காட் ஒப்பந்தம் என்கிற அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டதை அடுத்து வந்த காட்ஸ் ஒப்பந்தத்தின்படி கல்வி, மருத்துவம், குடிநீர், உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட அனைத்து ’சேவை’த் துறைகளையும் தனியார்மயமாக்கி கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளைக்கு திறந்துவிடும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது இந்திய அரசு.
இலவசமாக வழங்க வேண்டிய அடிப்படை கல்வியிலிருந்து உயர் கல்வி வரையிலான மொத்த கல்வித்துறையையும் தனியார் முதலாளிகளுக்கு திறந்துவிட்டு, கல்வி அளிக்கும் சேவையிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளில் ஒன்று தான் ’கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009’. தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்கிற பெயரில் கல்வியில் தனியார்மயமாக்கலின் முதல் நடவடிக்கையாக இதை தற்போது செயல்படுத்தி வருகிறார்கள்.
கல்விக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் அரசின் இந்த நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றன. கடந்த 3-6-12 அன்று சிதம்பரத்தில் இலவசக் கல்வி உரிமைக்காக ‘மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும்’ ’மனித உரிமை பாதுகாப்பு மையமும்’ இலவச கல்வி உரிமை மாநாட்டை நடத்தின.
வரும் 17-ம் தேதி தனியார்மய கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் ! உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலைநாட்டுவோம் ! என்கிற முழக்கத்துடன் புரட்சிகர மாணவர்–இளைஞர் முன்னணி ’கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாட்டை’ சென்னை, திருச்சி, கரூர், விழுப்புரம், கடலூர் ஆகிய நகரங்களில் நடத்துகிறது.
இந்த மாநாட்டிற்கு முன்னதாக இன்று காலை தனியார்மய கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் ! மறுகாலனியாக்க கொள்கையை மோதி வீழ்த்துவோம் ! என்கிற முழக்கத்துடன் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர் பு.மா.இ.மு.வினர்.
அதன்படி சென்னையின் முக்கிய இடங்களில் எல்லாம் இதற்கான அறிவிப்பு சுவரொட்டிகள் முதல் நாள் இரவே, அதாவது நேற்று நள்ளிரவே ஒட்டப்பட்டிருந்தன. இன்று விடியற் காலையிலேயே இந்த சுவரொட்டிகளை பார்த்து அதிர்ந்து போன நுங்கம்பாக்கம் துணை ஆணையர் வெங்கடாஜலபதி காலை ஆறு மணிக்கே பு.மா.இ.மு அலுவலகத்திற்கு தொலைபேசி செய்துவிட்டார். “முற்றுகை எல்லாம் வேண்டாம், கல்வித்துறை இயக்குநரை சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன், எனவே முற்றுகையை விலக்கிக் கொள்ளுங்கள்” என்றார். அவருடைய வாக்குறுதிகளை எல்லாம் தோழர்கள் நம்பவில்லை. எனவே திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு பள்ளிக் கல்வித்துறையின் முன்பு கூடினர். ஆனால் அதற்கு முன்பாகவே போலீசை கூட்டம் கூட்டமாக அங்கே இறக்கியிருந்தனர். இன்னொரு பக்கம் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
தோழர்களை உள்ளே விடாமல் வாயிலை மறித்து நின்று கொண்டிருந்தது போலீசு. சேத்துப்பட்டு, எழும்பூர், நுங்கம்பாக்கம் ஆகிய மூன்று காவல் நிலையங்களின் ஆய்வாளர்களும், நுங்கம்பாக்கம் துணை ஆணையரும் இவர்களோடு நூற்றுக்கணக்கான போலீசும், சின்னஞ்சிறு பள்ளி குழந்தைகளையும் கல்லூரி மாணவர்களையும் அவர்களுக்கு துணையாக நின்ற பெண்கள் மீதும் எப்போதும் பாய்ந்து பிடுங்குவதற்கு தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது.
துணை ஆணையர் வெங்கடாஜலபதி மீண்டும் தோழர்களிடம் வந்து “இயக்குனரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன், முற்றுகை போராட்டம் வேண்டாம், ஒதுங்கிக் கொள்ளுங்கள்” என்றார். “இயக்குனரை சந்திக்க நாங்களும் தயாராக இருக்கிறோம், சார் வரச்சொல்லுங்கள் பேசுவோம்” என்றார்கள் தோழர்கள். உங்களில் ஐந்து பேர் மட்டும் வாருங்கள் உள்ளே போய் பேசுவோம் என்றார்.
