானிடம் வாங்கிய கொழுக்கட்டையைத்தான் இன்னும் மென்று கொண்டு இருக்கிறோம் என்று பதில் சொல்லவேண்டாம்.

   • நீங்கள் குறிப்பிட்டவர்களில் யாரும் பிழைப்புக்காக தமிழகத்தைவிட்டு வெளியேறவேண்டிய அவசியமில்லாதவர்கள். நடுத்தர, கீழ்த்தட்டு பிராமணர்களே அதிகம் அவதிப்பட்டு நாடோடிகளாக்கப்பட்டுள்ளனர்.

 8. expulsion of Sasikala and her group would be to safeguard J. This conclusion is absolutely a selfish decision of J as per advise of Cho and Modi. All Brahmin people want to project that there will be nothing wrong in future. What will be punishment for all the offences committed by Sasikala in the name of J? J could not project anything that they were committed by Sasikala. All acts were done either in the name of J or CM of TN or by TN Government. J should take responsible for all these indeeds. Explanation of J group will not be appealing to common sense of a prudent man

 9. மயிலாப்பூர் கும்பல் என்று யாரை குறிப்பிடுகிறீர்கள்? சோ-வையா? ஒரு நபர் எப்படி கும்பல் ஆக முடியும்? சோ தவிர ஜெயந்திரன் உட்பட வேறு பார்ப்பனர் சொல்வதை ஜெயா இதுவரை கேட்டதில்லையே…
  தினமணி, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் மயிலாப்பூர் கும்பலின் அங்கமாக படத்தில் குறித்திருப்பது விகல்பமாக இல்லை? யார் ஆட்சியில் இருந்தாலும் இந்த பத்திரிகைகள் தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டதில்லையே.. சசி போனதால் இவர்கள் என்ன புதிதாய் செய்துவிட போகிறார்கள்?
  \\ ஓட்டுக்காக, பிற்படுத்தப்பட்ட சாதி ஆதிக்க சக்திகளைக் கொண்ட சமூக அடித்தளத்தை மன்னார்குடி மாஃபியா மூலமாக ஜெயலலிதா பராமரித்துப் பயன்படுத்தி வந்தார்\\
  நீங்கள் குறிப்பிடும் இந்த சாதி ஆதிக்க சமுதாயம் தான் உண்மையான பார்ப்பனிய சமுதாயம்… தமிழத்தின் பல இந்து வெறி அமைப்புகள் இந்த சமுதாயத்தாரால் தான் நிரம்பி வழிகின்றன… இந்த சாதி ஆதிக்கம் பரமக்குடி முதல் தூத்துக்குடி வரை பல குடிகளை கெடுத்துள்ளது… இந்த சமுதாய ஆதிக்கத்தை சோ-தான் அகற்றினார் என்று சொன்னால் அது நன்மையே..
  திருமாவளவன், இராமதாசன், கிருட்டிணசாமி, ஜவாஹிருல்லாஹ், சேதுராமன், காதர் மொகிதீன் போன்ற ஒட்டுக்காக சாதி வளர்க்கும், மதம் வளர்க்கும் ஒட்டு கட்சி தலைவர்களை விட நாட்டுக்காக நன்மை செய்த சோ-ராமசாமி ஒன்றும் நஞ்சுடையவர் அல்லரே….

  • //மயிலாப்பூர் கும்பல் என்று யாரை குறிப்பிடுகிறீர்கள்? சோ-வையா? ஒரு நபர் எப்படி கும்பல் ஆக முடியும்? சோ தவிர ஜெயந்திரன் உட்பட வேறு பார்ப்பனர் சொல்வதை ஜெயா இதுவரை கேட்டதில்லையே…//

   மயிலாப்பூர் கும்பல் என்று தான் சொன்னார்கலே தவற அந்த கும்பல் சோ தான் என்று சொல்லவில்லையே.நீங்கள் தான் “கும்பல் என்று யாரை குறிப்பிடுகிறீர்கள்? சோ-வையா?” என்று கேட்டுக் கொண்டு நீங்களே மறுபடியும் “ஒரு நபர் எப்படி கும்பல் ஆக முடியும்?” என்று எதிர் கேள்வினை கேட்டு உங்கள் மனதின் உன்மையை வெளிப்படுதுகின்றிர்கள்.

   //தினமணி, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் மயிலாப்பூர் கும்பலின் அங்கமாக படத்தில் குறித்திருப்பது விகல்பமாக இல்லை? யார் ஆட்சியில் இருந்தாலும் இந்த பத்திரிகைகள் தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டதில்லையே.. சசி போனதால் இவர்கள் என்ன புதிதாய் செய்துவிட போகிறார்கள்?//

   நிச்சயமாக இல்லை உன்மை அதானே. எப்பொழுதும் பார்பன வசம் பாடும் இந்த ஊடகங்கள் யார் ஆட்சியில் இருந்தாலும் பார்பன வாழ்வாதாரத்தை மட்டுமே பரைசாட்டுகின்றார்கள் ஆகையால் தான் அவர்கள் தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டதில்லை.

