Saturday, August 13, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் இந்துஸ்தான் யூனிலீவர்: இனி இந்த முதலாளிகளை என்ன செய்யலாம்?

இந்துஸ்தான் யூனிலீவர்: இனி இந்த முதலாளிகளை என்ன செய்யலாம்?

-

கோலெடுத்தால் குரங்காடும் என்ற பழமொழி போன்று சாலையை மறித்தால்தான் அரசு ஆடும் என்பது புதுமொழி. இது உழைக்கும் மக்களுக்கு தெரிந்த அனுபவ மொழி. புதுவை வடமங்கலத்தில் இயங்கிவரும் இந்துஸ்தான் யூனிலீவர் (டெட்ஸ்) தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்பந்தமான போராட்டத்தை அனைவரும் அறிந்திருப்பீர்கள். கடந்த ஒரு ஆண்டு காலமாக ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராடியும் இதுவரையிலும் வழங்காமல் தொழிலாளர்களை அலைக்கழித்து வருகிறது இந்நிறுவனம்.

ஊதிய உயர்வு பற்றிய பேச்சுவார்த்தையில் முறையாக பங்கெடுக்காமல் இழுத்தடித்து தொழிலாளர்களின் உழைப்பின் பலனை அபகரித்துக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளர்கள், புதுவையின் முதல்வர், கலெக்டர், தாசில்தார், தொழில்துறை ஆணையர், தொழில்துறை அமைச்சர் என அனைத்து ஆளும் கும்பல்களுக்கும் மனு கொடுத்தனர். மனு கொடுத்ததன் விளைவாக அரசிடமிருந்து எந்த ஒரு சிறு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதன் பின்விளைவாக நிர்வாகமானது உற்பத்தி குறைந்துள்ளதாக பொய்யான காரணம் காட்டி அனைத்து தொழிலாளர்களுக்கும் 4 மாத சம்பளம் பிடித்தம் செய்தது.

தொழிலாளர்களை பட்டினியில் தள்ளுவதன் மூலம் தொழிலாளர்களில் சிலரை பலவீனப்படுத்தவும் சங்கத்தை உடைக்கவும் முயற்சித்தது. இந்நிலையில் அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபட்டு 10-5-12-ல் சட்டவிரோத சம்பள பிடித்தத்தை உடனே வழங்கக் கோரியும், 7 தொழிலாளர்களின் பணியிடை நீக்கத்தை ரத்து செய், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை நடைமுறைப்படுத்து என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 152 தொழிலாளர்களுடன் வில்லியனூர் வட்டாட்சியர் அவர்களை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

இதிலும் எந்த பயனும் ஏற்படாததால் மே 18 அன்று கலெக்டர் அலுவலகம் முன்பு சுமார் 350 தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக சங்க முன்னனியாளர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அலுவலக அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். பேச்சுவார்த்தைக்கென்று சென்ற சங்க முன்னணியாளர்களை மிரட்டி பணியவைக்க முயன்றனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து வெளியேறிய தொழிலாளர்கள் போராட்டத்தை வீச்சாக எடுத்துச் சென்றனர். பின்னர் காவல்துறை அனைவரையும் கைது செய்தது.

ஓட்டுப்போட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் இந்த அரசானது மக்கள் நலனுக்கானது அல்ல என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்த தொழிலாளர்கள் அதை உழைக்கும் மக்களுக்கும் புரியவைக்கும் விதமான முழக்கங்களை எழுப்பி கைதாகினர். அன்று மாலையே சங்க முன்னனியாளர்களை சந்திப்பதாக கலெக்டர் கூறியதை அடுத்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தொழிலாளர்கள் கலெக்டரைச் சந்தித்து, நிர்வாகமானது தான் கூறும் விதிமுறைகளையே அப்பட்டமாக மீறும் அதன் அயோக்கியத்தனத்தை விளக்கிக் கூறினார்கள். இதனையடுத்து .வரும் 21-5-12 அன்று HUL ல் ஆய்வு செய்வதாக கலெக்டர் தெரிவித்தார்.

21-5-12 அன்று HULன் நிர்வாக மேலாளர் மற்றும் அலுவலக மேலாளரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு ஊதிய உயர்வு சம்பந்தமாக கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு இருதரப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் HUL நிர்வாகமோ அரசின் உத்தரவை அலட்சியப்படுத்தி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் இன்றளவும் புறக்கணித்து வருகிறது. நிர்வாகத்தின் அடாவடித்தனத்திற்கு எதிராக புதுவை அரசும் ஒரு மயிரையும் பிடுங்கிப் போடவில்லை. நியாயம் கிடைக்கும் வரையில் தொழிலாளர்களும் போராட்டத்தை கைவிடப்போவதுமில்லை என தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

அம்பானிகளுக்காக நள்ளிரவில் பெட்ரோல் விலையை ஏற்றும் அரசு, தொழிலாளர்கள் தங்களின் உயிர்வாழும் கோரிக்கைகளுக்காக உச்சி வெயிலில் சாலையில் நின்று போராடினாலும் சிறிதும் அசைந்து கொடுப்பதில்லை. இனி இந்த முதலாளிகளையும் அவர்களின் ஊதுகுழலாக செயல்படும் அரசையும் என்ன செய்யலாம்?

_______________________________________________________________

தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுவை.

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. பிறகு, பிடித்தம் செய்த 4 மாத சம்பளத்தை தொழிலாளர்களுக்கு உடனே வழங்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், நிர்வாகமோ அந்த 4 மாதத்திற்குண்டான சம்பளத்தையும் வழங்காமல் மேலும் 8 நாட்கள் சம்பளத்தையும் பிடித்தம் செய்துள்ளது. கலெக்டரின் உத்தரவுகள் அனைத்துமே வாய்மொழி உத்தரவுகள்தான். கலெக்டரும் அடிப்பது போல்தான் பாசாங்கு செய்கிறார். அரசும் நிர்வாகமும் கூட்டாக செயல்படுகின்றன. இனி போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும்.

 2. இனி இந்த முதலாளிகளையும் அவர்களின் ஊதுகுழலாக செயல்படும் அரசையும் என்ன செய்யலாம்?
  ஆணீயே புடுங்கவேணாம்….

  • //இனி இந்த முதலாளிகளையும் அவர்களின் ஊதுகுழலாக செயல்படும் அரசையும் என்ன செய்யலாம்?
   ஆணீயே புடுங்கவேணாம்…//
   அவனா.. நீ..! ”லூசு லூசு லூசு.”

 3. அவனா.. நீ..! ஓங்கிட்ட இப்ப அந்த ராதாரவியே பேசறார் ,”லூசு லூசு லூசு.”

 4. //கலெக்டரின் உத்தரவுகள் அனைத்துமே வாய்மொழி உத்தரவுகள்தான். கலெக்டரும் அடிப்பது போல்தான் பாசாங்கு செய்கிறார். அரசும் நிர்வாகமும் கூட்டாக செயல்படுகின்றன.//
  உண்மையே, அரசும் அரசு நிர்வாகமும் முதலாளிகளுக்கு சேவகம் செய்யக்கூடிய ஒரு அலுவலகம்.ஒரு காரியாலயம்.தொழிலாளர்களுக்கு புரியும்படி சொன்னால் பர்சனல் டிபார்ட்மென்ட். என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து அரசும் அரசு நிர்வாகமும் நிர்வாணமாகியுள்ளது.மக்கள் நலத்துக்காக இருக்கிறோம்,தேச நலத்துக்காக இருக்கிறோம்,சமத்துவத்தை உருவாக்குவதற்காக இருக்கிறோம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த பத்தொன்பதாம் நூற்றான்டின் இறுதிக் காலத்திலே அந்த முகத்திரைகளை எல்லாம் திரைகிழித்து அரசின் உண்மையான நோக்கம் என்பது முதலாளிகளுக்கு தொண்டூழியம் பண்ணுவது, கணக்கு வழக்கு வேலை பார்ப்பதுதான். முதலாளிகளுக்கு கணக்குப்பிள்ளை வேலைப் பார்ப்பதற்குத்தான் இந்த அரசு. முதலாளிகளுக்கு அடியாள் வேலைப்பார்ப்பதற்குத்தான் இந்த அரசு என்று ஆசான் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலே எழுதியுள்ளார்.இது இன்றைக்கும் எவ்வளவு பொறுத்தப்பாடாக உள்ளது. எனவே, அடிப்படையில் சுரண்டல் முதலாளிகளையும் அவர்களின் புகலிடமான நடப்பு அரசியலமைப்பையும் மக்களுக்கு விளங்கச்செய்து இவைகளை இப்புவிப்பரப்பிலிருந்தே அகற்றிட அமைப்பாக அணிதிரண்டுப் போராடவேண்டும் என்பதே நம்முன் உள்ள ஒரே சவால் ஆகும்.

