Thursday, August 11, 2022
முகப்பு கட்சிகள் காங்கிரஸ் கருணாநிதியின் கசப்பு!

கருணாநிதியின் கசப்பு!

-

ஏதாவது பெட்டி கேஸ் ஜாமீனாவது கிடைக்குமா, பத்திருபது தேற்ற முடியுமா என்றெல்லாம் அன்றாடம் புலம்பியவாறு அழுக்குக் கோட்டோடு நீதிமன்றம் செல்லும் பரிதாபத்திற்குரிய வழக்கறிஞர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் கருணாநிதியை பார்த்துக் கொள்ளுங்கள், கிட்டத்தட்ட, இல்லையில்லை அச்சு அசலேதான். என்ன பல நூறு கோடிகள் இருந்தும் இவரை வக்கீலாக யாரும் மதிக்கவில்லை என்பதுதான்  ஒற்றுமையில் ஒரு வேற்றுமை.

பெட்ரோல் விலை உயர்வை எதிர்ப்பதின் பெயரில் எதிர்ப்பே இல்லாமல் ஒரு சடங்கு ஆர்ப்பாட்டத்தை தி.மு.க நேற்று – 30.5.2012 – நடத்தியது. அதில் காங்கிரசு கூட்டணி அரசிலிருந்து தி.மு.க விலகுமென கருணாநிதி பேசியதாக சில தொலைக்காட்சிகள் வேண்டுமென்றே கிளப்பிவிட்டிருக்கின்றன. அதிர்ச்சியடைந்த கருணாநிதி செய்தியாளர்களிடம் விளக்கமளித்திருக்கிறார்.

“பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று எங்களால் நிபந்தனை விதிக்க முடியாது. குறைக்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறிவிடுவோம் என்றும் கூற முடியாது. ஏனென்றால் திடீரென்று கூட்டணியை விட்டு வெளியே வந்தால் மத்தியில் வரவிருக்கும் ஆட்சி பிற்போக்கான மதவாத சார்புடைய ஆட்சியாக வரலாம். எனக்கு இப்போது வந்துள்ள தகவல்களின்படி பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசித்து வருவதாகக் கேள்விப்படுகிறேன். மத்திய அரசிடமிருந்து நல்ல தகவல் வரும் என்று எதிர்பார்க்கிறேன். விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் வர உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நெருக்கடியை மத்திய அரசுக்குக் கொடுக்கக்கூடிய காரியங்களை நாங்கள் உருவாக்க மாட்டோம். திமுக கசப்போடு அந்தக் கூட்டணியில் நீடிக்கும்.” இதுதான் கருணாநிதியின் விளக்கம்.

இந்தப் போராட்டத்தை மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாகக் கொள்ளலாமா என்று கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இது மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இல்லை. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்’ என்று சொல்லியிருக்கிறார். ஆலமரத்து பஞ்சாயத்துக்குப் போன நாட்டாமை தன்னையே குற்றவாளி என்று தண்டித்துக் கொண்ட கதையை விட கருணாநிதியின் நாடகம் மோசம்.

கருணாநிதி-கார்டூன்இந்தக் கருமத்திற்கு ஒரு அறிக்கையோடு மட்டும் இந்த விலை உயர்வு அத்தியாயத்தை முடித்திருக்கலாம். ஊர் முழுக்க ஆர்ப்பாட்டம் என்று சொந்த செலவில் சூனியம் வைத்திருக்கத் தேவையில்லை. தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் என்று அறிவித்ததினாலேயே ஊடகங்கள் கூட்டணி விலகல் திரியை கொளுத்திப் போட்டன. இல்லையெனில் தினத்தந்தியின் மூன்றாவது பக்கத்து செய்தியோடு அந்த அறிக்கையோ அக்கப் போரோ முடிந்திருக்கும்.

7.50 ரூபாய் விலை உயர்வு என்பது நாடு முழுக்க பெரிய அதிர்ச்சியையும், கோபத்தையும் மக்களிடம் கிளப்பி விட்ட பிறகு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆக வேண்டிய கடமை எல்லா கட்சிகளுக்கும் வந்தது போன்று தி.மு.கவிற்கு வந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் அந்த கடமை நாடகம் நடிப்பே இல்லாமல் இவ்வளவு அவலச் சுவையுடனா நடக்க வேண்டும்?

சோனியாவே அடித்துத் துரத்தினாலும் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அடிமைத்தனத்தை வைத்துக் கொண்டே வருவோர், போவோர் அடிப்பதை தாங்கிக் கொண்டே, “நான் ரொம்ப நல்லவன்னு சொன்னான்னு”  ஏன் எல்லோரின் சிரிப்புக்கு ஆளாக வேண்டும்?

பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசுக்கு எதிர்ப்பில்லையாம், இந்த ஆர்ப்பாட்டம் பெட்ரோல் விலை உயர்விற்கு மட்டுமென அஃறிணைப் பொருளான பெட்ரொலை ஒரு அரசியல் தலைவர் போல ஆளாக்கி சண்டையிடும் துர்ப்பாக்கிய நிலைமைக்கு கருணாநிதி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி பெட்ரோல் விலையை தீர்மானிக்கும் பொறுப்பு பெட்ரோலுக்கே இருக்கிறதென ஒரு அரிய தத்துவத்தை வேறு கண்டுபிடித்திருக்கிறார் அவர். மக்கள் மீது என்ன ஒரு மரியாதை!

இதில் மதவாத கட்சிகள் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்ற கடமையை மக்களுக்கு வரலாறு தெரியாது என்று துணிந்து நம்பிக்கையோடு விடுகிறார். வாஜ்பாயியின் மடியில் அமைச்சர் பதவிகளை ருசித்துக் கொண்டே, குஜராத் படுகொலையின் போது கண்ணை மூடிக் கொண்டதெல்லாம் தி.மு.கவின் மதச்சார்பின்மைக்கு மகுடம் சூட்டிய நிகழ்வுகள் போலும்.

போதாக்குறைக்கு குடியரசுத் தலைவர் தேர்தல் வரும்போது கூட்டணியை விட்டு நீங்குவது போன்ற பொறுப்பற்ற செயல்களை செய்ய மாட்டாராம். இதைக் கேட்டால் அந்த ரப்பர் ஸ்டாம்ப் பதவி கூட ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு அழும், இந்த ஊரில் தன்னையும் மதிக்க தெரிந்த ஒருவர் இருக்கிறார் என.

தரகு முதலாளிகளின் கட்சியாக உப்பிவிட்ட தி.மு.கவின் அரசியல், என்ன செய்தாவது அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டு சேர்த்து வைத்த சொத்துக்களை காப்பாற்றுவதும், விரிவாக்குவதும் என்றான பிறகு இங்கே ஒட்டுப் பொறுக்கிக் கட்சிக்களிக்குரிய வெத்து வேட்டு சவுடால் கூட இல்லை என்றால் கருணாநிதியின் வீழ்ச்சியை புரிந்து கொள்ளலாம்.

தி.மு.க கசப்போடு காங்கிரசுக் கூட்டணியில் நீடிக்கும் என்று சொல்வதிலிருந்தே அவரது ஏனைய நவரசங்கள் போட்டி போடும் அழகினை தரிசிக்கலாம். வாரிசுச் சண்டைகளினால் அலுப்பு, கனிமொழி சிறையினால் வெறுப்பு, தி.மு.க அமைச்சர்களின் கைதால் வரும் நடுக்கம், இடையில் பேரன்களின் படத்தை பார்க்க வேண்டிய கடமை, ஜெயலலிதாவுக்காக எழுத வேண்டிய அறிக்கையின் நிர்ப்பந்தம், இதில் பெட்ரோல் விலை உயர்வு என்றால் அவர் என்னதான் செய்வார்?

தமிழகத்தின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு ஆளும் ஜெயலலிதா மட்டுமல்ல, எதிர்க்கட்சியான தி.மு.கவும் அதன் தலைவரும் கூடத்தான் காரணம். பாசிசமும், கழிவிரக்கமும் இவர்களது இன்றைய உணர்ச்சி என்றால் அந்த உணர்ச்சியின் அடிப்படை கார்ப்பரேட் மயமாகிவிட்ட திராவிட அரசியல் என்றால் மறுப்பவர் உண்டா?

_________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. / தமிழகத்தின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு ஆளும் ஜெயலலிதா மட்டுமல்ல, எதிர்க்கட்சியான தி.மு.கவும் அதன் தலைவரும் கூடத்தான் காரணம். / – என்ன பாஸ் – ‘எதிர்க்கட்சி’ தேமுதிக – என்பது கூட தெரியமா பதிவு எதற்கு…

  • ஓய் பிஜி, பெரும்பான்மை ஓட்டு வாங்கி ஆட்சி அமைத்த கட்சி – அதோட ஆட்சியில கூட்டு வச்ச கட்சி தவிர அரை சீட்டு-ஒரு சீட்டு-ஒன்னரை சீட்டு வாங்குனவனெல்லாமே எதிர்கட்சிதான் அதுல நம்ம மப்புடன்-கப்புடன் தேமுதிக பிரதான எதிர்கட்சி.