   //நீங்கள் குறிப்பிடும் இந்த சாதி ஆதிக்க சமுதாயம் தான் உண்மையான பார்ப்பனிய சமுதாயம்… தமிழத்தின் பல இந்து வெறி அமைப்புகள் இந்த சமுதாயத்தாரால் தான் நிரம்பி வழிகின்றன… இந்த சாதி ஆதிக்கம் பரமக்குடி முதல் தூத்துக்குடி வரை பல குடிகளை கெடுத்துள்ளது… இந்த சமுதாய ஆதிக்கத்தை சோ-தான் அகற்றினார் என்று சொன்னால் அது நன்மையே..//

   அவர்கள் தங்களை எப்பொழுதும் இந்துகள் என்று குறிப்பிட்டது இல்லையே. அப்படி இருக்கும் பொழுது அவர்களை எந்த அடிப்படையில் இந்து வெறி அமைப்புகள் என்று குற்றம் சுமத்துகின்றிர்கள்? சோ தான் சமுதாய ஆதிக்கத்தை அகற்றினாரா? எங்கே செல்கிறது பார்பனம் என்ற தொடரை பார்திருந்தால் உன்மை விளங்கும்?

   //திருமாவளவன், இராமதாசன், கிருட்டிணசாமி, ஜவாஹிருல்லாஹ், சேதுராமன், காதர் மொகிதீன் போன்ற ஒட்டுக்காக சாதி வளர்க்கும், மதம் வளர்க்கும் ஒட்டு கட்சி தலைவர்களை விட நாட்டுக்காக நன்மை செய்த சோ-ராமசாமி ஒன்றும் நஞ்சுடையவர் அல்லரே….//

   தேர்தளுக்கு முன்பு இவர்களுள் சிலர் அரசியல் கட்சியாக தெறிந்தது ஆட்சி அமைக்க மட்டும் இவர்கள் தயவு தெவைப் பெற்றது அமைத்தவுடன் இவர்கள் சாதி, மதம் போற்றும் கட்சியாக மாரிவிட்டார்களா? அப்படி சோ. ராமசாமி நாட்டுக்கு என்னங்க நன்மை பன்னாறு? சொல்லுங்க நாங்க தெறிந்து கொள்கிறோம்.

   • \\மயிலாப்பூர் கும்பல் என்று தான் சொன்னார்கலே தவற அந்த கும்பல் சோ தான் என்று சொல்லவில்லையே\\
    அது தான் யாரை குறிப்பிடுகிறார்கள் என்று கேட்கிறேன்… உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன் செந்தமிழரே…

    \\எப்பொழுதும் பார்பன வசம் பாடும் இந்த ஊடகங்கள் யார் ஆட்சியில் இருந்தாலும் பார்பன வாழ்வாதாரத்தை மட்டுமே பரைசாட்டுகின்றார்கள் \\
    தினமலர், தினமணி பத்திரிகைகள் சசி போனதால் என்ன புதிதாய் செய்துவிட போகிறார்கள் எனபது தான் கேள்வி.. பதில் இல்லையே?

    \\திருமாவளவன், இராமதாசன், கிருட்டிணசாமி, ஜவாஹிருல்லாஹ், சேதுராமன், காதர் மொகிதீன் – இவர்கள் சாதி, மதம் போற்றும் கட்சியாக மாரிவிட்டார்களா\\
    இல்லை இல்லை இவர்கள் சாதி சமுதாயம் ஒழித்து சமத்துவம் படைக்கும் கட்சிகள்… 🙂

    \\அவர்கள் தங்களை எப்பொழுதும் இந்துகள் என்று குறிப்பிட்டது இல்லையே. அப்படி இருக்கும் பொழுது அவர்களை எந்த அடிப்படையில் இந்து வெறி அமைப்புகள் என்று குற்றம் சுமத்துகின்றிர்கள்? சோ தான் சமுதாய ஆதிக்கத்தை அகற்றினாரா?\\

    வினவு குறிப்பிடும் “பிற்படுத்தப்பட்ட சாதி ஆதிக்க சக்தி பற்றி” நான் பேசுகிறேன்… நீங்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்..
    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் எந்த சாதியின் ஆதிக்கம் அதிகம் என்று அனைத்து கட்சி காரர்களுக்கும் தெரியும்… பரமக்குடி வெறித்தனம் இந்த சாதி
    வெறியின் சமீபத்திய உதாரணம்… இவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொன்னால் தான் நீங்கள் இந்து என்று ஒப்புவீரோ?

