அழைப்பிதழை பெரியதாக பார்க்க அதன்மீது அழுத்தவும்
அனைவருக்கும் தரமான இலவச கல்வியை அரசே வழங்கப் போராடுவோம்! பேரணி – மாநாடு 2012
நாள்: 03.6.2012 ஞாயிறு, மாலை 5.00 மணி
இடம்: போல் நாராயணன் பிள்ளை தெரு, சிதம்பரம்.
பேரணி துவங்கும் இடம்: தெற்கு சன்னதி, சிதம்பரம். நேரம்: மாலை 3.30 மணி
பேரணி துவக்கி வைத்தல்: திரு. வை. வெங்கடேசன், மாவட்ட தலைவர், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், விருதை.
வரவேற்புரை:
திரு.G.ராமகிருஷ்ணன், தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், சிதம்பரம்.
தலைமை:
திரு. தஷ்ணா. கலையரசன், செயலாளர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், சிதம்பரம்.
மாநாட்டு துவக்க உரை:
மூத்த கல்வியாளர். ச.சீ.ராஜகோபாலன்,
சமச்சீர் கல்வி கமிட்டி உறுப்பினர், சென்னை.
கருத்துரை:
தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு –
கட்டாய இலவச கல்வி உரிமையை மறுக்கும் சூழ்ச்சியே
பேராசிரியர். கருணானந்தன்,
முன்னாள் தலைவர், வரலாற்றுத்துறை. விவேகானத்தா கல்லூரி, சென்னை.
சமச்சீர் பாடதிட்டக்குழு உறுப்பினர்.
நீதிமன்ற தீர்ப்புகள், சட்டங்கள், கமிட்டி உத்தரவுகள்,
கல்வி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்குமா?
வழக்கறிஞர். ச.மீனாட்சி,
உயர்நீதிமன்றம்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.
அனைவருக்கும் இலவச கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்,
தனியார்மய கல்விக்கு முடிவு கட்டுவோம்!
தோழர். த.கணேசன்.
மாநில அமைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, (RSYF).
நிறைவுரை:
வழக்குரைஞர். திரு.சி.ராஜூ,
மாநில ஒருங்கணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்.
ம.க.இ.க.-வின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்.
______________________________________________
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் கடந்து வந்த பாதை….
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் மாணவர்களை துன்புறுத்துதலுக்கு எதிராகவும் மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய பல்வேறு போராட்டங்களின் விளைவாக மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், மார்ச் 2011 அன்று துவங்கப்பட்டது. விருத்தாசலத்தில் இலவச கல்வி உரிமைக்காக கல்வியாளர்களை வைத்து மாநாடு நடத்தி பெருமளவில் பெற்றோர்களை சங்கமாக திரட்டினோம்.
விருத்தாசலத்தில் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடியதன் விளைவாக விருத்தாசலத்தில் அனைத்து பள்ளிகளிலும் அரசு கட்டண பட்டியல் நோட்டீசு பலகையில் ஒட்டபட்டதுடன் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுத்தார்கள். கூடுதல் கட்டணம் கேட்டு பள்ளி முதலாளிகள் மாணவர்களை துன்புறுத்துவது நின்றது.
சமச்சீர் கல்வியை அமுல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியதுடன், முற்றுகை, உண்ணாவிரதம், ஊர்வலம், கைது என பல போராட்டங்களை நடத்தினோம். பாடப்புத்தகத்தை வழங்க கோரி கடலூர் மாவட்டத்தில் பல பள்ளிகளில் மாணவர்களை அழைத்து மறியல் போராட்டம் நடத்தி இறுதியாக பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வெற்றி வாகை சூடி மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தது.
கடலூரில் சி.கே மற்றும் கிருஷ்ணசாமி பள்ளிகளில் கட்டணக் கொள்ளைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், பள்ளி வளாகத்தில் பிரசுரம் விநியோகித்து போராடியதால் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுத்தார்கள்.
கடலூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான பள்ளிகள் முன்பாக அரசு கட்டணத்தை மட்டும் கட்ட வேண்டுமென்று பிரசுரமாக கட்டண விபரத்தை அச்சடித்து விநியோகித்தோம். பள்ளி முதலாளிகள் நம்மை தீவிரவாதிகளாக பார்த்தனர் என்பது மறக்க முடியாத அனுபவமாகும். காட்டுமன்னார் கோயிலில் சில தனியார் பள்ளிகளில் பழைய மெட்ரிக் பாடத்திட்டங்களையே மாணவர்களுக்கு நடத்தினர். இதற்கு எதிராக நமது சங்கம் போராடியதால் சமச்சீர் பாடப்புத்தகத்தை வழங்கினர்.
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் கூடுதல் கட்டணம் கேட்டு கட்டாய டி.சி.கொடுத்ததற்கு எதிராக இடையுறாது பல போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டோம். அதுபோல் அரசு கட்டணத்தை மட்டுமே கட்டுவோம் என உறுதியாக நின்று ஒற்றுமையாக போராடியதால் பள்ளி நிர்வாகம் மாணவர்களை தனிமை படுத்தி துன்புறுத்திய போதும், தேர்வு விடைத்தாள் கொடுக்க மறுத்த போதும் இரவு வரை பள்ளியை முற்றுகையிட்டு அதிகாரிகளை நிர்பந்தித்து வெற்றி கண்டோம்.
