Sunday, July 21, 2024
முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்கா வீணாக்கும் உணவின் மதிப்பு - 9 இலட்சம் கோடி ரூபாய்!

அமெரிக்கா வீணாக்கும் உணவின் மதிப்பு – 9 இலட்சம் கோடி ரூபாய்!

-

செய்தி-19

உணவுமெரிக்கர்கள் தாம் வாங்கும் உணவில் பாதி அளவை வீணாக்குகிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அப்படி வீணாகும் உணவுப் பொருட்களின் மதிப்பு ஆண்டுக்கு $165 பில்லியன் (சுமார் ரூ 9 லட்சம் கோடி)

அமெரிக்காவில் வினியோகிக்கப்படும் உணவுப் பொருட்களில் 40 சதவீதம் வீணாக்கப்படுவதாகவும், நான்கு பேரைக் கொண்ட ஒரு சராசரி அமெரிக்க குடும்பம் ஒரு ஆண்டுக்கு $2,275 (சுமார் ரூ 1.2 லட்சம்) மதிப்பிலான உணவை குப்பையில் போடுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

வீணாகும் இந்த உணவுப் பொருட்களில் 15 சதவீதம் மிச்சப்படுத்தினால் 2.5 கோடி பேருக்கு உணவு கிடைக்கும் என்றும் 1970களில் இருந்ததை விட உணவு வீணாவது 50 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் ஆய்வை நடத்திய என்ஆர்டிசி என்ற நிறுவனம் தெரிவிக்கிறது.

விற்காமல் தேங்கிப் போகும் காய்கறி, பழங்கள், உணவு விடுதிகளில் சாப்பிடாமல் வைக்கப்படும் உணவு வகைகள், வீடுகளில் அதிகமாக தயாரிக்கப்பட்டு கெட்டுப் போகும் உணவு போன்றவை இந்த வீணாக்கலுக்கு காரணமாக இருக்கின்றன.

இன்றைய உலக பொருளாதார அமைப்பு ஒரு பக்கம் இத்தகைய விரயத்தை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் இந்தியாவிலும் சகாராவைச் சுற்றிய ஆப்பிரிக்க நாடுகளிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவினால் பீடிக்கப்பட்டிருப்பதற்கும் காரணமாக இருக்கிறது. ஏழை நாடுகள் பட்டினியால் சாகின்றன. அமெரிக்காவோ தின்ன முடியாமல் விரயமாக்குகிறது. உலக முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் சாதனை இது!

இதையும் படிக்கலாம்

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. ஏய் நச்சு நச்சுனு அதியமான் பாணில லிங்குமில்ல போடுறீஹ. முதலாளித்துவத்தையும், தனியார் மயத்தையும் swaminamics link போட்டு காமெடி பண்ணும் அதியமான் இப்ப நம்ம வினவு பக்கம் வர்ரதேஇல்ல பாத்தீயளா? ஊழல் பெருக்கெடுத்து ஓடுது, தனியார் மயம் நாளொரு உயிரை வாங்குது – மொத்தத்தில செய்தி சூப்பர்லே

  2. ஒழுங்காக குடோனைப் பராமரிக்காமல் உணவு பொருட்களை வீணடிக்கும் இந்தியாவிற்கு அதிகமாக சமைத்து எதிர்பாராமல் வீணாக போவது மேல். சரி அவன் ஊரில் எவ்வளவு உணவு வீணாகுதுனு கணக்காவது வைத்திருக்கான். ஆனால் நம்மூரில் ஓட்டல்களில் எவ்வளவு உணவு வீணாகிறது? நீங்கள் குறிப்பிட்டுள்ள ஏழைநாடுகளில் எவ்வளவு உணவு வீணாகிறது? பட்டினி கிடக்கும் அனைவரும் உணவு பற்றாக்குறையால் பட்டினிக்கிடக்கிறார்களா? அல்லது உணவு வாங்க பணம் இல்லாது பட்டினி கிடக்கிறார்களா? எங்கள் கல்லூரி, அலுவலக கேன்டீனில் உணவை விரயமாக்காதீர்கள் என்று உலகில் பட்டினியால் இறப்பவர்களின் புள்ளிவிவரத்தைக் குறிப்பிட்டு போர்டு வைத்தி இருப்பார்கள். ஆனால் நம்மூரில் உணவு விரயமாவதில்லையா? உணவை விரயமாக்கவேண்டாம் என்று அமெரிக்கர்களுக்கு விடும் கோரிக்கையாக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமே இந்த தகவலை வெளியிட்டிருக்கலாம். ஏதோ அமெரிக்காவைப் பற்றி ஒரு லிங்க் கிடைத்ததும் வழக்கம் போல திட்ட கிளம்பிட்டீங்க.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க