    \\சோ. ராமசாமி நாட்டுக்கு என்னங்க நன்மை பன்னாறு? சொல்லுங்க நாங்க தெறிந்து கொள்கிறோம்\\
    இக்கட்டுரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் குறித்தது… அவ்வகையில் சோ செய்ததாக குறிப்படப்படும் (பூர்வாதரங்கள் இல்லை) இந்த சசிகலா கும்பல் நீக்கம் எனபது சாதாரண அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டனை விண்ணதிர, வினவதிர, இம்மன்னதிர, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அதிர பட்டாசு வெடித்து கொண்டாட வைத்துள்ளது… ஒரு தலைவன் தன் தொண்டர்களை மகிழ்விக்க கூடிய இம்முடிவை எடுத்திருப்பது அக்கட்சியை பொறுத்தவரை காலவரையற்ற நன்மையே…
    மற்றபடி உட்கட்சி விடயங்கள் நாட்டுக்கு என்ன நன்மை செய்தது என்று கேட்பது அபத்தம்…

    • //அது தான் யாரை குறிப்பிடுகிறார்கள் என்று கேட்கிறேன்… உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன் செந்தமிழரே…//

     பார்பனிய ஆதிக்கம் செலுத்த முற் படும் அனத்து பார்பனர்களையும் தான் மனிதரே!

     //தினமலர், தினமணி பத்திரிகைகள் சசி போனதால் என்ன புதிதாய் செய்துவிட போகிறார்கள் எனபது தான் கேள்வி.. பதில் இல்லையே?//

     சசிகலா போனதால் என்னவோ தமிழ் நாட்டில் செங்கோள் ஆட்சி மலருவது போல் பரைசாற்றும் இந்த ஊடகங்கள் ஜெயா ஒன்றும் அறியாத அப்பாவி என்று ஒரு தொரனை ஏற்படுத்த முற்படுவது ஏன்? அப்போ இது அனைத்தும் தெறியாமல் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார ஜெ? இது போல் ஒரு முறன் பட்ட சித்தரிப்பை ஏன் செய்கிறார்கள் இந்த ஊடகத்தோர் என்பதே எங்கள் கேள்வி? அவர்கள் புதிதாக எதுவும் செய்யவில்லை எப்பொழுதும் செய்வது போல் பார்பன வசம்தான் பாடுகிறார்கள் ஆனால் இப்பொழுது சசிகலாவை பகடகாயாய் செய்து ஜெயாவை நல்லவர் போல் சித்தரிக்க முயலுவது ஏன்? ஜெயா பார்பனர் என்பதாலா? குற்றம் செய்த இருவரையும் குற்றம் சாட்ட வேண்டும் ஒருவரை மற்றும் அல்ல.

     //இல்லை இல்லை இவர்கள் சாதி சமுதாயம் ஒழித்து சமத்துவம் படைக்கும் கட்சிகள்//

     சரி சாதி தீயை முதலில் மூட்டியது யார்? இன்றலவும் ப ஜா கா, ஆர் எஸ் ஏஸ் பார்பனியத்தை காக்கவும் போற்றவும் செய்து கொண்டு இறுக்கிறார்கள். ஆவர்களை இந்த பட்டியலில் செற்காதது ஏன்?

     //அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் எந்த சாதியின் ஆதிக்கம் அதிகம் என்று அனைத்து கட்சி காரர்களுக்கும் தெரியும்…//

     சரி இவர்கள் ஆதிக்கத்தை தாள்தியாகிவிட்டது இப்பொழுது யார் ஆதிக்கம் பெற சோ அவர்களும், பார்பனிய மறை போற்றும் ஊடகங்களும் வேலை செய்கிறார்கள்? ஆதிமுகாவை ஒரு திராவிட கொட்பாட்டு கட்சியாக உறுவேடுக்கவா? இல்லை ஒரு முலு பா ஜா கவாக செய்யவா?

     // ஒரு தலைவன் தன் தொண்டர்களை மகிழ்விக்க கூடிய இம்முடிவை எடுத்திருப்பது அக்கட்சியை பொறுத்தவரை காலவரையற்ற நன்மையே…//

     ஒட்ட வந்த பிடரியை விளக்கியாகிவிட்டது அதற்கு பதில் மற்ற ஒரு பிடாரியான் பார்பன ஆதிக்கம் வருகிறதே அதனால் அந்த தொன்டனுக்கு என்ன பயன்? உங்கள் வெற்றியை ஆவர்கள் வெற்றியாக காட்டாதிர்கள். சசிகலா முட்கல்வராக இருந்து ஜெயாவை வெளியேற்றம் செய்து இருந்தாலும் தொன்டர்கள் இப்படி தான் செய்திருபார்கள்.

     • செந்தமிழரே பார்த்தீர்களா, நண்பர் சுப்பிரமணியன் சொல்லுவது போல நீங்க உணர்ச்சிவசப்பட்டு துடி துடித்து மறுமொழி எழுதுவதால் எவ்வுளவு எழுத்துப் பிழைகள். தமிழ் தமிழ் என்று பேசிவிட்டு நாமே இப்படி தமிழை கூறு போடலாமா? இதை தான் உணர்ச்சி கொந்தளிப்பின் விளிம்பில் நின்று இன்றைய தமிழர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்…

      \\சசிகலா முட்கல்வராக (முதல்வராக ?) இருந்து ஜெயாவை வெளியேற்றம் செய்து இருந்தாலும் தொன்டர்கள் இப்படி தான் செய்திருபார்கள்\\
      ராசீவ் காந்தி உயிரோடு இருந்திருந்தால் இந்த மூவரையும் மண்ணித்திருப்பார் – கருணாநிதி

      இரண்டும் ஒன்று போல் இல்லை… இரண்டு வாக்கியங்களுமே மேலதிகமாக எழுந்த உணர்ச்சியின் உந்துதல் தான்…

      • மனிதன் நான் முட்கல்வராக என்று எழுதியதற்கு பொருள் உங்களுக்கு விளங்கும் என்று என்னியது என் தவறு. அதன் பொருள் இலை மரை காய் மரையாக சொல்ல வேண்டும் என்றால் தன்னை சுற்றி ஒரு முல், கல் வேளி வைத்து கொண்டு அரசியல் மற்றும் கட்சி முடிவுகளை எடுப்பது பயன் அற்றது என்பதாகும்.

       நான் சொல்வதில் உணர்ச்சி மிக்க வாக்கியங்கல் இல்லையே. மாறாக தங்கள் எழுத்தில் தான் நீங்கள் கூறும் “உணர்ச்சியின் உந்துதல்” அதிகம் இருக்கிறது. உதாரனம்:

       //இந்த சசிகலா கும்பல் நீக்கம் எனபது சாதாரண அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டனை விண்ணதிர, வினவதிர, இம்மன்னதிர, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அதிர பட்டாசு வெடித்து கொண்டாட வைத்துள்ளது…//

       என்னுடைய மற்ற கேள்விகலுக்கு பதில் இல்லையே…

 10. நிருபர் : தூத்துக்குடி டாக்டர் சேதுலட்சுமி ஒரு ஆச்சராமான பிராமண பெண்..
  வினவு : ஒ அப்படியா? எடு பேனாவை, எழுது வசவுகளை.. பார்ப்பண கும்பல், அதிகார வர்க்கம், பண வெறி, வர்ணாசிரமம், பாசிசம், சோ, தினமணி, தினமலர், பாசிசம், அத்வானி,ஆர் எஸ் எஸ், எல்லா வார்த்தைகளும் கலந்து போட்டு பதிவெழுதி பிரிச்சு மேய்ஞ்சுருங்க..
  நிருபர் : ஆங்… இப்பதான் தகவல் வந்தது… சேதுலட்சுமி பிராமண பெண் இல்லையாம்… எழுதினதை என்ன செய்ய?
  வினவு : வடை போச்சே! ஒன்னும் கெட்டு போகலை எழுதினதை அப்படியே வச்சிக்க அடுத்த பதிவுல இணைச்சிடலாம்… பார்ப்பனனை திட்டி எழுதியதை எந்த பதிவில் வேண்டுமானாலும் ஈசிய சேர்த்துக்கலாம்..

 11. exactly,what is it that CHO has done bad for TN?

  Which Paarpanar has ever done anything bad for TN’s economy?

  whether is it TVS/India Cements/any bureaucrat has ever done bad to TN?

  They continue to invest here and keep the same employees.

  • சோ செய்யும் அனைத்தும் நயவஞ்சகமே. மூவறையும் துக்கிளிட துக்களக்கில் தூக்கி எழுதியவர் தான் உங்கள் சோ. சோ தமிழகத்துக்கு என்ன நன்மை செய்தார்? கூடங்குளம் மக்கள் போராட்டர்திற்கு ஆதரவு தெறிவித்தாரா இல்லை முல்லை பெரியார் அனை விவகாரத்தில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக நின்றாரா? பார்பனர்களுக்கு நன்மை செய்ய முயர்ச்சி செய்கிறார் என்று சொல்லுங்கல் தமிழ் நாட்டிற்கு அல்ல. சேது சமுதிர திட்டதிற்கு ஆதரவான நிலைப்பாடை வெளியிட்டாரா? இல்லை நிதமும் சிங்கள வெறியர்களின் துப்பாக்கி குண்டுகளை நெஞ்சில் சுமக்கும் எம் தமிழக மீனவர்களுக்காக கொடி பிடித்து சன்டையிட்டாரா?

   பார்பனர்கள் பொருளாதாரதிற்கு என்ன தவறிலைத்தார்கள் என்பதைவிட சாமுதாயதிற்கு என்ன நன்மை செய்திர்கள் என்று சொல்லுங்கள்? மொழி வழி மாநிலங்களாக பிரிக்கும் பொழுது உங்கள் பார்பன அதிகாரிகள் செய்த துரோகத்தை பட்டியலிடலாமா, இல்லை அன்று இரையில்வே துறையில் உங்கள் பார்பனர்கள் செய்த அட்டுளியங்களை பட்டியலிடலாமா, இல்லை கல்வி துறையில் உங்கள் பார்பன அதிகாரிகள் செய்த தீங்கினை பட்டியலிடலாமா.

  • பார்ப்பனியம் தமிழக பொருளாதாரத்துக்கு செய்யும் தீங்குகளில் சில.

   ஒவ்வொரு அமாவாசையன்றும் உணவுப் பொருளாக பயன்படவேண்டிய பல டன் பூசணிக் காய்களை நட்ட நடு ரோட்டில் போட்டு உடைத்து வீணாக்குகிறார்கள்.அதனால் பல பைக்குகள் விபத்துக்கு உள்ளாவது தனி இழப்பு.

   ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் டன் கணக்கில் எலுமிச்சையை அறுத்து தெருவில் வீசி விட்டு ”ஒக்க ஒக்க லெமனு ஒக்க ஒக்க சோல்ஜரு” என மூடத்தனம் வளக்குது பார்ப்பனியம்.

   வெள்ளி கிழமையானா எத்தனை லட்சம் தேங்காய தெருவில போட்டு உடைத்து குப்பைக்கு அனுப்புகிறது பார்ப்பனியம்.

 12. The Paarpanar always against Tamil Sentiments and Tamil language (in temples). by using the Delhi lobby, they take decisions against Tamil’s interest in Eelam issue and even in Mullaperiyar Dam, Sethu project,…etc. Their print media always against Tamil cause (Eelam). They are in high position of central govt. department so they decide whatever against Tamils.

 13. சாதி வன்கொடுமை வழக்குகளில் எதிலும் பார்ப்பனர்கள் பெயர் இருப்பதில்லையே? ஏன்? தலித்துக்கள் பார்ப்பனர்களால் சற்றும் பாதிக்கப்படவில்லை என்பதால்தானே ? உண்மையில் வன்கொடுமை வழக்குகளில் அதிகம் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் பிற்பட்ட, மற்றும் மிகவும் பிற்பட்ட சாதிகளுக்கான சலுகைகளை பெருமளவு ஆக்கிரமிதுக்கொண்டுள்ள, நாடார், வன்னியர்,தேவர் மற்றும் கவுண்டர்கள்தான்!பழி ஓரிடம். பாவம் ஓரிடம்!மக்கள்தொகையில் மூன்று விழுக்காடு உள்ள பார்பனர்களுக்கு திமுக தன வரலாற்றிலேயே ஒரே ஒரு Mளா , MP சீட் கூட கொடுத்ததேயில்லை! அதிமுகவில் கூட இப்போது ஜெயா உட்பட இரண்டே Mளா க்கள்!ஆனால் கருணாநிதியோ அரை விழுக்காடு கூட இல்லாத தன சமூகத்திற்கு அளித்தது முதல்வர், து,முதலவர் , மாநில அமைச்சர், 3 MP க்கள் , 2மத்திய மந்திரிகள் இத்யாதி!இப்போதும் தமிழக அமைச்சரவையை பெரும்பாலும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது, வன்கொடுமைகளில் அதிகம், குற்றம் சாட்டப்பட்டுள்ள சமூகத்தினர் என்பது உண்மையா இல்லையா? எத்தனை திராவிட இயக்கத்தினர் தலித்துகளோடு நேரடி திருமண உறவு கொண்டவர்கள் அல்லது ஒப்புக்கொள்பவர்கள்?ஆனால், சார்பதிவாளர் அலுவலகங்களில் போய்க் கேளுங்கள்! எந்த சாதியினர் அதிகபட்ச கலப்புமணங்களில் சம்மந்தப்பட்டுள்ளனரென்று? சந்தேகமேயில்லாமல் பிராமணர்களே!அதுவும் குடும்பத்தார் சம்மதத்துடன் மண்டபங்களில் நடப்பது இன்றும் தினம் காணும் காட்சி! பார்ப்பன எதிர்ப்பு இப்போது ஒரு மழுங்கிப்போன ஆயுதம்!காய்ந்த இலை! நாறிய மலர்!வெற்றுக் குப்பை! ஊர் ஊராக அலைந்து தமிழ்சுவடிகளை யார்யார் காலிலோ விழுந்து வாங்கி தொகுத்து தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட உ வே சா வையும், தமிழ் இணைய வளர்ச்சியின் தந்தை சுஜாதா ரங்கராஜனையும் ,மகா கவியையும் தந்த இனத்தை உங்கள் கிறுக்கல்கல்மூலம் கேவலப் படுத்தாதீர்கள்!மன்னார்குடி மாபியாவின் லட்சணத்தை அவர்களது திருவாரூர் மாவட்டத்திலேயே போய்க் கேளுங்கள்.அவர்கள் அடித்த கொள்ளைகளின் விவரங்கள் ஹார்ட் அட்டாக்கை இலவசமாகத் தரும்!

