Saturday, July 20, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – மே 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – மே 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

-

புதிய-ஜனநாயகம்-மே-2012

புதிய ஜனநாயகம் மே 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

1. அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமா?
நெல்லை, இடிந்தகரை, கூட்டப்புளியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கூட்டங்கள்.


2. வாடகைதாரர்களின் விவரம் திரட்டும் சென்னை போலீசின் உத்தரவுக்கு நீதிமன்றத் தடை!

குடிமக்களை கிரிமினல்களாக நடத்தும் பாசிசத்தை முறியடிப்போம்!


3. மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா?

அலக்ஸ் பால் மேனனின் ‘சேவை மனப்பான்மை’, அறம் கொன்று அம்மணமாய் நிற்கும் ஆளும்வர்க்கத்தின் மானத்தை மறைக்கக் கிடைத்த கோவணமாகும்.


4. கழிப்பறைக் காகிதமானது சட்டத்தின் ஆட்சி!

காட்டுவேட்டை நடக்கும் சத்தீஸ்கரில் போலீசு சொன்னதுதான் சட்டம் என்ற கேடான நிலைமை உருவாகிவிட்டது.


5. ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!

அடாவடி, திமிர்த்தனம்தான் ஜெயாவின் துணிச்சல்; நீதித்துறையால் முகத்தில் கரிபூசப்பட்டதுதான் அவரது நிர்வாகத் திறமை.

6. ”மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்!”
தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பிரச்சார இயக்கம்.


7. கூடங்குளம் போராட்டம்: அனுபவங்களும் படிப்பினைகளும்.


8. ”தனியார்மயக் கொள்ளையைத் தடுக்க, மறுகாலனியாக்கத்தை மாய்க்க, நக்சல்பாரியே ஒரே மாற்று!”

புரட்சிகர அமைப்புகளின் மே தினச் சூளுரை.


9. சி. பி. எம். மாநாடு: வெங்காயம் என்பதா? வெண்டைக்காய் என்பதா?

வழவழ கொழகொழ வியாக்கியானங்களை அளித்து, தனது சந்தர்ப்பவாதத்தையும் பிழைப்புவாதத்தையும் மூடிமறைத்துவிட முயல்கிறது, சி.பி.எம்.


10. வறுமைக்கோடு வரையறை: ஏழைகளை ஒழித்துக்கட்ட ஓர் எளிய வழி!

மைய அரசு நிர்ணயித்துள்ள வறுமைக்கோடு வரையறை, ஆட்சியாளர்களின் வக்கிர புத்தியைத்தான் காட்டுகிறது.


11. தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம்: இன்னுமொரு அரசு பயங்கரவாத அமைப்பு!

தனியார்மய – தாராளமயத்துக்கு எதிராகப் போராடுபவர்களை, எவ்விதத் தடையுமின்றி ஒடுக்கும் அதிகாரத்தோடு இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது.


12. பதனி டோலா படுகொலை தீர்ப்பு: நீதிமன்றத்தின் நாட்டாமைத்தனம்!

பீகாரில் நடப்பது ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களின் விசுவாச ஆட்சிதான் என்பதை இத்தீர்ப்பு நாடெங்கும் புரிய வைத்திருக்கிறது.


13. ஐ.நா. தீர்மானத்துக்குப் பிந்தைய இலங்கை- இந்தியாவின் புதிய நாடகம்


14. கொட்டடிக் கொலைகள்: கேட்பாரற்ற போலீசு ராஜ்ஜியம்!

புதிய ஜனநாயகம் மே 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

__________________________________

வினவுடன் இணையுங்கள்

 1. சிபிஎம்மின் பாதை என்ன என்று கேள்வி எழுப்பும் புதிய சனநாயகம், நக்சல்பாரி பாதையே மாற்று என்கிறது. எது நக்சல்பாரி பாதை… மாவோயிஸ்டுகள் வலுவாக இருக்கும் சார்க்கண்டு மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் எந்தவித மக்கள் போராட்டங்களுக்கும் அவர்கள் தலைமை தாங்கவில்லையே… யாரையாவது கடத்திவிட்டு, மக்களுக்கான கோரிக்கைகள் எதையும் வைப்பதில்லையே.சகாக்களை விடுதலை செய்யச் சொல்வது என்பதைத்தானே செய்கிறார்கள். இதுதான் உங்கள் பாதையா… என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்பதையும் விளக்குங்கள். சிபிஎம் தனது திட்டத்தை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது. அதனால்தான் அதன் மீது விமர்சனத்தை வைக்க முடிகிறது..

