Friday, May 9, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்கா வீணாக்கும் உணவின் மதிப்பு - 9 இலட்சம் கோடி ரூபாய்!

அமெரிக்கா வீணாக்கும் உணவின் மதிப்பு – 9 இலட்சம் கோடி ரூபாய்!

-

செய்தி-19

உணவுமெரிக்கர்கள் தாம் வாங்கும் உணவில் பாதி அளவை வீணாக்குகிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அப்படி வீணாகும் உணவுப் பொருட்களின் மதிப்பு ஆண்டுக்கு $165 பில்லியன் (சுமார் ரூ 9 லட்சம் கோடி)

அமெரிக்காவில் வினியோகிக்கப்படும் உணவுப் பொருட்களில் 40 சதவீதம் வீணாக்கப்படுவதாகவும், நான்கு பேரைக் கொண்ட ஒரு சராசரி அமெரிக்க குடும்பம் ஒரு ஆண்டுக்கு $2,275 (சுமார் ரூ 1.2 லட்சம்) மதிப்பிலான உணவை குப்பையில் போடுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

வீணாகும் இந்த உணவுப் பொருட்களில் 15 சதவீதம் மிச்சப்படுத்தினால் 2.5 கோடி பேருக்கு உணவு கிடைக்கும் என்றும் 1970களில் இருந்ததை விட உணவு வீணாவது 50 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் ஆய்வை நடத்திய என்ஆர்டிசி என்ற நிறுவனம் தெரிவிக்கிறது.

விற்காமல் தேங்கிப் போகும் காய்கறி, பழங்கள், உணவு விடுதிகளில் சாப்பிடாமல் வைக்கப்படும் உணவு வகைகள், வீடுகளில் அதிகமாக தயாரிக்கப்பட்டு கெட்டுப் போகும் உணவு போன்றவை இந்த வீணாக்கலுக்கு காரணமாக இருக்கின்றன.

இன்றைய உலக பொருளாதார அமைப்பு ஒரு பக்கம் இத்தகைய விரயத்தை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் இந்தியாவிலும் சகாராவைச் சுற்றிய ஆப்பிரிக்க நாடுகளிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவினால் பீடிக்கப்பட்டிருப்பதற்கும் காரணமாக இருக்கிறது. ஏழை நாடுகள் பட்டினியால் சாகின்றன. அமெரிக்காவோ தின்ன முடியாமல் விரயமாக்குகிறது. உலக முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் சாதனை இது!

இதையும் படிக்கலாம்

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: