இழப்பதற்கு ஏதுமற்ற, உற்பத்திக் கருவிகள் எதனையும் உடைமையாகக் கொண்டிராத, தனது உழைப்புச் சக்தியைத் தவிர விற்பதற்கு ஏதுமில்லாத பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கை திரும்பும் திசையெல்லாம் பெருகிக் கொண்டிருக்கிறது. நசிப்பிக்கப்பட்ட விவசாயத்திலிருந்தும், பறிக்கப்பட்ட காடுகளிலிருந்தும், தோற்றுச் சரிந்த கைவினைத் தொழில்களிலிருந்தும் உடைமை நீக்கம் செய்யப்பட்ட மக்கள், கிராமத்திலிருந்து நகரம் நோக்கி விசிறியடிக்கப்பட்டுத் தொழிலாளி வர்க்கமாக உருமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை அமைப்புரீதியாகத் திரட்ட வேண்டியிருக்கிறது.
ஏற்கெனவே அமைப்பு ரீதியாகத் திரண்டிருக்கும் தொழிலாளி வர்க்கப் பிரிவினரோ போலி கம்யூனிஸ்டுகளால் தொழிற்சங்கவாதத்தில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். பிற ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரைக் காட்டிலும் முன்னேறிய வர்க்கம் என்ற தனது தகுதியையும், மற்றெல்லா வர்க்கங்களுக்கும் தலைமை தாங்கவேண்டிய பொறுப்பையும் இவர்கள் உணரவில்லை. பொதுத்துறைகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பலி கொடுக்கும் நடவடிக்கைகள், இயற்கை வளங்களைத் தரகு முதலாளிகளுக்கு இரையாக்கும் சட்டங்கள், ஏகாதிபத்திய முதலாளி வர்க்கத்துக்கு வழங்கப்படும் சலுகைகள், அவர்கள் நேரடியாகவே அரசின் அங்கமாக மாறிவரும் நிகழ்ச்சிப்போக்குகள் போன்றவை குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதுடன், மறுகாலனியாக்க கொள்கைகளுக்கு எதிராகத் தன்னெழுச்சியாக நடக்கும் போராட்டங்களிலிருந்தும்கூட இவர்கள் விலகியே நிற்கிறார்கள்.
இன்னொருபுறம், தொழிலாளி வர்க்கத்தின் அணிவரிசையில் புதிதாகச் சேர்ந்து கொண்டிருக்கும் இளம் தொழிலாளர்கள், தங்கள் மீது திணிக்கப்படும் நவீன கொத்தடிமைத்தனத்துக்கு எதிராகப் போர்க்குணமிக்க போராட்டங்களில் இறங்குவதைக் காண்கிறோம். பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுகின்ற, ஏற்கெனவே அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட, சலுகை பெற்ற மேட்டுக்குடி தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கை முறையிலிருந்தும், சிந்தனை முறையிலிருந்தும் பெரிதும் வேறுபட்ட இந்தத் தொழிலாளர்கள், விலை உயர்வு, கட்டண உயர்வு மற்றும் தனியார்மய நடவடிக்கைகள் உள்ளிட்ட மறுகாலனிய பொருளாதாரத் தாக்குதல் ஒவ்வொன்றாலும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். போராட்டத்தின் முன்னணியில் நிற்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.
மீள முடியாத நெருக்கடியில் உலக முதலாளித்துவம் மூழ்கி வரும் இன்றைய சூழலில், தொழிலாளி வர்க்கத்திற்கு அதன் வரலாற்றுப் பாத்திரத்தைப் புரிய வைப்பதும், புரட்சியின் முன்னணிப் படையாக அதனை அணிதிரட்டி நிறுத்துவதும் புரட்சியாளர்களின் கடமை.
இதனை உணர்த்தும் வகையில், ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இந்த மே தினத்தையொட்டி வெளியிட்டுள்ள பிரசுரம், பு.ஜ.வாசகர்களுக்காக, முழுமையாக வெளியிடப்படுகிறது.
ஆசிரியர் குழு
புதிய ஜனநாயகம்
“தனியார்மயக் கொள்ளையைத் தடுக்க மறுகாலனியாக்கத்தை மாய்க்க நக்சல்பாரியே ஒரே மாற்று” புரட்சிகர அமைப்புகளின் மே தினச் சூளுரை
மே தினம் முதலாளி வர்க்கத்திற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கம், தனது உரிமைகளை இரத்தம் சிந்திப் போராடி நிலைநாட்டிக் கொண்ட நாள். எட்டு மணி நேர வேலை என்ற உரிமை மட்டுமல்ல; குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம், இலவசக் கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை உலகெங்கிலும் உழைக்கும் மக்கள் போராடித்தான் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு போராடிப் பெற்ற பல உரிமைகள் இன்று நேரடியாகப் பறிக்கப்படுவதுடன், பல மறைமுகமான வழிகளிலும் நம் மீதான சுரண்டலும் அடக்குமுறையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது பால், பேருந்து, மின் கட்டண உயர்வு என்ற பெயரில் மாதம் தோறும் ஏழை, நடுத்தரக் குடும்பம் ஒவ்வொன்றிடமிருந்தும் ரூ.2000/ க்கும் மேல் கசக்கிப் பிழிந்து கஜானாவை நிரப்பும் திட்டத்தை அறிவித்திருக்கிறார், பாசிச ஜெயலலிதா. கஜானாவை கருணாநிதி காலி செய்துவிட்டதாகவும் அதனை நிரப்புவதற்கும் போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரியம் போன்றவற்றை இலாபத்தில் நடத்துவதற்கும் கட்டண உயர்வு தவிர்க்க இயலாதது என்றும் நியாயப்படுத்துகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே கட்டண உயர்வு என்ற பெயரில் இந்த வழிப்பறிக் கொள்ளையை கருணாநிதி நடத்தியிருக்க வேண்டுமென்றும், அவர் செய்யத் தவறிய இந்தப் புனிதக் கடமையைத் தான் நிறைவேற்றியிருப்பதாகவும் சொல்லிப் பூரிக்கிறார். இந்த வழிப்பறியை ஜெயலலிதாவின் துணிச்சல் என்றும் நிர்வாகத் திறமை என்றும் போற்றுகின்றன ஊடகங்கள்.
கஜானா காலி என்றவுடனே நாமும் அதிர்ச்சி அடைகிறோம். கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று எண்ணிக் கொள்கிறோம். நம் வீட்டின் கஜானா காலியாகி, கடனில் தவிக்கிறோமே, அதிரடியாக நாம் நமது சம்பளத்தை உயர்த்திக் கொள்ள முடியுமா? அரசாங்கம்தான் உயர்த்திக் கொடுக்குமா? இரண்டுமில்லை. எனவே, அதிரடியாக நம் வாழ்க்கைத் தரத்தைத்தான் குறைத்துக் கொள்கிறோம். இனி குறைக்கக்கூடிய செலவு எதுவும் இல்லை என்பதால், கூடுதலாக உழைக்கத் தொடங்குகிறோம். வீட்டு வேலை செய்யும் பெண்கள் கூடுதலாக இரண்டு வீடுகளில் வேலை செய்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளர்கள் மேலும் சில மணி நேரம் உழைக்கிறார்கள், பலர் மனைவி, பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகிறார்கள், கடன் வாங்குகிறார்கள், அடைக்க முடியாதவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
பால், தண்ணீர், உணவு, கல்வி, மருத்துவம், மின்சாரம், பேருந்து போன்றவையெல்லாம் சேவைத்துறைகள். மக்களுக்கு இச்சேவைகளை வழங்குவது அரசாங்கத்தின் கடமை. இலாபம் ஈட்டுவது இவற்றின் நோக்கமாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. இலாபமீட்டி கஜானாவை நிரப்புவதையே நோக்கமாக கொண்ட நிறுவனத்தின் பெயர் அரசாங்கமல்ல கம்பெனி. ‘காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவை சாத்தடி’ என்று கூறுபவரின் பெயர் முதல்வர் அல்ல முதலாளி.
கஜானாவை நிரப்பி, தொழில் தொடங்கி, வேலைவாய்ப்பைப் பெருக்கித் தமிழகத்தை முதல் மாநிலமாக்கும் உன்னதமான நோக்கத்துக்காகத்தான், இன்றைக்கு மக்களின் தாலியை அறுப்பதாக விளக்கமளிக்கிறார் அம்மா. ஆட்டுக்குத் தீனி போட்டு வளர்ப்பது கறிக்காகத்தான். கட்டணத்தை ஏற்றுவதும், பொதுத்துறை நிறுவனங்களின் இலாபத்தை உயர்த்துவதும் அவற்றைத் தனியார்மயமாக்குவதற்குத்தான். கணிசமாக இலாபமீட்டுகின்ற பொதுத்துறை வங்கிகள், காப்பீடு, பெல், என்.எல்.சி போன்ற நிறுவனங்கள் அறுத்துக் கூறு கட்டப்பட்டு, பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்கப்படுவதை நாம் காணவில்லையா?
இந்தக் கட்டண உயர்வால் உண்மையில் ஆதாயம் அடைபவர்கள் யார்? ஏற்கெனவே இலாபமீட்டிக் கொண்டிருந்த பேருந்து, பால்பண்ணை முதலாளிகளும் விலையை உயர்த்தி விட்டார்கள். அவர்களது இலாபம் பன்மடங்காகிவிட்டது. டாடா, அம்பானி, அடானி, அப்போலோ போன்ற கார்ப்பரேட் மின் உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரத்துக்கு என்ன விலை கேட்கிறார்களோ, அதனை மக்களிடமிருந்து வசூலித்துக் கொடுப்பதற்காகத்தான் மின்கட்டணம் உயர்த்தப்படுகிறது.