 5. முதலாளின்னா நீங்க எந்த முதலாளியை சொல்றீங்க தேசிய முதலாளியா , குட்டி முதலாளியா பன்னாட்டு முதலாளியா?

  இந்த தரவரிசை பட்டியலே இன்னும் நீங்க விடலை பிறகு அம்பானி தேசியமுதலாளி அதனால நட்பு சக்தின்னு சொல்லிட்டீங்கன்னா என்ன செய்ற்து

  //அம்பானிகளுக்காக நள்ளிரவில் பெட்ரோல் விலையை ஏற்றும் அரசு, தொழிலாளர்கள் தங்களின் உயிர்வாழும் கோரிக்கைகளுக்காக உச்சி வெயிலில் சாலையில் நின்று போராடினாலும் சிறிதும் அசைந்து கொடுப்பதில்லை. இனி இந்த முதலாளிகளையும் அவர்களின் ஊதுகுழலாக செயல்படும் அரசையும் என்ன செய்யலாம்?//

  • //முதலாளின்னா நீங்க எந்த முதலாளியை சொல்றீங்க தேசிய முதலாளியா , குட்டி முதலாளியா பன்னாட்டு முதலாளியா?//

   ஜயா,அறிவாளி தியாகு அவர்களே முதலாளின்னா இந்துஸ்தான் யூனிலீவர் என்ற நிறுவனத்தின் முதலாளி என்னவகை முதலாளின்னு உங்கள் சிந்தனைக்கே எட்டவில்லையா? இல்லை நடிக்கிறீரா?

   //இந்த தரவரிசை பட்டியலே இன்னும் நீங்க விடலை பிறகு அம்பானி தேசியமுதலாளி அதனால நட்பு சக்தின்னு சொல்லிட்டீங்கன்னா என்ன செய்ற்த//

   அம்பானிய தேசிய முதலாளி என்றும் அது நட்பு சக்தி என்றும் யார் எங்கே சொல்லியிருக்கிறார்கள்? ஆதாரம் இல்லாமல் இப்படி அரைகுறையா அவுத்துவிட்டு இப்ப என்ன சாதிக்கப்போற?

 6. ஒண்னு பண்ணலாம்.அனைத்து தொழிலாளர்களும் ஆயுதங்களுடன் தொழிற்சாலையை கையகப்படுத்தலாம்.அத்ற்கான ஏற்பாடுகள் செய்வோம்.

 7. அண்ணாத்தே நீங்க நக்கலச்சொன்னது நடக்க்த்தான் போகுது

 8. தம்ர்பி சுடலை

  //அம்பானிய தேசிய முதலாளி என்றும் அது நட்பு சக்தி என்றும் யார் எங்கே சொல்லியிருக்கிறார்கள்? ஆதாரம் இல்லாமல் இப்படி அரைகுறையா அவுத்துவிட்டு இப்ப என்ன சாதிக்கப்போற?
  //

  முதலில் நீ லிஸ்டு வெளியிடு அல்லது யார் தேசிய முதலாளின்னு சொல்லு அப்புறம் அம்பானி யார்னு நான் சொல்றேன் இதென்ன வம்பா இருக்கு யார் எதிரின்னு தெரியாம எப்படி உன்பின்னால வருவாக

  • குட்டி முதலாளி தியாகுவை இரவு 11 மணிவரை வைத்து வேலை வாங்கிச் சுரண்டும் அவரை விட கொஞ்சம் ‘பெரிய குட்டி முதலாளி’ ஒனர் ஒழிக.

   நாள் பூரா சீரியசா வேலை கீலை பார்க்காம தன்னோட உதவியாளரை சுரண்டிகிட்டு, பிளாகு,பின்னூட்டம்,பிளஸ்சுன்னு கோயில் காளையாட்டம் சுத்திகிட்டு கிடந்த குட்டி முதலாளி தியாகுவுக்கே இந்த கதியா??

