Friday, September 13, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபோராட்டம் - சிறை! ஒரு பெண் தோழரின் அனுபவம்!!

போராட்டம் – சிறை! ஒரு பெண் தோழரின் அனுபவம்!!

-

காலை 11 மணியளவில் DPI அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம். காலை 10.30 மணி வரை ஆர்ப்பாட்ட இடத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை. ஆனால், போலிஸ்காரனுக்க மட்டும் படு உஷாராக இருப்பது தெரிந்தது. எப்படி?

நான் 10.30 மணிக்கு DPIஅலுவலகம் முன்பு சென்று தோழர்கள் இருக்கீறார்களா? என்று சுற்றம் முற்றும் பார்த்தேன். யரோ என்னை மெதுவாக அழைப்பது காதில் விழுந்த்து. அவரிடம் சென்றேன். எங்க போறீங்கனு யாரவது கேட்டால், +1 புத்தகம் வாங்க போறோமுனு சொல்லனுமுனு முடிவு செய்து உள்ளே சென்றோம்.

வெளியில் எந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் தொடங்கும் என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆகையால், அலுவலகம் முன் இருந்த பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து கொண்டோம். ஒரு போலிஸ்காரர் அருகில் வந்து, ” மேடம் எங்க போகணும்” என்றார். எங்களில் ஒருவர் 17E பஸ்சுக்கு போகணும்னு சமாளித்தோம்.

நாங்கள் சொன்ன பஸ்சும் வந்தது. அந்த போலிஸ்காரர், எங்களிடம் வந்து,”மேடம் நீங்க சொன்ன பஸ் வந்து விட்டது. ஏறுங்கள்” என்றார். அதற்கு நாங்கள்,” இது டீலக்ஸ் பஸ், சாதாரண பஸ்ல தான் போகணும்” என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து விட்டோம். இல்லையென்றால், டிக்கட் எடுத்து அவரே எங்களை பஸ்சில் ஏற்றி விட்டுவிடுவார் என்ற பயத்தில்தான்!!!

நாங்கள் இருந்த இடத்தில் இருந்து 100 அடி தூரத்தில் தான் அதிரும்படியான முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டதால், 150 பேரே, 1000 பேருக்கு சமமாக முழக்கம் இட்டோம்.

அரசுடமையாக்கு, அரசுடமையாக்கு!
தனியார் பள்ளிகள், கல்லூரிகளை

அரசுடமையாக்கு, அரசுடமையாக்கு!

பெண்-தோழர்-சிறை-அனுபவம்உடனே, வந்துவிட்டனர். போலிஸ்காரர்கள் . கலைந்து விடக் கோரி சுற்றி நின்று சமாதானம் பேசினர். அவர்கள் பேச்சுக்கு மயங்க ஆட்கள் கிடையாது. அது தெரிந்தவுடன்,  குண்டுகட்டாக பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் வேனில் ஏற்ற எத்தனித்தனர். குறிப்பாக, போலிஸ்காரர்களின் பயமே அங்கு வெளிப்பட்டது. அதில் ஒரு போலிஸ்காரன்,” எவ்வளவோ, கட்சிகாரனுங்க ஆர்ப்பாட்டம் பண்றானுக, எல்லாம் வெள்ளயும் சள்ளயுமா ஒதுங்கி நிப்பானுங்க, இவனுங்க எங்க இருந்து தான் வரானுங்கனே தெரியமாட்டேங்குது” என்று தலையில் கை வைத்து புலம்பியது தெரிந்தது. கடைசியில்,பெண்களிடமும் வந்து, ”நீங்களாவது வந்து ஏறுங்க” என்றவுடன், நாங்கள் எங்கள் தலைமையிடம் சென்று சொல்லுங்கள் என்றோம். ”இதுங்க, அவனுகளுக்கு மேலே இருக்கு” என்று உறுமினார்.

உணர்வுபூர்வமாக போரடிய தோழர்கள், மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர் ஆகிய எங்களை, ”பொம்பளையா இவளுங்க, தேவிடியா முண்டைகள் மயிரப்பிடித்து ஏத்து” என்று வலுக்காட்டாயமாக இழுத்து, குழந்தைகளின் கழுத்தை மடக்கி, வண்டியில் தள்ளினர்.

ஆனால், எதிர்பார்த்தபடி எளிதில் அடக்கி ஏற்ற முடியவில்லை, அதனால், பகிரங்கமாக அடிக்க முடியாமல், பெண்களை மிகவும் கீழ்த்தரமாக, நயவஞ்சகமாக, கேவலமான முறையில் அசிங்கப்படுத்தினர். பெண் போலிஸை விட்டு, துணிகளை உருவி, முடியினை இழுந்து, குழந்தைகளை பிடுங்கி ஒருவரை நான்கு பேர் இழுப்பது, என வெறி செயல்களை கட்டவிழ்த்து விட்டனர். இதனால், வெளி காயம் ஆகாமல், உள் காயம், கை தூக்க முடியாத வலி,”உடம்பெல்லாம் வலி, எங்க வலின்னு சொல்ல முடியல ” அதிர்ச்சியில் ஒரு தோழருக்கு மாதவிலக்கு வந்தது. அதை கண்டு உறைந்து போனோம்.

இந்த கொடுமைகள் நடுவே, தோழர்கள் எந்த தொய்வும் இன்றி புதிய முழக்கங்களுடன் போரட்டத்தை மேற்கொண்டு எடுத்து சென்றனர். போலிசு குதித்தது.

பெண்-தோழர்-சிறை-அனுபவம்‘ஏய், என்ன பார்த்துக் கொண்டு இருக்கிற, அவங்கள இழுத்து தூக்கி ஏத்து” என்று பெண் போலிசை முறைத்தனர்.

இதற்கு, பதில் தாக்குதல் எங்களுக்கு தெரியும். ஆனால், அமைப்பு கட்டுப்பாடு கருதி கவனத்துடன் செயல்பட்டோம். பதிலடி எதுவும் தராமல், இழுத்த, இழுப்புக்கு செல்லாததே, அவர்களால் தாங்க முடியவில்லையே.

அதன் நடுவிலும், அவர்களின் நயவஞ்சகமாக வேலையை அரங்கேற்றினர். எங்களை இழுப்பது மாதிரி திடீரென விடுவது, இதில், நாங்கள் மாறி, மாறி விழுந்தோம். எழுந்து நிற்கவே முடியாமல், தவித்தோம்.

முழக்கத்தின் மத்தியில், ”கத்துங்க, கத்துங்க வேற வேலை என்ன இருக்குது” என்று நக்கலடித்தனர். போலிஸ் ரவுடிகள் மப்டியில் எங்கள் வளையத்தின் உள்ளே நுழைந்து எங்களை பின்னாலிருந்து தள்ளினர்.

ஆனாலும், பு.மா.இ.மு வின் சங்கிலி மிகவும் வலிமையானதாக இருந்தது அவர்களால், எளிதில் நெருங்க முடியவில்லை. போரட்ட நேரம் அதிகரித்ததற்கு இதுவும் முக்கிய காரணம்.

அனைத்தையும், பொது மக்களும், பார்த்துக் கொண்டே தான் இருந்தார்கள். குழந்தைகள், பெண்களை தள்ளும் போது கவலை அடைந்தனர். பத்திரிகைகாரர்கள் உட்பட. ஒருவழியாக தள்ளிவிட்டார்கள் வண்டியில்.

அவர்களுக்கு தலைவலியும் இங்கிருந்து தான் தொடங்கியது. ஒரு மண்டபத்தில் வைத்தார்கள். மண்டபத்தில் தோழர்கள் சோர்வுடன் காணப்பட்டனர். குழந்தைகள் அழுதனர். குழந்தைகளுக்கு பிஸ்கட், பால் போராடிப் பெற்றோம்.

பெண்-தோழர்-சிறை-அனுபவம்புமாஇமு தோழர்கள் சிறிது நேரத்தில் அங்கேயே நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். மாலையில் வழக்குரைஞர்கள், பேசினர். அனைவரையும் ரிமெண்ட் செய்து இருக்கிறார்கள் என்று கூறினார்கள். ஜெயிலுக்கு போறோம் என்பது பெண்கள் சிலருக்கு கொஞ்சம் கவலையாகதான் இருந்தது. காரணம், வீட்டு சூழ்நிலையே தவிர பயமில்லை.

அனைவரையும் பிரித்து, சரி பார்த்து, போலிசு வண்டியில் ஏற்றினார்கள்.அப்போது, தோழர். கணேசன் பெண்களுக்கு சிறையில் நடக்கும் விசயங்களை தெளிவாக கூறினார். எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று முக்கியமாக நான்கு விசயங்களை கூறினார்.

சைதாப்பேட்டைக் கோர்ட்டுக்கு வண்டி சென்றது.

தொடர்ந்த முழக்கங்கள், பாடல்களுடன் வண்டி சென்றது. இதனை, வெளியில் உள்ளவர்கள் கவனித்து கேட்டனர். அது மட்டுமன்றி, தங்களுக்கு கேட்கவில்லை சத்தமாக சொல்லுங்கள் என்றனர்.

கோர்ட்டும் வந்தது. ஜட்ஜ் ‘அம்மா’ வீட்டின் முன் ஆஜாரானோம். அவங்க கேட்ட கேள்விக்கு காலையில நடந்தத அப்படியே சொன்னோம்.

நைட்டியில் இருந்த ‘அம்மா’ கம்முனு கேட்டுக்குனு திண்டு பூனை மாதிரி உட்கார்ந்திருந்தது. ஒன்றும் சொல்லவில்லை. வழக்குரைஞர்கள் தான் பேசிக்கொண்டே இருந்தார்கள். இதற்கே இரவு 10 மணி ஆகிவிட்டதால், அனைவரும் பாத்ரூம் போக வேண்டிய நிர்பந்தம். இதை கூறினோம். ”இங்க போக முடியாது கோட்ரசு” என்றார்கள். நாங்கள் விடுவதாக இல்லை. அப்ப வண்டியிலேயே, போகலாமா? குழந்தைகளுக்கு அடக்க முடியாது.என்றதும், அங்கேயே, பாத்ரூமுக்கு கூட்டிக் கொண்டு சென்றார்கள். ‘பலத்த பாதுகாப்புடன்’.

பெண்-தோழர்-சிறை-அனுபவம்நாங்க போய்ட்டு வந்தபிறகு, போலிஸ்களும், ” நல்ல வேளை நீங்க கேட்டதால, நாங்களும் போய்கிட்டோம்.” என்றதும், சிரிப்புதான் வந்தது. போகும் வழியில் இரவு உணவு வாங்கி தர வலியுறுத்தினோம். வாங்கிக் கொடுத்தார்கள். பிரித்து உண்ண ஆரம்பிக்கும் போது தான் தெரிந்தது. குழந்தைகளை கணக்கில் எடுக்கவில்லை என்பது. கேட்டால், அவர்களிடம் இருந்து சரியான பதில் இல்லை. உடனே, அனைவரும் பிரித்ததை, அப்படியே போட்டுவிட்டோம். இதையெல்லாம், பார்த்துவிட்டு, எதுவும், பதில் கூறாமல், போலிசு சாப்பிட்டனர். உடனே, தோழர்கள் முழக்கம் இட்டனர். அரண்டு விட்டார்கள். சாலையில் அனைவரும் கவனித்தனர்.

போலிசு, ”எப்படித்தான் இதுங்களை எடுத்துக் கொண்டு, உள்ளே தள்ளுவோமோ?” என்று பேசிக்கொண்டு உணவு மற்றும் தண்ணீர் வாங்கிக் கொடுத்தனர்.

புழல் சிறை, பெரிய கதவு, அதற்கு பின்னும் இரண்டு இரும்பு ஜன்னல் கதவு, அதன் பின் இருட்டில் தெரியும் பெரிய, பெரிய மதில்கள், மற்றும் மதில் மேல் இருக்கும் கம்பிகள் என்று பார்க்கும் போது கொஞ்சம், பயமாக இருந்தது.  அதை மறக்கடித்தது, தோழர்களின் பேச்சு. ”உஷா தோழர் அடிக்கடி சொல்லுவாங்க, பெண்கள் விடுதலை முன்னணினா கம்பீரமா இருக்கனும்னு, இப்ப தான் புரிந்தது”

”என்னனு”

”கம்பிரம், கம்பிரம்ன்னா கம்பியின் பின்புறம்”. என்பது.

பெண்-தோழர்-சிறை-அனுபவம்சோதனை மேல் சோதனை, எந்தன முறை சோதனை? குறைந்தது 15 தடவை. கூப்பிட்டு, பேரை சரி பார்ப்பது, குழந்தைகளை எண்ணுவது, மேல் இருந்து கீழ் வரை தடவி நடு இரவு 1.30 மணி வரை சோதனை. மூன்று இரும்பு கேட்டை தாண்டி, பல சோதனைகளை தாண்டி, உள்ளே அவர்கள் வாக்கி டாக்கியில் ஒருவரை அழைத்து, உள்ளே, “A” பிரிவுக்கு அழைத்து செல்ல சொன்னார்கள்.

வண்டியிலேயே, தலைமையை ஏற்படுத்தினார்கள் தோழர்கள். அதன்படி அமைப்பாக அனைவரும் செயல்பட்டோம். அதிகாலை மணி 2.30 மணி என்பதால், அனைவரும், சோர்ந்த நிலையில் படுத்துவிட்டோம். இரண்டு அறைகளில் வைத்து பூட்டி விட்டார்கள்.

தனி சிறை கொடுத்ததன் காரணம் புரிந்தது!! மற்ற கைதிகளையும், தோழர்களாக மாற்றிவிடுவோம் என்று பயந்தனர் என்று தெரிந்தது. காலை, தட்டும், குவளையும் கொடுத்தார்கள். நாங்கள் படிப்பதற்க்கு நாளிதழ்கள் கேட்டோம். தருவதாக சொல்லிவிட்டு, மாயமானர்கள்.

சாப்பாட்டுக்காக காத்திருந்தோம். சாப்பாடு வந்தது. அரிசி கஞ்சி. தொட்டுக்கொள்ள வேர்கடலை துவையல். ஆசையாக வாங்கி சாப்பிட தொடங்கினால், கஞ்சியில் உப்பு அதிகம், கற்கள், நெல்லு, என அனைத்தும் இருந்தது. ரேஷன் அரிசி தான். சாப்பிட முடியாத அளவு நாற்றம்.

பிறகு, 4 குழுக்களாக பிரித்து, பாடல், நாடகம் போடலாம் என்றனர் தோழர்கள். சிறிது நேரத்தில், இரண்டு தோழர்களுக்கு கைகளை தூக்க முடியாத வலி. குழந்தை தோழர் செயல் இனிக்கு காய்ச்சல். மற்றொருவருக்கு, பேதி.  நான்கு பேரையும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் .

பெண்-தோழர்-சிறை-அனுபவம்ஆனால், அங்கு டாக்டர் இல்லை. இரண்டு மணி நேரத்திற்க்கு பிறகு, வழக்கமான வெள்ளை மாத்திரைகளை கொடுத்தனுப்பினர். தோழர்கள்  சோர்வுற்றனர். மறுபடியும், அடையாள சோதனைகள். முடிவடையாத சோதனைகள்.

மதியம் திரும்பவும் வேகாத சோறு. பார்வையாளர் நேரத்தில், வெளி தோழர்களை, சிறை தோழர்கள் சந்தித்தோம். செவ்வணக்கத்துடன், வாழ்த்துகள் பரிமாறிக் கொண்டோம். மாலை, சுற்றுபுறத்தை தூய்மை செய்தோம். உடனேயே, மீண்டும் உள்ளே அடைத்துப் பூட்டியது போலிசு.

மாலை 6 மணிக்கு சிலருக்கு பெயில் வந்ததாக சொல்லி, மீண்டும் சோதனைக்கு அழைத்தது போலிசு. மீண்டும் சோதனை 3 மணி நேரம் நீடித்தது. உடல் அங்கங்கள் அனைத்தும் அடையாளப்படுத்தப்பட்டது. கை விரல்கள், கரு விழிகள், முகம் தனியாக பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டது. இனி நாங்கள் எங்கிருந்தாலும், எங்கள் விவரம் அவர்கள் விரல் நுனியில்.

நக்சல்பாரி அமைப்பின் அரசியல், அவர்களின் கண்ணில் பீதியாக வழிந்தது. தோழர்கள் ஒவ்வொரு நடவடிக்கையிலும் காட்டிய உறுதி அவர்களை மிரள வைத்தது. ஒரு வழியாக இரவு 9 மணிக்கு வெளியில் அனுப்பினர். வாயிலில், அமைப்புத் தோழர்கள் காத்திருந்தனர். உற்சாகமாக வரவேற்றனர். உடனே, சிறை வாயில் கூட்டத்தை துவக்கினர். போரட்டத்தின் அனுபவங்கள், அதன் வீச்சு இதன் தொடர்ச்சி என்று பல்வேறு அம்சங்களை விளக்கி அடுத்த கட்ட போரட்டத்துக்கு உறுதி ஏற்றனர். தோழர்கள் செவ்வணக்கத்துடன் பிரிந்தோம்.

