Friday, December 13, 2024
முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்மின்வெட்டு– மின்கட்டண உயர்வு–பெட்ரோல் விலை உயர்வு ஏன்? பொதுக்கூட்டம்!

மின்வெட்டு– மின்கட்டண உயர்வு–பெட்ரோல் விலை உயர்வு ஏன்? பொதுக்கூட்டம்!

-

மின்வெட்டு –  மின்கட்டண உயர்வு –

பெட்ரோல் விலை உயர்வு ஏன்?

கோவன்பொதுக்கூட்டம்

இடம்:
அண்ணா கலையரங்கம் அருகில்,

வேலூர்

நாள்: 02.07.2012,

திங்கள் மாலை 6.00 மணி

தலைமை:

தோழர் த.இராவணன்

சிறப்புரை:

தோழர் காளியப்பன்,  ம.க.இ.க
மாநில இணைச் செயலாளர்,

மகஇக மையக்
கலைக் குழுவின்

புரட்சிகர கலை நிகழ்ச்சி

நடைபெறும்.

அனைவரும் வருக!

 ___________________________________________

மக்கள் கலை இலக்கியக் கழகம், வேலூர்

படம்- கோ.மணிவர்மா

 ___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வேலூரில் …மிகச் சிறந்த பேச்சாளர்….மிகச் சிறந்த கலைக் குழு … வாய்ப்புள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி….

  2. கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 1 மணி நேரம் தாமதமாக தொடங்கிய கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக தியாகிகளுக்கு வீரவணக்கம் சொல்லும் பாடலை கலைக்குழு தோழர்கள் பாடினார்கள்.

    அதைத் தொடர்ந்து தலைமை ஏற்ற தோழர் இராவணன், தனக்கே உரிய பாணியில் வேலூர் காவல் துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும், மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதார அமைச்சரையும் ஒரு பிடி பிடித்தார்.
    — பணக்காரர்கள் காரில் பறக்க ஆறு வழிச்சாலையை பளபளப்பாக போட்டிருக்கிறார்கள், ஊருக்குள் சாலைகள் கொத்தி விட்டது போல வைத்திருக்கிறார்கள்.
    — அரசு மருத்துவமனையில் எக்ஸ்-ரே எடுக்கப் போனால் பிலிம் இல்லைன்னு பிலிம் காட்டுறான்
    — இன்னும் சிறிது நேரத்தில் கொசுக்கள் வந்து தூக்கிக் கொண்டு போய் விடும்
    — ஒரு சுவரொட்டி ஒட்டினால் கூட வந்து அழைத்துக் கொண்டு போய் விடுகிறார்கள் போலீஸ்காரர்கள்

    என்று அவரது பேச்சை அனைவரும் ரசித்தார்கள்.

    அதைத் தொடர்ந்து தோழர் காளியப்பன் பெட்ரோல் விலை, மின்கட்டண உயர்வு, மின் வெட்டு போன்ற பிரச்சனைகளின் காரணங்களை தெளிவாக விளக்கினார். அவரது நீண்ட உரை பொருளாதார பிரச்சனைகளின் அனைத்து பரிமாணங்களையும் தொட்டுச் சென்றது. இவை அனைத்துக்கும் தீர்வு புதிய ஜனநாயகப் புரட்சிதான் என்று ஆணித்தரமாக முடித்தார்.

    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மையக் குழுவின் கலை நிகழ்ச்சி தொடங்கும் போதே ‘வேலூர் சுதந்திரம் அடைந்திருக்கிறது, அதற்கு கை தட்டுவோம்’ என்று அழைப்பு விடுத்தார் தோழர். பொதுக்கூட்டம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி மறுத்ததால் கடந்த 10 ஆண்டுகளாக மகஇகவின் பொதுக்கூட்டம் வேலூர் நகரில் நடத்தப்படவில்லையாம்.

    கிண்டலும் கேலியும் கோபமும் நிறைந்த அறிமுக உரைகளுடன் போர்க்குணம் நிறைந்த பாடல்களை அரங்கேற்றினார்கள் மையக் கலைக்குழு உறுப்பினர்கள்.

    இரவு 9.30 வரை அனைவரும் கலையாமல் உட்கார்ந்திருந்தார்கள். கூட்டத்துக்கான செலவுகளுக்காக நிதி வசூலிக்க தோழர்கள் வந்த போது, பகுதி மக்களும், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும், ஆட்டோ ஓட்டுனர்களும் தம்மால் இயன்ற நிதியை போட்டார்கள், அவை நூறு ரூபாய் நோட்டுகளாகவும் இருந்திருக்கலாம், ஒரு ரூபாய் நாணயமாகவும் இருக்கலாம். இறுதியில் சுமார் 2100 ரூபாய் வசூலானது என்று அறிவித்தார்கள்.

    வேலூர் மாநகரில் மகஇகவின் செயல்பாடுகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க