’மாணவர்களே மாணவர்களைப் படிக்க வைக்கும்’ புதிய மறுமலர்ச்சித் திட்டம் ஒன்றை தொடங்கி வைத்திருக்கிறார் இயக்குநரும், நடிகருமான சசிக்குமார். கும்பகோணம் அருகே உள்ள அன்னை கல்லூரியில் மாணவர்களிடம் உண்டியல் ஏந்தி வசூல் செய்தார் சசி. மொத்தம் ஒரு லட்ச ரூபாய் சேர்ந்ததாம். இதை 40 ஏழை மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்தப் போவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘‘படிக்க பணமில்லை என்ற நிலை என்னை கலங்க வைக்கிறது. அதனால்தான் கல்விக்காக உங்களிடம் கையேந்தி வந்துள்ளேன்’’ என மனம் உருகி மாணவர்களிடம் பேசியிருக்கிறார் சசிக்குமார்.
இதில் சசிக்குமாரின் நோக்கத்தில் நேர்மை இருக்கலாம், படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு உதவுவதை உண்மையான அக்கறையோடே செய்திருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் சசிகுமார் விளம்பரத்துடன் புரிந்துகொண்டிருக்கும் கல்வி பற்றியப் பார்வை மிக அபாயகரமானது மட்டுமல்ல, அதுதான் சமூகத்தின் ஆகப் பெரும்பான்மையினரின் நோக்கும் கூட. ‘அவர் வெளியத் தெரியாம பல ஏழைப் பிள்ளைங்களைப் படிக்க வெச்சுகிட்டிருக்காரு’ என சிலரைப் பற்றி சொல்வதுண்டு. மேலோட்டமாகப் பார்க்கும்போது ‘ஏழைப்பசங்க படிக்க கஷ்டப்படுறாங்க. இவர் ஹெல்ப் பண்றாரு.. இதுல என்ன தப்பு இருக்கு?’ என்பதாகவே தோன்றும். ஆனால் அது அப்படி அல்ல.
சமூக நீதியை அழித்து சமமின்மையை ஒரு அறமாக முன் வைக்கும் சமகால கல்விக்கொள்ளைக்கு முட்டுக்கொடுக்கும் செயல் இது. உரிமையாய் பெற வேண்டிய கல்வியை பிச்சையாய் மாற்றும் அயோக்கியதனம். பணம் இருந்தால்தான் படிக்க முடியும் என்ற கேடுகெட்ட நிலைமையை ஒழித்துக்கட்டுவதற்குப் பதிலாக ‘இந்தாப் பணம்.. படிச்சுக்கோ’ என கல்வி நிறுவன முதலாளிகளுக்கு ஆள் பிடித்துத் தரும் செயல். சசிக்குமார் தெரிந்தோ, தெரியாமலோ அந்த தரகு வேலையைதான் பார்த்திருக்கிறார்.
இந்த தரகர் வேலையை சில வருடங்களுக்கு முன்பிருந்தே மிகுந்த பெருமையுடன் செய்து வருகிறார் நடிகர் சூர்யா. தனது ’அகரம் பவுண்டேஷன்’ மூலமாக ஒவ்வொரு வருடமும் சில மாணவர்களுக்கு ’இலவச கல்வி’ தரும் அவர், அதை வைத்து தனது ‘நல்லவன்’ இமேஜ்-ன் கிராஃபை நன்றாகவே மேலே ஏற்றியிருக்கிறார். (அகரம் மூலம் கல்விக்கு செலவழிக்கும் தொகையை விட அதற்கான விளம்பரத்திற்கு செலவிடும் பணம் அதிகமாக இருக்கும் போலிருக்கிறது). இங்கும் ’இலவசக் கல்வி’ என்பதன் பொருள், இலவசம் அல்ல. மாறாக, சம்பந்தப்பட்ட மாணவர்களின் கல்வி கட்டணம், நன்கொடை உள்ளிட்ட அனைத்தையும் அகரம் பவுண்டேஷன் செலுத்திவிடும். இதற்குப் பெயர் இலவசக்கல்வி அல்ல. இங்கு அகரம், ஒரு புரவலராக செயல்படுகிறது.
அரண்மனை உப்பரிகையில் இருந்து மன்னர்கள் அள்ளி வீசும் சில்லறை காசுகளால் ஏழைகளின் வயிறு ஒருபோதும் நிறைவதில்லை. மேலும், மன்னர்கள் காசை அள்ளிவீசுவதன் நோக்கம் ஏழைகளின் பசியைப் போக்குவதும் அல்ல. அது அவர்களது அந்தஸ்தின் ஸ்திரத்தன்மையை உலகுக்கும், தனக்குமேக் கூட காட்டிக்கொள்வதற்கான ஏற்பாடு. இந்த நடிகர்களின் கூத்தும் அந்தக் கதைதான். ஆனால் இதில் நடிகர்களுக்கு சில கூடுதல் அனுகூலங்கள் உண்டு.
’வருமான வரி விலக்கு, கறுப்பை வெள்ளையாக்கும் வாய்ப்பு’ இதெல்லாம் கூட இரண்டாம் பட்சமே. முக்கியமானது இந்த ‘வள்ளல்’ தன்மையால் இவர்களுக்கு வந்து சேரும் இமேஜ். போட்டி மிகுந்த திரைப்படத் துறையின் வியாபாரத்திற்கு இந்த இமேஜ் ஒருவித தனித்தன்மையைக் கொடுக்கிறது. அதன்பிறகு ‘நீயா நானா?’ போன்ற கைப்புள்ள ஸ்டைலில் தமிழகத்தில் ‘அறிவை’க் கொல்லும் அக்கப்போர் நிகழ்ச்சியின் விருந்தினர் நாற்காலியை அலங்கரிக்கலாம். ஊடக செய்திகளில் அடிக்கடி இடம்பிடிக்கலாம்.
இப்படி சில மாணவர்களுக்கு பணம் கட்டிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா? ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் மாணவர்கள் அவர்கள் விரும்பும் படிப்புக்கான பணத்தைக் கட்டி படிக்க முடியாமல் அல்லாடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் ‘உண்டியல்’ ஏந்தி பணம் வசூல் செய்து தந்துவிட முடியுமா? எத்தனை தலைமுறைக்கு, எத்தனை ஆயிரம் மாணவர்களுக்கு அப்படி செய்ய முடியும்? பிரச்னையைத் தீர்ப்பதற்கு சரியான, ஜனநாயகப்பூர்வமான வழி என்ன?
மொத்தமாக கல்வி என்பது அரசின் வசம் மட்டுமே இருக்க வேண்டும். இந்த நாட்டின் குடிமகன்கள் அனைவருக்கும் கல்வி இலவசமாக தரப்பட வேண்டும். ‘இலவச கல்வி’ என்பது நமது பிறப்புரிமை. ஒவ்வொரொ நாடும், அரசும் தன் குடிமக்களுக்கு அளிக்க வேண்டிய உரிமை. மாறாக நடைமுறையில் கல்வி காசாக்கப்பட்டு, மிக்ஸியும், கிரைண்டரும், (தேர்தல் சமயத்தில்) குவாட்டருமே இலவசமாக வழங்கப்படுகின்றது. ’இலவச கல்வி’ என்பது இறுதி எல்லை என்றபோதிலும் நடைமுறையில் உடனடி தீர்வுக்கான சாத்தியங்கள் என்ன? 1. தனியார் கல்வி நிறுவனங்களின் அநியாய கல்விக்கொள்ளைக்கு எதிராகப் போராடுவது. 2. அரசுப் பள்ளிகளை தரமாக நடத்தப் போராடுவது. இவை இரண்டும் நடைமுறை சாத்தியமானதே.