  • சாதிகளை தோற்றுவிட்டது யார். விஸ்னுவின் தலையில் இருந்து பிறந்தவன் பிராமனன், நெஞ்சில் இருந்து பிறந்தவன் சத்திரியன், தொடையில் இருந்து பிறந்தவன் வைசியன் காலில் இருந்து பிறந்தவன் சூந்திரன் என்று அக்காலத்தில் பொய் பகட்டினை சொல்லி மனிதர்களிடையே வேற்றுமையும் பகைமையும் தோற்றுவித்து சாதி என்னும் தீங்கினை சமுதாயத்தில் உடுறுவ செய்து இப்பொழுது என்னமோ ஒலுங்கு சீலர்களை போல் வேசம் இடாதிர்கள்.

   கலப்பு திருமணங்களை காலம் தொட்டு தமிழர்களிடையே இருந்து வந்த ஒரு சமுதாய ஒற்றுமை தான், வந்தேரிகளான உங்கள் குறுக்கு புத்திகலால் வந்ட்க வினை தான் ஒரு சமுதாயத்தின் திருமணக் கொட்பாடு. அதை மீட்டேடுத்தவர்கள் திராவிட கழகதினர், சமுதாய விழிப்புனர்வை செய்தவர்கள். கலப்பு திருமணத்தில் எற்று கொள்ளும் நீங்கள் எத்தனை தலித் சமுதாயத்தினருடன் திருமணத்தை செய்து கொள்கின்றிர்கள்? ஆதாரம் இல்லாமல் ஒரு கருத்தை எழுதாதிர்கல், பிராமனர்கள் அதிகமாக கலப்பு திருமணத்தை செய்து சமுதாய ஒற்றுமையை நிலை நாட்டுகிறார்கள் என்று உங்கள் பொய் பகட்டினை முன் வைக்காதிர்கள்.

   //பார்ப்பன எதிர்ப்பு இப்போது ஒரு மழுங்கிப்போன ஆயுதம்!காய்ந்த இலை! நாறிய மலர்!வெற்றுக் குப்பை!//

   பயம் வந்தால் இப்படிதான் பினத்துவார்கள், உங்களை கூட்டாக வாழ்கா நதிகரைக்கு மின்டும் செல்லும் நாள் வரும். பார்பனிய குப்பையை எரிப்பதர்கு தேவை எங்கள் காய்ந்த இலைகல். மழுங்கிபோன ஆயுதம் பார்து எதற்கு பயம்?

   //ஊர் ஊராக அலைந்து தமிழ்சுவடிகளை யார்யார் காலிலோ விழுந்து வாங்கி தொகுத்து தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட உ வே சா வையும், தமிழ் இணைய வளர்ச்சியின் தந்தை சுஜாதா ரங்கராஜனையும் ,மகா கவியையும் தந்த இனத்தை உங்கள் கிறுக்கல்கல்மூலம் கேவலப் படுத்தாதீர்கள்!//

   தமிழ் என்றும் விழ்ந்தது இல்லை அது மறுமலர்ச்சி அடைய. கல் தோன்றா மன் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்த குடி எங்கள் தமிழ் குடி. இதற்கு அர்தம் தெரியுமா? உலகத்தில் மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி தமிழ் மொழி. பிற் மொழிகல் எழுத்து வடிவம் வருவதற்கு முன்பே இலக்கனத்தயும், இலக்கியத்தயும் பெற்றவர்கள் நாங்கள். ஆகயால் உ வே வா, சு மே மோ, டா முதா என்பவர்களால் தான் தமிழ் மறுமலர்ச்சி அடைந்தது என்று பினாததிர்கள்.

   உங்கள் தமிழ் இணைய வளர்ச்சியின் தந்தை சுஜாதா ரங்கராஜனை பற்றி எழுதினால் டர் ஆகிடும். ஜென்டில் மென் படத்தில் இட ஒதிக்கிடுக்கு எதிராக அமைத்த கதை. அன்நியன் படத்தில் எதோ பார்பனர்கள் தான் உஅழலை எதிற்கும் தர்ம பிரபுகலாக சொல்லியது. இது போன்று ஆயிரம் உதாரணங்களை சொல்ல முடியும். உங்கள் சுஜாதா இணைய தளத்தை பார்பதற்கு முன்பே எங்கள் ஈழ உறவுகள் அதில் கோலோச்சியாகிவிட்டது. ஆகயால் மிண்டும் ஆதாரம் இல்லாததை சொல்ல வேண்டாம்.

   மகாகவி பாரதி பற்றி பேச வேண்டாம். விடுதலை போராட்தின் பொழுது ஆங்கிளேயர்கள் அவர் மீது கைது வாரன்ட் குடுத்த பொழுது ஓடி புதுசேரியில் தஞ்சம் புகுந்த வீரதிருமகன் உங்கள் பாரதி.

   பெண் விடுதலைக்காக போராடினான் சரி. எந்த இனத்து பெண் விடுதலைக்காக? உங்கள் சமுதாயத்தின் பெண்கள் கல்வி கற்க பாடுபட்டானே தவற மொத்த பெண் சமுதாயத்திர்காக அல்ல. அப்படி அனைத்து தரப்பு பெண்களுக்காக பாடுபட்டிருந்தால், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி பட்டம் பெற்ற பொழுது அதை பற்றி கேட்ட பொழுது வாய் திரக்காமல் இருந்தது ஏன்?