(தற்போது பெண் தோழர்கள் மட்டும் பிணையில் வெளியே வந்திருக்கிறார்கள். ஆண் தோழர்களுக்கு இன்னும் பிணை கிடைக்கவில்லை. கிடைத்தாலும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளுடன் இருக்குமென்று தோழர்கள் கூறுகிறார்கள். பார்ப்போம்- வினவு)

_____________________________________

– வீரலட்சுமி
_________________________________

  1. கல்விக்காக போராடி சிறை சென்று சரசுவதியை பணக்கார கும்பல்களிலமிருந்து காக்க போராடும் உங்களுக்கு பெயர் வீரலட்சுமி அல்ல ! வீர சரசுவதி !
    வாழ்த்துக்கள் !

  2. போராளீ என்பவன்…அடுத்தவர் உணர்வுகளை தூண்டுபவன் அல்ல….போராளீ என்பவன் களத்தில் இறங்கி போராடுபவன்…….என இந்த தோழர்கள் மூலம் தெரிந்துகொண்டேன்……..

  3. போலீசு எதிர்பார்த்தபடி எங்களை எளிதில் அடக்கி வேனில் ஏற்ற முடியவில்லை/// போராட்டம் நடத்திவிட்டு கைதாவது என்பது நடைமுறைதானே.அதைவிட்டு நான் ஏறமாட்டேன் என்று கையை காலை உதைத்துவிட்டு தரையில் புரண்டு பின்னர் போலீஸ் அராஜகம் என்று கூவுவதுதான் சரியோ? அப்படியே கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றியும் நாலு வரி கோஷம் போடுவதுதானே.தேர்தல் வந்ததும் சீட்டுக்காக வரிசையில் போய் நிற்பதைப் பற்றியும்.அரசுப் பள்ளியில் சேர்க்கமறுக்கும் பெற்றோரிடம் இருக்கிறது பிரச்னை.அரசுப்பள்ளி வாத்திகளிடம் இருக்கு பிரச்னை.அதை விட்டு தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு என்று போராடணும் என்றால் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களையும் குரல் கொடுக்கச் சொல்லுங்கள்.

    • ////போராட்டம் நடத்திவிட்டு கைதாவது என்பது நடைமுறைதானே.அதைவிட்டு நான் ஏறமாட்டேன் என்று கையை காலை உதைத்துவிட்டு தரையில் புரண்டு பின்னர் போலீஸ் அராஜகம் என்று கூவுவதுதான் சரியோ ?////

      போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவது தான் போலீசின் வேலை. அதையும் மீறி போராடுவது தான் போராட்டக்காரர்களின் நோக்கமாக இருக்க முடியும். எனவே போலீசு தனது வேலையை செய்ய முடியவில்லை, அதாவது தோழர்களை அடக்கி வேனில் ஏற்ற முடியவில்லை. தோழர்கள் அவ்வளவு உறுதியுடன் நின்று போராடியிருக்கின்றனர். நாங்கள் இப்படி போராடினோம் என்று கூறுவதில் என்ன தவறு இந்தியன் ?

      ////தேர்தல் வந்ததும் சீட்டுக்காக வரிசையில் போய் நிற்பதைப் பற்றியும்.அரசுப் பள்ளியில் சேர்க்கமறுக்கும் பெற்றோரிடம் இருக்கிறது பிரச்னை.அரசுப்பள்ளி வாத்திகளிடம் இருக்கு பிரச்னை.////

      உண்மை தான் இந்தியன் பெற்றோரிடம் ஆங்கில மோகமும், தனியார் பள்ளிகள் தரமானவை என்கிற மாயையும், ஆசியர்கள் பொறுப்பற்றவர்களாக இருப்பதும் உண்மை தான். ஆனால் இந்த இரண்டு தரப்பினரிடமுள்ள பிரச்சினைகளுக்கும் அடிப்படை இந்த அரசின் கல்விக் கொள்கையில் உள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு இணையான தனியார் பள்ளிகளே இல்லை என்கிற கல்வித்தரத்தை அரசால் உருவாக்க முடியும். அவ்வாறான நிலை இருந்தால் பெற்றோரும் தனியார் பள்ளிகளை நாடமாட்டார்கள், ஆசிரியர்களும் பொறுப்புள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் அரசின் நோக்கம் அதுவல்ல அனைத்தையும் தனியார்மயமாக்குவது தான் நோக்கம். எனவே இத்தகைய பொறுப்பற்ற அரசை எதிர்த்து போராடும் மாணவர்களை நாம் வரவேற்க வேண்டும். முதன்மைக் குற்றவாளி இந்த அரசு தான்.

      ////தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு என்று போராடணும் என்றால் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களையும் குரல் கொடுக்கச் சொல்லுங்கள்////

      யாரைச் சொல்கிறீர்கள். CPM கட்சிக்காரர்களையா ? அவர்கள் ஜெயலலிதாவுக்கு வேண்டுமானால் குரல் கொடுப்பார்கள். அவர்களின் அரசியல் நேர்மையையும் யோக்கியதையையும் அறிய இந்த பதிவுகளை வாசியுங்கள்.
      https://www.vinavu.com/category/cpi-m/

    • திரு இந்தியன்,

      ” போராட்டம் நடத்திவிட்டு கைதாவது என்பது நடைமுறைதானே”

      ஆம், அனால் அறவழி போராட்டத்திற்கே, அனுமதி மறுக்கப்பட்டதே!. பிறகு எப்படி “போராட்டம் நடத்திவிட்டு?”

    • கம்யுனிஸ்ட் எம்.எல்.ஏ கள் பொதுமக்களின் பிரச்சனைகளுக்காக என்று போராடினார்கள்? தேர்தலுக்கு சீட்டு கேட்டு பிச்சை எடுக்கும் போராட்டம், முதாளிகளிடம் போருக்கி தின்ன போட்டி போடும் போராட்டம் போன்ற போராட்டங்களை தான் நடத்துவார்களே தவிர இது போன்ற மக்களின் போராட்டங்களை எப்படி செய்வார்கள். முதலாளிகளை எதிர்ப்பார்கள் அவர்களுடனே டீ பார்ட்டியில் கலந்து கொள்வார்கள், அணு உலையை முன்பு எதிர்த்தார்கள் கூடங்குளத்தில் இருப்பது ரஷ்யா வின் அணு உலை என்றதும் ஆதரிக்கிறார்கள் மொத்தத்தில் அது இரண்டுமே மானம் கெட்ட கட்சிகள்,

      தனியாரை ஆதரிப்பவர்களை எப்படி தனியாருக்கு எதிராக போராட கூப்பிட முடியும், இந்தியன்.

  4. அரசாங்கப்பள்ளியிலும் ஒழுங்காப் படிச்ச மாணவர்கள் பட்டியல் எடுத்துப் பாருங்கள்.குறை மாணவரிடம் இல்லையா என்ன? அரசுப்பள்ளியை சரியாகப் பயன்படுத்தாத நிலையில் தனியார் பள்ளிகள் பெருகத்தான் செய்யும்.நீங்கள் போராட்டம் நடத்தியிருக்கவேண்டியது அரசுப்பள்ளி வாத்தியார்கள் சங்கத்திடம்

    • நீங்கள் சொல்வது உண்மை தான். அரசு பள்ளிகளை அரசு மிக மோசமாக தான் நடத்துகிறது. இவ்வாறு திட்டமிட்டே தான் செய்கிறார்கள். கல்வியை முழுமையாக தனியாரிடம் கைமாற்றி விடுவதற்காகவே அரசுப்பள்ளிகள் கேவலமான தரத்தில் பராமரிக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால் பெற்றோர்களை தனியார் கல்விக்கொள்ளையர்களின் பக்கம் இந்த அரசு தான் தள்ளி விடுகிறது.

      எனவே தனியார் பள்ளிகள் கொள்ளையடிக்க வழி அமைத்துக்கொடுக்கும் அரசின் இந்த செயலை கண்டிப்பது தான் முதன்மையானது. கல்வி அளிக்க வேண்டியது அரசின் அடிப்படை கடமை. மேலும் அது ஒரு சேவை வியாபாரம் அல்ல. ஆனால் அரசு அதை மொத்தமாக வியாபாரிகளிடம் ஒப்படைக்க முயற்சிக்கிறது. அந்த வகையில் அனைத்து பள்ளி கல்லூரிகளையும் அரசுடைமையாக்கு என்கிற சரியான முழக்கத்தை முன்வைத்து தான் பு.மா.இ.மு வினர் போராடியுள்ளனர்.