இயக்குநர் சசிக்குமார், நடிகர் சூர்யா ஆகியோர் இந்த அநீதியான கல்விக்கொள்ளைக் குறித்து வெளிப்படையாகப் பேசினால் அவர்களின் நட்சத்திர இமேஜ் காரணமாக அது கூடுதலாக கவனம் பெறுமே?! ஆனால் அவர்கள் எப்போதும் பேசமாட்டார்கள். பேசாததால்தான் அவர்கள் நட்சத்திரங்களாகவும் இருக்கின்றனர். அதனால்தான் உண்மையில் மங்கிய இந்த நட்சத்திரங்கள் சினிமா லைட்டிங்கால் பிராகசிக்கும் போலி நட்சத்திரங்களாக ஊரை மயக்குகின்றன.
கல்வி என்பது இன்று என்னவாக இருக்கிறது? பணம் இருந்தால் மட்டுமே தரமான பள்ளியில் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியும். ‘தரமான பள்ளி’ என்ற சொல்லை உச்சரிக்கும்போதே நம் மனங்களில் தனியார் பள்ளிகளின் சித்திரம்தான் தோன்றுகிறது. அரசுப் பள்ளிகளில் தரம் இல்லை. தனியார் பள்ளிகளில் சேர்க்கும் அளவுக்கு கையில் காசு இல்லை. என்ன செய்வது? படிக்கும் வயதில் பிள்ளைகள் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் குடும்பம் தனது மொத்த வாழ்நாளையும் பிள்ளைகளின் படிப்புக்காக மட்டுமே அர்ப்பணிக்கிறது. தங்கள் வாழ்க்கையை அடகு வைத்தால்தான் பிள்ளைகளை படிக்க வைக்க முடியும் என்பது கண்கூடான யதார்த்தம். இந்த நிலைமை உண்மை என்கிற அதே சமயம் இது நியாயம் இல்லை என்பதும் நமக்குத் தெரியும். ஆனாலும் எல்லோரும் தனது அடுத்தத் தலைமுறையையேனும் மேலும் ஒரு படி அதிக வசதியுள்ள வண்டியில் ஏற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய சிரமங்களை ஏற்றுக்கொள்கின்றனர். இதனால்தான் எல்.கே.ஜி.க்கு 40 ஆயிரம் என்ஜினீயரிங்குக்கு 20 லட்சம் என கணக்கு வழக்கின்றி அள்ளிக் கொட்டுகின்றனர்.
’வேற என்ன சார் பண்றது? பிள்ளைங்களுக்கு நல்ல வாழ்க்கையா அமைச்சுத் தரணும்ல.. நாம காசு, பணம்தான் சேர்த்து வைக்கலை. நல்லப் படிப்பைக் கொடுத்துட்டா அதுங்க பொழைச்சுக்கும்ல…’ என்பது பொதுவான பெற்றோர் எதிர்வினை. இச்சொற்களில் இருக்கும் ’பாசம், அக்கறை’ என்பனவற்றை வடிகட்டிவிட்டுப் பார்த்தால் ‘சுயநலம்’ என்ற சொல் கிடைக்கக்கூடும். தனது சக்திக்கு மீறி அதிக முதலீடு போட்டு பிள்ளைகளைப் படிக்க வைக்கும் நடுத்தர வர்க்கம் அதற்கான நியாயமான Return-ஐ எதிர்பார்க்கிறது. சமூகப் பிரச்னை, மாணவர் சங்கம், பொதுநலம், அரசியல், போராட்டம், பொதுப் பிரச்னை, கலை, இலக்கியம் என ‘காசுக்கு உதவாத’ அனைத்தையும் மாணவர்கள் செய்யும்போது பெற்றோர் மனது பதற்றமடைகிறது. ஏனெனில் இன்றைய பெற்றோர்கள் வெறும் பெற்றோர்கள் மட்டுமல்ல. அவர்கள் முதலீட்டாளர்களும் கூட. இந்த சொற்பிரயோகத்தில் கொஞ்சம் கடின தொனி இருக்கலாம். ஆனால் உண்மை அதுதானே?! ஊரைச்சுற்றி கொடுநோய் சூழ்ந்திருக்கும்போது தான் மட்டும் பாதுகாப்பாய் கரையேறிவிடலாம் என்பது சுயநலம் மிகுந்த மூட நம்பிக்கை.
ஒரு சூறையாடலைப் போல தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விக்கொள்ளை நம்மை சூழ்ந்திருக்கிறது. முனியாண்டி விலாஸ் கணக்காக ஊருக்கு ஊர் தனியார் பொறியியல் கல்லூரிகள் முளைத்துகிடக்கின்றன. ஒவ்வொரு கல்லூரியின் நில மதிப்பு, கட்டட மதிப்பு எல்லாவற்றையும் தோராயமாக கணக்கிட்டாலே கோடிகளில் வரும். எங்கிருந்து வந்தது அந்தப் பணம்? நடுத்தர வர்க்கம் தனது ரத்தம் சுண்ட உழைத்துக் கொடுத்த பணம். ஏழைப் பெற்றோர்கள் கூலி வேலை செய்து கொடுத்தப் பணம். திருப்பூரில் பனியன் ஃபேக்டரியிலும், வளைகுடா நாடுகளின் தொழிற்சாலைகளிலும் உதிரம் வற்ற உழைத்த காசு. ஒவ்வொரு பொறியியல் கல்லூரியின் செங்கல்லிலும் பெற்றோர்களின் கண்ணீர் கலந்திருக்கிறது. அதே நேரம் லஞ்சத்தில் பெருத்த அதிகார வர்க்க பெருச்சாளிகளும், பங்குச் சந்தை சூதாட்டத்தில் ‘சம்பாதித்த’ பணக்காரர்களும் தகுதியே இல்லாத தமது வாரிசுகளுக்கு பல இலட்சங்களை தூக்கி எறிந்து கல்வியை விலைக்கு வாங்குகிறார்கள். இப்படித்தான் நமது கல்வி முதலாளிகள் கல்லா கட்டுகின்றனர்.
ஒரு தொழில் செய்பவன், அதற்கான நியாயமான லாபத்தை எதிர்பார்ப்பதும், பெறுவதும் சரியானதே. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்கள் எந்த நியாயமுமின்றி லாபவெறி எடுத்து அலைகின்றன. ஒரு Vampire-ஐ போல அவர்களின் மனம், பணம் தேடி அலைகிறது. இந்த மனநிலை நிறுவனங்களோடு நிற்கவில்லை. மக்களின் மனங்களுக்கும் இந்த ‘லாபவெறி’ மடை மாற்றப்பட்டிருக்கிறது.
அதனால்தான் பெரும்பாலான பெற்றோர்களுக்கு ‘கல்விக்கொள்ளை’ என்பது அநியாய லாபமாக தோன்றவில்லை. ‘முதல் போடுறவன் லாபம் பார்க்கத்தானே செய்வான்..’ என்பதே பெரும்பான்மை மக்களின் கருத்து. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அநியாய லாபத்தின் மொத்த குறியீடாக சினிமா இருக்கிறது. இதில் சசிக்குமாரும், சூர்யாவும் ‘கல்வி வள்ளல்களாக’ அருள் பாலிக்கின்றனர்.