   தமிழை அவர்கள் சுய நலனுக்காக உபயோகம் செய்து கொண்டார்களே தவர தமிழுக்காக இவர்கள் ஒன்றும் செய்யவில்லை. நீங்கள் சொல்லுவதை எல்லாம் வரலாறு தெறியாதவைகளிடம் பேசுங்கள் எங்களிடம் வேண்டாம்.

   • இந்த நோபல் பரிசுக் கமிட்டியை செரு..ல் அடிக்கவேண்டும்! போயும் போயும் சர் CV ராமய்யர், சந்திரசேகர அய்யர், வெங்கி அய்யர் என சாதி பார்ததுத்தான் அறிவியல் நோபல் பரிசு அளிக்கிறான்! இது சமூக நீதிக்கும், இட ஒதுக்கீடுக்கும் எதிரானது!இது தெரியாமல் கவிதார்க் ஸ்ரீராம் ஐயங்கார் துவக்கி, கூகிள் தேடுபொறியைப் (கூகிள் சர்ச் எஞ்சின்) பயன்படுத்தும் தமிழன் சொந்த இன எதிரியே!

   • — பிரபாகரனுக்கு ஒரு நீதி , உள்ளூர் பாப்பானுக்கு ஒரு நீதியா ? சிங்களம் தன் இனம் காக்க இடஒதுக்கீடு கொண்டுவந்ததை எதிர்த்துத்தான் தமிழ் இளைஞர்கள் ஈழப் போராட்டத்தைத் துவக்கினர் !இட ஒதுக்கீட்டை எதிர்த்த சிங்கள ஏகாதிபத்தியத்தின் எதிரி பிரபாகரன் உங்க பார்வையில் நல்லவன்! ஆனால் அதே ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டு, அரசு வேலை ,கல்வியே வேண்டாமென அயல்தேசத்துக்கு ஓடிப்போன சாது பார்ப்பான் கெட்டவன்! நல்லா இருக்கு ஒங்க நீதி!

    • \\அரசு வேலை ,கல்வியே வேண்டாமென அயல்தேசத்துக்கு ஓடிப்போன சாது பார்ப்பான் கெட்டவன்! நல்லா இருக்கு ஒங்க நீதி!//

     நீங்க சாதுவா.நாட்டில் ரத்த ஆறு ஓடவிட்டு ரத்தம் குடிக்கும் காட்டேறிகள் அமைப்பான சங்க பரிவார் அமைப்புகளை இயக்குவதும் கருத்து ரீதியாக அப்பாவி இந்துக்கள் மத்தியில் அந்த காட்டேரிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதும் நீங்கள்தானே.

     அயல் நாட்டுக்கு எப்படி ஓடிப்போகிறீர்கள்.நோபல் புகழ் வெங்கி அய்யர் போன்று IIT யிலும் மருத்துவ கல்லூரிகளிலும் மக்கள் வரிப்பணத்தில் படித்து விட்டு இந்த நாட்டுக்காக உழைக்காமல் நன்றி கெட்டு ஓடிப்போகிறீர்கள்.

  • தமிழ் இணையத்தின் தந்தை என சொல்லும் அளவுக்கு சுஜாதா என்னத்த கண்டு பிடிச்சார்.பாரத் எலெக்ட்ரானிக்சில் அவர் வேலை பார்த்தபோது அந்நிறுவனம் பல ஊழியர்களின் கூட்டு முயற்சியால் வாக்கு பதிவு எந்திரத்தை உருவாக்கியது. அவ்வளவுதான்.மற்றவர்களின் கண்டுபிடிப்புகளை பற்றி கட்டுரை எழுதுறவன் எல்லாம் அந்த கண்டுபிடிப்புக்கு உரிமை கொண்டாட முடியாது.

 14. tamizh language?I know so many of the sanga illakiyam written by us and even freedom fighters and recent people who have done things for tamizh language.

  Tamil Ealam is a different case,India has lost so much by supporting LTTE and Rajiv Gandhi’s death is the ultimate nail in the coffin.Mu.ka kuttaiya kozhapuna kozhappula avaru aatchiyum pochu,rajiv gandhi uyirum pochu.

  watch this: http://www.youtube.com/watch?v=pi58-22t-60

  People like Veeramani and Suba Veera Pandian,makes a grandplan to make TN and Eazham secede from India and SL and have a great Tamizh country.Indha maadhiri agala vekka ivanunga kitta sakhtiyum thairiyamum kedayathu,aana ivunga pecha kettu yaazhpanathula ethana peru sethang.

  Rajiv Gandhi ya mattum kollama irunthiruntha inneram eazhamngura provinceaavadhu kedachirukkum.Ippo paarunga ellam manna pochu,ippadi ethavathu nadanthu iruntha ithunala payan adaya porathu Dravidar kazhaga sigaamaninga thaan.