பத்து இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் தள்ளுபடி செய்து, அடிமாட்டு விலையில் நிலக்கரிச் சுரங்கங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தந்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு. நிலக்கரியை இலவசமாகக் கொடுத்து விட்டு, முதலாளிகள் சொல்லும் விலைக்கு அவர்களிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது. எண்ணெய்க் கிணறுகளை அம்பானி போன்ற தரகு முதலாளிகளுக்குத் தந்து விட்டு, நம் பொதுச்சொத்தான எண்ணெயைச் சர்வதேசச் சந்தை விலையில் அம்பானியிடமிருந்து வாங்குகிறது. தமிழகத்தில் முதலீடு செய்திருக்கும் ஜப்பானிய முதலாளிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சென்னையில் தனியாக ஒரு நகரத்தையே அமைத்துக் கொடுக்கிறார் ஜெயலலிதா. பன்னாட்டு நிறுவனங்களுக்கு மானியமாகவும் வரிச்சலுகையாகவும் பல ஆயிரம் கோடிகளை தி.மு.க. அரசும் வாரி வழங்கியிருக்கிறது.
எனினும், முதலாளிகளுக்கு வாரிக்கொடுத்து கஜானாவைக் காலி செய்துவிட்டார் என்று ஒருபோதும் ஜெயலலிதா கருணாநிதியை குற்றம் சாட்டியதில்லை. கஜானாவை நிரப்புவதற்காக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கருணாநிதி வழங்கிய சலுகைகளை ரத்து செய்ததும் இல்லை. பன்னாட்டு நிறுவனங்களும் தரகு முதலாளிகளும் மக்களைக் கொள்ளையிடுவதற்கு வழிவகை செய்து கொடுக்கும் தரகனாகவும், கங்காணியாகவுமே ஜெ.அரசு செயல்படுகின்றது. முதலாளிகளுக்கு வாரிக் கொடுப்பதற்காகவும், தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடும் மக்களை ஒடுக்க, போலீசு படைகளை நவீனமயமாக்குவதற்காகவும்தான் அரசு கஜானாவின் பணம் பயன்படுத்தப்படுகிறது.
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்றழைக்கப்படுகின்ற மறுகாலனியாக்க கொள்கையை அமல்படுத்துவதில் ஓட்டுக்கட்சிகளிடையே எந்த வேறுபாடும் இல்லை. அது மட்டுமல்ல; இக்கட்சிகளின் உள்ளூர் தலைவர்களில் தொடங்கி, அமைச்சர்கள், உயர் அதிகார வர்க்கத்தினர் வரை அனைரும் இந்த மறுகாலனியாக்கக் கொள்கையில் தொழில்ரீதியில் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள். காண்டிராக்டர்களாக, மணல் மாஃபியாக்களாக, ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக, தண்ணீர் வியாபாரிகளாக, பேருந்துபால்பண்ணை முதலாளிகளாக இருக்கும் இவர்கள், கட்டண உயர்வு, விலை உயர்வு ஒவ்வொன்றிலும் ஆதாயம் அடைகிறார்கள். இன்றைக்கு ஆயிரம் கோடி, இலட்சம் கோடி எனத் தினந்தோறும் சந்தி சிரிக்கும் ஊழல்கள், தனியார்மயம் என்பதே பகற்கொள்ளைதான் என நிரூபித்திருப்பதுடன், தரகுமுதலாளிகளுடன் ஓட்டுப் பொறுக்கிகள் வைத்திருக்கும் தொழில் ரீதியான கூட்டையும் அம்பலமாக்கியிருக்கின்றன.
உழைக்கும் மக்களிடமிருந்து கசக்கிப் பிழிந்து எடுக்கப்படும் பணம் அரசாங்க கஜானாவை மட்டுமல்ல, முதலாளிகளின் பணப்பெட்டியையும் நிரப்புகிறது. டாடா, அம்பானி, மிட்டல் போன்ற கோடீசுவரர்களின் சொத்து என்ன வேகத்தில் உயர்கிறதோ, அதே வேகத்தில் ஏழைகளின் எண்ணிக்கையும் உயர்கிறது. எனினும், பன்னாட்டு கம்பெனிகளின் பொருட்களையும், ஆடம்பரங்களையும் நுகரும் வசதி கொண்ட மேல்தட்டுப் பிரிவினரைப் பற்றி மட்டுமே அரசு கவலைப்படுகிறது. இவர்களுக்கான மால்களும், புதுப்புது கார்களும், கேளிக்கை விடுதிகளும், நவீன நுகர்பொருட்களும் பெருகுவதைக் காட்டி, நாடு முன்னேறுகிறது என்று நம்மையும் நம்பச் சொல்கிறது.
நாமும் நம்புகிறோம். கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகிய அனைத்துக்கும் ஏதோ ஒரு நியாயம் இருப்பதாகவும் கற்பித்துக் கொள்கிறோம். நம்மை நாமே வருத்திக் கொள்வதன் மூலம் இந்தத் துன்பத்திலிருந்து மீள முயல்கிறோம். நூறில் ஒரு நபருக்கு அரிதாக அடிக்கும் ‘அதிருஷ்டத்தை’ பார்த்து, அப்படி ஒரு வாய்ப்பு நமக்கும் கிடைக்காதா என்று ஏங்குகிறோம். 99 சதவீத மக்களின் நிரந்தரமான ‘துரதிருஷ்டத்துக்கான‘ காரணத்தைக் காண மறுக்கிறோம். தி.மு.க., அ.தி.மு.க. என்று மாற்றி மாற்றி ஓட்டுப் போடுவதன் மூலம் நமது கோபத்தைக் காட்டுகிறோம்
மக்களின் இந்த ஏமாளித்தனத்தைப் பயன்படுத்திக் கொண்டுதான், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். இன்று தி.மு.க. அடுத்த வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. மற்ற ஓட்டுப் பொறுக்கிகளும் தேர்தல் எனும் பம்பர் குலுக்கலுக்காகக் காத்திருக்கிறார்கள். நம்மைக் கொள்ளையிடும் தனியார்மயம்தாராளமயம்தான் எல்லா ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளின் கொள்கை. ஓட்டுப் பொறுக்கி அரசியல் மூலம் இந்தத் தனியார்மயத்தை ஒழித்துவிடப் போவதாக யாரேனும் சொன்னால், அதைவிடப் பெரிய பித்தலாட்டம் இல்லை. அப்படிப் பேசிவந்த போலி கம்யூனிஸ்டுகளும், தனியார்மயத்துக்கு எதிராக சவடால் பேசும் எல்லா ஓட்டுப்பொறுக்கிகளும் அம்பலமாகி நிற்கிறார்கள்.
இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளின் மூலம் மக்கள் தமது பிரச்சினைகள் எதற்கும் தீர்வு காண முடியாது என்ற உண்மைக்கு கூடங்குளம் மக்கள் போராட்டமும், முல்லைப்பெரியாறு உரிமைக்காகத் தமிழக மக்கள் நடத்திய போராட்டமும் சான்று பகர்கின்றன. வெற்றியோ தோல்வியோ ஓட்டுப் பொறுக்கிகளை நம்பக்கூடாது என்கின்ற மக்களின் பொதுக்கருத்தை இப்போராட்டங்கள் பிரதிபலிக்கின்றன.
சட்டத்தின் ஆட்சி, நீதிமன்றத்தின் மூலம் நீதியைப் பெறுவது என்ற முயற்சிகள் எல்லாம் தோற்றுப் பல்லிளித்துப் போய்விட்டன. காவிரி, முல்லைப் பெரியாறு தீர்ப்புகளை மீறிய கருநாடக, கேரள அரசுகளின் ஒரு முடியைக் கூட உச்ச நீதிமன்றத்தால் அசைக்க முடியவில்லை. தங்களைப் பணிநீக்கம் செய்தது செல்லாது என்று உயர்நீதி மன்றத்தில் வாதாடி வெற்றி பெற்ற மக்கள் நலப் பணியாளர்கள், இன்னும் தெருவில் தான் நிற்கிறார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தை ஜெயலலிதா மதிக்கவில்லை. எந்த மாநில அரசும் எங்கள் தீர்ப்புகளை மதிப்பதில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளே கோமாளிகளைப் போலப் புலம்புகிறார்கள்.
பொய், பித்தலாட்டம், சட்டவிரோதம், கிரிமினல் வேலைகள் ஆகிய அனைத்தையும் சட்டம் ஒழுங்கு என்ற பெயரால் அரங்கேற்றுகின்றது போலீசு. குற்றம் நிரூபிக்கப்படாமலேயே போலி மோதலில் சுட்டுக்கொன்றுவிட்டு, செத்தவர்கள் கொள்ளையர்கள் என்று சாதிக்கிறது. சட்டத்தின் ஆட்சியை மதிக்காத கேரள அரசை எதிர்த்துப் போராடினால், போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள் இந்த ‘சட்டத்தின் காவலர்கள்’. ‘அணு உலை வேண்டாம்‘ என்று உண்ணாவிரதம் இருக்கும் மக்கள் மீது ராஜத்துரோகம், சதி, அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் போன்ற ஆயுள்தண்டனைக் குற்றங்களைச் சுமத்திச் சிறையில் அடைக்கிறது போலீசு. அறவழி, அமைதி வழி என்பதெல்லாம் காரியத்துக்கு ஆகாதவை மட்டுமல்ல, அவை நம்மைக் காயடிக்க மட்டுமே பயன்படுபவை என்றே நம் அனுபவங்கள் காட்டுகின்றன.