சசிக்குமாரின் ‘மாணவர் மறுமலர்ச்சித் திட்டம்’ குறித்த பத்திரிகை செய்திக் குறிப்பில் சில வி.ஐ.பி.களும் கருத்து சொல்லியிருக்கின்றனர். இயக்குநர் மணிவண்ணன், நடிகர் விதார்த், சில அரசு அதிகாரிகள் தவிர, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், ‘தாமரை’ ஆசிரியருமான சி.மகேந்திரனின் கருத்தும் அதில் உண்டு. அவர், ” வசதி இல்லை என்பதற்காக இனி எந்த ஒரு மாணவனின் கல்வியும் பாதிக்கப்பட கூடாது . அதற்கான முதல் முயற்சி இயக்குனர் சசிகுமாரும், கும்பகோணம் அன்னை கல்விக் குழுமமும் தொடங்கி இருக்கிறது. அத்தனை கல்லூரி மாணவர்களுக்கும் கைக்கொடுக்க வேண்டும். 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் உருவெடுக்க இந்த திட்டம் நிச்சயம் உதவும்.’’ என்று சொல்லியிருக்கிறார். நடிகர் விதார்த்தின் கருத்துடன் ஒத்துப் போகும் அளவுக்கு ‘முன்னேறியிருகிறது’ இந்திய கம்யுனிஸ்ட் கட்சி.
ஒரு கம்யூனிஸ்ட்டு கட்சியின் தலைவரே இந்த கல்விப் பிச்சை மேனியாவில் மனதைப் பறிகொடுத்திருக்கும் போது புயலுக்கு கரை ஒதுங்குவது போல இமேஜுக்குகாக ‘சமூகப் பணிகளில்’ இறங்கும் இயக்குநர் சசிகுமார் போன்றோர் அடித்து செல்லப்படுவது ஆச்சரியமல்லவே!
– வளவன்.
very general comment,the criticism of capitalism is usual but if the government can do something for education it should be at a primary school level.neglect there is what causes all the problems.
சசிகுமார் போன்ற உண்டியல் தூக்கிகளால் கல்வியறிவு 100% மக்களைச் சென்றடையும் என்று கூறப்படும்போது, அரசாங்கம் போன்ற பிக் ஜெயண்ட்களால் ஏன் 100% சதவீத கல்வியறிவு இலவசமாக வழங்குவது என்ற இலக்கினை எட்ட முடியாது?
உடும்பன் பட விமர்சனம் வருமா? கல்விக்கொள்ளையைப் பற்றிய அப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தவண்ணம் இருக்கிறதே.
சூர்யாவும், சசிகுமாரும் செய்வது சமூகத்திற்கு ஒரு போதும் போதுமானதில்லை, தீர்வாகாது, என்றாலும் தனிமனிதர்களாக அவர்கள் உதவுவது சரியில்லை எனத் தோன்றவில்லை.
//என்றாலும் தனிமனிதர்களாக அவர்கள் உதவுவது சரியில்லை எனத் தோன்றவில்லை.//
சசிகுமார்+சூர்யாவின் சொந்தப்பணம் ==தன் இடது கைக்குக் கூடத் தெரியாமல்=> ஏழை மாணவர்களுக்கு உதவுதல் = இப்படி இருந்தால் நீங்கள் சொல்வதை ‘சேவை’ என்பதாக ஏற்றுக் கொள்ளலாம்.
மாணவர்கள் ===> Money collector சசிகுமார் ===> ஏழை மாணவர்கள் = இப்படி இருப்பதை எப்படி சரியானது என்று சொல்கிறீர்கள்?
அவரது உதவி, மாணவர்களிடமிருந்து வாங்கிக் கொடுப்பது, அதை ஊக்குவிப்பது என்ற முயற்சியில் இருக்கிறது என்று பார்க்கலாமல்லவா?
அவர்கள் அப்படி செய்தால் வினவில் “வாழ்த்து பாட” முடியாதே?
Sasi doing Best social work for our state. what is your news title man ? கல்விப் பிச்சை வள்ளல்கள். what is this பிச்சை? Fool. r u indian or tamilan? Change the title man.. idiot vinavu.. if not i definitely make case on vinavu.com.
by
Manithan.
if not i definitely make case on vinavu.com.
Ha Ha Ha…
@nallavan ..Do you know that Ajith is sponsoring for education by spending his own money. You might have not known it because those are not advertised by him. But both Surya and Sasikumar are doing this explicitly.It is like blowing your own trumpet… @நல்லவன் அவர்களே நமது மொழியைத்தான் நம்மால் பாதுகாக்க முடியவில்லை. ஆங்கிலத்தையாவது ஒழுங்காக எழுதிப்பழகலாமே ?
அஜித்தின் செயல் பாரட்டுக்குரியது. ஆனால் வெளிப்படையாக உதவிகள் செய்யும்பொழுது அவர்களைக் கண்டு மேலும் சிலர் தானும் உதவி செய்ய முன்வருவார்கள் இல்லையா. வெளிப்படையாக உதவுவதன் மூலம் அவர்களுக்கு பப்ளிசிட்டி கிடைக்கிறது என்பது உங்கள் குற்றச்சாட்டு. அப்படிப்பட்ட செயலால் யாரும் பாதிப்பு அடையவில்லையே. மேலும் பலர் உதவ முன்வருவதால் அதிகப்பேர் பயன் அடைகிறார்களே..
s. correct
”உங்கள் கட்டுரையைப்படித்தவுடன், சூர்யாவும் சசிக்குமாரும் 100% தாங்கள் சம்பாதிப்பதை நன்கொடையாக கொடுக்கச்சம்மதிக்கிறார்கள்” – இதைதானே எதிர்பாரிக்கிறீர்கள். சும்மா எல்லாவற்றையும் எதிர்த்து எழுதியே பிழைப்பை ஓட்டும் வலைப்பக்கமாகத்தான் வினவு.காமைப்பார்க்கத்தோன்றுகிறது.
இது விதண்டாவதக்கட்டுரை.
சரி..இதை விதண்டாவாதமாகவேக் கொள்வோம்.
//‘‘படிக்க பணமில்லை என்ற நிலை என்னை கலங்க வைக்கிறது. அதனால்தான் கல்விக்காக உங்களிடம் கையேந்தி வந்துள்ளேன்’’ என மனம் உருகி மாணவர்களிடம் பேசியிருக்கிறார் சசிக்குமார்.//
இந்நிலையை சரிசெய்ய நீங்கள் முன்வைக்கும் குறுகிய கால/நீண்ட கால/தொலைநோக்கு திட்டம் ஒன்றினை முன்வைத்துப் பேசலாமே. அது ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும்.
திட்டம் போட வேண்டியது ஒங்க வேல பாஸ், நீங்க எப்படியெழுதனும்னு வாசிக்கிறவன் திட்டம் தரணுமாக்கும். அது இல்லாமலா இவ்வளவு ‘நல்ல’ கட்டுரைகளையும் எழுதுறீன்ங்க? ஓங்களுக்குத் தேவ “self analysis” அல்லது “comment block”.
என் கருத்தை வினவின் கருத்தாக புரிந்து கொள்ள வேண்டாம். இது விதண்டாவாதம் என்று ஒரு வாசகர் தன் கருத்தை முன் வைக்கிறாரென்றால், அனைத்து தரப்பினருக்கும் எது சரியான வழியாக இருக்கக்கூடும் என்ற புரிதலுடன் கூடிய திட்டத்தை அவர் முன்வைக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, இங்கு குறிப்பிட்டவற்றை விதண்டாவாதம் என்று குற்றம் சாட்டத் தகுதி உண்டு. என் நிலைப்பாட்டை எப்போதுமே சுயவிமர்சனம் செய்து கொள்ளத் தயங்காதவன் நான்.