  Naanga vetti pechu pesi kittu orr suthikittu pozhappu nadathula,naanga munneranum enga kooda yaaru vandhalum munnethuvom.Neenga thaan sila sombunga,sappainga solradha kettukittu irukeenga.

  ellathayum unarvu poorvama yosikaadheenga,konjam soodhanama nadanthukkunga.

  Mullaperiyar avalavu sadharanamana prachanai illa,ias officer seiradhukko.Namma aalunga ethana peru irukkanagalo,athana peru keralavila irunthum irukkanga.

  Yen ippo Koodangulam thittam irukku,adhu vandha andha areavila neraya development nadakkum aana paathiriyaarunga madha maatram kettu podiumnu ippavum andha makkala vaanam paathu vivasayam pannikitte irukka solranga.

  • சங்க இலக்கியத்தில் பார்பனர்களா? யார் யார் என்று சொல்லுங்கள் பார்போம். உங்கள் விடுதலை வீரர்களை பற்றி நாடறிந்தது தானே. இப்ப யாருங்க தமிழுக்காக கொடி பிடித்த நல்லவங்க கொஞ்சம் சொல்லுங்கோனா?

   விடுதலை புலிகளுக்கு உதவி செய்திங்களா எப்ப பாஸ். இந்திரா காந்தி செய்ததை சொல்றிங்களா? காமடி பன்னாதிங்க அதினுடைய உன்மை எல்லாத்துக்கும் தெறியும். சரி ராசிவ் காந்தி இறப்பிற்கு காரணம் சொல்லுங்க பாஸ். ஈழத்துள இந்திய பாதுகாப்பு படை செய்த அட்டுலியங்களுக்கு கிடைத்த பரிசு. காஸ்மிர்ல நீங்க செய்தா அது தேச பாதுகாப்பு அதுவே புலிகள் செய்தால் அது திவிரவாதமா?

   ராசிவ் காந்தி கொன்னதாள ஈழமுனு ஒன்னு இல்லாம போனதா எதோ பினாதிறிங்க சரி இந்திரா காந்திய கொன்ன சீக்கிய சிகாமனிகளை உச்சி முகர்ந்து கொண்டு இருப்பது ஏன்?

   நீங்க முன்னேறிங்களா? யார் வைத்துள அடிச்சிட்டு பாஸ். நீங்க எப்படியல்லாம் முன்னேறுனிங்கனு 6000 வருசமா பாத்துகிட்டு தான் பாஸ் இருக்கோம். உங்க சப்ப சார்வார்கர் சொன்னதயும் சொம்பு வால்மிகி எழுதியதையும் வச்சு ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் இராமாயனம் என்று பகுத்தறிவே இல்லாம பேசரவங்க முற்போக்குவாதிகளை பேசரதுக்கு தகுதியில்ல பாஸ்.

   பகுத்தறிவ வச்சு நீங்க அடிச்ச லுட்டிகளை டார் டார கிழிச்சா ஏன் பாச் உனர்ச்சி பொங்க பேசுறதா சொல்றிங்க பாஸ். கருத்துக்கு கருத்து பேசுங்க பாஸ் தெறியலனா பொத்திகிட்டு இருங்க பாஸ் அதவிட்டுட்டு பினாதாதிங்க பாஸ்.

 15. மனிதன், சுப்ரமணியன் போன்றோர்களுக்காக இந்தநாட்டுப் பாடல்.
  ஆறு கெட நாணலை எடு.
  காடு கெட ஆட்டை விடு.
  ஊர் கெட நூலை விடு.

  • இந்தப் பழமொழியை உருவாக்கிவிட்டது யாரோ ?

   சத்திரியர்களும், வைசியர்களும் நூலை விட்டுவிட்டார்கள், இன்னும் விடாமல் வைத்துக் கொண்டிருப்பவர்கள் பார்ப்பனர்களும், ஆசாரிகளும், சில நெசவாளர்களும் தான். அவர்களும் விட்டுட்டா ஊர் சுத்தமா கெட்டுபோகுமா !!!

 16. romba puthisalithanama pesaradha nenaikaadheenga,idhu dhaan unga ketta pazhakkame.Vaai kizhiya pesuveenga aana poi edhavadhu seyngadanna nera paatu ellam paada aarambichuruveenga.

  Ghilli padathula prakashraj solra madhiri,vaai illana naai thookittu poidum ungala ellam.

  • சரி உன் வீட்டு கலிவுகளை நீ அகற்ற வேண்டியது தானே அதற்கு மட்டும் தாள்த பட்ட சமுகத்தினரை ஏன் எதிர்பாக்குர? எங்களை வாய்மூடி வைத்திறுந்த காலத்தில் நன்றாக இருந்ததா? இப்பொழுது எதிர் கேள்வி கேட்டவுடன் கோபம் பொங்குதோ? கருத்தை கருத்தால் பேசு அதை விட்டுவிட்டு இது போல பினாததே.