      அதே போல நீங்கள் கூறியுள்ளபடி மோசமான அரசுப் பள்ளி நிர்வாகத்தை எதிர்த்துப் போராடுவது அவசியம். பு.மா.இ.மு தோழர்கள் அவ்வாறு பல அரசுப்பள்ளிகளில் போராடி சிறந்த ஆசிரியர்களையும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் பெற்றுத்தந்துள்ளனர்.

      • //அரசு பள்ளிகளை அரசு மிக மோசமாக தான் நடத்துகிறது. இவ்வாறு திட்டமிட்டே தான் செய்கிறார்கள். கல்வியை முழுமையாக தனியாரிடம் கைமாற்றி விடுவதற்காகவே அரசுப்பள்ளிகள் கேவலமான தரத்தில் பராமரிக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால் பெற்றோர்களை தனியார் கல்விக்கொள்ளையர்களின் பக்கம் இந்த அரசு தான் தள்ளி விடுகிறது.///

        இல்லை. தவறான பார்வை. திட்டமிட்ட சதி எல்லாம் எதுவுமில்லை. Job security and strong unions with political clout கொண்ட அரசு பள்ளி ஆசிரியர்களை இந்த அமைப்பில் யாரும் எதுவும் செய்ய முடியாது. திட்டமிட்ட சதி என்பது உங்கள் paranoia which has no relevance to ground reality.இப்படி யதார்த்தை புரிந்து கொள்ள முடியாததால் தான் இன்று வரை கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற முடியவில்லை.

        அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது இன்று சட்டபடி disciplinary action எடுக்கவே முடியாத நிலை. இது தான் இத்தனை சீரழிவுக்கு மூலக்காரணம். இதை புரிந்து கொள்ளாமல் ஒரு தீர்வும் இல்லை.

        http://timesofindia.indiatimes.com/home/opinion/sa-aiyar/swaminomics/Back-to-school-An-open-letter-to-Kapil-Sibal/articleshow/4653435.cms

        Poor people send their kids to government schools, but hardly any teaching takes place there, and the teachers are protected from disciplinary action by powerful trade unions. No chief minister dares antagonize these unions. Richer students supplement schooling with private tuitions, but this is unaffordable by poor students, who end up functionally illiterate after years of schooling. Lakhs of crores spent on education are wasted.

        ..But teachers’ unions hate competition or accountability, and oppose school vouchers….

          • adhiyaman’s answer for this will be privatization . He will beleive anna team plan(கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிப்பது) for whipping out the corruption from India.if we ask about “ground reality” .he will close his eyes.

            one more thing
            on one day his speech will be
            ////போலி முதலாளித்துவாதிகள் மற்றும் திரிபுவாத முதலாளித்துவாதிகளின் செயல்களால் தான் இந்த குழப்பங்கள், மந்தங்கள், திவால்கள். உண்மையான தூய முதலாளித்தவத்தில், currency union, central bank fixing of interest rates, exporting nations manipulating their currency values artificially, aid thru IMF, WB, govt subsidies to housing loans, huge military spending and invasions இருக்காது.//////

            if i asked like this

            /actually i asked a way to stop the evil capitalism and bring utopian capitalism to Mr.adhiyamaan .if he can’t answer ,any right wing or an Rss right wing can answer/

            reply will be

            Nagaraj,

            //I did not bother to reply to your oversimplified view point because you (and most people here) view this world as black and white and do not see the shades of grey in many issues, esp economic issues.

            ‘evil’ and ‘good’ are mere words and doesn’t suit here. try to read thru that link i had quoted. also my blog posts(?????) regarding this crisis.

            and by the way, even though i can be called a ‘right winger’, it doesn’t mean that I am an RSS supporter or religious fanatic. Libertarianism (that i propose) is branded as right wing. again this categorization is over simplistic and confuses. //

            • //adhiyaman’s answer for this will be privatization .//

              wrong. All it requires is to change the law for recruitment and dismissal of govt employees, esp teachers. and give the control over govt schools to local bodies like panchayaths.

              In US, majority students study in govt schools which are run by the local counties independently. they work. why not here.

              • 40 க்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரத்தில் நிறைவு செய்யாத யூனியன் பள்ளிகளை (உள்ளூராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படுவதுதான்) இழுத்து மூடுவது பத்தாண்டுகளாக அதிகரித்திருக்கிறதே ! இதற்கு என்ன காரணம்?

                • simple. கிராமபுரங்களிலும் முடிந்த வரை பெற்றோர்கள் தனியார் பள்ளிகளையே நாடுகின்றனர். ஏன் ?

        • அரசு வேலை கிடைக்காதவர்களது பொருமல் பேச்சு ங்க இது. திறமை இருந்தால் வேலை கிடைக்கும். உடனே இட ஒதுக்கீட்டாலதான் வேல போச்சுனு தூக்கிட்டு வந்துராதீங்க• அது தனி சேப்டர். அதவிட முக்கியம். உரிமை ன்னு வாத்தியாருக்கு எதுவும் இருக்க கூடாது. அவங்க எல்லாம் சத்யபாமா இஞ்சினியரிங் காலேஜ் வாத்தியார் மாதிரி இருக்கணும். அது சரி. எனக்கு ஒரே ஒரு சந்தேகம். ஆ ஊன்னா நேர்மையான முதலாளித்துவத்த தூக்கி பிடிக்கும் அதியமான் வாத்தியாருங்கள பத்தி பேசுறப்பவோ அல்லது போராடும் அரசு ஊழியர்களப் பார்க்கும்போதோ மாத்திரம் ரோமானிய அடிமைகள் காலத்துக்கு போகிறாரே. அதுதான் பிடிபட மாட்டேங்குது.

        • உங்களுடைய விளக்கத்திற்கு நன்றி அதியமான். நீங்கள் அரசாங்க ஆள் என்பதால் அரசின் கொள்கைகள் பற்றி உங்களோடு விவாதிப்பதில் ஒன்றும் பயன் இல்லை. எனினும் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற முடியாமலிருப்பதற்கு ஏதோ காரணத்தை கூறியிருக்கிறீர்கள் வெற்றி பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.

          நன்றி !

          • அம்பேத் சித்தார்த்,

            நான் ‘அரசாங்க ஆளா’ ? :)))))
            உங்க கற்பனைகள் பாரானிய வகை தான் என்பது உறுதியாகிறது.

            மனித இயல்பை பற்றி கம்யுனிஸ்டுகளின் பார்வை unrealistic தான். தேனிக்களை போல் எல்லா மனிதர்களையும் ‘சுயநலமில்லா’ உழைப்பாளிகளாக மாற்ற முடியும் என்பது வெறும் கனவு :

            http://nellikkani.blogspot.in/2010/02/blog-post.html
            கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?

            • then tell us the way to bring “உண்மையான தூய முதலாளித்தவம் ”
              remember your words
              /போலி முதலாளித்துவாதிகள் மற்றும் திரிபுவாத முதலாளித்துவாதிகளின் செயல்களால் தான் இந்த குழப்பங்கள், மந்தங்கள், திவால்கள். உண்மையான தூய முதலாளித்தவத்தில், currency union, central bank fixing of interest rates, exporting nations manipulating their currency values artificially, aid thru IMF, WB, govt subsidies to housing loans, huge military spending and invasions இருக்காது./

            • முதலாளித்துவம் மனிதர்களை உணர்ச்சிகளற்ற இயந்திரங்களாக்கி அவர்களின் சாரமான உழைப்பிலிருந்து அவர்களை அந்நியமாக்கி வைக்கிறது. சமூகத்திற்கு தேவையான திட்டமிட்ட உற்பத்தியை செய்யாமல் மிகையான உற்பத்தியால் உழைப்பையும் உற்பத்தியான பொருட்களையும் வீனடிகிறது. இன்னொரு பக்கம் இல்லாமை. கோடிக்கணக்கானவர்களின் சமூக உழைப்பால் விளையும் செல்வம் உழைக்காத சில தனிநபர்களிடம் குவிகிறது. இந்த முதலாளித்துவ சமூகம் பல்வேறு முரண்பாடுகளோடும் நிலைகுலைவுகளோடும் நெருக்கடிகளோடும் தான் இயங்குகிறது. இது சமூகத்தில் மேலும் மேலும் சமமின்மையை அதிகப்படுத்துகிறது.

              இத்தகைய ஒரு சமூக அமைப்பு இனியும் நீடிக்க முடியாது. மேலும் ஏன் நீடிக்க கூடாது என்பதற்கு சில சுட்டிகள்.

              அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது !
              https://www.vinavu.com/2008/10/13/recession/

              அமெரிக்கக் கடன் நெருக்கடி- மைனரின் சாயம் வெளுத்தது!
              https://www.vinavu.com/2011/10/01/double-dip-recession/

              டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?
              https://www.vinavu.com/2011/08/23/double-dip/

              முதலாளித்துவத்தின் கருவறையில் அமெரிக்க மக்கள் முற்றுகை!
              https://www.vinavu.com/2011/11/04/occupy-wall-street/

              புதை சேற்றில் சிக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!
              https://www.vinavu.com/2012/03/08/the-eu-crisis/

              அமெரிக்க திவாலும் சில இந்தியத் தற்கொலைகளும் !
              https://www.vinavu.com/2008/10/30/usuicide/

              கிறீஸ் மக்களைத் தாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்
              http://kalaiy.blogspot.in/2010/05/blog-post_16.html

              கிரேக்க பொருளாதாரம் திவாலானது எப்படி? – ஆவணப்படம்
              http://kalaiy.blogspot.in/2011/07/blog-post.html

              மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் பிரான்ஸ்!
              https://www.vinavu.com/2010/10/17/france-protest/

              உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011): தீராத தலைவலி!
              https://www.vinavu.com/2012/02/16/global-financial-crisis-five-key-stages-2007-2011/

              ஏகாதிபத்தியங்களின் நெருக்கடியை தீர்க்க அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு போர்கள்!
              https://www.vinavu.com/2011/05/19/imperialist-crisis/

              THE RED MARKET: மனித உடல் உறுப்புகளின் சந்தை!
              https://www.vinavu.com/2012/04/30/the-red-market/

              தண்ணீர் தனியார்மயம்: பேரழிவின் தொடக்கம்!
              https://www.vinavu.com/2012/04/14/national-water-policy/

              வால்மார்ட்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! ஆவணப்படம் – வீடியோ!
              https://www.vinavu.com/2012/02/25/wal-mart-the-high-cost-of-low-price/

              கம்யூனிசம் பற்றிய அதியமான் முதலாளியின் பொய்களை அம்பலமாக்கும் சோசலிச சமூகத்தை பற்றிய உண்மைகளை அறிய சில பதிவுகள்.

              நவம்பர் புரட்சி தினமும் ஸ்டாலின் சகாப்தமும்!!
              https://www.vinavu.com/2009/11/07/stalin-dvd-intro/

              “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!
              https://www.vinavu.com/2010/11/07/nov-7-3/

              கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?
              https://www.vinavu.com/2010/11/08/spy-2/

    • Mr. Indian,

      College iku yellam ivalavu than kattanamnu nirnayikudhu
      Athey madhiri thaniyar palligaluku fees nirnayika vandiyadhu thana ??

      More over palli kattanangaloda kuraibadugalai patri oru kuluva arambichi
      avanga nirnayithu kodutha katanadha appadiye kidapula potturuche…

      athanala than Arasudamai akkunu sollranga

    • அரசாங்க பள்ளிகள் வேண்டுமென்றே தான் தரம் குறைக்கப்பட்டு வருகிறது, மக்களிடம் தனியார் பள்ளிகளை பற்றி உயர்த்தி பேசுவதன் மூலம் அரசாங்க பள்ளியை படி படியாக குறைத்து இழுத்து மொத்தமாக பூட்ட வேண்டும், தனியார் பள்ளிகளில் மட்டும் தான் இனி அனைவரும் படிக்க வேண்டும் எனும் நிர்பந்தத்திற்கு மக்களை தள்ள வேண்டும் என்று திட்டமிட்டு செய்கிறார்கள் அனைத்து ஓட்டு போருக்கி கட்சிகளும், இருக்கும் தனியார் பள்ளிகளில் 75 சதவிகிதம் எம்.எல்.ஏ க்கும் எம்.பி க்கும் சொந்தமானவை, அப்படி இருக்க இவர்கள் நோக்கம் தனியார் பள்ளிகளை உயர்த்தி பிடித்து அரசாங்க பள்ளிகளை இழுத்து மூட வேண்டும் என்பதே தவிர வேறொன்றும் இல்லை.

      அது மட்டும் இன்றி தங்கள் பள்ளிகளை தரமானவை என்று காட்ட, அங்க படிக்கும் மாணவர்களுக்கு பணம் கொடுத்து பாஸ் போட சொல்கிறார்கள் இப்படியும் ஒரு கீழ் தரமான செயல்களில் ஈடு படுகிறார்கள்………….

      இன்னும் பல்வேறு முறைகேடுகளை செய்து அரசு பள்ளியை தரம் தாழ்த்துகிரார்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் ………

      அரசு பள்ளிகளின் மெத்தன போக்கை கண்டித்து பல போராட்டங்களை பு.மா.இ.மு. நடத்தியுள்ளார்கள், அரசினால் கை விட பட்ட பாட திட்டங்களை போராடி மாணவர்களுக்கு பெற்று தந்துள்ளார்கள் தரமான, ஆசிரியர்களை நியமிக்க போராடி பெற்று தந்துள்ளார்கள் தனியார் மயத்துக்கான இவர்களின் போராட்டம் தொடரும்……….

  5. அரசாங்க வாத்தியார்களின் மீது நடவடிக்கை என்றதும் கம்யூனிஸ்ட்கள் அந்தப்பக்கம் போய் நின்று கொண்டு சிவப்புக் கொடி பிடித்து ‘அரசு ஊழியர் மீது கை வைக்கிறியா…அராஜகம் ஒழிக. ஆசிரியர் ஒற்றுமை ஓங்குக என்று கோஷமிடுவார்கள் இல்லையா?
    தனியார் ஆசிரியர் சம்பளத்துக்கும் அரசு ஆசிரியர் சம்பளத்துக்கு உள்ள வித்தியாசம் என்ன? என்ன வேலை பார்க்கிறார்கள்? அரசு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்தால் நாங்கள் அதற்கும் ஆதரவு தர மாட்டோம் என்று கம்யூனிஸ்ட்கள் சொல்லட்டுமே.கொழுத்த சம்பளம் வாங்குகிற கூட்டம் அது.

    • போலீஸ்ல யூனியன் வைக்க வாய்ப்பிருந்தால் அங்கேயும் ஒரு CITU கிளையை திறந்து வைத்துக்கொண்டு இவர் நம்ம போலீஸ் தோழர் என்று இந்த மக்கள் விரோதிகளுக்கும் கூட வக்காலத்து வாங்கக்கூடியவர்கள் தான் இந்த போலிக்கம்யூனிஸ்டுகள். எனவே அவர்களை உதாரணமாக வைத்துக்கொண்டு எல்லோரையும் அப்படி நினைக்காதீர்கள். ஆனால் நீங்கள் கூறுவது போல அவர்கள் இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளாக தான் இருக்கிறார்கள்.

      மேலும் போலிக்கம்யூனிஸ்டுகள் அப்படி தானே இருக்க முடியும். அதற்கு இன்னொரு சம்பவத்தை சொல்லலாம். மக்களின் தாலியை அறுக்கும் டாஸ்மாக் கடையை மூடக்கூடாதுன்னு சொல்றவன் யாரு ? அ.தி.மு.க காரனா ? இல்லை அ.தி.மு.க அடிமைகள் கூட மக்களுக்கு பயந்துகொண்டு அப்படி பேசுவதில்லை. மாறாக நீங்கள் கம்யூனிஸ்டுகள்னு நினைச்சிட்ருக்கீங்களே அந்த போலிக் கம்யூனிஸ்டுகள் தான் அவ்வளவு துணிச்சலாக பேசுகிறார்கள்.

      போலிக்கம்யூனிஸ்டுகள் என்றால் அப்படித்தான் இருக்க முடியும். எனவே அவர்களை அரசு ஊழியர்களிலிருந்து அம்மா வரைக்கும் எல்லோருக்கும் பாராபட்சமின்றி சொம்படிப்பவர்கள் என்று புரிந்துகொள்ளலாம்.

  6. நல்ல அனுபவம் தோழர். வெளியில மட்டும் இல்லாமல் உள்ளயும் உங்களை பல இன்னல்களுக்கு ஆளாக்கி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

  7. how can the govt take the private instituitions? can it take the aided schools first? either govt should run their schools as model to tame the private or ban the private schools.