எனக்குத் தோன்றும் சிறிய கருத்து: வருடா வருடம் இப்படி சிலருக்கு பணம் கொடுப்பதை விட இப்படிப்பட்ட எண்ணம் உள்ள நடிகர்கள் இயக்குனர்கள் போன்றவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு கல்வி நிருவனத்தை ஆரம்பித்து எத்தனைப் பேருக்கு இலவசமாக கல்வியை வழங்க முடியும்.
சசிக்கு இப்படியான அரசியல் புரிதல் கிடையாது. இருந்திருந்தால் செய்திருக்க மாட்டார்…
ஆமா ஊர்ல உதவி செயயணும்னு நெனச்சா, “அரசியல் புரிதல்”, MA In Political science-ல்லாம் வேணும்.
அப்படியா! 🙂 சரி.. எயிட்ஸ் வந்ததால உடம்புல எல்லாப் பகுதியிலயும் புண்ணு வந்துடுச்சு. விரல்ல இருக்கற புண்ணுக்கு மருந்தைப் போட்டு இப்போதைக்கு சரிபண்ணிட்டீங்க. உடம்பு முழுசும் இருக்கே.. என்ன செய்யப்போறீங்க? மொத்த உடம்புக்கும் இந்த மருந்தே தடவிக்குவீங்களா? அல்லது எய்ட்ஸைக் கட்டுப்படுத்த/(முடிந்தால்) குணப்படுத்த முயற்சி செய்வீர்களா?
சாதாரண புண்ணுக்கும், எய்ட்ஸால் ஏற்படும் புண்ணுக்கும் வித்தியாசம் அறிவதற்கு நீங்கள் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டியதில்லையே! 🙂
1. கொஞ்சம் காமன்ஸென்ஸ் இருந்தால் போதும்
2. டாக்டரை அணுகத் தெரிந்தால் போதும்
3. அவர் விவரிப்பதைப் புரிந்துகொள்ளத் தெரிந்தால் போதும்
ஐரோப்பிய நாடுகளை பார்த்து கத்துக்கணும், குறிப்பா பின்லாந்து.
http://en.wikipedia.org/wiki/Education_in_Finland
உண்டியல் தூக்குவது செங்கொடிகளின் பிறப்புரிமை..அவர்கள் பாணி அரசியல்! இதை மற்றவரகள் பின்பற்றினால் தவறு!
இதுவும் கல்சுரல்போலீஸிங் என்பதைப்போல் ஒருவகை ஐடியாலஜிகல் போலிசிங்க் தான்!
🙂
தங்களின் அரசியல் புரிதல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது 🙂
நடத்துங்க.. நடத்துங்க..
தோணி படத்துல தனியார் கல்விக் கொள்ளையை எதிர்த்தும், பாடத்திட்ட முறையை எதிர்த்தும் போராட நினைக்கும் தகப்பன். போராட்டத்தை மக்களுக்கு கொண்டு செல்ல நினைக்கும் வழியாக, அறிவைக் கொல்லும் அக்கப்போர் நிகழ்ச்சியான நீயா? நானா?நிகழ்ச்சியைத்தான் நாடுகிறார். சமுக பிரச்சினைக்கு நீதிவழங்கும் நீதி மன்றமா இந்த நீயா? நானா?
its popularity amongst common people makes much more sense and reach than what happens here.u cant fight people’s choice.
“சமூகப் பிரச்னை, மாணவர் சங்கம், பொதுநலம், அரசியல், போராட்டம், பொதுப் பிரச்னை, கலை, இலக்கியம்” எல்லாமே காசுக்கு உதவாது என்பது உண்மைதானே.
இதில் மூழ்கி இளமையை தொலைத்தவர்கள் எத்தனையோ பேர். நம்ம சேரநாட்டு சேட்டன்கள் எத்தனையோ பேர் விடலை பருவத்துல இன்குலாப் சிந்தாபாத் கூப்பாடு போட்டு வீணா போயி இப்ப மஸ்கட்-ல ஹாப்பியா பிஸ்கட் வித்துகிட்டிருக்காங்க. பணம் தான் பாஸ் எல்லாமே.
முதல்ல பணத்த தேடுங்க. அப்புறமா நாட்ட திருத்தலாம். கைல காசிருந்தா ஊருக்கு உபதேசம் பண்ணலாம். தப்பே இல்ல. ஆனா பணம் இல்லாதவன் வாழ தகுதி இல்லாத நிலைமைல இருக்கு நம்ம ஊரு. நாலு காசு சம்பாதிக்கரவனையும் கெடுத்துருவீங்க போலிருக்கே.
முதலாளித்துவத்தின் உற்பத்தி மிக அருமையாக தத்துவம் பேசுகிறது! பணத்தைத் தேடுறதுக்குத்தான்யா இம்புட்டும் பேசப்படுது – ஏழைகள் தொலைத்த, பணக்காரனிடம் போய்ச் சேர்ந்த பணத்துக்கு!
தத்துவமா? அதெல்லாம் உங்க ஏரியா தோழர்…நாங்க பேசுவது ஒன்லி ரியலிசம். பணத்தை எப்படி தேடணும்னு தெரிஞ்சுக்கோனும், இல்லேன்னா எல்லாரும் உங்கள மாதிரி உண்டியல் குலுக்க வேண்டி இருக்கும்.
பணத்தைத் தேடிய மன்னார்குடி கும்பலின் நிலையைப் பார்த்தீர்களா?
சொட்டு குவிப்பு வழக்கு முடியும் வரை நடக்க உள்ள ஒரு செட் அப்
//உண்டியல் குலுக்க வேண்டி இருக்கும்.//
கோமாளி,
கொள்ளை அடிப்பதை விட உண்டியல் குலுக்குவதுதான் கேவலமோ!
பணத்தை எப்படித் தேடணும்னு தெரிஞ்சிக்க நம்மை சாட்டையால அடிச்சி விரட்டி ஓட ஓட வைத்து தேட வைப்பதுதான் இப்போதிருக்கும் பொருளாதார அமைப்பு. the so called ரியலிசம். அதற்கு மாறாக, இருக்கும் வளங்களை முறையாகப் பயன்படுத்தி நாமும் முன்னேறி, நாம் சார்ந்த சமுதாயத்தையும் முன்னேற்றி ஏற்றத்தாழ்வில்லா நிலை கண்டு ஒட்டுமொத்த மனித குலமும் மகிழும் வகையில் பாடுபட்டு அதை ‘ரியலிசம்’ ஆக்கப் போராடுவதே சிறந்தது.
Some time vinavu gives very good articles and some times its very dirty. You are commenting this scheme introduced by sasikumar but you don’t provide the solution. For his current value at cinima he doesn’t required to go through this cheep publicity. How many of them doing other then writting and commenting when somebody does this. We never get time to go to street and do something for society. Whether he gets benefited or not but atlease some student who does not able to pay for education gets benefitted. He is not publishing its media published and appriciated. I feel vinavu always looking at all issues in one angle. I am reading many sites savukku.net,Keetru.net,vinavu.net..etc. Because i want to see the issue how it has been looked into different angle. But i think either if you are unable to encourage but don’t discourage by this cheep articles.
I think you have not studied this article fully. If you grasped the detailing well, it would have been acceptable. This article clearly puts the points on how the education process should be.
//hether he gets benefited or not but atlease some student who does not able to pay for education gets benefitted.//
Yes. Some students are getting benefited. It’s solution for a few among hundreds and thousands. But, what is the solution for the remaining? The structure of the education system and the society itself producing the so called “does not able to pay for education” students. Our aim is to provide 100% free eduction to all students. For that we need to attack on THIS SYSTEM. This type of charities are used to plug the holes created by the attackers.