அதற்கு உடனடியாக பதிலளித்த தோழர்கள், “ஐந்து பேர் மட்டும் உள்ளே போய் ரகசியமாக எல்லாம் பேச முடியாது. மாணவர்கள், பெற்றோர்கள் என்று மக்கள் அனைவர் முன்பும் பேச வேண்டும் எனவே அவரை கீழே வரச்சொல்லுங்கள் மக்கள் அவரோடு பேசுவார்கள்” என்றார்கள். தனியாக கூட்டிச்சென்று சமரசம் செய்துவிடலாம் என்பதற்கான போலீசின் முயற்சிகளை எல்லாம் தோழர்கள் முறியடித்தனர்.
அடுத்ததாக வாயிலுக்கு முன்பாக காவல் துறை வாகனங்கள் அனைத்தையும் கொண்டு வந்து நிறுத்தினர். உள்ளே நுழைய முடியாதபடி வாயிலை சுற்றி பாதுகாப்பு அரணை அமைத்தனர். உள்ளே நுழைய காத்திருந்த தோழர்கள் முழக்கமிட்டபடியே அந்த அரணை மீறி வாயிலை நோக்கிச் செல்ல முயன்ற போது, அதற்காகவென்றே காத்திருந்த போலீசு கும்பல் தோழர்கள் மீது பாய்ந்து குதறியது. எதிர்த்து நின்ற தோழர்களை கடுமையாக தாக்கி முன்னேற முடியாதபடி அங்கேயே தடுத்து நிறுத்தி தனது வெறியாட்டத்தை துவங்கியது.
குழந்தைகள், சிறுவர்கள் என்று கூட பாராமல் அவர்களின் பிஞ்சு கைகளையும் கால்களையும் பிடித்து போலீசு வெறியர்கள் முரட்டுத்தனத்துடன் சாலையில் இழுத்து வீசினார்கள். எதிர்த்து நின்ற மாணவர்களையும் பெற்றோர்களையும் கைகளை இறுக்கிக் கொண்டு வயிற்றிலும், நெஞ்சிலும் ஓங்கி ஓங்கி குத்தினார்கள். பெண் தோழர்களை லத்தி கம்புகளால் விளாசினார்கள். ஆறு மாத கைக்குழந்தைகளோடு வந்திருந்த பல பெண் தோழர்களையும் கூட விட்டுவைக்கவில்லை. வெறி நாய் கூட்டம் போல மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று அனைவர் மீதும் பாய்ந்த போலீசு நாய்கள் கடித்துக் குதறின.
துணை ஆணையர் வெங்கடாஜலபதி நடுவில் நின்று கொண்டு வெறித்தனத்துடன் நாலா பக்கமும் திரும்பி திரும்பி இதோ இவனை அடி, அதோ அவனை அடி, அவளை அடி, கையை உடை, காலை உடை என்று ஒரு ரவுடியை போல கத்திக் கொண்டிருந்தார். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் இரண்டு பெண் தோழர்களுக்கு பலத்த அடிபட்டதால் கடுமையான நெஞ்சு வலியால் அங்கேயே மயங்கி விழுந்தனர். ஆஸ்த்மா நோயாளியான ஒரு தோழரின் நெஞ்சிலேயே ஓங்கி ஓங்கி குத்தியதால் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவரும் மயக்க நிலைக்குச் சென்றார். இன்னொரு தோழரின் உயிர்நிலையில் பூட்ஸ் கால்களால் ஒரு போலீசு பொறுக்கிநாய் ஓங்கி உதைத்ததில் அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். இவர்களோடு மேலும் ஒரு தோழர் மோசமாக தாக்கப்பட்டிருந்தார்.
கடுமையான தாக்குதலுக்குள்ளான இந்த ஐந்து தோழர்களையும் போராட்டக்களத்திலிருந்து KMC மருத்துவமனைக்கு பிற தோழர்கள் எடுத்துச் சென்றனர். இன்னொரு பக்கம் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.
போராடுவதற்கான ஜனநாயக உரிமைகளை மறுத்து மனிதத்தன்மையற்ற முறையில் தடியடி நடத்தி வெறியாட்டம் போட்ட போலீசை கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் மில்டனும், சக்தி சுரேஷும் உடனடியாக அங்கு வந்தனர். அவர்கள் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே அவர்களையும் தாக்கியது பாசிச ஜெயாவின் விசுவாச நாய்கள். சுற்றி நின்று கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் காமராக்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருந்தன.