மாற்றுப் பாதை எது, மாற்றுப் போராட்ட முறை எது என்பதே நம் முன் உள்ள கேள்வி. கம்யூனிசத்துக்கு எதிராகக் கடைவிரிக்கப்பட்ட காந்தியம் உள்ளிட்ட எல்லா இசங்களும் பல்லிளித்துவிட்டன. தலித்தியம், பெரியாரியம் என்ற பேச்செல்லாம் ஓட்டுப்பொறுக்கிப் பிழைப்பதற்கும், ஒடுக்கப்பட்ட மக்களை விற்பதற்குமே என்பது அம்பலமாகிவிட்டது. சொல்லிக் கொள்ளப்படும் தேர்தல் ஜனநாயகம் கிழிந்து கந்தலாகித் தொங்குகிறது.
நம்மையும் நம் உரிமைகளையும் இந்த நாட்டையும் காப்பாற்ற வல்ல மாற்றுப் பாதை நக்சல்பாரி புரட்சிப் பாதை ஒன்றுதான். தொழிலாளி வர்க்கத்துக்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் மீது பற்று கொண்ட அனைவருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர்கள் நக்சல்பாரிகள் மட்டும்தான். ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளித்துவம் நடித்து வந்த நாடகம் அதன் கடைசி காட்சிக்கு வந்துவிட்டது. உலக முதலாளித்துவத்தின் தலைமையான அமெரிக்காவிலேயே ‘முதலாளித்துவம் ஒழிக’ என்ற மக்களின் போர்க்குரல் முன் எப்போதும் இல்லாத கோபத்துடன் ஒலிக்கத்தொடங்கிவிட்டது. பிரான்சு, பிரிட்டன், கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் என காட்டுத்தீயைப் போல ஐரோப்பா கண்டம் முழுவதும் பற்றிப் படர்கிறது மக்கள் போராட்டம்.
முதலாளி வர்க்கம் மூர்க்கத்தின் கொடுமுடியில் வீற்றிருந்த அதன் துவக்க காலத்தில், தங்கள் இன்னுயிர் தந்து உலகத் தொழிலாளி வர்க்கத்தின் உரிமையை நிலைநாட்டினார்கள் மேதினத் தியாகிகள். இன்று மரணப் படுக்கையில் கிடக்கும் முதலாளித்துவம், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தொழிலாளி வர்க்கத்தின் உதிரத்தை உறிஞ்சுகிறது. விலை உயர்வு, உரிமை பறிப்பு, சுரண்டல், அடக்குமுறை, பொதுச்சொத்துகள் அபகரிப்பு, ஆக்கிரமிப்புப் போர்கள் ஆகிய அனைத்தும் காட்டும் உண்மை இதுதான்.
அன்று உலகத் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக்காக, நெஞ்சுரத்துடன் தூக்கு மேடையை மிதித்தனர் சிகாகோ தொழிலாளர்கள். இன்று மரணத்திலிருந்து மீளத் துடிக்கிறது முதலாளித்துவம் எனும் மிருகம். அதன் நெஞ்சின் மீது ஏறி அமர்ந்து, குரல்வளையை நெரித்து, அதனைச் சவக்குழிக்கு அனுப்புவோம்!
_________________________________________
__________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
- அலைபேசி – (91) 97100 82506
- மின்னஞ்சல் – vinavu@gmail.com
மேதினம் 2012 பேரணி காட்சிப்பதிவுகள் சில…
தலித்தியம், பெரியாரியம் இவை இரண்டும் நம்
மக்களினரிவை தூண்டிவிட்டு நக்சல்பாரி பாதைக்கு வழிவகுக்கும்.
அண்ணே, நெனைப்பு பொழைப்பை கெடுக்காம்ம இருந்தா சரி.
அது சரி நீங்க நல்லா கனா காணுங்க…. ஜனநாயகம்தான் வீடு வரைக்கும் கிழியுதே?
நக்சல்பாரிகள் என்றால் யாரை சொல்கிறீர்கள் ? மாவோயிஸ்டுகளையா ? தெளிவாக சொல்லவும். மேலும் அவர்களிலும் இரண்டு மூன்று குழுக்கள் உள்ளன. அதில் எதை ‘ஆதரிக்கிறீர்கள்’ ?
மாவோயிஸ்டுகள் தலைமையில் போராடினால், சரியான தீர்வு கிடைக்கும் என்று என்ன கியாரண்டி ? கடந்த 100 ஆண்டு கால உலக வரலாறு மற்றும் சீனாவின் வரலாறு மாவோயிசத்தின் கொடுமைகளை, தவறுகளை தான் காட்டுகிறது. அதே ‘தீர்வை’ தான் மீண்டும் சொல்கிறீர்கள் ? வறுமை, ஊழல், வேலை வாய்ப்பின்மை மற்றும் ஏற்ற தாழ்வுகளை அகற்ற மாவோயிசம் தான் ஒரே வழியா என்ன ?
சரி, இந்த தனியார்மயத்தை ‘எதிர்பதாக’ சொல்கிறீர்கள் ? What exactly do you mean ? பல துறைகளை 1991க்கு பிறகு தனியார்கள் அனுமதிக்க்பட்டுள்ளனர். உதாரணமாக தொலைபேசி, தொலைகாட்சி மற்றும் வானொலி, விமான சேவை, இன்சுரன்ஸ் போன்ற துறைகளில் தனியார்களை அனுமதித்தே இருக்க கூடாது என்கிறீர்களா ? அதாவது 1980கள் வரை இருந்த நிலையே இன்று வரை தொடர்ந்திருக்க வேண்டும் என்கிறீர்களா ? தூர்தர்சன் , ஆல் இந்தியா ரேடியோ, ஏர் இந்தியா, பி.எஸ்.என்.எல் மட்டும் தான் இன்று வரை தொடர்ந்திருக்க வேண்டும் ; த்னியார்களை அனுமதித்தே இருக்க கூடாது என்கிறீர்களா ?
கல்வி, மருத்துவ துறைகளில் தனியார்மயம் என்கிறீர்கள் ? கடந்த 20 வருடங்களில் இத்துறைகளுக்கான அரசு மான்யங்கள் மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடுகளின் trend எப்படி உள்ளது ? குறைந்துள்ளதா அல்லது மிக அதிகரித்துள்ளதா ? அதையும் மீறி ஏன் மக்கள் தனியார்களை நாடுகின்றனர் ?
விலைவாசி உயர்வுக்கான காரணிகள் பற்றி உங்கள் பார்வை தவறு. உண்மையான காராணிகள் வேறு. மேலும் 60கள், 70கள் நடந்து விலை உயர்வுகளை பற்றியும் ஒப்பிடவும்.
நீங்கள் சொல்வது போல் தனியார்மயம் தொலை தொடர்பு சேவை, TV இவையெல்லாம் வந்துள்ளது அதே சமயம் அவற்றோடு ஊழலும் வந்துள்ளது… ஆனால் தனிமனித சுயசார்பு பொருளாதாரம் வீழ்ந்துள்ளது..
வினவில் ‘தனியார்மயம்’ என்று வரும் போதெல்லாம் நீங்கள் 1980 என்று செல்கிறீர்கள், 1980 இல் நாட்டின் நிலை சரியில்லை என்றால் அதை போக்க சரியான நிவாரணம் தான் தேவையே ஒழிய, எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதல்ல…
உங்களை பொருத்தவரை தனியார்மயத்தை தூக்கி பிடிக்கவே விரும்புகிறீர்கள்.. ஏனென்றால் உண்மையான ஜன நாயகத்தை ஆதரித்தால்/விரும்பினால் உங்களால் தனியார்மயத்தை ஆதரிக்கவே முடியாது.. உடனே ‘crony capitalism’ என்று சப்பை கட்டு கட்டாதீர்கள்..
திரு. அதியமான் ஏற்கனவே சொல்லிட்டேன் புதிய ஜனநாயக புரட்சி கட்சி திட்டத்தை வாங்கி படிங்கன்னு ஆனால் பாருங்க படிக்கவே மாட்டீங்கிறார்
இனிமேல் தனியார் மயம் தாராளமயம் ஓம் நமச்சிவாயா என்கிற மந்திரத்துக்கு விடை தெரியாமல் வினவு கடைவீதியில் சுத்தி சுத்தி வந்து என்ன பிரயோசனம் 🙂
இந்தியாவில் பாரளுமன்ற ஜனனாயகம் சீரழ்ந்து கேலி கூத்தாகிவிட்டது. ஆம். அதனால் இந்த ஜனனாயக முறையே வேஸ்டு, மாவோயிச சர்வாதிகார அமைப்பு தான் சரி என்று நிருவ முயல்கிறீர்கள். உலகில் ஜனனாயக முறை பல நாடுகளில் வெற்றிகரமாக இயங்குகின்றன. கனடா, மே. அய்ரோபா, தைவான் போன்ற நாடுகளை சொல்லலாம். 100 சதம் சரியாக இல்லாவிட்டாலும், இந்தியா அளவு சீரழிவு இல்லை அங்கு. அதை சொல்ல மாட்டீர்களே.
சரி, மாவோயிசம், ஸ்டாலினிசம், எல்லாம் இறுதியில் சீரழிந்து (அது திரிபுவாதிகள் மற்றும் முதலாளித்துவாதிகளில் சதி என்று ஒற்றை வரியில் ‘விளக்கம்’ சொல்வீர்கள் !) இன்று அந்நாடுகளில் ஊழல் மற்றும் மாஃபியா ஆட்சி, அடக்குமுறைகளில் முடிந்துள்ள வரலாற்றையும் மீறி, எதிர்காலத்தில் நகசல்பாரிகள் தலைமையில் நீங்கள் அமைக்கபோகும் அமைப்பு ஒழுங்காக, சரியாக செயல்படும் என்று நம்புகிறீர்கள். அதே போல் தான் எங்களை போன்றவர்களுக்கு ‘குருட்டு’ நம்பிக்கை உண்டு. இருக்கும் அரைகுறை ஜனனாயக அமைப்பு படிப்படியாக சீர் அடையும், வறுமையை படிப்படியாக ஒழித்துவிட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் !!