This artical says the following.
1. தனியார் கல்வி நிறுவனங்களின் அநியாய கல்விக்கொள்ளைக்கு எதிராகப் போராடுவது. 2. அரசுப் பள்ளிகளை தரமாக நடத்தப் போராடுவது. இவை இரண்டும் நடைமுறை சாத்தியமானதே.
Don’t you know that this is simple and why can’t surya and sasi understand this and fight for this. if they do next day CBI will be on their door to check their accounts, so they don’t fight against issues instead do cheep publicity.
well said Shanthamoorthi
டுத்தர வர்க்கம் அதற்கான நியாயமான Return-ஐ எதிர்பார்க்கிறது. சமூகப் பிரச்னை, மாணவர் சங்கம், பொதுநலம், அரசியல், போராட்டம், பொதுப் பிரச்னை, கலை, இலக்கியம் என ‘காசுக்கு உதவாத’ அனைத்தையும் மாணவர்கள் செய்யும்போது பெற்றோர் மனது பதற்றமடைகிறது. ஏனெனில் இன்றைய பெற்றோர்கள் வெறும் பெற்றோர்கள் மட்டுமல்ல. அவர்கள் முதலீட்டாளர்களும் கூட. இந்த சொற்பிரயோகத்தில் கொஞ்சம் கடின தொனி இருக்கலாம். ஆனால் உண்மை அதுதானே?! ஊரைச்சுற்றி கொடுநோய் சூழ்ந்திருக்கும்போது தான் மட்டும் பாதுகாப்பாய் கரையேறிவிடலாம் என்பது சுயநலம் மிகுந்த மூட நம்பிக்கை.
மிகச் சரி!
/அகரம் பவுண்டேஷன்’ மூலமாக ஒவ்வொரு வருடமும் சில மாணவர்களுக்கு ’இலவச கல்வி’ தரும் அவர், அதை வைத்து தனது ‘நல்லவன்’ இமேஜ்-ன் கிராஃபை நன்றாகவே மேலே ஏற்றியிருக்கிறார். (அகரம் மூலம் கல்விக்கு செலவழிக்கும் தொகையை விட அதற்கான விளம்பரத்திற்கு செலவிடும் பணம் அதிகமாக இருக்கும் போலிருக்கிறது). இங்கும் ’இலவசக் கல்வி’ என்பதன் பொருள், இலவசம் அல்ல. மாறாக, சம்பந்தப்பட்ட மாணவர்களின் கல்வி கட்டணம், நன்கொடை உள்ளிட்ட அனைத்தையும் அகரம் பவுண்டேஷன் செலுத்திவிடும். இதற்குப் பெயர் இலவசக்கல்வி அல்ல//
உங்களது நட்பு சக்தியான தேசிய முதலாளி பள்ளி கூடம் நடத்தலாம் அதில் அதிக வசூல் கொள்ளை அடிக்கலாம் அதைவிட சொந்த காசில் சிலருக்கு இலவசமா கல்வி கிடைக்க செய்தால் அதுதான் பெரிய தப்பு சூப்பர் தோழர் அப்படியே தொடருங்கள்
மொத்தமாக கல்வி என்பது அரசின் வசம் மட்டுமே இருக்க வேண்டும். இந்த நாட்டின் குடிமகன்கள் அனைவருக்கும் கல்வி இலவசமாக தரப்பட வேண்டும். ‘இலவச கல்வி’ என்பது நமது பிறப்புரிமை. ஒவ்வொரொ நாடும், அரசும் தன் குடிமக்களுக்கு அளிக்க வேண்டிய உரிமை. ’இலவச கல்வி’ என்பது இறுதி எல்லை என்றபோதிலும் நடைமுறையில் உடனடி தீர்வுக்கான சாத்தியங்கள் என்ன? 1. தனியார் கல்வி நிறுவனங்களின் அநியாய கல்விக்கொள்ளைக்கு எதிராகப் போராடுவது. 2. அரசுப் பள்ளிகளை தரமாக நடத்தப் போராடுவது. இவை இரண்டும் நடைமுறை சாத்தியமானதே.
Avar seithathil ungaluku enna sir prachanai.
செங்கொடிகள் தூக்கும் தன்நலமற்ற உண்டியலுக்கும் மற்றவர்கள் தூக்கும் பிழைப்புவாத உண்டியலுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுவது. சின்னப்புள்ள தனமாத்தான் இருக்கு.
இது விஷயமுள்ள பதிவு. விதண்டவாதம் அல்ல. என் வீட்டு வாசலில் அடிக்கடி பீஸ் கட்ட பணம் வேண்டி வருபவரிடம் எனக்கு இதே கேள்வி உண்டு. ஏன் அந்த கல்வி நிறுவனமே அவனுக்கு கட்டணமில்லாமல் சொல்லி கொடுக்க கூடாதா? நடிகர்களுக்கு தேவை வெறும் பணம்,புகழ், விளம்பர வெளிச்சம். வேறொன்றுமில்லை!பெற்றோர் பற்றிய உங்கள் கணிப்பு அருமை. அவர்தம் மக்களிடம் படிப்பை தவிர எந்த விதமான அறிவும், சமூக அக்கறையும், மனித தன்மையும் அவர்களுக்கு தேவை இல்லை. பணம் சம்பாதிக்க வேண்டும். அவ்வளவே. நம் கல்வி முறை அடியோடு மாற்றப்பட வேண்டும். அதிகமான மருந்து கொடுப்பவர் தான் நல்ல டாக்டர் ,அதிக கட்டணம் வாங்கும் பள்ளியே சிறந்த பள்ளி என்பது நம் மக்களின் அபிப்ராயம்.இவர்கள் மாறும்வரை, சாய தண்ணி விளம்பரத்தில் நடித்துக்கொண்டே, வள்ளல் தோற்றம் பெற
இந்த நடிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
ஒவ்வொரு பஞ்சாயத்தும் தங்களுக்கு தேவையான காய் கனிகள் தானியங்கள் மற்றும் கீரை வகைகளை உற்பத்தி செய்து கொள்ள அரசு மானியம் கொடுத்து பராமரிக்க வேளாண் துறை பட்டதாரிகளை நியமித்தாலே நம் நாட்டில் தொண்ணூறு சதம் வறுமை தீர்ந்து விடும், ஆனால் அம்பானி காய்கறி விற்கும் போது அரசு என்ன செய்யும்? தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் அரசியல் முதலைகள் மற்றும் அவர்களுக்கு நன்கொடை தருபவர்களால் நடத்தப்படும் போது கடுமையான சட்டம் எப்படி கொண்டு வருவார்கள்.
பொதுவில் உழைக்க மனிதர்கள் என்றும் தயார் இல்லை எந்த நாட்டிலாவது காய் கறிகள் கீரைகள் பழமரங்கள் சாலை ஓரத்தில் எந்த மனிதனாவது நட்டிருக்கிறானா?தன் தோட்டத்தில் வைத்துதான் பராமரிப்பான் தன்னுடைய தேவையை தாண்டி விளைவித்து விற்று பணம் பண்ணும் நோக்கின்றி ஒரு செடியை கூட அடுத்தவர் சாப்பிட வளர்க்க மாட்டான்.தனக்கு வருமானம் என்றால் தான் உழைக்க தயார் ஆவான்.இந்த மனநிலை மாறினால் பணம் என்ற ஒரு பொருள் உலகில் இருந்து மறைந்துவிடும்.
அட போங்கப்பா.நடிகர்கள் செய்ஞ்சாலும் இப்படிதான் குறை சொல்லுரிக. செய்யாவிட்டாலும் சொல்லுரிக.