இந்த தாக்குதலை கண்டித்து தோழர்கள் அனைவரும் அடுத்தபடியாக கல்லூரி சாலையை மறித்துக் கொண்டு உட்கார்ந்தனர். முற்றுகைப் போராட்டம் மறியலாக மாறியது. ஆனால் அதற்கும் அனுமதி மறுத்த போலீசு உட்கார்ந்துகொண்டிருந்த தோழர்களை தரதரவென இழுத்துச் சென்று போலீசு வண்டிகளில் ஏற்றியது. தோழர்கள் ஏற மறுத்து அடம்பிடித்த போது மீண்டும் கைகளை குவித்து பலங்கொண்ட மட்டும் குத்தி மூச்சு முட்டச் செய்து வண்டிக்குள் திணித்தனர். மொத்த தோழர்களையும் பள்ளிக்கல்வித் துறை வளாகத்தைவிட்டு அப்புறப்படுத்தி கல்விக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் அரசுக்கு விசுவாசமாக வெறியாட்டம் போட்டது பாசிச ஜெயாவின் போலீசு.
தோழர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அடுத்து பத்திரிகையாளர்களையும் விட்டு வைக்கவில்லை. துணை ஆணையரிடம் கேள்வி கேட்கச் சென்ற வின் டி.வி யின் நிருபரை முரட்டுத்தனத்துடன் தாக்கிக் கீழே தள்ளிவிட்டனர். இதை கண்டித்து அவர்கள் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தற்போது நூற்று இருபத்நு ஐந்து தோழர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள APVP திருமணமண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் குழந்தைகளும் பெண்களுமாவர். இவர்களுடன் மாணவர்களும் பெற்றோரும் உள்ளனர். காலையில் கைது செய்யப்பட்ட தோழர்கள் இந்த நிமிடம் வரை விடுவிக்கப்படவில்லை.
திருமணம் நடக்கின்ற மண்டபத்தில் தற்போது அரங்கக்கூட்டம் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறன ! ஆம் திருமண மண்டபத்தை நமது தோழர்கள் பிரச்சார மேடையாக்கி வருகின்றனர். மண்டபத்திற்குள் நுழைந்ததுமே அமைப்பு கொடிகளையும் பதாகைகளையும் கட்டி ஒரு பொதுக்கூட்டம் நடக்கின்ற இடத்தை போல மண்டபத்தை மாற்றியமைத்து விட்டனர்.
தோழர்கள் அனைவரும் சிறை வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்தபடியே நடந்திருக்கிறது. சைதை நீதிபதி முன் ஆஜர் செய்து சிறையில் அடைத்து விட்டார்கள். ஆனால் மத்திய, மாநில ஆட்சிகளில் அதிவேகமாக அமல்படுத்தப்படும் கல்வி தனியார் மயத்தை எதிர்த்து தோழர்கள் தொடர்ந்து போராடுவார்கள். இந்த தடியடியும், சிறையும் அவர்களை அசைத்து விடாது. அணிதிரளும் மக்களையும் தடுத்து விடாது.
படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்
____________________________________________________________________
– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை
___________________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- இலவச கல்வி உரிமைக்காக சிதம்பரத்தில் மாநாடு!
- சிதம்பரம் – இலவச கல்வி உரிமை மாநாடு: உரைகள், படங்கள்!
- “இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – நேரடி ரிப்போர்ட்!
- 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! ஒரு நெடிய போராட்டம்!!
- சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு!
- சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் !
- கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்!
- விருத்தாசலம்:தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி!
- சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து!! தமிழகமெங்கும் ஆர்பாட்டங்கள்!!!
- சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் !
- அம்மா – ஆணவம் – ஆப்பு!
- கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்
- குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!
- ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?
_____________________________
- சுயநிதிக் கல்லூரிகள்: கல்வியா? கொள்ளையா? மொட்டையா?
- சுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளையும், சுயமரியாதை பறிபோன மாணவர்களும் !
- சமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின் இரட்டைவேடம்!
- சிவப்புச் சட்டை!
_____________________________
- ஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை! ‘கல்வி வள்ளலின்’ ரவுடித்தனம் !