   போய் அரசியல்ல பிரிகேஜி படிச்சுட்டு அப்புறமா எங்க தகரத்தலைவர் தியாகு மேரி எல்கேஜிக்கு பாசாயி லூசுத்தனமா ஒளர ஆரம்பிக்கலாம்

 2. என்னது தேமூதீகவா! யோவ் காமெடி பீசு விட்டா காங்கிரசையெல்லாம் தமிழ்நாட்டு கட்சி லிஸ்டுல சேப்ப போலிருக்கே

 3. அட சண்ட போடாதிங்க ஏட்டையா. காங்கிரசு ஒரு காமெடி பீசு, திமுக ஒரு மொக்க பீசு, தேமுதிக ஒரு ஒலரல் பீசு, அதிமுக ஒரு அட்டு பீசு மொத்தத்துல எல்லாமே லூசு……….

 4. //இந்தக் கருமத்திற்கு ஒரு அறிக்கையோடு மட்டும் இந்த விலை உயர்வு அத்தியாயத்தை முடித்திருக்கலாம். ஊர் முழுக்க ஆர்ப்பாட்டம் என்று சொந்த செலவில் சூனியம் வைத்திருக்கத் தேவையில்லை. //

  This drama is same as the one he has done for Eelam. Todays Kalaignar TV news was praising DMK and Kalaignar for this ஆர்ப்பாட்டம், due to this PM has called the meeting and requested oil companies to reduce the price and as a result Rs 2 is going to be reduced it seems.

 5. The dynastic DMK politics is no different from congress. In the name of poor and downtrodden karunanidhi family amassed wealth that should last a few generations. I fail to understand why vinavu is still having soft corner for karunanidhi-sundaram

 6. கலைஞர் செய்திகளின் மக்களின் குரல் நிகழ்ச்சியில் 10 ஆண்டுகளாக வறுமை ஒழிக்காமல் மன்மோகன் அரசு என்ன செய்தது என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்க சிறப்பு விருந்தினரும் திமுக அபிமானியும் ஆன மனுஷபுத்திரன் கலந்து கொண்டு இந்த அரசு எப்படி பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது உலகமயக்கொள்கைகளை போட்டு உடைத்து எரிகிறார்…

  இதே போல செய்திகளில் வேலூரில் ரோடு இல்லை, இந்த பள்ளியில் ஒரு ஆசிரியர் கூட இல்லை, இங்க பசி, பட்டினியோடு மக்கள் கஷ்டப்படுகிறார்கள், இந்த மருத்துவமனையில் மருந்து இல்லை… என இல்லை, இல்லை என ஓலமிடுகிறார்கள்.

  இதெல்லாம் ஜெயா ஆட்சி இரண்டு ஆண்டுகளாக ஆட்சி செய்யும் தமிழ்நாடு என்றும் அதனால் அனைத்தும் சரியில்லை என்றும் அதற்கு தீர்வாக கலைஞர் அடுத்த தமிழக முதல்வராக ஆக்க வேண்டும் என சொல்ல வருகிறார்கள்.

  அப்ப கலைஞர் 5 முறை ஆட்சி புரிந்தது தமிழ்நாடா இல்லை கர்நாடகாவா என தமிழன் எவனும் யோசிக்க கூட மாட்டானா? மன்மோகன் சிங் உடன் 10 வருஷம், வாஜ்பாய் அரசுடன் 5 வருஷம் என கூட்டணியில் இருந்து மந்திரி பதவிகளில் நீடித்த கலைஞர் அணுசக்தி,கூடங்குளம்,ஈழம், வால்மார்ட் என அரசின் அனைத்து மக்கள் விரோத கொள்கைக்கும் உடன் இருந்த கூட்டாளி தானடா என கூட ஒருத்தனும் யோசிக்க மாட்டனா?

  யோசிக்க மாட்டன் என்ற தான் முக வும் முக குடும்பமுமும் மட்டுமல்ல, ஜெயா, ராம்தாஸ், விஜய்காந்த் என அனைத்தும் ஓட்டுக்கட்சி தலைகளும் நினைக்கின்றனர்.

  யோசிக்க கூடாது என மக்கள் மூளையினை மழுங்கடிக்கும் வேலையின் ஒரு பகுதியாக கலைஞர் அவர்களே செய்திகள் தவிர 4, 5 டி விக்களில் மானாட மயிலாட, சீரியல்கள், சினிமா, ஆபாசம், மாயமந்திர தொடர்கள் (இவர்களெல்லாம் பெரியார் பெயரை உச்சரிக்க தகுதி உண்டா?) ஒளிபரப்பி வருகிறார்.

  இப்படிப்பட்ட ஓட்டுக் கட்சிகளின் தொலைக்காட்சிகளையே தனியாக வினவு தோலுரித்து அம்பலப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க