  • ///சிபிஎம்மின் பாதை என்ன என்று கேள்வி எழுப்பும் புதிய சனநாயகம், நக்சல்பாரி பாதையே மாற்று என்கிறது. எது நக்சல்பாரி பாதை…///

   எது நக்சல்பாரி பாதை என்று பல பத்தாண்டுகளாக சி.பி.எம் மிடம் விளக்கி விளக்கி கூறியும் அது செவிடன் காதில் ஊதிய சங்கை போல மீண்டும் மீண்டும் அதே தான் கேட்கிகிறது.

   நீங்க சி.பி.எம் தானே கணேஷ் ?

   எது நக்சல்பாரி பாதை என்பதை உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமானால் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வீசியெறியும் நாலு சீட்டுக்காக ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி அவர்களுடைய முந்தானையிலும் வேட்டியிலும் தொங்கிக்கொண்டு மானங்கெட்ட மழுங்கைகளாக இருப்பதோடு மக்களையும் போர்க்குணமற்றவர்களாக மாற்றும் சி.பி.எம் மின் ஓட்டுப்பொறுக்கி பாதையை புறக்கணித்து, இரசியாவிலும் சீனாவிலும் லெனினும் மாவோவும் புரட்சிக்காக மக்களை அமைப்பாக்கிய வழியில் நின்று திரள் திரளான மக்களை அணிதிரட்டி இறுதியில் லட்சோபலட்சம் ஆயுதம் ஏந்திய மக்களால் இந்த ஒடுக்குமுறை அரசை வீழ்த்தி ஒரு சோசலிச அரசை படைப்பது தான் நக்சல்பாரி பாதை.

   ////மாவோயிஸ்டுகள் வலுவாக இருக்கும் சார்க்கண்டு மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் எந்தவித மக்கள் போராட்டங்களுக்கும் அவர்கள் தலைமை தாங்கவில்லையே.////

   என்று சி.பி.எம் சொல்வதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
   அவர்கள் தலைமை தாங்கவில்லை என்றால் எதற்காக அரச பயங்கரவாதிகள் சல்வா ஜீடும், கோப்ரா, வேட்டை நாய்கள் வெறிநாய்கள் என்ற பெயரில் எல்லாம் ஆயிரக்கணக்கான போலீசு நாய்களை அந்த பகுதிகளில் இறக்கியுள்ளனர்.

   ///யாரையாவது கடத்திவிட்டு, மக்களுக்கான கோரிக்கைகள் எதையும் வைப்பதில்லையே.சகாக்களை விடுதலை செய்யச் சொல்வது என்பதைத்தானே செய்கிறார்கள். இதுதான் உங்கள் பாதையா…//

   அரசின் வன்முறையையும், பயங்கரவாத தாக்குதல்களையும் கண்டிக்காமல் மவுனம் சாதிப்பதன் மூலம் அங்கீகரித்து வரும் அயோக்கியர்கள் எல்லாம் மாவோயிஸ்டுகளின் பதில் தாக்குதல்களை பற்றி பேசுவதற்கு மட்டும் பல அடிக்கு வாயை திறக்கிறீர்கள் என்றால் என்ன ஒரு அயோக்கியத்தனம் இது ? நீங்கள் எல்லாம் அரசின் தோள் மீது சாய்ந்துகொண்டு பேசுகிறீர்களே உங்களுக்கெல்லாம் அசிங்கமாக இல்லையா ?

   ///என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்பதையும் விளக்குங்கள்.///

   இதையும் பலமுறை விளக்கிவிட்டோம். மேலும் மேலே கூறியுள்ளது தான்.

   ///சிபிஎம் தனது திட்டத்தை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது///

   தேர்தலில் நின்று பொறுக்கித்தின்பதற்கு எல்லாம் ஒரு திட்டமா தோழர் அதையும் மக்களிடம் மறைக்காமல் வெளிப்படையாக வைக்கிறீங்களாக்கும் ? நீங்க வெளிப்படையா சொல்லலைனா தமிழக மக்களுக்கெல்லாம் நீங்க பொறுக்கித்திங்கிற கூட்டம்னு தெரியாதா என்ன ?