- அமைச்சரா, ரவுடியா? ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலை மாணவர் போராட்டம்!
- வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!
- மத்திய அரசு கடல்சார் பல்கலைக்கழகத்தின் கண்ணீர் கதை
- சங்கப் பரிவாரம் வழங்கும் “”இதுதான்டா ராமாயணம்!”
- ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!
- தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!
_____________________________
- அண்ணா நூலகத்தை மூடத்துடிக்கும் பாசிச ஜெயாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
- மதுரவாயல் மாணவர்களின் நீதிமன்ற போராட்டம் வென்றது !
- மதுரவாயல் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் !!
- ஆசிரியர் அடித்து மாணவன் கொலை! போராடிய தோழர்கள் கைது!
_____________________________
இந்திய அரசாஙம் மக்களுக்கானது அல்ல மாறாக உழைப்பை சுரண்டும் கைக்கூலிகளின் அரசாங்கம். இப்படித்தான்நடந்துகொள்ளும். எழைகளின் கோபம் பல ஏகாதிபத்தியஙளை மண்டியிடச்செய்துள்ளது. இஙகேயும் விரைவில் விடியல் வரும் அவர்களுக்கு முடிவும் வரும்.
போலிசு உளவுத்துறை நாய்களின் அட்டகாசங்கள்
http://www.nakkheeran.in/Users/frmGallery.aspx?G=28283&GS=8&GV=1327
http://rsyf.wordpress.com
தன்னிடம் செல்லமாய் முறையிட்ட, தமிழகத்தின் குறிப்பிட்ட சில தனியார் பள்ளிகளிடம் “அதிக கட்டணக் கொள்ளையை நடத்திக்கோ” என்று கண்ணைக்காட்டியது, சென்னை உயர் நீதிமன்றம். “அவிங்களுக்கு மட்டும் என்ன தனிச்சலுகை” என்று கொதித்துப்போன மற்ற தனியார்பள்ளி முதலாளிகளும் தன் இஷ்டம் போல கட்டணக்கொள்ளையை நடத்தி வருகின்றனர். இதைத்தட்டிக்கேட்க வக்கில்லாத… துப்பில்லாத… (*#@!)இல்லாத… தமிழக அரசும் போலீசும் “பெற்றோர்கள்-மாணவர்களை கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்து” எனக்கோரிப் போராடியவர்களை அடித்து துவைத்து உள்ளே தள்ளியிருக்கிறது. திறமைமிக்க பார்ப்பன ஜெயா ஆட்சியா, கொக்கா?
காவல் நாய்களின் மிகக் கொடூரமான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்.
நாயில் ஆண் என்ன? பெண் என்ன? எல்லாமே கடித்துக் குதரும் வெறிநாய்கள்தான் என்பதை தமிழக காவல் துறை நிரூபித்துள்ளது.
காவல் நாய்களின் தாக்குதலை எதிர்த்து போர்க்குணத்தோடு போராடிய தோழர்களுக்கு வாழ்த்துகள்!
போலிசு அராஜகம் ஒழிக, வொல்லட்டும் போராட்டம்…….
காலையில் போஸ்டர பார்த்தபோதே தாமதமாகி விட்டதால் போய் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. சே! அடுத்தமுறை தவற விடக் கூடாது.
இந்த போலீஸ் நாய்கள் மேட்டுக்குடியினரின் கவர்ச்சியான அன்னா ஹசாரே கோமாளிகளின் கூடத்திற்கு விசுவாசமாக காவல் காப்பார்கள். ஆனால் தோழர்களின் தன்னலமில்லாத போராட்டம் அப்படி இல்லையே.
வெல்க உங்களின் சமுதாய பங்களிப்பு. பங்கெடுத்த அனைவர்களுக்கும் எனது வீர வணக்கங்கள்.
இந்த போராட்டம் உடனே தமிழ்நாட்டின் எல்லா மாவட்டதிலும் பரவ வேண்டும் மாணவர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் இது முடிவல்ல தொடக்கம் …….