இறுதியாக, இந்த தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல்களுக்கு முன்பு,
80கள் வரை இந்தியாவில் வறுமை அளவு, வேலைவாய்ப்புக்கள், விலைவாசி உயர்வு விகிதங்கள் பற்றியும், அதன் பின் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் நேரடி அனுபவமும், வாசிப்பனுபவும் எனக்கு உண்டு. அந்த அடிப்படையில் தான் தொடர்ந்து பேசுகிறேன்.
அன்று இருந்த நிலையை விட இன்று வறுமை அளவு குறைந்து கொண்டு வருகிறது. (விகித்தல், எண்ணிக்கைகளில் அல்ல, எனெனில் ஜனத்தொகை தொடர்ந்து அதிகரிக்கும் போது ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். ஆனால் 35 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட இன்று வறுமை விகிதங்கள் குறைந்துள்ளன.) நான் நம்புவதும், பார்த்து உணர்வதும் தவறு என்று உணர்ந்தால், எனது சார்பு நிலைகளை, கொள்கைகளை மாற்றிக்கொள்ள தயார். ஆனால் உண்மைகளை உணர ஒரு திறந்த மனம் இருக்க வேண்டும்..
அதியமான் அவர்கலே நீங்கள் எதை வைத்து வறுமை குறைந்து விட்டது என்கிறீர்கள் அரசாங்கத்தின் வரையறையை வைத்தா……….. இல்லை உங்களின் வரையறையை வைத்தா…..
appu,
இரண்டையும் வைத்து தான் சொல்கிறேன். மேலும் அய்.நா வின் அறிக்கைகள், பல இதர சர்வதேச நிறுவன, நிபுணர்களின் அறிக்கைகளையும் வைத்துதான் சொல்கிறேன்.
வறுமை, வேலை இல்லா திண்டாட்டம், பட்டினி, குழந்தை தொழிலாளர்கள் போன்ற கொடுமைகளை ஒழிக்க வேண்டும் என்பதில் நமக்குள் மாற்று கருத்தில்லை. ஆனால் இதை அடைய வழிமுறைகளில் தான் கருத்து வேறுபாடு. 15 ஆண்டுகள் முன்பு வரை நானும் உங்களை போல் தீவிரமாக மார்க்சியம் பேசியவன் தான். அது மிகவும் நியாயமான, தர்க்கரீதியான சித்தாந்தம் போல் தான் தெரியும். ஆனால் நடைமுறையில் அது அப்படி அல்ல. பிளாக் அண்ட் ஒயிட்டாக இல்லை வாழ்க்கை. lots of shades of gray and issues are more complex and deep than they appear to be.
இந்தியாவில் தனியார்களை கட்டுபடுத்தி, செல்வத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கும் உயர்ந்த நோக்கத்தோடு, பல அரைகுறை கொள்கைகளை நிறைய முயன்று தோற்றோம். வறுமையும், ஊழலும் தான் அதிகமானது. 98 சத உச்ச பட்ச வருமான வரி, மோனோபாலி சட்டம் (தனியார் பெரு நிறுவனங்களின் அளவை மிக கட்டுபடுத்தியது), லைசென்சிங், பல இதர கட்டுபாடுகள் எல்லாம் இடதுசாரிகளால் அன்று நடைமுறை படுத்துப்பட்டு தோல்வியடைந்தது. மிக கடுமையான வறுமை, வேலை இல்லா திண்டாட்டம் அன்று. இன்று 120 கோடி ஜனத்தொகையிலும் நிலைமை பரவாயில்லை.
மேலும்..
//இன்று 120 கோடி மக்கள் தொகையில் நிலைமை பரவாயில்லை// என்ற உங்களின் சொற்ட்ரொடரில் முழுமையாக வெளிப்படுவது அதிர்ப்தி தானெயொழிய கூர்மையான அரசியல்,பொருளாதார பார்வையில்லை என்பது புலம்…….
அய்யன்மீர்,
அன்று 65 கோடி மக்கள் தொகையில் சுமார் 45 சதம் பேர் கடுமையான வறுமையில் இருந்ததனர். நடுத்தர வர்கமே இன்று இருக்கும் விகத்தில் அன்று இல்லை. இன்று ஜனத்தொகை இருமடங்காகிவிட்டது. அன்று இருர்ந்த அதே விகிதங்கள் இன்றும் தொடர்ந்திருந்தால், ஏழைகளில் எண்ணிக்கை சுமார் 60 கோடி இருந்திருக்கும். ஆனால் அதைவிட பல பத்து கோடிகள் குறைந்துள்ளன. இதை தான் சொன்னேன். இதை புரிந்து கொள்ள கொஞ்சம் கூர்மையான பார்வை தேவை தான்.
உணவு, உடை, இருப்பிடம் என்ற அடிப்படை தேவைகளில், உணவுக்கு அடுத்தபடி உடை தான். அன்று கந்தல் ஆடை மிக அதிகம். புத்துணி வாங்குவது பெரிய விசியம். விலையும் அதிகம். ஆனால் இன்று ஒரு நாள் கூலியில் ஒரு சட்டை அல்லது புடவை வாங்குவதற்க்கு ஏழைகளுக்கு சாத்தியம். சொன்னா புரியாது உங்களுக்கு.
வறட்டுதனமாக நான் பேசவில்லை. உண்மைகளை உணர்வதால் தான் பேசுகிறேன். உண்மையில் வறுமை அளவு குறையவில்லை, மாற்றாக நீங்க ‘நம்புவது’ போல் அதிகரித்து வருகிறது என்பது சரியானால், எனது நிலைபாடுகளை மாற்றி கொள்ள நான் எப்போதும் தயார்.
உங்களின் மனம் திறந்த பதிலுக்கு நன்றி. சமுகத்தில் பெருகி வரும் ஏட்றத்தாழ்வு வருமை அதிகரிப்பதை தான் நமக்கு காட்டுகின்றன. அரசாங்கத்தின் கொள்கை முடிவும், செயல்பாடும் அதை தான் உணர்த்துகின்றன உதாரனத்திர்கு வருமை கோடு வரையரையை எடுத்து கொல்லலாம் இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அன்றாட நிகழ்வுகலை கவணித்தாலே தெரியும்………..
Appu,
try this :
shining for the poor too?
http://www.indiaenvironmentportal.org.in/files/Shining%20for%20the%20Poor%20Too.pdf
இதை பொய் என்று மறுப்பவர்களுடன் மேலும் உரையாட ஒன்றுமில்லை.
அதியமான் சார்,
நீங்க சொல்றத எல்லாம் கோத்து வச்சு பாக்குறப்போ இந்தியாவுல இதே நீளத்துக்கு ஊழல் பூற போக்குல போய்க்கினே இருந்துச்சுன்னா வறுமை குறைஞ்சிறும்னு சொல்ல வறீங்க கரீக்டா!
அதியமான்,
ஏழைகளுக்கு நீங்கள் வைத்திருக்கும் அளவீடு, வரையறை என்ன?
உலக வங்கி, உலக சுகாதார நிறுவனங்களின் அளவீடு, வரையறையா?
பசிதம்பரம் மற்றும் முண்டாசு தலையர்கள் மாண்டேக்சிங்கும் மன்மோகன்சிங்கும் சொல்லும் வரையறையா? 🙂
தெளிவாக சொல்லுங்கள், புள்ளிவிவரங்களுக்கு முன்னால் அதை கணக்கிடும், நிர்ணயிக்கும் வரையறை அளவீடே பிரச்சனைக்குரிய ஒன்றாக இருக்கிறதல்லவா?
அதியமான், //ஏழைகளுக்கு நீங்கள் வைத்திருக்கும் அளவீடு, வரையறை என்ன?///
Two questions must be addressed: First, why did Indonesia’s economy and
Indonesian living standards grow so much more rapidly than India’s in the
three decades from 1966 to 1996? And, secondly, if it was mainly due to the
different economic strategies they adopted, why did they choose these different strategies?
From the 1960s to the mid-1980s, India had one of the most controlled
economies in the world outside the Communist bloc. There were administrative controls on prices, on industrial investment, on bank lending and the
capital markets, on imports and even on some exports. The state reserved for
itself the ownership of many key industries; other industries were reserved for
small-scale enterprises; domestic industry was heavily protected; competing
imports were mostly banned; exports and inward investment were discriminated against. Large private businesses were prevented from expanding. The
public sector provided plenty of jobs but placed a heavy burden on the rest of
the economy…
The newly elected Narasimha Rao Government, with Manmohan Singh as
Finance Minister, responded to this crisis by embarking on an extensive
programme of liberalization. Within a matter of months there was a decisive
shift from statist-nationalism to a liberal economic strategy. By the time the
Government had lost office in 1996 quantitative controls on imports had been
scrapped; controls on inward investment had been eased greatly; controls on
investment by the large industrial companies had been effectively abolished;
and the previous reservation of industries for the public sector was reduced
from 18 to three. The financial sector was liberalized and banking supervision
was strengthened.
அதியமான் சார்,
நீங்க எடுத்து போட்ட பகுதியோட மூல சுட்டி http://www.cdi.anu.edu.au/featured_articles/featured-articles_dowloads/CDINews-Mar05_TimLankester_AA.pdf
அடுத்த முறை சோர்சை குறிப்பிடுங்கள், பயனளிக்கும்
பழம்,
பேஸ்புக்கில் இந்த சுட்டியை நான் இன்று தான் இட்டேன். அதை பார்த்துவிட்டு இங்கு எடுத்தியம்பியதற்க்கு நன்றி. ஆனால் சுட்டி கொடுத்தால் தான் இங்கு உங்க தோழர்கள் இளக்காரமாக படிக்காமலே ஏசுகிறார்களே. மேலும் புது புது பெயர்களில் வந்து இங்கு உரையாட முயலும் குழு தோழர்கள்…
வாங்க அதியமான்,
ரெம்ப நாளா ஆளைக்காணும்?
//தைவான் போன்ற நாடுகளை///
இந்த தைவானில் வெள்ளை பயங்கரவாதம் தலையையும் காலையும் விரிச்சுகிட்டு ஆடிய கதையை விக்கியில தேடி படிச்சுட்டு வந்திருக்கலாம்.
நீங்க நம்புகிற விக்கி லிங்க் தான், உங்க வெற்றிகரமான முதலாளித்துவத்தின் கதையை படிச்சு பாருங்க:
http://en.wikipedia.org/wiki/White_Terror_%28Taiwan%29
எத்தனை நாள் கழிச்சு வந்தாலும், பழைய படி ‘பொண்டாட்டி ஓடிப்போன கதை’ ‘என்ன கையப்புடிச்சு இழுத்தியா’ இப்படித்தான் பேசுவீங்களா?
அக்காகி,
ஆம். தைவான்க்கும் செஞ்சீனாவுக்கும் நடந்த மோதல்களில் போது அது நிகழ்ந்தது. ஆனால் சர்வாதிகாரத்தில் துவங்கி, படிப்படியாக இன்று தைவான் ஒரு லிபரல் ஜனனாயக நாடு. இன்றைய நிலையை பற்றி பேசலாமே. மேலும் கனடா போன்ற பல இதர நாடுகளை பற்றியும். இதெல்லாம் உம்ம கண்களில் படாதே !!
சரி, கம்யூனிசம் என்ற பெயரில் நடந்த அடக்குமுறைகளை, கொலைகளை, குரூரங்களை பட்டியலிட்டால் ?
///எத்தனை நாள் கழிச்சு வந்தாலும், பழைய படி ‘பொண்டாட்டி ஓடிப்போன கதை’ ‘என்ன கையப்புடிச்சு இழுத்தியா’ இப்படித்தான் பேசுவீங்களா?
///
உன்னை மாதியான வெத்துவேட்டுகளும், இழிபிறவிகளும் தான் இப்படி பேசுவீக.
அதியமான்,
//உன்னை மாதியான வெத்துவேட்டுகளும், இழிபிறவிகளும் தான் இப்படி பேசுவீக.///
எதுக்கு இப்ப கோவப்படுறீங்க?
1987ல் தைவான் சர்வாதிகாரத்தில் இருந்து ‘ஜனநாயகத்திற்கு’ மாறியதாக கூறப்படுகிறது!
ஆனாலும், 2008 வரை தைவானில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்க முடியாது, 2008 வரை அங்கு கம்யூனிஸ்ட் கட்சி இல்லை!
2008 ல் தைவான் சீனாவுடன் ஏற்படுத்திக்கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களின் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான தடை நீக்கப்பட்டது!
இது தான் தைவானின் லிபரல் ஜனநாயக முறையின் (அரு)கதை..
வெள்ளை பயங்கரவாதம் பற்றி பேசினாலும், அதற்கு கூட சோவியத் மற்றும் செஞ்சீனத்தில் படுகொலைகள் என்று “என்று கையை பிடிச்சு இழுத்தியா” என்று பேசும் நீங்கள் நல்ல அறிவாளி தான்! 🙂
இது சரியா என்று பாருங்கள்: வெள்ளை பயங்கரவாதத்திற்கும் கூட கம்யூனிஸ்டுகள் தான் காரணம். கம்யூனிசமும் கம்யூனிஸ்டுகளும் இருந்ததால் தானே, வெள்ளை பயங்கரவாதம் இருந்தது, சந்தேகப்படுபவர்களையெல்லாம் சித்தரவதை செய்து கொன்றார்கள்.
ஏற்கனவே லிபரல் ஜனநாயக நாடுகள் (ஸ்காண்டிநேவிய நாடுகள்) என்று முன்னர் நீங்கள் விவாதித்த போது தோழர் அசுரன் எழுப்பிய கேள்விகளுக்கு நீங்கள் நேர்மையாக பதிலளிக்கவில்லை.
மேலும், அசுரன் வேறு சில விவாதங்களில் எழுப்பிய கேள்விகளுக்கு நேர்மையாக பதிலளிக்கவில்லை.
இப்போது திரும்ப வந்து பழைய பல்லவியை பாடுகிறீர்கள். நீங்கள் பதில் சொல்லாமல் விடுபட்ட அசுரனின் கேள்விகளுக்கும் பதில் சொல்லுங்களேன்..
//ஏற்கனவே லிபரல் ஜனநாயக நாடுகள் (ஸ்காண்டிநேவிய நாடுகள்) என்று முன்னர் நீங்கள் விவாதித்த போது தோழர் அசுரன் எழுப்பிய கேள்விகளுக்கு நீங்கள் நேர்மையாக பதிலளிக்கவில்லை.
மேலும், அசுரன் வேறு சில விவாதங்களில் எழுப்பிய கேள்விகளுக்கு நேர்மையாக பதிலளிக்கவில்லை.//
நேர்மைய பற்றி நீங்க அளக்க வேண்டாமே. வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.
தைவான் இன்று எப்படி உள்ளது. சரி, கனடா போன்ற நாடுகளிலும் இந்தியா போல் ஜனனாயகம் சீரழிந்து விட்டதா என்ன ? ஜனனாயக அமைப்பு முறையே வேஸ்ட் என்று நிறுவ முயல்கிறீர்கள். வீண் வேலை. கம்யூனிச புரட்சி உருவான நாடுகள் காலபோக்கில் சீரழிந்தது பற்றி பேச மறுக்கும் நீங்க நேர்மைய பற்றி பேசிரீக. மேலும் ’திரிபுவாதிகளின்’ சதி ஏற்படும் முன்பே, ஸ்டாலின் காலத்தில் நடந்த மாபெரும் மனித அழிவுகளை இன்றும் மறுக்கும் ஒரு சிறு குழு தான் நீங்க. உலகில் மார்க்சியர்கள் எத்தனையோ பேர்கள் உள்ளனர். யாரும் மதவாதம் போல் blind denial of past history உங்க குழு போல் செய்வதில்லை.
//இது தான் தைவானின் லிபரல் ஜனநாயக முறையின் (அரு)கதை..//
100 சதம் சரியாக இருந்தா தான் ஒத்துகுவீக். ஆனா நீங்க கட்டமைக்க நினைக்கும் அமைப்பு போல் உருவானவைகளில் குற்றம் கண்டுபிடித்தால், அதற்க்கு ‘விளக்கம்’ மட்டும் கொடுப்பீக. தைவான் தவிர பல இதர நாடுகளை சொல்யிருந்தேன். அவை பற்றி பேசாமல் இருப்பது தான் நேர்மையா ?
”ஜனநாய்கவாதி” அதியமான்,
உங்கள் விவாதமே, விவாதம்! ஆனா என்ன பண்றது, நீங்க இங்க பேசிகிட்டு இருக்கும் போதே அந்த பக்கம் நீங்க சொல்ற நாட்டுல லிபரல் ஜனநாயகம் பல்லிளிக்கிறது..
இந்த போராட்டம் ஏன் நடக்கிறது, ஏன் லிபரல் ஜனநாயக அரசு அதை அடக்குகிறது. விளக்குங்களேன்!
http://www.guardian.co.uk/world/2012/may/24/canada-student-fee-protest-arrests
Protests that began in opposition to tuition fees in Canada have exploded into a political crisis with the mass arrest of hundreds of demonstrators amid a backlash against draconian emergency laws.
More than 500 people were arrested in a demonstration in Montreal on Wednesday night as protesters defied a controversial new law – Bill 78 – that places restrictions on the right to demonstrate. In Quebec City, police arrested 176 people under the provisions of the new law.
இந்த சட்டம் கனடிய நாட்டின் ஒரு மாகாண சட்டமன்றம் இயற்றியது. அதை வைத்து போலிசார் அந்த போராட்டத்தை அடக்கினர். இந்த சட்டம் இறுதியானது அல்ல. கனடிய நீதிமன்றம் தடை செய்ய வாய்ப்பு உண்டு. மேலும் கனடாவில் இதை பற்றி விவாதம் மாற்று கருத்துக்கள், திருத்தங்களுக்கு வகையுண்டு. it is all part of democratic process.
100 சதம் பெர்ஃபெக்டான லிபரல் ஜனனாயக நாடு சாத்தியமில்லை. ஆனால் அதை நோக்கி பயணம் சாத்தியம்.
சரி இருக்கட்டும், இத்தனை பேசுகிறீர்களே, (தைவானில் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட விசியம்) : உங்க ஆதர்ச கனவான செம்புரட்சி அரசு (நக்சல்பாரிகள் தலைமையில்) இங்கு உருவானால், எத்தனை எதிர்கட்சிகளை அனுமதிப்பீர் ? பத்திரிக்கை மற்றும் கருத்து சுதந்திரம் எப்படி ? ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை அனுமதிப்பீர்களா என்ன ? மிக கடுமையான சர்வாதிகார, அராஜக ஆட்சி தான் இருக்கும். கம்யூனிசத்தை மறுப்பவர்களை கடுமையாக நசுக்கி ஒடுக்குவீர்கள். அப்பிலே சாத்தியமில்லை.