   • Vadham and vivadham vendiyathu than….but towards where we are going…?
    Tamil cine actors like Karthi (S/o Late Muthuraman, actor), Vijaykanth,
    Sharath Kumar etc started their own parties..but Vijaykanth was influenced by
    the great actor, politician,Publisher and editor Cho Ramaswamy to keep alliance with AIDMK, so Miss Jayalalitha became CM of Tamilnadu..but what is the use..
    the power cut was increasd…bus fare hiked, common man like me who drives taxis/autos, Porters, road-side sellers, vegetable venders etc. are suffering like anything…But we are all pushed to one side to vote for either DMK or
    AIDMK..what to do ?
    we are forced to think ” RAVANAN ANDAL ANNA/ RAMAN ANDAL ANNA ?”
    I stress that the youngesters should come forward to change this type of rule..
    Definitely it will take time, see the freedom struggle started in 1857 through Sepoy Mutiny, but Independence came in 1947 only..so the youngesters have to come forward and arrange for revolution step by step…
    what is the use of talking about RSS, BJP, CPM …etc?
    Our aim to achieve the goal must be strong..

 2. The main point is how to bring a chnage in the rule of our county India?
  Whoever comes to power, wants to earn crores of money and keep it in foreign banks..
  What they are going to achieve by this?
  how to make them realise ?
  Lokayukatha is powerless ?
  State governments are blaming the oppositions only…and repeating the same mistakes…
  It is much better not to talk about the Centre power…
  The P.M., F.M.,H.M.,D.M…all minisers are puppets in the hands of someone or other…the opposition wants to stall the proceedings resulting only loss to
  Public Money…
  Youngesters must comeforward to bring a revolution through their actions
  and chnage the leadership…
  Simply cricisising the activities by ” PUTHIY JANANAYAKAM” is not going bring a re- evolution….
  Writers like …’ ONE THIRD OF THE PEOPLE GOT THIRD RATE POTATOES FOR ONE THIRD OF THE YEAR…’has brought Russian Revolution..
  That is the need for the hour..

 3. மே மாத புதிய ஜனநாயகம் விற்பனை அனுபவம்

  ====
  அன்பார்ந்த உழைக்கும் மக்களே, வணக்கம்.

  மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான விலைவாசி அரசுகளாலேயே திட்டமிட்டு உயர்த்தப்படுகிறது. கேட்டால் கஜானா காலி அதை நிரப்புவதற்கு பேருந்து கட்டணமும், பால் கட்டணமும், வராத மின்சாரத்துக்கான மின் கட்டணமும் உயர்த்தினால்தான் கட்டுப்படியாகும் என்கிறார்கள். புதிய பேருந்துகள் வாங்கி ஓட்டுவதற்கு மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் சாத்தியம் என்று சொல்லி அதை செய்கிறது அரசு. நமது வீட்டில் வருமானம் பற்றாமல் கஜானா காலி ஆகி விட்டது, சேமிக்க முடியவில்லை என்று சம்பளத்தை உயர்த்திக் கொள்ள நாமே முடிவு செய்வது சாத்தியமா? மற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டு உணவு, கல்வி, போக்குவரத்து போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு செலவிடுகிறோம். இல்லை என்றால் இன்னும் சில மணி நேரம் ஓவர் டைம் செய்து, அல்லது கூடுதலாக உழைத்து அதிக பணம் சம்பாதித்து விலை உயர்வை ஈடு கட்டிக் கொள்ள முயற்சிக்கிறோம். இந்தக் கட்டண உயர்வில், மக்களின் போராட்டத்தில் உண்மையில் ஆதாயம் அடைவது யார்? தனியார் பேருந்து நிறுவனங்களுர் தனியார் பால் நிறுவனங்களும், ஊழல் செய்யும் அரசு அரசியல்வாதிகளும்தான். மக்களுக்கு எல்லா பக்கங்களிலும் இடிதான்.