கருப்பு பணத்தை வெள்ளையாக்கி அதற்கு வரி விலக்கும் பெருவதற்கு தான் தனியார் கல்லூரி ஆரம்பிக்கிறார்கள், கருப்பு பணம் பதுக்கும் முக்கிய இடங்களில் கல்லூரிகளும் ஆசிரமங்களும் முக்கியமானவை
அரண்மனை உப்பரிகையில் இருந்து மன்னர்கள் அள்ளி வீசும் சில்லறை காசுகளால் ஏழைகளின் வயிறு ஒருபோதும் நிறைவதில்லை. மேலும், மன்னர்கள் காசை அள்ளிவீசுவதன் நோக்கம் ஏழைகளின் பசியைப் போக்குவதும் அல்ல. அது அவர்களது அந்தஸ்தின் ஸ்திரத்தன்மையை உலகுக்கும், தனக்குமேக் கூட காட்டிக்கொள்வதற்கான ஏற்பாடு. இந்த நடிகர்களின் கூத்தும் அந்தக் கதைதான்.
மிகவும் தேவையான பதிவு .நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் அரசுடமை ஆக்க வேண்டும் . அல்லது அரசு ஊழியர்களின் வாரிசுகள் அனைவரும் அரசு கல்வி நிறுவனங்களில் தான் பயில வேண்டும் என்று உத்தரவு போட வேண்டும் . தனது வாரிசுகள் பயில்கிறார்கள் என்றால் அதன் தரத்தை கண்டிப்பாக உயர்த்துவார்கள் .அப்படி ஒருவர் ஈரோட்டில் இருந்தார் கேடுகெட்ட அரசியல் அதை விட்டு வைக்கவில்லை.இதோ அருகில் இருக்கும் சிங்கப்பூரில் நான் ஒருவரிடம் பேசியபோது ஒருவர் அரசு ஊழியராக வேலை பார்ப்பதாக கூறினார் .அதற்கு அங்கே அருகிலிருந்த நண்பர் ஏன் தனியார் வேலை கிடைக்கவில்லையா என்றார் .நமது நாட்டில் தான் பிராடு வேலை செய்யவே அரசு வேலைக்கு அலைகிறார்கள் கேவலம்
// ’இலவச கல்வி’ என்பது இறுதி எல்லை என்றபோதிலும் நடைமுறையில் உடனடி தீர்வுக்கான சாத்தியங்கள் என்ன? 1. தனியார் கல்வி நிறுவனங்களின் அநியாய கல்விக்கொள்ளைக்கு எதிராகப் போராடுவது. 2. அரசுப் பள்ளிகளை தரமாக நடத்தப் போராடுவது. இவை இரண்டும் நடைமுறை சாத்தியமானதே.//
இறுதி எல்லைக்காக அனைவரும் போராட வேண்டும் ஆனால் அதே நேரத்தில் தன்னால் முடிந்த உதவிகளை செய்வதில் என்ன தவறு இருக்கிறது?
(அதனால் சுயவிளம்பரம் கிடைத்தால் தான் என்ன..ஒரு மாணவனுக்கு படிப்பு கிடைப்பதற்காக ஒரு நடிகனுக்கு சுயவிளம்பரம் கிடைத்தால் என்ன குடி முழுகி போய்விட போகுது?)
very well said
\\1. தனியார் கல்வி நிறுவனங்களின் அநியாய கல்விக்கொள்ளைக்கு எதிராகப் போராடுவது. 2. அரசுப் பள்ளிகளை தரமாக நடத்தப் போராடுவது. இவை இரண்டும் நடைமுறை சாத்தியமானதே.\\ \\1. தனியார் கல்வி நிறுவனங்களின் அநியாய கல்விக்கொள்ளைக்கு எதிராகப் போராடுவது. 2. அரசுப் பள்ளிகளை தரமாக நடத்தப் போராடுவது. இவை இரண்டும் நடைமுறை சாத்தியமானதே.\\ இந்த யோசனையை படி எத்தனை பேர் எங்கெல்லாம் போராடினீர்கள், அதனால் எந்த அரசாங்கம் திருந்தி நல்ல பிள்ளையானது, எத்தனை ஏழை மாணவர்கள் பயன்பெற்றார்கள் என்பது போன்ற விவரங்கள் தர முடியுமா வினவு அவர்களே? உங்களால் தர முடியாது, ஏனெனில் நீர் பேசுவது வீர வசனம், நடைமுறைப் படுத்துவது ரொம்பவே கஷ்டம். ஒரு பிரச்சினை உள்ளது அதற்க்கு தீர்வு என்று உமது சிந்தனையில் ஏதோ படுகிறது என்றால் அதை நீங்கள் செயல்படுத்தலாம், ஆனால், நீர் நினைப்பதுதான் நூறு சதவிகிதம் சரி, ஊரில் நிற்ப்பவன் எல்லாம் உமது பின்னால் வந்து நிற்கவேண்டும் என்றெல்லாம் கட்டாயம் ஒன்றுமில்லை. அந்த இரண்டு நடிகர்கள் ஏதோ தங்களால் முடிந்த வரை சிலருக்காவது உதவலாமே என்று இறங்கியுள்ளனர். நீர் சொல்வது போல போராடி உமது தீர்வின் பலன் வருவதற்குள் இன்றைய மாணவன் கிழவனாகி மண்ணோடு மண்ணாகிப் போயிருப்பான். நீர் உமது வழியில் போராட வேண்டுமென்றால் நீர் அதைத் தாராளமாகச் செய்யலாம், அந்த நடிகர்கள் ஏதோ அவர்கள் சிற்றவுக்குப் பட்டதை செய்கிறார்கள், ஒன்றுமே சாதிக்காமல் வெறும் பிளாக் நடத்தி வெத்து வெட்டு வசனம் பேசவே உண்டியலைக் குலுக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் நீர் ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளைஎன்ற கதையைப் போல பல மாணவர்களுக்கு படிக்க உதவியிருக்கும் அவர்களைப் பார்த்து உண்டியலைக் குலுக்குகிறார்கள் என்கிறீர்.
வினவு பிரச்சினையையும் அதற்காக அவர்கள் முன்வைக்கும் தீர்வையும் அலசியிருக்கிறார்கள். மேலும் சிலர் தத்தமது பார்வையில் இந்தப் பிரச்சினையையும் தீர்வையும் அணுகியிருக்கிறார்கள். நீங்களும் ஒரு ‘கருத்து’ சொல்லியிருக்கிறீர்கள். பொருள் தேடும் அவசர உலகிலே தத்தமது நேரங்களை ஒதுக்கி விவாதிப்பது மிகப் பெரிய விஷயம். இந்த விவாதங்களை நாம் பயனுள்ளதாக ஆக்க முயற்சிக்கலாமே!
தாங்கள் கருத்து தெரிவித்திருப்பது பொதுநலனில் தனிநபரின் பங்கையும் அவர்தம் விருப்பத்தையும் பற்றியதாக மட்டுமே இருக்கிறது. ‘நடைமுறைப்படுத்துவது ரொம்பக் கஷ்டம்’ என்று சொல்லும்போதே ‘நடைமுறைப்படுத்துவதற்கான அவசியம்’ இருக்கிறது என்று ஒத்துக்கொள்கிறீர்கள். இங்கு யாரும் யாருக்கும் பின்னால் வந்து நிற்க வேண்டிய அவசியமில்லை. எதுவும் ஒரே நாளில் மாறிவிடாதுதான். ஆனால் சமுதாயத்தில் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது பெரும்பான்மையோருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு பொதுக்கருத்து உருவாக்க வேண்டியிருக்கிறது. வினவு அப்பணியைச் செய்வதாகக் கருதுகிறேன்.
மற்றபடி, தனியார் கட்டணக் கொள்ளையைப் பற்றியோ, அரசுப் பள்ளிகளின் சீர்திருத்தங்கள் பற்றியோ நீங்கள் ஏன் பேசுவதில்லை?
“1. தனியார் கல்வி நிறுவனங்களின் அநியாய கல்விக்கொள்ளைக்கு எதிராகப் போராடுவது. 2. அரசுப் பள்ளிகளை தரமாக நடத்தப் போராடுவது. இவை இரண்டும் நடைமுறை சாத்தியமானதே”
போராடுவது சாத்தியமானதே. ஆனால் போராடி சாத்தியப்படுத்த எவ்வளவு காலம் ஆகும்? போராட்டம் நடத்தி அரசு ஆணை பிறப்பித்த அடுத்த வினாடி அரசுப் பள்ளியில் தரம் உயர்ந்து விடுமா? அல்லது ஏழை மாணவர்களால் தனியார் கல்வி நிலையங்களின் அரசு அங்கீகரித்த குறைந்த கட்டணத்தைச் செலுத்த முடியுமா? ஒரு மாணவன் ஏதோ ஒரு காரணத்தால் ஒரு வருடம் படிப்பை இழந்தாலும் அவனுக்கு அது பெரும் நட்டம். போராட்டம் நடத்துபவர்கள் தாராளமாக போராடுங்கள். மற்றவர்கள் வேறு வழியில் உதவினால், அதை கொச்சைப்படுத்தாதீர்கள்.
நானும் என் நண்பர்களும் மாதாமாதம் எங்கள் கைக்காசைப் போட்டு சில ஏழை மாணவர்களுக்கு பள்ளிக்கட்டணம் கட்டுகிறோம். எங்களைப் பார்த்து வேறு சில நண்பர்களும் மாதாமாதம் ஒரு தொகையை அடுத்தவர் படிப்புக்கு என ஒதுக்குகின்றனர். இதையே ஒரு பிரபலம் செய்தால், அவருக்கு இருக்கும் பப்ளிசிட்டி காரணமாக பலருக்கும் விஷயம் போய் சேர்கிறது. பலரும் உதவ முன்வருகின்றனர். இதில் என்ன குறைக் கண்டீர்கள்.
//மேலும் பலர் உதவ முன்வருவதால் அதிகப்பேர் பயன் அடைகிறார்களே..//
இப்படி அதிகம் பேர் பயனடைந்தால் கட்சிக்கு யார் கொடி பிடிப்பார்கள்
என்ன சார் நீங்க
பதிலை 6.1.1-இல் காண்க.
//மேலும் பலர் உதவ முன்வருவதால் அதிகப்பேர் பயன் அடைகிறார்களே..//
//இப்படி அதிகம் பேர் பயனடைந்தால் கட்சிக்கு யார் கொடி பிடிப்பார்கள்
என்ன சார் நீங்க//
வெறுமனே கொடி பிடிக்கத்தான் அதிகம் பேர் வேணும்னா அதற்கு நிறைய கட்சிகள் இருக்குது. பெரும்பாண்மை மக்கள் உதவி வேண்டியும், ஒருசிலர் உதவும் நிலையிலும் இருப்பது எதைக் காட்டுகிறது? மேலும் இதே நிலையை தொடர்ந்து விளம்பர உத்திகளை, மேட்டுக்குடி மனநிலையை வளர்க்கும் பண்பாட்டை உயர்த்தி பேசுவது இவர்கள் யார் என்று காட்டுகிறது. அதுவுமில்லாமல் நமக்கு கொடி பிடிக்க யாரும் இருக்கக்கூடாது என்று நினைக்கும் நல்ல குணமும் வெளிப்படுகிற்து, மற்றபடி உடும்பன் விமர்ச்சனம் வருமா…?
There is merit in your analysis about the status of educational system in India. While the govt has legislated right to free and compulsory education for disadvantaged , it does not have the political will to implement it in all seriousness. Because it is more interested in privatisation of education from primary school level So, it does not allot increased funds for education. The fact that it has budgetary allotment of just 3% for billion plus population, I find the legislaion of free and compulsory education a farce. Since in tamilnadu cinema play such a dominant role in collective psyche, the actions of such actors are given more coverage in the media. Even if these actors use education to promote their career, it can’t be faulted. Afterall a few hundreds of students are benefited from such constructive. The problem with revolutionary groups is that they ignore the role of constructive work in mobilising people. Hence they are dismissed as disgruntled lot, who do not have any constructive programme for immediate goals, eventhough the criticism against privatisation of education is quite valid-sundaram
ஒரு பிரச்சனையை வித்யாசமான முறையில் அணுகி, அலசி விழிப்புணர்ச்சி எற்பதியிருக்கும் வினைக்கு பாராட்டுக்கள்!
ஜென்டில்மேன் படத்தில் வரும் கோர்ட் காட்சி:
முதல்வர்: “கனம் கோர்ட்டார் அவர்களே…நான் அரசியலுக்கு வந்த போது கல்வி மந்திரி பதவி தான் வகித்தேன். அதனால் தான் இன்றும் கூட அந்த பதவியை என்னுடனே வைத்துள்ளேன். எனது ஆட்சிக்காலத்தில் கல்விக்காக ஒரு படி முன்னே சென்று படிக்கும் மாணவர்களுக்கு ‘படிப்பதற்க்கு சம்பளமாகவே’ மாதம் ரூ.50 வழங்க ஏற்பாடு செய்துள்ளேன்”….
அர்ஜுன்: “தூதூ…. கல்வியை விக்க நீங்க யாருடா?”
கட்டுரையின் சாரம்சத்தை விட்டு விட்டு நடிகர்களின் தாராள புத்தியைப் பற்றிப் பேசுகிறார்கள் பலர்.ஒரு அரசு செய்ய வேண்டிய கடமைகளை சில தனி நபர்கள் கொஞசம் செய்வதன் மூலம் சிலருக்குப் பயன் கிடைக்கிறது என்பது உண்மைதான்.ஆனால் அதனால் விளையும் பயன் என்ன?ஒரு அரசு மக்கள் நலனை மட்டுமே முன்வைத்து அதற்காகப் பாடுபடும் போது அதில் ஏற்படும் முட்டுக்கட்டைகளை நீக்க மக்கள் உதவுவது நியாயமானது. நமது மேன்மை தங்கிய அரசோ யாரை வாழ வைக்கப் போராடுகிறது?கல்வி முதலாளிகளை அல்லவா.அன்புள்ளத்தோடு இந்த நடிகர்கள் செய்யும் இந்த சேவை முதலில் கல்வி முதலாளிகளுக்குத் தானே போய் சேருகிறது.அரசும் இவர்களும் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள்.அரசு தான் ஒப்புக்கொண்ட கடமையைச் செய்யாமல் இந்த நல்லவர்களிடம் தள்ளிவிடுகிறது.அதை நாமும் பல பேர் ஆதரிக்கிறோம்.ஓட்டுப்போட்ட மக்களுக்கு நல்லது செய்யாத அரசு இலவசங்களைக் கொடுத்து ஏமாற்றி கையேந்திகளாக மாற்றி வைத்திருப்பதையும் பலர் நல்லது என்று சொல்கிறார்கள்.பிச்சைக்காரனைப் போல காலில் விழுந்து ஓட்டு வாங்கிப் போனவன்கள் நம்மைப் பிச்சைக்காரர்களாக மாற்றுகிறார்களே என்று ஆத்திரம் வர வேண்டாமா? நம்மை ஆளுகிற உரிமையை நம்மிடமிருந்து வாங்கிப் போனவர்கள் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யவைப்பதே சரியானது அல்லவா?
idhayellam anaikki kamaraajara thokkadikumbothe yosanai panni irukkanum,ippo polambai enna aaga poguthu?