ஒரு சதம் கூட ஜனனாயகத்தை அனுமதிக்க மறுக்கும் நீங்க பேசறீங்க, அங்க நொள்ளை நொட்டை என்று. PUCL மற்றும் இதர மனித உரிமையாளர்கள் பேசட்டும் இதை. உங்களை போன்ற சர்வாதாரத்தை முன்மொழிபவர்கள் பேச அருகதை இல்லை.
சரி, இதெல்லாம் இருக்கட்டும், இந்த பதிவின் மைய்ய விசியம் பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை நீங்களோ அல்லது வினவு குழுவினரோ இதுவரை பதில் சொல்லவில்லை ? முதல்ல அதுக்கு பதில் சொல்க..
லிபரல் ஜனநாயகத்தை இங்கு பாருங்கள் அதியமான் : https://www.youtube.com/watch?feature=endscreen&NR=1&v=kQwUc79VGmM
மாட்றூ வழி கிடைத்து விட்டது இனி மக்கலுக்கு அதனை புரியவைப்பது தான் வேலை……
Vaithula irukkara poochigala saagadikka naama vesham kudikkanum’nu solreenga..
ராமசுப்பிரமணிய அய்யர் அவர்கலே விசம் குடிக்க சொல்லவில்லை மருந்து சாப்பிட சொல்கிறோம்…..
****** பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுகின்ற, ஏற்கெனவே அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட, சலுகை பெற்ற மேட்டுக்குடி தொழிலாளி வர்க்கத்தின் *****
அப்பாடா! ஒரு வழியா தொழிலாளிகளிலும் மேட்டுக்குடி, நடுத்தர வர்கம் உண்டு என்று ஒத்துக்கொண்டீர்களே. அதுவே பெரிய விஷயம்!
இதிலிருந்து என்ன சொல்ல வருகிரீர்கள் அனானி………..
YOU ARE CORRECT.WHAT YOU SAID IS 100% TRUE.
ஒட்டு பொருக்கும் கட்சிகலுக்கு சரியான
ஒரு கட்டுரை….hats off to vinavu
கம்யூனிஸ்ட் ஆட்சி எல்லா எடத்துலேயும் போச்சு…. ரஸ்யாவிலிருந்து கல்கத்தா வரை கதை கந்தலாச்சு… இப்ப நக்ஸல்பாரி……இதுக்கும் கூடிய சீக்கிரம் ஒப்பாரி விழா நடக்கும்…
உலக முதலாலித்துவம் சவக்குழியில் படுத்து கெடக்கு அதுக்கு மொதல ஒப்பாரி விழா நடத்துங்க…….
ஒரு பக்கம் “தமிழ் தேசீயம்” இன்னொரு பக்கம் “நக்சளிசம்”!! ஒன்றுமே உருப்புப்புடாதவைகள். மக்களை ஏமாற்ற இப்படியும் ஒரு வேஷம்! தமிழ் நாட்டிலிருந்து மற்ற மொழி பேசுவோரை வெளியேற்ற வேண்டும் ! தமிழ் தேசியம் உருவாக வேண்டும்!!! ஜனநாயகம் கூடாதாம்! இவர்களாக ஒரு ஜனநாயகத்தை (புதிய) உருவாக்கிக் கொடுக்கப்போகிறார்கலாம்!!! எல்லோரும் இருந்து வாங்கிக்கொண்டு செல்ல வேண்டுமாம்!! உலகில் பொது உடமை எப்படி எல்லாம் சீரழிந்தது என்று தெரியவில்லையா? ஒருவரை ஒருவர் தாக்கிக்கொல்லவேண்டும்!! சாக வேண்டும்! இதற்கு பெயர்தான் புதிய ஜனநாயகம் என்ற நக்சலிசம்!!! மக்களை மூளைசலவை செய்து தங்களது காரியத்தை(!) சாதிக்கப் பார்க்கிறார்கள். உலகில் நடந்துவரும் இஸ்லாமிய கொடுமைகளை மூடிமறைத்து விட வேண்டும்!!! அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு பக்கம் எதிர்ப்பதுபோல் நடிப்பு! கூடங்குளத்தில் கிறிஸ்த்துவ பாதிரிகளுக்கு ஆதரவு!!!!! என்ன கொடுமை பாருங்கள்!!!! இந்திய நாட்டை சீர்குலைக்க உள்நாட்டிலேயே சதி!!!!!!
அட அது ஒன்னும் இல்லீங்க போலி மோதல் கொலைகள், போராடுரவங்க மேல தடியடி,துப்பாக்கிச்சூடு, மக்களை கிருமினலாக்கும் ஆதார் அடயாள அட்டை, ஆயுதப்படை அதிகார சட்டம்(காஷ்மீர்,மனிப்பூர்,) இதெல்லாம் தான் ஜனநாயகம் என்கிறார் நம்ம நட்ட்ட்ராயன். அப்படி தானங்கோ……
அண்ணன் ‘Natrayan’ சொல்ல வரும் கருத்து இதுதான்..
” நக்சலிசமும் வேண்டாம், சன நாயக இசமும் வேண்டாம், “காக்கி டவுசரிசம்” தான் வேண்டும் என்கிறார்..
ஆனா பாருங்க காக்கி டவுசர் காரங்களுக்கு புடுச்சது “அம்மணமிசம்” தான் (karnataka, gujarat – பிட்டு படம்) ஹி ஹி.. அதுக்கு “ஷாகா” ல சொல்லிருப்பாங்க ‘நாக்கில் உமில் நீர் சுரக்க நல்ல பயிர்ச்சி’ அப்டீனு
there is no relation between the published article and the link. but it might impress you
http://www.thehindu.com/todays-paper/tp-opinion/article3463524.ece
though the link is not relevant to this article, it might impress you:
http://www.thehindu.com/todays-paper/tp-opinion/article3463524.ece
அமெரிக்கா ஜனநாயகம் அல்ல பணநாயகம். இந்தியா அரைகுறை பணநாயகம் அல்லது அரைகுறை ஜனநாயகம்.
In 1857 the SEPOY MUTINY was curbed by the Britishers with the co-operation of our own Kings/ traitors etc. Ultimately “QUIT INDIA ” Movement started and we got Independence after 90 years, in 1947 only…Like that our movements will slowly gather momentum and we can achieve our goal..Fight against the POWERFUL and CORRUPT PEOPLE requres more sacrificies…
The article is thought provoking and youngesters like havee to learn more and more to withstand the pressure from Poor administration and their atrocities..
தோழர்களே! நக்சல்பாரிகளின் பாதையில் இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றிணைத்து புதிய ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்த வாழ்த்துக்கள். ஒரு சமூகத்தில் நிலவும் இயங்கியலை உணர்ந்துகொண்டு அதன் வழியில் இயங்காமல் எந்த ஒரு மக்கள் திரளையும் புரட்சிக்காக ஒன்றிணைக்க முடியாது. தமிழ்நாட்டில் பெரியாரியல், தமிழ் இன உணர்வு, தலித்தியல் ஆகிய இம்மூன்றின் மூலமாக இருக்கும் சமூகப்பிரச்சனைகளுக்கு சிக்கல்களுக்கு தீர்வுகாணும் வழியில் மட்டுமே இம்மக்களை ஒன்றிணைக்க் முடியும். புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களைத் தயார்செய்யும் இயங்கியல் காரணைகள் தமிழகத்தில் இவை மூன்றும் மிக முக்கியமானவை. இந்த சமூகத்தில் ஒரு சாதி என்ற ஜனநாயகம் அற்ற சமூகக் கட்டுமானத்தின் மீதான எழுச்சியைச் செய்து பகுத்தறிவுடன் கூடிய சமூகக் கூட்டம் விளங்குவதற்கும், பார்ப்பனர் இந்து ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான போர்ப்பரணி தமிழகத்தில் சுடர்விட்டு எரிகின்றதற்கும் அதன் ஊடாக மக்களின் சுயமரியாதை கொளுந்துவிட்டு பிரகாசிப்பதற்கும், மூடநம்பிக்கையிலிருந்து விடுபட்டு பகுத்தறிவோடு ஆரிவியல் கண்ணோட்டத்தோடு சமூகவியலை ஆய்வதற்குமான சமூக சூழல் நிலவுவதற்கும் பெரியாரியலே காரணம். தமிழ் மொழியாலும் இன உணர்வாலும் தமிழகம் உணர்வோடு வீரியத்தோடு புரட்சி குணத்தோடும் கொந்தளித்து புதுப்புது களப்பணியாளர்களை உருவாக்கிக்கொண்டிருக்கின்ற்கு தமிழ் இன உணர்வு முக்கிய காரணம். பெரியாரின் ‘தமிழ்நாடு தமிழர்களுக்கே’ என்ற முழக்கம் இந்தித் திணிப்பு எதிர்ப்பினல் மக்கள் காட்டிய போர்க்குணத்திலிருந்து தான் எழுகிறது. என்னதான் ஒரு முற்போக்கு அமைப்புகளுக்கு களத்தில் இறங்கி போர் குணத்தோடு பணியாஅற்றுவதற்கும் சிறை சென்று மாய்வதற்கும் இன்று தலித் மக்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் என்றும் தகித்திருக்கும் அவல உணர்வும் அதை வீறுகொண்டு பொங்கச் செய்தது தலித்தியம் தான். இட ஒதுக்கீட்டினால் இப்பகுதியிலுர்க்கும் மக்கள் பெற்றிருக்கும் ‘எம்பவர்மெண்ட்’ தான் இன்று சமூகத்தில் நான்கு நல்ல விசயங்களை நோக்கி அவர்களை செலவு செய்ய வைத்திருக்கின்றது. சமூக முற்போக்கு இயக்கங்கள் இன்று கணிசமாக நன்கொடை பெறுவது இதனாலே தான். அதற்கு தலித்தியம் பேசிய அம்பேத்காரும் பெரியாரும் இல்லாமல் இது தொடங்குவதற்கும் தொடர்வதற்கும் வாய்ப்பே இல்லை. எனவே நக்சலிசம் என்பது தமிழகத்தில் பெரியாரியலும், தமிழ் இன உணர்வ் அரசியலும் தலித்தியலும் இல்லாமல் சுயம்புவாக முளைக்க முடியாத ஒரு களைச்செடிதான். இது நினைவூட்டல் மட்டுமல்ல எச்சரிக்கையும் கூட.நன்றியுடன் சிங்காரம்.