  கஷ்டம் தாங்க முடியாத போது ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு ஓட்டு போடாமல் அடுத்த தேர்தலில் மாற்றுக் கட்சியை ஆட்சி புரியும்படி ஓட்டு போடுகிறோம் நாம். அவர்களும் வந்தது வாய்ப்பு என்று நமது கஷ்டங்களை மேலும் அதிகப்படுத்தும்படி திட்டங்களையும் கொள்கைகளையும் தீட்டுகிறார்கள்.

  நமது நாட்டின் சொத்துக்களான நிலக்கரி, பெட்ரோல் போன்றவற்றை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்று விட்டு அவர்கள் கொள்ளை அடிப்பதை கண்டு கொள்ளாமல் இருக்கும் அரசு சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்து விட்டது என்று பெட்ரோல் விலையையும் அவ்வப்போது உயர்த்திக் கொள்கிறது. அப்போதுதான் அம்பானி அதிக லாபம் சம்பாதிக்க முடியும். நாட்டின் 80% மக்கள் ஒரு நாளைக்கு குறைந்த பட்ச வருமானத்தில் வாழ்க்கையை போராட்டமாக நடத்திக் கொண்டிருக்கும் போது முகேஷ் அம்பானி சில நூறு கோடி ரூபாய்கள் செலவில் தனக்கென மாளிகை கட்டிக் கொள்கிறார். வாஸ்து சரியில்லை என்று அதை கிடப்பில் போட்டும் வைக்கிறார். அது எப்படி சாத்தியமாகிறது?

  இந்தக் கொள்கைகள் நமது வாழ்க்கையை, வாழ்வாதாரங்களை பாதிக்கும் போது அதற்கு எதிராக அமைதி வழியில், அகிம்சை வழியில் போராடும் மக்களை கிள்ளுக் கீரையாக நடத்துகிறது அரசாங்கம். கூடங்குளத்தில் தமது நிலத்தில், தமது ஊரில் அணு உலை இயக்கக் கூடாது என்று அகிம்சை வழியில் 6 மாதங்களுக்கு மேல் போராடிய மக்களை ஏய்த்து விட்டு அவர்கள் மீது போலீஸ் அடக்குமுறையை ஏவி விட்டு அணு உலையை இயக்க ஆரம்பித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. உண்மையில் மின்சாரப் பற்றாக்குறைக்கு மின்வெட்டுக்கு என்ன காரணம்?

  காற்றாலை, அனல் மின்நிலையம் போன்ற மின் உற்பத்தி வாய்ப்புகளை அரசு பயன்படுத்திக் கொள்ளாமல் தனியார் நிறுவனங்களின் கையில் ஒப்படைத்து விட்டு அவர்களிடமிருந்து பல மடங்கு விலையில் மின்வாரியம் மின்சாரம் வாங்க வேண்டியிருப்பதுதான் மின்சார பற்றாக்குறைக்கும் மின் வெட்டுக்கும் காரணம். போராடும் கூடங்குளம் மக்களுக்கு எதிரான பொதுக்கருத்தை உருவாக்க சென்ற மே மாதம் இருந்ததை விட மின் வெட்டை இரண்டு/மூன்று மடங்கு அதிகரித்து மக்களை இருட்டிலும் புழுக்கத்திலும் வாட்டியது அரசு. உண்மையில் கூடங்குளத்திலிருந்து பற்றாக்குறையாக இருக்கும் மின்சாரத்தில் 10ல் ஒரு பகுதி கூட கிடைக்கப் போவதில்லை என்பதை நிபுணர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

  போராடும் கூடங்குளம் மக்கள் மீது பொய் வழக்குகள், தேசத் துரோக வழக்குகள் போட்டு அலைக்கழிக்கிறது அரசு. அவர்கள் எப்படி போராட வேண்டும்? கூடங்குளம் போன்று 60க்கும் மேற்பட்ட இடங்களில் 16 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அமெரிக்கா, பிரான்சு, ரஷ்யா, ஜெர்மனி நாடுகளுக்கு கொடுத்து நமது நாட்டில் 60க்கும் மேற்பட்ட ஊர்களில் அணு உலை அமைக்க திட்டமிட்டிருக்கிறது அரசு. ஜப்பான் புகுஷிமாவில் ஏற்பட்ட அணு உலை விபத்துக்குப் பிறகு ஜப்பான் தான் இயக்கி வந்த அனைத்து 31 அணு உலைகளையும் மூடி விட்டது என்பது சென்ற வாரச் செய்தி. அப்படி வளர்ந்த நாடுகள் கழித்துக் கட்டியிருக்கும் குப்பைகளை மின்சார உற்பத்தி என்ற பெயரில் நமது பணத்தை வாங்கிக் கொண்டு நமது தலையில் கட்ட முயற்சிக்கிறது அரசு. அந்த அணு உலைகளில் ஒன்று நாளை நமது வீட்டு பகுதியில் கூட திட்டமிடப்படலாம். அதை எதிர்த்துக் கேட்டால் நாமும் அரசு ஒடுக்குமுறைக்கு உள்ளாவோம்.