in outlook photogallerry
http://photogallery.outlookindia.com/default.aspx?pt=3&ptv=0&date=06/28/2012&pgid=57297#TopImage
முதலில் போராட்டத்தில் போர்குணமாக ஈடுபட்ட அணைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லையே என வருந்துகிறேன்,
நான் பச்சையப்பன் கல்லூரி மாணவன்,சில மாதங்களுக்கு முன் தான் பு.மா.இ.மு வில் இணைந்து செயல்பட்டேன், போராட்ட நடக்கும் இடத்திற்கு வருவதற்கு காலதாமதம் ஏற்ப்பட்டதால், கல்லூரிக்கு சென்று விட்டேன்,
கல்லூரிக்கு சென்றதும் போராட்டத்திற்கு செல்ல முடியவில்லை என்ற கவலை நீங்கியது, ஏனென்றால் எங்கள் கல்லூரி மாணவர்களும் வகுப்பு புறக்கணித்து போராடிக்கொண்டிருந்தார்கள்! 2 மாதங்களாக எங்களை ரவுடிகளாக சித்தறிக்கும் வண்ணமாக போலீஸ் வேட்டை நாய்களைப் போல கல்லூர் வாசல் முன் எப்பொழுதும் இருந்து கொண்டிருந்தார்கள், 4 பேர் நின்று கொண்டிருந்தால் கண்டிப்பது, மைதானத்திற்கு செல்ல கூடாது, என சிறைகளை போல் ஆனது கல்லூரி, காவல் துறையின் உளவு பிரிவினர் கல்லூரிக்குல் இருப்பது என எல்லை மீறி கொண்டிருந்தது, இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது இருந்த வீரமிக்க பச்சையப்பன் கல்லூடி, இப்பொழுது கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக்காக மெட்ரோ ரயில் திட்டைத கொண்டு வந்து, கல்லூரி இடிக்கப்பட்டது, 150 வருட பாரம்பரியமிக்க கல்லூரி இடிக்கப்பட்டது, இப்படி பல அடக்குமுறைகளை செலுத்தி வருகிறது, இதையெல்லாம் சகித்துக் கொண்டு 2 மாத காலம் காத்திருந்தோம், ஆனால் நேற்று எல்லைகள் மீறப்பட்டது, பஸ்ஸில் வழக்கம் போல் வந்து கொண்டிருந்த மாணவர்களை வாசலில் இருந்த காவல் நாய்கள் பஸ்ஸில் வந்த மாணவர்களை பிடித்து ஏற்கனவே வாங்குனது பத்தாத இன்னும் எவ்வளவு வேனும் டா பொறுக்கி பசங்களா… என காவல் நாய்கள் அராஜகத்தை உயர்த்தினர், பொறுத்தது போதும், இனியும் அடங்கிப் போனால் வெத்கக் கேடு! என்று மாணவர்களே ஒருங்கிணைந்து, அணைத்து வகுப்புகளையும் களைத்து எல்லா மாணவர்களையும் கூட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம்! அப்பொழுது அணைத்து ரூட் பிரச்சனைகளையும் தகர்த்து, போலீசை வெளியேற்று என்று ஒன்றுதிரண்டு போராடினோம்!ஆனால் எங்களுக்கு ஒழுங்கமைக்க தெரியாததால், மாலை முடித்துக்கொண்டோம், இனி விட மாட்டோம், இந்த டி.பி.ஐ போராட்டம் போல் எங்களுடைய போராட்டம் போர்குணமாக இருக்கும், இனி காவல் நாய்களை வெளியேற்றி அணைத்து அடக்குமுறைகளயும் துக்கியெறியும் வரை எங்களுடைய போராட்டம் ஒயாது. பு.மா.இ.மு வின் தலைமையில் இனி போராட்டங்கள் பச்சையப்பன் கல்லூடியில் வலுப்பெறும், இது காவல் துறையினருக்கும், உளவு பிடிக்கும் நாய்களுக்கும், அரசாங்கத்திற்கும் எச்சரிக்கை! இனி வினவு-இல் அடிக்கடி பச்சையப்பன் கல்லூரியின் போராட்டப்பதிவுகள வரும், என பதிய வைக்கிறேன்!
வாழ்த்துக்கள் தோழர் தீபக்!
வெற்றி என்றும் போராடும் நம் பக்கமே!
விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம்
http://www.facebook.com/photo.php?fbid=435833433114814&set=a.211192605578899.59228.100000644833054&type=1&theater
புகைப்படங்களை பார்க்கும்போது மனசு வலிக்குது போராடிய தோழர்களுக்கு
என் நன்றிகள் விரைவில் மாற்றம் வரும்
போலிசு அராஜகத்தைக் கண்டித்து திருச்சியில் ஒரு கல்லூரியின் வாயிற்கதவை மூடி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
விசிக திருமாவளவன், இந்திய மாணவர்கள் சங்கம் கண்டனம்
Vicious clampdown by the police on Students – Comrades at DPI!
http://cpimltn.wordpress.com/
ஜெயாவின் ஆட்சி அமைந்தாலே போலீசுக்கு கொம்பு முளைத்து விடுகிறது. உண்மையில் அடக்குமுறை அதிகரிக்க அதிகரிக்கத் தான் புரட்சிகர அமைப்புகள் மேல் நோக்கி வளர்கிறது.