பெரியாரியம்ன்னு சொல்லுங்கோண்ணா.. பெரியாரியல்ன்னு சொன்னா நேக்கு பொறியல், அவியல் ஞாபகம் வந்துடறது…
/மிழ்நாட்டில் பெரியாரியல், தமிழ் இன உணர்வு, தலித்தியல் ஆகிய இம்மூன்றின் மூலமாக இருக்கும் சமூகப்பிரச்சனைகளுக்கு சிக்கல்களுக்கு தீர்வுகாணும் வழியில் மட்டுமே இம்மக்களை ஒன்றிணைக்க் முடியும்//
சரிங்க சந்தானம் இந்த மூன்றின் மூலம் எப்படி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்போறீங்கன்னு சொல்லிடுங்க
//பெரியாரின் ‘தமிழ்நாடு தமிழர்களுக்கே’ என்ற முழக்கம்//
தமிழை காட்டுமிராண்டி பாஷை என்றும் தமிழ் படித்தால் எவனும் உருப்புடமாட்டான் என்றும் கூறியவர் பெரியார். இவரா தமிழருக்கு தலைவர்? இதுவா முழக்கம்!!
///தமிழ் இன உணர்வு, தலித்தியல் ///
தமிழுக்கும் தலித்தியலுக்கும் என்ன சம்பத்தம் உள்ளது? “தலித்” என்ற வார்த்தையே தமிழில் இல்லை. அது எந்த மொழி வார்த்தை என்பது தெரியவில்லை! அப்படி இருக்கையில் தமிழை இதனுடன் ஒப்பிடுவது வியக்கத்தக்கது! தலித் என்பது இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் வார்த்தை. தமிழோடு இதை கலப்பது கேலிக்கூத்தானது!
///பார்ப்பனர் இந்து ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான போர்ப்பரணி ///
இஸ்லாமிய பயங்கர வாதத்தை கண்டு உலகமே நடுங்கிக்கொண்டு உள்ளது.எப்போது எங்கு குண்டு வெடிக்கும் என்று தெரியவில்லை! இதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் இல்லாத ஒன்றை, பொய்யை, திரும்ப திருப்ப சொல்லி உண்மையாக்க முயற்சிக்கிறீர்கள்!!! “கிட்லரின் கோயபல்ஸ் கொள்கை”.
பொருளாதார சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டு இருபது ஆண்டுகள் கழிந்த பின்னும் இந்தியாவில் வறுமை கோர தாண்டவமாடுகிறது.அதியமான் சொல்வது போல் அது ஒன்றும் குறைந்து விடவில்லை. 2011 ஆம் ஆண்டு உலக வங்கி வெளியிட்டுள்ள ”இந்தியாவின் வறுமை குறித்த கண்ணோட்டங்கள்” அறிக்கையின்படி ஊரகபகுதி மக்களில் எண்பது விழுக்காட்டினர் நாளொன்றுக்கு 15 ரூபாயில்தான் காலம் தள்ளுகிறார்கள்.
ஆதாரம்;http://indiamicrofinance.com/wp-content/uploads/2011/05/India-Poverty-Report-2011.pdf
சுட்டியிலிருந்து;
The median rural person in India lives on Rs 15 per day (with a purchasing power parity, or PPP, of $1.30),
spending only Rs 3 each day more than a person on the offi cial
Indian rural poverty line. India’s poverty line is very low by international standards, and 80 percent of the rural population lives
below the median developing-country poverty line of Rs 22 (PPP $2)
நகர்ப்புறங்களிலும் நிலைமை ஒன்றும் மெச்சத் தகுந்தாற்போல் இல்லை.
Urban poverty reduction and urban growth have been most visible in large cities. The share of metropolises (cities with 1 million
people or more) in India’s urban population increased from just
19 percent in 1983 to 27 percent in 2004–05. During that period,
poverty levels have halved in these large cities, from 29 percent in
1983 to 15 percent in 2004–05.
However, more than 70 percent of India’s urban population lives
in towns with a population of less than 1 million, and roughly 85 percent of the urban poor can be found in these smaller cities and
towns. Poverty rates in small towns (population less than 50,000) are
significantly higher than in medium-size towns (population 50,000 to
1 million), which again are signifi cantly higher than the average for
metropolises.
மாநகரங்களின் பளபளப்பையும் அங்கு வாழும் சிறு வீதமான கும்பலின் பகட்டையும் பட்டோடோபத்தையும் காட்டி இந்திய முன்னேறுவதாக ஆளும் கும்பல் உடுக்கை அடிக்கிறது.அதை கேட்டு ”அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ” என்று ஆடுவதும் ஆடாததும் அவரவர் விருப்பம்.
but this report does not give the trends or whether poverty ratio (that is percentage of people living on less than 1.25 dollar a day) had increased or decreased.
The following about UN (called UNITED NATIONS) report :
http://blogs.wsj.com/indiarealtime/2011/07/11/india-makes-some-progress-in-reducing-poverty/
A new report by the United Nations suggests that India is making some progress in reducing poverty. The UN’s annual Millennium Development Report, which tracks the progress of the international organization’s long-term goals, shows India’s poverty rate is expected to fall to 22% by 2015 from 51% in 1990. This marks an improvement from last year’s projections, which forecast India’s poverty rate to drop to 24% by that year. The poverty rate is measured by assessing the number of people who live below $1.25 a day, a threshold set by the World Bank.
வறுமை விகிதங்கள் குறைந்து கொண்டு தான் வருகின்றன. இல்லாவிட்டால் 120 கோடி மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் கடும் வறுமையில் வாடினால், புரட்சி இன்னேரம் உருவாகியிருக்கும்..
The below points are taken from the link u have given above
According to UN,
Poverty in INDIA in 1990 – 51%
Poverty in INDIA in 2011 – 54%
Poverty in INDIA in 2015(Expected) – 22%
Just analyze the pattern, How come the last is possible??? Also from 1990 the poverty has actually increased 3% in 2011 …..
//Poverty in INDIA in 2011 – 54%///
இப்படி எங்கு அந்த பதிவில் உள்ளது ? பிழையான தகவல்.
எந்த அளவுகோல் படியும் வறுமை விகிதம் குறைந்து கொண்டு தான் உள்ளது. அதனால தான் 1991க்கு முன்பு இருந்த லைசென்சிங் கட்டுபாடுகள், அன்னிய முதலீடுகளுக்கான தடைகள் போன்றவற்றை மீண்டும் கொண்டுவர (அதாவது தாரளமயமாக்கலை மாற்ற) யாரும் இன்று சீரியாசாக போராடுவதில்லை. அன்று மூடிய பொருளாதார கொள்கைகளின் போதும் வறட்டுவாதம் பேசும் தீவிர மார்க்சியர்கள் இதே பல்லவியை (வரக்கபோர், சுரண்டல், ஏகாதிபத்தியம், நவ காலனியம், டாடா, பிர்லா (அப்ப அம்பானி இல்லை), சி.அய்.ஏ சதி, etc, etc) தான் பேசினார்கள். இன்றும் தான். ஆனால் ground reality அன்று புரியவில்லை. இன்றும் புரியவில்லை இவர்களுக்கு. தாரளமயமாக்கல் என்றால் உண்மையில் என்னவென்று புரிந்துகொள்ளாமலேயே ‘எதிர்ப்பது’ தொடர்கிறது..
நக்சல்பாரிகள் (whoever they are now) தலைமையில் ஒரு செம்புரட்சி அரசு உருவானாலும் வறுமையையும் மற்ற சீர்கேடுகளையும் ஒழிப்பது சாத்தியமில்லை ; முதலாளிகள் ஒழிக்கப்பட்டு அதற்க்கு பதில் அதிகாரிகள் மற்றும் கமிசர்கள் கோலோச்சுவார்கள். ஆனால் உற்பத்தி குறைந்து வறுமை அதிகரிக்கவே செய்யும். பஞ்சம் உருவாகி பல கோடி மக்கள் மாண்டுவிடுவார்கள். சோவியத் ரஸ்ஸியாவில் 30களிலும், செஞ்சீனாவில் 50களிலும் இதே தான் நடந்தது. Forced collectivisation of agriculture by brute force will always result in massive man made famines, starvation deaths as well as terrible human rights violations. இதெல்லாம் சொன்ன புரியாது. அனுபவித்து பாத்தா தான் தெரியும். நல்ல வேளையாக இனி இதெல்லாம் உலகில் எங்கும் சாத்தியமில்லை.
The only way to eradicate poverty and hunger is thru real free markets based on a liberal democratic set up. All other systems have failed and failed again. that is the lesson from the history of the world.
Economic growth is the “only path to end mass poverty,” says economist Ian Vásquez, who argues that redistribution or traditional poverty reduction programs have done little to relieve poverty. Vásquez writes that the higher the degree of economic freedom — which consists of personal choice, protection of private property, and freedom of exchange — the greater the reduction in poverty. Extending the system of property rights protection to include the property of poor people would be one of the most important poverty reduction strategies a nation could take, he says.
