செய்தி -33
அமெரிக்காவில் 2008-ம் ஆண்டில் வீட்டுச் சந்தை ஊகக் கடன் சூதாட்டக் குமிழி வெடித்த பிறகு பல குடும்பங்கள் கடனை அடைக்க முடியாமல் வீடுகளை கைவிட்டு தமது கார்களிலேயே வசிக்க போய் விட்டார்கள். அப்படி கைவிடப்பட்ட வீடுகளை கைப்பற்றுவதற்காக அமெரிக்க வங்கிகள் தனியார் நிறுவனங்களை அமர்த்தியுள்ளனர்.
வங்கிகளின் கைக்கூலிகள் “ஒரு வீட்டை கடந்து போகும் போது அங்கு யாரும் வசிப்பது போல தெரியா விட்டால், வீட்டின் பூட்டை உடைத்து மாற்றி விடுகிறார்கள்” என்கிறார் ரிச்சர்ட் பெர்ஷ் என்ற பென்சில்வேனியா சார்ஜன்ட். கன்சாஸில் ஒரு வீட்டில் அறைக்கலன்கள் மாயமாகியிருந்தன. புளோரிடாவில் ஒரு தம்பதியினரின் மடிக்கணினி, ஐபாட், ஆறு பாட்டில் ஒயின் திருட்டுப் போயிருந்தது. பென்சில்வேனியாவில் வாழும் ஒரு தம்பதியினரின் நாணய சேமிப்பும், வளர்ப்பு பூனையும் காணாமல் போயிருந்தது.
சில வங்கிகளால் நியமிக்கப்பட்டிருக்கும் முரடர்கள் வீட்டுக்குள் ஆள் இருக்கும் போதே பூட்டுகளை மாற்றி விடுகிறார்கள். ஆர்லாண்டோவில் வசிக்கும் நான்சி ஜாகோபினி வீட்டின் முன் கதவை யாரோ உடைக்க முயற்சி செய்யும் சத்தம் கேட்டு போலீசுக்கு தொலைபேசினார். கடைசியில் அந்த ஆள் வங்கியால் அனுப்பப்பட்டவர் என்று தெரிய வந்தது. சில மாதங்களுக்குப் பிறகு இன்னொரு ஆள் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்தே விட்டான். ஜாகோபினி வங்கியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி முறையாக தவணை செலுத்திக் கொண்டிருக்கும் போதே இவை நடந்தன.
வங்கிகளுக்கும் சேப்கார்ட் பிராப்பர்ட்டீஸ், லெண்டர் புராசசிங் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் எதிராக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள என்று ஹஃபிங்டன் போஸ்ட் தெரிவிக்கின்றது. சேப்கார்டு மாதம் 15 லட்சம் வீடுகளை கண்காணிக்கிறது.
“வீட்டுக் கடன் தவணை செலுத்துவதற்கு 45 நாட்கள் தாமதமானால் கூட வங்கி வீட்டை கண்காணிக்கவும் பூட்டை உடைத்து உள்ளே நுழையவும் குண்டர்களை அனுப்ப முடியும்” என்கிறார் மாத்யூ வைட்னர் என்ற வழக்கறிஞர். “அமெரிக்கா எவ்வளவு அபாயகரமான இடம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற நிகழ்வுகளில் யாராவது கொல்லப்படுவது கூட சாத்தியம்” என்கிறார் அவர்.
2010-ல் கலிபோர்னியாவில் மிமி ஆஷ் என்ற பெண்மணி வார இறுதி பயணத்திற்கு பிறகு வீட்டுக்கு திரும்பி வந்தால் வீடே காலியாக இருந்தது. வங்கியின் ஆட்கள் அவரது பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு போயிருந்தார்கள். இது பற்றிய எந்த முன்னறிவிப்பும் அவருக்கு அனுப்பப்பட்டிருக்கவில்லை. ஆஷ் பேங்க் ஆப் அமெரிக்காவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
“கூடுதலான பணம் வசூலிப்பது, கடன் தவணைகளை மாற்றியமைக்க மறுப்பது, நான்கு ஐந்து முறை ஆவணங்களை தரும்படி கேட்பது என்று சிறு சிறு தொல்லைகள் தினமும் நடந்து கொண்டே இருக்கின்றன” என்கிறார் அமெரிக்காவின் தேசிய நுகர்வோர் வழக்கறிஞர்களுக்கான கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் ஐரா ரைன்கோல்ட்.
“வீடு வாங்குவதற்கு கடன் வாங்கும் போது, என்றாவது ஒரு நாள் குண்டர்கள் நமது வீட்டுக்கு வந்து ‘வீடு காலியாக இருக்கிறதா இல்லையா’ என்று அவர்களே முடிவு செய்து பூட்டை மாற்றி விடுவார்கள் அல்லது பொருட்களை எடுத்துச் சென்று விடுவார்கள் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்” என்கிறார் ஒரு நீதிபதி.
மற்ற நாடுகளில் திருடர்கள், கொள்ளையர்கள் என்று அழைக்கப்படும் சமூக விரோதிகள் அமெரிக்காவில் வங்கிகளாகவே இருக்கிறார்கள். திருடர்களுக்கும் அங்கீகாரம் கொடுத்த ஒரே நாடு அமெரிக்காதான். இதுதான் முதலாளித்துவத்தின் அமெரிக்க சாதனை!
இதையும் படிக்கலாம்
______________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது !
- வால் ஸ்டிரீட் முற்றுகை: முன்னேற்றத்தின் முதல் தேவை புரட்சிகரக் கட்சி!
- முதலாளித்துவத்தின் கருவறையில் அமெரிக்க மக்கள் முற்றுகை!
- அமெரிக்கக் கடன் நெருக்கடி- மைனரின் சாயம் வெளுத்தது!
- டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?
- மைக்கேல் மூரின் Capitalism: A Love Story (2009) – ஆவணப்படம் – அறிமுகம் !
This is nothing new. In India also, these mnc banks send ‘gundas’ to collect money from credit card holders.
Thanks to Capitalism. Soon banks modify their agreements to harvest human organs in case of default.