  8. *பேரு நல்லாத்தான் இருக்கு, இந்தியன்னு. ஆனா, நீங்க இந்தியாவுல குறிப்பா தமிழ்நாட்டுல இருக்குற ஆளு மாதிரி தெரியலியே. அமெரிக்காவுல இருக்குற அம்பி மாதிரில பேசிட்டிருக்கேள். இது நோக்கே நன்னாருக்கா, கொஞ்சம் மனச தொட்டு சொல்லு நைனா! சி.பி.எம்., சி.பி.ஐ. போன்ற ஓட்டுக்கட்சிக்களுக்கும் டி.பி.ஐ.இல் போராட்டம் நடத்திய புரட்சிகர அமைப்பினருக்கும் உள்ள வித்தியாசம் கூட தெரியாமல் அல்லது குறைந்தபட்சம் தெரிந்துகொள்ள முயற்சிக்காமல் மறுமொழிவது முறையோ!
    வுங்க இலக்கணப்படி சிகப்பு கொடி புடிச்சவன் சிவப்பு சொக்கா போட்டவனெல்லாம் கம்யூனிஸ்டுங்குற கணக்குல பேசுறீங்களே, வுட்டா மேல்மருவத்தூர் கோஷ்டியையும் இழுத்து வந்து ஒண்ணா வுட்ருவீங்க போல இருக்குதே, நல்லா இருக்கு வுங்க ஞாயம்.

    *அதுகடக்கட்டும், //போராட்டம் நடத்திவிட்டு கைதாவது என்பது நடைமுறைதானே.//ன்னு போலீசுக்கு வாயாக நீங்க பேசுறீங்களே. போலீசு கலைஞ்சுப்போன்னு சொன்னா போயிடனும், வண்டியில ஏறுன்னு சொன்னா ஏறியிடனும் போலீசு பேச்சுக்கு அப்ஜெக்சனே இருக்ககூடாது அப்படித்தானே! அதுசரி, கைதாக மறுத்தால் பெண்கள் பச்சிளங்குழந்தைகள் என்றும் பாராமல் தூக்கிகடாசுவீர்கள். இளம்பெண்களை துகிலுரிவீர்கள். நெஞ்சிலும், உயிர்நிலையிலும் பூட்ஸ் கால்களால் உதைவிடுவீர்கள். இது போலீசின் ‘நடைமுறை’, இதற்கும் எல்லோரும் உடன்பட வேண்டும். அப்படித்தானே! வுங்க அய்யர் ஆத்து மாமி அடிக்கிற கூத்தும் அவுங்க போலீசோட கொட்டத்துக்கும் குறைச்சலே இல்லை ! உங்க அம்மாகிட்ட ஹிட்லரே தோத்துட்டாரு போங்க!

    *மத்தியானம் ரெண்டு மணிவாக்குலதான் மறுமொழி போட்டுருக்கீங்க! இந்த நேரத்துலேயே புல் மப்பு போலவே! என்னென்னமோ உளறிக்கொட்டியிருக்கீங்க! //அரசுப்பள்ளியை சரியாகப் பயன்படுத்தாத நிலையில் தனியார் பள்ளிகள் பெருகத்தான்
    செய்யும்.நீங்கள் போராட்டம் நடத்தியிருக்கவேண்டியது அரசுப்பள்ளி வாத்தியார்கள் சங்கத்திடம்// என்கிறீர்களே? அரசாங்கப் பள்ளிக்கூடத்தையெல்லாம் அரசுப்பள்ளி ஆசிரியர்களா நடத்துறாங்க? அவுங்க வீட்டு முன்னாடி போராட்டம் நடத்துறதுக்கு!

    *இங்கே பேசப்படுகிற பிரச்சினை, மாணவர்களை பணயக்கைதியாக்கிக்கொண்டு கட்டணக்கொள்ளையடித்துவரும் தனியார் கல்வி மாபியாக் கூட்டத்தின் கொட்டத்தை பற்றியது. இந்தக்கும்பலின் கொட்டத்தை தடுத்து நிறுத்து என்று ஜனநாயகப்பூர்வமான வழியில் கோரிக்கை வைத்தவர்கள் மீதே பாய்ந்து குதறியிருக்கிறது, மேற்படி மாபியா கூட்டத்தின் எடுபிடியும் ஏவல்நாயுமான தமிழக அரசும் அதன் போலீசும். இதன்மீது கருத்து சொல்லாமல், தனியார்பள்ளி வியாபாரம் பற்றியோ, போலீசின் அத்துமீறல் பற்றியோ பேச மறுத்து, அரசுப்பள்ளி வாத்தியார்கள் சரியில்லை, மாணவர்கள் சரியில்லை, பெற்றோர்கள் சரியில்லை என்று ஏதேதோ உளருகிறீர்களே!

  9. உங்கள் கருத்துக்கு எதிர்கருத்து சொன்னால் உடனே ஹேய் பார்ப்பனா என்று பிரச்னையை திசைதிருப்புவது இல்லையா…

    அரசு இந்தப் பள்ளிகளை எடுத்து என்ன செய்யும்.இப்போது அரசு பள்ளிகள் என்ன நிலைமையில் இருக்கோ அந்த லட்சணத்தில்தான் நடத்தும்.

    அரசுப்பள்ளியில் பெற்றோர் சேர்க்க மறுப்பதேன்.காசைக் கொட்டி இதிலே போய் சேர்க்க காரணம் என்ன? கொழுத்த சம்பளம் வாங்கி கம்யூனிஸ்ட் ஆதரவுடன் உருப்படியா பாடமும் நடத்தாமே (ஸ்டிரைக் பண்ணினா கம்யூனிஸ்ட் உடனே ஓடி வருவாங்களே அதானே பிழைப்பே) காலம் தள்ளுகிற வாத்திகளுக்கு பொறுப்பில்லையா என்ன?

    • “அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் ஒழித்துக் கட்டு! தனியார் பள்ளி/கல்லூரிகளையும் அரசுடைமையாக்கு! அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்கு! ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்றுமுறை, ஒரே தேர்வுமுறை, ஒரே வசதி கொண்ட பொதுப்பள்ளி அருகமைப்பள்ளி!” இதுதான் போராட்டம் நடத்தியவர்களின் கோரிக்கை.
      தனியார்மயம் தாராளமயம் புகுத்தப்பட்ட பிறகு, கடந்த 20 ஆண்டுகளாக கல்விக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாகக் குறைத்து வருவதன் மூலம், போதிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாததன் மூலம் அரசுப் பள்ளிகளைத் திட்டமிட்டே சீரழித்துவிட்டுத் தனியார் கல்வி வியாபாரிகள் கொட்டமடிப்பதற்கான வாய்ப்பை அரசே உருவாக்கி வருகிறது என்பதுதான் இங்குள்ள பிரச்சினையே.
      கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்து, போதுமான ஆசிரியர்களை நியமனம் செய், என்றும், தரமான கல்வியை அனைவருக்கும் இலவசமாக அரசே வழங்கு என்றும் அரசை நிர்பந்திக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பதிலாக, தரமான கல்வி தருகிறான் என தனியாரை ஆதரிக்கும் உங்களைப் போன்றவர்களை என்ன வென்று சொல்வது!
      அரசுப்பள்ளியில் தரமில்லை, வாத்தியாரெல்லாம் தூங்குறான், பசங்க சரியில்லைனு இதற்கு அழுத்தம் கொடுக்குற நீங்க, அரசின் நிதி ஒதுக்கீடு குறித்தோ, போதுமான ஆசிரியர்களின்றி, வகுப்பறைகளின்றி, இயங்கும் அரசுப்பள்ளிகளின் அவல நிலை குறித்தோ, ஏன் பேச மறுக்கிறீர்கள்?
      அரசுப்பள்ளிகளில் வாத்தியான் சரியில்லை, தகுதி இல்லை, திறமை இல்லை அதனால தரமா இருக்குற தனியார் பள்ளிகள் செயல்படுவதில் என்ன தப்புனு கேக்குறீங்களே, நியாயம்தான்!
      இந்தியன். நாமக்கல் பள்ளியிலும், டி.ஏ.வி.யிலும், இன்னபிற தரமான தனியார் லொட்டு லொஸ்குலயும் படிச்சவனெல்லாம், தரமா இருக்குற எஸ்.ஆர்.எம். ராமச்சந்திராவுலயும் இன்னபிற தனியார் தொழிற்நுட்பக் கல்லூரிகளிலும் போய் சேர வேண்டியதுதானே, அத வுட்டுட்டு ஏன் அரசாங்கம் நடத்துற ஸ்டேன்லிக்கும் கே.எம்.சி.க்கும், ஐ.ஐ.எம். மற்றும் ஐ.ஐ.டி.க்கும் முண்டியடிக்கிறீங்க!

      • அய்.அய்.டி மற்றும் அய்.அய்.எம் கள் அரசு நிறுவனங்களாக இருந்தாலும் அவை பெரும் அளவு தன்னாட்சி பெற்றவை. most autonomous and free from too much intervention from corrupt govt officers and ministers. மேலும் அங்கு ஆசிரியராக பணி நியமனம் பெறுவது மிக மிக கடினமான விசியம். Very high standards are maintained in recruitment and no chance for ‘recommendations’ or ‘bribing’ ; லஞ்சம் கொடுத்து ஆசிரியர் பதவியை பெறவே முடியாது. மேலும் ஆசிரியராக ஆகிவிட்டதால் ஓ.பி அடிக்க முடியாது. தொடர்ந்து ஆய்வு பேப்பர்கள் எழுதியபடியே இருக்க வேண்டும். very tough and demanding profession. பார்பனர் என்றால் மட்டும் வேலை கிடைத்துவிடாது. (இதை சென்னை அய்.அய்.டி யில் பேராசிரியராக இருக்கும் எமது பார்பன நண்பர் சொன்னது).

        ஆனால் கிண்டி அண்ணா பல்கலைகழகத்தில் நிலைமை நேர் எதிர். லஞ்சம் கொடுத்து பதிவியை வாங்க முடியும். ஊழல் மிக அதிகம். ஆய்வு கட்டுரைகளின் தரமும் குறைவு. எனவே தான் கிண்டி பொறியல் கல்லூரியில் இடம் கிடைத்தும், அதை நிராகரித்து, SSN பொறியல் கல்லூரியில் (தமிழகத்தில் மிக சிறந்த கல்லூரி என்ற பெயர்) சேரும் மாணவர்கள் உள்ளனர்.

        ///கடந்த 20 ஆண்டுகளாக கல்விக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாகக் குறைத்து வருவதன் மூலம்,///

        இல்லை. நிதி ஒதுக்கீடு பல ஆயிரம் கோடிகள் அதிகமாகி உள்ளன. குறையவில்லை. ஆனால் பயன் தான் சரியாக இல்லை. தரவுகள் அளிக்கிறேன்..

        • SSN காலேஜ்ல எக்சாம்ல புக் வச்சு எழுத வப்பாங்களாமே அதியமான். இதை எனக்கும் ஒரு பார்ப்பன நண்பர்தான் சொன்னார். ஒருவேள அது காரணமா ? இல்லின்னா மெய்யாலுமே படிப்போட தரத்துக்காகத்தான் போறாங்களா (அதாது கேம்பசுல கம்பெனி வருங்கிறதுக்காக இல்லாம)

        • அய்யா இங்க கஞ்சிக்கி வழியில்லாதவன பற்றி பேசிக்கிட்டு இருக்காங்க. கொண்டைக்கு பூ கேக்குறவனப் பற்றி பேசல.

          • கஞ்சிக்கு பள்ளியில் வழியுண்டு.இன்னும் அந்த பழைய பல்லவியே பாடாதீர்கள்.பள்ளியில் இலவசசீருடை,உணவு,பஸ்பாஸ்,புத்தகம் எல்லாம் பெற்று கவர்மெண்ட் பள்ளியில் படித்தவர்களில் முன்னேறியவர்கள் உண்டு.அது ஏன் பெரும்பான்மையாக இல்லை என்பதே கேள்வி.படிப்பை சுவாரஸ்யமாக மாணவர் உணரவேயில்லை.இதற்கு யாராவது பொறுப்பேற்கணும் இல்லை மாணவர்களின் பொறுப்பின்மை என்றுதான் முடிவுக்கு வரணும்.அரசு பள்ளியில் இல்லாத ஒன்று தனியார் பள்ளியில் என்ன இருக்கிறது? இந்த கேள்விக்கு பதில் தேடுவதை விட்டு தனியார் பள்ளியை எல்லாம் அரசுமயமாக்கு என்பது தீர்வா என்ன?அது என்ன வாத்தியார்களைச் சொன்னால் தப்பு என்ற வாதம் என்று தெரியவில்லை.

            • அரசு பள்ளிகள் தரமற்ற முறையில் நிர்வகிக்கப்படுவதால் தான் மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கி போகிறார்கள். அரசாங்கத்தையும் பொறுப்பற்ற ஆசிரியர்களையும் எதிர்த்துப்போராட வேண்டும் என்கிறீர்கள் சரியான விசயம் தான் ஆனால் விசயம் அதோடு முடிந்துவிடவில்லை.

              கல்வியை தனியார்மயமாக்கத்துடிக்கும் அரசை நோக்கி என்ன கோரிக்கையை வைப்பது ? கல்வியை கடைச்சரக்காக்காதே அனைவருக்கும் தரமான இலவச அடிப்படை கல்வியை வழங்கு, கல்வியை வியாபாரமாக்கி கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் கல்லூரிகளை அரசே ஏற்று நடத்து என்பது தானே சரியான முழக்கமாக இருக்க முடியும், அதைத்தானே போராடிய தோழர்கள் செய்தார்கள் ?

              நீங்கள் கூறுவதில் முக்கியமானது அரசுப்பள்ளிகள் மோசமாக நடத்தப்படுகின்றன, ஆசிரியர்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது தான். அது உண்மை. இந்த கோரிக்கைக்கான அரசிடம் போராடுகின்ற அதே வேளையில் எதிர்காலத்தில் கல்வியை முற்றிலும் தனியார்மயமாக்கும் கொள்கைக்கு எதிராகவும், கல்வியை விற்பனைப்பொருளாக்கி கொள்ளையடிப்பதற்கு எதிராகவும் போராட வேண்டும்.

              அனைவருக்கும் இலவச கல்வி வழங்க வேண்டிய அரசே கல்வித் துறையில் கொள்ளையர்களை அனுமதித்திருப்பதை அம்பலப்படுத்தியும், அனைவருக்கும் தரமான கட்டாய இலவச கல்வியை வழங்க தனியார் கல்விக்கொள்ளையர்களை ஒழித்துக்கட்டு என்றும் போராட வேண்டும்.

              கல்வி வழங்க வேண்டியது அரசின் கடமை என்றால் தனியார் பள்ளிகள் கல்லூரிகளை மூடச்சொல்லுவது தானே நியாயம்.

            • 1991 வரையில் அரசுப் பள்ளிகள் ஓரளவிற்கு தரமுள்ளதாகவும், பணிபுரிந்த ஆசிரியர்கள் பொறுப்பாகவுமே இருந்தனர் என்பதை அப்போதைய பள்ளித் தேர்ச்சி விகிதங்களை பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். 1991ல் நரசிம்மராவ் பதவியேற்ற பிறகுதான் இந்நிலை மாறுகிறது. அரசுப் பள்ளிகளின் தரமும், பொறுப்புணர்வும் மாற்றமடைய ஆரம்பிக்கின்றன. இதற்கு காரணம் அன்றைய காங். அரசு காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தனியார்மயத்தையும் தாராளமயத்தையும் நடைமுறைபடுத்தியமைதான். தனியார் பள்ளி, கல்லூரிகளின் நிறுவனர்கள் அரசியற் பிரமுகர்களாகவும் அவர்களுடைய பினாமிகளாவும் இருக்கும் நிலையில் ஏன் அரசுப் பள்ளிகளில் தரமும், பொறுப்புணர்வும் சீரழிந்தது என்று அறிவார்ந்த நிலையில் இருக்கும் அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான். இதற்கு எதிராக நாம் ஒன்றுபட்டு போராடவேண்டும்.

        • இந்த அதியமான், இந்தியன் எல்லாம் ஒரு கட்சி போலவே!நாம ஒன்னத்த பத்தி சீரியஸா பேசிட்டு இருந்தா, கைப்புள்ள கணக்கா காமெடி பன்றதையே பொழப்பா வச்சிருக்காங்களே! வுங்களலாம் நினைச்சா………!
          அது கடக்கிட்டும், வாத்தியான் ஓ.பி அடிக்கிறானா, காப்பி அடிக்கிறானா அப்படீங்கறதா இங்க பிரச்சினை?
          ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.களில் இருக்கிறதா நீங்க சொல்ற so called தகுதி, திறமை, அரசியல்வாதி-அதிகாரிகளது தலையீடின்மை இது எல்லாம் பத்தி அப்பால பேசிக்கலாம்!
          பல அரசுப்பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக, ஈராசிரியர் பள்ளிகளாக இயங்குவதற்கு யார் காரணம்? பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் இன்றி பொட்டல் வெளியில் மரத்தடிகளில் பாடம் நடத்தப்படுகிறதே, இவற்றுக்கு யார் காரணம்? அரசுப்பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் 60-70 பிள்ளைகளுக்கு ஒரே ஆசிரியர் பாடம் நடத்துவதற்கு யார் காரணம்? இவற்றுக்கெல்லாம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்தான் காரணமென்றால், வுங்களையெல்லாம் என்னான்னு சொல்றதுன்னே தெரியல!