ஐயா, நீங்க நம்மை ஆளும் அரசைப் பற்றிச் சொல்வது நூறு சதவிகிதம் சரிதான், ஆனால் அதை எதிர்த்து யாரும் குரல் கூட கொடுக்காத நிலையில், போராடி ஜெயித்து கருணாநிதி வைத்தியம் பார்க்கும் அதே அப்போலோவில் சாதாரண குடிமகனும் வைத்தியம் பார்த்துக் கொள்ளும் காலம் என்றைக்கு வரப் போகிறது? அதுவரை வெறுமனே வாழாதிருக்க வேண்டுமென்று சொல்கிறீர்களா? இன்றைக்கு பத்து பேர் படித்து நல்ல வேலைக்குப் போனால் கூட அந்த குடும்பங்கள் காப்பாற்றப் படுகின்றன அல்லவா? நீங்கள் சொல்லும் பொற்காலம் வரும் அன்று இந்த நடிகர்களையும் எந்த உதவியும் செய்ய வேண்டாமென்று நிறுத்தி விடலாம்.
The problem is primary education and the issue of money.The whole administration is dirty and IMO,Mu Kaa is the one and only reason for corrupting them and using them for hiw own benefit.
There are two type of people in the world
1) Who does what they can do.
2) Just complain about the govt and the world.
In this Surya and Sasikumar are first category.
It is evident which category author belongs to.
அரசாங்க வங்கிகள் கல்விக்கடன் வழ்ங்குவதும் நடிகர்கள் செய்வதும் ஒன்று
தான்.நடிகர் சூரியாவாது அவர் கைக் காசை கொடுக்கிறார். சசிக்குமார் தந்திரமாக ஊரான் காசைவசூலித்துத் தருகிறார். முதலமைச்சர் கனவு இருக்கிறதோ என்னவோ. தனி நபர் சார்ந்த சிந்தனை, செயல்கள் தவறானவை உள்னோக்கமுடையது. சங்கர் எந்த கேட்டகிரி என்று சொல்லவில்லை.(32)
குழந்தைகள் கல்வி கற்க உதவி செய்யும் சூர்யா சசி போன்றோரை ஊக்குவிக்கவேண்டும். வினவு எத்தனை குழந்தைகளுக்கு உதவி செய்தது?
“நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை”
முதலில் அவர்கள் உன்னைக் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்.
பின் உன்னைப் பார்த்துச் சிரிப்பார்கள்.
பின் உன்னுடன் சண்டையிட வருவார்கள்.
பின்… நீ வெற்றி பெற்றிருப்பாய்.” — என்றார் மகாத்மா காந்தி.
மற்றவர்கள் செய்வது தப்பு என்று சொல்லும் வினவு சரியானதை செய்து காட்ட முடியுமா?? வெறும் பேச்சு, மற்றவர்கள் மீது குறை என்று வெறும் வெத்து எழுத்தில் சம்பாதிப்பதை, இப்படி உருப்படியாக, சரியான வழி என்று வினவு நினைக்கும் வழியில் செயல்படுத்தலாமே!! மற்றவர்கள் மீது குற்றம் சொல்வது எழது, ஆனால், அவர்கள் செய்யும் ஒரு சிறிய செயல் அளவு கூட செய்வது கடினம் . இதை வினவு புரிந்து கொள்ள வேண்டும்!
வினவுதளத்திற்கு முதன்முறையாக அட்டென்டன்ஸ் போட்டிருக்கும் தங்களை வருக வருகவென வரவேற்கிறோம்.
surya&sasiyum avargalal mudinthathi seigirargal arasanthaiyum matra amaipugaliyum yedhirthu avargal poraduvathrku thunichal illamal irukkalam innikhzhvinal vilaivathu avargaluku vilambarmum sila yeazhi manavargal payan adaivathu thanea adhuirukkattum namakku yedhirthu porada thunichal irukka??
sir / madam,
neenga ivlo solreangalae ungalala ithu pola(i mean not ur child) 1 childyavathu padikka vaikannunu thonicha? illa padikka vachuttu erukeangala?
padikrathuku help panna kudiyavangala panna vidunga pls…ipdilam kandathum kilappi vidatheenga…
encourage pannatalum pls help pannitu erukuravangala discourage panatheanga…
அருமையான பதிவு. ஆனால் நம் சமூகம் முன்னேற அடுத்தவரை குறை கூறுவதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமான செயல் ஏதெனும் செய்ய வேண்டும். அரசு பள்ளி கல்வி தரம் என்பது, ஆசிரியர்,மாணாக்கர்,பெற்றோர் கொண்ட ஒரு கூட்டு முயற்சியில் ஏற்பட வேண்டும்.இன்றைக்கும் தனியார் பள்ளிகளை விட அதிக சம்பளம் வாங்கும் ஆசிரியர் பங்கும்,நாமும் முன்னேற வேண்டும் என்ற லட்சியமாணவனும்,என் சந்ததி நன்றாக வர வேண்டும் என்ற பெற்றோரின் கடமைஉணர்வும் சேர்ந்தால்தான் மாற்றம் ஏற்படும். இலவசங்கலால் பெற்றோரின் கடமை மறைக்கபடுகிறது. மதிப்பெண் சலுகையால் மாணவனது திறமை நசுக்கபடுகிறது. 35 மதிப்பெண் போதும் என்பதிற்கு பதிலாக 80 மதிப்பெண் பெற முதல் வகுப்பில் இருந்தே அதிக பயிற்சி கொடுக்க வேண்டும். பலகீனமானவர்களுக்கு சத்தான ஆகாரமும் கசப்பு என்றாலும் நல்ல மருந்தும் கொடுப்பதை விட்டுவிட்டு உன் பலத்திற்கு இவ்வளவு ஆகாரம் போதும் என்று சொன்னால் இன்னும் 10 தலைமுறைகள் ஆனாலும் இந்த நிலை மாறாது. மனிதரில் உயர்வு தாழ்வு பிறப்பில் இல்லை நாம் வாழும் வாழ்க்கையில்தான் இருக்கிறது. சமூகநீதி பேசும் தலைவர்கள்/ போரட்டகாரர்கள் தங்கள் பாக்கெட்டை நிறப்புவதை விட்டுவிட்டு 10 பிள்ளைகளுக்கு ட்யூசன் சொல்லி தந்தால் யாரும் யாரையும் குறை சொல்ல தேவைப்படாது. எந்தவித வாய்ப்பும் இல்லாத அடக்குமுறை கொடுமையில் கடந்த நூற்றாண்டிலேயே டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் வெற்றியாளராய் வர முடிந்தது என்றால் இன்று முடியவில்லை என்பதற்கு முதல் காரணம் நாமே. போராட்டம்,உரிமை என்ற பெயரில் நம்மைநாமே ஏமாற்றிக்கொண்டிருந்தால் 100 ஆண்டுகள் ஆனாலும் சமூக நீதி ஏற்பட போவதில்லை மாறாக சமூக விரோதம்தான் விளையும். கருப்பு பணம் என்பது திருட்டு பணம் அல்ல. உழைக்காமல் பெரும் பணம்தான் திருட்டு பணம்.