//திருமண மண்டபத்தை நமது தோழர்கள் பிரச்சார மேடையாக்கி வருகின்றனர். மண்டபத்திற்குள் நுழைந்ததுமே அமைப்பு கொடிகளையும் பதாகைகளையும் கட்டி ஒரு பொதுக்கூட்டம் நடக்கின்ற இடத்தை போல மண்டபத்தை மாற்றியமைத்து விட்டனர்.//
மேற்கண்ட வரிகளைப் படிக்கும் போது ம.க.இ.கவின் இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது –
“விதியை வென்றவர்கள் யாரடா… அது நக்சல்பாரிகள் தானடா..
போராட்டம் எங்கள் உயிர்மூச்சு என்ற வரலாற்று நாயகர்கள் யாரடா..
அது, நக்சல்பாரிகள் தானடா”
Vinavu,
Why cant you show the same spirit in fighting against Minority institutions, who’re saying they’re not ready to implement RTE (Right To Education) act and not going to reserve 25% seats to poor pupils???
அருணு, இந்த போராட்டம் அனைத்து கல்வி நிலையங்களை (மொத்தத்தில் கல்வியை)அரசுடைமை ஆக்குவதற்கானது. இதில் மதவேறுபாடெல்லாம் இல்லை. ஆனால் உங்கள் மூளை DEFAULT ஆக இந்து மதவெறி கண்ணோட்டத்தில் சிந்திப்பதால் காவித்தனமான கேள்வியை கேட்கிறீர்கள்.
போராடிய தோழர்களுக்கு
என் நன்றிகள்
”அனைத்து தனியார் பள்ளி கல்லூரிகளையும் அரசுடமை ஆக்கு” .”அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி வழங்கு” இந்த நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
காசுக்காரன்கள் மட்டும் விற்கவும் வாங்கவும் கல்வி என்ன கடை சரக்கா..அது மனித குலத்தின் பொது சொத்தல்லவா.அக்கல்வியை பெறுவது மக்களின் அடிப்படை உரிமை.
கல்விக் கொள்ளையர்கள் கேட்கும் பணத்தை கடன் பட்டாவது கட்டி விட்டு வாழ்க்கை செலவுகளுக்கு கூட அவதியுறும் மக்களுக்காக,அவர்களின் துயர் துடைக்க அடி உதைகளை ஏற்று சிறை ஏகிய தோழர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.இன்று சிறு நெருப்பாக பொறி பறக்கும் தோழர்களின் போராட்டம் நாளை பெரும் காட்டுத் தீயாக மக்களின் போராட்டமாக மாறட்டும்.வெல்லட்டும்.
போலீஸ் நாய்கலின் குலந்தைகலுக்காக உம் சேர்த்து தான் போராடுகிரோம்..ஏன் இவைகலு கு புரிவதில்லை..
[…] : வினவு, நக்கீரன் பகிர்ந்துகொள்ள […]
போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.. கல்வி வியாபரம் ஆகிவிட்டது.. “படிப்பது சம்பாதிப்பதற்கு மட்டுமே” என்ற குறுகிய மனப்பான்மை கொண்ட ஒரு தலைமுறையை வளர்த்திடுக்கிறோம்..
போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.. புகைப்படங்களை பார்க்கும்போது மனசு வலிக்குது போராடிய தோழர்களுக்கு
என் நன்றிகள்
[…] […]
[…] […]
// ஆனால் மத்திய, மாநில ஆட்சிகளில் அதிவேகமாக அமல்படுத்தப்படும் கல்வி தனியார் மயத்தை எதிர்த்து தோழர்கள் தொடர்ந்து போராடுவார்கள். இந்த தடியடியும், சிறையும் அவர்களை அசைத்து விடாது. அணிதிரளும் மக்களையும் தடுத்து விடாது. //
நடக்கவிருக்கும் ’கல்வி தனியார்மய எதிர்ப்பு’ மாநாடுகளும், இலவசக் கல்வி உரிமை இயக்கமும் மக்கள் ஆதரவுடன் வெற்றியடைய வாழ்த்துக்கள்..