        • //கடந்த 20 ஆண்டுகளாக கல்விக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாகக் குறைத்து வருவதன் மூலம், போதிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாததன் மூலம் அரசுப் பள்ளிகளைத் திட்டமிட்டே சீரழித்துவிட்டுத் தனியார் கல்வி வியாபாரிகள் கொட்டமடிப்பதற்கான வாய்ப்பை அரசே உருவாக்கி வருகிறது// என்பதை மறுத்து, //இல்லை. நிதி ஒதுக்கீடு பல ஆயிரம் கோடிகள் அதிகமாகி உள்ளன. குறையவில்லை. ஆனால் பயன் தான் சரியாக இல்லை. தரவுகள் அளிக்கிறேன்..// என்று கூறியிருந்தீர்கள். தரவுகளைத் தாருங்கள் அதியமான் அவர்களே! உங்களது, மதிப்புமிக்க இந்த நற்காரியம் வினவின் பதிவிற்கு கூடுதல் பலமாக அமையும் என்றே எதிர்பார்க்கிறேன். அட, அதியமானிடம் மட்டும் கேட்கலீங்க, உங்களிடமும் இருந்தால் பகருங்கள் பார்க்கலாம். அதியமான் அண்ணன் எதையும் statement ஆ சொன்னா நம்ப மாட்டாரு, Statistics ஆ சொன்னாத்தான் கொஞ்சமாச்சும் யோசிப்பாரு!

          • பார்க்கவும் :

            http://www.accountabilityindia.in/accountabilityblog/1990-unpacking-india%E2%80%99s-education-budget-paisa-2010

            India’s education budget more than doubled in the last five years increasing from Rs 152,847 crores in FY 2004-05 to Rs 372,813 crores in FY 2009-10. An estimated 45 percent (figures for FY 2008-09) of education expenditures are now dedicated to elementary education….

            State government investment too has seen a dramatic increase in recent year. Uttar Pradesh, Bihar, Rajasthan and Andhra Pradesh, State governments nearly doubled their share of the elementary education budget between 2006-07 and 2009-10, while Jharkhand has seen a three-fold increase in the same period. Interestingly, Uttar Pradesh, saw the largest overall increase in its elementary education state budget from Rs 6,439 crores in 2006-07 to Rs 11,185 crores in 2009-10. This increase was far greater than GOI’s increased share for SSA.

    • அரசு பள்ளிகளின் நிலைமைகளைப் பற்றி பார்க்கும் முன்னர், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஐ.ஐ.டிகளின் நிலைமையுடன் அவற்றை ஒப்பிட்டு விட்டு பார்த்தால் தான் தெரியும் இங்கே பார்ப்பனியத்தை பேச வேண்டியதன் அவசியம் என்னவென்று?

      ஐ.ஐ.டியில் ஆதிக்கம் செலுத்துவது பார்ப்பனக் கும்பல் தான். அங்கே மட்டும் அரசு நிர்வாகம் சரியாக நடப்பது எப்படி ? .அதற்கு மட்டும் ஆண்டு தோறும் நிதி செல்வது எப்படி?.

      அரசு நிர்வாகம் சரியில்லை என்றால் தனியாரிடம் கொடுக்க வேண்டுமா அல்லது அதனை சரி செய்து சீர்பட இயங்கச் செய்ய வேண்டுமா?

      ஒன்றிரண்டு இடங்களில் அரசுப்பள்ளிகளில் நடைபெறும் நிகழ்வுகளை வைத்து இயக்கப்படும் சினிமாக்களைப் பார்த்து அரசு பள்ளிகளைப் பற்றி பேசும் இந்தியனே..
      முதலில் அரசுப் பள்ளிக்கு ஏதாவது ஒரு மழைக்காவது ஒதுங்கி உள்ளே சென்று பார்த்து விட்டு வாருமைய்யா.. படத்துல பாத்துட்டு இங்க வந்து தொப்பக் கூடாது

  10. தண்ணீருக்குள் குதிக்கிறவரை தான் குளிர்.குதித்த பின் சுகம்.அதுபோலத்தான் போலீசு, சிறை,தண்டனை எல்லாம். போலீசு கூலிப் படை.புரட்சியாளர்கள் மக்கள் படை. போலீசு எப்படா இந்த (தொல்லை தீரும்)வேலை முடியும் என்று காத்திருக்கும்.போலீசுக்கு சம்பளம் நமக்கு புதிய அனுபவம். நமக்கு பணி ஓய்வே கிடையாது.இது தான் மகிழ்ச்சியின் தருணம்.வாழ்த்துக்கள்.இப்படித் தான் போராட வேண்டும் என்று வழி காட்டியது போல் அமைந்திருந்தது உஙகள் போராட்டம்.குறிப்பாக,போலி கம்யூனிஸ்டுகள் கற்றுக்கொள்ள வேண்டியது.அனைத்து மக்களும்-தமிழனும்-உணரவேண்டியது.இந்தியன் போன்றவர்கள் மண்டையில் ஏற வேண்டியது.

  11. இந்தியன் போன்றவர்கள் ஒன்றைப்புரிந்து கொள்ள வேண்டும்.கல்வி தனியார்மயமாயிருப்பதை எதிர்த்து இந்தப்போராட்டம். சமச்சீரைக்கொண்டுவர வைத்தவர்கள் இவர்கள் என்கிற ஆத்திரம் அம்மாவுக்கு,அதுதான் நாயை ஏவுகிறது. அரசுப்பள்ளிகளில் குறைகள் இருப்பது உண்மைதான். அரசுப்பள்ளிகளை சரியாகப் பயன்படுத்தாதலால் தனியார்பள்ளிகள் வரவில்லை நண்பரே! அரசுப்பள்ளிகளிக் காலி செய்வதற்காகத்தான் வந்துள்ளது.போலிக்கம்யூனிஸ்டுகள் மேல் உங்களுக்கு பயங்கரக் கோபம் போல்தெரிகிறது. அது சரிதான். இருந்தாலும் விசயத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக நண்பர் பரிசீலிக்க வேண்டும்.

  12. கல்வி கொல்லைக்கு எதிரான தோழர்களின் எதிர்ப்பு போராட்டம் ஒரு அடையாளம் . நீர் ,ஆகாரம் போல கல்வி ஒரு மனிதனின் அடிப்படை உரிமை ,கல்வி கொள்ளையினை தடுக்காத அரசு போராட்டக்காரர்களை நடத்திய விதம் அருவெறுப்பானது ,போலி ஜனநாயகத்தின் உண்மை முகம் அசிங்கமானது .

  13. உங்கள் மன தெகிரியத்தை பாராட்டுகிறேன்…
    இது (கல்வி கொள்ளை) அனைவரும் உணர்ந்து போராட வேண்டிய ஒரு விஷயம்.

  14. நமது நாடு பெரும்பாண்மையான ஏழைகள் மற்றும் பரம ஏழைகளைக் கொண்ட நாடு. தமது பிள்ளைகளை கல்விகாக இன்றுள்ள நிலையில் நடுத்தர வர்க்கமே திண்டாடிக் கொண்டிருக்கின்ற வேளையில் கல்வியில் தனியார்மயத்தை ஆதரிப்பதை அயோக்கியத்தனம் என்று தான் சொல்ல வேண்டும்.

  15. தோழரின் சிறை அனுபவம் மற்ற தோழர்களுக்கு புதிய பாதையை அமைத்துக் கொடுக்கும். திருச்சியில் ஜெயலலிதா போல வேடமிட்டதற்காக காவல்துறை தோழர்களை கைது செய்தது. அதிலும் குழந்தைகள் இருந்தார்கள். அவர்கள் வெளியில் வந்தபிறகு கூறிய அனுபவங்கள் மற்ற தோழர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்தது என்று சொல்ல முடியும். இந்த அனுபங்களை தொகுத்து வெளியிட்டால் கூட நல்லதுதான். பெ.வி.மு வில் புதிய தோழர்களுக்கும் ஏன் மற்ற அனைவருக்குமே பயன்தரும். சுயஉதவிக்குழுவில் இணைந்து கடன்காரர்களாக மட்டுமே பெண்களைப் பார்க்கும் காவல் துறைக்கு பெவிமு தோழர்களைப் பார்த்தால் இனி நடுக்கம்தான்….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க