  இதே போன்று பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து பயிர் செய்து வந்த மலைகளையே தனியார் முதலாளிகளுக்கு விற்று விட்ட அரசை எதிர்த்து பழங்குடி மக்கள் சத்திஸ்கர் மக்கள் போராடுகிறார்கள். ஒரிசாவிலும் சத்தீஸ்கரிலும் அமைதி வழி போராட்டங்கள் போராட்டங்கள் பலனளிக்காமல் போலீஸ் அடக்குமுறை, ஆள் கடத்தல், சித்திரவதை இவற்றுக்கு எதிராக தம்மைக் காத்துக் கொள்ள ஆயுதம் ஏந்தி போராடுகிறார்கள் மக்கள். அவர்களை ஒடுக்க நூற்றுக் கணக்கானவர்களை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறது அரசு. அப்படி சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்கும்படி கோரிக்கை வைத்து அலெக்ஸ் பால் மேனன் என்ற அதிகாரியை மாவோயிஸ்டுகள் கடத்தியதை ஊடகங்களில் பெரிதும் கண்டித்தார்கள். அந்த கலெக்டருக்கு தேவையான மருந்துப் பொருட்களை வரவழைத்துக் கொடுத்து அவரை பராமரித்து தமது கோரிக்கையை நிறைவேற்றும்படி பேச்சு வார்த்தை நடத்திய மாவோயிஸ்டுகள் குற்றவாளிகளா? லாக்கப்புகளில் அப்பாவிகளை அடைத்து சித்திரவதை செய்து கொலை கூட செய்யத் தயங்காத காவல் துறை குற்றவாளியா?

  அரசுகளும் அரசியல் தலைவர்களும் மக்களின் நலனுக்காக மக்கள் கோரிக்கைகளுக்கு செவி மடுப்பார்கள் என்ற அணுகுமுறைகளும் அரசியலும் போராட்டங்களும் தோல்வி அடைந்து விட்டன என்பதை நமது அனுபவத்தில் நாம் பார்த்துள்ளோம். நீதிமன்றங்கள் போடும் உத்தரவுகளைக் கூட அரசியல்வாதிகள் மதிப்பதில்லை. மக்களை படு கொலை செய்த வழக்குகளில் கூட உயர் நீதிமன்றங்கள் குற்றவாளிகளை விடுதலை செய்து விடுகின்றன. தமக்கு எதிராக குரல் எழுப்பும் மக்களை சுற்றி வளைத்து மிரட்டி ஒடுக்குவதற்காக புதுப் புது சட்டங்களையும் அமைப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன மத்திய மாநில அரசுகள்.

  இப்படிப்பட்ட சூழலில் நமது நாடு, நமது வளங்கள், நமது உழைப்பு இவற்றை பாதுகாத்து நமது வாழ்க்கையையும் நமது குழந்தைகளையின் வாழ்க்கையையும் பாதுகாப்பதற்காக சரியான அரசியல் அணுகுமுறையுடன் போராடுவதுதான் மக்கள் முன் இருக்கும் ஒரே வழி. புதிய ஜனநாயகம் பத்திரிகையை வாங்கி எமது போராட்டங்களுக்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
  =============

  குறிப்பாக மின்வெட்டு பற்றிய கோபம் மக்கள் மத்தியில் பரவலாக இருப்பது தெரிகிறது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தையும் மீறி அணு உலையை அரசு இயக்க ஆரம்பித்து விட்ட பிறகும் மின்வெட்டு குறையாமல் இருப்பது மக்கள் மனதில் கேள்விகளை எழுப்புகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க