மதிப்புமிக்க என் அருமைத் தோழர்களே… போராட்ட நிழற்படங்களைக் காணும் போது என் தோழர்கள் மேல் நன்றிப் பெருக்கோடு மனம் கனத்துப் போய், இது எனது பிள்ளைகளூக்குமான போராட்டமல்லவா..? இது நான் வாங்க வேண்டிய அடியல்லவா? எனக்காக எம் தோழர்கள் அடி வாங்குகிறார்களே…
மக்களூக்கான தோழர்கள் ஆயுதமின்றி… அதிகாரமின்றி…! ஆனால், மக்கள் விரோதிகள் கையில் ஆயுதமும், அதிகாரமும்…! இதுதான் தமிழகமும், இந்தியாவும்! ஆயுதபாணீகளான இந்த மக்கள் விரோத பயங்கரவாதிகளை வெறுங்கையால் சந்திப்பது என்பது இனி இயலாத காரியம்! மக்கள் இனி எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டுமென்பதை இந்தப் போலீசு மாமாக்கள் முடிவு செய்து மக்களுக்குச் சொல்லி விட்டார்கள்.
அருமைத் தோழர்களுக்கு.. உண்மையான பெரியார் தொண்டர்கள் சார்பில் புரட்சிகர வாழ்த்தும் நெஞ்சார்ந்த நன்றிகளும் என்றென்றும். ஆதரவுடன், காசிமேடுமன்னாரு.
\\ இது எனது பிள்ளைகளூக்குமான போராட்டமல்லவா..? இது நான் வாங்க வேண்டிய அடியல்லவா? எனக்காக எம் தோழர்கள் அடி வாங்குகிறார்களே..//
உண்மை.மனசாட்சி உள்ளோரின் உள்ளத்தின் பிரதிபலிப்பு.எருமை மாட்டின் மீது மழை பெய்தாற்போல் எனக்கென்ன இது யாருக்கோ வந்த எழவு என இருப்போரும் உணர்வு பெற வேண்டும்.
// ஆயுதபாணீகளான இந்த மக்கள் விரோத பயங்கரவாதிகளை வெறுங்கையால் சந்திப்பது என்பது இனி இயலாத காரியம்! மக்கள் இனி எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டுமென்பதை இந்தப் போலீசு மாமாக்கள் முடிவு செய்து மக்களுக்குச் சொல்லி விட்டார்கள்.
அருமைத் தோழர்களுக்கு.. உண்மையான பெரியார் தொண்டர்கள் சார்பில் புரட்சிகர வாழ்த்தும் நெஞ்சார்ந்த நன்றிகளும் என்றென்றும். ஆதரவுடன், காசிமேடுமன்னாரு.
//
அய்யா தோழர்களே,
மக்கள் ஆதரவு திரளும் நேரத்தில் அவசரப்பட்டு ஆயுதப் போராட்டம்னு ஆரம்பிச்சு எல்லாம் உள்ளே போய் உட்கார்ந்து விடாதீர்கள்.. இலவசக் கல்வி உரிமை இயக்கம் பணாலாயிடும்..
போராடிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள் …
இப்போராட்டம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வெற்றி பெற்று அனைத்து மக்களையும் வென்றெடுக்கவல்லதொரு வீச்சான போராட்டமாக அமைந்துள்ளது.
இதன் வீச்சு தமிழகத்தின் ஒவ்வொரு பெற்றோரையும் வீதியில் இறங்கிப் போராட தூண்டும். அத்தகைய போராட்டம் நடக்கும் அந்த நாளில் இந்த போலீஸ் கண்க்கும் முடிக்கப்படும்..
வாழ்க போராட்டம் ..
இந்த காக்கிநாய் கலை அடக்க தமில்நாட்டில் ஆலில்ல யா
[…] இனி நீ பெருமைப்படலாம் கல்வி தனியார்மயத்திற்கெதிராக போராடிய பு.மா.இ.மு. தோழர்களின் போராட்டப் பாதங்களை முத்தமிட்டதால்! […]
காவல் நாய்களின் தாக்குதலை எதிர்த்து போர்க்குணத்தோடு போராடிய தோழர்களுக்கு வாழ்த்துகள்!
[…] […]
[…] […]
[…] […]