The historical record is clear: the single, most effective way to reduce world poverty is economic growth. Western countries began discovering this around 1820 when they broke with the historical norm of low growth and initiated an era of dramatic advances in material well-being. Living standards tripled in Europe and quadrupled in the United States in that century, improving at an even faster pace in the next 100 years. Economic growth thus eliminated mass poverty in what is today considered the developed world. Taking the long view, growth has also reduced poverty in other parts of the world: in 1820, about 75 percent of humanity lived on less than a dollar per day; today about 20 percent live under that amount.
Even a short-term view confirms that the recent acceleration of growth in many developing countries has reduced poverty, measured the same way. In the past 10 years, the percentage of poor people in the developing world fell from 29 to 24 percent. Despite that progress, however, the number of poor people has remained stubbornly high at around 1,200 million. And geographically, reductions in poverty have been uneven.
http://www.cato.org/research/articles/vas-0109.html
. But today, while in India there are presently around 650 million people or about 54 % of the population living below the poverty line, China has now less than 100 million people, or around 8 % of its citizens in the same income bracket, according to a 2010 Asian Development Bank report that sets the poverty bar at $2.
the above line states that Poverty in INDIA in 2011 – 54% because the blog is posted on June 2011, But i made a mistake because the above statistic consider per day 2$ but the former consider 1.25$ … Can u give what is the poverty % now (2012) considering per day 1.25$ ???
சரி, நான் மேலே கேட்ட கேள்விகளுக்கு வினவு இன்னும் பதில் சொல்லவில்லையே.
நக்சல்பாரிகள் என்று யாரை சொல்கிறீர்கள் ? மாவோயிஸ்டுகளையா ? அவர்களின் செயல்பாடுகளை, வழிமுறைகளை எல்லாம் ஆதரிக்கிறீர்களா ? முக்கியமாக அவர்கள் பெரு நிறுவனங்களை, சிறு ஒப்பந்தகார்களை மிரட்டி கப்பம் வசூலித்து நிதி திரட்டுகிறார்கள். இதை நியாயப்படுத்துவீர்களா அல்லது பொய் என்று மறுக்க போகிறீர்களா ? இந்த் மாத உயிர்மை இதழில் முத்துகிருஷ்ணன் ராய்பூர் மற்றும் சட்டிஸ்கர் பகுதிகளில் ஒரு குழுவோடு பயணம் செய்து பலரையும் சந்தித்து பேசி, ஒரு கட்டுரை எழுதியுள்ளார். எஸ்ஸார் மற்றும் இதர நிறுவ்னங்களை மிரட்டி பணம் பெறும் மாவோயிஸ்டுகள் பற்றி எழுதியுள்ளார். (அரசு தரப்பு அத்துமீறல்கள், கொலைகளையும் விரிவாக எழுதியுள்ளார்). இப்பவே இப்படி அராஜகமாக, நேர்மையில்லாமல், பணம் திரட்டுபவர்கள் தலைமையில் செம்புரட்சி உருவானால், அது எப்படி உருப்படும் ? பதில் சொல்லுங்க…
http://www.idsa.in/idsacomments/TheMaoistBusinessNexus_PVRamana_031011
News of business enterprises paying-up to the proscribed Communist Party of India (Maoist), or Maoists in short, keeps appearing on-and-off. A General Manager of Essar Steels was arrested in Karandaul, Dantewada district, Chhattisgarh, on September 25, 2011, for allegedly paying ‘protection money’ to the Maoists. Two others have been arrested in this connection. Reportedly, the police in neighbouring Orissa’s Malkangiri district are on the look-out for another Essar official following some evidence surfacing of his involvement too.
//இப்பவே இப்படி அராஜகமாக, நேர்மையில்லாமல், பணம் திரட்டுபவர்கள் தலைமையில் செம்புரட்சி உருவானால், அது எப்படி உருப்படும் ? பதில் சொல்லுங்க…//
எத்தனையோ முதலாளித்துவ கட்சிகள் அநியாயமா பணம் வாங்குதே அதுக்கு என்ன செய்ய மாவோ யிஸ்டுகள் வாங்கினா மட்டும் குத்தம் சொல்றீக
//எத்தனையோ முதலாளித்துவ கட்சிகள் அநியாயமா பணம் வாங்குதே அதுக்கு என்ன செய்ய மாவோ யிஸ்டுகள் வாங்கினா மட்டும் குத்தம் சொல்றீக//
அண்ணே இப்படியும் லெனின்தான் சொல்லியிருக்காறா?
//எத்தனையோ முதலாளித்துவ கட்சிகள் அநியாயமா பணம் வாங்குதே அதுக்கு என்ன செய்ய மாவோ யிஸ்டுகள் வாங்கினா மட்டும் குத்தம் சொல்றீக//
Good. so the fact that maoisits extort money from mining and other companies is not disputed. முதலாளித்வ கட்சிகள் என்ற சொல்லாடலை மறுக்கிறேன். மிரட்டி பணம் பறிப்பது உண்மையான சந்தை பொருளாதார அடிப்படை லிபரல் ஜனனாயகமே அல்ல. அவை ஃபாசிசம் தான். அக்கட்சிகள் மாஃபியா போன்ற அமைப்பை, ஜனனாயக லேபில் கொண்டு வேசம் போடுபவை தான். இருப்பினும் இந்த அரசியல் கட்சிகள், சட்டத்தை வைத்து தான் மிரட்டுகின்றன. அதாவது சுரங்க லைசென்சுகளை ரத்து செய்வோம், வருமான வரி மற்றும் இதர வரி துறையினரை கொண்டு ரெய்டு செய்வோம், தொழிலாளர்கள் போராட்டம் உருவாக்கும் போன்ற ‘மிரட்டல்களை’ கொண்டு கப்பம் வசூலிப்பர். ஆனால் மாவோயிஸ்டுகள், கப்பம் தர மறுத்தால் போட்டு தள்ளிவிடுவார்கள் அல்லது நிறுவனங்களின் கருவிகள், வாகனங்கள், சொத்துக்களை குண்டு வைத்து சேதப்படுத்துவார்கள். இதை extortion thru threat of violence என்று தான் சொல்ல வேண்டும். ஏறக்குறைய விடுதலை புலிகள் நிதி திரட்டிய பாணி தான்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வாங்கும் லஞ்சம லாவண்யத்தால் தமிழகமே மிரண்டுபோய் உள்ளது! இந்த நகசலைட் இயக்கத்திறக்கும் பணம் போகிறது என்பது கசப்பான உண்மை!!! அரசு ஊழியர்களும் கொள்ளைக் கும்பலும் ஒன்றுதான்!!! பணம் இல்லாமல் எதுவும் நடக்காது! தமிழ் நாட்டில் உள்ள 7 கோடி மக்களும் கொதித்துபோய் உள்ளார்கள்! இந்த அரசு ஊழியர் கொள்ளைக்கு “வினவு” மற்றும் அது சார்ந்த இயக்கங்களும் ஆதரிக்கின்றன!! வெட்கக்கேடானது!! “ம.க.இ.க , விவசாயிகல்சங்கம் போன்ற இதன் உறுப்பு இயக்கங்கள் எப்போதாவது இந்த ஏழை மக்களுக்காக அரசு அலுவலர்களை எதிர்த்து எப்போபோதாவது போராட்டம் நடத்தயுள்ளர்களா? தினமும் 50 ரூபாய் கூலிவாங்கி தங்கள் குடும்பத்தை நடத்திவரும் இவார்களை எந்த அளவிற்கு கொடுமைப்படுத்துகிறார்கள் என்று சம்பத்தப்பட்ட அலுவலகத்தை நோட்டமிட்டாலே தெரிந்து கொள்ளலாம். இந்த இயக்கங்களால் என்ன பிரயோஜம் ? ” இந்தியன்” என்ற திரைப்படம் வந்தது அதைப்பார்த்தாவது இந்த இயக்கங்கள் திருந்தி இருக்கவேண்டும். ஆனால் திருந்தாமல் ஊழலை வளர்கிறார்கள். இந்த பாவப்பட்ட மக்கள் என்னதான் செய்வார்கள். இது போன்ற கொள்ளையை தடுக்க “ம.க.இ.கழகங்கள் ” பயன்படுத்தப்படுமா? மக்கள் ஆதரவு பெருகும் தேர்தலில் நின்று வெற்றிபெறலாம். “புதிய ஜனநாயகத்தை ” உருவாக்கலாம்!!!!!!!!!
///மக்கள் ஆதரவு பெருகும் தேர்தலில் நின்று வெற்றிபெறலாம். “ ” உருவாக்கலாம்!///
அய்யா, தேர்தல் பாதையே திருடர் பாதைதான். பிறகு எப்படி புதிய ஜனநாயகத்தை உருவாக்க முடியும்.
இந்திய ஜனநாயகம் நல்லபாதைதான். “புதிய ஜனநாயகம்”தான் திருடர் பாதை. பெரும்பான்மையான மக்களுக்கு பொறுப்புக் கொடுக்காமல், ஓட்டுப் போடாதே என்று விரல் விட்டு சொல்லக்கூடிய “கோயபல்ஸ்” ஜனநாயக வாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கேலிக்கூத்தானது. நாட்டிற்கான தலைவரை எப்படித்தான் தேர்ந்தெடுப்பது. எம்லோய்மென்ட் அலுவலகம் மூலமோ சர்வீஸ் கமிசன் மூலமோ தேர்ந்தெடுக்க முடியாது! இந்த நாட்டு மக்களுக்கு அதிகாரம் கொடுக்காமல் யாரை எப்படி இந்த நாட்டுக்கு தலைவரை நியமிப்பது எப்படி?