ரூ. 7000-க்கும் மேல் ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில் வசூலித்த காமராஜ் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக நமது சங்கத்தின் சார்பில் நீதியரசர் சிங்காரவேல் கமிட்டி முன்பு வழக்கு போட்டு ரூ. 6000/- மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பெற்றதன் மூலம் கடலூர் மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளி முதலாளிகள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அரசு உத்தரவை மதிக்காமல் கட்டண கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், கூடுதல் கட்டணம் கேட்டு மாணவர்களை துன்புறுத்தும் பள்ளி முதலாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய் என நாம் போஸ்டர் அடித்து ஒட்டி போராடிய பிறகு தான் பள்ளி நிர்வாகத்திடம் இன்று பெற்றோர்களுக்கு ஓரளவு மரியாதை கிடைக்கிறது.
________________________________________________
இவ்வாறு பல்வேறு போராட்டங்களை மாணவர்களின் கல்வி உரிமைக்காக இடைவிடாது நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நமது பெற்றோர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. உங்களையும், இந்த சங்கத்தோடு உறுப்பினராக இணைத்துக்கொண்டு போராட அழைக்கிறோம்.
தற்போது தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு மூலம் ஏழைகளுக்கு இலவச கல்வி உரிமை கிடைக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அரசு கட்டண நிர்ணயத்தை, சிறிதளவும் மதிக்காமல் பல மடங்கு மாணவர்களை துன்புறுத்தி பெற்றோரகளை மிரட்டி வசூல் செய்யும் தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீடு சாத்தியமா?
ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் சமமான கல்வியை அளிப்பதன் மூலம்தான் சமூக பொறுப்புணர்வை, தேசப் பற்றாளர்களை, முழுமையான மனிதனை உருவாக்க முடியும். அரசு மட்டுமே இலாப நோக்கமின்றி இதை செய்ய முடியும். நீதிமன்றத்தில் வழக்கு போட்டு சாதிக்க முடியாது. பெருந்திரள் மக்கள் போராட்டத்தின் மூலமே கல்வி உரிமையை நிலைநாட்ட முடியும்.
தனியார் பள்ளிகள் பணம் சம்பாதிக்க தேவையான உதிரி பாகங்களாக நமது பிள்ளைகளை தரமான கல்வி என்ற பெயரில் உற்பத்தி செய்கின்றனர், இதுகுறித்து மக்கள் மத்தியில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பேரணி – மாநாடு நடத்துகிறோம்.
அனைரும் குடும்பத்தோடு வரவேண்டுமென்று அன்போடு அழைக்கிறோம். மேலும் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் தங்கள் நண்பர்களோடு கலந்து கொள்வது அவசியமாகும். எனவே தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
__________________________________________________________________________
–மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
செல் நம்பர், 9790404031, 9443876977.
-மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
கடலூர் மாவட்டம்.
செல் நம்பர், 9360061121, 9345180948.
____________________________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! ஒரு நெடிய போராட்டம்!!
- சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு!
- சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் !
- கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்!
- விருத்தாசலம்:தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி!
- சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து!! தமிழகமெங்கும் ஆர்பாட்டங்கள்!!!
- சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் !
- அம்மா – ஆணவம் – ஆப்பு!
- கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்
- குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!
- ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?
_____________________________
- சுயநிதிக் கல்லூரிகள்: கல்வியா? கொள்ளையா? மொட்டையா?
- சுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளையும், சுயமரியாதை பறிபோன மாணவர்களும் !
- சமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின் இரட்டைவேடம்!
- சிவப்புச் சட்டை!
_____________________________
- ஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை! ‘கல்வி வள்ளலின்’ ரவுடித்தனம் !
- அமைச்சரா, ரவுடியா? ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலை மாணவர் போராட்டம்!
- வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!
- மத்திய அரசு கடல்சார் பல்கலைக்கழகத்தின் கண்ணீர் கதை
- சங்கப் பரிவாரம் வழங்கும் “”இதுதான்டா ராமாயணம்!”
- ஐஐடி மாணவர்களின் தற்கொலைகள்! தனியார்மயத்தின் கோரமுகம்!!
- தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!
_____________________________
- அண்ணா நூலகத்தை மூடத்துடிக்கும் பாசிச ஜெயாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
- மதுரவாயல் மாணவர்களின் நீதிமன்ற போராட்டம் வென்றது !
- மதுரவாயல் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் !!
- ஆசிரியர் அடித்து மாணவன் கொலை! போராடிய தோழர்கள் கைது!
_____________________________
வாழ்துக்கள்!
மாநாட்டு நிகழ்சிகளைப் பற்றி எழுதுங்கள், வினவு.
[…] இலவச கல்வி உரிமைக்காக சிதம்பரத்தில் … […]
It is really a very good start…
//ரூ. 7000-க்கும் மேல் ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில் வசூலித்த காமராஜ் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக நமது சங்கத்தின் சார்பில் நீதியரசர் சிங்காரவேல் கமிட்டி முன்பு வழக்கு போட்டு ரூ. 6000/- மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பெற்றதன் மூலம் கடலூர் மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளி முதலாளிகள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.//
சிங்காரவேல் கமிற்றி உத்தரவு ரூ. 600/- மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றது. கல்வி நிர்வாகம் வேறு வழியின்றி உத்தரவை ஏற்று பெற்றோர்களுக்கு மீதிப் பணத்தை திருப்பிக் கொடுத்தனர். அச்சுப் பிழையைத் திருத்துவும்
[…] இலவச கல்வி உரிமைக்காக சிதம்பரத்தில் … […]
[…] இலவச கல்வி உரிமைக்காக சிதம்பரத்தில் … […]
[…] இலவச கல்வி உரிமைக்காக சிதம்பரத்தில் … […]