   ச்சோ சேடு 🙁

   • ஆரம்புச்சாங்கய்யா தியாகு குட்டி முதலாளின்னு யோவ் மரமண்ட நான் கேட்டது யார் தேசிய முதலாளி யார் குட்டி முதலாளி என்ற வரையரையை பற்றி என்னமோ புத்தகம் போட்டு இருக்கானுன்னு போய் கேட்டா அதெல்ல்லாம் உள்சுற்றுக்குன்னு சொல்லிட்டானுக

    அதில வேற ஒன்றுமில்லை பாஸ் ஏற்கனவே கிழிந்து போன உங்கள் நக்சல்பாரி அரசியல் கோமணத்தை ஒட்ட வைக்க பிரதான முயற்சி எடுத்துகிறாங்க ஆனா பப்பு வேகலை

    அந்த புத்தகத்தில் இருக்கிற கட்டுரைகளை வெளியிட்டு விவாதம் செய்லாமே தில்லு இருந்தா

    • பாஸ், ஏர்டெல்ல நமீதா சர்வீசை ஓட்டும்போதே இன்னொரு சைடுல அரசியல் விவாதமா? சரியான குஷ்டாவதானிதாங்க நீங்க! #வாட் எ மேன் (படையப்பா அப்பாஸ் எபெக்டு)

  • //முதலில் நீ லிஸ்டு வெளியிடு அல்லது யார் தேசிய முதலாளின்னு சொல்லு அப்புறம் அம்பானி யார்னு நான் சொல்றேன் இதென்ன வம்பா இருக்கு யார் எதிரின்னு தெரியாம எப்படி உன்பின்னால வருவாக//

   மேற்கண்ட செய்திக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் இந்துஸ்தான் யுனிலீவர் என்ற நிறுவனம் இந்தியாவில் இந்துஸ்தான்லீவர் என்றும் பாகிஸ்தானில் பாகிஸ்தான்லீவர் என்றும் இலங்கையில் லங்காலீவர் என்றும் அவதாரங்கள் பல எடுத்துக்கொண்டு அந்தந்த நாட்டின் இறையான்மை கொண்ட மக்களையோ, தொழிலாளர்களையோ, அவர்களின் உரிமைகளையோ அல்லது அந்தந்த நாடுகள் வகுத்துக்கொண்ட அரைகுறை இறையாண்மை கொண்ட சட்டங்களையோ இவை எவற்றையும் மயிரளவிற்குகூட மதிக்கமுடியாது என இறுமாந்துக் கொண்டு கடுமையாக சுரண்டிக் கொழுக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். இதன் முதலாளி ஒரு குட்டிமுதலாளியோ, தேசிய முதலாளியோ சத்தியமா கிடையாது மாறாக பன்னாட்டு முதலாளி எனவே இதனை எதிர்த்து போராடி முறியடிக்கவேண்டும்.எதிரி சக்தியை இனம்காட்டியாச்சு, இனி என்ன செய்யப்போகிறார் தியாகு அண்ணாச்சி?

   • //இதன் முதலாளி ஒரு குட்டிமுதலாளியோ, தேசிய முதலாளியோ சத்தியமா கிடையாது மாறாக பன்னாட்டு முதலாளி எனவே இதனை எதிர்த்து போராடி முறியடிக்கவேண்டும்.எதிரி சக்தியை இனம்காட்டியாச்சு, இனி என்ன செய்யப்போகிறார் தியாகு அண்ணாச்சி//

    இந்துஸ்தான் லீவர் இதெல்லாம் செய்றான் அதனால அவனை அழிக்கனும் என்கிற உங்கள் பிரசங்கம் ஓக்கே ஆனால் நான் கேட்டது வரையறை
    யார் தேசிய முதலாளி என்கிற வரையறை அதை சொல்லாம

    வாய்பாட சொல்லிட்டா பெருக்கல் நான் போட்டுப்பேன்

    ஒவ்வொரு முறையும் உங்ககிட்ட வந்து விடைக்கு நிக்கமாட்டேன்ல 🙂

    • ///ஒவ்வொரு முறையும் உங்ககிட்ட வந்து விடைக்கு நிக்கமாட்டேன்ல ///
     தியாகுஜி, இந்த விடைக்காகத்தான் நமிதாவுக்கு சர்வீசு போட்டீங்களே? என்ன ஆச்சு??

   • சுடலை, உங்களுக்கு என்ன துணிச்சல், இன்னும் லெனினிய யுகத்தில் இருக்கும் நீங்கள் தியகுவிய யுகத்தின் ஸ்தாபகரும், சோல் புரொப்புரைட்டருமான தியாகுவுக்கே பாடம் எடுக்க பார்க்கறீர்களா?

 9. பாஸ், நீங்க என்னை பாலோ செய்யும் நேரத்தில் கொஞ்சம் அரசியல் கருத்தை உருவேற்றி கொள்ள மெனக்கெடலாமே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க