privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்மோசடின்னா ஈமு மட்டுமல்ல, ரீபோக் ஷூ கம்பெனியும்தான்!

மோசடின்னா ஈமு மட்டுமல்ல, ரீபோக் ஷூ கம்பெனியும்தான்!

-

செய்தி -35

reebok-logoவிளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனமான ரீபோக் இந்தியா அதன் உரிமதாரர்களின் (கடைக்காரர்கள்) பணத்தை மோசடி செய்ய முயற்சிப்பதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

“கடைக்காரர்கள் செய்துள்ள முதலீட்டுக்கான குறைந்த பட்ச லாபத்தை மாதா மாதம் ரீபோக் நிறுவனம் கொடுத்து விடும், கடைக்கான வாடகையை ரீபோக் நிறுவனமே செலுத்தி விடும், விற்பதற்கான பொருட்களை அனுப்பி வைக்கும்” என்ற அடிப்படையில் ரீபோக்கின் உரிமக் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த மே மாதம் ரீபோக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சுபீந்தர் சிங் பிரேம் மற்றும் விஷ்ணு பகத் மீது ரூ 870 கோடி மோசடி செய்ததாக நிர்வாகம் கிரிமினல் புகார் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் இயங்கும் கடைகளில் மூன்றில் ஒரு பங்கை மூடி விடப்   போவதாக அறிவித்திருந்தது.

புதிய ஒப்பந்தத்தை வகுத்து அதை ஏற்றுக் கொள்ளும்படி உரிமதாரர்களை கட்டாயப்படுத்துகிறது ரீபோக். நிறுவனம் தன்னிச்சையாக வகுத்துள்ள புதிய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் ஆகஸ்ட் 31க்குள் கடைகளை மூடி விடும்படி சொல்கிறது.

கடந்த நான்கு மாதங்களாக ரீபோக் புதிதாக பொருட்களையும் சரக்கையும் கடைகளுக்கு அனுப்பவில்லை. அதனால் விற்பனை பெருமளவு குறைந்திருக்கிறது. ரீபோக் இந்தியாவிடமிருந்து வாடகை பணம் வராததால் மால் நிர்வாகங்களும், கட்டிட உரிமையாளர்களும் கடைக்காரர்களிடம் வந்து நிற்கிறார்கள்.

ஒரிஜினல் உரிம ஒப்பந்தத்தின்படி, கடைக்காரர் வியாபாரத்தை விட்டு விலக வேண்டுமானால் 3 மாத அவகாசம் கொடுக்க வேண்டும். அதற்குள் கைவசம் இருக்கும் சரக்கை விற்றுத் தீர்க்க முயற்சிக்கலாம், மீதியிருக்கும் பொருட்களை நிறுவனம் விற்ற விலைக்கே திரும்ப வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் இப்போது ரீபோக் 15 நாட்களுக்குள் கடையை மூடச் சொல்கிறது. “பொருட்களை ஒரு முறை கடைக்கு அனுப்பி விட்டால் அவை கடைக்காரர்களின் பொறுப்புதான்” என்றும் கை கழுவி விட முயற்சிக்கிறது.

உரிமதாரர்களுக்கு கொடுக்க வேண்டிய மாதாந்திர குறைந்த பட்ச உத்தரவாதத் தொகையையும் நிறுவனம் கொடுக்க மறுக்கிறது. இதைப் பற்றி பேசுவதற்கு குர்கானில் இருக்கும் ரீபோக் இந்தியா தலைமையகத்திற்கு போன உரிமதாரர்கள் மோசமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள்.

சீட்டு கம்பெனி மோசடி, தேக்கு பண்ணைத் திட்டம், ஈமு பண்ணைத் திட்டம், நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம் என்று மக்களை மொட்டை அடிக்கும் கும்பல்களைப் போலவே பன்னாட்டு நிறுவனங்களும் சிறு முதலீட்டாளர்களை ஏமாற்றுவதில் சளைத்தவர்களில்லை என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: